Sunday, July 30, 2017

காமராஜரின் ஆட்சி சிறந்த ஆட்சியா?

பொதுவாக காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்குச் செய்த சேவைகளில் பாராட்டத் தக்கவை. கல்விக் கூடங்களை பெருமளவில் துவங்கியது. இரண்டாவது பல அணைகளைக் கட்டியது.

அதேவேளையில் அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச் சாட்டு அண்டை மாநிலங்களிடம் எல்லையை இழந்தது. எல்லை மீட்பையே புறக்கணித்தது.

இருந்தாலும் காமராஜரின் ஆட்சியை இன்றளவும் பலரும் புகழ்ந்து கொண்டே வருகிறார்கள். இது ஒரு பொய்யான பிரச்சாரமே என்று கூறுவதே இந்த தகவலின் நோக்கம். சுதந்திரம் வரை அகிம்சையைப் போற்றி வந்த காங்கிரஸ் கட்சியினர் சுதந்திரத்திற்குப் பின்னர் துப்பாக்கியை பெரிதும் நம்பத் தொடங்கினார்கள்.

சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் தமிழகத்தில் 5 துப்பாக்கிச் சூடுகளை அரங்கேற்றினர். காமராஜர் ஆட்சியின்போது கீழத்தூவலில் நடத்திய துப்பாக்கிச் சூடும், அவரது ஆட்சிகாலத்திற்குப் பின் இந்திப் போராட்டத்தின் போது திருச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடும்தான் தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைய அடிப்படைக் காரணமாக அமைந்தன.

காமராஜரின் ஆட்சி நல்ல ஆட்சி என்று பேசுபவர்கள் துப்பாக்கி மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை பற்றி பேச மாட்டார்கள்.

இங்கே மற்றொரு பொய்யையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. காமராஜர் இறக்கும்போது அவர் பையில் இருந்தது 165 ரூபாய்தான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை மாறாக உள்ளது என்பதை தந்தியில் வெளியான இந்தச் செய்தி சொல்வதாக உள்ளது. அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை அவர் லட்சக்கணக்கான பணத்தை கையாண்டு வந்ததையே இந்தச் செய்தி கூறுகிறது.

காமராஜர் இறக்கும் வரை திடகாத்திரமாகவே இருந்து வந்தார். நோய்வாய்ப்படவில்லை. திமுகவின் ஆதரவை பெற்றவராக இருந்த அவரை இந்திரா காந்தி கைது செய்ய முயன்றதாகவும், இனிமேல் தங்களால் பாதுகாக்க முடியாது என்று திமுக கைவிரித்து விட்டதாகவும், கடைசி காலத்தில் கைதாகி அவமானப்பட வேண்டாம் என்று முடிவு செய்ததால் காமராஜர் தற்கொலை செய்து கொண்டார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மேற்படி செய்தியில் கூறப்படும் தகவலும் அவர் தனது இறப்பை முன்கூட்டியே திட்டமிட்டாரோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.

மறைந்து விட்ட அவரை அவமதிப்பது நமது நோக்கமல்ல. ஆனால் காமராஜர் ஆட்சி சிறந்த ஆட்சி என்ற பொய் பிரச்சாரத்தை முறியடிப்பதே நமது நோக்கம். நிச்சயமாக இன்றைய அரசியலுடன் ஒப்பிட்டால் அவரது ஆட்சி சிறப்பானதாகவே இருக்கும். ஆனால் அன்றைய சூழலில் அவரது ஆட்சி ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருக்கவில்லை. அதனால்தான் அவரை தமிழக மக்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளனர்.

காமராஜர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த 1946-ம் ஆண்டு முதலே காங்கிரஸ் தமிழத்தில் வீழ்ச்சியை சந்தித்தே வந்திருக்கிறது என்பதை இணைப்பில் உள்ள தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

(பொறுப்புத் துறப்பு - இந்தப் பதிவை யாராவது நாடார்களுக்கு எதிரான பதிவாக கருதினால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.)

