Monday, February 10, 2014

தமிழர் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம். வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகிறது!


இன்று (9-02-2014) சென்னையில் தமிழ் அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள், தமிழ்ச் சான்றோர்கள் ஒன்று கூடி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் போட்டியிடுவதென்று முடிவெடுத்
து அதற்கான கூட்டமைப்பை உருவாக்கினர். நடந்த இந்த கலந்தாய்வில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒருமனதாக 'தமிழர் தேசிய கூட்டமைப்பு ' என்ற பெயரில் தேர்தலில் களமிறங்க முடிவெடுத்துள்ளனர். 

முதற்கட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன. இனி வரும் வாரங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் இனம் சார்ந்த அமைப்புகள், கட்சிகள் இணைய உள்ளன. 

வரும் தேர்தலில் தமிழர்களுக்கு சார்பாக ஒரு கூட்டணியும் உருவாகாத நிலையில், திராவிட, இந்திய தேசிய கட்சிகள் மீண்டும் பெரும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட உள்ள நிலையில், தமிழர்களின் சார்பாக ஒரு வலுவான கூட்டணி உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டமைப்பு உருவாகி உள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், தமிழர் உரிமைகள் அனைத்தும் மீட்கவும் இந்த கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட உள்ளது . 

மிக முக்கியமான தமிழர்களின் நெடுநாள் கனவான ' தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் ' என்ற முழக்கத்தை முன்வைத்து இக் கூட்டமைப்பு செயல்பட உள்ளது. தேர்தல் கோரிக்கையாக தமிழர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, வேலை வாய்ப்பு , கல்வி, சுகாதாரம், விவசாயம், பொருளாதாரம் , தொழில் வளர்ச்சி என அனைத்திலும் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கவும் தீர்மானம் இயற்றப்பட்டது. நம் மொழியை அரியணை ஏற்ற தமிழர்களுக்கான மொழிக் கொள்கை வகுக்கப்பட்டது. சாதிய சிக்கலை தீர்க்கவும் அனைத்து தமிழ்ச் சாதிகளையும் ஒன்றிணைக்கவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுத்துவ சமூகத்தை உருவாக்கவும் உறுதி ஏற்கப்பட்டது. அரசியல் ரீதியான பலத்தை பெறுவதற்கும் தமிழர்கள் இழந்த அரசியல் உரிமைகளை போராடிப் பெறுவதற்கும் முடிவு செய்யப்பட்டது. தமிழர் கல்வி உரிமை, வழிபாட்டு உரிமை, வழக்காடு உரிமை, நில உரிமை, சொத்து உரிமை, விவசாய உரிமை, இயற்கை வளங்கள் மீதான உரிமை, நீர் உரிமை அதிகார உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மீட்டெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு முன்னுரிமை என்ற அடிப்படை கோரிக்கையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழர் நலன் சார்ந்த பல்வேறு கொள்கைகளையும் தமிழ்ச் சான்றோர்கள் கூடி பேசி வரையறை செய்ய உள்ளனர். 

இக்கூட்டமைப்பில் முதல் கட்டமாக அதியமான் தமிழர் முன்னேற்ற கழகம் , திரு . அரிமாவளவன் தமிழர் களம் , பிரபாகரன் மறத்தமிழர் சேனை, தமிழர் பேரரசு கட்சி, திரு செல்வா, தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், இராஜ்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம், திரு இறைவன் வடதமிழ் நாடு மக்கள் சங்கம், செந்தில் மள்ளர், மள்ளர் மீட்புக் கழகம், பெருமாள்தேவன் தேவர் ஆராய்ச்சி மையம், அக்னி சுப்பிரமணியன், சீதையின் மைந்தன், எழுகதிர் ஆசிரியர் திரு அருகோ, அருட்கண்ணனார், திரு முகிலன் தமிழ் பட்டரை, திருமாறன் மற்றும் பலரும் ஆகியோர்கள் கலந்து கொண்டு தங்களையும் தங்கள் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டனர் .

