Tuesday, July 31, 2012

தலையங்கம்: சிலையல்ல, தமிழனின் விலை!




ஐம்பொன் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கா வாழ் இந்தியர் சுபாஷ் சந்திர கபூருக்குச் சொந்தமான மன்ஹாட்டன் காலரியில் 20 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்தியக் கோயில் சிலைகள் அமெரிக்க அரசினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருட்டுப் பொருள்களை வைத்திருந்ததற்காகவும் அவர் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்டுள்ள கோயில் சிலைகளில் மூன்று சோழர் காலத்தைச் சேர்ந்தவை. கோயில்களிலிருந்து நேரடியாகத் திருடி, கடத்தி வரப்பட்டவை.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தன் கிராமங்களைச் சேர்ந்த சிவ ஆலயங்களில் திருடப்பட்ட இந்தச் சிலைகளின் மதிப்பு தோராயமாக 8.5 பில்லியன் டாலர் என்று மதிப்பிடுகிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.  இந்தச் சிலைகள் யாருக்குச் சொந்தமானவை என்பது வழக்கின் முடிவில் தெரியவந்தபிறகு, இந்தச் சிலைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, சிலைக்கடத்தல் வழக்கில், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர் மீதான புகார்கள் நிரூபிக்கப்படாமல் போகுமென்றால், இந்தச் சிலைகள் மீண்டும் அவரிடமே திருப்பி அளிக்கப்படும் என்று பொருள்கொள்ளலாம்.  

வழக்கு எவ்விதமாக முடிந்தாலும், இந்தச் சிலைகள் தமிழ்நாட்டுக்கு உரியவை, இவற்றைத் தமிழ்நாட்டுக்குத் திரும்ப அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் அறநிலையத்துறை இப்போதே கோருதல் அவசியம். இந்த மனுவை இந்திய அரசின் மூலமாக அமெரிக்க அரசுக்கு அனுப்பி, சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்தச் சிலைகள் நமக்குக் கிடைக்காமலே போகக்கூடும். 

இத்தகைய வெண்கலம் மற்றும் ஐம்பொன் சிலைகள் தென்னிந்தியாவுக்கு மட்டுமே உரியவை. இந்தியாவில் வேறு மாநிலங்களில் இத்தகைய ஐம்பொன் சிலைகள் கிடையாது. இவை சோழர் காலத்தவை என்றால், நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியவை. அவற்றைத் தமிழகம் கோரிப் பெறும் நடவடிக்கைகளை, உரிமை கொண்டாடுவதை இப்போதே தொடங்க வேண்டும். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கபூர் தற்போது சிறையில் இருந்தாலும், அவரது வழக்குரைஞரைப் பொருத்தவரையில், ""இந்தச் சிலைகள் கபூரின் காலரியில் இருந்ததை மட்டுமே நிரூபிக்க முடியும்; அவர்தான் கடத்தினார் என்பதை நிரூபிக்கச் சான்றுகள் இல்லை. நியூயார்க் நகரில் கபூரின் கணக்கிலிருந்து சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன் என்பவரின் கணக்கில் ரூ.1.17 கோடி போடப்பட்டது சிலைக்கடத்தலுக்காகத்தான் என்று நிரூபிக்கப்படவில்லை''. இதன்படி பார்த்தால், கலைப்பொருள் சேகரிப்பாளர், விற்பனையாளர் என்ற முறையில் அவர் யாரிடமோ வாங்கினார் என்பதாக வழக்கு திசை மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இந்த வழக்கு எப்படி முடிந்தாலும், அந்தக் கோயில் சிலைகள் தமிழ்நாட்டுக்கு உரியவை, தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தமானவை என்பதை வலியுறுத்தி, அவைகளைக் கோரிப்பெறும் நடவடிக்கை இப்போதே தொடங்கப்பட வேண்டும். 

கபூர் வழக்கில் மட்டுமல்லாது, உலகில் எந்த இடத்தில் இத்தகைய கோயில் ஐம்பொன் சிலைகள் இருந்தாலும் அவை தமிழகத்திலிருந்தே சென்றிருக்க முடியும். அவற்றின் மெய்த்தொன்மையை அறிவியல்பூர்வமாகச் சோதித்து, அவற்றை மீட்க வேண்டும். தேவைப்பட்டால், விலைகொடுத்து வாங்கி, எடுத்து வர வேண்டும். 

காந்தியின் மீது அவதூறு சொல்லக் காரணமான மகாத்மா காந்தி- காலன்பாக் கடிதங்கள் ஏலத்தில் மற்றவர்களுக்குக் கிடைக்காத வகையில், இந்திய அரசு 1.28 மில்லியன் டாலருக்கு பேரம் பேசி வாங்கியுள்ளது. தேசத்தந்தைக்காகச் செய்யும் இதே நடவடிக்கையை தேசத்தின் கலைப்பொக்கிஷங்களை மீட்பதற்காகச் செய்தால் அதில் தவறில்லை. 

இவ்வாறாக உரிமை கோரும்போது, நாம் சிலைகளின் அடையாளங்களைக் குறிப்பிடவும், அத்தகைய கோயில் சிலைகளின் தொன்மையை நவீன ஆய்வுக்கூடங்களில் கண்டறிந்த சான்றுகளை ஒப்புநோக்குக்கு அளிக்கவும் இயலாதவர்களாக இருக்கிறோம். இதற்குக் காரணம், தமிழகத்தின் கோயில் சிலைகள் எதுவுமே ஆவணப்படுத்தப்படவில்லை. இத்தகைய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே நமக்கு அண்மையில் ஏற்பட்டதுதான். தமிழனின் பெருமையைத் தமிழன் உணராமல் வாழ்ந்து வருவதற்கு இதுவும் ஒரு சான்று. 

கடத்தல்காரன்கூட ஒரு கோயில் சிலையை அதன் தொன்மை, ஐம்பொன் கலப்பு விகிதம் ஆகியவற்றை நவீன அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி. தன் கலைநுட்பத்துக்கு ஏற்ப சந்தை மதிப்பைத் தீர்மானிக்கிறான். ஆனால், நாம் நம் கோயில் ஐம்பொன் சிலைகளின் தொன்மை குறித்தும் அதன் மதிப்பு குறித்தும் எந்தப் புள்ளிவிவரமும் வைத்திருக்கவில்லை. 

மோனாலிசா ஓவியத்தைப் பிரதியெடுப்பதைப்போல, நமது ஐம்பொன் சிலைகளையும் அப்படியே வடிப்பது இன்றைய கணினி உலகில் மிக எளிது. மெய்த்தொன்மை உள்ள சிலைகளை எடுத்துக்கொண்டு போலிச் சிலைகளை வைத்து மாற்றிவிடும் சம்பவம் ஏதாகிலும் நடந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆகவே, தமிழகக் கோயில்களில் உள்ள அனைத்து ஐம்பொன் சிலைகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாப்பது இன்றைய உடனடித் தேவை. 

கோயில்களின் ஐம்பொன் சிலைகளைப் பழுதுபார்க்கும் தேவை இருந்தால், அதைத் தமிழக அரசின் அனுமதியோடு, வல்லுநர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஐம்பொன் சிலையைப் பழுதுபார்க்கிறோம் என்று, தேவைப்படும் வெப்பஅளவு தெரியாமல் சூடேற்றிச் சிலையைச் சேதப்படுத்திவிடுவார்கள் என்பதால், இந்த நடவடிக்கை மிகமிக அவசியம். 

கோயிலில் விளக்கு எரிகிறதா, ஆறு காலப் பூஜையோ, மூன்று காலப் பூஜையோ நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், உண்டியலில் சேரும் பணத்தை எண்ணி எடுத்துக்கொள்வதும் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையின் வேலை என்று நினைக்காமல், கோயிலிலுள்ள சிலைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு!  

நன்றி -
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=636331&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

Monday, July 23, 2012

ஆன்மாவும் உண்ணா நோன்பும்


நூ. அப்துல் ஹாதி பாகவி

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உயிர்வாழும் ஆன்மா எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கடிகார முள்ளைப்போல் ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கிறது. நாம் பணி செய்து கொண்டிருந்தாலும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் நம் ஆன்மா உறங்குவதேயில்லை. இதனால்தான் நாம் உறங்கினாலும் தொடர்ந்து மூச்சு விடுவதும், கனவுகள் காண்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. 

