Monday, December 30, 2019

கள்ளர் சமூகத்திற்கு தொடர்பில்லாத குடிகள்

 விழிப்புணர்வு_பதிவு...!
-----------------------------------------------------------------------
உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் தங்களுக்குள் ஒற்றுமையே ஏற்படுத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் அத்தகைய ஒற்றுமைக்கு ஊறு விளைவுக்கும் வகையில் பல தவறான செயல்கள் சமீபகாலத்தில் நடந்து வருகிறது.
நாங்களும் கள்ளர் சமூகம் தான் என்று சில பிரிவினர் களத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக மலையமார், வாதிரியார், தொண்டமான், பட்டங்கட்டியார், போன்ற சாதியினர் எவ்வித ஆதாரமும் இன்றி தங்களை கள்ளர் சமூகம் என்று நிருவிட பார்கிறார்கள்.
தங்களை கள்ளர் வழிவந்தவர்கள் என்று சொல்லும் இவர்களிடம் எத்தகைய ஆதாரமும் கிடையாது.
மேலும் கள்ளர் பட்டங்கள் சாதியாக மாறிவிட்டது என்று முட்டாள்தனமான ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள். சோழ நாட்டு கள்ளரை பொருத்தவரை பட்டத்தை வைத்து திருமணம் செய்ய கூடியவர்கள். ஒரே பட்டம் கொண்டவர்கள் பங்காளிகள். வெவ்வேறு பட்டங்கள் தான் மாமன் மைத்துனர் உறவு. இப்படி உறவுகளை தீர்மானிக்கும் சக்தியாக பட்டங்கள் உள்ள நிலையில் அது எப்படி சாதியாக மாறும்?? சரி அது சாதியாக மாறினால் அவர்கள் எந்த பட்டம் கொண்டவர்களுடன் திருமணம் வைத்தனர் ?? ஒரே பட்டத்திற்குள்ளயே திருமணம் முடிப்பார்களா??. இப்படி பல கேள்விகள் இவர்கள் கள்ளர்கள் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்கிறது.
-----------------------------------------------------------------------
#மலையமார்
மலையமான் என்று சொல்லும் ஒரு சாதி பிரிவினர் கரூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டும் தங்களை கள்ளர் என்று சொல்லி வருகிறார்கள். (ஒட்டுமொத்த சமூக பெரியவர்களும் சொல்லவில்லை). ஆதியில் கள்ளர் என்றும் தங்களின் பட்டப்பெயர் சாதிப்பெயராக பிற்காலத்தில் மாறிவிட்டது என்றும் தங்கள் மலையமான் பெயருக்கு விளக்கம் கூறுகிறார்கள். ஆனால் சோழர் காலத்தில் இருந்தே இவர்களின் சாதி பெயர் மலையமார் தான். சோழர் காலத்து கல்வெட்டில் மலையமார் மக்களும் நத்தமார் மக்களும் இடங்கை பிரிவில் இருந்தது பற்றி குறிப்பு உள்ளது. எனவே இவர்கள் கள்ளர்கள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே மலையமார் என்ற சாதி பெயரில் தான் இருந்து வந்துள்ளனர் என்பதற்கு இந்த கல்வெட்டு சான்றாக அமைகிறது.
-----------------------------------------------------------------------
#வாதிரியார்
வாதிரியார் என்ற சாதியினர் தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கிளை உள்ளதால், தங்களை கிளை மரபு கொண்ட கள்ளர்கள் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் கிளை என்பது அங்குள்ள வெள்ளாளர் , மறவர் முதற்கொண்டு பல சாதியினருக்கு உள்ளது. மேலும் இவர்கள் கப்பல் பாய்மர தூணிகளை நெசவு செய்ய கூடியவர்கள். இவர்களுக்கும் போர் தொழில் செய்யும் கள்ளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
-----------------------------------------------------------------------
#தொண்டைமார்
தொண்டைமான் என்ற சாதியினர் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களை கள்ளர் குல தொண்டைமான் என்று சாதி சான்றிதழ் வாங்கி வைத்து, தங்களை கள்ளர் சமூகம் என்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் கள்ளருக்கும் , தொண்டைமான் என்ற பெயரை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை. தொண்டைமான் என்கிற பெயரை வைத்து மட்டுமே தங்களை புதுக்கோட்டை கள்ளர்களுடன் தொடர்பு படுத்துகிறார்கள். ஆனால் புதுக்கோட்டை கள்ளர்களின் வாழ்வியல் முறைக்கும் இவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. புதுக்கோட்டைலேயே தொண்டைமான் பட்டம் கொண்டவர்கள் 200 முதல் 300 குடும்பங்கள் தான் உள்ளது. ஆனால் அங்கிருந்து பிரிந்து சென்ற அரச பரம்பரை என்று சொல்லும் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தோராயமாக 4000 - 5000 குடும்பங்களாக வாழ்கிறார்கள். இதிலேயே இவர்களின் முரண்களை அறியலாம். மேலும் இவர்கள் சுண்ணாம்பு தொழில் செய்யும் பரவர் என்றும், கோவில் மேளக்காரர் என்றும் குறிப்புகள் உள்ளது.
இவர்களின் திருமண முறை கள்ளர்களின் திருமணம் முறை கிடையாது. கள்ளர் சமூகத்தின் பன்பாட்டு அடையாளம் என்பது அவர்களின் திருமண முறை தான். அதை வைத்தே அவர்கள் கள்ளர்களா இல்லையா என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். இந்த தொண்டைமான் சாதியினர் தங்கள் தொண்டைமானுக்குள்ளயே திருமணம் செய்ய கூடியவர்கள். பட்டங்களை வைத்து திருமணம் கிடையாது. எனவே இவர்கள் கள்ளர் சமூகம் கிடையாது. தொண்டைமான் சாதியினரை கள்ளர் என்று தவறாக நினைத்து, முக்குலத்திற்குள் சிலர் திருமண உறவு செய்துள்ளனர்.
-----------------------------------------------------------------------
#பட்டங்கட்டியார்
இவர்கள் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். கடையரில் ஒரு பிரிவினர். ஆனால் இவர்களை கள்ளர்கள் என்று சிலர் சொல்லி வருகின்றனர். கள்ளர் சமூகத்திற்கு பட்டங்கள் சூட்டுவதால் இவர்களை பட்டங்கட்டியார் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் கப்பல் கட்டுமரத்தின் பட்டத்தை கட்ட கூடியவர்கள். இவர்களுக்கும் கள்ளர் சமூகத்திற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
கள்ளர் சமூகத்தின் பட்டங்களின் பெயரில் சாதிகள் பல உள்ளது.
1) அம்பலம் என்ற பட்டம் கள்ளருக்கு இருப்பதால் அம்பலக்காரர் என்று சொல்லப்படும் வலையரை கள்ளர் என்று சொல்லிவிட முடியாது.
2) கள்ளருக்கு பண்டாரத்தார் பட்டத்தை போல பறையரில் பண்டாரம் என்ற ஒரு சாதி உள்ளது. கோவில் பண்டாரத்தை கள்ளர் என்று சொல்லி விட முடியாது.
3) கள்ளரில் முத்தரையர் என்ற பட்டம் உள்ளது போல, வலையரில் முத்திரியர் என்ற சாதி உள்ளது. இதை வைத்து இருவரும் ஒரே சாதி என்று சொல்லி விட முடியாது.
4 ) கள்ளரில் படையாச்சி என்ற பட்டம் உள்ளது. வன்னியரில் உள்ள படையாச்சி என்ற சாதியே கள்ளர் என்று சொல்லி விட முடியாது.
5 ) கள்ளரில் உடையார் என்ற பட்டம் உள்ளது. தஞ்சையில் வாழும் உடையார் சாதியே கள்ளர் என்று சொல்லி விட முடியாது.
எனவே கள்ளர் பட்டங்கள் சாதியாக மாறாது. சோழ நாட்டு கள்ளர்கள் பட்டத்தை வைத்து திருமணம் செய்ய கூடியவர்கள் பட்டத்தை மறந்தாலும் மறப்பார்களே தவிர, தங்களின் கள்ளர் என்ற சாதி அடையாளத்தை மறக்க மாட்டார்கள்.
-----------------------------------------------------------------------
இப்படி மலையமான், வாதிரியார், தொண்டைமான், பட்டங்கட்டியார் போன்ற சாதியினர் கள்ளர் என்று சொல்வது வரலாற்றுக்கு முரணான தகவல்கள். இவர்களுக்கும் கள்ளர் சமூகத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. சிலர் அரசியலுக்காகவும், பணத்திற்காகவும் இவர்களை கள்ளர் சமூகத்துடன் இணைத்து வைத்து செயல்படுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த கள்ளர் சமூக ஒற்றுமை பாதிப்படையும் என்பதில் சந்தேகமில்லை.
கள்ளர் சமூகத்தின் மரபணு அறிக்கை படி தற்போது உள்ள தமிழ் சாதியினர் அனைவரும் கள்ளரிடம் இருந்து தான் பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது. எனவே பிரிந்து சென்ற அனைத்து சாதியினரையும் கள்ளர் என்று சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த தமிழினத்தையும் கள்ளர் என்று தான் சொல்ல வேண்டி வரும். எனவே கள்ளர் சமூக ஒற்றுமையை பாதிக்கும் இத்தகைய செயல்களை தடுத்திடுவோம்.