இந்த இடத்தில் தமிழர்கள் மீதும் தமிழ் மண் மீதும் ஒப்பற்ற பற்று வைத்திருந்த நாடார்களையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவர்கள் ம.பொ.சிவஞானம் கிராமணியார், சங்கரலிங்கம் நாடார், மார்சல் ஏ. நேசமணி. அவர்களைப் பற்றிய இணைப்பு கீழே.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE._%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D



https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF

https://en.wikipedia.org/wiki/Madras_Presidency_Legislative_Assembly_election,_1946
https://en.wikipedia.org/wiki/Madras_Legislative_Assembly_election,_1952
https://en.wikipedia.org/wiki/Madras_Legislative_Assembly_election,_1957
https://en.wikipedia.org/wiki/Madras_Legislative_Assembly_election,_1962
https://en.wikipedia.org/wiki/Madras_Legislative_Assembly_election,_1967

Friday, July 14, 2017

தமிழ் பேசும் காந்தியின் பேரன்



இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தன் பலத்தை இழந்து நிற்கும் நிலையில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. "காந்தியின் பேரன் என்ற காரணத்தால் எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்" என்று அவர் தமிழில் பேட்டியளித்துள்ளார்.

காந்தி தமிழில் கையொப்பமிட்டார், தமிழக விவசாயிகளைப் பார்த்து தனது ஆடைகளை துறந்தார் என்பதையெல்லாம் கேள்விப் பட்டிருந்தாலும் கூட காந்தியின் பேரன் தமிழில் பேசுவது இன்றைய தலைமுறையினரில் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.

ஆனால் அவரது தாய் வழி தாத்தா இன்னாரென்று சொன்னால் இந்த ஆச்சரியம் மறைந்து விடும். ஆமாம் அவரது தாத்தா புதிய (குலக்) கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து பதவி துறந்த முன்னாள் முதல்வரான ராஜாஜியே ஆவார்.

ராஜாஜி காந்தியின் சம்பந்தி என்பதை முதலில் படிக்கும்போது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காந்தியின் மகன் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்குப் பிறந்தவர்தான் இந்த கோபால கிருஷ்ண காந்தி.

ராஜாஜி காந்தியின் சம்பந்தியாக இருந்த காரணத்தால் காந்தி, ராஜாஜிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்கு இருக்க வேண்டும் என்று விரும்பியதையும் வரலாறு காட்டுகின்றன. ராஜாஜி தலைமை பதவிக்கு வர காமராஜர் இடையூறாக இருப்பார் என்ற காரணத்தால்தான் காந்தி, தமிழக காங்கிரஸில் ஒரு  ‘க்ளிக்’ இருப்பதாக என்று காமராஜரை அவமதிக்கும் வகையில் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காந்தி அவரைக் காண வந்த மக்கள் கூட்டம், தன்னை மட்டும் பார்க்க வரவில்லை, ராஜாஜியையும் பார்க்கவே வந்திருந்தனர் என்று கூறினார்.

1942-ம் ஆண்டு பம்பாய் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அந்த மாநாட்டில், ராஜாஜி அந்தத் தீர்மானம் சிறுபிள்ளைத் தனமானது என்று பேசிவிட்டு வெளியேறினார்.