பொதுவாக, ஆன்மா இறப்பதில்லை என்று அனைவரும் கூறுவர். இன்றைய விஞ்ஞானிகளும் அதைத்தான் சொல்கின்றனர். ஒரு மனிதன் நல்வினையையும் தீவினையையும் செய்யக் காரணமாக அமைவது இந்த ஆன்மாதான். அதை எப்படி நாம் பழக்குகின்றோமோ அப்படியே அது மாறிவிடுகின்றது. நல்வினைகள் பக்கம் அதைத் திருப்பினால் நற்கருமங்கள் புரியத் தூண்டும். தீவினைகளின் பக்கம் திருப்பிவிட்டால் தீச்செயல்கள் புரியத் தூண்டும். ஆக, இரண்டினுள் இரண்டாவதற்கு எந்தவிதப் பயிற்சியும் தேவையில்லை. ஏனெனில் மனிதன் தவறு செய்யக்கூடிய இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே முதலாவதற்குத்தான் பயிற்சி தேவை.

அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்த மேற்கொள்கின்ற பற்பல பயிற்சிகளுள் முதலிடம் வகிப்பது உணவுக்கட்டுப்பாடுதான். ஒருவன் தன் உணவு முறையில் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடிப்பிடித்தால் அவன் தன் ஆன்மாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மாறாக உணவு உட்கொள்வதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வரம்பு மீறி உணவுகளை உண்ணத் தொடங்குபவன் தன் உள்ளுணர்வுகளால் உந்தப்படுகின்றான்.

அதன் விளைவாக அவனது ஆன்மா தூண்டக்கூடிய எல்லாத் தீவினைகளையும் தன் சுய விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுகின்றான். இறுதியில் அவனுடைய ஆன்மா தன் அகஒளியை இழந்து அழுக்குகளால் நிரம்பிவிடுகின்றது.

ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
முன்போது உண்பான் ரோகி
எப்போதும் உண்பான் துரோகி

-எனும் தமிழ்ப்பாடல் மிகமிகக் குறைவாக உண்பவனை யோகி-துறவி என்றும் எப்போதும் உண்பவனை துரோகி என்றும் குறிப்பிடக் காரணம், அந்த உணவுதான் ஒருவனை நல்வழிப்படுத்தவும் தீச்செயல்களைச் செய்யுமாறு தூண்டவும் துணைபுரிகிறது என்பதேயாம். ஏனெனில் அதிகமாக உண்ணும்போது மனிதனின் சிந்தனைத்திறன் மங்கி, அவனது ஆன்மா தன் அகஒளியை இழந்துவிடுகின்றது. சோம்பேறித்தனமும் மந்தநிலையும் ஆட்கொண்டு விடுகின்றன.

உணவுக் கட்டுப்பாட்டை வலியுறுத்துமுகமாக இறைவன் தன் திருமறையில், “உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்” (7: 31) என்று கூறுகின்றான். அளவோடு, சுத்தமானதை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இதன் உட்பொருளாகும். மேலும், “மனிதன் நிரப்புகின்ற பைகளுள் மிகக் கெட்ட பை அவனது இரைப்பைதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே உணவுதான் மனிதனின் முதல் எதிரி என்றால் மிகையில்லை.

நோன்பைப் பற்றிக் கூறுகின்ற இறைவசனத்தின் தொடக்கத்தில், இறைநம்பிக்கை கொண்டோரே! என்று தொடங்குகின்ற அல்லாஹ் அதன் முடிவில், நீங்கள் இறையச்சம் உடையோராகலாம் என்று முடிக்கின்றான். ஒருவன் நோன்பு நோற்பதன் மூலம் இறையச்சம் ஏற்பட வேண்டும். நோன்பு நோற்றுக்கொண்டே தகாத செயல்களைச் செய்யத் தலைப்பட்டால், அவனுடைய நோன்பு அவனுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள். அதாவது நோன்பின் மூலம் ஏற்படவேண்டிய இறையச்சம் அவனுக்கு ஏற்படவில்லை என்று பொருளாகும்.

முஸ்லிம்களாகிய நாம் மேற்கொள்கின்ற உண்ணா நோன்புக் காலங்களில் அதிகாலையில் சிறிதளவு உணவுண்டபின் அந்தி மாலை வரை அல்லாஹ் ஒருவனுக்காகப் பசித்திருந்து, தாகித்திருந்து, நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி ஆன்மிகப் பயிற்சிபெறுகின்றோம். மாலையில் சூரியன் மறைந்ததும் நோன்பைத் துறந்து களைப்பை நீக்கிக்கொள்கிறோம். இவ்வாறே நாம் முப்பது நாள்கள் தொடர்ந்து மேற்கொள்கின்ற ஆன்மிகப் பயிற்சியால் நம் ஆன்மா அகஒளி பெற்றுவிடுகின்றது. பின்பு அஃது இறைவனை அஞ்சத் தொடங்கிவிடுகின்றது. தீச்செயல்களைச் செய்யத் தயங்குகிறது. இதுதான் ஆன்மிகப் பயிற்சியின் பலன்.

குறிப்பிட்ட காலத்தில் நாம் மேற்கொள்கின்ற இப்பயிற்சியால் நாம் செய்யும் நல்லறங்கள் அதிகம். மற்ற மாதங்களில் செய்யாத நல்லறங்களை இம்மாதத்தில் செய்கிறோம். காரணம், உண்டி சுருங்கினால் உள்ளம் பக்குவப்படும் என்பதேயாம். இதன் பிரதிப-ப்பை மற்ற மாதங்களில் நாம் பெற வேண்டுமெனில் நம் உணவில் ஒரு வரைமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உணவுத் தேவை குறைந்துவிட்டால் மற்றெல்லா நற்பண்புகளும் தாமாக நம்மை வந்து சேரும்.

ஆக, நாம் மேற்கொள்கின்ற இந்த உண்ணா நோன்பு கடமைக்காக மட்டும் இல்லாமல் நம் ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதாகவும் அதன் போக்கை மாற்றக்கூடியதாகவும் நாம் எண்ணியதை அடையக்கூடியதாகவும் மாற்ற வேண்டும். அத்தகைய முறையில் நம்முடைய நோன்பை ஆக்கிக்கொள்வோம். நம் நோன்பின் மூலம் இறைவனிடம் நன்மைகளை அடைவதோடு, நம் ஆன்மாவுக்கு அகஒளியை ஏற்படுத்திக்கொள்ள முனைவோம்!

Sunday, July 22, 2012

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்



"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 23-ம் தேதி (திங்கட்கிழமை - 23.05.2005) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. 

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.

துறவறம் :

உலக வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைப் பற்றியும், அதற்குப் பின்னர் என்ன நடைபெறும் என்பது பற்றியும் தீவிரமாக ஆராயத் தொடங்கினார். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் காண வேண்டும் என்பதே தனது லட்சியமாகக் கொண்டார். எனவே இல்லற வாழ்க்கையை துறக்க தீர்மானித்தார். தனது 29-வது வயதில் கடும் துறவறத்தை புத்தர் மேற்கொண்டார். உண்மையைக் காண்பதே தனது முதன்மையான பணி எனக் கருதி, எல்லாவற்றையும் களைந்துவிட்டு அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை மனம் உவந்து மேற்கொண்டார்.

துறவிக்கோலம் பூண்ட புத்தர், வாழ்க்கையைப் பற்றியும் மரணத்திற்குப் பின்னர் நடைபெறுவது பற்றியும் அறிய விரும்பினார். இதற்காக இவர் முதலில் வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தார். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தார். அவருடைய போதனை புத்தரை வெகுவாக கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றார்.

பின்னர் கௌதமர் உருவேலா என்னும் இடத்தில் உணவு இன்றி கடும் தவம் மேற்கொண்டார். சுமார் 6 ஆண்டுகள் இவ்வாறு கழிந்தது. எனினும் தமது லட்சியத்தை அடைவதற்கு இது பயனற்றது என அறிந்தார்.

ஞானோதயம் :

பிறகு நைரஞ்சனா ஆற்று கால்வாயொன்றில் புனித நீராடி இக்கால போத்-கயா என்னுமிடத்திலுள்ள பிப்பல் அல்லது அரச மரத்தடியில் அமர்ந்தார். இறுதியில் அங்கு அவருக்கு உயர்வான ஞானம் புத்தொளி தோன்றியது. தனது 36-வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணத்தை அடைந்தார்.

அன்று முதல் இவர் "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கியமுனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்பட்டார்.

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.

கொள்கைகள் :

ஒளி பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது.

