Thursday, December 31, 2015

மும்பை சயான் மருத்துவமனையில் சுகாதார பணி

நான் மும்பையில் வசித்தபோது 2004-ம் ஆண்டு இறுதியிலிருந்து தாராவி பகுதியில் இயங்கி வரும் ஜேபிஆர் கேபிள் டிவியின் செய்திப் பிரிவில் ஓராண்டு காலம் பணி புரிந்தேன். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரான எஸ்.ஏ.சுந்தர் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர், தான் செய்து வரும் சமூக பணிகள் குறித்து ஒரு வீடியோ எடுத்து கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் அது குறித்து நான் அந்த கேபிள் டிவியின் உரிமையாளருடன் பேசி அனுமதி பெற்று எஸ்.ஏ.சுந்தர் பற்றி ஒரு காணொளியை தயாரித்து ஒரு நாளைக்கு 3 முறை ஒளிபரப்பினோம். அது அவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கேபிள் டிவி உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கவும் அது ஒருமாத கால முடியும் முன்னரே நிறுத்தப்பட்டது.



இப்படித்தான் எனக்கு எஸ்.ஏ. சுந்தர் அவர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவர் பாஜக கட்சியின் ஒரு பொறுப்பில் இருந்தார். சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா என்ற பொதுநல அமைப்பை நடத்தி வந்தார். 2007-ம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அவர் என்னை அழைத்து நலம் விசாரித்தார். நேரம் கிடைக்கும்போது தனது அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நான் தன்னிச்சையான மொழி பெயர்ப்பாளர் பணியை செய்து வந்ததால் அவரது அமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிந்தது.

அவர் எனது ஈடுபாட்டைக் கண்டு அந்த அமைப்பின் சயான் கோலிவாடா பகுதி தலைவராக நியமித்தார். அதன் பின்னர் நான் அப்பகுதியில், சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் மூலமாக ரத்ததான முகாம், பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முகாம் போன்ற முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தேன்.

மும்பையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று சயான் லோக்மான்ய திலக் மருத்துவமனை. 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் எஸ்.ஏ. சுந்தர் அவர்கள் சயான் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட்கள், போர்வை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது ஈழப்போர் நடந்துகொண்டிருந்தது. ஈழத்தில் இன அழிப்பு நடந்துகொண்டிருந்தது. எனவே அதனை குறிக்கும் வகையில் இந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்து தொண்டர்களும் கறுப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டோம். ஏறக்குறைய அதில் 50 தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதைக் கண்டதும் மருத்துவமனையில் உள்ள சமூக சேவைப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் இதர மருத்துவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் மும்பையில் பல்வேறு சிறிய பெரிய அறக்கட்டளைகள் உள்ளன. அந்த அறக்கட்டளைகள் மருத்துவமனைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் அந்த அமைப்புகளிலிருந்து ஒருவர் அல்லது இருவர் வந்து அந்த வேலைகளை செய்துவிட்டுப் போவார்கள். ஆனால் எங்கள் அமைப்பிலிருந்து இவ்வளவு தொண்டர்கள் வந்திருப்பது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.




எனவே மருத்துவமனையின் சமூக சேவை பிரிவைச் சேர்ந்த மருத்துவர் தாரா வர்மா, எஸ்.ஏ. சுந்தர் அவர்களிடம் ஒரு உதவி கோரினார். அதாவது, மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார். எழுத்துப் பூர்வமாக கடிதமாக கொடுத்தால தாங்கள் அந்த பணியை செய்யத் தயார் என்று எஸ்.ஏ. சுந்தர் கூறினார்.

அந்த பணிக்கு மருத்துவமனையின் டீன் அனுமதி கொடுத்ததும் மருத்துவமனையில் சுகாதார பணியை துவக்கினோம். மும்பையில் பெரும்பாலானோர் பான் பராக் மற்றும் புகையிலையின் பல்வேறு வடிவ தயாரிப்புகளை மெல்லுவார்கள். இவர்கள் மருத்துவமனையின் படிகள், வராண்டாவில் எச்சில் துப்பி வைப்பார்கள். அது ஒரு வகை நாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

எனவே புகையிலைப் பொருட்களை மருத்துவமனை உள்ளே கொண்டு செல்வதை தடுத்தால் எச்சில் துப்புவது நின்றுவிடும், அதைத் தொடர்ந்து நாற்றமும் நின்றுவிடும் என்பதால் முதலில் அதனைச் செய்ய முடிவு செய்தோம். மருத்துவமனை முழுவதுமாக சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பு சுகாதார பணியில் ஈடுபடுவதும் பொதுமக்கள் புகையிலைப் பொருட்களை உள்ளே கொண்டு வருவதை தவிர்க்கவும் கோரி பேனர்கள் வைக்கப்பட்டன.



