Thursday, November 30, 2017

தமிழினம் யாருக்காகவும் மண்டியிடாது



ஈழப்போருக்குப் பின்னர் இணையவெளியில் தமிழ்த் தேசியக் கருத்துக்களை எழுதத் துவங்கிய காலங்களில் தொடர்பில் வந்த சில ஈழத்தமிழர்கள், நமது தமிழினத்தின் அடிப்படை கூறாக அமைந்துள்ள சாதி பற்றி திராவிட கருத்தையே நம்பிக் கொண்டு பேசினார்கள். அவர்கள் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் சாதி ஒழிப்பை முன்னெடுத்தது பற்றி பேசினார்கள். அவர்கள் துப்பாக்கி முனை சாதி ஒழிப்பைஉறுதியாக நம்பினார்கள்.

அவர்களுக்காக நமது கருத்துக்களை மாற்றிக் கொள்ள முடியுமா? நாம் நமது தமிழின,  தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். இதனால் அவர்களாகவே தொடர்பில் வருவதை நிறுத்திக் கொண்டார்கள்.

இங்கு ஈழத்தின் தமிழ்த் தேசிய நிலையையும், தமிழகத்தின் தமிழ்த் தேசிய நிலையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. ஈழத்தில் தமிழர்களின் எதிரியான சிங்களவன் அதிகாரத்துடன் தனி அடையாளத்துடன் நிற்கிறான். இங்கே தமிழைப் பேசி, தமிழர்களாக வாழ்ந்து வரும் அப்பாவி தெலுங்கர்கள், இதர மொழி பேசுவோரிடையே யார் தமிழர், யார் தமிழர் அல்லாதவர், யார் எதிரி, யார் எதிரி அல்லாதவர் என்பதை கண்டறிவதே பெரும் சிக்கலாக உள்ளது. இதில் அதிகாரம் இந்தியா என்ற வல்லாதிக்க அரசாங்கத்திடம் உள்ளது.

தமிழரிடையே ஏராளமான சமூகப் பிரச்சைனகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் களைவது அவசியமாகிறது. ஆனால் எதிரி யாரென்று தெளிவாக தெரியாத நிலையில், அதிகாரமற்ற தமிழர்கள் தனது ஆதரவாளர்கள் யாரென்று தெரியாத நிலையில், நிர்கதியாக நிற்கின்ற வேளையில் தமிழருக்கும், தமிழ்த்தேசியம் பேசுவோருக்கும் நிபந்தனையிடும் அவலமும் இங்கேதான் நிகழ்கிறது.

திராவிடப் புட்டிப்பால் அருந்தி, திராவிட மூளைச் சலவைக்கு ஆளாகி, தங்களை தலித்கள் என்று நம்பிக் கொண்டு இன்றும் சாதியை ஒழித்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு தமிழருக்கும், தமிழ்த்தேசியம் பேசுவோருக்கும் நிபந்தனையிடும் தலித்களுக்காக இந்த பதிவு போடப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு எப்போது சாதி ஒழிப்பாக மாறியது என்று கேள்வி கேட்காமல் சாதி ஒழிப்பை கண்மூடித்தனமாக நம்பும் அறிவாளிகளுக்காக இந்த பதிவு போடப்படுகிறது.

தற்போதுள்ள நாகரீக உலகில், சிறந்த ஆட்சியமுறையாக இருப்பது, கருதப்படுவது ஜனநாயக ஆட்சி முறையே. அது நேரடி மக்களாட்சியா, மறைமுக மக்களாட்சியா, அல்லது பங்குச் சந்தை போல தினமும் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பிடும் ஜனநாயகமா என்பது தனி விவாதப் பொருள்.
                             
தற்போதுள்ள சூழலில் எந்தவொரு அரசியல்வாதியும், அவர் சமூகப் போராளியாக இருந்தாலும் கூட, இந்த ஜனநாயக முறைப்படிதான் அரசியல் செய்தாக வேண்டும்.

சாதி ஒழிப்பு பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது என்பதை உணர்ந்து கொண்டதால்தான் உலக மகா சீர்திருத்தவாதியான ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. ராமசாமி நாயக்கரின் புட்டிப்பால் பிரச்சாரத்தை நம்பிக் கொண்டு, இன எழுச்சி பெற்று வரும் இந்தக் காலத்திலும் கூட சில அல்லக்கைகள் சாதியை ஒழித்துவிடுவோம் என்று பிதற்றித் திரிகிறார்கள். ஏதாவது ஒரு சாதியை ஒழித்துக் காட்டுங்கள் என்று சொன்னால், சாதி ஒழிப்பு என்பது சாதியை ஒழிப்பதில்லை அந்த உணர்வை ஒழிப்பது என்று மழுப்புவார்கள்.

