Saturday, August 17, 2013

கல்லூரி மாணவருக்கு உதவி தேவை

கல்லூரி மாணவருக்கு உதவி தேவை

நண்பர்களே, சொந்தங்களே,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா, தட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரனின் மகன் பிரியதர்ஷன் (22).

இவரது தாய் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்து விட்டார். இவரது தந்தை ஒரு வருடம் முன்பாக இறந்து விட்டார்.

தற்போது இவர் தன் தம்பி பிரகதீஸ்வரன் (18), தங்கை பிரகதீஸ்வரி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது தம்பி சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதை வைத்துதான் இவர்களின் குடும்பம் நடைபெறுகிறது. இடையிடையே இவர் வேலை செய்து வருகிறார்.

டிப்ளமோ (ஆட்டோ மொபைல்) படித்த பின்னர் இவர் இந்த ஆண்டு சிவகங்கை பாண்டியன் சரஸ்வதி யாதவா என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தார். டிப்ளமோ படித்துள்ளதால் இவர் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். ஆனால் மூன்று நாட்கள்தான் கல்லூரிக்குச் செல்ல முடிந்தது. இவர் பகுதிநேர பணிகளைச் செய்து படிப்பை ஓட்டிவிடலாம் என்று நினைத்தார்.  மேலும் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தனக்கு கிடைக்கும் உதவித் தொகையை இவருக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அந்த தைரியத்தில் கல்லூரியில் சேர்ந்து விட்டார்.

ஆனால் தம்பியை படிக்க வைக்க முடியாத நிலையில் இவர் படிப்பது பலரது கேள்வியை எழுப்பியது. மேலும் காலையில் உணவு சமைக்க வேண்டியிருந்ததாலும் இவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. உதவி செய்வதாக கூறியவராலும் உதவி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கல்லூரிக்குச் செல்லாமல் இவர் வேலை தேடி வருகிறார். இவருக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. ஆனால் அனைவரும் அவரது சான்றிதழை கேட்கிறார்கள். சான்றிதழ் கிடைத்தால் மதுரை வாடிப்பட்டி டிராக்டர் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

ஆனால், இவர் படித்த கல்லூரியில் இவர் சான்றிதழைக் கேட்டபோது, சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்பட்டுள்ளது, அது செப்டம்பர் முதல் வாரத்தில் கிடைத்து விடும் என்கிறார்கள். அதோடு கல்லூரியில் சேர்ந்து விலகுவதால் இந்த ஆண்டுக்கான கட்டணத்தை (ரூபாய் 20,000) செலுத்தச் சொல்கிறார்கள். பிரியதர்ஷன் இந்தத் தொகையை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.

இவர் தனக்கு தனது சான்றிதழைப் பெற்றுத் தந்தால் பேருதவியாக இருக்கும் என்று சொல்கிறார். எனவே நண்பர்களே, தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமானவர்கள் இருந்தால் இவருக்கான கட்டணத்தை குறைக்க அல்லது தள்ளுபடி செய்து இவரது சான்றிதழைப் பெற்றுத் தர முயற்சி செய்யலாம்.
நன்றி.

தொடர்புக்கு பிரியதர்ஷன் - 9600768084

Wednesday, August 7, 2013

மதத்தை மாற்றலாம் சாதியை மாற்ற முடியாது

அண்ணன் பெருமாள் தேவன் ஒரு பதிவில் முஸ்லீம்களிலும் மரைக்காயர் , லெப்பை போன்ற சாதிகள் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்..ஆனால் அவைகள் சாதிகள் அல்ல

அப்படியே நீங்கள் சாதியாக நினைத்தாலும் நாளையே எனது பெயரை ராஜாமுகம்மது மரைக்காயர் அல்லது ராஜாமுகம்மது லெப்பை என மாற்றிக்கொண்டு அவர்களுடன் ஒரே தட்டில் உணவருந்த முடியும...

ஆனால் உங்களால் பெருமாள் பறையர்,பெருமாள் வண்ணான் என்று மாற்றிக்கொண்டு அவர்களுடன் தண்ணீராவது குடிக்கமுடியுமா?....

நாங்கள் சாதிகளை இழிவாக சொல்லவில்லை அதனால் ஏற்படும் ஏற்றதாழ்வுகளையே இழிவாக கருதுங்கள் என்று சொல்கிறோம் நண்பரே...