ஹிந்தி என்பது ஒரே மொழி அல்ல.


ஹிந்தி என்பது ஒரே மொழி அல்ல. ராஜஸ்தானிலிருந்து பிஹார் வரைக்குமாகப் பேசப்படுகிற மொழி ஹிந்தி என்று சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.
பாரதேந்து ஹரிஸ்சந்திரா என்கிற ஒரு கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாசிரியர், மொழி ஆராய்ச்சியாளர், அவர், கிட்டத்தட்ட 1750வாக்கில் மீரட், கான்பூர் போன்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் பேசப்படக்கூடிய கடிபோலி என்கிற மொழிக்கு - இந்தியா முழுமைக்குமான மொழியாக இருந்து ஆளுமை செய்யக்கூடிய வல்லமை, சாத்தியக்கூறு இருப்பதாக நம்பினார். அவரது கோட்பாடுகள் மொழிக்கொள்கைகளை கிட்டத்தட்ட காந்தியடிகள் ஏற்றுக்கொண்டார். இன்றைய மய்ய அரசு சொல்லக்கூடிய ஹிந்தி இந்தக் கடி போலிதான். ஆனால் இது பெரும்பான்மையான மக்களால் பேசப்படவில்லை.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பேசப்படுகிற மொழிகளும் வெவ்வேறு பின்னணியைக்கொண்டதாக இருக்கிறது.
உதாரணமாக - ஹிமாச்சலப் பிரதேசம் ஒரு ஹிந்திப்பிரதேசம் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு கிராமமும் கிட்டத்தட்ட ஒவ்வொரு மொழியைப் பேசக்கூடிய பகுதி அது.
பிஹாரில், மைத்திலி, போஜ்பூரி,பிஹாரி மொழிகள் பேசப்படுகின்றன.போஜ்பூரி நான்கு முதல் நான்கரைக்கோடி மக்களால் பேசப்படுகிறதென்கிறார்கள். 23 தேசியமொழிகள் அறிவிக்கப்பட்ட எட்டாவது அட்டவணையில் தங்கள் மொழியும் இணைக்கப்படவேண்டுமென அவர்கள் வலுவானப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அதைப்போலவே மைத்திலி பேசும் மக்களும் கோரி வருகிறார்கள்.
ராஜஸ்தானிலும், ராஜஸ்தானி, ஜெய்ப்புரி, மார்வாரி என்று பலமொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுக்கும் இன்று பேசப்படுகிற கடி போலி ஹிந்திக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்றால், இல்லை.
ஹரியானாவில் பேசப்படுகிற மொழி ஹரியானவி. ஒருமாதம் ஒரு பயிற்சிக்காக நான் ஹரியானாவில் தங்கியிருந்தபோது - நான் பேசிய ஹிந்தியை அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்கள் பேசும் ஹரியானவி கலந்தமொழி என்னால் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. ஹிந்தி தெரிந்த எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார்.
உத்தரப்பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், இப்போது நீங்கள் ஆக்ரா போய் இறங்கினீர்களென்றால், அங்கு நீங்கள் கேட்கும் மொழி வ்ரஜ பாஷா. ஹிந்தி கவிஞர் சூர்தாஸின் கவிதைகளெல்லாம் இந்த வ்ரஜ பாஷாவில்தான் எழுதப்பட்டன. அந்த மொழியையும் கடி போலியுடன் இணைத்து அதுவும் ஹிந்திதான் என்று இவர்கள் சொல்கிறார்கள்.
ரஷ்யாவில் மொழிப்பிரச்சனை வந்தபோது
லெனின் தலைமையில் கூடிய ஒரு கூட்டத்தில் ஏறத்தாழ 43 சதவீதம்பேர் பேசக்கூடிய ரஷ்யமொழியைத்தான் தேசியமொழியாக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
"அதுவா பெரும்பான்மை ? ரஷ்ய மொழி பேசாத
57 சதவீதம்தானே பெரும்பான்மை!?" என்றார் லெனின்.
அந்த ரஷ்ய அடிப்படைதான் நமக்கும் தீர்வாக இருக்கமுடியும் - பிரிந்துபோகும் உரிமை உட்பட.
------------------------------------------
ஒரே நாடு ஒரே மொழி I
பேராசிரியர் சீனி மோகன்
நன்றி | 'தழல்' சேனல்.
அறிவார்ந்த உரையாடலின் முழுமைக்கு
நீங்கள் இங்கே -
https://youtu.be/6Sj-LJ2XJ4o
சொடுக்கவேண்டும்.

