Saturday, November 19, 2016

பிழை எதில்?


கருப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் நீங்கள் ஒரேடியாக மோடியை குறை கூறுகிறீர்கள் என்று ஒரு உறவினர் கேட்டார்.

இதுபோன்ற கேள்வியை கேட்பவர்களுக்கு....

கருப்புப் பணத்தை ஒழிப்பதை, கள்ளநோட்டை ஒழிப்பதை, தீவிரவாதிகள் அதுபோன்ற பணத்தை பயன்படுத்துவதை ஒழிப்பதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

நாம் குறை கூறுவதெல்லாம், இவர்கள் கையாளும் முறையைத்தான். முதலில் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். எத்தனை பெரிய மதிப்புக் கொண்ட பணம் வெளியிடப்படுகிறதோ, அத்தனை அளவு பொருட்களின் மதிப்பு உயரும். ஆக மொத்தத்தில் பண வீக்கம் ஏற்படும்.

உண்மையிலேயே இவர்கள் பொருளாதாரச் சீர்திருத்தம் கொண்டு வருபவர்களாக இருந்திருந்தால், 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த தோடு நிறுத்தி இருக்க வேண்டும். 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டதுமே உண்மையில் இவர்களின் நோக்கம் பொருளாதாரச் சீர்திருத்தம் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.

அடுத்த கட்டமாக, இவர்கள் இதனை ஏதோ அணு ஆயுதச் சோதனை நடத்தியதற்குச் சமமாக ரகசியமாக, சாமர்த்தியமாக செய்ததைப் போல பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் இவர்களின் செயல் முட்டாள்தனமானதாகும். இப்போது இவர்கள் செய்திருப்பது என்ன? பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டது, நடுத்தர, கீழ்த்தட்டு மக்களே. வங்கிகளில் கால் கடுக்க காத்திருந்து, மயங்கி விழுந்து, சிலர் செத்தும் போனார்கள். அதேவேளையில் கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் என்ன செய்திருப்பார்கள்? இதுவரை மாற்ற பணத்தை மாற்றி இருப்பார்கள். அவர்களிடம் மீதியுள்ள பணம் செல்லாத பணமாக ஆகிவிடும். அது மட்டுமே இவர்களின் திட்டத்திற்கு கிடைக்கும் பலனாகும்.

இதற்கு மாறாக அரசாங்கம் ஏன் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று பார்ப்போம். அரசாங்கத்தின் திட்டம் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களில் வெள்ளைப் பணத்தை வசூலித்து விட்டு கருப்புப் பணத்தை, கள்ள நோட்டுக்களை செல்லத்தகாததாக ஆக்க வேண்டும். இப்போது அரசின் இந்தத் திட்டம் யாருக்கும் தெரியாது. அரசாங்கம் முதலில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கத்தைப் பாதியாக குறைக்கிறது.
100 ரூபாய் நோட்டின் பயன்பாட்டை அதற்கு இணையாக பயன்படுத்துகிறது. பின்னர் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு இணையான அளவில் புதிய நோட்டுக்களை போதுமான அளவில் அச்சடித்து அனைத்து வங்கிகளுக்கும் கொடுத்து விடுகிறது.

இந்த நிலையில் திடீரென 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவித்து அதற்குள் இருக்கும் பழைய நோட்டுக்களை மற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கிறது. இவ்வாறு செய்திருந்தால் தற்போது மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தில் 25% பேரே சிரமப் பட்டிருப்பார்கள்.  அதுவும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே.

இப்போது அறிவிப்பு வந்து 10 நாட்கள் ஆகியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இன்னும் இது 40 நாட்களுக்கு நீடிக்க இருக்கிறது. ஆனால் நடப்பில் உள்ள முறையைவிட அதிக பலனை அடைந்திருக்க முடியும். மேற்படி முறையில் தீவிரவாதிகள் பணத்தைப் பயன்படுத்துவது, கள்ள நோட்டுக்கள் அச்சிடப்படுவதை தடுப்பது அடங்காது. அதெற்கெல்லாம் வேறு திட்டங்கள் வேண்டும்.

தேசபக்தி மயக்கத்தில் இருப்பவர்களால் இதை ஏற்க முடியாது என்பது எனக்கு நன்றாகவே  தெரியும்.





Wednesday, November 9, 2016

ராஜராஜ சோழன் யார்?


  

ராஜராஜ சோழன் யார்
 என்ற சர்ச்கைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த கட்டுரை.

சோழர்களை சொந்த கொண்டாட மிக அழகாய் சில ஆதரங்களை திரட்டி வன்னியர்களும்
 ,
இன்னும் சில
 சாதிகளும் ( கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமா என்ன? )
போராடிக் கொண்டிருக்கும் இணைய உலகிற்க்கு இக் கட்டுரை
 ஓர் முற்றுப்புள்ளி.

பொதுவாய் இ(அ)வர்கள் சொந்தம் கொண்டாடுவது இராஜ இராஜனையும் தஞ்சை
பெருஉடையார்
 கோவிலையும் தமிழின் மற்றும் தமிழனின் தலையாக/ முதல்
குடும்பமாக காட்டிக் கொள்ள மட்டுமே
(!) என்பது வேதனை அல்லவா ?