மருத்துவமனையின் 7 நுழைவாயில்களில் 3 நுழைவாயில்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அந்த 3 நுழைவாயில்களிலும் மருத்துவமனையின் உள்ளே இரண்டு 2 நுழைவாயில்களிலும் என இரண்டு இரண்டு தொண்டர்கள் சீருடையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்களின் வேலை மருத்துவமனையின் உள்ளே வருபவர்களிடம் உள்ள பீடி, சிகரெட் மற்றும்  புகையிலை பொருட்களை பெற்றுக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதிப்பதாகும். இந்த பணியில் ஈடுபடும் குழுவினரின் அணித் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன்.

பொதுவாக இந்த மருத்துவமனையில் தொடர்ச்சியாக நடைபெறும் சமூக சேவைகள் ஒரு வாரத்திற்கு மேலாக நீடிப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள வார்டுபாய் சங்கம், நர்ஸ்கள் சங்கம் போன்ற சங்கங்களுக்கும் சமூக சேவையில் ஈடுபடும் அமைப்புகளுக்கு கருத்துவேறுபாடு, மோதல் ஏற்படுவதே ஆகும். ஆனால் எங்கள் அமைப்பு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரு மாத காலம் நீடித்தது.

பொதுமக்கள் எச்சில் துப்புவது நின்றதும் நாற்றமடிப்பது நின்றது. அதன் பின் மருத்துவமனையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மருத்துவமனை வராண்டாக்களை துடைத்து சுத்தம் செய்தார்கள். மருத்துவமனை மிகவும் சுத்தமாக மாறிவிட்டது. மருத்துவமனையைச் சேர்ந்த நர்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்தச் செய்தி மும்பை நகரில் வெளிவரும் பல பத்திரிகைகளில் வந்தது.

சுகாதாரப் பணி 3 மாதங்கள் தொடர்ந்தது. பொதுமக்களிடமிருந்து கைப்பற்றும் புகையிலைப் பொருட்கள் ஒரு அறையில் சேமித்து வைக்கப்பட்டன. அவை அளவில் சுமார் 600 கிலோவை எட்டுவதாக இருந்தன. இந்தச் செய்தி ஜீ இந்தி செய்தி தொலைக் காட்சியில் தொடர்ச்சியாக ஒரு நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.

இதற்கிடையில் இந்தப் பணியை வைத்து எஸ்.ஏ. சுந்தரின் பெயரும் சிட்டிஸன் ஃபோரம் அமைப்பின் பெயரும் மும்பை நகரில் பேசப்படும் பெயராக அமைந்தன. உள்ளூர் அரசியல் பிரமுகருக்கு அச்சம் ஏற்பட்டது. எஸ்.ஏ. சுந்தர் சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட தயாராகிறாரோ என்று அஞ்சிய அவர் மருத்துவமனை டீன் மூலமாக இந்தப் பணியை நிறுத்த நெருக்கடி கொடுத்தார். 4 மாத காலத்திற்கு பிறகு பலரும் விரும்பாமலேயே இந்த பணி நிறுத்தப்பட்டது. 

Tuesday, December 29, 2015

அன்னதான துவக்க விழா




திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள வேல் நகரில் காருண்யா டிரஸ்ட் இடத்தில் வைத்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பாக செவ்வாய் கிழமை முதல் 18 நாள் அன்னதான துவக்க விழா நடைபெற்றது. 

தேனி வேதபுரி ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி அத்யாத்மானந்தா மகராஜ் விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். விழாவில் பேசிய சுவாமிகள் அன்னதானத்தின் மகிமைகள் குறித்து விவரித்துப் பேசினார். விழாவில் தலைமையுரை ஆற்றிய சமாஜத்தின் மாநில இணை செயலாளர் பி. கணேசன், சபரிமலையில் ஸ்ட்ரெச்சர் சேவையில் சமாஜத்தின் தேனி மாவட்ட தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். 

