Monday, June 6, 2022

சீர்மரபினர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

 சீர்மரபினர் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப் பட்டோர் விடுதிகளாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனிமாவட்ட சீர்மரபினர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.




Monday, May 16, 2022

சாதியை/ அடையாளத்தை ஒழிப்பது எப்படி?

1. முதலில் விருப்பம் உள்ளவர்களின் அடையாள அழிப்புக்கான சட்டத்தை உருவாக்க வேண்டும். 

2. தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து சமத்துவபுரம் போன்ற சாதி ஒழிப்பு நகரங்களை உருவாக்க வேண்டும். 

3. சாதியை ஒழிக்க விரும்புபவர்களை அங்கு குடியேற்ற வேண்டும். 

4. அவர்கள் தங்கள் உறவினர்களுக்குள் பெண் கொடுக்கக் கூடாது. ரத்த உறவு அல்லாவருக்குத்தான் பெண் கொடுக்க வேண்டும். 

5. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் அறிவுக் கூர்மை, திறமை போன்றவற்றை நிரூபிக்க வேண்டும். 

6. அவர்களின் வாரிசுகள் சிறந்த விளையாட்டு வீரர்களாக, தொழிலதிபர்களாக, விஞ்ஞானிகளாக, தலைவர்களாக வருவதை நிரூபிக்க வேண்டும். 

7. அவ்வாறு செய்ய முடிந்தால் அதன் பின்னர் பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும். 

8. வாக்கெடுப்பில் வெற்றிபெற்றால் அதே திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி சாதியை ஒழிக்கலாம்.  

9. அதன் பின்னர் எல்லாருடைய நிறம், தோற்றத்தை ஒரே மாதிரியாக உருவாக்க வேண்டும். 

10. யாரும் எந்தவிதக் குறியீடும் கொண்ட பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. அதாவது ஒருவரின் பெயர் 1ஏபி என்பதுபோல இருக்க வேண்டும். 

இதன் மூலம் நான்கு தலைமுறைகளுக்குள் அடையாளமற்ற மனிதக் கூட்டத்தை உருவாக்கி விடலாம். 

Monday, January 24, 2022

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

 வேலுநாச்சியார், மருது பாண்டியர், வ.உ..சி. ஆகியோர் பிரபலமில்லாதவர்கள் என்று கூறி குடியரசுத் தினவிழா அணிவகுப்பில் தமிழக அரசு வாகனத்தை புறக்கணித்த மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 




நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...