ராஜ ராஜ சோழன் இவர்தான் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் என்பதை
அறிவித்தவர்கள் ஆங்கிலேயர்கள் ஆவர். அதற்கு முன் எங்கு போனார்கள் இந்த சாதிக் கூட்டம் ?நம் ராஜ ராஜனை தூக்கி தலையில் வைத்து கொள்ளாது ஏன்?

சரி போகட்டும் வரலாற்றில் எத்துனை ராஜ ராஜ சோழர்கள் உண்டு என்பதாவது அந்த
இன்டெர்னேட் எழுத்தாளர்களுக்கு தெரியுமோ
 ? சரி அதுவும் பரவாயில்லை.

தஞ்சை மற்றும் சுற்றம் எத்தனை கள்ளர் நாடுகள் உள்ளன அறிவாரோ
? சரி அதுவும் பரவாயில்லை. கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல ஆயிரம் ஆயிரம் அந்தணர்களுக்கு எத்துனை காவிரி கரை கிராமங்கள் தானமாக வழங்கபட்டன அறிவாரோ ?

அப்படி வழங்கபட்ட கிராமங்கள் எல்லாம் காவிரி மற்றும் துணை ஆறுகளின்
கிழக்கின் கரையிலேயே அமைந்தவை என்பது அவர்தான் அறிவாரோ
?
அப்படி பெறப்பட்ட நிலங்களை உழுதவர் யார்
 ? விளைத்தவர் யார் ? தொண்டை
மண்டலத்திலிருந்து குடியேறியவர் யார்
 ? சரி போகட்டும்.

கள்ளர் குல பட்டங்கள் நூறாண்டு நூறாண்டு கடந்து இன்றும் வழங்கி வருகிறோமேநீவிர் அங்ஙனம் கொளவதுண்டோ
 பின் எதற்கு இந்த விளம்பர பேராசை?

குல பட்டங்கள் முக்குலத்து உறவுகள் எங்கிருந்தாலும் வழி வழியாய் பாட்டன்
கொடுத்தது. நாங்கள் அதை வழங்கி வர நீங்கள் எப்படி தகுதியாவீர்கள்
 ? சரி கள்ளரில் ‘வன்னியர்’ என்ற பட்ட பெயருண்டு. ‘உடையார்’ என்ற பட்ட பெயருமுண்டு.

இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்.
உங்களை உசுப் பேற்றும் வேலையில்லாத வெட்டி ஆராய்ச்சியாளர்கள்தான்
வாழ்வதற்கு காசு பெற எதையாவது சொல்லி வைப்பார்கள். கேட்டுக் கொண்டு
எல்லாரும் ஆடுகிறார்களே
 ? எல்லாம் போகட்டும்.

சிதம்பரம் ஒரு அழகு கோவில் அநாகரீகமானது அறிவீரா
 ? தில்லை வாழ் பிராமணர்
செய்த தவறினை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் நாங்கள் அறுவைடை செய்து
கொண்டு இருக்கிறோம் தெரியுமா ?

ராஜ ராஜனின் தமையன் ஆதித்த கரிகாலன்காஞ்சியில் போர் படையில் துர்மரணம்
நிகழ ( அல்லது பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட ) அதற்கு காரணம்
தில்லை வாழ் பிராமணர் சிலர் என்று அறிய அத்துனை தில்லை வாழ் பிராமணரும்
நாடு கடத்தப்பட்டனர். இது இராஜ இராஜனின் மெய் கீர்த்தி சொல்லும் செய்தி.
(
சூத்திரன் தவறு செய்தால் மரண தண்டனை / பிராமணன் தவறு செய்தால் நாடு
கடத்துதுதல் தண்டனை).

அந்த நிமிடத்திலிருந்து சிதம்பரத்திற்க்கும் பொன்னம்பலத்திற்கும் ராஜ
ராஜனுக்குமான தொடர்பு மிக தூரமாகியது . சோழர்களும் அதன் பின்னால்
தில்லை வாழ் பிராமணர் அவ்ர்களால் முடிசூடப்படவில்லை.

நம்பியாண்டார் நம்பிகளுடன் தேவரத்திற்க்காக சிதம்பரம் பொன்னம்பலத்தில்
நுழைந்த போது தில்லை வாழ் பிராமணர் உறவு முற்றிலும் சரிந்த்து. (அருண்மொழி என்கிற ராஜ ராஜ சோழன்தேவராத்தினை கைப்பற்ற போராடிய போரட்டம் சொல்லி மாளாதுஅத்தனை சிரமங்களுக்கு அப்பாற் பட்டே அதனை மீடக முடிந்தது எனில் சிதம்பர சூழ்ச்சி எங்ஙனம் என்று யோசியுங்கள். இதை சிவாஜி நடித்த இராஜ இராஜன் என்ற படத்தில் ஆவணமாகவே காணலாம்)

பின்னர் சோழ குலம் லேசாய் மங்கியதும் சிதம்பரமும் தில்லை வாழ் பிராமணரும்

சேர்ந்து புதுமையான சோழர்களை கண்டது 15 ஆம் நூற்றாண்டில் தான் . ஆம்.
என்ன செய்ய காலம் அவர்களுக்கும் அவகாசம் தந்தே இருந்தது. (பூனைகளுக்கான
காலம் என கொள்க). அந்த சோழர்களை அவர்களே உருவாக்கி அவர்களே பட்டம் சூட்டி
அவ்ர்களே நிலங்கள் நிவந்தங்களாக பெற்றதும் உண்டு.

