Monday, February 24, 2020

வன்கொடுமைச் சட்டத்தின் கீழாக வழக்கு

கடந்த 2015-ம் ஆண்டு நிலப்பிரச்சையில் என் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழாக வழக்குத் தொடுக்கப்பட்டது. என்னோடு சேர்ந்து அப்போது 89 வயதான என் தந்தை, என் தம்பி, தம்பி மனைவி மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. புகாரின் சாராம்சத்தில், பழங்காலத்தில் ஜமீன்தார்கள், சாதிப் பெயரைச் சொல்லி திட்டிக் கெண்டே கொலை செய்ய முயற்சிப்பது போன்ற காட்சி உருவாக்கப்பட்டு இருந்தது. புகார் நேரடியாக ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் செய்யப்பட்டதால் காவல் துறை நடவடிக்கை எடுக்க வில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் உயர் நீதிமன்ற ஆணை பெற்றனர். அதன் பின்னர் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெரிந்தும் வேறு வழியில்லாமல் காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனால் என்ன ஆனது? எங்களுக்கு பண விரயமும், அலைச்சலும் ஏற்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் பொய்யான புகார் என்று கூறி வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் என்ன விசேஷம் என்றால் சம்பந்தப்பட்ட கிராம பள்ளர் சமுதாயத்தவர் பலரும் எங்கள் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர்கள் ஆவர். அவர்களில் சிலர் எங்களுக்காக சாட்சியும் சொன்னார்கள் என்பதுதான். ஆனால் புகார்தாரர்களுக்கு ஆதரவாக யாரும் (பொய்) சாட்சி சொல்ல யாரும் முன்வரவில்லை. இப்படி ஆசாமிகள் எல்லா சமுதாயங்களிலும் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக அவர்கள் சார்ந்த சமுதாயத்தவரை ஒட்டுமொத்தமாக வெறுப்பது தவறானது. மேற்படி நிலப்பிரச்சனை விசாரணையில் இருந்து வருகிறது. முடிந்ததும் அது பற்றியும் எழுதுகிறேன்.






Tuesday, February 18, 2020

பராந்தகச் சோழர் காலத்து பறையர் கல்வெட்டு


பறையர் என்றால் தீண்டத்தகாதவர்கள் என்ற ஆரிய கோட்பாட்டினை உடைக்கும் விதமாக, நம் முன்னோன் ஶ்ரீமதுரை கொண்ட கொப்பரக்கேசரி பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டு ஒரு செய்தியை உரைக்கிறது.

இடம் : திருவண்ணாமலை மாவட்டம்
காலம் : கிபி922
அரசர் : பராந்தகச் சோழர்
பட்டம். : பரகேசரி

செய்தி:-
பராந்தக பல்லவரையர் ஆள மீகொன்றை நாட்டுப் பெருவேளூர் நாட்டுப் பாலை ஏரியில் ஏற்பட்ட அழிவினை சீர்படுத்த கல்தூம்பு நாட்டிதேவதான, ஏரிப்பட்டி ஊர்ப்புற நிலங்களை#பாலைப்பறையன்_சாத்தன்என்பவரும்,ஊராரும் கொடையளித்த செய்தி உள்ளது.

சுமார் 1100வருடங்களுக்கு முன்பே பறையர்கள் கொடையளிக்கும் அளவிற்கு, நம் முன்னோன் சோழர்கள் பறையர் சமூகத்தை அனைத்திற்கும் அப்பாற்பட்டு சக தமிழ்குடியாகத் தான் பார்த்தார்களே அன்றி, தலித்துகளாக அல்ல....!