Saturday, December 28, 2019

சிந்து சமவெளி மடகேஸ்கர் கள்ளர்நாடுகள்

தலைப்பு சற்று தலைசுற்றும் என நினைக்கிறேன். ஏனென்றால் சிந்துசமவெளி நாகரீகத்திற்கும் மடகேஸ்கருக்கும் என்ன தொடர்பு என தோன்றும்.
#ஒன்றே_குலம்_ஒருவனே_தேவன் என திருமூலரின் பாடல் மூலம் உலக மக்கள் அனைவரும் ஒரு குலத்தில் இருந்து கிளைத்தவர்கள் என்பது உன்மை என பல இடங்களில் வரலாற்றுத் தாய் நிலை நிறுத்துவாள்.
அதுபோல தான் இக்கட்டுரையின் சாராம்சமும்....!
சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்த ஏறுதழுவுதல் ஓவியம் அனைவரும் அறிந்தததே, அந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை பல்வேறு ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
சிந்துசமவெளி நாகரிகம் கிட்டத்தட்ட 5000வருட பழமையானது. அதில் வரும் ஏறுதழுவுதல் நமது சங்க இலக்கியமான கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது.
முல்லையில் இரண்டு சமூகங்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது
1. ஆயர்
2. இடையர்
இதில் வரும் ஆயர் மக்கள் ஏறுதழுவுதலை காலங்காலமாக விளையாடி வருகின்றனர்.
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.
- கலித்தொகை
அந்த ஆயர் மக்களாகிய களவர்,களமர்,கள்வர்,மழவர் என அறியப்பட்ட கள்ளர் முதுகுடிகள் இன்றும் தங்களது 119கள்ளர் நாடுகளில் அம்பலங்கள்,தேவர்கள்,பட்டக்காரர்கள் தலைமையில் உயிர்ப்புடன் இன்றும் நடைபெற்று வருகிறது. உயிர்ப்புடன் நிலை நிறுத்தி வருகின்றனர் என்பது காலத்தால் அழியா புகழுடைய வரலாறு.
ஏறு தழுவுதல் அதிகமாக நடைபெறும் மாவட்டங்கள்:
புதுக்கோட்டை
மதுரை
தஞ்சை
சிவகங்கை
தேனி
திண்டுக்கல்
திருச்சி
மேற்கோள் காட்டிய மாவட்டங்களில் மட்டுமே ஏறு தழுவுதல் நடைபெற்றதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நடைபெறுகிறது என்பதும் நிதர்சனமாக உள்ளது.
ஏறு தழுவதலில் மிகவும் புகழ்பெற்ற காளையான புளியங்குளம் காளையை புதுக்கோட்டை தொண்டைமான் கள்ளர்கள் பாரம்பரியமாக அனைவரின் வீட்டில் கிபி1920வரை வளர்த்துள்ளனர்.
மதுரை திருமங்கலம்,மேலூர் (சிந்துபட்டி,உறங்கான்பட்டி)வெள்ளையர்கள் பார்த்து வியந்து,பயந்து இரசித்த ஏறு தழுவுதலும் நடந்துள்ளது.
இந்த ஏறுதழுவுதல் நடைபெரும் இடத்தில் கள்ளரின பெண்கள் கூடியிருப்பார்கள். அந்த களத்தில் அடக்க முடியாத காளையை அடக்கும் கள்ளர் பெருமகனை அந்த இடத்திலே தேர்வும் செய்வார்கள்.
மாட்டை அடக்க முடியாத ஆண்கள் கடைசி வரை திருமணம் முடிக்க முடியாது. ஆனால் கள்ளர் குல காளையர்கள் என்றும் தனிமையில் வாழ்கையில் கழித்தது கிடையாது. மாட்டை எப்படியாவது 20வயதிற்குள் அடக்கி தனக்குண்டான துணையை பெற்று விடுவார்கள்.
காரி,செவலை,மயிலை என ரகங்கள் இறக்கப்படும்.
இதில் உள்ள காரி மாடுகளை தான் நமது கள்ளர் குல திலகம் தமிழ் நாடு ஜல்லிகட்டு தலைவர் ஐயா பிஆர். இராஜசேகர் அம்பலம் அவர்கள் பாரம்பரியமாக வளர்த்து வருகிறார்.
அதேபோல அறந்தாங்கி தொண்டைமான் வழித்தோன்றல் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்கள் இலங்கையில் இன்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை கப்பல் மூலம் தமிழக ஜல்லிகட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.
காளை-கள்ளர் பிரிக்க முடியாத வரலாறாகவே பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஆப்பிரிக்கா கண்டத்திற்குட்பட்ட மடகேஸ்கர் தீவில் மழகசி என்ற ஊரில் சவிகா என்ற ஏறுதழுவுதல் விளையாட்டு பல ஆயிரம் வருடங்களாக ஆடப்பட்டு வருகிறது.
இந்த ஆட்டத்தில் நமது ஏறுதழுவுதல் விதிமுறை போலவே உள்ளது
1. காளைக்கு காயம் ஏற்பட்டால் போட்டியை நிறுத்தி
விடுவார்கள்
2. காலையும் திமிலை மட்டுமே பிடித்து அடக்க
வேண்டும்
3. அனைத்து திருமணம் ஆகாத ஆண்கள் கலந்து
கொள்ள வேண்டும்.
4. போட்டியில் காளையை அடக்கும் ஆண்களை
அடையாளம் கண்டு அவர்களை தங்கள் வாழ்க்கை
துணையாக இளம் பெண்கள் தேர்ந்தெடுத்து
கொள்ள வேண்டும்.
மழகசியில் உள்ள அனைத்து ஆண்களும் காளையை அடக்கினால் மட்டுமே திருமணம் நடைபெறும். மாட்டை அடக்க முடியாவிட்டால் கடைசி வரை
சன்னியாச வாழ்க்கை தான்.
இதனை BBC செய்திக்குழு ஆவணப்படுத்தியுள்ளது. அதில் வரும் ஒரு வாலிபர் 27வயதாகியும் மாட்டை அடக்க முடியாததால் திருமணம் ஆகாமல் இருக்கிறார்.
பிறகு மாட்டை அடக்கி அங்கு வந்த இளம் பெண்களின் மனதை கவருகிறார்.
அப்படியே நமது கள்ளர் நாட்டு கலாச்சாரம் மழகசியில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
மேலும் குமரிக்கண்டத்தின் மாதிரி வரைபடத்தில் மடகஸ்கரும் அடங்கும்,இந்த மழகசி பழங்குடிகளின் டிஎன்ஏவும் M130 என்பது கூடுதல் தகவல்😉
மழகசி என்பது மழவர் வாழும் ஊராகவும் எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் சங்ககாலத்தில் களவர்,மழவர் இருவரும் ஆநிரை கவர்தலில் வல்லவர்களாக இருந்துள்ளனர்.
மேலும் ஐயா ஐராவதம் மஹாதேவன் தமிழர்களின் மூத்தகுடிகள் இந்த கள்வர்,மழவர் என்றே குறிப்பிடுகிறார்.
அது எப்படி தமிழ் மூத்த குடிகள் கள்வர்,மழவர்....?
தொடரும்....!
நன்றி
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Saints,goddess and kingdom
A manual of Pudukottai state
Madura A Tourist Illustrated Guide
The Madura country A manual
Madura district Gazetteer
Gazetteer of Pudukottai state
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு












Thursday, December 26, 2019

வீரமங்கை வேலு நாச்சியாரும் கள்ளர் பற்றும்




தலைப்பை பார்த்தவுடனே வேலு நாச்சியார் மறவர் அவருக்கும் கள்ளருக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டுக்கும் உட்பிரிவினைவாதிகளுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
1772ல் சிவங்கங்கை சீமை நவாப் தலைமையில் ஆங்கிலேயர் கையில் நாட்டை இழந்தார் நம் போற்றுதலுக்குரிய அம்மா வீரமங்கை வேலு நாச்சியார்.
நாட்டை இழந்த அம்மா வேலு நாச்சியாரும் அவர்தம் பெண் குழந்தையுடனும்,சின்ன மருது பாண்டியனாருடனும் திண்டுக்கல்லில் உள்ள விருப்பாச்சி பாளையத்தில் கள்ளர் தலைவர்களுடன் அடைக்கலம் அடைகிறார்.
அப்படி அவர் தஞ்சம் அடைந்த அம்மா வீரமங்கையால் நாட்டை மீட்காமல் உறக்கம் இன்றி கள்ளர் படைப்பற்று தலைவர்களுடன் ஆங்கிலேயர்களுக்கும்,நாவாப்பிற்கும் எதிராக அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சிவங்கை இராஜ பிரதாணியான தாண்டவராய பிள்ளையிடம் சொல்லி ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
08:12:17772
அந்த கடிதத்தில் “ஆற்காடு நவாப் இராமநாதபுரம்,சிவகங்கை சீமையையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்துகிறார்கள், நான் இங்கு கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
நீங்கள் எனக்கு படை உதவி அளித்து உதவ வேண்டும் என மைசூர் சிங்கத்திற்கு கடிதம் எழுகிறார்.
மேலும் இராஜ பிரதாணி தாண்டவராய பிள்ளை சிவகங்கை கள்ளர் நாட்டார்களுக்கு ஓலை அனுப்பி சிவ்கங்கையை மீட்க்கும் பணியில் இறங்குகிறார்.
அம்மா வேலு நாச்சியாருக்கு பிரதாணி அவர்கள் போற்றுதலுக்குரிய தொண்டைமானார் பூமியில் உள்ள பாய்குடியில் தங்கி சிவகங்கையின் நடவடிக்கைகளைப் பற்றி கடிதம் எழுதுகிறார்.
அந்த கடிதத்தில் தஞ்சை மராட்டியரும்,தொண்டைமானரும் படை உதவியும்,பொருள் உதவியும் தர சம்மதித்து உள்ளனர்.மேலும் இங்கு ஹைதர் அலியின் படையும் வரவிருக்கிறது. இதை பயன்படுத்தி நான் சிவகங்கையையும்,இராமநாதபுரத்தையும் மீட்கலாம் என எழுதுகிறார்.
கள்ளர் பெருமகனார் தொண்டைமானரை விமர்சிக்கும் முன் இதை சற்று உள்வாங்கி விமர்சனம் செய்ய கோருகிறேன்.
அக்காலத்தில் இருந்த ஒற்றுமை இன்று இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
ஒவ்வொரு முறை உட்பிரிவு சண்டை வரும் போது ஒற்றுமை ஒற்றுமை என கொடி பிடிப்பதை விட அக்காலத்தில் நடந்த வரலாற்று சம்பவத்தை நேர்மையாக உட்பிரிவு பார்க்காமல் கட்டுரையாக வந்தால் இக்கால தலைமுறையினருக்கு ஒற்றுமை என்னவென்று புரியும்.
இதில் இன்னொரு சம்பவம் என்னவென்றால் சிவகங்கையை மீட்க வந்த மைசூர் சிங்கத்தின் படையும் “கள்ளர் பற்றே” வரலாற்றை மறைக்க மறைக்க உட்பிரிவு மோதல் அதிகரிக்கத் தான் செய்யும்.
இந்த நேரத்தில் என் எண்ணத்தில் ஓடுவது எல்லாம் அம்மா வீரமங்கை வேலு நாச்சியார் தனது கணவனை இழந்து நாட்டை இழந்து தனது குழந்தையுடன் இன்னொரு நாட்டில் அடைக்கலம் அடைந்தாலும் அந்த மறத்தியாரின் வீரமும்,செருக்கும்,வைராக்கியமும் கொஞ்சம் கூட குறையாமல் அந்த இடத்தில் உள்ள தனது இனத்தின் கள்ளர் பெருமக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி தனது நாட்டை மீட்ட அந்த அம்மாவையும்,கள்ளர் தலைவர்களையும் நான் என் வாழ் நாள் முழுவதும் நெஞ்சில் சுமக்க கடமைப் பட்டுள்ளேன்.😓
இன்றுள்ள நமது பெண் குழந்தைகளுக்கு இந்த வரலாறை கொண்டு செல்லுங்கள் எனது இரத்த தேவமார்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
MILLITARY COUNTRY CORRESPONDENCE VOL.3
சீர்மிகு சிவகங்கை BY Dr.கமால்
மாயக் கருப்பன் மதுரை
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Tuesday, December 24, 2019