இவையாவும் 15 ஆம் நூற்றாண்டுக்கு பின். முகலாயர்கள் தமிழ்கத்தினை துடைத்து விட்டு
போனதற்கு பின் யார் தமிழகத்தினை ஆள்கிறார்கள் என தெரியாது இருந்து போது ஒரு அரை
நூற்றாண்டில் நடந்த கூத்து அது.

சரி நாம் ராஜ ராஜனுக்கு வருவோம்.
இது இப்படியிருக்க அருண் மொழியின் (ராஜ ராஜன்) தந்தை பாட்டன் கொஞ்சம்
பார்க்க வேண்டியதும் முக்கியம் அல்லவா
 ? அருண் மொழியின் முப்பாட்டன் விஜயாலய சோழன் பாண்டிய பெரும் போரில் பல்லவர்களுடன் இணைந்து கண்ட வெற்றி மீண்டும் சோழ குலத்தினை துளிர்க்கச் செய்தது.

சரி அதற்கு முன் சோழம் எவ்வாறு இருந்தது அறிவாரோ
 அவர்தாயாதி பங்காளிச் சண்டை உறையூருக்கும் பழையாறைக்கும் இடையே நடந்தே வந்தது. ஆம். உறையூரை ஆண்ட சோழர்கட்கும் ( கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான் குலத்திற்கும் ) குடந்தை எனும் பழையாறை சோழர்களான சேம்பிய குடி சோழர்களுக்கும் படை நடத்தி அவர்களுக்குள்ளேயே அழித்துக் கொண்ட வரலாறும் உண்டு. சரி… சேம்பிய குடி எனில் மனு நீதி சோழன் வம்சம். அதுவாவது அறிவாரோ ?

இவர்கள் சண்டையில் கோலோச்சியதும் சோழத்தினை அடிமை படுத்தியதும்
பல்லவர்களும் பாண்டியர்களுமே !!!
 ? பங்காளிகள் சண்டையிட்டால்… யாருக்கு லாபம். ( பல்லவர்க்கும் /பாண்டியர்க்கும் தானே?) ஏனேனில் சோழ நாடு சோறுடைத்து. சோழ நாடு அடிமை பட்டது எனில் அவர்களுக்கு சோற்றுப் பிரச்சினை இல்லை. இதைத்தான் சரி செய்தார் ராஜ ராஜனின் தந்தை சுந்தர சோழர் எனும் பரந்தக சக்ரவர்த்தி.

ஆம் தஞ்சையை தலைநகராக்கினார். அதுவரை சோழர்களின் தலை நகரம்.
ஒன்று : உறையூர் மற்றோன்று : பழையாறை எனும் குடந்தை.
ஆக சோழர்களின் தலைநகரம் தஞ்சை ஆனது எட்டாம் நூற்றாண்டின் இறுதி என கொள்க.

இன்றும் திருச்சி சங்கிலிஆண்டபுரம் போன்ற நிறைய பகுதிகள் சோழ பூர்வ
குடிகளான கள்ளர்களே நிறைந்திருப்பதை காண முடியும். அவர்களோடு மண பந்தம்
கொண்ட கொடும்பாளூர் கூட்டமும் காண இயலும்.
 சரி… அப்படியானால் குடந்தை சோழர்கள் யார்?

திருவையாறு பகுதிகளில் பெண் கொண்டு புதுக்கோட்டை தொண்டைமான்களோடு உறவு
கொண்டு ஸ்திரமாக வாழ்ந்தவர்கள் இவர்கள். இவர்களில் புற நானுற்றில் பாடப்பெறும் கோப்பெரும்ஞ் சோழனும் ஒருவர். அவரை பாண்டியப் படை கொண்ட இடம் கோவில்வெண்ணி / கூடவே வடக்கிருந்து உயிர் நீத்த அரும் புலவர் பிசிராந்தையார் ஆவார். புற நானுறு காட்டும் அழகு வரலாறு சொல்லும் இடம்அவர் போரிட்ட இடம் வாழ்ந்த இடம் அனைத்தும் கள்ளர்களுக்கு உரியவை. இன்றைய அம்மாபேட்டை -வடுவூருக்கும் நீடாமங்கலத்திற்க்கும் இடைப்பட்ட ஊர் அது.

சரி
… இதெல்லாம் இருக்க படையாட்சி என கூறப்படும் வன்னியர்கள் சோழனை
சொந்தம் கொள்ளல் சரிதானா
 ? சோழனையே சொந்தம் கொள்ள முடியாதவர்கள் ராஜ ராஜனை எங்கள் அருண் மொழியை சொந்தம் கொள்ளல் தவறேதான் இல்லையா ?

தஞ்சையை சுற்றி உள்ள கள்ளர் நாடுகள் சிலவை

இவை தஞ்சை
 – குடந்தைபட்டுகோட்டை, மன்னை , கல்லணை வழித்தடங்களில் உள்ள
சில ஊர்களின் பெயர்கள்: மட்டும் கொடுத்துள்ளேன் அதுவும் பழைய நாட்டு
பெயர்களுடன்.