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

"நான்கு உயரிய உண்மைகளும்", "எண் வகை வழிகளும்" பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை, அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு "அட்ட சீலம" அல்லது "எண் வகை வழிகள்" என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.
சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு, மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.
அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

நன்றி
Desingh.R

தமிழர்களே பகுத்தறிவாளர்களை மன்னித்து விடுங்கள்



கடவுள் இல்லை என்றார்கள்
சரி என்றோம்

சாதி இல்லை என்றார்கள்
சரி பரவாயில்லை என்றோம்

இந்து மதத்தை மட்டும் அழிப்போம் என்றார்கள்
கண்டுகொள்ளவில்லை

நீ தமிழனே இல்லை என்றார்கள்
அமைதியாய் இருந்தோம்

அங்கே கொன்றழித்தார்கள்
இங்கே எங்களை நின்று பார்க்கச் செய்தார்கள்

இன்னும் எத்தனை
அழிவு காத்திருக்கோ?

இருந்தாலும் பரவாயில்லை தமிழர்களே
பகுத்தறிவாளர்களை மன்னித்து விடுங்கள்

தலையங்கம்: ராஜபட்சவின் தப்புக்கணக்கு!

அதிபர் ராஜபட்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.


அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபட்ச, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்டம்பருக்குப் பிறகு நடத்தலாம் என்கின்ற முடிவை அறிவித்திருக்கிறார்.


தேர்தலைத் தள்ளிப்போட அவர் அளித்துள்ள முக்கியக் காரணம் வாக்காளர் பட்டியல்தான். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போது இப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், முன்பு புலிகளின் அச்சத்தால் வெளியேறிய தமிழர்கள் திரும்பிவந்து மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கியுள்ளனர். ஆகவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பிறகு இங்கே முறையாகத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது ராஜபட்ச அரசின் அறிவிப்பு. இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் நமது சந்தேகம்.


கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது. தமிழர்கள் வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழர்கள் வாக்களித்தார்கள். அதிக இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள். இப்போது மட்டும் ராஜபட்சவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?


யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம். அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும். மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபட்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், ""மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபட்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள்.


இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபட்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் ""மேலை நாடுகளின் தீயசக்திகள்'' என்றெல்லாம் பேசுகிறார்கள்.


வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர்கொண்டிருக்கின்றன. புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான். தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல.


ராஜபட்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.


அதிபர் ராஜபட்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும். ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.


இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.


இலங்கையின் அடிப்படைப் பிரச்னையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனித உரிமைகள் மிதிக்கப்பட்டபோதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.


இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது. அதை ஏன் ராஜபட்ச மறுக்க வேண்டும்? அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.
நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!


நன்றி - தினமணி
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=628022&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=



Saturday, July 21, 2012

பதவி விலகல் பற்றிய அறிவிப்பு

பதவி விலகல் பற்றிய அறிவிப்பு

நண்பர்களுக்கு, 

நான், மராட்டிய மாநில இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தேன். 

இந்த நிலையில் கட்சியின் நிறுவனத் தலைவரான திரு பச்ச முத்து அவர்களுக்கு சொந்தமான எஸ்ஆர்எம் பல்கலைகழகம் இலங்கையில் தனது பல்கலை கழகத்தை துவக்கியுள்ள செய்தி வெளியாகி உள்ளது. 

இலங்கையில் அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் அங்கு பல்கலை கழகத்தை நிறுவியுள்ள செயல்  அந்நாட்டு செயல்களை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதாக உள்ளது. எனவே இந்த செயல் தமிழர்களின் நலனிற்கு எதிரானது என்று கருதுவதால் நான் என் பதவியிலிருந்தும் அக்கட்சியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 


http://www.newsalai.com/2012/07/blog-post_9442.html?fb_comment_id=fbc_10150903946307470_21990076_10150903974597470#f24fda9feb5b52

Thursday, July 12, 2012

சாதி ஒழிப்பு போராளியும் நானும்



சாதி வெறியன் என்ற பட்டத்தை ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் (அவர்கள் எனக்கு எந்த பட்டம் பொருந்தாது என்று தெரியாதவர்கள்). அதற்காக அந்த பட்டம் என் சிந்தனைகளுக்கோ பேச்சுக்கோ தடை விதிக்கப் போவதில்லை.

நான் ஒற்றை வரியில் கேள்வி கேட்கிறேன் என்று சொல்பவர்களுக்கு,
நான் ஆரம்பத்திலேயே சாதி ஒழிப்பு போராளிகளுக்கான தகுதிகளாக 11 புள்ளிகளை கொடுத்திருந்தேன். அதில் உள்ள புள்ளிகளைப் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை.

மற்றபடி சாதி ஒழிப்பு பற்றி பேசுவது நாகரீகம், சாதி பற்றி பேசுவதே தவறு என்ற கற்பிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதே கற்பிதங்களை கூறிய தலைவர்கள் மறைமுகமாக தங்கள் சுய லாபத்திற்கு இதில் பல ராச தந்திர விளையாட்டுக்களை விளையாடி சாதிகளிடையே வன்மத்தையும் குரோதத்தையும் தூண்டி வருகின்றனர். இதில் தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று கருதிக் கொள்பவர்களுக்கும் பங்குண்டு.

அறிவுசார் சமுதாயம் இதை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. அதையே நான், சாதி வேண்டாம் என்று யாராவது ஒரு வரிவிளம்பரமாவது செய்தார்களா என்று நான் வேடிக்கையாக கேட்டேன். இதற்கும் இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. இவர்கள் இப்படித்தான். தனது கொள்கைக்காக சமுதாயத்திற்காக சிறிதும் நேரமோ பணத்தையோ செலவழிக்கத் தயார் இல்லை. இப்படிப்பட்ட நபர்கள்தான் சமுதாய மாற்றத்தை விரும்புகின்றனர்.

சில முற்போக்கு எழுத்தாளர்களுக்கு சாதியின் பெயரை கேட்டாலே அவர்களுக்கு விஷமாக படுகிறது. இந்த நிலையை உருவாக்கியுள்ள அந்த கரிக்கொட்டை எழுத்தாளர்கள் மக்களை,  சாதியை பற்றி சரியாக சி்ந்திக்க கூட விடாமல் செய்துள்ளனர்.

முகநூலில் எனது பதிவுகளை பாராட்டிய பலரும் உங்கள் பெயரில் உள்ள தேவன் சாதிப்பெயராக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம் நான் சொல்லும் விஷங்கள் சரியானவையாக தோனறினாலும் அந்த பெயர் அவர்களை மிகவும் பாதிக்கிறது என்று தெரிகிறது.


அதேபோல வெப்துனியாவில் அய்யநாதன் காசித்தேவர் என்பவர் பணிபுரிகிறார், அவர் தமிழ் ஈழம் சம்பந்தமான போராட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். அவர் சாதி வெறியுடனேயே தமிழ் உணர்வாளர் என்று காட்டிக் கொள்வதாக கூறி இதனை கண்டிக்கும் முகமாக சிலர் அவரது வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தப்போவதாகஅறிவித்தார்கள். அதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். சாதியின் பெயரை கொண்ட ஒருவர் சாதிவெறியர் என்றால் மதங்களின் பெயர்களை கொண்டவர்கள் மதவெறியர்களாகத்தானே இருக்க வேண்டும் என்று கேட்கும்போது அதற்கு பதில் இல்லை.

அதேபோல அந்த அய்யநாதனே வந்து தன் வாதங்களை முன் வைத்தார். அவர், தன்னை சாதிவெறியன் இல்லை என்பதை காட்ட தன்பெயரில் உள்ள தேவரை எடுத்துவிடுவதாகவும், ஆனால் தன் தந்தையின் பெயரில் உள்ள தேவர் என்பதை தன்னால் எப்படி எடுக்க முடியும், தன் தந்தையின் பெயரை தன் பெயருடன் சேர்த்து எழுதும்போது அது வரத்தானே செய்யும் என்று கேட்டார் அதற்கும் பதில் இல்லை.

மேலும் தேவர் சாதியில் பிறந்த தான், தேவர் என்று சலுகை பெற்று கல்வி கற்ற தான் எதற்காக அதை மறைக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கும் பதில் இல்லை. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள், சாதிப் பெயரில் சலுகை பெற்றாலும் அதை மறைத்துக் கொள் என்கிறார்கள். இதில் என்ன நீதி இருக்கிறது என்று தெரியவில்லை.

சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களிம் எந்தவித திட்டமும் இல்லை. அதை ஒழிக்கும்போது என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை. வெறுமனே சாதியில் இருப்பவர்களை இழித்தும் பழித்தும் பேசி விட்டால் சாதி ஒழிந்து விடும் என்று நம்புகின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் எந்த அப்பாவி மக்களை சாதிவெறியர் என்று திட்டுகிறார்களோ அந்த மக்களே சாதி பார்க்காமல் வாக்களித்து இவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர்கள் ஆவர். கடந்த 50 ஆண்டுகளாக சாதி ஒழிப்பாளர்கள்தானே ஆட்சியில் இருந்தார்கள்? அவர்கள் என்ன செய்தார்கள்?