முத்துராமலிங்கத் தேவரின் மத அரசியல்




முத்துராமலிங்கத் தேவர், இந்து மதம் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர், எனவே தமிழர்கள், குறிப்பாக முக்குலத்தோர் “இந்துத்வா” கொள்கையை முன்னெடுக்கும் பாஜகவில் இணைய வேண்டும், மேலும் அவர்கள் முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பேச வேண்டும் என்ற ரீதியில் சிலர் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
அவர்களுக்கு பதில் அளிககும் வகையில்தான் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணையும் மக்களையும் பாதுகாத்து ஆட்சி செய்த பாரம்பரிய ஆட்சியாளர்களின் அரசியல் வெள்ளையர்களின் வருகையோடு முடிவுக்கு வந்தது. அந்த ஆட்சியாளர்களின் கடைசி ஜனநாயக வாரிசாகத் தோன்றியவர்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். பாரம்பரிய ஆட்சியாளர்கள், தாங்கள் சார்ந்த மதம் மீது பற்றுக் கொண்டிருந்தாலும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் வாழும் அத்தனை பிரிவு மக்களையும் உள்ளடக்கியதாகவே அவர்களின் ஆட்சிமுறை அமைந்தது. அவர்கள் தாங்கள் சாராத மத மக்களைப் பாதுகாத்தும் அவர்களுக்கு உதவிகள் செய்தும் வந்தனர்.

ஆனால், வெள்ளையர் ஆட்சிகாலத்தில் ஜனநாயக அரசியல் கருத்துக்கள் பரவின அல்லது பரப்பப்பட்டன. ஆட்சிமுறை என்பது “மதம் சாராததாக” இருக்க வேண்டும் என்று வெள்ளை ஆட்சியாளர்கள் கூறினான். ஏனெனில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருக்கின்ற காரணத்தால், அவர்கள் இந்துக்கள் என்று ஒன்று சேர்ந்தால் தங்களால் ஆட்சி செய்ய முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், இங்கிலாந்தில் மன்னருக்கு முடிசூட்டி வைப்பவராக தலைமை மதகுருவே இருந்து வந்தார். ஆங்கிலேயரின் இந்த இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக் காட்டிய தேவர் அரசியல் என்பது மதம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும், தனிநபர் ஒழுக்கமே அரசியலுக்கு முக்கியமானது என்று பேசினார்.

தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1916 ஆண்டு இந்தியா திரும்பி அரசியல் செய்யத் துவங்கினார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற அரசியல்வாதிகளாக இருந்தவர்கள் பால கங்காதர திலகர், அவருக்கு போட்டியாக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கோபால கிருஷ்ண கோகலே, ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த பெண்ணான அன்னி பெஸன்ட் அம்மையார் ஆவர். இவர்கள் மூவருமே இந்து மதம் சார்ந்தவர்கள். அன்னி பெஸன்ட் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியா வந்து இந்துவாகவே வாழ்ந்து வந்தார். இந்த மூவருமே சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். அந்தக் காலத்தில் இவர்களுக்குத்தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. காந்தியை யாரும் கண்டுகொள்ள வில்லை. காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இருந்தாலும் அப்போதைக்கு காந்திக்கு செல்வாக்கு ஏற்படவில்லை.

எனவே, மேற்படி மூவரிடமிருந்தும் தன்னை சற்று மாறுபட்டவராக காட்ட காந்தி திட்டமிட்டார். இதே காலகட்டத்தில், இங்கிலாந்து, துருக்கியில் ஆட்சியிலிருந்த ஒட்டோமென் துருக்கியரை ஆட்சியிலிருந்து அகற்றியது. மீண்டும் அவர்களையே ஆட்சியில் அமர்த்த வேண்டுமென்று இந்திய முஸ்லீம்கள் கிலாபத் இயக்கத்தை துவங்கினார்கள். இதனை பயன்படுத்த திட்டமிட்ட காந்தி கிலாபத் இயக்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்துப் பேசினார். இவ்வாறு காந்தி தனது அரசியலுக்கு முஸ்லீம்களைப் பயன்படுத்தினார். அப்போதைக்கு முஸ்லீம்கள் காந்தியைப் பயன்படுத்திக் கொண்டனர். இருந்தாலும் காந்தி தன்னை இந்து பற்றாளராக காட்டிக் கொண்டார். இவ்வாறுதான் முஸ்லீம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் தொடங்கப்பட்டது. அதுவே பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக மாறிப்போனது. 

காந்தியின் இந்தப் போக்கை, சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளரான ஸ்ரீநிவாச ஐயங்கார் கண்டித்தார். 1927-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் அன்சாரி தலைமையில் நடைபெற்ற பூரண சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது தான் அங்கிருக்கக் கூடாது என்று கருதிய காந்தி முன்னதாக புறப்பட்டார். காந்தி ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் வீட்டில்தான் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் புறப்பட்டார். அப்போது ஸ்ரீநிவாஸ ஐயங்கார் காந்தியைப் பார்த்து, ''பனியா சாதியில் பிறந்த, அசாதாரண மனிதரான நீங்கள் சிறந்த திட்டமிட்டுச் செயல்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள். குடியேற்ற நாடுகளில் ஒரு மோதல் ஏற்படும் காலங்களில் சரிக்கட்டும் நிகழச்சி நடைபெறும். எழுத்தர்கள் இருக்கும் இடத்தில் சரிக்கட்டுதல் நடைபெறும். அது ஒருபோதும் இடதுசாரிகளிடம் செய்யப்படாது. வலதுசாரிகளின் முன்னணித் தலைவராக உள்ள உங்களிடம்தான் செய்யப்படும். இந்து மதத்திற்கு எதிரான அஹிம்சையை சாதனையாகப் பரப்புரை செய்வது நீண்டகால அடிப்படையில் அது நாட்டின் தீரத்தை நீர்த்துப் போகச் செய்யும். அப்போது முஸ்லீம்கள் அதன் பலனை அறுவடை செய்வார்கள். அதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமானவையாக இருக்கும். நீங்கள் இயற்கைக்கு மாறான இறப்பைச் சந்திப்பீர்கள் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை'' என்று கூறினார்.  இது எல்லாம் தீர்க்கதரிசனமாக மாறிப்போனது வரலாறு.