1. காசா நாடு தெக்கூர் கோயிலூர்
2. கீழ்வேங்கை நாடு உழுவூர் பருதியப்பர் கோயில்
3. கேனூர் நாடு தெக்கூர் கோட்டைத் தெருவு
4. பின்னையூர் நாடு பின்னையூர் பின்னையூர்
5. தென்னம நாடு தென்னம நாடு ......
6. கன்னந்தங்குடி நாடு மேலையூர் ......
7. உரத்தநாடு புதுவூர் கோயிலூர்
8. ஒக்கூர் நாடு மேலையூர் ......
9, கீழ் ஒக்கூர் கீழையூர் ......
10. திருமங்கலக் கோட்டை நாடு மேலையூர் ......
11. தென்பத்து நாடு பேரையூர் அப்பராம் பேட்டை
12. ராஜ வளநாடு நடுவாக்கோட்டை ......
13, பைங்கா நாடு பைங்கா நாடு ......
14. வடுகூர்நாடு தென்பாதி ......
15. கோயில்பத்து நாடு கம்பை நத்தம் கோயில்பத்து
16, சுந்தர நாடு வாளமரங் கோட்டை நாடு ......
17. குளநீள் வளநாடு துரையண்டார் கோட்டை தெற்குக்கோட்டை கடம்பர் கோயில்
சங்கரனார் கோயில்
18. பாப்பா நாடு தெற்குக்கோட்டை சங்கரனார் கோயில்
19. அம்பு நாடு: தெற்குத் தெரு வடக்குத் தெரு செங்குமேடு பன்னிரண்டான்
விடுதி அம்பு கோயில்
20. வாகரை நாடு குருங்குளம் ......
21. வடமலை நாடு பகட்டுவான் பட்டி .....
22. கொற்கை நாடு செங்கிபட்டி கூனம்பட்டி ......
23. ஏரிமங்கல நாடு ராயமுண்டான் பட்டி வெண்டையன் பட்டி
24. செங்கள நாடு விராலிப்பட்டி நொடியூர்
25, மேலைத்துவாகுடி நாடு சூரியூர் ....
26. மீசெங்கிளி நாடு ...... ......
27. தண்டுகமுண்ட நாடு ராயந்து£ர் சித்தர்குடி ......
28, அடைக்கலங்காத்த நாடு அள்ளூர் ......
29. பிரம்பை நாடு பிரம்பூர் ......
30. கண்டி வளநாடு நடுக்காவேரி ......
31, வல்ல நாடு இளங்காடு ......
32. தந்தி நாடு நத்தமாங்குடி ......
33. வாராப்பூர் நாடு பொன்னம் விடுதி ......
34. ஆலங்குடி நாடு ஆலங்குடி ......
35. வீரக்குடி நாடு வாண்டான் விடுதி திருமணஞ்சேரி
36. கானாடு திருவரங்குளம் ......
37. கோ நாடு ...... ......
38. பெருங்குளூர் நாடு பெருங்குளூர் ......
39. கார்யோக நாடு ...... ......
40. ஊமத்த நாடு சிங்கவனம் ......

எமது மக்கள் வாழும் பகுதிகள் கூட பெரும்பாலும் கோட்டை அல்லது நாடு என்றே
அழைக்கப்படும். சோழ மன்னர்களால் நன்கொடை கொடுக்கப்பட்ட கிராமங்கள் மங்கலம் என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டது எத்தனை பேர் அறிவீர். வேறென்ன சொல்ல
… யாரையும் காயப்படுத்தாது சொல்ல வேண்டுமெனில் இராஜ இராஜ சோழன் முக்குலத்து மன்னன்.

தொண்டை மண்டல அந்தண கூட்டத்தோடு வந்த குடியேறிய குடி அல்ல அவர்.
நாயக்க ஆட்சி காலத்தில் புதிதாய் பட்டம் பெற்ற கூட்டமும் அல்ல. அவர் எமது தொன்மை குடி.. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் எமது பட்டங்களையும் பழக்கங்களையும் விடாது பின் பற்றும் எமது குலம் அவர். தஞ்சையிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் காவிரியின் வலது பக்கம் முழுதும் முக்குலத்து கிராமங்களை இன்றும் காணலாம். (அதுவும் சதியோ விதியோ
தெரியாது. இடது பக்கம் (வடக்கு பக்கம்) முழுதும் கிட்ட தட்ட
அந்தணர்களுக்கு அதிகமாய் வழங்கபட்டுவிட்டது கொடுமையே.)

சாஸ்திர படி வடகிழக்கு அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது ஏனோ தெரியவில்லை
????
ஆதலால் அங்கு குடியேறிவர்க்கெல்லாம் / இந்த நூற்றாண்டில் இல்லை இல்லை
முப்பது நாற்பது வருடங்களில் லேசாய் வளம் பெற்றவர் எல்லாம் எம் குல மகனை
திருட முயற்சிக்கின்றனர்.