விழாவில் கோட்டச் செயலாளர் பி.வி. உதயக்குமார், மாவட்ட பொருளாளர் அ. பெருமாள் தேவன், செயலாளர் எஸ். கிருஷ்ணன், பெரியகுளம் நகர தலைவர் காமராஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட இணை செயலாளர் ஏ. விஸ்வம் நன்றி கூறினார்.



Wednesday, December 23, 2015

தமிழ்த் தேசியத்திற்கான இரண்டு விளக்கம்

தமிழ் ராணுவம் பற்றி, டி. சிவ்ராம் - பாகம் 8

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழர்களின் அடையாளம் இரண்டு வேறுபட்ட கருத்துக்களுடன் வாதம் செய்யப்பட்டது. இரண்டு வேறுபட்ட இயக்கங்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த இயக்கங்கள் அரசியல் ரீதியாக எதிர் எதிரானவையாகும். ஒன்று திராவிட பள்ளிக்கூடம். மற்றொன்று இந்திய புரட்சி (விடுதலை) இயக்கம். முந்தையது ஆங்கில மிஷனரிகளுடன் நெருக்கமான தொடர்புகொண்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு முழு ஆதரவை கொடுக்கக் கூடியது. பிந்தையது ஆங்கிலேயர்களின் அரசாங்கத்தை கடுமையாக எதிர்த்தது. அது அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற வன்முறையே சரியானது என்று சொன்னது.

இந்த இரண்டு கருத்துக்களின் அடிப்படையில்தான் இன்றைய தமிழ்த் தேசியம் பேசப்படுகிறது என்பதை அடையாளம் காணலாம். அல்லது மிகவும் பொருத்தமாகச் சொன்னால்நிறுவனகருத்துக்கள் தமிழர்களின் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம், ‘உண்மையில்தமிழர்களின் அடையாளம் என்பது என்ன என்பது பற்றிய ஒரு நம்பகமான செய்தியை தரக்கூடியதாக இருக்கிறது. திரவிடப் பள்ளிக்கூடம் மொழி இன தேசிய வடிவிலான அரசியல் மற்றும் கல்வியை கொடுத்தது. புரட்சி (விடுதலை) இயக்கம், பாரம்பரிய தமிழ் ராணுவத்தை விடுதலை கருத்தாக மாற்றியது. இது ராணுவ இன தேசியமாக மாறியது. இருபதாம் நூற்றாண்டில் ராணுவ கருத்து தமிழின தேசியத்தை வடிவமைத்தது. இதுநலன்களில் முன்னேற்றம் அடைய கட்டமைக்கப்பட்டு களம் இறக்கப்பட்டது மற்றும் ஒன்றிணைந்து உரிமைகோருதல், ஒன்றிணைந்து அழுத்தக் குழுக்களாகமாறியதன் காரணமாக மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் கிராமிய கலாச்சாரம் மற்றும் மதத்தின் மூலமாக மறுஆக்கம் செய்யப்பட்டது மற்றும் ஆக்கத்தின் அனுபவத்தின் கட்டமைப்பு காரணமாகவும் வடிவமைக்கப்பட்டது. இதையே இந்த ஆய்வு கண்டறிய விரும்புகிறது.

இதுவே, எம்ஜிஆரை தமிழகத்தில் பெரியார் மாவட்டத்தில் பல அட்டவணை சாதிகளின் போர்க்கடவுளான மதுரை வீரன் ஆக்கியது. இதனை நாம் பின்னர் பார்ப்போம். ஜெயலலிதா கடந்தகால தேர்தலில் (அதாவது 1991 பொதுத் தேர்தல்) அங்கே போட்டியிட்டார். எனினும், தற்கால தமிழ் ராணுவ எழுச்சியை பரிசோதிக்க முந்தைய திராவிடப் பள்ளிக் கூடத்தில் தமிழ் புனரமைப்பு மற்றும்வரலாற்று தொகுப்பின்உரிமைகோரல் மற்றும் அமைதிக்குப் பின்னால் உள்ள அரசியலை புரிந்துகொள்வது முக்கியமானது.

