Friday, July 22, 2016

தெய்வீக காதல் கதை


நேற்று முன்தினம் (20.07.2016) ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்லுவதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பான காதல் கதை. ஒரு இளம்பெண் ஒரு வாலிபரை அழைத்து வந்து தான் அவரை காதலிப்பதாகவும். அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த வாலிபரை விட அந்தப் பெண் சற்று குண்டாக இருக்கிறார். அந்த வாலிபருக்கு 20-22 வயதுதான் இருக்கும். அந்தப் பெண் திருமணம் செய்து விவாகரத்து செய்திருக்கிறார். அதற்கு காரணம் அவரது கணவர் தன்னை விட 11 வயது மூத்தவர் என்றும் அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாதவராக இருந்ததாக கூறுகிறார்.

அவரது தாய்.தந்தையர் டீக்கடை வைத்து பிழைத்து வருகிறார்கள். அவருக்கு இரண்டு சகோதரிகளும் உண்டு. தான் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தனது காதலை காதலனின் பெற்றோர் ஏற்கவில்லை என்று கூறினார்.

அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அந்த வாலிபர் இந்தப் பெண்ணுடன்தான் வாழ்வேன் என்று சொல்கிறார்.

அவர் திருமணம் செய்த பெண் தந்தையை இழந்தவர் ஆவார். அவரது தயார் அவருக்காக சிரமப்பட்டு 10 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அந்தப் பெண்ணை பார்த்து தனக்கு பிடித்திருப்பதாக சொல்லி திருமண ஏற்பாடுகளை செய்வது வரை காத்திருந்து திருமணத்திற்கு 4 நாட்கள் முன்னதாக தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணிடம் சொல்லி இருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண், என் தயார் சிரமப்பட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஊரெல்லாம் திருமண பத்திரிகை கொடுத்தாகி விட்டது. இப்போது திருமணத்தை நிறுத்த முடியாது. நீ அந்தப் பெண்ணோடு வாழ்வதாக இருந்தால் போய்விடு இல்லையென்றால் என்னை திருமணம் செய்துகொள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அப்போதைக்கு எதுவும் செய்யாத அந்த வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

இதற்கிடையில் தான் காதலித்த பெண் விவாகரத்து செய்து வீட்டிற்கு வந்து விட்டார் என்று தெரிந்ததும் அவருடன் சுற்றத் தொடங்கினார். தற்போது அந்தப் பெண் அந்த வாலிபரை திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

பையனின் தாய், அவன் காதலித்த பெண் குண்டாகவும் வயதில் மூத்த பெண்ணைப் போலவும் இருப்பதால் அவளை தனக்கு பிடிக்க வில்லை என்று சொன்னார். மேலும் அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆன பின்னர், பையனின் சம்மதத்தோடு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம் என்று சொன்னார். தங்களுக்கு அவன் ஒரே பையன் என்றும் அவனுக்கு திருமணம் செய்து வைக்கும் கடமை தங்களுக்கு இருக்கிறது என்றும் சொன்னார்.

இதற்கிடையில் இவர்களின் காதலுக்கு இருதரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக அவர்களது உறவினர்கள் இருவரிடமுமே பேசியுள்ளனர். பையன்தான் தவறு செய்து விட்டதாக பையனின் தந்தை சொன்னார். ஒன்று இவன் அந்தப் பெண்ணை காதலித்து இருக்கக் கூடாது. இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை திருமணம் செய்திருக்கக் கூடாது என்று சொன்னார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் உனக்கு என்ன வேண்டும் என்று காதலித்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண் சொன்னார். அப்படியானால் திருமணம் செய்த பெண் அந்த வாலிபருக்கு விவாகரத்து தரவேண்டும் என்று சொன்னார்.

அதற்கு அந்த வாலிபரின் மனைவி தான் விவாகரத்து தர முடியாது என்று மறுத்து விடுகிறார்.

இதற்கிடையில் காதலித்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.