என் தாயை உன் தாய் என்று சொல். வழிமொழிகிறேன். என் தந்தையை உன் தந்தை எனில் நீயல்லவா வருத்தபடவேண்டும் என்பார் என் நண்பர். அவ்ர் சொல்வதல்லவா நினைவுக்கு வருகிறது. என்றேன்றும் அன்புடன்

பால.பாரதி


Thursday, October 20, 2016

பாகவதருக்காக மனம் மாறிய தேவர்

1957-ம் ஆண்டு கேரளாவின் நொச்சியூரில் சுவாமி சித்தானந்தர் ஆசிரமத்தில் ஒரு ஆன்மீக விழா நடந்தது. அங்கே விநாயகர் மற்றும் தெய்வங்களுக்குக் கோவில் இருந்தது. பித்துக்குளி முருகதாஸ், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றோர் கலந்துகொண்டனர். விழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவாற்ற தேவரும் அழைக்கப்பட்டார்.

முதல்நாள் தேவர் காரில் திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு பயணம் சென்றார். மறுநாள் இரவு ஒன்பது மணிக்கு அவர் 'பராசக்தி' பற்றி மூன்று மணிநேரம் சொற்பொழிவாற்றினார். பெண்கள் ஏராளமாக கலந்து கொண்டு அவரது பேச்சைக் கேட்டனர். அப்போது நாத்திக வாதங்களை சுக்குநூறாக உடைத்தார். அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் மதுரைக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்தார்.

மறுநாள் தேவர் புறப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் அவரைச் சந்திப்பதற்காக பாகவதர் அங்கே வந்தார். பாகவதருக்கு அப்போது கண் பார்வை இல்லை. அவர் தேவரை பார்க்க விரும்பினார். தேவரிடம் வந்து அவரை தொட்டுப் பார்த்தார்.

''தேவரய்யா தங்களை காணவேண்டும் என்று நான் பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் அது முடியவில்லை. எனக்குப் பார்வை இல்லாவிட்டாலும் தங்கைளைத் தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே என் பாக்கியம்தான். ஐயா, நான் முருகன் மீது ஒரு பாட்டுப் பாடுகிறேன். தாங்கள் அவசியம் எனது பாட்டைக் கேட்க வேண்டும்'' என்றார்.

''தேவரோ, நான் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பயண அவசரத்தில் தங்களது பாட்டை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன். வருத்தப்பட வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்துக் கொள்வோம்'' என்றார்.

பாகவதர் மிகவும் வருத்தப்பட்டார். ''பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு, நான் மறுத்த காலம் உண்டு. இப்போது நானே தங்களிடம் பாடுகிறேன் என்று வலியக் கேட்டுத் தாங்கள் மறுக்கிறீர்கள். இதுவும் என் காலக் கிரகம்தான்'' என்றார்.

தேவரின் மனம் மாறியது. ''ஊருக்குத் தாமதமாகப் போனாலும் பரவாயில்லை. நீங்கள் பாடுங்கள்'' என்றார்.

உடனே முருகா என பாடத் தொடங்கினார். தேவரும் பாகவதரின் பாட்டைக் கேட்டு ரசித்தார். பாகவதரும் பத்துப் பாடல்களைப் பாடினார். ரயில் நேரம் எல்லாம் தவறிவிட்டது. தேவரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

பாகவதரோ ''முருகன் மீது பாடினேன். அதுவும் நடமாடும் முருகன் முன்னாலேயே பாடினேன். என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது'' என்றார்.
-"பசும்பொன் சரித்திரம்" நூலிலிருந்து...

(எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி தெரியாத இளைஞர்களுக்கு, அவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு முந்தைய காலத்தில் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். அந்தக் காலத்தில் பாடத் தெரிந்தால்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். சிறந்த பாடகராக இருந்த பாகவதர் அக்கால சூப்பர் ஸ்டாராக இருந்தார். ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டதால் நடிப்பு ஆசையை இழந்து இறுதிக் காலங்களில் நோய் வாய்ப்பட்டவராக இறந்தார். கீழேயுள்ள இணைப்பில் பாகவதர் பற்றி அதிக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)

Friday, October 14, 2016

பாஜகவும் இந்து அமைப்புகளும் தேவரை தலைவராக ஏற்கத் தயாரா?


பாஜகவும் இந்து அமைப்புகளும் தேவரின் கொள்கைகளை பின்பற்றத் தயாரா?





பெரியார் சிலைகளை நீக்கிவிட்டு அங்கு பசும்பொன் தேவர் சிலைகளை வைக்கவேண்டும் என்று அர்ஜூன் சம்பத் பேசியதாகவும், அதுபற்றி எனது கருத்தை தெரிவிக்குமாறு ஒரு நண்பர் எழுதியிருந்தார். அவருக்கான பதிலே இந்த மடல்...

எதை தின்றால் பித்தம் குறையும் என்று அலைகிறார்கள் பாஜகவினரும் இந்து அமைப்புகளும். அதில் அர்ஜூன் சம்பத்தும் ஒரு ஆளாக இருப்பதில் வியப்பில்லை.
                                                                                       
