Friday, July 17, 2020

மதுரையை காத்த தேவர்கள்


மதுரையை காத்த தேவர்கள்
--------------------------------------------
* கிபி 1650 ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
* தென்னகத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவிய அந்த சமயத்தில் கோல்கொண்டா சுல்தானியர்கள், தமிழகத்தில் படை எடுத்து, வேலூர் மற்றும் செஞ்சியை கைப்பற்றினர்.
* அடுத்ததாக தஞ்சையை தாக்கினர், தஞ்சை நாயக்கர் சுல்தானிடம் சரணடைந்தார்.
* கண்ணில் படும் இடமெல்லாம் சூரையாடப்பட்டன.
திருமலை நாயக்கரின் போர் ஒப்பந்தம்
-----------------------------------------------------------
* சுல்தானியர்களை கண்டு அஞ்சி தஞ்சை நாயக்கர் சரணடைந்த போதும், திருமலை நாயக்கர் முகமதியரை எதிர்க்க துணிந்தார்.
* பீஜபூர் சுல்தான்களிடம் போர் ஓப்பந்தம் செய்த திருமலை நாயக்கர் , கொல்கண்டா சுல்தான்களை ஒடுக்க 17000 போர் வீரர்களை அளித்து, 30000 போர் வீரர்களுடன் நாயக்கரும் போரிட்டு, செஞ்சியை மீட்டனர்!
இனம் இனத்தோடு சேர்ந்தது
--------------------------------------------
* செஞ்சிக்கோட்டையை கைப்பற்றிய பின் பீஜபூர் சுல்தன்கள், கொல்கண்டா சுல்தான்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு,அவ்விருவரும் ஒர் அணியாயினர்
* சுல்தானியர்கள் செஞ்சியை வசப்படுத்தினர்
மதுரையை சூரையாடிய சுல்தான்கள்
----------------------------------------------------------
* எதிர்பாராத ஆபத்தை உணர்ந்த திருமலை நாயக்கர் செய்வதறியாது திகைத்தார்
* சுல்தானியர்கள் தஞ்சையை கைப்பற்றியபின், மதுரையை சூரையாடத் தொடங்கினர்
தன்னரசு கள்ளர்கள்
-------------------------------
* திருமலை நாயக்கர் தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் மதுரை கள்ளர்களிடம் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வந்தார்.
* கள்ளர் நாடுகளை பாளையமாக மாற்ற முயற்சி செய்தார்.
* ஆனால் கள்ளர் நாடுகள் apos;வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கேன் வரி தர வேண்டும் என வரி கட்ட மறுத்து தன்னரசு நாடுகளாக திகழ்ந்தனர்.
* கள்ளர்களை அடக்க நடந்த முயற்சிகள் தோல்வியை தழுவிய பின்,அவர்களை நட்பு நாடுகளாக மாற்றிக்கொண்டார் திருமலை மன்னன்.
சுல்தான்களிடம் இருந்து மதுரையை காப்பாற்றிய தேவர்கள்
----------------------------------------------------------------------------------------------
*இந்த இக்கட்டான நிலையில் மதுரை கள்ளர்களின் உதவியை திருமலை நாயக்கர் நாடினார்.
* கள்ளர்களின் உதவியோடு சுல்தானியர்கள், செஞ்சி வரை விரட்டப்பட்டனர்.
* இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓலைச்சுவடிகள் M taylor என்பவரால் தொகுப்பட்டுள்ளது.
* அதிலுள்ள வரிகள்"Tirumala nayakar by the assistance of collories( kallars), routed and expelled the muhammadans who returned discomfited to gingi"
( History of nayaks of madura-p-130)
(Manuscripts collection - m taylor)
( jesuit letters - madura)
தொகுப்பு- சியாம் சுந்தர் சம்பட்டியார்

Thursday, July 9, 2020

நுட்பவியல் கலைச் சொற்கள்

*மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :*

WhatsApp - புலனம்
youtube - வலையொளி
Instagram - படவரி
WeChat - அளாவி
Messanger - பற்றியம்
Twtter - கீச்சகம்
Telegram - தொலைவரி
skype - காயலை
Bluetooth - ஊடலை
WiFi - அருகலை
Hotspot - பகிரலை
Broadband - ஆலலை
Online - இயங்கலை
Offline - முடக்கலை
Thumbdrive - விரலி
Hard disk - வன்தட்டு
GPS - தடங்காட்டி
cctv - மறைகாணி
OCR - எழுத்துணரி
LED - ஒளிர்விமுனை
3D - முத்திரட்சி
2D - இருதிரட்சி
Projector - ஒளிவீச்சி
printer - அச்சுப்பொறி
scanner - வருடி
smart phone - திறன்பேசி
Simcard - செறிவட்டை
Charger - மின்னூக்கி
Digital - எண்மின்
Cyber - மின்வெளி
Router - திசைவி
Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு
Thumbnail சிறுபடம்
Meme - போன்மி
Print Screen - திரைப் பிடிப்பு
Inkjet - மைவீச்சு
Laser - சீரொளி

