Tuesday, June 21, 2016

எங்கள் ஊர் காதல் கதை


(21-06-16) இன்று மதியம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியவர் என் சின்னம்மாவின் மகன். உசிலம்பட்டியிலிருந்து ஒரு தம்பி வருகிறார். ஏதோ கல்யாண பிரச்சனை. உங்கள் காவல் நிலையித்தில் அழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள் என்று சொன்னார்.

நான் அங்கு சென்று பார்த்தேன். காவல் நிலையத்தின் வெளியே பெண் வீட்டார் குழுமி இருந்தனர். அவர்களின் பார்வையில் ஆத்திரம் தாண்டவமாடியது. மாப்பிள்ளையின் பெற்றோர் காவல் நிலைய வளாகத்தினுள் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். என்னை அழைத்தவர்களும் அங்கேதான் இருந்தார்கள்.

என்ன விஷயம் என்று கேட்டேன்...
பெண்ணும் மாப்பிள்ளையும் எங்கள் ஊர் காவல் நிலைய எல்லைக்குள் வரும் அம்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு வசிப்பவர்கள் பிரமலைக் கள்ளர்கள் மட்டும்தான்.

பெண்ணும் மாப்பிள்ளையும் பிரமலைக் கள்ளர்கள்தான். பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சகோதரர் முறை கொண்டவர்களைப் போல பழகி வந்துள்ளனர்.

ஆனால் மாப்பிள்ளை பாப்பாபட்டி கோவில் கும்பிடுபவர். பெண் மானூத்து கோவில் கும்பிடுபவர். எனவே பிரமலைக் கள்ளர்களின் சாதி வழக்கப்படி பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தமான திருமண முறையே உள்ளது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெண்ணையும் மாப்பிள்ளையையும் காணவில்லை. அவர்கள் ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள். பெண் வீட்டார் இது பற்றி புகார் செய்யவே காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக மாப்பிள்ளையின் தாய்-தந்தையரை காவல் நிலையத்தில் இருக்கச் செய்துள்ளனர். காலையில் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் காவல் நிலையத்தின் உள்ளே அமர்த்தி இருந்தார்கள். இருவருமே வயது வந்தவர்கள். அவர்களைச் சந்தித்து விட்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.
அப்போது அங்கு வந்த பெண் வீட்டார் ஆத்திரக் குரலோடு வந்தனர். பெண்ணின் தயார் காவல் நிலைய சுவற்றில் முட்டி அழுதார். காவலர்கள் அவரை கண்டித்து வெளியில் அனுப்பினார்கள். நான் வெளியில் வரும்போது பெண் வீட்டைச் சேர்ந்த ஒருவர் “அவனை கை-கால்களை வெட்டிப் போட வேண்டும்” என்று இரைந்தார்.

ஆய்வாளர் உணவருந்தச் சென்று விட்டதால் நானும் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன். நான் மாப்பிள்ளை வீட்டாரைச் சந்தித்து விட்டு வந்ததைக் கண்ட பெண் வீட்டார் என்னையும் ஆத்திரமாகவே பார்த்தார்கள்.

மாலை 6 மணியளவில் காவல்நிலையம் சென்றேன். அதற்குள் விசாரணையை முடித்து விட்டிருந்தார்கள். பெண் வீட்டாரையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஒரு காரைக் கொண்டு வந்து பெண்-மாப்பிள்ளை இருவரையும் அழைத்துச் சென்றனர்.

விசாரித்தபோது மணமகன் போதிய வசதி இல்லாதவர் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற அந்த மாப்பிள்ளை அந்தப் பெண்ணுக்கு மாற்று உடை கூட வாங்கித் தரவில்லை என்று சொன்னார்கள். சொந்த சாதிக்குள் காதலித்தாலும் இதுதான் காதலுக்கு கிடைக்கும் வரவேற்பு. இதனை புரியாத புரட்சியாளர்கள். காதல்-கத்தரிக்காய் என்று புலம்பித் திரிவார்கள்.