இவரது பேச்சு, இன்றையத் தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவருக்கான தேவை அதிகரித்து வருவதையும், பெரியார் என்ற ராமசாமி நாயக்கர் தேவையற்ற நிலையை அடைந்து விட்டதையுமே காட்டுகிறது. ராமசாமி நாயக்கர் உயிர் வாழ்ந்த காலங்களிலேயே அவரது நாத்திக பிரச்சாரங்களை தவிடுபொடியாக்கியவர் தேவர். இந்த நாத்திகப் பிரச்சாரம் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பதை வலியுறுத்தியவர் தேவர். அது தமிழருக்கு அழிவாக முடிந்ததே கண்கூடு. "ரோஜா மலர் எப்படி இருக்கும் என்பது தெரியும். ஆனால் அதன் மணம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா? அது போன்றவரே கடவுள்" என்று கூறி நாயக்கரை திணறடித்தவர் தேவர். நாயக்காரால் தன் வாழ் நாள் முழுவதும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ள மறைபொருட்களை தேடிக் காண்பதே அறிவு. அவ்வாறு செய்யாமல் அவையெல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கித் தள்ளுவது பகுத்தறிவு ஆகாது என்று கண்டித்தவர் தேவர். இன்று பெரியார் முன்னெடுத்த அத்தனை கருத்துக்களுமே தமிழருக்கு விரோதமானவை என்பதை எல்லாரும் உணர்ந்து வருகிறார்கள். தமிழ் அறிஞர்கள் வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

தேவர் இந்து மதப் பற்றாளராக இருந்தாரே ஒழிய ஒரு காலத்திலும் இந்து வெறியர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. அதற்கு காரணம் அவர் ஒரு தமிழர் என்பதே. தமிழர்கள் எந்தக் காலத்திலும் மதச் சார்புள்ளவர்களாக இருந்ததில்லை. மதங்களுக்கு எதிரானவர்களாகவும் இருந்ததில்லை. அவர்கள் அறநெறியாளர்கள். அவர்களுக்கு நீதிதான் முக்கியம். மதம் முக்கியமல்ல. அறமா? மதமா? என்ற கேள்வி எழும்போது தமிழர்கள் மதத்தை தூக்கி எறிவார்கள். மதப் பாகுபாடு காட்டமாட்டார்கள். அதில் முக்குலத்தோர் முதலிடத்தில் இருப்பார்கள்.

அர்ஜூன் சம்பத் போன்றோருக்கு (பாஜக) ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூல ஆதாரம் எதுவென்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் மூலாதாரம் தமிழருக்கு விரோதமானது என்பது என் போன்ற, தேவரின் வார்த்தைகளை, கருத்துக்களை உள்வாங்கியவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தமிழர் விரோதி என்ற பெயரைச் சம்பாதிக்க காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளை எடுத்துக் கொண்டபோது பாஜக வெறும் 3 ஆண்டுகளில் அந்தப் பெயரை சம்பாதித்தது.

ஆனால் பாஜக தமிழகத்தின் அரசியல் மூலாதாரம் முக்குலத்தோர்தான் என்பதை மிகவும் தாமதமாக கண்டுபிடித்துள்ளது. அதனால்தான் தேவர் ஒரு இந்து மதவாவதி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனது. ஆனால் தேவர், சனாதனிகளுக்கு எதிரானவர் என்பதை வரலாறு சொல்கிறது.

இந்து அமைப்புகளில் பிராமணர் மட்டுமே கோலோச்ச முடியும், மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். (இங்கு பிராமணர் என்பது அந்த ஆதிக்க மனோநிலையில் உள்ள பிராமணரை மட்டுமே குறிக்கப்படுகிறது.) ஆனால் முக்குலத்தோர் எந்த காலத்திலும் யாருக்கும் அடிமையாக இருந்து பழக்கப்படாதவர்கள். அவர்கள் அன்புக்குக் கட்டுப்படுவார்கள். ஆனால் எதிரிகளையும் துரோகிகளையும் அரக்க குணத்தோடு எதிர்ப்பார்கள். தற்போது அவர்களிடையே, தங்களை "இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதா அல்லது தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதா" என்ற ஒரு மயக்க நிலை உள்ளது. அது மாறும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழர்களின் எதிர்கால அரசியல் முக்குலத்தோரின் கையில் உள்ளது.

முக்குலத்தோர் இந்து என்ற அடையாளத்தில் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மத விவகாரங்களில்  கண்மூடித்தனமாக செயல்பட மாட்டார்கள். அவர்கள், முன்னோர் வழிபாட்டை பின்பற்றக் கூடியவர்கள். குலங்களுக்கு, குல தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

தேவரைப் பற்றி பேசுவதற்கு முன் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவரது கொள்கை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேவர் "அர்ச்சகர்" யார்? "அந்தனர்" யார் என்று பிரித்துக் காட்டியவர்? வயிறு வளர்க்க அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் எல்லாரும் அந்தனர் ஆகிவிட முடியாது என்று சொன்னவர். சுப்பிரமணிய சாமி உட்பட இந்து அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து கோலோச்ச விரும்பும் பிராமண ஆசாமிகள் அனைவரும், குறைந்தபட்சம் இந்து மத விவகாரங்களில் தேவரின் கொள்கைகளை ஏற்று அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்களா? ஒரு தேவரை தங்கள் அமைப்புகளுக்கு தலைவராக்கி அவரின் கீழே செயல்படத் தயாராக இருப்பார்களா?

தேவர், இந்து மதத்தின் பெயரில் வயிறு வளர்க்கும் போலிச் சாமியார்கள், மடாலயங்களை கடுமையாகச் சாடியவர். அதையெல்லாம் இந்த இந்து மத ஆசாமிகள் ஏற்பார்களா? தேவர், வெள்ளையருக்கு எதிராக "தீவிரவாதத்தை" கொள்கையாகக் கொண்டாலும் உண்மையில் வள்ளலாரின் ஜீவகாருண்யத்தை பின்பற்றுபவராக வாழ்ந்தவர்.

* பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவர். நீங்கள் தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டவரா? காஷ்மீர் தீவிரவாதிகள், வடகிழக்கு மாநில தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஏற்கத் தயாரா? அவர்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

* நேதாஜி மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். குறிப்பாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். உங்களால் தமிழை ஆட்சி மொழியாக்க முடியுமா?

* தேவர், தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டவர். உங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளதா? ஒருபோதும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியுமா? ஒவ்வொரு முக்கிய பிரச்சனைக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?

* நேதாஜி உருவாக்கிய "பார்வர்டு பிளாக்" ஒரு இடதுசாரிக் கட்சி. அது ஏழைகளுக்கான, உழைப்பாளர்களுக்கான, சமுதாயத்தில் அடித்தட்டில் உள்ள மக்களுக்கான கட்சி. கார்பரேட்களுக்காக வேலை செய்யும் உங்கள் கட்சி (பிரதமர்)  எங்கே? தேவர் எங்கே?

* தேவர், நேதாஜியை தேசப் பிதாவாக ஏற்றவர். நீங்களும் அப்படி ஏற்கத் தயாரா?

* தேவர், மதங்களை சமமாகப் பார்த்தவர். நீங்கள் அப்படிப் பார்க்கத் தயாரா?

* தேவர், தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில், விசாரணை முடியும் வரை ஜாமீனில் வெளியே வராதவர். தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே சிறையிலிருந்து வெளி வருவதை வழக்கமாக கொண்டவர். உங்களால் அப்படி இருக்க முடியுமா?

* தேவர், தன் சொத்துக்களை மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தவர். உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், அரசியலில் ஈடுபட்டாலும் முழுச் சன்யாசியாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர். உங்களால் அப்படி வாழ முடியுமா?

* தேவர், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோதும் அதை ஏற்க மறுத்தவர்.  உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டபோது "பெற்ற தாய்க்கு உழைத்ததற்கு கூலி வாங்குவீர்களா" என்று சொல்லி தன் தொண்டர்களை கண்டித்தவர்.  உங்களால் அப்படிச் செய்ய முடியுமா?

* தேவர், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற கீழை நாடுகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுவே ஆசிய -ஆப்பிரிக்க நாடுகளுக்கு, இனங்களுக்கு நல்லது என்றார். அவர் எங்கே? ஆங்கில, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு வால்பிடிக்கும் நீங்கள் எங்கே?

* ஒரு அரசு அந்நிய நாட்டிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள ராணுவத்தையும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையையும் பயன்படுத்த வேண்டும், சொந்த மக்களை ஒடுக்க இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அதை நீங்கள் ஏற்பீர்களா?

* தேவர், இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லப்படுவதையே ஏற்றுக் கொள்ளவில்லை. பார்வர்டு பிளாக் கட்சி இன்னமும் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவதில்லை. இதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்களா? இரண்டாவது சுதந்திரத்தை அடைய, அளிக்க நீங்கள் தயாரா?

* உண்மையிலேயே உங்களுக்கு தேவர் மீது பற்று இருந்தால் வேறு எதையும் செய்ய வேண்டாம், தேவர் குருபூஜைக்கு விதிக்கப்படும் தடைகளை அகற்றிக்காட்ட முடியுமா, சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வீர்களா? (இந்த மடலை உங்களுக்காக எழுதவில்லை. உங்களையும் சுப்பிரமணிய சாமியையும் தலைவர்கள் என்று நம்பிக் கொண்டு திரியும் சில தேவர்மார்களுக்காக எழுதுகிறேன்)

இஸ்லாம் என்ற பெயரில் மூளைச் சலவைக்கு ஆளாகி ஒரு குற்றம் செய்யும் ஒருவரும், இந்து என்ற மூளைச் சலவைக்கு ஆளாகி வார்த்தைகளில் குற்றம் செய்து வரும் உங்களைப் போன்றவர்களும் ஒன்றே. காந்தியை ஒரு இஸ்லாமியர் கொன்று விட்டார் என்ற வதந்தியால் அப்பாவி முஸ்லீம்கள் தாக்கப்பட்டு விடக் கூடாது என்று பிரச்சாரம் செய்த அதே தேவர், இந்துப் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களை தண்டிக்கத் துணிந்தவர். எங்களுக்கு எல்லா மதங்களும் சமமே. மதம் என்பது அடையாளமே. இனம் என்பதே தலை. இந்துக்களாக இருப்போம். இந்துக்களுக்கு மரியாதை தருவோம். இஸ்லாமியராக இருப்பவரையும் அரவணைப்போம். அவர்களுக்கு மரியாதை தருவோம். உங்கள் மூளைச் சலவைகள் எங்களிடம் எடுபடாது.

தேவர் அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி, சித்தர், மகான். அவரது பெயரை (நான் உட்பட) எந்தவொரு தனிநபரோ, அமைப்போ, அரசியல் கட்சியோ தன் சுய லாபங்களுக்காக பயன்படுத்தினால், அந்த நபர், அந்த அமைப்பு அழிந்து போய்விடும் என்பது கண்கூடு. அர்ஜூன் சம்பத் எந்த மூலைக்கோ?
-----------------------------
இணைப்பில்...
ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும், பாஜகவையும் தேவர் ஆதரித்தாரா?


http://perumalthevan.blogspot.in/2016/10/blog-post_5.html

Wednesday, October 12, 2016

வடலூரில் நடந்த அதிசயம்



ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார். அவரது பேச்சை கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.