கால்டுவெல்லும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் தமிழர்களை அமைதியானவர்களாக காட்ட முயற்சித்து தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாறு பற்றி பேசினார்கள். இந்தியத் துணைக் கண்டத்திற்குஆரியர்கள்வரும் முன்னர் தமிழர்கள் முக்கியமாக அமைதியான மற்றும் உச்ச சுதந்திரமான சமுதாயமாக வாழ்ந்தனர் என்று காட்டினர். இதுதான் ஒப்பற்ற திராவிட நாகரீகம். எனவே திராவிட மொழி மற்றும் கலாச்சார சுதந்திரம், தமிழர்களை அமைதியான விவசாயிகளாக காட்டின. கால்டுவெல்லின் கருத்தியல், இந்தக் கருத்தை தனது எழுத்துக்களில் காட்ட கட்டாயப்படுத்தியது. (ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மறவர்கள் மீது என்ன விதமான நடவடிக்கையை மேற்கொண்டார்கள் என்பதை பகிர்ந்து கொண்டதிலிருந்து இது ஏற்பட்டது என்பது முன்பு விளக்கப்பட்டது.) பாதிரியார் கால்டுவெல்லின் கருத்துக்கள் வர்ணாசிரம சாதி படிநிலையில் உயர் இடத்தை பெறத் துடித்து வந்த வேளாள சாதியினருக்கு உயர்ந்த சாதியாக புதிதாக உருபெற பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. ஆகவே, (20-ம்) நூற்றாண்டின் துவக்கத்தில் திராவிட பள்ளிகளில் தமிழ் ஆய்வுகளால் எழுதப்பட்டவரலாறுகள்அனைத்துமே கீழ்க்கண்டவர்களால் குறைத்து மதிப்பிடப்பட்டன,

() கால்டுவெல்லின் அரசியல் மற்றும் மத நலன்கள் மற்றும் ஹென்றி மார்ட்டின் ஸ்கட்டர் மற்றும் ஜி.யூ.போப் போன்ற இதர மிஷனரிகள்
(பி) உயர முயற்சிக்கும் வேளாளர்களின் சாதி அரசியல்.

இவர்கள் இருவரின் நலன்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவர்களின் அரசியல் நலனின் வெளிப்பாடு ஆரியர்களுக்கு முந்தைய தமிழர்களின் கலாச்சாரம் ராணுவமல்லாத கலாச்சாரம் என்று சொல்வதாக இருந்தது. பிராமணர்கள் அல்லாதோர் வேளாளர்களின் கடந்த காலத்தை தமிழர்களின் காலமாக ஆய்வு செய்ய புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் (சில சமயங்களில் ஆங்கில நிர்வாகமும்) ஆதரவும் ஊக்கமும் அளித்தன.

திருவனந்தபுரம் பல்கலை கழகத்தின் பேராசிரியரான சுந்தரம் பிள்ளையின் படைப்புகள் அவரது சாதியைச் சேர்ந்த பலரால் ஊக்கமளிக்கப்பட்டவையாகும். அவர்கள் பிராமணர்கள் தங்களை சூத்திரர்கள் என்று குறிப்பிட்டதால் ஆத்திரமடைந்தவர்கள் ஆவர். அவர்கள் ஆங்கிலேயரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் நீதிமன்றங்களை மோசமாக உணர்ந்ததவர்கள் ஆவர்.

இவ்வாறு திராவிடப் பள்ளியின் வரலாற்று ஆய்வுகள்சமூகங்களின் இயக்கங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பை நோக்கியதாக அமைந்தன. 1870 மற்றும் 1930 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகள், சாதிகளுக்கு இடையேயான பதவிப் போட்டியில் கவனம் செலுத்தச் செய்தன.

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள்என்று முதல் திராவிட வரலாற்று புத்தகத்தை சென்னையில் சிவில் சேவையில் இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி. கனகசபை பிள்ளை  எழுதுகிறார். “தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்என்ற புத்தகத்தை எழுதிய எட்கர் தர்ஸ்டன் வேளாளர் சாதி பற்றி எழுதும்போது கனகசபையின் புத்தகத்திலிருந்து, கீழ்க்கண்ட வாசகத்தை எடுத்து எழுதுகிறார்.