இது ராமசாமி நாயக்கர் ஆரம்பித்து வைத்த போராட்ட முறையே அல்லாமல் வேறொன்றும் இல்லை. அவர்தானே பாம்பையும் பிராமணனையும் கண்டால் பிராமணனை அடி என்று சொன்னார். அன்று முதல் இன்றுவரை இவர்கள் பிராமணரை சாடி வருகிறார்கள். ஆனாலும் பிராமணரின் ஆதிக்கம் உச்ச நிலையிலேயே இருப்பதாக இவர்களே சொல்கிறார்கள். அதாவது கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கூட பிராமணர்தான் ஆதிக்கம் செலுத்துவதாக சொல்கிறார்கள்.

ஒரு அறுபது ஆண்டு காலமாக திட்டிவரும் இவர்களால் ஒரு சிறு பிரிவினரான பிராமணரின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியில்லை. இவர்கள் எப்படி ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை, அரசியல் ஆதிக்கம் செலுத்தும் சாதியை  வெறுமனே திட்டி மட்டும் ஆதிக்கத்தை இழக்கச் செய்ய முடியும்? இன்றளவும் அவர்கள் பிராமணர்கள் பற்றி மற்றவர்களின் மனதில் ஒரு பிளவையே ஏற்படுத்தி வருகின்றனர். இதையே இந்த சாதி ஒழிக்க முற்போக்குவாதிகள் இன்று வன்னியர், முதலியார், கவுண்டர், தேவர் பற்றி பேசி சாதிப் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

கருணாநிதி வன்கொடுமை சட்டத்தை கொண்டு வந்தாராம் ஆனால் ஆதிக்க சாதியனரின் ஒத்துழைப்பு இல்லாததால் அதை நடைமுறைப் படுத்த வில்லை என்று சொல்கிறார் ஒருவர். அப்படியானால் ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்பை பெற நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.

வெள்ளையன் ஓரளவு உளவியல் அறிந்தவன். அதனால்தான் போர்புரியும் மக்களை குற்றப்பரம்பரை என்று அறிவித்தாலும் மறுபுறம் இவர்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்து மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளருக்கென்று தனிப்பள்ளிகளை கட்டினான்.

ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் உளவியல் ரீதியாக ஏதாவது செய்ய திட்டமிடுகிறார்களா? இதைக் கேட்டால் இவர்கள் எனக்கும் சாதிவெறியன் பட்டத்தை தருகிறார்கள். அந்தப் பட்டம் என்னை என்ன செய்துவிடும்?

சாதியை ஒழிக்கலாம் என்றாலும் இவர்களிடம் திட்டமில்லை. சாதி அப்படியே இருக்கட்டும் என்றாலும் இவர்களிடம் திட்டமில்லை.

அடுத்தபடியாக இவர்கள் கலப்புத் திருமணம் பற்றியும் கௌரவ கொலைகள் பற்றியும் பேசுகிறார்கள். சக மனிதனை ஒரு மனிதனாகவே மதிக்கத் தெரியாத அளவு சாதி வேறுபாட்டை ஊட்டிய இவர்கள் எவ்வாறு கலப்புத் திருமணம் மூலம் எவ்வாறு சாதியை ஒழி்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மாறாக பெரும்பான்மை கலப்புத் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அப்போது அவர்கள் சாதிகளிடம் நம்பிக்கையை இழந்து சமுதாயத்தில் ஒதுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒரு ரூபாய் கூட தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து செலவழிக்கத் தயாராக இல்லாத இவர்கள் எப்படி கலப்புத் திருமண ஜோடிகளுக்கு உதவுவார்கள்? கலப்புத்திருமண ஜோடிகளை கொலை செய்கிறார்கள் என்று சொல்லும் இவர்கள் அவர்களை பாதுகாக்க தாங்கள் என்ன செய்தோம் என்பதை சௌகரியமாக மறந்து விடுகிறார்கள். இவர்களது கலப்புத் திருமணம் அவர்களின் சமூக உறவுகளை துண்டித்து அவர்களை நட்டாற்றில் விடுவது போலத்தான் இருக்கிறது.

ஒவ்வொரு சாதிக்காரருமே தன் சுய சாதிக்காரர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒருவருக்கு பெண் கொடுத்து விடுவதில்லை. அவருடைய பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, குடும்ப வரலாறு எல்லாவற்றையும் பார்ததுதான் பெண் கொடுக்கிறார்கள், பெண் எடுக்கிறார்கள். சாதி பார்க்காதவர்கள் கூட இதைத்தான் செய்கிறார்கள்.

இதைத்தானே இன்றைய கல்யாண மலை முதல் அனைத்து திருமண ஏற்பாட்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. இவர்களும் துணிச்சலாக ஒவ்வொரு சாதியின் பெயரை எழுதி அவர்களுக்கு வரன்கள் தேடித் தருவதாக விளம்பரம் செய்கிறார்கள். இதில் விசேஷ சாதியினருக்கு மட்டும் வரன் தேடித்தருவது, வீடு விற்பது வாடகைக்கு விடுவது போன்ற அளவு முன்னேறியுள்ளார்கள். அதாவது வெறும் சமூக நிலையில் இருந்த சாதி இன்று வர்த்தக நிலையை எட்டியுள்ளது.

இந்த திருமண நிறுவனங்களை எதிர்த்து எந்த சாதிப் போராளியாவது ஏதாவது செய்ய முடியுமா?

அடுத்தாக இவர்கள் பேசும் விஷயம் இட ஒதுக்கீடு. சாதி ஒழிய வேண்டும். ஆனால் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு தேவை. இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. அதற்காகத்தான் நான் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க கூடாது என்று சொல்கிறேன். ஆனால் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீட்டை பகிர்ந்து கொள்ள இவர்கள் தயாராக இல்லை. ஒரு அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் உதவி செய்யக் கூடிய திறன் கொண்டது என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இது இவர்களது உரிமையை பறிப்பதாக நினைக்கிறார்கள். எனவேதான் இவர்கள் சாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ராமசாமி நாயக்கரின் நிறுவனத்தை நடத்தி வரும் தனித்தமிழ் வீரர் கி. வீரமணி கூட உள் சாதியை அப்படியே பதிவு செய்யுங்கள் என்று அறிக்கை (கவனிக்கவும் அறிக்கை விளம்பரம் அல்ல) விடுக்கிறார். அதாவது சலுகைகளுக்காக சாதிப் பிரிவினைகள் அப்படியே இருக்க வேண்டும் என்பது இவர்களது நிலை. இது எதுவரை என்று கேட்டாலும் இவர்களிடம் பதில் இல்லை.

இவர்களுடன் ஒப்பிடும்போது சாதியாளர்களை பாராட்டலாம். இவர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து ஒரே பெயரியில் சாதிகளை பதிவு செய்யுங்கள் என்று சொந்த பணத்தில் விளம்பரம் செய்கிறார்கள். விட்டால் இவர்கள் நாளடைவில் இணையான சாதிகளுடன் இணைந்து இவர்கள் சாதி வேறுபாட்டை (வட்டங்களை) குறைத்து விடுவார்கள் என்றே நம்புகிறேன்.

எனவேதான் சாதி ஒழிப்பு என்று பேசுபவர்கள் உண்மையில் சமூக அக்கறையில் பேசவில்லை. இவர்கள் தங்கள் பிழைப்புக்காக சாதிப் பிரிவினைகளை வளர்க்க விரும்புகிறார்கள். அதனை சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.  ஆனால் சாதி தொடர்ந்து ஒரு வலுவான கட்டமைப்பாக இருந்து கொண்டு தன் கோர முகத்தை மட்டுமே அழகு படுத்தி வருகிறது.

அதேபோல ஒரு அமெரிக்கர் என்ன உணவு உண்கிறாரோ அதை நமும் உண்ண வேண்டும் என்று சொல்ல முடியாது. ரஷ்யரின் சமுதாய அமைப்பை நாமும் பின்பற்ற வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒரு மனிதருக்கு வேலை செய்யும் மருந்து மற்றொருவருக்கு வேலை செய்யாத போது ஏன் சாதி என்ற கட்டமைப்பை நம்முடைய விசேஷ சமுதாய அமைப்பாக கருதி ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த கட்டமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளாத வரை இதனை நெருங்க முடியாது என்பது மட்டும் உண்மை.

சாதி பற்றி பேசுவது நாகரீகம் அல்ல என்று கருதும் படித்தவர் வெறுமனே இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்த போக்கை கண்டிக்காத காரணத்தால், அவர்கள் மேற்படி சாதி ஒழிப்பு போராளிகளின் செயல்களுக்கு உடந்தையாகி வருகின்றனர்.