Thursday, June 16, 2016

போர்க்குணம் கொண்ட மகன்களும் அன்னையரும்


தமிழ் ராணுவம் பற்றி பாகம் 11- தர்மரத்தினம் சிவ்ராம்

1901-ம் ஆண்டு வள்ளல் பாண்டித்துரை தேவர்  தனது உறவினரும் ராமநாதபுரம் மன்னருமான  பாஸ்கர சேதுபதியின் உதவியுடன்  மதுரை தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட தென்னிந்திய மற்றும் இலங்கை  தமிழர் மறுமலர்ச்சியில் இந்தச் சங்கமும் இதனுடைய இதழான செந்தமிழும் முக்கியப் பங்கு வகித்தன. சென்னை பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சூழலில் இது சிறப்பாக கட்டமைக்கப்பட்ட மற்றும் மதிப்புமிக்க தேர்வுகளின் மூலமாக சிறந்த தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்கியதிலும் இதன் முக்கியத்துவம் உள்ளது.
பாக் ஜலசந்தியின் இருபுறமும் தமிழ்த் தேசியம் தன்னைத் தானே கட்டமைக்கத் தொடங்கியபோது தமிழ் அடையாளத்தின் குரலை வடிவமைப்பதில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் தகுதிபெற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்த பண்டிதர்கள் முக்கியப் பங்கு பெற்றனர். 1901-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் இந்தச் சங்கம் ஒரு தேசியத் திட்டம் என்று அறிவித்து அதனை கட்டமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டார். ஒருவர் தன்மொழி மீது வைத்திருக்கும் பற்றே தனது நாட்டுப் பற்று தனது மதத்தின் மீதான பற்றுக்கு அடிப்படையானது”  என்ற கருத்தை தேவர் வலியுறுத்தினார். (தூத்துக்குடியில் பேசியது, பி.எஸ்.மணி, . 39-ல் குறிப்பிடப்பட்டுள்ளது) பல நூற்றாண்டுகளாக சமஸ்கிருதம் ஆழமாக வேர்விட்டிருந்தாலும் கூட சங்கம், தமிழ் கவிஞர்கள் மற்றும் பண்டிதர்களுக்கு மறவர் மற்றும் கள்ளர் அரசர்கள் மற்றும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் வழங்கி வந்த பாரம்பரிய பங்குடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்.

பாளையக்காரர்கள் மற்றும் அரசர்களின்  ஆதரவைப் பெற்ற தமிழ்க் கவிஞர்கள் மற்றும் பண்டிதர்களின் குடும்பத்தினர் பராமரித்து வந்த ஓலைச் சுவடிகளின் திரட்டிலிருந்து தோன்றிய பெரும்பாலான கட்டுரைகள் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியை கட்டாயமாக்கின. 1901-ம் ஆண்டு தேவர், சேதுபதிகளின் அமைச்சரவை பண்டிதரான ஆர். ராகவ ஐயங்காரை சங்கம் வெளியிட்ட பத்திரிகைசெந்தமிழின்ஆசிரியராக நியமித்தார். 1904-ம் ஆண்டு அவரது உறவினரான எம். ராகவ ஐயங்கார் நியமிக்கப்பட்டர். அவர் எட்டு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். எம். ராகவ ஐயங்காரும், அவரது உறவினரும் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து ராமநாதபுரம் மறவர் மன்னர்களின் குடுத்துடன் தங்களை இணைத்துக் கொண்ட வைஷ்ணவ பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் குடும்பத்திலிருந்து பல அமைச்சரவை பண்டிதர்களும் அமைச்சர்களும் உருவாகினர். ராகவ ஐயங்காரின் தந்தையார், பொன்னுசாமி தேவர், அவரது சகோதரன் முத்துராமலிங்க சேதுபதியின் (1862-1873) அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரு புகழ்பெற்ற  தமிழ் பண்டிதர் ஆவார். தமிழகத்தில் ஆறுமுக நாவலருக்கு புரவலராக இருந்தவர் பொன்னுசாமி தேவர் ஆவார். ஐயங்கார் சிறுவனாக இருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டார். பொன்னுசாமி தேவரின் மகனான பாண்டித்துரை தேவரே அவரை பராமரித்து வந்தார்.
இவ்வாறு ஐயங்காரின் வாழ்க்கை மறவர் ஆட்சியாளர்களான சேதுபதிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் அவர் செந்தமிழ் வளர்த்த தேவர்கள் என்ற புத்தகத்தை எழுதினார். ஐயங்கார் தனது இரண்டு பிரபல புத்தகங்களை பாஸ்கர சேதுபதிக்கும் பாண்டித்துரை தேவருக்கும் அர்ப்பணித்தார். எனவே இந்திய தேசிய இயக்கத்தில் அவரது ஈடுபாடு புரட்சி மற்றும் சுதேசி கருத்துக்கள் நிரம்பிய தேவரின் நலன்கள் மற்றும் கருத்துக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவையாக இருந்தன. இலங்கை மற்றும் பெங்காலுடன் தாங்கள் மேற்கொண்டு வந்த லாபம் நிறைந்த வர்த்தகத்தை ஆங்கிலேயர்கள் வலுக்கட்டாயமாக பறித்த காரணத்தால் சேதுபதிகள் ஆத்திரமாக இருந்தனர். எனவே தேவர், உள்நாட்டு தொழில்களை ஊக்குவித்து ஆங்கிலேயரின் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும் என்ற சுதேசி இயக்க பிரச்சாரத்தால் கவர்ந்திழுக்கப்பட்டார். புரட்சியாளர்கள் உரிமைகள் பறிக்கப்பட்ட இந்திய சத்திரிய சாதியினரை புதுப்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். தமிழர் மறுமலர்ச்சிக்கான திட்டங்களில் இந்த உணர்வுகளையும் கருத்துக்களையும் செந்தமிழ் வெளிப்படுத்தியது.