நண்பரே,

இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஜனநாயகம் இல்லாவிட்டால் எந்த பண்பும் உருவாக முடியாது என்பதற்கு உலக இஸ்லாமிய வரலாறு எடுத்துக்காட்டாக உள்ளது.

இஸ்லாம் வாள் முனையில் வளர்ந்த மதம் என்பதை விளக்கும் வகையில்  ஏசியன் ஏஜ் பத்திரிகை ஆசிரியரான எம்.ஜே. அக்பர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். (உலகில் அன்பால், கருத்தியலால், தாகத்தால் வளர்ந்த ஒரே மதம் புத்தமதம். ஆனால் அதன் இன்றைய நிலை சர்ச்சைக்குரியது. இந்து மதம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதேயில்லை.)

ஒரே தட்டில் சாப்பிடும் இஸ்லாமியர்களால் எப்படி தன் சகோதர்கள் மீது குண்டு வீச முடிகிறது? ஈரான்-ஈராக் போர் உலகம் அறிந்ததே.

சுன்னி இஸ்லாமியருக்கும் ஷியா முஸ்லீம்களுக்கும் உள்ள மோதல்கள் உலகம் அறிந்ததே. குர்தீஷ் (முஸ்லீம்) இனமக்களை கொன்றொழிப்பதும் இஸ்லாமியரே.

ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியரும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியரும் ஏன் ஒத்துப் போவதில்லை? இரு நாடுகளும் ஒருவரையொருவர் நம்பத் தயாராக இல்லையே ஏன்?

மதவாதத்தில் இந்தியாவை பிரித்தபோது ஜின்னா, இந்தியா சில வருடங்களில் சிதறிவிடும், தமது நாடு வலுவான நாடாக இருக்கும் என்று மனப்பால் குடித்தார். அப்படி அவர் நம்பியதற்கு காரணம் இந்தியாவில் 700க்கும் மேலான மொழிகளைப் பேசுகிறார்கள், இந்து மதம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது, பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள் என்பதே ஆகும்.

ஆனால் நடந்தது என்ன? பாகிஸ்தானால் 25 ஆண்டுகள் வரை ஒன்றாக இருக்க முடியவில்லை. பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தானுக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. எந்த இந்தியா உடையும் என்று ஜின்னா கனவு கண்டாரோ அதே இந்தியா உதவியதன் பேரில் பங்காளதேஷ் உருவானது வரலாறு.

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த கடந்த 60 ஆண்டுகளில் அந்நாட்டை சர்வாதிகாரிகளே ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது உண்மை. செல்வச் செழிப்புள்ள நாடு (பாக் = செழிப்பு/வளம், ஸ்தான் = நாடு) என்று பெயரிடப்பட்ட அந்த நாடு இஸ்லாமுக்குரிய சகோதரத்துவத்தை அடைய வேண்டிய நன்மைகளை அடையாமல் மற்றவர்களை (அமெரிக்கா) அண்டிப் பிழைக்கும் நாடாகவே இருந்து வருகிறது என்பதும் உண்மை.

பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாநிலம் தனிநாடு கோரிவருகிறது. வடமேற்கு மாகாணத்திற்குள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சட்டமே செயல்படுவதில்லை.  

பிரிவினையின்போது இந்தியாவில் உபி, பிகார் மாநிலங்களிலிருந்து சென்று பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லீம்கள் இன்றும் இரண்டாம் தரக் குடி மக்களாகவே நடத்தப்படுகின்றனர். இதுதான் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவமா?

இன்னமும் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க அல்லது உடைக்க கனவு கண்டு வருகிறது. ஒருவேளை இந்தியா உடைவதாக இருந்தால் அது வெளிப்புற முயற்சியின் காரணமாக இல்லாமல் உள்நாட்டுத் தலைவர்களின் தோல்விகரமான கொள்கைகளின் காரணமாகவே அமையும்.

எந்த இந்தியாவின் உதவி பெற்று விடுதலை பெற்றதோ அந்த பங்காளதேஷ் இன்று இந்தியாவின் எதிரியாக இருந்து வருகிறது. இந்த குணம் எங்கேயிருந்து வந்தது?