எனவே படித்தவரும் படிக்காதவரும் இது பற்றி வெளிப்படையாக, தெளிவாக பேசி தங்களது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று தீர்மானத்திற்கு வந்தால்தான் சமூக பிளவுகள் குறையும் மூடி மறைக்கும் நோய் முற்றவே செய்யும் எந்நாளும் குணமாகாது.

வாய்ப்புக்கு நன்றி

இப்படிக்கு

சாதிவெறியன் பெருமாள் அம்மவாசி தேவன்

Friday, July 6, 2012

காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

காஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை

- ஈரோடு ஆ.சரவணன் 

2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்த மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை 24.5.2012-ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. 176 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் தெரிவித்துள்ள பரிந்துரைகளால், மீண்டும் காஷ்மீர் பற்றிக் கொள்ளக் கூடிய ஆபத்து இருப்பதாக பலரும் கருதுகின்றனர். பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டு 36 மணி நேரம் கழித்து அரசு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இதன் மீது விவாதம் நடத்தப்பட்டால், அரசுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த அறிக்கை காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் பல் வேறு காலங்களில் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக பெரு முயற்சிகளை எடுத்து வந்தாலும் அது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை, பல நேரங்களில் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளன.

13.10.2010-ம் தேதி காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக மத்திய அரசு திலீப் பட்கோங்கர், ராதா குமார், எம்.என். அன்சாரி ஆகிய மூவர் கொண்ட மத்தியஸ்தர் குழு(interlocutors)வை நியமித்தது. நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினர் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் உள்ள சுமார் 700 குழுக்களிடம் நேரிடையாகவே கண்டு, அவர்கள் தெரிவித்த கருத்துக்களை ஆய்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார்கள். 6,000க்கும் அதிகமான மக்களைக் கண்டு பேசியதாகவும், 1,000 ஸர்பஞ்சுகளையும்(Sarpanch & Panches) கண்டு பேசியதாகவும், இதற்கிடையில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொண்ட மூன்று கூட்டங்களையும் நடத்தி கருத்துக்களைத் தெரிந்துகொண்டதாகத் தங்களது அறிக்கையின் துவக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். இவர்களின் துவக்க உரையில் சில கேள்விகளுக்கு இடம் கொடுக்கும் விதமான கருத்துக்கள் அமைந்துள்ளன; 65 ஆண்டுகால காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் சிக்கலான கேள்வியாகும்.சூழ்நிலையை ஆய்வு செய்த கால கட்டம் (Situation on the ground October 2010 – August 2011) பற்றிய கருத்தையும், மத்தியஸ்தர் குழு பரிந்துரை செய்துள்ள சில விஷயங்களையும் ஆய்வு செய்தால், பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும், இன்றைய தினம் வரை காஷ்மீர் பிரச்சனையின் உண்மையை மக்கள் முன் வைக்க ஆளும் காங்கிரஸ் கட்சி முன் வரவில்லை. இது பற்றி பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எடுத்துக் கூறும் கருத்துக்களை, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற கட்சியினராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிகளும் வேறு பிரச்சனகளை முன் வைத்து காஷ்மீர் பிரச்சனையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறார்கள்.எனவே மத்தியஸ்தர் குழுவின் பரிந்துரையில் காணப்படும் குறைபாடுகளையும், அதன் காரணமாக எழும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனில், காஷ்மீர் மாநிலத்தில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே பல்வேறு சம்பவங்களை சுட்டிக் காட்டி மத்தியஸ்தர் குழுவின் பரிந்துரை இந்த நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாத சூழ்நிலை

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நாடு விடுதலை அடைந்தது. விடுதலை பெற்ற சம்பவத்தையே கூட இன்னும் பல்வேறு தரப்பினர் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. இந்திய) நாடு விடுதலை பெறுவதற்கு இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 18.7.1947ந் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பெயர் இந்திய விடுதலைச் சட்டம் (Indian Independence Act)-1947 என்பதாகும். இந்த சட்டத்தின் படி ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளுக்கு விடுதலை கொடுக்கப்பட்டு அது இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன, மீதமுள்ள 565 சமஸ்தானங்கள் ஒன்று இந்தியாவுடன் இருக்க வேண்டும், அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பதுதான் சட்டத்தின் சாரம்சமாகும். 1947 ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15ந் தேதி இந்தியாவும் விடுதலை அடைந்தன. ஆனால் இந்த விடுலையின் போது இரு நாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. பொதுவாக பஞ்சாப் , வங்காளம் இரண்டு பகுதிகளும் பிரிக்கப்படுவதாகக் கருத்து நிலவியது.

மிகவும் முக்கியமான விஷயம் நாடு இரண்டாகப் பிரிந்த போது இரு நாட்டு எல்லைகள் இறுதி செய்யப்படவில்லை. 1947ம் ஆண்டு ஜீன் மாதம் 3-ம் தேதி வெளியான நாட்டின் பிரிவினை குறித்த முதல் அறிவிப்பில் இரு நாட்டு எல்லைகள் இறுதி செய்ய, இரண்டு எல்லைக் கமிஷன்கள் அமைக்கப்படுவதாகவும், இந்தக் கமிஷனில் நான்கு நீதிபதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாகவும், இவர்களில் இருவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள். மற்ற இருவர் முஸ்லீம் லீகினால் தேர்வு செய்யப்படுபவர்கள். மேலும் இதில் ஐந்தாவதாக இங்கிலாந்து சார்பாக நடுநிலை வழக்குரைஞர் ஒருவரும் நியமிக்கப்படுவார். . இந்தக் குழுவினர் எல்லைகளை வரையறுத்து இங்கிலாந்து அரசின் அனுமதிக்காக அனுப்பபட்டு, அந்த நாட்டின் ஒப்புதல் பெற்ற பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்கள். ஆனால் நாடு பிரிந்த போது எல்லைகள் வரையறை செய்யப்படாத காரணத்தால் காஷ்மீர் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் எல்லாம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை எல்லைக் கமிஷன்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டன. இதன்படி எல்லை மாகாணமான பஞ்சாப் பிரிக்கப்பட்டால், ஜம்மு காஷமீருக்கு செல்லும் பிரதான சாலைகள், ரயில்வே லைன்கள் போன்ற அனைத்தும் பாகிஸ்தானுடன் சென்றுவிடும் என்பதைக் கவனிக்க வேண்டும், இதைக் கருத்தில் கொண்டால் ஹரிசிங் ஆண்ட நிலப்பகுதியைப் பாகிஸ்தானுடன் இணைத்தால் தான் பொருள் போக்குவரத்து வர்த்தகம் என பல விஷயங்களில் காஷ்மீர் கூடுதல் பங்களிக்கும். ஆனால் இந்தியாவுடன் சேர்த்தால், அதாவது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் உள்ளிட்ட மூன்று தாலுக்காகள் சென்று விடும். இது தான் காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியாவிலிருந்து செல்லும் ஒரே வழி, இந்த வழியும் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டால் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் காஷ்மீருக்குச் செல்ல இயலாது என்பதைக் காஷ்மீர் மகாராஜா உணர்ந்த காரணத்தால், உடனடியாக இந்தியாவுடன் இணையவில்லை என்பதை எடுத்துக் கூறக் கூட எவரும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை பலர் மறைத்து வேறு காரணங்களை எடுத்துக் கூறி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுபவர்களும் உள்ளனர்.

இச் சூழ்நிலையில் காஷ்மீர் மகாராஜா தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அதாவது குர்தாஸ்பூர் உட்பட மூன்று தாலுக்காக்கள் எந்தப் பகுதியில் இணைகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் முடிவு எடுக்கலாம் என்பதால் ஒரு புதிய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாட்டுடனும் Standstill agreement என்ற உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டிருந்தாலும், காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க வேறு வழிகளில் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்;. இதற்காக இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம், பாகிஸ்தான் சார்பில் ஷேக் அப்துல்லாவைத் தொடர்பு கொண்ட ஆட்கள் மூலமாக, ”காஷ்மீர் இணைப்பு விஷயத்தில் உடனடியாக முடிவு தெரிய வேண்டும் என அவசரம் காட்ட வேண்டாம். முன்னர் ஒப்புக்கொண்டுள்ளபடி, இரு நாடுகளுடனும் ஏற்கெனவே உள்ள நிலையைத் தொடர்வதுதான் இப்போதைக்குத் தேசிய மாநாட்டுக் கட்சி உட்பட அனைவரது திட்டமும், எனவே இன்னும் கொஞ்ச காலம் அவகாசம் கொடுங்கள் இணைப்புக் குறித்து முடிவெடுக்கும் போது மீண்டும் சந்தித்துப் பேசுவோம்” என தகவல் சொல்லியனுப்பினார்கள் என்ற செய்தியும் வெளியே வந்தது. தகவல் சொல்லி அனுப்பிய பாகிஸ்தான், ஷேக் அப்துல்லாவின் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தது. குறிப்பாகக் கூறவேண்டுமானால் இந்தியாவின் ஏஜெண்ட் என ஷேக் அப்துல்லாவைப் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் வர்ணித்தார். ஏனவே பாகிஸ்தானியச் சிந்தனை வேறு விதமாக அமைந்தது.