காங்கிரஸின் தீர்மானத்தைத் தொடர்ந்து வெள்ளை அரசாங்கம் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்துகொண்டு ஆகஸ்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிகள், ரவுடிகள் என்று பேசி வந்தார். 1942-ல் காங்கிரஸை விட்டு விலகிச் சென்றிருந்த ராஜாஜி 1945-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸூக்குள் நுழைய எண்ணி, திருச்செங்கோட்டிலிருந்து மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக (பி.சி.சி) தேர்ந்தெடுக்கச் செய்தார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராஜர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் ராஜாஜி மாகாண காங்கிரஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட காரணத்தால்திருச்செங்கோடு தேர்தல் செல்லாதுஎன்று அறிக்கை வெளியிட்டார். ராஜாஜி கட்சிக்குள் நுழைந்து விட்டால் கட்சித் தலைமையை கைப்பற்றிவிடலாம். எனவே ராஜாஜியின் மீதாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஒரு ஊழியர் மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால் ராஜாஜி காந்தியின் சம்பந்தியாக உள்ள நிலையில் அவரை எதிர்த்து யார் அந்த மாநாட்டை நடத்துவது? அந்த நிலையில்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அந்த மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். அங்கு ராஜாஜிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த மாநாட்டின்போதும் காந்தி ஒரு கடிதத்தை அனுப்பி, அன்றைய சூழலில் ராஜாஜியின் சேவை நாட்டிற்குத் தேவை, தமிழக காங்கிரஸ்காரர்கள் அவரை ஒதுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது மேடையிலிருந்த தேவர், "காந்திக்கும் ராஜாஜிக்கும் உள்ள வேறுபாடு வெண்ணைக்கும் சுன்னாம்புக்கும் உள்ள வேறுபாடு என்பதை காந்தியே தெளிவுபடுத்தியுள்ளார், " என்பதை சுட்டிக் காட்டினார். இவ்வாறு, காமராஜின் காங்கிரஸ் தலைமைப் பதவி காப்பாற்றப்பட்டது. இவ்வாறு இந்திய வரலாற்று ராஜதந்திரங்கள் இன்றும் தொடர்வதையே கோபால கிருஷ்ண காந்தி காட்டுகிறார்.

இதை இப்போது சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? காந்தி ஒரு குஜராத்தியாக இருந்த போதிலும் தனது மகனுக்கு தமிழ் பேசும் ராஜாஜியின் மகளை மணமுடித்து வைத்ததால் இன்று காந்தியின் பேரனும் தமிழ் பேசக் கூடியவராக இருக்கிறார்.

ஒரு தந்தை தமிழராக இருந்து தாயின் மொழி வேறு ஒன்றாக இருக்கும்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை தாயின் மொழியைப் பேசக் கூடியதாக இருக்கும். அந்த மொழி இன ரீதியாக தமிழருக்கு எதிரானதாக இருந்தாலும் கூட அந்தக் குழந்தை அதை முற்றிலுமாக எதிர்க்காது. அதுபோன்ற குழந்தை அரசியலுக்கு வரும்போது இன நலனை விட்டுக் கொடுப்பதாக அமையும்.

இப்போது காந்தியின் பேரன் தன்னை ராஜாஜியின் பேரன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஏனெனில் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்து தமிழக மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்தவர்.

அதேபோல தன்னை தமிழர் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது, குஜராத்தி என்றும் சொல்லிக் கொள்ள முடியாது. அதனால் அவர் ஒரு பொதுவான பெயரை பெற விரும்புவார். அதுவே இந்தியர்.

அதுபோலவே தமிழருக்கும் தெலுங்கருக்கும் பிறக்கும் குழந்தை தன்னை தெலுங்கர் என்றோ, தமிழர் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. அதனால் அது தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்தும்.

தமிழினத்திற்காக முட்டி உயர்த்தி, நரம்புகள் புடைக்க வீர உரையாற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி தெலுங்குத் தாயால் பெற்று வளர்க்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அவர் தன்னை திராவிடர் என்றே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். 

கிறிஸ்தவராக உள்ள சீமான் (சைமன்) தன்னை கிறிஸ்தவர் என்றும் சொல்லிக்கொள்ள முடியாதுஇந்துக்களை முழுமையாக எதிர்க்கவும் முடியாது. எனவே இவர் தன்னை பொதுவானவராக காட்டிக் கொள்ள முயற்சிப்பார்.

வேறு என்ன நான் சொல்ல?

Wednesday, July 12, 2017

தமிழ்த் தேசியத்தில் முஸ்லீம்கள்

ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் சொல்கிறார்...


நீங்கள் சாதி, இனம் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் திராவிடர்களைப் போலவே முஸ்லீகளை தூக்கிப் பிடிக்கிறீர்கள்...

- முஸ்லீம்களை தூக்கிப் பிடித்து அரசியல் செய்தது காந்தி கும்பல். அதன் வழியேதான் அனைத்து முற்போக்குவாதிகளும் அவர்களை தூக்கிப் பிடித்து அரசியல் செய்தனர். இதில் திராவிடர்களும் அடங்குவர்.