வெள்ளையர்களின் லாபகரமான கொழும்பு-தூத்துக்குடி இடையேயான கப்பல் போக்குவரத்தை முறியடிக்க தேவர் 1907-ம் ஆண்டு .. சிதம்பரம்பிள்ளையுடன் இணைந்து சுதேசி நீராவி கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை நிறுவினார். அந்த நேரத்தில் சிதம்பரம்பிள்ளை தமிழ்நாட்டு புரட்சி இயக்கத்தின் உறுப்பினர்களுடன் நெருக்கமாக இருந்தார். இந்த நிறுவனம் இருந்த வரை, தனது லாபத்தில் ஒரு பங்கை மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கும் என்ற விதிமுறையை தனது நிறுவன சட்டங்களில் சேர்த்திருந்தது. (சங்கத்தின் வருடாந்திர அறிக்கை, 1907, .7-8). ஐயங்கார் தேசியநலனை கருத்தில் கொண்டு நிறுவனத்தின் ஒரு பங்கை ரூ.100 செலுத்தி வாங்கியிருந்தார். இந்த சூழ்நிலையில், சங்கத்தின்  நிரந்தர புரவலரான புதுக்கோட்டை கள்ளர் அரசரான தொண்டைமானிடமிருந்து முக்கிய நிதி உதவி கிடைத்தது. சிங்கம்பட்டி ஜமீன் (மறவர்) மற்றும் கள்ளர் சமுதாயத் தலைவர் கோபால்சாமி ராஜாளியார் ஆகியோர் சங்கத்திற்கான முக்கிய நிதியுதவியை செய்தனர். ‘கள்ளன்என்று இழிவாக குறிப்பிடப்பட்டு வந்த தங்கள் சாதிப் பெயரை ராஜாளியார் தேவரின் உதவியுடன்கள்ளர்என்று மாற்றுவதில் வெற்றிகண்டார். (சங்கத்தின் வருடாந்திர அறிக்கை, 1907). அதேவேளையில் தமிழ் ஆய்வுகளை மேற்கொண்ட திராவிட பள்ளிகள் வெள்ளாளர் சாதி நலன்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்து  வெள்ளையர்களுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

இந்த சூழ்நிலையில்தான் எம். ராகவ ஐயங்காரின் தமிழ்த் தேசிய திட்டம் வடிவம் பெற்றது. அவர் தென்னிந்தியாவில் இருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகளால் ராணுவ பாரம்பரியம் ஒப்பற்றதாக இருந்தது என்று கருதினார். மேலும் அவர்கள் வட இந்தியர்களை விட மேம்பட்ட ராணுவ சக்தி கொண்டவர்களாக இருந்தனர் என்று அவர் கருதினார். தமிழ் பண்டிதரான அவர் திறமையாக அரசியலை தமிழர்களின் கடந்த கால வீரத்துடன் இணைத்துப் பார்ப்பதை கட்டாயமாக்கினார்.

ஐயங்காரின் கட்டுரைகளில் புரட்சி இயக்கத்தில் தமிழரின் கடந்த காலத்துடன் இணைத்து எழுதுவது 1905-ல் ரஷ்யாவை ஜப்பான் வெற்றி கண்டதில்  தொடங்கியது. ஆங்கிலேய ராணுவத்தை இந்திய பாரம்பரிய ராணுவம் மிஞ்சியது என்பதை ஜப்பான் வெற்றியே ஆதாரமாக உள்ளது. திலகரின் ராணுவ கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவரும் இந்த வெற்றியை வரவேற்றனர். ஐயங்கார்செந்தமிழ்பத்திரிகையில் ஜப்பானின் ராணுவ வெற்றியை பாராட்டி பரணி கவிதை (போரில் 1000 யானைகளை கொல்லும் வீரனை பாராட்டி பாடப்படும் பாடல்) எழுதினார். 1907-ம் ஆண்டு புரட்சிகர இயக்கம் முக்கியத்துவம் பெற்றது. அப்போது அவர்வீரத்தாய்மார்என்ற தலையங்கத்தை எழுதினார். தமிழ்த் தேசியத்திற்கான கொள்கையாக அன்னை அரசியலைஇந்தக் கட்டுரை முன் வைத்தது. அவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்,