சுத்தமான தமிழர்களிடையே, மிகவும் கௌரவமான சாதி, அறிவார் அல்லது துறவிகள் ஆவர். அறிவாருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் உழவர் அல்லது விவசாயிகள்  ஆவர். அறிவார் என்பவர்கள் துறவிகள் ஆவர். ஆனால், சமூகத்தில் விவசாயிகள் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அவர்களுக்கு நாட்டில் பிரபுத்துவம் அல்லது நிலப்பிரபுத்துவம் இருந்தது. அவர்கள் வேளாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். நீர்மேலாண்மை செய்தவர்கள் காராளர்கள் ஆவர். தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய சிற்றரசர்கள் பெரும்பாலும் வேளாள சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்” (தர்ஸ்டன், 1906: . 367-368)

துவக்க கால திராவிட தமிழ்ப் பள்ளியின் முயற்சிகள், மறைமலை அடிகளின் தூய தமிழ் இயக்கத்தில் முடிவுபெற்றன. 1928-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் மூலம் இந்த இயக்கம் சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியது. அவர்வேளாளர் நாகரீகம்என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் 1922-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி யாழ்ப்பாணம் டவுன்ஹாலில்தமிழர்களின் நாகரீகம்என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையாகும். அவரது உரையை புத்தகமாக வெளியிட அவருக்கு ரூ. 200 நிதியுதவி அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேளாளர்கள், அடிகளாரின் முயற்சி தென்னிந்தியாவில் தங்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திரப் பட்டத்தைப் போக்க உதவும் என்று கருதினர்.

இருந்தாலும், வேளாளர்கள் சூத்திரர்கள் என்ற காரணத்தால்தான் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் வேளாளர்களிடம் பெண் எடுப்பதில்லை என்ற கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே மறைமலை அடிகள் தனது உரையை ஒரு புத்தகமாக வெளியிட முடிவு செய்தார். தனது புத்தகத்தின் ஆங்கில முன்னுரையில் மறைமலை அடிகள் இதனை கீழ்க்கண்டவாறு சொல்கிறார்,
இந்த புத்தகம் தமிழர்களின் சமூக, மத மற்றும் வரலாற்றுக் கருத்துக்களை புரட்சிகரமான தன்மையில் பயபக்தியுடன் சுத்த தமிழில் சொல்கிறது. முதலில் தமிழர்களில் நாகரீகமான வேளாண் சமுதாயமான வேளாளர்கள் குறித்து கவனம் செலுத்தி அவர்களின் தோற்றம் கட்டமைப்பு குறித்து கூறுகிறது. பூமத்திய ரேகைப் பகுதியில் வாழ்ந்த அனைத்து சமுதாயங்களும் வேட்டைக்காரர்களாக, நாடோடிகளாக வாழ்ந்து வந்த காலத்தில் வேளாளர்கள் விவசாயம் செய்யும் கலையை அறிந்திருந்தனர் என்று சொல்கிறது. அவர்கள்  கடற் பயணங்களின் மூலமாக இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்திருந்தனர். பஞ்சாபின் வடமேற்கு பகுதியிலிருந்து ஆரியர்கள் வந்தபோது அவர்கள் நாட்டின் உட்பகுதியை நோக்கி படையெடுக்கிறார்கள். அப்போது வடக்கே ஆட்சி செய்து கொண்டிருந்த பத்து வேளாள அரசர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தங்களுக்கு பணிபுரிவதற்காக வேளாளர்கள் பதினெட்டு சாதிகளை உருவாக்கியதாக மறைமலை அடிகள் சொல்கிறார்கள். சைவ வேளாளர்களே உயர்ந்த அறம் வாய்ந்தவர்கள். சைவ சித்தாந்தத்தை வேளாளர்கள் 3,500 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக் காத்தனர். இதுவே ஆரியர்களுக்கு முந்தைய தமிழர்களின் மதபாரம்பரியமாக இருந்தது. வேளாளர்களை சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியது ஆரிய பிராமணர்களின் சதி என்று கூறினார். தமிழ் பிராமண அறிஞரான ஸ்ரீநிவாச ஐயங்கார் மீது சக வேளாள திராவிட அறிஞர்கள் தொடுக்கும் தாக்குதல்கள் மற்றும் குற்றச் சாட்டுகளுக்கும் மறைமலை அடிகள் ஆதரவு தெரிவித்தார். ஸ்ரீநிவாச ஐயங்கார் சென்னை மாகாணத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு தலைமை அதிகாரியாக இருந்தவர் ஆவார்.