பெரும்பான்மை இந்துக்கள் இந்தப் போக்கை வெறுத்தனர். அந்த உணர்வை பயன்படுத்தியதுதான் பாஜக. காங்கிரஸின் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. எனவே அது தான் உண்மையிலேயே இந்துக்களுக்கு செய்யக் கூடிய கட்சி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மக்கள் அப்படி  சிந்திக்கத் துவங்கிவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்த பாஜக இஸ்லாமியர்களை ஒடுக்குவதன் மூலம் இந்துக்களை திருப்திப் படுத்தும் ஒரு வேலையைச் செய்து வருகிறது.

உண்மையில் பாஜக இந்துக்களின் ஆதரவை தொடர்ந்து பெற வேண்டுமானால் அது உண்மையிலேயே இந்துக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிவார்கள்.

மற்றபடி தமிழ்த் தேசியத்தைப் பொறுத்த வரை அது தமிழகத்தில் வசிக்கும் அத்தனை சாதி, இன, மத பிரிவுகளை அங்கீகரித்து அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழ்த் தேசியம் எந்த மதத்தையும் தூக்கியும் பிடிக்காது, இறக்கியும் பிடிக்காது. மதத்தின் பெயரால் யார் என்ன தவறு செய்தாலும் கண்டிக்கும். தக்க நடவடிக்கை எடுக்கும்.

தமிழகத்தில் வாழும் முஸ்லீம்கள் ஒரு காலத்தில் தமிழ்ச் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களே. எனவே அது இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்ற அந்த தமிழர்களின் உணர்வை மதிக்கிறது. அதற்காக அவர்களைத் தூக்கிப் பிடிக்காது. தீவிரவாதத்தில் முஸ்லீம்கள் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அது அரசுத் துறைகள் மூலமாக தக்க நடவடிக்கை எடுக்கும். ஒரு முஸ்லீம் அவர் முஸ்லீமாக இருக்கிற காரணத்திற்காகவே அவர் மீது எந்தவித வெறுப்பை வளர்க்கவோ, ஒடுக்கவோ, துன்புறுத்தவோ செய்யாது.

காங்கிரஸ்காரர்கள், திராவிடர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம்களை தூக்கிப் பிடித்தார்கள். தமிழ்த் தேசியவாதிகள், முஸ்லீம்கள் தமிழர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்களுக்கான பாதுகாப்பையும், மத, அரசியல் உரிமைகளையும் பாதுகாக்கவே விளைவார்கள்.

ஆர்எஸ்எஸ் - இந்து மத வெறியர்களுக்கு சில கேள்விகள்....



1. நீங்கள் முஸ்லீம்களின் மீது வெறுப்பை உமிழ்வது புரிகிறது. அதற்கு காரணம் முஸ்லீம் தீவிரவாதிகள். தீவிரவாதிகள் செய்யும் செயல்களுக்கு எல்லா முஸ்லீம்களும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறீர்களா?

2.  கடந்த காலங்களில் ஆட்சியாளர்களாக இருந்த முஸ்லீம்கள் பல வரலாற்றுப் பிழைகளைச் செய்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் தற்போதுள்ள முஸ்லீம்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறீர்களா?

3. மேற்படி இரண்டுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் முஸ்லீம்களை என்ன செய்வீர்கள்? மேற்படி முஸ்லீம்கள் அனைவரையும் இந்து மதத்திற்கு மறுமதமாற்றம் செய்வீர்களா? அந்த மறுமதமாற்றத்திற்கு அவர்கள் சம்மதிக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? மறுமதமாற்றத்திற்குப் பின்னரும் அவர்கள் தொடர்ந்து முஸ்லீம்களாகவே இருந்தால் என்ன செய்வீர்கள்?

4. அல்லது ஒட்டுமொத்தமாக கொன்று குவிப்பீர்களா? அல்லது நாடு கடுத்துவீர்களா? அல்லது அவர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுப்பீர்களா?

5. இப்படி முஸ்லீம்களை ஒருவழி செய்த பின்னர் இந்தியாவில் வாழும் மற்ற சிறுபான்மை மதத்தவரான கிறிஸ்தவர், சமணர், சீக்கியர், பௌத்தர்களை என்ன செய்வீர்கள்? அவர்களுக்கும் மேற்படி வழிமுறைகளைப் பின்பற்றுவீர்களா?