ரஷ்யர்களை ஜப்பானியர்கள் வெற்றி பெற்றதற்கு அதிக எண்ணிக்கை மற்றும் ஒரு பெரிய தேசத்தை சேர்ந்திருப்பது போன்ற  காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களுக்கு அவர்களின் பெற்றோர் வழங்கிய ராணுவ பயிற்சியே ஆகும். ஜப்பானிய தாய்மார்கள் வழங்கிய வீரம் மற்றும் தேசபக்தியைரஷ்ய - ஜப்பானிய போரின்அத்தியாங்களில் காண முடியும். தற்போதைய காலத்தில இவை வினோதமாக தோன்றலாம். ஆனால் நாம் நமது வரலாற்றை ஆய்வு செய்தால், புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களில் அதுபோன்ற போர்க்குணம் கொண்ட தாய்மார்களையும் எண்ணற்ற குழந்தைகளையும், ராணுவத் தன்மை மேலோங்கி இருப்பதையும் பார்க்கலாம். அந்தக் கால தாய்மார்கள் எவ்வாறு மாபெரும் வீரர்களை உருவாக்கினார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.”

இந்தக் கட்டுரை புறநானூற்றில் மூதின்முல்லை மற்றும் புறத்திரட்டு பிரிவு வீரப்பாடல்களை அடிப்படையாகக் கொண்டது. மூதின்முல்லை வகை பாடல்கள், ஒரு பெண் தாய்மையடைதல் அவளுடைய மகன் போரில் தன் இன்னுயிரை தியாகம் செய்வதற்கு சமமானது என்று கூறும் தமிழ் ராணுவ கலாச்சாரத்தின் விதிமுறைகளை காட்டுபவை ஆகும். தாய்மார்கள் தங்கள் மகன்களை போரில் வீரத்துடன் போரிட்டு இறக்குமாறு வலியுறுத்துவார்கள். ஐயங்கார் இரண்டு மூதின்முல்லை பாடல்களை விளக்கி கூறுகிறார். ஒரு பெண் தனது கருப்பையை ஒரு புலியின் குகை என்று கூறுகிறார். அந்தப் புலியை போர்க்களத்தில் மட்டுமே காண முடியும் என்கிறார். இன்னொரு பாடலில் ஒரு பெண் தன் மகன் போர்க்களத்தில் உயிர் துறக்கவில்லை என்பதால், மனஉளச்சல் அடைந்து ஒரு கோழையைப் பெற்றெடுத்த தனரு கருப்பையை வெட்டப் போகிறேன் என்று சொல்கிறார்.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், போர்க்களத்தில் தன் மகன் வீரத்துடன் போரிட முடியாததை கேள்விப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதை விவரிக்கிறது. (‘இந்த தாய்மார்கள் மறவர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்என்று அவர் சொல்கிறார். மறவர்கள் தாய்வழிச் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.) இந்த தாய்மார்களால் வளர்க்கப்பட்ட போர்வீரர்கள் சங்க காலத்தில் தமிழகத்தை பெருமைப்படுத்தினர். “அந்தக் காலத்தில் வடஇந்திய அரசர்கள் தமிழகத்தில் ஊடுறுவியதாக கேள்விப்பட முடியாது. மாறாக தமிழ் அரசர்கள் வடஇந்தியர்களை எதிர்த்துப் போரிட்டுள்ளனர். இதற்கு காரணம் தமிழர்களின் ராணுவ பலமே.” தமிழர்களின் பின்னடைவுக்கு காரணம் தமிழ் வீரத்தில் ஏற்பட்ட பின்னடைவே என்று அவர் கூறுகிறார்.