இந் நிலையில் இப்போது இருக்கும் நிலையே தொடரும் (Standstill agreement) என மன்னர் அனுப்பிய ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு அதற்கு மாறாக நடக்கத் துவங்கினார் ஜின்னா. திடீர் என ஒரு நாள் காஷ்மீருக்கு வரும் அனைத்து போக்கவரத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன, இதனால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. காஷ்மீர் மாநிலத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக உணவுப் பொருட்கள், பெட்ரோல், உப்பு உள்ளிட்ட அன்றாடத் தேவைக்கான அனைத்துப் பொருட்களும்

Maharaja Hari Singh

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீர் வரும் சாலையில் தான் வரவேண்டும், இதைச் துருப்புச் சீட்டாக காஷ்மீர் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க முயற்சி எடுத்தார்கள்.

இந் நிலையில் அக்டோபர் மாதம் 15ந் தேதி காஷ்மீர் பிரதமராக இருந்த ராமச்சந்திர காக் என்பவர் நீக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தின் நீதிபதியாக இருந்த மெஹர்ச் சந்த மகாஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். ராமசந்திர காக் என்பவரின் மனைவி இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர் ,பாகிஸ்தானுக்கு ஆதரவாக , காஷ்மீர் சமஸ்தானத்தை இணைக்க முயற்சி மேற்கொண்ட சதித் திட்டம் தெரிய வந்ததால், பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றால் இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கு வர, போகத் தடையற்ற சாலைப் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையை மகாராஜா விதித்தார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் மெஹர்ச் சந்த மகாஜன் என்றால் மிகையாகாது.

ஆனால் பாகிஸ்தான் அரசு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மெஹர்ச் சந்த மகாஜனிடம் மரியாதை நிமித்தமாக பேச பிரதமர் லியாகத் அலிகான் தனது நம்பிக்கைக்குரிய ஆட்களை அனுப்பி வைத்தார். பாகிஸ்தானின் நய வஞ்சகச் செயலை நன்கு அறிந்த காரணத்தால் மெஹர்ச் சந்த மகாஜன் அவர்களைச் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். இந்தச் சூழ்நிலையில் பேச்சு வார்த்தைகள் மூலம் காஷ்மீர் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைக்க இயலாது என்பதை நன்கு தெரிந்து கொண்ட ஜின்னா மாற்று வழியில் காஷ்மீரை அடையத் திட்டம் தீட்டினார். தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட சற்றுக் காலதாமதம் செய்தார்கள். எனவே இந்திய அரசாங்கம் காஷ்மீர் பிரதமரிடம் இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும், எனவே தாங்கள் டெல்லி வருமாறு அழைத்தனர். பிரதமர் வர இயலவில்லை என்றால் வேறு அமைச்சரைக் கூட அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் பாகிஸ்தானுக்குத் தெரிந்ததின் காரணமாக, பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மத்தியில் இந்தியாவின் மீது சந்தேக எண்ணங்கள் எழ துவங்கின. அதாவது இந்தியா மாற்று வழியில் காஷ்மீர் சமஸ்தானத்தை இணைப்பதற்கு வழிகளை காண முயலுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்தி ஆங்கிலேயே அரசுக்குக் கடிதம் எழுதினார்கள். இந்தத் திட்டத்தின் விளைவு தான் மூர்க்கத்தனம் கொண்ட பழங்குடி மலைவாழ் மக்களைத் தூண்டி விட்டு காஷ்மீர் மீது தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டார். (They attacked the princely State of Jammu and Kashmir in the guise of tribal Pathans) இதன் காரணமாக 20.10.1947ந் தேதி பழங்குடி மலைவாழ் பத்தான்கள் காஷ்மீர் மீது தாக்குதல் நடத்த துவங்கினார்கள்.

ஒரு புறம் பழங்குடியினரான பத்தான்களைத் தாக்குதல் நடத்தத் தூண்டி விட்டாலும், ராவல்பிண்டியில் உள்ள இஸ்லாமியர்கள் கலவரம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே காஷ்மீரில் ஊடுருவ எல்ல முஸ்தீபுகளும் செய்யப்பட்டன. 1947ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ந் தேதி காஷ்மீர் சமஸ்தானத்தில் ராணுவ பொறுப்பாளரிடமிருந்து ஒரு அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கையில் “On 2 and 3 September armed Muslim residents, mainly of Rawalpandi district in Pakistan had infiltrated into the State” மேற்படி அறிக்கை கிடைத்தவுடன் காஷ்மீர் சமஸ்தானத்தின் பிரதம மந்திரி மேற்குப் பஞ்சாப் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் “on receipt of this report the Prime minister of Kashmir sent prompt telegram to the Chief Minister of West Punjab on 4th September requesting him to take prompt action” ஆனால் உண்மை இவ்வாறு இருக்க மேற்கு பஞ்சாப் முதல்வர் இந்த செய்தியை தவறு என கூறினார். இந்த ஊடுருவல் சம்பந்தமாக பல தந்திகள் கொடுத்தாலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியான மேற்கு பஞ்சாப் அரசு மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. இச் சூழ்நிலையில் காஷ்மீர் சமஸ்தானம் பாகிஸ்தான் அரசுக்கு விடுத்த எச்சரிக்கையில் “ ஊடுருவல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், காஷ்மீருக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டதையும் நீக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் அண்டை நாட்டை உதவிக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படும்” (But it did not change the attitude of Pakistan, and ultimately the Government of Kashmir conveyed to Pakistan that if raids were not stopped and blocks of essential commodities lifted immediately it would be left with no alternative but to seek help with others) எனக் கூறப்பட்டது. இந்த செய்தியின் மூலம் பாகிஸ்தான், காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவின் உதவியை நாடப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். இந்த உண்மை வரலாறு மறைக்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீரின் வடக்கு திசையில் இருந்து மலைவாழ் பழங்குடி முரட்டுக் கூட்டம் ஒன்று ஆயுதங்களுடன் பாகிஸ்தான் எல்லையைக் கடந்து, காஷ்மீருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. பாகிஸ்தான் அரசின் இருட்டறை ஆதரவோடு நடந்த இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் குல்மர்க் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முரட்டுக் கூட்டம் கிளம்பும் போதே, இந்த ஆண்டு ரம்ஜான் திருநாளை காஷ்மீரில் கொண்டாடுவோம் அதற்குள் ஸ்ரீநகரைக் கைப்பற்றுங்கள் என்று வாழ்த்து சொல்லியே ஜின்னா அனுப்பி வைத்ததாகத் தகவல்கள் உண்டு. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணப் பகுதியிலிருந்து திரட்டப்பட்ட இந்த முரட்டுக் கூட்டத்திற்கு அக்பர் கான் என்பவன் தலைமை தாங்கினான்.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாறு

1947ம் வருடம் அக்டோபர் மாதம் 20 முதல் 27ந் தேதி வரை காஷ்மீர் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேதியாகும். அக்டோபர் மாதம் 22ந் தேதி அதிக எண்ணிக்கை கொண்ட மலைவாழ் பழங்குடிப் பதான் கூட்டம் ஆயுதங்களுடன் முஸபராத்பாத் நகருக்கு அருகில் உள்ள Abbottabad சாலை வழியாக காஷ்மீருக்குள் நுழைய துவங்கினார்கள். இந்த நிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமானால் காஷ்மீர் சமஸ்தானத்தின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. காஷ்மீர் அரசிடம் உள்ள படையினரும் போதுமானதாக இல்லை, இதனால் செப்டம்பர் மாதம் 24ந் தேதி இந்தியாவின் உதவியை நாடுவது என மகாராஜா முடிவு செய்தார்.