காந்தியின் சுவரொட்டி பையனான நேரு, அப்படியே தனது குருநாதரின் வழியில் நடந்து நாட்டுப் பிரிவினைக்கு ஒப்புக் கொண்டார். வடக்கே இந்து மதத்தை முதலில் பழித்தவர் என்றால் அது ஜவஹர் லால் நேருதான் என்று சொல்லலாம். தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த நாட்டில் ராமன் தெய்வமல்ல, ராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் சண்டை” என்று குறிப்பிட்டார். மேலும், யாரையும் எளிதில் முட்டாள்கள் என்று சொல்லும் நேரு, “கிரஹகணத்திற்கு குளிப்பவர்கள் முட்டாள்கள். பசுவதையை தடை செய்யச் சொல்பவர்கள் அறிவீனர்கள்” என்ற வகையில் பேசினார். இதைச் சுட்டிக் காட்டும் தேவர், இம்மாதிரி நாஸ்திகத்திற்குப் போவது நல்லதல்ல, அதே நேரத்தில் தேசியத்தை விசாலமாக்கப் போகிறோம் என்று தட்டையான நிலைமைக்குப் போகின்ற நிலையிலும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

அதேபோல, ''ஒரு தேசம் மதச் சார்பற்றிருக்கிறது என்றால், அதை எந்த நாடும் தூக்கிற எறிந்து விடும் அஸ்திவாரம் இருக்கக் கூடிய அரசியல் நமக்கு வேண்டும். பலனை அனுபவிக்க மதம் நமக்கு வேண்டும். இந்த தேசம் என்றும் சாயாமல் இருக்க ஆணிவேர் போட்டு நிற்க, இரண்டையும் தயாராக நாம் சேர்த்து வைத்துக் கொண்டு அதோடு வாழுகிற நிலைமை, அந்த நிலைமையிலும் எதைச் செய்ய வேண்டும் என்பதைக் கருதி ஒன்றுமே இல்லாமல், யாருக்கும் உரிமையே இல்லாமல் செய்து விடலாம் என்று நினைக்கிற கம்யூனிஸம் என்றைக்குமே நிறைவேறாது.

அதற்காக முதலாளி வர்க்கத்தைக் கூட்டிக் குவிக்க அனுமதிப்பது மிகப்பெரிய கொடுமை. ஒவ்வொருவருக்கும் உழைப்புக்கும், தன்மைக்கும் தக்கவாறு சர்க்கார் பெற்று, அவனுடைய தேவைக்குத் தக்கவாறு அனைவருக்கும் ஊதியம் வைத்து, இதன் மூலம் அரசாட்சி புரிவதுதான் உண்மையான ஜனநாயகமாகும்'' என்று குறிப்பிடுகிறார்.  

சரி, இவ்வாறு பேசும் தேவர் முஸ்லீம்கள் தொடர்பான பிரச்சனையில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதையும் பார்ப்போம். அபிராமம் கிராமத்தில் முஸ்லீம் இளைஞர்கள் சந்தைக்கு வரும் இந்துப் பெண்களிடம் குறும்பு செய்தபோது அதை முஸ்லீம் பெரியவர்களிடம் சொல்லி சரிசெய்ய முயன்றார். ஆனால் அவர்களும் கேளாது போகவே, “முஸ்லீம்களின் நிலங்களுக்கு வேலைச் செல்வதையும் முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க” அறிவுறுத்தினார். இந்தப் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று பின்னர் “அநீதியை எதிர்க்க சமூக ஒத்துழையாமையை மேற்கொள்வது தவறில்லை” என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறாக தேவர் முஸ்லீம் இளைஞர்களின் தவறுகளைக் கண்டித்தார். அதேவேளையில், 1948-ம் ஆண்டு காந்தி கொல்லப்பட்டபோது காந்தியை கொன்றவர் ஒரு முஸ்லீம் என்ற வதந்தி பரவியது. இது மத மோதலை உருவாக்கும் என்பதால், “காந்தியை கொலை செய்தது ஒரு இந்துதான்” என்று தேவர் மதுரையில் பிரச்சாரம் செய்து மத மோதலை தடுத்தார். இவ்வாறு தேவர் தேவைப்படும் இடங்களில் முஸ்லீம்களை கண்டிப்பவராகவும், அவர்களை பாதுகாக்க வேண்டிய இடங்களில் அவரை பாதுகாக்கவும் செய்தார். இவ்வாறு தேவர் தனது பேச்சு, கொள்கை, சிந்தனை என்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசியலையே முன்னெடுத்தார்.
இவ்வாறு அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக ஆன்மீகச் செம்மலாக வாழ்ந்து, இன்றும் அவரின் பெயரைச் சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற வகையில் அரசியல் வானில் உயர்ந்து நிற்கும் தேவரை இந்து மதத்தின் பெயரால் அரசியல் செய்ய முயலும் ஒரு குள்ளநரிக் கூட்டம் கடத்திச் செல்ல முனைகிறது. தேவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கருத்தையும் உள்வாங்கிச் செயல்படும் என்னைப்போன்ற பலரும் சற்றும் விட்டுக் கொடுக்காத நிலையில் இன்றும் பேசியும் செயல்பட்டு வருகிறோம்.

கடந்த பத்தாண்டு கால இணையதள விவாதங்களில், பல்வேறு கருத்துக்களில் எனக்கும் பல இஸ்லாமியருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னை ஒரு இந்து தீவிரவாதி என்று கூறினர்.
வடக்கே எவ்வாறு காந்தியும் நேருவும் இந்துக்களுக்கு எதிரான அரசியலை செய்தார்களோ, அவ்வாறே தெற்கே, திக, திமுக செய்தன. இவர்கள் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் பேசி அவர்களை வைத்து அரசியல் செய்து வந்தனர். இந்தச் செளகரியத்தைப் பெற்ற முஸ்லீம்கள், தாங்களும் இந்துக்களுக்கு எதிராக பேசலாம் என்ற துணிவைப் பெற்றனர். அவ்வாறே பேசி வந்தார்கள். தமிழகத்தில் ஈழப்போருக்குப் பின்னர் தமிழின அரசியல் பரலாகப் பேசப்பட்டது. அப்போது “சாதி ஒழிப்பு” என்ற பொய்யான கருத்தியல் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது, இதனால், தமிழர் ஒற்றுமையின்மையே ஏற்படும் என்பதை என்போன்ற தமிழ்த் தேசியவாதிகள் உணர்ந்தனர். ஆனால், இந்து எதிர்ப்பு மனோநிலையில் இருந்த திமுவை சேர்ந்த முஸ்லீம்கள், சாதி அமைப்பு தீய ஒன்று, அதனால் சாதி ஒழிப்பு அவசியம் என்று பேசினர். அப்போது, மதம் தீய ஒன்று, எனவே மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நாம் சொன்னபோது அவர்களால் பதில் பேச முடியவில்லை.
என் போன்றோர் தமிழர்களை அடையாளம் காண சாதி அடையாளங்களே அடிப்படை என்று கூறி அதைப் பயன்படுத்த வலியுறுத்தியபோது சில திமுக மூளைச் சலவை முஸ்லீம்கள் அதனை மறுத்தார்கள். அப்போது, முஸ்லீம்கள் தங்கள் பெயரில் உள்ள அடையாளங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று நாம் சொன்னபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதுபோல இந்து- முஸ்லீம் சார்ந்த பல்வேறு விஷயங்களை நான் வாதம் செய்தேன். இதுபோல வாதம் செய்த பல முஸ்லீம்களும், தமிழ் சாதி அடையாளங்களை ஒழிப்பது, தமிழர் பண்பாடுகளுக்கு எதிராகப் பேசுவது என்பது தவறு என்பதை உணர்ந்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். இன்னமும் பல முஸ்லீம்கள், பாஜக எதிர்ப்பு அரசியலை வைத்து அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இந்து எதிர்ப்பை பேசி வருகிறார்கள்.
இந்துத்வா சார்ந்து பேசும் சில தமிழர்கள், குறிப்பாக முக்குலத்தோர் இஸ்லாமியர் மீது பல குற்றச் சாட்டுக்களை வைக்கிறார்கள். அதாவது அவர்கள் பெயரிலிருந்தே தமிழர்களாக இருப்பதில்லை. வாழ்க்கை முறையிலும் அவர்கள் தமிழர்களாக இருப்பதில்லை. மொழியையும் விரைவில் மாற்றி விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி ஊர்வலம் நடத்தும் மனநிலை முஸ்லீம்களிடையே காணப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை. இன்னும் இனம் சார்ந்த ஓர்மை ஏற்பட்டு அரசியல் அதிகாரம் பெறப்படும்போது நிச்சயமாக தமிழக முஸ்லீம்களின் இந்த நிலைப்பாடு மாறும் என்றே நான் நம்புகிறேன். அதற்கு ஏற்ற சரியான முனைவுகளின் மூலமாக மாற்ற முயற்சிப்போம். எந்தவொரு சமூகப் பிரிவையும் (தெலுங்கர் உட்பட) ஒதுக்காமல் எல்லாரையும் உள்ளடக்கிய ஜனநாயக அரசியல் முனைவுகளை சரியானவையாக இருக்கும். அதை விடுத்து, பாஜக பாணியில் முஸ்லீம்களை காரணமின்றி வெறுத்து அதை வைத்து அரசியல் செய்வது இந்துக்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி எந்தவித பயனையும் தராது. இவர்கள் தங்கள் இந்துத்வா கொள்கைகளுக்காக, தேவரின் பெயரை பயன்படுத்துவதை தமிழர்களும் சரி முக்குலத்தோரும் சரி ஏற்க மாட்டார்கள். 
உதவிய நூல்கள்:
1.    மதர் பெஸன்ட் அண்ட் மஹாத்மா காந்தி
2.    முடிசூடா மன்னர் முத்துராமலிங்கத் தேவர்
*******