வழக்கம்போல வடலூரில் தேவர் பேசத் தொடங்கும் முன்பாக, முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.

"வடலூர் ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் ராமலிங்க அடிகளால் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடி இருக்கிறது. அதனை மடத்துக்கு தந்தால், அச்சில் ஏற்றி, நூல் வடிவாக எல்லாரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்" என்றும்,  "அடிகளாரின் உறவினரிடம் பலதடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" என்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் கூறினார்.

"அந்தச் சுவடியை வரவழைக்க வேண்டிய விதத்தில் வரவழைப்போம், நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஓபிஆரிடம் சொல்லிவிட்டு தேவர் பேசத் தொடங்கினார்.

ராமலிங்க அடிகளாரின் அருட்பா பற்றி ஒரு மணிநேரம் பேசி விட்டு, ராமலிங்க அடிகளாரின் உறவினர் பற்றி பேசினார். "ராமலிங்க அடிகளாரால் பாடப்பட்டு, இதுவரை அச்சுக்கு வராமல் உள்ள ஏட்டுச் சுவடியில் ஒன்பது பாடல்கள் இருப்பதாகவும், அந்தச் சுவடியை ராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவர் வைத்துக் கொண்டு மடத்துக்கு தர மறுப்பதாகவும் ஓபிஆர் அவர்கள் என்னிடத்தில் சொன்னார்.

அடிகளாரின் உறவினருக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாகச் சொல்கிறேன். அந்தச் சுவடியை மடத்துக்குத் தந்து மக்களுக்குப் பயன்படும்படி செய்யுங்கள். அல்லது தாங்களே அந்தச் சுவடியை நூலாக வெளியிடுங்கள். இரண்டையும் செய்யாமல் தாங்கள் பிடிவாதமாக இருப்பதால், அடிகளாரின் அந்த ஒன்பது பாடல்களும் உலகத்துக்குத் தெரியாமலேயே போய்விடும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

இதுவரை உலகத்திற்கு தெரியாமல் நீங்கள் ஒளித்து வைத்துள்ள அந்த ஒன்பது பாடல்களையும் அடியேன் பாடுகிறேன் கேளுங்கள்" என்று மடமடவென அந்த ஒன்பது பாடல்களையும் தன் வெங்கல நாதத்தில் பாடி முடித்தார். அவர் பாடி முடித்த சற்று நேரத்தில் ராமலிங்க அடிகளாரின் உறவினர் அந்த ஏட்டுச் சுவடியோடு வந்து தேவரின் பாதத்தில் விழுந்து வணங்கி, "ஐயாதாங்கள் தேவரல்ல. தாங்கள்தான் ராமலிங்க சுவாமிகள், என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறி "தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள்தான் இந்த ஏட்டுச் சுவடியில் இருக்கின்றன. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சுவடியைத் தேவரிடம் தந்தார்.

தேவர் அந்தச் சுவடியைப் பெற்றுக் கொண்டு, "எல்லாம் ஈசன் செயல்" என்று சொல்லி முடிப்பதற்குள், ஓபி ராமசாமி ரெட்டியார் எழுந்து வந்து தேவரை கட்டிப்பிடித்தபடி, அவரது கைகளை எடுத்து தனது கண்களில் ஒற்றிக் கொண்டு "ராமலிங்க சுவாமிகளே தாங்கள்தான்" என்று உரக்க சத்தமிட்டு கூறினார். கூடியிருந்த கூட்டம் கரவொலி எழுப்பி பெருத்த ஆரவாரம் செய்தது.


- முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர் நூலிலிருந்து...

ஈழம்



ராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஒன்று ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993-ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். கொடுமை மிக்க சிங்களர் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பற்றியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது.

தஞ்சையில் இவன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29-ம் ஆண்டில் (கி.பி. 1014) தானமாக அளித்தான். ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுன்றன.

"குரங்குகளின் துணையுடன் ராமபிரான் ஒரு கடற்பாலத்தைக் கட்டி, பிறகு, கூர்மையான அம்புகளால் மிகவும் சிரமப்பட்டு இலங்கை மன்னனை வதைத்தான்." ஆனால் இந்தச் சோழ மன்னன் ராமனினும் மேம்பட்டவன். இவனுடைய வலிமைமிக்க படை, கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கை மன்னனை அழித்தன என்று கூறுகிறது.

இப்படையெடுப்பின்போது ஈழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன், கி.பி. 981-ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனே, முதலாம் ராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்றபோது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் ராஜராஜனின் படையெடுப்பு பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை.

மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்கு (கி.பி. 991) பிறகு ஓர் ராணுவ புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது. கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டுக்குக் காரணமாகலாம். ராணுவ புரட்சியின் விளைவாக மகிந்தன் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டான்.
இதனால் ஈழமண்டலத்தின் வடபகுதியை ராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.

-கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய "சோழர்கள்" நூலிலிருந்து


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...