வட இந்தியாவைப் பொறுத்தவரை பரேல்வி முஸ்லீம்களும் தேவ்பந்தி முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. (http://www.ummah.com/forum/showthread.php?162633-what-s-the-difference-between-barelvi-s-and-deobandi-s)

தமிழத்தைப் பொறுத்தவரை உருது பேசும் முஸ்லீம்களை (பட்டானிகள்) மற்ற முஸ்லீம்கள் சமமாக நடத்துவதில்லை. இது எப்படி?

வட இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும் தென்னிந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. தென்னிந்திய முஸ்லீம்களுக்கும் கல்வி அறிவு, தொழில் முன்னேற்றம் ஆகும்.

இதற்கு அடிப்படைக் காரணம் தென்னிந்தியாவில் இஸ்லாம் மதம் வாள் முனையில் வளரவில்லை. வியாபாரத்திற்கு வந்த அரேபியர்கள் கேரளாவில் தங்கள் மதத்தைப் பரப்பினர். அதுவே தமிழகத்திற்கும் பரவியது. எனவே தென்னிந்திய முஸ்லீம்களிடம் ஓரளவு ஜனநாயகத் தன்மையைக் காணலாம்.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் உங்களைப் போன்ற முஸ்லீம்களை மாற்று மதத்தினருடன் வாதம் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அப்பாற்பட்டது. அதேவேளையில் சாதியை குறை சொல்லும் கடவுள் மறுப்பு இயக்கத்தினருடன் சேர்ந்துகொண்டு இஸ்லாமியர் சாதியைச் சாடுகின்றனர். உலகில் இன்றளவும் இஸ்லாம் மதத்தின் பெயரால் தீவிரவாதம் நடத்தப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது. அதே அடிப்படைவாதம் சாதியைக் குறை கூறும் முஸ்லீம்களிடம் காணமுடிகிறது. இவர்கள் கடவுள் மறுப்பாளர்களுடன் சேர்ந்து பேசுவதே இஸ்லாத்திற்கு எதிரானதாகும்.

இதுபோன்ற அடிப்படைவாதங்களிலிருந்து இஸ்லாமை பிரித்தெடுப்பது உங்களை போன்றோரால்தான் முடியும். அதற்கு நீங்கள் கண்மூடித்தனமான பிரச்சாரங்களை விட்டு விட்டு அதன் ஜனநாயகத் தன்மைகளை மீட்டெடுப்பதில்தான் உள்ளது. (சாதியை புரிந்துகொள்ளாமல் அதைக் கெட்டது என்று பிரச்சாரம் செய்வதும் தவறானதே. இது இஸ்லாமிய மதத்தில் உள்ள பிரிவினையைப் போன்றதே. எனவே சாதியைக் குறை சொல்வதை இஸ்லாமியர் கைவிடுவது நல்லது.)

ஒருவேளை உலகம் முழுவதும் உள்ள 57 இஸ்லாமிய நாடுகளிலும் ஜனநாயகம் மலர்ந்துவிட்டால் உலகில் கோலோச்சும் மதமும் இஸ்லாம் மதமாகவே இருக்கும். ஆனால் இந்த நாடுகள் குறுகிய மனப்பான்மைகளால் நிறைந்து கிடப்பதால் இஸ்லாமின் சகோதரத்துவம் இந்த நாடுகளில் தோல்வியைத் தழுவி நிற்கிறது. இங்கெல்லாம் யதார்த்தமாகாதா இஸ்லாமிய சகோதரத்துவம் இந்தியாவில் மட்டும் யதார்த்தமாகிவிடுமா என்ன?

இந்தியாவில் இஸ்லாமிய சகோதரத்துவம் என்பது மாற்று மதங்களுடன் அவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருவதே. அப்படித்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்து மதம் எப்படி வேறுபாடுகளை ஏற்கிறதோ அதுபோலவே இஸ்லாமும் வேறுபாடுகளை ஏற்பதாகவே உள்ளது. ஒரு பரந்த மதம் அப்படித்தான் இருக்க முடியும். அதைப் புரிந்துகொள்வதே அடிப்படைவாதத்திலிருந்து விடுதலை பெறுவதாகும்.

இனம் வேறு, மதம் வேறு. இரண்டும் ஒன்றாக முடியாது. இனம் பிறப்பால் வருவது. மதம் கருத்தால் வருவது. மதத்தை மாற்றிக் கொள்ளலாம். இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இனக்குழுவான சாதியையும் மாற்ற முடியாது.

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...