Monday, December 23, 2019

பிராமணர்களும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும்


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மிகவும் மதிக்கக்கூடியது போலவும் அவரை இந்து மதத்தின் ஒரு அடையாளம் போலவும் உருவாக்கப்படுவதில் பிராமண சக்திகள் வெற்றி கண்டுள்ளன.ஆனால் உண்மை என்ன? பிராமண சக்திகள் முத்துராமலிங்கத்தேவரை உயர்த்திப் பிடிப்பதன் காரணம் என்ன?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடத்திய அரிசன நுழைவு போராட்டம் நீங்கள் அனைவரும் அறிந்ததே .
ஆனால் அது எந்த சமூகத்திற்கு எதிராக, எந்த சமூகத்தின் ஆதிக்கத்திற்கு அறைகூவலாக நடந்தது என்பதை அறிவீர்களா?
நிச்சயமாக அது பிராமண சாதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு நுழைவு போராட்டம்.
வைத்தியநாத ஐயர் அந்த அரிசன நுழைவு போராட்டத்திற்கு தலைமை ஏற்ற பொழுதும் தன்னால் அதை சாதிக்க இயலாது என்று எண்ணியே பின்வாங்கினார்.
(இந்த வைத்தியநாத ஐயர் இறந்தபோது அவரது இறப்பிற்கு செல்லாமலும் சடங்குகளை செய்யாமலும் பிராமண சமூகங்கள் புறக்கணித்தன என்பதிலிருந்தே தங்கள் சொந்த சாதியினர் மீது, கூட அவர்கள் எவ்வளவு வஞ்சினம் கொண்டிருந்தார்கள் என்பதை உணருங்கள்).
இதன் காரணமாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அந்த போராட்டத்திற்கு உறுதுணையாக துண்டறிக்கை வெளியிட்டார். அந்த துண்டறிக்கையில் #சனாதனவாதிகளுக்கு #எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, அன்னை மீனாட்சியின் கோயிலிலே ஹரிஜனங்களை கூட்டி வரும் பொழுது எவரேனும் தடுக்க முயன்றால் அவர்களை தக்க வழியில் நானும் எனது சமூகமும் சந்திக்கும் என்று அறைகூவல் விடுத்தார்
மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகராக இருந்த பிராமணர்கள் அந்த போராட்ட தினத்தன்று முழுமையாக வேலை நிறுத்தம் செய்தனர். எந்த அர்ச்சகரும் கோயிலில் இல்லை. முத்துராமலிங்கத் தேவர் திருச்சுழியிலிருந்து இரண்டு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பூசாரிகளை கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலில், பூசனைகள் செய்தார் .
ஆண்டாண்டு காலமாய் வழக்கத்திலிருந்த பிராமணர்களின் பூசையை உடைத்து வேளாளர் சமூகத்தின் பூசையை நடத்திக் காட்டி இதில் அவர் வெற்றி கண்டார் .இதில் எதிர்பாராத விதமாக அந்த இரண்டு பூசாரிகள் ஒருவர் என்ன காரணம் என்று தெரியாமலே மரணித்தார். அப்பொழுது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடையே பீதியை கிளப்ப கூடிய இத்தகைய தாக்குதல்கள் தொடருமாயின் அவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள் என்று நேரடியாக எச்சரிக்கை விட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வெளியேறிய பட்டர்கள்
டிவிஎஸ் நிறுவனத்தாரின் இடத்தில் ஒரு மீனாட்சி அம்மனின் வெண்கலச் சிலையை வைத்து பூசை தொடர்ந்தார்கள். அச்சமயத்தில் தங்களுடைய ஆண்டாண்டு கால உரிமையை உடைத்து நொறுக்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது வஞ்சினம் கொண்டனர் .இது வரலாற்றில் பதியப்பட்ட உண்மை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நுழைவு போராட்டம் நடத்தியது மட்டுமே நினைவு கொள்ளப்படக்கூடிய இந்த வேளையில், அது யாருக்கு எதிராக நடந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் .
இந்த அரிசன நுழைவு போராட்டமே ஒரு காலத்தில் தேவர் அவர்களுக்கு எதிராக பிராமண அதிகாரிகளை ஒருங்கிணைத்தது.
ராமநாதபுரம் பரமக்குடி கலவரத்தில் கலவரம் நடந்து ஐந்து நாட்களுக்கு அப்புறம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது எப்ஐஆர் பதிவதற்கு மதுரையில் காவல் உயர் அதிகாரியாக மற்றும் கலெக்டராக இருந்த பிராமண சக்திகள் காமராஜருக்கு அறிவுறுத்தினார்.
இது மட்டுமல்ல பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பல்வேறு மேடைப்பேச்சுகள் மிக அதிக அளவில் நடைபெற்ற இடம் #காஞ்சிபுரம். ஆனால் அங்கு அவர் ராமலிங்க சுவாமிகளின் வழிபாட்டு முறையையும் மார்க்க முறைகளையும் உயர்த்திப் பிரச்சாரம் செய்தார் .
ராமலிங்க சுவாமிகளின் நெறிமுறை என்பது சங்கரமடத்திற்கு முழுக்க எதிரானது.
காஞ்சி சங்கரமடத்திற்கு எதிராக ராமலிங்க அடிகளாரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் தங்களின் நெறிமுறையை வளர்த்தனர் இது முழுக்க முழுக்க நிதர்சனமான உண்மை.ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் அது முத்துராமலிங்கதேவர் ஆதினங்களுடனும் பண்டாரங்கள் உடனும் சைவத்திருமுறை அடியார்களுடன் உள்ள புகைப்படங்களை நீங்கள் காணலாம்.
ஆனால் காஞ்சிபுரத்திலேயே அதிக அளவில் தன்னுடைய அரசியல் ஆன்மீக பணிகளை மேற்கொண்ட முத்துராமலிங்க தேவர் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதிகள் என்று கூறப்படும் எவருடனும் அவரது புகைப்படம் இன்றுவரை இல்லை இது ஒன்றே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிராமண சக்தியான காஞ்சி மடத்திற்கு எதிராக இருந்தார் என்பதற்கு சான்றாகும்.
ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறையடைப்பு மற்றும் தொடர்ச்சியான அவரது மரணம் இவற்றிற்கு பின் தங்கள் மீது ஏதேனும் சந்தேகம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பிராமண சமூகம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தங்களுடைய இந்து மதத்தின் அடையாளமாக மாற்ற தொடங்கியுள்ளனர். இது மட்டுமல்லாது வள்ளலார், ராமலிங்க அடிகளார், தேவர்களது குரு வல்லநாட்டு சித்தர் போன்றோருடைய மரணமும் புதிரான ஒன்றே .
இந்த பிராமண சக்தியானது சமூகத்தில் பெரும்பான்மையான மாற்றுக் கருத்துடையவரை அழிப்பதிலும், பின்னர் அவர்களையே தங்களுடைய அடையாளமாக மாற்றுவதிலும் வல்லமை படைத்தது.
.
,இந்து மதத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அண்ணல் அம்பேத்கரையும் இவர்கள் சமஸ்கிருத ஆதரவாளராக கடந்த 20 ஆண்டுகளில் கட்டமைத்து விட்டார்கள்.
முக்குலத்து சொந்தங்களே உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் வீரப்பரம்பரை ஆண்ட பரம்பரை சத்திரிய குலம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால் பிராமணர்களை பொறுத்தவரை பொறுத்தவரை நாம் நீச சாதியினரே.
நம்முடைய வழிபாட்டு முறைகள் சைவ வைணவ முருக வழிபாடு .
இறைவனை, நம்முடைய குலதெய்வங்களை நம்முடைய விருப்பபடி வணங்கும் முறை உடையவர்கள், நாம். நாம் இறைவனை வணங்குவதற்கு எவ்வித கட்டுப்பாடும் அல்லாத நடைமுறை நம்முடையது இறைவன் முன்னால் நாம் எத்தகைய நிலையிலும் புனிதமானவர்கள் என்று கூறக்கூடிய உயரிய வழிபாட்டு முறை நம்முடையது.
ஆனால் பிராமணர்களை பொறுத்தவரை அவாளைத் தவிர மற்ற அனைவரும் இறைவழிபாட்டை பூசை தொடர்வதற்குத் தகுதிஅற்றவர்கள். உடலுழைப்பற்ற ஒரு சோம்பேறி சமூகம் உளவியல் ரீதியாக நம்முடைய மக்களை நம்முடைய இறைவனிடத்திலிருந்து நம்மை தூர வைத்து குறைத்துக் கொண்டிருக்கிறது உண்மை உணர்வோம், இவர்களின் சதி செயலில் சிக்காமல் நம்முடைய அரசியல் கட்டமைப்பை உருவாக்குவோம்
- Suresh Pandian