காஷ்மீர் மகாராஜாவின் ராணுவ உதவி கோரிக்கை குறித்து அக்டோபர் மாதம் 25ந் தேதி இந்தியாவின் இராணுவ குழு இதுபற்றி விவாதித்தது. இந்த கூட்டத்திற்கு மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை தாங்கினார். இறுதியாக காஷ்மீர் சமஸ்தானத்திற்குள் இந்தியா நுழைய கூடாது என்றும், ஆனால் காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைவதாக சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டால் , இராணுவ உதவி அளிக்கலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறினார்(Lord Mountbatten final advise was that Indian troops should not enter into an independent country but should do so only when the State had acceded to India) . இதன் அடிப்படையில் இந்தியாவின் சார்பாக வி.பி.மேனன் உடனடியாக ஜம்மு சென்று மகாராஜாவின் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 26ந் தேதி முறைப்படி இணையும் ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார். இந்த இணைப்புக்கு இந்தியாவின் சார்பாக மவுண்ட்பேட்டன் தனது ஒப்புதலை அளித்தார்.இதன் பின்னர் உடனடியாக ஸ்ரீநகருக்கு இந்திய ராணுவம் விரைந்து சென்று மலைவாழ் பழங்குடிக் கூட்டத்தினரைத் தடுத்து நிறுத்திக் காஷ்மீர் காக்கப்பட்டது. 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ந் தேதி முறைப்படி காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இணைப்பில் ஆர்.எஸ்.எஸ். பங்கு

மகாத்மா காந்தியடிகளும், சர்தார் பட்டேலும் காஷ்மீர் சமஸ்தானம் இந்தியவடன் இணைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள். பல முறை இருவரும் மகாராஜாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய போதும் இவர்களின் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் மகாராஜா கொடுக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் சமஸ்தானப் பிரதமராக பஞ்சாப் உயர் நீதி மன்ற நீதிபதி மெஹர்சந்த் மகாஜன் நியமிக்கப்பட்ட பின், சர்தார் பட்டேல் மெஹர்சந்த் மூலம் இப்பிரச்சனையை முன் வைத்தார். இதற்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜிக்கு ஒரு தகவல் மெஹர்சந்த் மகாஜன் மூலம் கொடுத்த அனுப்ப பட்டது. இதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு மகாராஜாவை சந்திக்க முற்பட்டாh ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பஞ்சாப் காஷ்மீர் பிராந்த சங்க சாலக் ஸ்ரீ மாதவ ராவ் மூளே என்பவர் மகாராஜா சந்தித்து இணைப்பு சம்பந்தமாக பேசியதும், அதற்கு மகாராஜா எவ்வித பதிலும் கொடுக்கவில்லை. ஆகவே பிரதமர் மெஹர்சந்த் மகாஜன் மூலம் செய்யப்பட்ட ஏற்பாட்டின் படி 18.1.1947ந் தேதி மகாராஜாவை குருஜி கோல்வால்கர் சந்தித்து, காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது மகாராஜா குறிப்பிட்டவை மிகவும் முக்கியமான விஷயமாகும். மகாராஜாவின் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டுமானால் “My state if fully dependent on Pakistan. All routes passed through Sialkot and Rawalpindi. Lahore is my airport. How can I have relations with India?“ இந்த கேள்விக்கு குருஜி நம்பிக்கை ஏற்படும் விதமாக பேசியதின் காரணமாக மகாராஜாவின் மனது இந்தியாவுடன் இணைவது என்பதில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உண்மையை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி முற்றிலும் மறைத்தது.

இணைப்பிற்குப் பின் நடந்த நிகழ்வுகள்

காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்த பின் பிரச்சனைகள் பல்வேறு வடிவத்தில் தலை தூக்க துவங்கியது. இணைப்பிற்கு முன் பண்டித நேருவிற்கும் ஷேக் அப்துல்லாவிற்கும் நடந்த ரகசிய சந்திப்புகள், இதன் காரணமாக எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் கொடுக்கும் விதமாக அரசியல் ஷரத்து 370, காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியல் சட்டம் போன்றவற்றை கொடுத்ததில் விளைவு, காஷ்மீர் மாநிலத்தில் இன்னும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. இநத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்,

காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திருப்ப வேண்டும் என பல்வேறு குழுக்கள் நியமித்து பரிந்துரை செய்த பின்னும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்பது வேதனைக்குரியது.

மத்தியஸ்தர் குழுவின் பரிந்துரைகள் (Interlocutors)

அரசியல் ஷரத்து 370ல் காணப்படும் “தற்காலிமானது” என்ற வார்த்தையை நீக்கி விட்டு, “சிறப்பான” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் (Delete the word ‘Temporary’ from the heading of Article 370 . Replace it with the word ‘Special’)
பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்
1953ம் ஆண்டுக்கு முந்தைய நிலை கொண்டு வர, 1953க்கு பின் மத்திய அரசால் காஷ்மீர் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் மறு பரீசிலனை செய்ய அரசியல் அமைப்பு ஆய்வு குழு ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும், இந்த பணிகளை ஆறு மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும்
மாநில அரசு, எதிர்கட்சியினரை கலந்து ஆலோசித்து 3 பெயர்களை பரிந்துரை செய்யும், பரிந்துரை .செய்யப்படும் பெயர்களில் ஒருவரை மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமிக்க வேண்டும்
ஆளுநர் மற்றும் முதல்வர் என்பதற்குறிய உருது பெயரை மாநில நிர்வாகத்தில் பயன்படுத்த வேண்டும்
அரசியல் ஷரத்து 356ன் படி சட்ட மன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இருப்பதை மாற்றி சட்ட மன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது, சட்டமன்ற செயல்பாடுகள் நிறுத்த வைக்கவும், மூன்று மாதத்திற்குள் சட்ட மன்ற தேர்தலை நடத்தவும் அதிகாரம் இருக்க வேண்டும்

மத்தியஸ்தர் குழுவினரின் பரிந்துரையில் முக்கியமான அம்சங்கள் காஷ்மீர் மாநிலத்திற்கு எனக் கொடுக்கப்பட்ட அரசியல் ஷரத்து 370ஐ நிரந்தரமாக்க, தற்காலிகமானது என்ற வார்த்தையை நீக்கிவிட்டு சிறப்பு அதிகாரம் என மாற்ற வேண்டும். இரண்டாவது 1953க்கு முந்தைய நிலை அங்கு கட்டாயம் பின்பற்ற வேண்டும், கடந்த 60 ஆண்டுகளாக அங்குள்ள நிலைமையை மறு ஆய்வு செய்ய வேண்டும். மூன்றாவதாக மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கின்ற ஹுரியத் மாநாட்டுக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது முக்கியமான பரிந்துரையாக காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் இந்த மூன்று பரிந்துரைகளும் இந்த நாட்டின் ஒற்றுமைக்கும், இறையான்மைக்கு பங்கம் ஏற்படுத்தும்விதமாக அமைந்துள்ளது என்பதைப் பற்றி விரிவாக பார்க்க வேண்டும்.

அரசியல் ஷரத்து 370
( Delete the word ‘ temporary’ ) அரசியல் ஷரத்தில் உள்ள “தற்காலிகமானது” என்பதை நீக்கி விட்டுச் “ சிறப்பு “ (‘Special‘) என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஷரத்து கொண்டு வரும் போது பாராளுமன்றத்தில் இது பற்றிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து பேசிய அன்றைய பிரதம மந்திரி நேரு “காலப்போக்கில் இந்த ஷரத்து ரத்து செய்யப்படும், இந்த ஷரத்து தற்காலிகமானது “ என்றார். இந்த ஷரத்து கொண்டு வரும் போது, அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கார் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததும் இல்லாமல், இந்த ஷரத்தின் மூலம் மீண்டும் நாடு ஒரு பிரிவினையை சந்திக்கும் என்று தெரிவித்தார் . எந்த மாநிலத்திற்கும் இல்லாத அதிகாரங்கள் இந்த ஷரத்தின் மூலம் காஷ்மீர் மாநிலத்திற்குக் கிடைக்கிறது. ஆகவே இந்த ஷரத்து 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும். ஆனால் அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு, அரசியல் ஷரத்து 370 ல் உள்ள தற்காலிகமானது என்ற வார்த்தையை மாற்றிச் சிறப்பு என்று மாற்ற வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்கள். ஏன் இந்த ஷரத்து ரத்து செய்ய வேண்டும் என்பதற்குச் சில பிரிவுகளைப் பார்த்தால் நன்கு புரியும்.

இந்திய அரசியல் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது மட்டுமில்லாமல், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு என தனியாக ஒரு அரசியல் அமைப்பு சட்டம் (Constitution). இந்த ஷரத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி இவர்கள் செயல்பட முடியும், மற்ற எந்த மாநிலத்திற்கும் இம்மாதிரியான தனி அரசியல் அமைப்பு சட்டம் கிடையாது. காஷ்மீர் மாநிலத்திற்கு என ராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு என மூன்று விஷயங்களை தவிர மற்ற விவகாரங்களுக்கு என இந்திய பாராளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது. காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே சட்டம் இயற்ற முடியும். பாராளுமன்றம் இயற்றும் மசோதாக்கள் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமாக அமுலுக்கு வரும், ஆனால் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட எல்லா மசோதாகளும் காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் ;பெற்றால் தான் அந்த மாநிலத்தில் சட்டமாக்கப்படும் என்பது எந்த மாநிலத்திற்கும் இல்லாத உரிமையாகும். இது சரியா என்பது தான் கேள்வி.