பாதிரியார் கால்டுவெல்லின்அறிவியல்இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திராவிடப் பள்ளியின் தமிழ் வரலாற்று கதைகளுக்கு திரு ஸ்டூவர்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி என்ற முறையில் தமிழ்நாட்டின் கிராமப்புற மதம் மற்றும் கலாச்சாரத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அவர், தமிழ்க் கலாச்சாரம் என்பது அமைதியை விரும்பும் பண்டை தமிழினம் பற்றிய உயர் ஒழுக்கங்களை கொண்டது என்ற கருத்தை எதிர்த்தார். தூய தமிழ் படைப்புகள் அனைத்தும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலான கண்டுபிடிப்புகள் என்று கூறினார்.

தமிழ் ஆய்வுகள்’, புதிய தமிழ்ப் பள்ளி அறிஞர்கள் கடந்த பதினைந்து ஆண்டு காலமாகத்தான் தோன்றியுள்ளனர். அவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையை பாராட்டுவோர் மற்றும் அவரது சாதி மக்களை சேர்ந்தவர்களாக மட்டுமே இருக்கிறர்கள் என்று ஸ்ரீநிவாஸ ஐயங்கார் கூறினார். மேலும், அவர்களின் கூற்றுக்கு மாறாக தமிழர்கள் கடுமையான போர் வீரர்களாக இருந்தவர்கள் என்று கூறினார். அவர்கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்,

சில தமிழ் மாவட்டங்களில் பெருமளவில்வீரக்கற்கள்என்ற கல்லறை கற்கள் கிடைத்துள்ளன. அவை பெரும்பாலும் போர்க்களங்களில் கொல்லப்பட்ட வீரர்களின் கல்லறைகள் ஆகும். அவர்களின் பெயர்கள் அந்தக் கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும். அவை மயிலிறகு அல்லது சிவப்பு நிற மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக அவற்றின் மீதாக உருமால் கட்டப்பட்டிருக்கும். அதுபோன்ற பதிவுகளின் எடுத்துக்காட்டை கீழே கொடுத்திருக்கிறோம். புறப்பொருள் வெண்பா மாலையை கவனமாக படித்துப் பார்த்தால் தமிழர்கள் அஸிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களைப் போன்ற போர் வீரர்கள் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளலாம். அவர்கள் வெறுமனே மகிழ்ச்சிக்காக மட்டுமே  கொலை, அட்டூழியங்களும், கொள்ளைகளும் செய்யக் கூடியவர்களாக வில்களையும் ஈட்டிகளையும் ஏந்தியவர்களாக இருந்தார்கள். அவர்கள் சாவைப் பற்றி கவலைப்பட்டவர்கள் இல்லை. அந்த பயங்கரமான இனத்தின் தன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வர்ணனைகளே சாட்சியாகும்.
(1) எதிரிகளின் குடல்களை மாலையாக அணிந்து தலைகீழாக பிடித்திருக்கும் ஈட்டிகளுடன் நடனமாடினர். (2) அவர்கள் தங்கள் எதிரிகளின் வளமான கிராமங்களை தீக்கிரையாக்கினர். (3) அவர்களின் நாட்டை கொள்ளையடித்து வீடுகளை இடித்துத் தள்ளினர். (4) கொல்லப்பட்ட அரசர்களின் தலைகள் தீயில் எறியப்பட்டனகொல்லப்பட்டவர்களின் தசைகள் கலக்கப்பட்ட பேய்ச் சோறு வினியோகிக்கப்பட்டது.

இந்த வரிகளுடன் அஸிரியர்களின் பிரச்சாரக் கதைகளை ஒப்பிடலாம்: என் முன்னே அவர்களில் சிலர் வந்து விழுந்தனர். சுவர்களில் அவர்களின் தோல்கள் தொங்கின. நான் அவர்களின் தலைகளை அடுக்கி வைத்தேன். அவர்களின் கிராமங்களை நான் அழித்தேன், எரித்தேன். நான் அந்த நாட்டை பாலைவனமாக்கிறேன்.’ இருந்தாலும் கூட துவக்க கட்ட திராவிடர்கள் சிறந்த நடைத்தை கொண்ட விவசாயிகள் என்று டாக்டர் கால்டுவெல் மற்றும் ஆரியர் அல்லாத தமிழ் அறிஞர்களால் கருதப்பட்டது.