Saturday, July 4, 2020

இனமானத்தை இழக்கத் தயாராக உள்ள தெலுங்கர்கள்



ஒரு கூகிள் குழுமத்தில் தமிழராக நடித்து வந்தவர் தானும் தமிழர்தான் என்று கூற அவருக்கு தமிழர் ஒருவர் பரிந்து பேச அவருக்கு நான் எழுதிய மடல் இது...

“தெலுங்கர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும்”  என்று நான் எழுதிய மடலுக்கு பதிலளிக்கும் முகமாக ஒரு தெலுங்கர் தன்னை தமிழர் என்று சொன்னார்.
அனுதினமும் வேந்தர் என்பவர் தமிழில் மூச்செடுத்தாலும் அவர் பிறப்பால் ஒரு தெலுங்கர் என்பதே உண்மை. அதை அவரே ஒப்புக் கொண்டார். நீங்கள் கனடாவில் வாழ்ந்தாலும் ஒருக் காலத்திலும் கனடா இனத்தவர் (வெள்ளையர்) ஆக முடியாது. கனடா குடி உரிமை பெற்றவராக வேண்டுமானால் ஆகலாம். அதுவே இந்திய தேசிய இனத்தவருக்கும் பொருந்தும்.

ஒரு தெலுங்கரை தெலுங்கர் என்று சொல்வதில் என்ன இகழ்வு இருக்கிறது என்று குழுமத்தினர்தான் சொல்ல வேண்டும். இழையின் நோக்கமே தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தாங்கள் தெலுங்கர்தான் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக உயிர் துறந்த பொட்டி ஸ்ரீராமுலு போன்ற எண்ணற்ற இனமான தெலுங்கு இனம் இன்று இனமானத்தை இழந்து நின்று கொண்டிருக்கிறது. அதனால்தான் தெலங்கானா தெலுங்கர்கள் ஆந்திர தெலுங்கர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டியதாயிற்று. அதிலும் தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தாங்கள் வாழும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்தவித விசுவாசமும், உண்மையும், நேர்மையும் இன்றி நாங்களும் தமிழர்தான் என்று நடிக்க முற்படுகின்றனர். மேலும் நாங்கள்தான் தமிழகத்தை ஆளப்பிறந்தவர்கள் என்று ஆர்ப்பரிக்கின்றனர். இது தெலுங்கு இனத்திற்கே பெரும் அவமானமாகும்.

நாங்கள் பேசிக்கொண்டிருப்பது தமிழின அரசியலாகும். இதில் எந்த இனத்தையும் பகையாகவோ, வெறுப்பாகவோ, பிணக்கு கொண்டோ பார்க்க வில்லை. தமிழினம் தனக்கான அரசியலைக் கட்டமைத்துக் கொள்ள அதற்குள்ள நியாயமான உரிமையைப் பேசுகிறோம். இது ஜனநாயக ரீதியானது. தமிழ்நாடு ஒன்றும் தனித் தீவு அல்ல. அது ஒரு நாடு. அந்த நாட்டின் அருமை பாரதத்தவருக்குத் தெரியவில்லை. எனவே பாரத நாட்டவர் அந்த நாட்டை தங்கள் காலில் போட்டு நசுக்கும் அளவுக்கு நடந்து கொள்கின்றனர். அதன் உரிமையை காற்றில் பறக்கவிட்டு மகிழ்கிறார்கள்.

