Thursday, June 29, 2017

சுயநிர்ணய உரிமையை மறுக்க முடியுமா?


ஒரு நண்பர் கேட்டார்....
தமிழ்த் தேசியம் என்கிறீர்கள், தனி நாடு என்கிறீர்கள், இது சாத்தியமா?

- இது சாத்தியமா என்பதற்கு முன்பாக, மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை,

தமிழர்கள் என்பதை உணர வேண்டும்.

அடுத்த படியாக, இந்திய ஒன்றிய அரசாங்கம் தமிழர்களிடம் ஏராளமான பணத்தை
வரியாக வசூலித்துக் கொண்டு, அவர்களுக்காக சொற்பமாக செலவு செய்கிறது
என்பதை உணர வேண்டும்.

அதற்கு அடுத்தபடியாக, அவ்வாறு பெருந்தொகையை வரியாக வசூலிக்கும் இந்திய
ஒன்றியம் தமிழர்களை பாதுகாக்க எதுவும் செய்வதில்லை என்பதை உணர வேண்டும்.

அதோடு தமிழர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதும் இல்லை என்பதை உணர வேண்டும்.

அதேவேளையில், தமிழ்த் தேசியக் கருத்துக்களை பேசுபவர்கள் மக்களின்
நம்பிக்கையைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்திய ஒன்றியத்
தலைவர்களை விட சிறப்பாக நாட்டை ஆட்சி செய்வார்கள், தமிழர்களை
பாதுகாப்பார்கள், தமிழர் உரிமைகளை பாதுகாப்பார்கள் என்று மக்கள் நம்பக்
கூடியவர்களாக இருக்க வேண்டும்அவர்கள் மண்ணின் மைந்தர்களாக இருந்து
மண்ணுக்கான கொள்கைகளை முன்னெடுத்து மக்களின் ஆதரவு பெற்றவர்களாக இருக்க
வேண்டும்.

இறுதியாக அவர்கள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்
கூடியவர்களாக இருந்தால் போதும், தனி நாட்டிற்காக போராடவோ, வேறு எதுவும்
செய்யவோ தேவையில்லை. சர்வதேச சட்டங்களின்படி மக்கள் தங்கள் சுய நிர்ணய
உரிமையின்படி தனி நாட்டை அமைத்துக் கொள்ளலாம். அதற்கான தேர்தலை நடத்திக்
காட்டினால் போதும். தமிழக மக்கள் தாங்கள் தனிநாட்டை விரும்புவதாக
தேர்தலின் மூலமாக நிரூபித்தால் இந்தியா தமிழகத்தை தனிநாடாக அங்கீகரித்தே
ஆக வேண்டும்.

அவ்வாறு செய்வதற்கு முன்பாக அவர்கள் தங்கள் நிர்வாகத் திறனை நாட்டை
மேம்படுத்துவதில் நிரூபிக்க வேண்டும். அதுவே அவர்கள் மீதான நம்பிக்கையை
ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும் வரை அவர்கள் தனிநாடு பற்றி பேசத்
தேவையில்லை. மாநில சுயாட்சி அல்லது இந்திய ஒன்றிய அரசியலமைப்புச்
சட்டத்தின் 370-வது பிரிவின் கீழாக அதிகாரங்களை பெற தொடர்ந்து முயற்சி
செய்து வரவேண்டும். அதேபோல மாநில அரசை மத்திய அரசுக்கு இணையான அரசாக
மாற்ற முயற்சி செய்து வரவேண்டும்.

கீழே ஒரு எடுத்துக் காட்டு...

South Sudan became an independent state on 9 July 2011, following a referendum that passed with 98.83% of the vote.[15][16] 

https://en.wikipedia.org/wiki/South_Sudan

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...