நாம் வகுத்துள்ள தமிழர் நல கொள்கையில் உடன்பாடுள்ள கட்சிகள், அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணைந்து தேர்தலை சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கிறோம். வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது ஒரு புறம், தமிழ்த் தேசிய அரசியலுக்கான அவசியத்தை மக்களுக்கு எடுத்தச் செல்வது இன்னொரு புறம். தமிழர் அரசியல் கட்டமைப்பு வலுவடையட்டும். தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்று தமிழர் வாழ்வு சிறக்கட்டும். தொடர்பு கொள்ள - 9566224027, 9047440542, 9943938548


https://www.facebook.com/rajkumar.palaniswamy.5?fref=ts

Thursday, February 6, 2014

பிற்படுத்தப்பட்ட மாணவர்களை துன்புறுத்தும் சாஸ்த்ரா பல்கலை கழக நிர்வாகிகள்

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் வல்லம் ருகே அமைந்துள்ளது சாஸ்த்ரா பல்கலை கழகம். இந்த பல்கலை கழகத்தில் பொறியியல், சட்டம், டிப்ளமோ படிப்புக்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த பல்கலை கழகம் பிராமணர்களால் நடத்தப்படுகிறது. இந்த பல்கலைக் கழக நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், அவர்களை துன்புறுத்துவதாகவும் குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது.

ஒரு அரசு கல்லூரியில் சட்டம் பயில ஒரு ஆண்டிற்கு ரூ. 6000 முதல் ரூ.10000 வரை செலவாகிறது என்றால் இங்கு ஒரு செமஸ்டருக்கு ரூ. 50,000 வரை செலவாகிறது. எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் பணக்காரர்களும் ஓரளவு அந்தஸ்து உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு சேர்ந்து படிக்க முடியம். இந்த பல்கலை கழகத்தில் பெரும்பாலும் முக்குலத்தோர், முஸ்லீம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் கஞ்சா புகைக்கும் போது பிடிபட்டார். பல்கலை கழக நிர்வாகிகள் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பிற்படுத்தப்பட்ட 10 மாணவர்களின் பெயர்களை கூறி அவர்கள்தான் தனக்கு கஞ்சா கொடுத்ததாக கூறியுள்ளார். உடனே பல்கலை கழக நிர்வாகம் அந்த 10 மாணவர்களையும் தற்காலிக நீக்கம் செய்தது.

அந்த மாணவர்களின் பெற்றோர் வந்து நிர்வாகிகளிடம் பேசியபோது உங்கள் பையன்களுக்கு மருத்துவச் சோதனை செய்து அறிக்கை பெற்று வாருங்கள் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்த மருத்துவமனை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை அளிக்கும் மையமாக  இருக்கவே பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதற்கிடையில் ஒரு மாணவனின் உறவினர்கள் நிர்வாகிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 18 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் வளர்ந்த பையன் ஒழுங்காக இருந்தபோது உங்கள் பல்கலைகழகத்தில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் எப்படி போதைப் பழகத்திற்கு அடிமையாகுவார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். உடனே நிர்வாகிகள் மற்ற மாணவர்களை தனித்தனியாக அழைத்து அந்த மாணவன் மட்டும்தான் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று சொன்னால் விட்டுவிடுவதாக சொன்னதாக கூறப்படுகிறது.

அதன்பின் அவர்கள் மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சோதனை செய்தபோது அவர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய அறிகுறிகளே இல்லை என்று தெரிய வந்தது. அந்த அறிக்கையை மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு எடுத்துச் சென்றபோது வைஸ் சான்சலர் வெளியூர் சென்றிருப்பதாகவும் அவர் வரும்வரை காத்திருக்குமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த அலைக்கழிப்பு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாகவே இந்த பல்கலை கழகத்தில் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் மாணவர்கள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மாணவர்களை மிரட்டுவதற்காகவே சட்டப்பிரிவின் தலைவராக பணிபுரிந்து வரும் ஜான்சன் என்ற பேராசிரியரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதாக பல்கலை கழகத்தின் எழுப்பப்படும் குற்றச் சாட்டு பற்றி டீன் வைத்தி அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, மாணவர்கள் மீது அவ்வாறு எந்தவித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று கூறினார். மேலும், தங்கள் பல்கலைக் கழகம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், இந்தக் காலத்தில் அதுபோல எந்த புகாரும் எழவில்லை என்றும், அவ்வாறு சொல்லப்பட்டால் அது ஆதாரமில்லாத புகார் என்றும் கூறினார். மேலும் ஜான்சன் என்ற பேராசிரியரே தங்கள் பல்கலை கழகத்தில் பணிபுரியவில்லை என்றும் கூறினார்.