வேளாளர்கள் தூய திராவிடர்கள் வேளாளர்கள் என்று நமக்கு சொல்லப்பட்டது. அவர்கள் ராணுவ ஆதிக்கம் பெற்றவர்கள் என்று நமக்குச் சொல்லப்பட்டது. அப்படியானால், ‘அமைதியான விவசாயிகளின் முன்னோர்கள் எவ்வாறு போரை விரும்பும் இனமாக இருந்திருக்க முடியும்?” என்ற கேள்வி தானவே எழுகிறது என்று ஐயங்கார் குறிப்பிடுகிறார். வேள் என்ற சொல்லின் மூலம் போர்க்கருவியான வேல் உடன் தொடர்புகொண்டது என்று அவர் சொல்கிறார். நாயர், பிள்ளை, பந்த் போன்றோர் பண்டைக் காலத்தில் வேளாண் குடிகளாக இருந்துகொண்டே போர்க்குடிகளாகவும் இருந்தது அசாதாரணமானதாக இருக்கவில்லை. மேலும் சென்னை மாகாணத்தில் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், மொத்த தமிழர்களில் தங்களை போர்க்குடிகளாக சொல்லிக்கொண்டவர்கள் இருபத்தாறு சதவீதம்பேர்தான் என்பதையும் அவர்குறிப்பிடுகிறார். (ஸ்ரீநிவாஸ ஐயங்கார், 1915, . 40-58)

கால்டுவெல்லின் திராவிட கருத்தியல் மற்றும் வேளாள பிரச்சாரகர்களின் மீதான ஐயங்காரின் தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தது. படித்த பிராமணர்கள் துவக்க கால திராவிட பள்ளியின் கருத்துக்களுக்கு பின்னணியில், அரசியல் நலன் உள்ளது என்பதை அறிந்திருந்தார்கள். தமிழ் வேளாளர்களின் மறுமலர்ச்சி மற்றும் திராவிடர்களின் உயர்ந்த தன்மை ஆகிய இரண்டும் ஆங்கில ஆதரவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக மற்றும் 1916-ம் ஆண்டு பிராமணர் அல்லாதோர் உருவாக்கிய தென்னிந்திய சுதந்திர கூட்டமைப்பு என்ற அரசியல் அமைப்புடன் கூட்டுச் சேர்ந்தவையாக இருந்தன. எனவே அதனுடைய கட்டமைப்புகள், ‘உயர்வானபண்டை இலக்கியங்களில் தமிழர்களின் ராணுவ புகழை அல்லது கிராமப்புற தமிழகத்தில் உள்ள மக்களின் கலாச்சாரத்தை பேசக் கூடாது என்பதில் கவனமாக இருந்தன.  (தமிழ் மறுமலர்ச்சியை புராட்டஸ்டன்ட் மிஷனரிகளும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய அதிகாரிகளும் ஊக்குவித்தனர். அது தமிழர்களின் ராணுவத் தன்மையை குறைத்து அவர்கள் மீது பிராமணர்கள் கொண்ட ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் சமூக, பொருளாதார மற்றும் மத நோக்கங்களை நிறைவேற்ற ஏதுவாக செய்யப்பட்டது என்றே பார்க்கப்பட்டது.)