6. தற்போது இந்துக்களாக இருக்கிற பல்வேறு சாதிகளை சேர்ந்த மக்களை என்ன செய்வீர்கள்? (ஏனெனில் நீங்களும் கடவுள் மறுப்பாளர்களான திராவிடர்கள் போலவே சாதிகள் இல்லையென்று பிதற்றத் துவங்கியுள்ளீர்கள்.) அவர்கள் அனைவரையும் கட்டாயமாக தங்கள் சாதி அடையாளங்களை விட்டு விட்டு இந்து என்று மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பீர்களா?

7. இந்துக்கள் சைவம், வைணவம், சாக்கியம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்ற பிரிவுகளை தற்போதும் பின்பற்றி வருவதோடு, எண்ணற்ற சிறு கடவுள் வழிபாடுகளை செய்து வருகிறார்கள். அவர்களை என்ன செய்வீர்கள்?

8. எந்த மதமும் வழங்காத ஆகப் பெரும் சுதந்திரமானஆலயத்திற்கு வரவும் தேவையில்லை, கடவுளை வழிபடவும் தேவையில்லைஎன்ற சுதந்திரம் இந்து மதத்தைப் பின்பற்றுவோருக்கு உண்டு. அந்த சுதந்திரத்தை வழங்குவீர்களா? மாட்டீர்களா?

9. இந்து மதத்தைப் பிற்றுவோர் அனைவரும்நாட்டு தற்தொண்டு” (ராஷ்டிர ஸ்வயம் சேவக்) இயக்கத்தில் சேரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா? அந்த இயக்கத்தில் சேர விரும்பாத இந்துக்களை என்ன செய்வீர்கள்? பாரதிய ஜனதா கட்சி போன்ற வேறொரு இந்து மக்களுக்கான கட்சிகள் செயல்பட அனுமதிப்பீர்களா? அதற்கும் ஒத்துழைப்பீர்களா? பாரதிய ஜனதா கட்சிக்கும் அது போன்ற ஒரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? எந்தக் கட்சிக்கு ஒத்துழைப்பீர்கள்?

10. இந்து மதமும் இந்திய இறையாண்மை அதிகாரமும் இணைந்தே இருக்க வேண்டும் என்பீர்களா? இல்லை மதம் வேறாகவும் இறையாண்மை அதிகாரமும் வேறு வேறாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?


(பின் குறிப்பு, இப்படியெல்லாம் கேள்வியெழுப்பும் என்னை ஒரு இந்து என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஏனெனில் இந்து மக்களுக்கான ஏகபோக குத்தகை உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் பதில் சொன்னால் மேலும் கேள்விகள் தொடரும்.)

Tuesday, July 11, 2017

நேதாஜியின் போர் அறிவிப்பு



அப்போது இந்திய நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். பல முக்கியத் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில், காங்கிரஸ் பேரியக்கத்தில் ஒருசேர நின்று, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெங்கொடுமைச் சிறைக் கோட்டங்களையும், வேறு பல இன்னல்களையும் அனுபவித்து வந்த சமயம். சுதந்திரப் போருக்கு நாட்டு மக்களைத் தட்டி எழுப்பித் தயாராக்கியதில் இந்திய நாட்டின் வடபுலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கும், தென்புலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதை இந்திய சுதந்திர வரலாற்றைப் புரிந்தோர் எவரும் மறந்திடவோ, மறைத்திடவோ இயலாது.

அத்தகைய வங்கம் தந்த சிங்கம் நேதாஜி அவர்கள், மதுரையம்பதிக்கு ஒரு பொதுக் கூட்டத்தில் பேச வருகிறார். அந்தக் கூட்டத்தில் தமிழகம் தந்த தங்கம் பசும்பொன் தேவர் அவர்களும் கலந்துகொள்கிறார்கள் என பலத்த விரம்பரங்கள் செய்யப்ப்ட்டிருந்தன. ஆக மதுரைப் பகுதியே, இது ஒரு சித்திரைத் திருவிழாவோ? என வியக்கும் அளவுக்கு விழாக்கோலம் பூண்டிருந்த்தது.