Sunday, December 22, 2019

திருச்சி மலைக்கோட்டையும் கள்ளர்களும்


நாம் திருச்சி மலைக்கோட்டையை பார்க்கும்போதெல்லாம், அதன் பிரமாண்ட அமைப்பும், மலைஉச்சியில் அமைந்துள்ள கோயிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் வரலாறு அறிந்தவர்களுக்கு, மலையின் உச்சியை மிஞ்சும் அளவிற்கு வீரம் மிகுந்த கள்ளர்கள் திருச்சி மலைக்கோட்டையில் செய்த போர்கள் நினைவுத்துளிகளில் வந்து வியப்பை ஏற்படுத்தும். வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட வீரம் செறிந்த நிகழ்வுகள் சிலவற்றை காண்போம்.
பீஜப்பூர் சுல்தான்களை தோற்கடித்தல்:
கிபி 1660 ல் பீஜப்பூர் சுல்தான்களின் படைத்தளபதிகள் முல்லா மற்றும் ஷாஜி என்பவர்கள் தலைமையில் துலுக்கர் படைகள் முதலில் நாயக்கர் வசம் இருந்த தஞ்சையை தாக்கினர். தாக்குதலை சமாளிக்க இயலாத தஞ்சை நாயக்க மன்னர் ஒடி மறைந்தார். தஞ்சையை சூரையாடிய பின் துலுக்கர்கள் திருச்சி கோட்டையை முற்றுகையிட்டனர். திருச்சி நாயக்கர் படைதளபதி லிங்கம நாயக்கர் தலைமையில் வலுவான படை இருந்ததால், கோட்டையை எளிதில் கைப்பற்ற இயலவில்லை. துலுக்கர் படையின் ஒரு பிரிவினர் திருச்சியின் மற்ற பகுதிகளை சூரையாடி மக்களை வதைக்க தொடங்கினர். இச்சமயத்தில் கள்ளர்கள் இரவு நேரங்களில்,எதிர்பாரா தாக்குதல்களை பீஜப்பூர் படை மீது நடத்தினர். அவர்களின் முகாம்களை தாக்கி சூரையாடி தவிடு பொடியாக்கினர். தாக்குதல்களை சமாளிக்க இயலாத பீஜப்பூர் படை திருச்சியை விட்டு அகன்றனர். அங்கு மதம் பரப்ப வந்த போதகர்கள் தங்களது குறிப்புகளில், தமிழகத்தின் மீது படையெடுத்த சுல்தான்கள், மன்னர்களின் படையைவிட, கள்ளர்களின் திடீர் தாக்குதல்களை கண்டே அஞ்சி நடுங்கியதாக கூறியுள்ளனர்.
(Tamilaham in 17th century: page 73)
மராத்தியரை விரட்டியடித்த கள்ளர்ப்படை:-
கிபி 1682ல் ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் வசம் இருந்த திருச்சி மலைக்கோட்டையை மராத்தியர் தாக்கினர் கைப்பற்றினர். தாக்குதலை சமாளிக்க இயலாத நாயக்கர், புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். அம்புநாட்டு கள்ளர்களுடன் தொண்டைமான் மலைக்கோட்டையை முற்றுகையிட்டுள்ளார். கோட்டையின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் கள்ளர்கள் பெரும் ஏணிகளை கொண்டும், கயிறுகளை பயன்படுத்தியும் கோட்டை மதில்களை தாண்டி உள்ளே சென்று, தொடர்ந்து போரிட்டு மராத்தியர்களை விரட்டியடித்தனர். இந்த உதவியால் மகிழ்ந்த திருச்சி நாயக்கர், அம்புநாட்டு கள்ளர்களை 12 மாவட்டங்களின் தலைமை காவல் அதிகாரிகளாக நியமித்தனர். புதுக்கோட்டை தொண்டைமானுக்கு திருச்சியை பாதுகாக்கும் அரசு காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.
(General history of pudukkottai state 1916 R Aiyar Page 121)
கர்நாடக நவாப்பை கருவறுத்தல் :-
கிபி 1741 ல், கர்நாடக நவாப் சந்தா சாகிப் வசமிருந்த திருச்சி கோட்டையை மீட்க, புதுக்கோட்டை கள்ளர்களும் தொண்டைமானும் மராத்தியரோடு சேர்ந்து நவாப்பை தாக்கினர். கள்ளர்களும், மராத்திய படையும் கூட்டணி அமைத்து தாக்குதல் நடத்தி மலைக்கோட்டையை கைப்பற்றினர். கோட்டையை ஆக்ரமித்து இருந்த சந்தா சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை தொண்டைமான் வீரத்தை கண்டு வியந்த மராத்திய தளபதி வட்டா சிங் என்பவன், மன்னருக்கு வஜ்ஜிருடு எனும் பட்டத்தை அளித்தான். இதன் பொருள் " தன்னிகரற்ற போர்வீரர் " என பொருள்படும்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 183 )
ஐதரதாபாத் நிசாம் படையை விரட்டியடித்த கள்ளர்கள்:
கிபி 1743 ல், ஐதராபாத் நிசாம் பெரும்படை கொண்டு தமிழகத்தை தாக்கினான். மதுரையும் நிசாமிடம் வீழ்ந்தது. திருச்சி கோட்டையை கைப்பற்ற தாக்குதல் நடந்து வந்தது,அச்சமயம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்கள் நிசாம் படையின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர். நிசாம் படையின் முகாம்களை துவம்சம் செய்து ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும் வண்டி மாடுகளை கவர்ந்து சென்றனர். நிசாம் படை இழந்ததை மீட்க கள்ளர் நாட்டை தாக்கியது. ஆனால் அவர்களை நினைத்ததை போல கள்ளர்களை எளிதில் வெல்லமுடியாததால் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நிசாம் படை ஒடிவிட்டதாக அங்கு மதபோதனைகள் செய்து வந்த பாதர்கள் குறித்துள்ளனர்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 184)(The letter of madura mission to rome 1743)
மராத்திய படைகளை சூரையாடல்
கிபி 1745ல் நிசாம் வசமிருந்த திருச்சி கோட்டையை கைப்பற்ற மீண்டும் மராத்திய படை திருச்சியை தாக்கியது. திருச்சியை தாக்கியது மட்டுமில்லாமல், திருச்சி முதல் ஆவூர் வரையிலான பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கிறிஸ்தவர்கள் தப்பி புதுக்கோட்டை கள்ளர்களிடம் சரணடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பலிவாங்க கள்ளர்கள் திருச்சி கோட்டை அருகே முகாமிட்டு இருந்த மராத்தியரை தாக்கினர். கிட்டதட்ட 3000 பேர் கொண்ட மராத்தியரின் குதிரைப்படை கள்ளர்களால் சிதறடிக்கப்பட்டது. முகாமில் இருந்த தளவாடங்கள் கள்ளர்களால் கவரப்பட்டது. தாக்குதலுக்கு மிஞ்சிய மராத்திய குதிரைப்படை வீரர்கள் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு, மாறுவேடங்களில் நடந்தே தஞ்சைக்கு சென்றதாக மதபோதகர்கள் தங்களது குறிப்புகளில் எழுதியுள்ளனர்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 186)
(The letter of madura mission to rome 1746)
சந்தாசாகிப்போடு மற்றுமொரு போர்:
கிபி 1751ல் சந்தா சாகிப் மீண்டும் திருச்சியை கைப்பற்றினான். கர்நாடக நவாபின் மற்றொரு பிரதிநிதியான முகமது அலியும், பிரிட்டீசாரும் தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 400 பேர் கொண்ட குதிரைப்படையும், 3000 கள்ளர்களை கொண்ட காலாட்படையும் அனுப்பி திருச்சி கோட்டையை தாக்கி கைப்பற்றினார்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 189)
சந்தா சாகிப்பின் இறுதி நாள் :-
கிபி 1752ல் திருச்சியை இழந்த சந்தா சாகிப், ஆலம் கான் என்பவனிடம் உதவி கோரினான். ஆலம் கான் என்பவன் சந்தா சாகிப் படையில் பணியாற்றி தளபதிகளில் ஒருவன். 2000 பேர் கொண்ட குதிரைப்படையை திரட்டி மதுரை மற்றும் திருநெல்வேலியை கைப்பற்றுகிறான் ஆலம்கான். சந்தா சாகிப்பிற்கு உதவ திருச்சி நோக்கி விரைந்தான். தொண்டைமான் அரசவைக்கு சென்ற ஆலம் கான் தனக்கு உதவினால் பெரும் நிலப்பரப்பை தருவதாக கூறினான். ஆனால் தொண்டைமானோ, உதவ மறுத்துவிட்டார். திருச்சி கோட்டைக்கு தொண்டைமான் நாட்டில் இருந்து வரும் பொருட்களை தடுத்து நிறுத்த ஆலம் கான் புதுக்கோட்டை - திருச்சி சாலைகளில் தாக்குதல்களை நடத்தினான். இதையறிந்த தொண்டைமான் தனது படையுடன் சென்று ஆலம் கானை திருச்சி இரட்டைமலை பகுதி வரை விரட்டினார். அங்கு யானை மேல் அமர்ந்து இருந்த ஆலம் கான் பீரங்கி குண்டால் கொல்லப்பட்டான். 200 க்கும் மேற்பட்ட ஆலம்கான் படையினர் கொல்லப்பட்டனர். திருச்சி கோட்டை முழுவதும் தொண்டைமான் உதவியுடன் முகமது அலியின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.
(General history of pudukkottai state R aiyar page 191)
ப்ரெஞ்சுக்கு எதிராக போர்:
கிபி 1760 திருச்சி கோட்டையை கைப்பற்ற ப்ரெஞ்சு மற்றும் ஐதர் அலி கூட்டணி முயற்சி செய்தது. ஆங்கிலேயர் மற்றும் ஆர்காடு நவாப் தொண்டைமான் உதவியை நாடினர்.தொண்டைமான் 100 பேர் கொண்ட குதிரைப்படை மற்றும் 1000 பேர் கொண்ட காலாட்படையை அனுப்பி ப்ரெஞ்சு கூட்டணி தாக்குதலில் இருந்து திருச்சி கோட்டையை காத்தார்.
(General history of pudukkottai state R aiyar page 226)
ஐதர் அலியிடம் இருந்து திருச்சியை காத்தல் :
கிபி 1781 ல் ஐதர் அலி பெரும்படையோடு திருச்சி கோட்டையை தாக்கினான். தொண்டைமான் தனது படையை அனுப்பி ஐதர் அலி படையிடம் போரிட்டு திருச்சி கோட்டையை காத்தார். பின்வாங்கிய ஐதர் அலி படைகள் திருக்காட்டுப்பள்ளியை தாக்கி பலரை கொன்று குவித்தான். ஆங்கிலேயர் படைகள், தொண்டைமான் அனுப்பிய கள்ளர் படையுடன் சேர்ந்து ஐதர் அலி படைகளை திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பின்வாங்க செய்தது.
(General history of pudukkottai state R aiyar page 267)
திப்பு சுல்தானிடம் இருந்து திருச்சியை காத்தல் :
கிபி 1790 ல், ஐதர் அலியின் மகன், திப்பு சுல்தான் மீண்டும் திருச்சி கோட்டையை தாக்கினான். திருச்சியில் மக்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டு, மாடுகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 1500 பேர் கொண்ட கள்ளர் படையை அனுப்பி, திப்புவின் படைகளை திருச்சியில் இருந்து பின்வாங்க செய்தார்.
(General history of pudukkottai state R aiyar page 291)
மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் திருச்சிராப்பள்ளி கோட்டைக்கும், கள்ளர்களுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை நமக்கு உணர்த்தும். திருச்சி மலைக்கோட்டை பல செங்குறுதி வரலாறுகளை தன்னகத்தே கொண்டு, இன்று மௌன சாட்சியாக தனது பழம்பெருமைகளை அசை போட்டுக்கொண்டு உள்ளது.
* சியாம் சுந்தர் சம்பட்டியார் *