பள்ளி மாணவர்களையே அடிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கும் இக்காலத்தில் இந்த பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களையும் அடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பல்கலை கழகத்தை நடத்துபவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் பினாமி என்றும் கூறப்படுகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்களுக்கு விசேஷ யாகங்கள் நடத்தப்படுவதுண்டு. இந்த யாகங்களில் மாணவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
•••••••••••••••••••

Tuesday, February 4, 2014

முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்



பெறுனர்:-
                        தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
                        முதலமைச்சரின் தனிப்பிரிவு,
                        தலைமைச் செயலகம், 
                        சென்னை - 600 009.

அனுப்புனர்:-
                        பெருமாள் தேவன்,
                        தேவர் ஆராய்ச்சி மையம்,
                        6-5-17/ 8ஏ, தடிவா நைனார் தெரு, 6வது வார்டு,
                        தேவதானப்பட்டி, பெரியகுளம் (வ), தேனி (மா) - 625602
                        மொபைல் 9047440542

பொருள் :- தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பதற்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தேவர் குருபூஜையை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோருதல்.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தாங்கள் 9-2-2014 அன்று தங்க கவசம் அணிவிக்க இருப்பதை செய்திகளின் வாயிலாக அறிகிறேன். தாங்கள் கடந்த 30-10-2010 அன்று அறிவித்தபடி இந்த தங்க கவசத்தை செய்து அணிவிக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சியுறுகிறேன். தங்களின் இந்த சேவைக்காக என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில், தேவர் குருபூஜை தொடர்பான சில உண்மைகளை தங்களுக்குத் தெரிவித்து சில வேண்டுகோள்களையும் முன்வைக்க விரும்புகிறேன்.

இந்திய மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே சிறந்த வழி என்று முடிவு செய்த அதனைச் செய்து காட்டிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்று தான் அடுத்த பிறவியில் தான் ஒரு தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று அவரை  சொல்ல வைத்த மாபெரும் தலைவர்தான் முத்துராமலிங்கத் தேவர்.

இந்த உன்னதத் தலைவர்கள் தமிழகம், இந்தியம் என்றில்லாமல் ஆசியா, ஆப்பிரிக்க மக்களின் நலனிற்காக சிந்தித்துச் செயல்பட்ட தலைவர்கள் ஆவர். இவர்களின் கருத்துக்கள், லட்சியங்கள் இன்றும் இந்திய மக்களுக்கு ஏற்றவையாக உள்ளன.

ஆனால் அண்மைக் காலங்களில் தேவரின் பெயருக்கு சாதிச் சாயம் பூசுவதில் சில தீய சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. நடைபெறும் நிகழ்வுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து வருகின்றன.

தேவர் குருபூஜையின்போது பள்ளர்-மறவர் சாதிகளிடையே மோதல் ஏற்படுகிறது. இதன் ஆணிவேர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சதியாகும்.

1957-ம் ஆண்டில் காங்கிரஸ் - ஃபார்வேர்டு பிளாக் கட்சிகளின் இடையே ஏற்பட்ட மோதல் பள்ளர் - மறவர் சாதிகளிடையேயான மோதலாக திரித்துக் காட்டப்பட்டது. உண்மையில் பெரும்பான்மை பள்ளர்களின் ஆதரவு தேவருக்கே இருந்து வந்தது. தேவரின் இந்த அரசியல் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையில் இந்த சதி அரங்கேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்த நடந்த விரும்பத் தகாத சம்பங்களில் இம்மானுவேல் கொலையும், முதுகுளத்தூர் கலவரமும், துப்பாக்கிச் சூடுகளும் அடங்கும்.