எங்கள் நாடகக் குழுவில் அன்று நாடகம் இல்லை. விடுமுறை நாள். மதுரையில் அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்த எனது ஒன்றுவிட்ட மாமனார் சந்தனக் காளைத் தேவர் என்பவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். “இன்றுதான் நாடகம் இல்லையே? எனது வீட்டுக்கு வந்துவிட்டு நாளைக்குத் திரும்பி வந்துவிடலாமேஎன்றார். அதனால் நாடக்க் குழு அதிபர் டி.கே.எஸ். அவர்களிடம் எடுத்துக் கூறி விடுமுறை பெற்று வெளியே வந்தோம்.

உண்மையில், என்னைச் சந்திக்க வந்த என் மாமாவைப் பயன்பயடுத்தி, அன்றைய தினம் நடக்க இருக்கும் பொதுக் கூட்டத்திற்குப் போய் எப்படியாவது நேதாஜி அவர்களையும், பசும்பொன் தேவர் அவர்களையும் நேரில் பார்த்து அவர்களின் மேடைப் பேச்சைக் கேட்டிட வேண்டும் என்ற அளவு கடந்த ஆசைதான் - இந்தத் திட்டம். எனது திட்டம் நிறைவேறியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் மாமா துணையோடு மேடைக்கு மிக அருகில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன்.

மக்களின் கரவொலியும் வாழ்த்தொலியும் சேர்த்து முழக்கமிட்ட. பசும்பொன் தேவர் அவர்கள், சிங்கம் போல மேடை ஏறி, நேதாஜி அவர்களை வரவேற்றார். நேதாஜி அமைதியாக மக்களுக்கு வணக்கம் செய்து அமர்கிறார்.

பசும்பொன் தேவர் கம்பீரக் குரலில் பேசத் துவங்கினார். “நமது தாய்த்திரு நாடாம், இந்தப் பாரதப் பூமியை அடிமைப்படுத்தியுள்ள வெள்ளைக்கார ஆதிகத்தை எதிர்த்து வீர சுதந்திரப் போராட்டம் நடந்து வருகிறது. இதை மட்டும் நினைவில் நிறுத்தி, உங்களது ஒவ்வொரு செயலும் அமைந்திட வேண்டும். இவ்வளவுதான் நான் இப்போது சொல்ல முடியும். இதற்கு மேல் நான் பேசக் கூடாது என எனது தலைவரின் விருப்பத்தை மதித்து, அடுத்து நமது தலைவர் நேதாஜி பேசுவார்எனச் சொல்லி அமர்ந்தார்.

பலத்த கரகோஷ முழக்கங்களுக்கு இடையே நேதாஜி அவர்கள் கம்பீரமாக எழுந்து நின்று பேசத் துவங்கினார்.
எனக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் இந்த வெள்ளைக்கார அரசாங்கம் போடவில்லை. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அந்தச் சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். தேவர் வாய் திறந்து பேசினால், அவரது சண்டமாருதக் குரல் ஒலித்தால் இந்த நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டு விடுவார்கள் என அஞ்சியே இந்தச் சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். ஆக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மேடைப் பேச்சுக்கே, பரங்கி வெள்ளையர் கூட்டம் எவ்வளவு பயந்து நடுங்குகிறது பார்த்தீர்களா?

சுதந்திரப் போராட்டம் வேகப்படுத்தப்பட இருக்கிறது. விடுதலைப் பெறப் போகிறது இந்தியா. அந்த வீர சுதந்திரத்திற்குக் காரணமாக இருந்தவர்களில் தியாக சீலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தன்னலமற்ற தியாகச் செயல்கள், இந்திய சுதந்திர வரலர்ற்றில் இடம்பெற்றே தீரும், அத்தகைய சிறப்பு மிக்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என் பக்கத்தில் இருக்கிறார்எனத் துவங்கி சுதந்திரப் போர் அறிவிப்புச் செய்தார் நேதாஜி. அந்தச் சிறு வயதில் என் நெஞ்சத்தில் பசுமையாக பதிந்து விட்ட நினைவுகள் இவை.

- நான் வந்த பாதை நூலில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.




நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...