வேளாள சாதியினரின் கலாச்சாரமே தமிழர்களின் கலாச்சாரம் என்று முன்னெடுக்க விரும்பியதால் மட்டுமே இது செய்யப்படவில்லை. தமிழ் கலாச்சார மறுமலர்ச்சி என்பதுராஜதுரோகம்என்று கருதப்பட்டு அதுதீவிரவாதம்என்று ஆங்கில அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்த ஆங்கிலேய அரசின் கவலையையும் உள்ளடக்கியே செய்யப்பட்டது. பொதுவாக தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டபண்டை போர் வெறிகுறிப்பாக ராணுவ சாதிகளிடையே காணப்பட்ட போர் பற்றை குறைக்கும் வகையில் செய்யப்பட்டது. மறவர்களின் சாதிப் பாரம்பரியங்களில் பொறிக்கப்பட்ட ராணுவ கொள்கைகள் மற்றும் பெருமைமிகு பண்டை தமிழ் பாரம்பரியத்துடன் தங்களுக்குள்ள தொடர்பு மற்றும் அதன் ஒப்பற்றதன்மையை குறைக்கும் விதமாக இது செய்யப்பட்டது. தாங்கள் சொல்வதுதான் தமிழர்களின் ஒப்பற்ற மற்றும் சக்தி வாய்ந்த ராணுவ பாரம்பரியம் என்று சொல்ல விரும்பினார்கள். இந்தச் சூழலில்தான் இந்திய புரட்சி (விடுதலை) இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு பிராமணர்கள் தமிழர்களின் ராணுவ இலக்கியமான  புறநானூற்றின் அரசியல் வாழ்க்கையை துவக்கினர். (ஒருவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார். மற்றொருவர் ராமநாதபுரம் அரசவையில் புலவராக இருந்த மாபெரும் தமிழ் அறிஞரான எம். ராகவ ஐயங்கார்.)

இந்தக் கவலைகள் ஆங்கிலேய அரசாங்கத்தை தீவிரவாதிகள் மற்றும் ராணுவ சாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தின. ஒன்று தமிழ் மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கவனமாக மாற்றுவதன் மூலம் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக  சந்தேகப்படும் நபர்கள் மீது ராஜதுரோக குற்றம் சாட்டுவது. மற்றொன்று 1911-ம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டத்தை கொண்டு வந்து அவர்களை கொள்ளையர்களாகவும் திருடர்களாகவும் சித்தரிப்பது. அதன் கீழாக கள்ளர் மற்றும் மறவரை கண்காணித்து அவர்களைப் பற்றிய முழுத் தகவல்களை சேகரிப்பது. தமிழ் ராணுவ சாதிகள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டன. இந்த நகர்வுக்கு தீவிரவாதப் பிரிவுத் தலைவர்களே முன்னின்று நடத்தினர். இந்தச் சூழலில்தான் நவீன தமிழ் ராணுவம்  அரசியல் சக்தியாக உருவெடுத்தது.

நாம் பின்னால் பார்க்கப் போவதைப் போல கருணாநிதி, தொண்டைமான், காசி ஆனந்தன் மற்றும் பிரபாகரன் ஆகிய அனைவரும் இந்தச் சூழலில்தான் பல்வேறு நிலைகளில் தமிழ் அடையாள கருத்துக்களால் வெளிவருகின்றனர். தற்போதைய கட்டத்தில் உள்ள தமிழ்த் தேசிய மாணவர்கள், தமிழர்களின் கடந்த கால மற்றும் தற்போதைய ராணுவ விளக்கங்களை தமிழ் அரசியல் அலைவரிசையின் இரண்டு முனைகளாக இருப்பதை கண்டுகொள்ளலாம். கடந்த மாதம் விடுதலைப்புலிகள் ஒரு ஆடியோ கேசட்டை  வெளியிட்டனர். அதேபோல சிங்கப்பூரில் தொண்டைமானை கௌரவிக்கும் வகையில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த இரண்டுமே இரண்டு தலைவர்களின் தேசிய திட்டங்களை பாராட்டும் வகையிலான அரசியல் உணர்வுகொண்ட முயற்சிகளாகும். இவை சோழப் பேரரசில் தமிழ் ராணுவ பாரம்பரியம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தது என்பதை காட்டுவதற்காக செய்யப்பட்டன.

விடுதலைப்புலிகளின் கேசட் பிரபாகரனின் பெருமை மிகு கடந்த காலத்தை சோழப் பேரரசை நிறுவிய கரிகாலனுடன் ஒப்பிட்டது. கௌரவிக்கும் புத்தகம், சிடபிள்யூசியின் தலைவர் மற்றும் சோழப் பேரரசின் தளபதியான கருணாகர தொண்டைமான் இடையே உள்ள ராணுவ பாரம்பத்தின்தொடர்ச்சியைவலியுறுத்துவதாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் சுய வெளிப்பாடு இவ்வாறு  மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை கவர முடியுமா? என்று இந்த ஆய்வில் தமிழ் ராணுவம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


http://tamilnation.co/forum/sivaram/920801lg.htm

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...