அப்போது காங்கிரஸ் கையில் எடுத்த பிரச்சாரத்தை இன்று வேறு பல தீய சக்திகள் எடுத்து சமூக மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே குருபூஜை விழா அமைதியாக நடைபெற வேண்டுமெனில் இந்த இரண்டு சாதிகளிடையே புரிதலையும் இணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக,  பிரச்சனைகள் ஏற்படும் பகுதிகளில் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நீண்டகால அமைதித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்.

ஆனால் விழாவை ஒழுங்கு செய்கிறேன் என்ற பெயரில் காவல்துறை தொடர்ந்து தவறான, அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2012-ம் ஆண்டு குருபூஜைக்குச் செல்லக் கூடாது என்று தென் மாவட்டங்களில் உள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள் எல்லாரும் மிரட்டப்பட்டனர். அவர்கள் வாகனங்களை இரவில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். இதனால் தொலைவில் இருந்து வருவோர் குருபூஜைக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டனர்.

2013ம் ஆண்டு 144 தடை உத்தரவு பிறப்பித்த கையோடு வாடகை வாகனங்களில் வரக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. பைக்குகளில் வரக்கூடாது, ஜோதி ஓட்டம் கூடாது, கூட்டமாக வரக்கூடாது, நடந்து வரக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது.

கமுதி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி, அம்மணம்பட்டி, புனவாசல், ஆப்பனூர் போன்ற ஊர்களிலிருந்து நடைபயணமாக வந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் கிராம தலைவர்கள்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால் கூட்டத்தை குறைத்து அதன் மூலம் அமைதியை ஏற்படுத்துகிறேன் என்று காவல்துறை சொல்வதாக இருக்கிறது. கூட்டத்தை குறைத்து அமைதியை ஏற்படுத்துவதும் மயானத்தில் அமைதியை ஏற்படுத்துவதும் ஒன்றுதான்.

இதுபோன்ற அடக்குமுறைகளின் மூலமாக ஏற்படுத்தப்படும் அமைதி நிரந்தரமானதாக இருக்காது. உண்மையில் குருபூஜையின்போது ஏற்படும் பிரச்சனைகளின் மூல காரணங்களை ஆராய்ந்து அவற்றை நிரந்தரமாகப் போக்க முயற்சி எடுப்பதே சிறந்த நடவடிக்கையாக அமையும்.

குருபூஜை என்பது இந்து மத வழக்கப்படி ஞானிகளுக்கும், யோகிகளுக்கும், பிரம்மச்சார்யம் காத்து, தன் இறப்பை முன்கூட்டியே நிர்ணயித்து, ஜீவசமாதியடைந்த ஆன்மீக ஞானிகளுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்தில் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது அப்பாவி கிராம மக்கள் பௌர்ணமி தினத்தில் விளக்குப் பூஜை நடத்தவும் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. இது போன்ற அடக்குமுறைகள் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்தாது. மாறாக மக்களிடம் வெறுப்பையே வளர்க்கும். இதை கடந்த  குருபூஜைக்கு வந்த அமைச்சர்களுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

குருபூஜைக்கு வரும் குடிகாரர்கள், சமூக விரோத சக்திகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மது அருந்தி வருபவர்களை தடுக்க சோதனை செய்யலாம். அதேபோல சமூக விரோத சக்திகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பல்வேறு அடக்குமுறை விதிகளின் மூலமாக தேவரின் பக்தர்களை, பெண்களை ஆலயத்திற்கு வரவிடாமல் தடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை காவல்துறை கைவிடாத நிலையில் தாங்கள் தேவரின் திருஉருவச் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பது வாக்கு வங்கி அரசியலைக் காட்டுமே ஒழிய வேறெதையும் காட்டாது.

எனவே குருபூஜையை அமைதியாக நடத்த முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகிறேன். கடந்த குருபூஜையின்போது அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி நடத்தப்படும் எந்த வித பூஜைக்கும் தடை விதிக்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                            நன்றி!

                                                                                                            இப்படிக்கு,
                                                                                                            தேவர் அடியேன்
                                                                                                            (பெருமாள் தேவன்)



நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...