இது எப்படி நடந்தது என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கிறார். லாட்ஜில் தங்கினீர்களா என்று கேட்கிறார். தனது வீட்டில் தங்கியதாக அந்தப் பெண் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்டபோது எல்லாரும் டீக்கடைக்கு சென்று விட்டார்கள் என்று சொல்கிறார் அந்தப் பெண்.

உன் பெற்றோர் உனக்காக கடையில் உழைத்துக் கொண்டிருக்கும்போது நீ வீட்டில் இப்படி இருந்தது தவறு இல்லையா என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார். வாலிபரின் மனைவி புகார் செய்தால் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்கிறார். வாலிபர் தனது இயலாமையுடன் தன் மனைவி மற்றும் தன் காதலியை தவறாக பயன்படுத்தியுள்ளார். அவரால் தனியே தன் காதலியை வைத்து வாழ முடியாது என்பதையும் அவரது பெற்றோர்கள் சொல்கிறார்கள். இதற்கிடையில் அந்த வாலிபர் தன் மனைவி குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொள்கிறார் .

இப்போது அந்தப் பெண் என்ன முடிவு எடுக்கிறார் என்பது பிரச்சனையாகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரது தாய் தந்தையரிடம் தொலைபேசியில் பேசுகிறார். அவர்கள் அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தங்களுக்கு இன்னும் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் இந்தப் பிரச்சனையால் கடையை திறக்காமலும் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் அந்தப் பெண் வீட்டிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் எடுத்துச் சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் அந்தப் பெண் ரூபாய் 5 ஆயிரம்தான் எடுத்து வந்ததாகவும், அது தான் வேலை செய்து சம்பாதித்ததாகவும் சொல்கிறார். அதேபோல அந்த வாலிபர் முன்பு ஒரு செயின் அணிந்திருந்தார். அது இப்போது இல்லை. எனவே அவர் அந்த செயினை விற்று விட்டுத்தான் அவர் அந்தப் பெண்ணை அழைத்து வந்திருக்கிறார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அந்த வாலிபர் அதனை மறுத்து தன் பாக்கெட்டில் உள்ள செயினை எடுத்து கொடுத்தார்.

இப்போது அந்தப்பெண்ணும் தன் வீட்டிற்குச் செல்லத் தயாராக இல்லை. ஏதாவது விடுதிக்குச் சென்று விடுவதாக சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொல்கிறார்.

சுயமாக வாழ முடியாதவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது, முறையற்ற காதலால் காதலர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இந்த சம்பவம் விளக்குவதாக அமைந்தது.


-----------------------------

Tuesday, July 12, 2016

ஒரு தெய்வீகக் காதல் கதை



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்லுவதெல்லாம் உண்மைநிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான காதல் கதையின் தொடர்ச்சி இன்று (12.07.2016) ஒளிபரப்பானது.

காதலனின் பெயர் ஆசிக்’ (இந்தியில் ஆசிக் என்றால் காதலன் என்றுதான் பொருள்). பீகாரை சேர்ந்தவரா இவர் சென்னையில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். நன்றாக தமிழ் பேசக் கூடியவரான இவர் சுனிதா என்ற பெண்ணை காதலிக்கத் தொடங்கினார். அவரை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றார்.

ஆசிக்கின் பேச்சில் உண்மை இல்லை என்பதை உணர்ந்த அவரது பெற்றோர் இந்தப் பிரச்சனையை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டு வருகிறார்கள். விசாரணையின்போது ஆசிக் ஒரு பேச்சிலர் அறையில் தங்கி இருப்பதாகவும். தனது தங்கைக்கு திருமணம் நடக்க இருப்பதால் இரண்டு மாதம் கழித்து சுனிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். மேலும் அவர் சென்னைக்கு வந்த ஆண்டு, படிப்பு, வயது பற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி மாட்டிக் கொள்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அதற்கு ஆசிக் மறுக்கிறார். ஏன் என்று கேட்கும்போது பிரச்சனை என்று கூறுகிறார். ஆஷிக் வேறு எதுவும் திருமணம் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆஷிக்கின் மனைவியின் தொலைபேசி எண்ணை கண்டறிந்து அவரை தொலைபேசியில் அழைக்கிறார்.