10000 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு தமிழகம் பாரதம் போன்ற கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், பாரதத்திற்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. பாரத விடுதலையை முன்னெடுத்ததில், பாரதம் விடுதலை பெற்றதில் தமிழரின் பங்கு அளப்பரியது. அது நேதாஜியின் தலைமையில் செயல்பட்டது குறையாக அமைந்தது. அதனால்தான் தமிழகம் பாரதத்தில் இழந்துதான் அதிகம். பெற்றது குறைவு. இன்னமும் தமிழகம் பாரதத்திற்கு சோறு போட்டு வருகிறது. ஆனால், பாரதம் சோறுபோடும் தமிழகத்தின் கையை முறுக்குகிறது. இது எங்கள் ஆதங்கம். அதற்காக நாங்கள் இந்திய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றோ, தனித் தமிழகம் அமைக்க வேண்டும் என்றோ பிரச்சாரம் செய்யவில்லை. நாங்கள் இந்திய ஒன்றியத்திற்குள்ளாகவே எங்களது அதிகபட்ச உரிமைகளைப் பெற விரும்புகிறோம். ஆனால், உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான பாரதம் ஒரு காலத்தில் மேற்கு உலகைப் போல மேம்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். அப்போது எங்கள் உரிமைகள் மீட்கப்படும் என்று நம்புகிறோம்.

நாளுக்கு நாள் தமிழ்த் தேசிய உணர்வு அதிகரித்து வருவதை எல்லாரும் உணர்ந்து வருகிறார்கள். பாவம் அப்பாவித் தெலுங்கர்கள் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள். மாறிவரும் அரசியல் சூழலில் அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. அதற்கு வேந்தன் அரசு போன்ற ஒவ்வொரு தெலுங்கரும் எடுத்துக்காட்டாகவே இருக்கின்றனர். மற்றபடி நான் அவரையோ அவர் சார்ந்த இனத்தையோ, பாரதம் என்ற இந்திய தேசியத்தையோ அவமதிக்கவோ, இகழவோ இல்லை என்று நான் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கள்ளர் ரெஜிமெண்ட் எந்த நேரமாயினும் தாக்குவதற்கு தயார்



கிபி18ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த் ஃபுல்லர்ட்றான் என்கிற அறுவை சிகிச்சை நிபுணர், கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அன்றைய தென்னிந்திய மக்களிடம் நெருங்கி பழகிய ஒரு மனிதம் மிக்க மனிதர்.
18ஆம் நூற்றாண்டு இறுதியில் பிரிட்டிஸாருக்கும், தென்னிந்தியாவில் உள்ள புரட்சியாளர்களுக்கும் போர் யுத்தம் மிக உக்கிரமாக வெடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில், மதுரையில் தங்கியிருந்த ஃபுல்லர்ட்றான் சென்னை ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அதில் :-
“தொண்டி கடற்கரையில் இருந்து மதுரை மேலூர் எல்லைக்குள் சுமார் 105கிலோமீட்டர் நிலப்பரப்பில் தன்னரசாக வாழ்ந்து வரும் கள்ளர்களில் 30,000 முதல் 40000 கள்ளர்கள் அடங்கிய கள்ளர் படைகள்,தங்களுடைய பல கள்ளர் தலைவர்களுடன் தாக்குவதற்கு கிழக்கிந்திய படைகளை தாக்குவதற்கு தயாராக உள்ளனர் என்று எழுதியுள்ளார்.
17ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் நூற்றாண்டு இறுதிவரை வெள்ளையர்களின் சிம்மசொப்பனமாக திகழ்ந்த கள்ளர் நாட்டார்களின் வீரத்தையும்,தியாகத்தையும் எத்தனை யுகம் மாறினாலும் காலத்தால் அழிக்க முடியாத இரத்தம் சரித்திரம்💐
நன்றி
B.C Law volume
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Thursday, July 2, 2020

தெலுங்கர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும்

தீரன் திருமுருகனுடன் ஒரு தெலுங்குப் பெண் உரையாடிய செவ்வியை அனுப்பியிருந்தனர். தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் என்ற தவறான கருத்தியலை திராவிட இயக்கங்கள் பரப்பியுள்ளன. அதை தெலுங்கர்களும் நம்புகிறார்கள். அவர்கள் தெலுங்கர்கள் என்று சுட்டிக்காட்டும்போது அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இது தேவையில்லாதது. தங்களை தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்தினால் நாளை தமிழகத்தை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்ற அச்சமே அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. எனவேதான் அறிவுதளம், அரசியல் தளம் என அனைத்து தளங்களிலும் உள்ள தெலுங்கர்கள் இதையே எதிர்வினையாகக் காட்டுகிறார்கள். இது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை. அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும். படித்த, அறிவுசார்ந்த தெலுங்கர்கள் குடியுரிமைக்கும் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெலுங்கர் மத்தியில் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்த தாங்களும் தமிழர்தான் என்று கூறி பிடிவாதம் பிடிப்பது தமிழக அரசியல் கருத்தியல் களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணராத தன்மையையே காட்டும். அது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள், தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற முழு ஆதரவை தரவேண்டும்.   

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...