அதேவேளையில், தலித்கள் தங்கள் சாதி அடையாளத்தைக் கொண்டு மட்டுமே, அதனால் கிடைக்கும் சலுகைகளைக் கொண்டு மட்டுமே முன்னேற முடியும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் அல்லது அவ்வாறு நம்ப வைக்கப்படுகிறார்கள். இன்று தலித்களின் பிரதிநிதிகளாக உள்ள, ராமசாமி நாயக்கரை மடாதிபதியாக வணங்கும் தலைவர்கள் கூட தங்கள் சாதியை முதலில் ஒழித்து முன்மாதிரியாக இருப்போம் என்று சொல்லத் துணியமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் துணிந்தால், பின்னர் அவர்கள் தங்கள் சாதி மக்களுக்குத் தலைவர்களாக இருக்க முடியாது.

இவ்வாறு வீராவேசமாக சாதி ஒழிப்பு பேசி எந்தச் சாதியையும் ஒழிக்காமல் அதை வைத்தே படிப்பு, பதவி என பெற்று அதை வைத்து மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும் என்று திடமாக நம்பும் ஆசாமிகள் தமிழினத்தையும் தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்துக்களையும் இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள். இதில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

ஒப்பற்ற தமிழ்த் தேசியத் தலைவரான பிபாகரன் ஜனநாயக முறையில் ஆட்சி நடத்தவில்லை. அவர் துப்பாக்கி முனையில் போர்க்களத்தை நடத்தினார். எனவே அவரை வைத்து சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்து விடலாம் என்று பகல்கனவு காணாதீர். முடிந்தால் அவரைப் போல துப்பாக்கி ஏந்தி சாதிகளை ஒழித்துக் கட்டுங்கள். அதை விடுத்து தமிழரையும், தமிழ்த் தேசியக் கருத்துக்களையும் இழித்தும் பழித்தும் பேசுவது உங்களுக்கு எந்த வகையிலும் பயன் தராது.

இவர்களுக்காக போராடாவிட்டால் தமிழர்களையும், தமிழ்ச் சாதிகளையும் ஏசுவார்கள். உங்களுக்காகத்தான் ஊரே போராடுகிறதே என்றால், நீங்களும் எங்களுக்காக போராடி உங்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று சாபமிடுவார்கள்.

தலித்களாக கருதிக்கொள்ளும் நீங்கள் பலநூறாண்டு காலமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்கள். அவற்றையெல்லாம் சிறிது சிறிதாகத்தான் மாற்ற முடியும். அதற்கு உங்களுடைய நிபந்தனையற்ற முழு ஒத்துழைப்புத் தேவை. அதை விடுத்து ஏதோ நீங்கள் மட்டுமே தமிழினம் என்று கருதிக் கொண்டு பேசித் திரிந்தால் நீங்கள் திராவிடர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை ஆருடமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஒட்டுமொத்த தமிழினத்தையும் எதிர்த்தே காலம் தள்ளிவிட முடியுமா என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. தமிழினம் யாருக்காகவும் மண்டியிடாது என்பதை அனைவருக்கும் உரக்கச் சொல்ல விரும்புகிறேன்.
இறுதியாக, ஒரு எதிர் இனத்தின் வல்லாதிக்க சக்தியுடன் போரிடுவதும் சக இனத்திடம் உரிமைகளுக்காக போராடுவதும் ஒன்றல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இரண்டின் தன்மையும், போக்கும் மாறுபடும். அதற்கேற்ப அதனை அணுகுவதே உத்தமம். மற்றபடி உங்கள் விருப்பம், உங்கள் செயல்களுக்கு பலன் கிடைத்தே தீரும்.

நீ வந்தால் உன்னோடு சேர்ந்து போராடுவேன்
நீ வராவிட்டால் நீ இல்லாமல் போராடுவேன்
நீ எதிர்த்தால் உன்னையும் மீறிப்  போராடுவேன்
வீர் சாவர்க்கரின் வைர வரிகள் நினைவில் அலைமோதுகின்றன.

----------------

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...