தன் கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய வந்திருப்பதாக சொன்னதும் அதிர்ந்த அந்தப் பெண் உடனே தொலைக்காட்சி அரங்கிற்கு வருகிறார். ஆஷிக் அந்தப் பெண்ணையும் காதலித்துதான் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளன. 3 பெண் குழந்தைகளையும் ஆஷிக்கின் மாமியாரே வளர்த்து வருகிறார். ஆண் குழந்தை மட்டும் அவர்களிடம் வளர்கிறது. ஆஷிக் தினமும் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பார்.

ஆஷிக், உடன் பணிபுரிந்த பெண்ணைத்தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதலிக்கும்போதே தன் மனைவியை அழைத்துச் சென்று லாட்ஜில் தங்கியுள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமடைந்து விட்டார். அதன் பின்தான் அவர்களின் திருமணம் நடக்கிறது. ஆஷிக் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்ததால் அவருக்கு தன் மகளை திருமணம் செய்து தர அவரது மாமியார் தயங்கியுள்ளார். இருந்தாலும் மகள் வயிற்றில் குழந்தையை சுமந்து நிற்கும்போது வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைக்கிறார். திருமணமான நான்கு மாதங்களில் குழந்தை பிறந்து விடுகிறது. தற்போது மூத்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது.

இந்த நிலையில்தான் அவர் சுனிதாவை காதலித்து திருமணம் செய்ய திட்டமிட்டார். சுனிதாவின் தந்தை ஆஷிக்கை பார்த்ததுமே இவன் ஒரு பொய்யன் என்பதை கண்டுபிடித்து விட்டார். இருந்தாலும் தன் மகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற காரணத்தால் இந்தப் பிரச்சனையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தார்.

ஆஷிக்கின் மனைவி தன் கணவனை விட்டுவிடு என்று சுனிதாவிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். மீறி இருவரும் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் தான் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னார். ஆஷிக்கை திருமணம் செய்து கொண்டால் குழந்தைகளை கொடுப்பான். தினமும் குடித்து விட்டு வந்து அடி உதை கொடுப்பான் என்று சொன்னார். ஆஷிக்கின் 3 சகோதரர்களும் அதே நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், இவர்கள் காதலித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதையும் சொன்னார். வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சுனிதாவை ஆஷிக் பைக்கில் ஏற்றிச் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆஷிக்கிற்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது, அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன என்று தெரிந்தும் சுனிதா அவரை காதலித்ததுதான். செலவிற்காக சுனிதா ஆஷிக்கிற்கு பணமும் மோதிரமும் கொடுத்துள்ளார். தான் குளிக்கும்போது புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப்பில் ஆஷிக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதை கண்டறிந்த அவரது தந்தையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னார். ஒருமுறை இணையத்தில் ஏற்றப்படும் படம் எங்காவது ஒரு இடத்தில் பதிவாகி இருக்கும் என்பதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் விவரித்தார்.

இறுதியில், ஆஷிக் தன் மனைவி மக்களுடன் பிழைக்கச் செல்வதாக சொல்லிச் சென்று விட்டார். ஆனால் சுனிதா தன் வீட்டிற்கு செல்ல மறுத்தார். ஏதாவது விடுதிக்குச் சென்று தங்குவதாக சொன்னார். செய்த குற்றம் அவரை குறுகுறுக்கக் செய்தது. இத்தனைக்கும் அவரது தாய் தந்தையர் அவரை ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று மன்றாடினர். அதன் பின்னர், தனிமையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெற்றோர் இல்லமே அவருக்கு பாதுகாப்பான இடம் என்பதை புரிய வைத்தார். அதன் பின்னரே சுனிதா தன் பெற்றோருடன் செல்ல சம்மதித்தார்.

நம்ம முற்போக்குவாதிகள் வயது வந்த பெண்ணுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கத் தெரியாதா என்று புத்திசாலித்தனமாக கேள்வி எழுப்புவார்கள். காதல் கண்ணை மறைக்கும்போது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியாது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
------------------




நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...