அரசியல் ஷரத்து 370ன் படி காஷ்மீர் மாநிலத்திற்கு எனத் தனி அரசியல் அமைப்பு சட்டம் இருப்பதால், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுகிறது. இந்திய குடிமகன் எந்த மாநிலத்திலும் சொத்துக்கள் வாங்க இயலும், குடியிருக்க உரிமை உண்டு, குடியுரிமை பெறுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் ஷரத்து 370ன் படி 1947 ஆகஸ்ட் 15க்கு பின் வந்தவர்கள் எவருக்கும் இந்த உரிமை கிடையாது. அதாவது காஷ்மீர் மாநிலத்தில் குடியேறிய எவருக்கும் அவர் குடியரசுத் தலைவராக இருந்தாலும் இந்த மூன்று உரிமையும் கிடையாது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு குடியுரிமை உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த பெண்கள் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குச் சொத்து உரிமையும் கிடையாது. காஷ்மீர் மாநிலத்தில் டாக்டர் ரூபியான நஸரூல்லா(Dr.Rubeend Nasrullah) என்பவர் மருத்துவ மேல்படிப்பிற்காகக் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். கல்லூரி நிர்வாகம் அவரின் நிரந்திர இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்கக் கோரியது. ஆனால் அரசு அவருக்கு நிரந்தர இருப்பிட சான்றிதழ் தற மறுத்துவிட்டது, ஏன் என்றால் திருமதி ரூபியான நஸரூல்லா காஷ்மீர் மாநிலத்தைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் கொடுக்க இயலாது என்று தெரிவித்து விட்டார்கள். 6.2.1985ந் தேதி உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் ஷரத்து 226ன் படி எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரவில்லை என்பது அரசியல் ஷரத்து 370ன் கடுமையை தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட அரசியல் ஷரத்தில் தற்காலிகமானது என்று இருக்கும் போதே இவ்வளவு கொடுமை நடக்கிறது என்றால், சிறப்பு அதிகாரம் கொண்டது என மாற்றம் செய்யப்பட்டால் காஷ்மீர் பிரிவினையைக் கோராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

மிகவும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஒரு மசோதா விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டால், குடியரசு தலைவர் எத்தனை முறை வேண்டுமானலும் திருத்தம் செய்ய கோரி மாநிலத்திற்க திருப்பி அனுப்பலாம். துமிழகத்தில் நில உச்ச வரம்பு மசோதாவிற்கு ஆறு முறை திருத்தம் செய்ய வேண்டி திருப்பி அனுப்பட்டது. ஆனால் காஷ்மீர் மாநிலத்திலிருந்து ஒரு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு சென்றால் அனுமதி கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இரண்டாவது முறையாக காஷ்மீர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து விட்டால், குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக்கப்படும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஷேக் அப்துல்லா 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ந் தேதிக்கு முன் பாகிஸ்தான் சென்ற காஷ்மீர் முஸ்லீம்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதுடன், அவர்களின் பூர்வீகச் சொத்தும் மீட்டுக் கொடுக்கப்படும் என்ற வகையில் Resettlement Act-ஐக் கொண்டு வந்ததை மறந்து விடக்கூடாது.

அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு அரசியல் ஷரத்து 370 ல் உள்ள தற்காலிகமானது என்பதை நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக அரசியல் ஷரத்து 371, 371A , 371B , 371C , போன்ற சட்ட பிரிவுகளை காட்டி தங்களது கோரிக்கைக்கு வலு சேர்க்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகள் மகாராஷ்ட்ரா, குஜராத், நாகாலாந்து, மனிப்பூர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் உள்ள சில மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக மாநில ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு என்பதை ஷரத்து 370வுடன் ஒப்பிடுவது மிகப் பெரிய தவறாகும்.ஆகவே மத்திய அரசு நியமித்த மத்தியஸ்தர் குழு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் உள்ள இந்த ஷரத்து 370க்கு சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருப்பது வேடிக்கையானது.

Wednesday, July 4, 2012

சாதி ஒழிப்பு போராளிகளுக்கான தகுதிகள்




1.        சாதி ஒழிப்பு என்பது என்ன? அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? அது மத ஒழிப்புடன் தொடர்பு கொண்டதுதானா? அதற்கான காலக்கெடு என்னஅதில் யாருக்கு என்ன பங்கு உண்டு? போன்றவற்றை தெளிவாக வரையறுத்து ஒரு வெள்ளை காகிதத்தில் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிரதியை இணையத்தில் போட வேண்டும்.
 
2.        தனது சான்றிதழில் சாதி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஒரு 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் தான், சாதி - மதங்களிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்து நோட்டரி செய்து அதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும்.


3.        சாதியில் இருந்து வெளியேற முடியாதவர்களை இழிவாக பேசுவதால் முதலில் இவர்கள் தங்களிடம் என்னென்ன தீய பழக்கங்கள் இருந்தன/ இருக்கின்றன. அவற்றை எப்படி/ எத்தனை காலத்திற்குள் விட்டார்கள்/ விட திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிவித்து அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

4.        இவர்கள் தங்கள் உறவினர்கள்/ நண்பர்களிடம் சாதி ஒழிப்புக் கருத்துக்களை கூறி அதற்கு என்ன விதமான பதில் கிடைத்தது? அவர்கள் எத்தனை காலத்திற்குள் மாறத் தயார்/ எத்தனை பேர் மாறியுள்ளனர் என்று அறிவிக்க வேண்டும்.


5.        தங்களது சொந்த ஊரில், தாங்கள் குடியிருக்கும் தெருவில் சாதி ஒழிப்பு பிரச்சார கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த கூட்டத்திற்கு யார் யார் வந்தார்கள்? அவர்களது கருத்து என்ன என்று தெரிவிக்க வேண்டும். இதுபோல ஒரு வருடத்தில் எத்தனை கூட்டங்களை நடத்தினார்கள் என்றும் அவற்றின் பலன் என்னவென்றும் தெரிவிக்க வேண்டும்.

6.        அவ்வாறு சாதியிலிருந்து வெளியேறும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா? அந்த பிரச்சனைகளை இவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும்.


7.        தனது ஊரில் தனது பகுதியில் சாதியின் பெயரால் என்னென்ன அவலங்கள் நடக்கின்றன? அவற்றை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுத்தார், அதற்காக அங்குள்ள மக்களை சந்தித்து பேசினாரா? அதற்கு என்ன பலன் கிடைத்ததா என்று தெரிவிக்க வேண்டும்.

8.        தனது உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஏதாவது சாதிக் கொடுமைக்கு ஆளாகுகிறார்களா? இல்லை ஆளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிந்து அவருக்கு உதவி செய்கிறாரா என்பது பற்றி விவரிக்க வேண்டும்.


9.        ஒரு அமைப்பு - கட்சியில் உள்ளவர்கள், தனது - கட்சியின் தலைவர் சாதி பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளார், அதனை சரியாக கடைப்பிடிக்கிறாரா? என்று பார்த்து அதை தெரிவிக்க வேண்டும். தனது அமைப்பு - தலைவர் அவ்வாறு இல்லாத போது என்ன செய்தார் என்பதை விவரிக்க வேண்டும்.

10.     சாதி பற்றிய அரசின் கொள்கை என்ன? அரசாங்கம் சாதியை ஒழிக்க விரும்புகிறதா? அப்படியானால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது அரசாங்கத்திற்கு கடிதமாக எழுதி அனுப்ப வேண்டும். அதற்கான பிரதிகளை இணையத்தில் போட வேண்டும்.


11.     இந்தியாவில் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் சாதியை ஒழித்து விடலாமா, அதற்கு இந்திய சட்டங்கள் தடையாக இருந்தால் என்ன செய்வார் அல்லது வடமாநிலங்களில் சாதி ஒழிப்பை எவ்வாறு பரப்புவார் என்று விளக்க வேண்டும்.

வேறு ஏதாவது தகுதிகள் இருக்க வேண்டும் என்று கருதினால் நண்பர்கள் அவற்றை சேர்க்கவும்.

இதில் ஒன்றைக் கூட செய்ய முடியாதவர்கள் தயவு செய்து சாதி ஒழிப்பு பற்றி பேசாதீர்கள்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...