தமிழர்கள் மத்தியில் போர்க்குணத்தை ஏற்படுத்துவதில் புரட்சிகர இயக்க கருத்துக்களை பரப்புவதற்கான கட்டுரைக்கு மிகுந்த அரசியல் மதிப்பு இருப்பதை சுப்ரமணிய பாரதி கண்டார்.  அவர் தனதுஇந்தியாபத்திரிகையில் கட்டுரைகளை வரிசைப்படுத்தினார். வாசகர்கள் அவற்றை நண்பர்கள், உறவினர்கள் மற்றும்தங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம்பரப்ப வேண்டும் என்று சொல்கிறார். தமிழர்களின் போர்க்குணத்தை தூண்டி அதன் மூலம் தேசிய விடுதலையை ஆயுதப் போர் மூலமாக அடைய வேண்டும் என்பதை வலியுறுத்த தனது கட்டுரையை பாரதி பயன்படுத்தினார். ஐயங்காரின் கட்டுரையில் உள்ள தேசிய உணர்வுக்காக பாரதியும் ..சிதம்பரமும் தலை வணங்குவதாக அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரங்களை தொடர்ந்து சுதேசி நீராவி கப்பல்போக்குவரத்து நசுக்கப்பட்டபோது அடுத்த ஆண்டே தமிழ்ச் சங்கத்தின் குரலும் நசுக்கப்பட்டது. ..சிதம்பரம் பிள்ளை மற்றும் புரட்சித் தலைவர் சுப்ரமணிய சிவா கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். ராஜதுரோக குற்றச்சாட்டில் பாரதியின்இந்தியாபத்திரிகையின் வெளியீட்டாளரும் கைது செய்யப்பட்டார். பாரதி பிரஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.

இருந்தாலும், ஐயங்கார் வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் மேம்பட்ட ராணுவ பாரம்பரியம் இருந்தது என்ற கருத்தை உருவாக்கினார். சிலப்பதிகார காவியத்தில் சேரன் செங்குட்டுவனின் வீரத்தை விவரித்து தமிழ் ராணுவத்தின் தன்மையை விவரிக்கிறார். தமிழ் ராணுவ பாரம்பரியத்தில் ஏற்பட்ட பின்னடைவே தமிழ்த் தேசியத்தின் பின்னடைவாக அமைந்தது. இது அவரது காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தமிழ்த் தேசிய திட்டங்களிலும் எதிரொலித்தது. தமிழ்நாட்டின் மிகப் பழைய ஆட்சியாளர்களான மறவர்களில் ஒருவருக்கு விசுவாசமான பிராமணர் என்ற அடிப்படையில், தமிழ்ச் சமுதாயத்தில் ராணுவத் தன்மை குறைந்து விட்டதாக ராகவ ஐயங்கார் வருத்தப்பட்டார். அவரது தமிழ்த் தேசிய திட்டம் சுய பரிசோதனையில் வேரூன்றியிருந்தது.
-------------------------.
குறிப்புகள்
(1) Recent gender-oriented critique of the LTTE fails to take note of the fact that the Moothinmullai Mother is a leitmotif in the structuring and representation of the Tamil nationalist project. Hence in the BBC documentary on the Tigers – Suicide Killers – the Black Tiger Miller’s mother is presented to the TV crew as a woman who feels proud of her son’s heroic martyrdom in the suicide attack on the Nelliady, Sri Lankan army camp in 1987. The LTTE here is reproducing a fundamental structure of representing Tamilian identity. C.S.Lakshmi has examined the role of the concept of the heroic mother in the militant Dravidian movement and its strategy of mobilising women. She, however, fails to take note of the politics of Aiyangar and Bharathy and the impact of the Russo-Japanese war on them in the genesis of this concept. C.S.Lakshmi; Mother, Mother-community and Mother-politics in Tamil Nadu. Economic and Political Weekly, October 1990.

(2) [For] the role of the Sethupathys and Marava chieftains in the promotion of Tamil literature, see Sangath Thamilum Pitkalath Thamilum, U.V.Saminatha Aiyer, 1949, Kabir Press, Madras.

(3) Senthamil Valartha Thevarhal, M.Raghava Aiyangar; 1948, D.G.Gopalapillai Co., Tiruchi.

(4) Aiyangar was held in great esteem by the Tamil elite of Colombo and Jaffna. 
Sir Ponnambalam Ramanathan invited him to lecture in Jaffna. One V.J.Thambi Pillai translated his ‘Velir Varalaru’ and published it in the Journal of Royal Asiatic Society of Ceylon. K.Srikanthan gave an award to his work ‘Tholkappiya Araichi’. One of the earliest modern historians of Jaffna, A.Mootoothambi Pillai, who was a contributor to the Sangam’s journal Senthamil reflected Aiyangar’s thesis in his Jaffna history, when he lamented the decline of Jaffna’s martial values which according to him had flourished under the ruler Sankili. Mootoothambi Pillai, 1912, ‘History of Jaffna’.

(5) ‘Siranjeevi’; 1981. ‘Sethupathikal Varalaaru’ (History of Sethupathys), Jeevan Press, Madras.
http://tamilnation.co/forum/sivaram/921101lg.htm

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...