Monday, December 16, 2019

வேட்பு மனுத்தாக்கல்

இன்று பார்வர்டு பிளாக் - திமுக கூட்டணி வேட்பாளராக பெரியகுளம் ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் பாண்டீஸ்வரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். உடன் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தங்கராஜா, மாவட்ட பொறுப்பாளர்கள் அ. பெருமாள் தேவன், க.விலக்கு மஞ்சபாண்டி, காசிராஜன், தேவதானப்பட்டி நகரச் செயலாளர் எஸ். சுபாஷ், சதீஷ் முதலானோர் இருந்தனர்.






இந்திர குலத்து தொண்டைமான்



16ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் முழுமையாக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களின் வழித்தோன்றலாகிய கள்ளர்குல தொண்டைமான்கள் சூரைக்குடி,அறந்தாங்கி,பல்லவராயர்,அம்புநாட்டு தொண்டைமான்கள் தனித்த அரசாக ஆட்சி செலுத்தி வந்தனர்.

அவர்களில் யானைகளை அடக்குவதில் வல்லமைமிக்க அம்பு நாட்டு தொண்டைமான்கள் தங்களின் அசுர பலத்தால் வடக்கே விராலிமலை முதல் தெற்கே மீமிசல் கடற்கரை வரையும். கிழக்கே அறந்தாங்கி முதல் மேற்கே மல்லாக்கோட்டை நாட்டு எல்லைக்கோடு வரை பரந்து விரிந்து ஆட்சி செய்தனர்.

அம்பு நாட்டு தொண்டைமான்களின் ஒட்டுமொத்த ஆட்சி நிலப்பரப்பாக கிபி1930ல் 3053.59சதுர கிலோமீட்டர் பரப்பளவை தன்னகத்தே வைத்திருள்ளனர். இதுவே மூவேந்தர்களுக்கு பின்பு தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரே தமிழ் மன்னர்கள் தொண்டைமான்களே.....!

இந்திய ஒன்றியத்திற்காக தன்னுடைய நாட்டையே தானமாக அளித்த பாரி நாட்டு வேந்தன் இந்திர வங்கிசத்து தொண்டைமானையே சாரும்.
ஆனால் தமிழகத்தின் ஜமீன்களும்,சமஸ்தானங்களும் 99% பேர், இன்றும் அரசு உதவித் தொகையை பெற்று வருகின்றனர். பல கோவில்களின் உண்டியல் பணம் பல சமஸ்தானங்களின் வயிறு வளர்க்க பெரும் உதவி செய்கிறது. ஆற்காடு நவாப் இன்றும் சைரன் போட்ட காரில் அரசு உதவித்தொகையுடன் வலம் வருகிறார்.

ஆனால் தொண்டைமான் அரசர்களோ தங்களுடைய நிலம்,அரசு கஜானா,அரண்மனைகள்,படை பரிவாரங்கள்,100க்கும் மேற்பட்ட அரசு கோவில் சொத்துக்கள் அனைத்தையும் கிபி1948ல் இந்திய ஒன்றியத்திடம் அளித்து விட்டு எந்த ஒரு உதவித்தொகை பெறாமல் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து இன்று சராசரி இந்திய குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

நன்றி
The hollow crown
  by asiatic society
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு






நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...