பதிவை எழுத உந்தியவர்கள்
Perumal Ammavasi Thevan
சங்க தமிழ்ச்செல்வன்
ராஜாதிராஜதேவன் மு
Lakshminarayanan Muthalagan

நன்றி
தமிழகத் தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு



Monday, February 17, 2020

இராஜராஜ சோழரின் அரசு அதிகாரி சேந்தன் கள்ளன்

திருச்சி மாவட்டம் குமாரவயலூர் என்கிற ஊரில் உள்ள திருக்கற்றளி பரமேசுவர் கோயிற் கல்வெட்டுகளில் உள்ள கல்வெட்டுகளில் இராஜ இராஜ சோழத் தேவரின் அரசு அதிகாரிகள் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு கல்வெட்டில் சேந்தன்_கள்ளன் என்பவர் குறிக்கப் பெறுகிறார்.
காலம் : கிபி992
அரசர் : ஶ்ரீஇராஜராஜ சோழத் தேவர்
பட்டம். : ஶ்ரீராஜகேசரிவர்மன்
செய்தி. : நந்தா விளக்கு எரிக்க கொடை
அளித்தல்
இக்கல்வெட்டில் ....ரூர் உடையான் சேந்தன் கள்ளன்...
கட்டிய என முன்பும்,பின்பும் சிதைந்து காணப்படுகிறது.
இதேபோல் கிபி 915ஆம் ஆண்டு ஶ்ரீபராந்தகச் சோழன் காலத்தில் புதுக்கோட்டை கல்வெட்டில் சேந்தன் கள்ளன் என்பவர் குறிக்கப்படுகிறார்.
ஆக சேந்தன் கள்ளன் என்பவர் சோழர் காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தளபதியாகவே இருந்துள்ளார்.
இன்றும் கள்ளர்களில்:-
சேந்தர்
சேந்தமுடையார்
சேந்தனார் என்ற பட்டங்கள் தாங்கி வாழ்ந்து வருகிறார்கள்.
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு





Sunday, February 16, 2020

குடியுரிமைச் சட்டமும் இந்து - முஸ்லீம் அரசியலும்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் திமுகவும் இந்து - முஸ்லீம் மக்கள் மத்தியில் தவறான அரசியலை முன்னெடுத்தனர். இது காந்தியின் முஸ்லீம்களை மகிழ்ச்சிப்படுத்துதல் அரசியலின் தொடர்ச்சியாக அமைந்தது. சுதந்திர இந்தியாவில் இந்துக்களுக்கு கீழே இரண்டாம்தர குடிமக்களாக இருக்க வேண்டிய சூழல் வரும் என்று அஞ்சித்தான் பாகிஸ்தான் தனிநாடு கோரப்பட்டது. பாகிஸ்தான் தனிநாடு கொடுத்தால்தான் தொடரும் இந்து- முஸ்லீம் கலவரம் நிற்கும். இந்துக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ஒரு தோல்வியுற்ற அரசாகி விட்டது. முஸ்லீம் என்ற உணர்வால் பாகிஸ்தான் நாடு பிளவுபடுவதை தடுக்க முடியவில்லை. உருது பேசும் பாகிஸ்தானியரால் பெங்காலி பேசும் முஸ்லீமை சமமாக நடத்த முடியிவில்லை. பங்களாதேஷ் விஷயத்தில் மதத்தை விட மொழியே வெற்றி பெற்றது. ஆனால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தான் முஸ்லீம்களை விட சிறந்த வாழ்க்கை நிலையில் இருக்கிறார்கள். இப்படியான சூழலில், சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் முஸ்லீம் முகஸ்துதி அரசியலை பின்பற்றின. இது இந்துக்களை முகம் சுழிக்க வைத்தது. குறிப்பாக வட இந்தியாவில் இந்து - முஸ்லீம் இடையே ஒரு மறைமுக பகை தொடர்வது உண்மையே. ஆனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இந்து - முஸ்லீம் இடையே பகை கிடையாது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நாத்திகவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த முஸ்லீம்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு இந்து மதத்தை கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். அரசியல் ஓட்டத்தில் இந்துக்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இன்று நிலை மாறி விட்டது. உலகம் முழுவதும் வலதுசாரி அரசியல் வென்று வருகிறது. இந்தியாவில் இந்து அரசியல் கோலாேச்சத் தொடங்கி விட்டது. ஈழப்போருக்குப் பின் தமிழகத்தில் தமிழ்த் தேசிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. திராவிடம் என்ற போலித்தனத்தின் முகமூடியை தமிழர்கள் சமூக வலை தளங்களில் கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் திராவிட கொள்கைகள் தவிடு பொடியாகி தெலுங்கர்கள் தமிழ் அரசியலில் செலுத்தும் ஆதிக்கம் பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்து அரசியல் என்ற பெயரில் இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் பாஜக தமிழகத்தையும் கைப்பற்ற முயன்று வருகிறது. இவ்வாற நிலையில் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பாஜக அரசியலமைப்புச் சட்டம் விதி 370 நீக்கியுள்ளது. உண்மையில் இந்த நடவடிக்கைக்கு எதிராகத்தான் இந்திய தேசிய இனங்கள் அனைத்தும் போராடியிருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்தபடியாக பாஜக குடியேற்ற உரிமைச் சட்டத்தை திருத்தியுள்ளது. இதில் தஞ்சம் கோரும் முஸ்லீம்கள், தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படாது என்று கூறியுள்ளது. இந்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் எந்த முஸ்லீமும் பாதிக்கப்பட மாட்டார் என்பது உறுதியான ஒன்று. அப்படி இருந்தும் முஸ்லீம் பாகுபாடு என்ற பெயரில் காட்டப்படும் எதிர்ப்பு போராட்டங்கள் வரவேற்கத் தக்கதே. ஆனால் அதற்க இந்த அளவுக்கு தீவிரம் காட்ட வேண்டுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. போராடும் முஸ்லீம்களுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உடனடி ஆதரவு வழங்கி வருகின்றன. ஆனால், ஏற்கனவே அரசு முஸ்லீம்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. முஸ்லீம்கள் இந்துக்கள் அளவுக்கு மத விவகாரங்களில் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில்லை என்ற கருத்து இந்துவாக உள்ள தமிழர்களிடையே நிலவுகிறது. எனவே, இந்த விஷயத்தில் முஸ்லீம்கள் அத்துமீறிப் போராடுவது இந்துக்கள் மத்தியில் முகச் சுழிப்பையே ஏற்படுத்தும். இதனால் யாருக்கு லாபம் பாஜகவுக்கே ஏற்படும். மனிதநேய மக்கள் கட்சித் தலைவரான ஜவஹிருல்லா தமிழக சட்டசபையில் குடியேற்ற உரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டத்தைக் கைவிடுவதாக கூறியுள்ளார். ஆனால், வீரியத்துடன் நடத்தப்படும் போராட்டத்தின் கோரிக்கை எவ்வளவு பலவீனமானது என்று யாரும் சொல்லத் தேவையில்லை. எனவே, முஸ்லீம்கள் தமிழர்கள் என்ற முறையில் இந்துத் தமிழர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழர்கள் முஸ்லீம்களின் செயல்களால் பாஜகவின் பக்கம் சாய்ந்து விடக் கூடாது. குடியேற்ற உரிமைச் சட்டம் எவ்வாறு தமிழக முஸ்லீம்களை பாதிக்கிறது என்பதை பற்றி வெளிப்படையாகப் பேசலாம் வாருங்கள்.

Saturday, February 15, 2020

பராந்தக சோழரின் எயில்நாட்டு கள்ளர் தளபதி

திருச்சி மாவட்டம் திருநெடுங்களத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டுகள் ஒன்றில் எயில் நாட்டு சோழர் அதிகாரி ஒருவர் வருகிறார்.
காலம் : கிபி926
வம்சம் : சோழர்
அரசர் : முதலாம் பராந்தகச் சோழன்
பட்டம் : மதுரை கொண்ட கோப்பரகேசரி
கல்வெட்டு செய்தி:-
திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடுகளை ஏற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி நியமத்து #கள்வன்_உலங்கண் ஆவார். இந்த கள்வன் உலங்கண் என்பவர் பராந்தக சோழரின் அதிகாரமிக்க தளபதியாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் எயில் நாட்டில் உள்ளவருக்கு உறையூர் கூற்றத்தில் உள்ள கோவிலில் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இருப்பதிலே நாம் அவரின் அதிகாரத்தை அறியப் பெறலாம்.
இதில் வரும் எயில் நாடு என்பது பழைய சோழர் நாட்டமைப்பான இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டமாகும். ஏற்கனவே இதே மாவட்டத்தில் தான் ஶ்ரீகள்ளச் சோழன் என்கிற 10 நூற்றாண்டு கல்வெட்டும் கிடைத்துள்ளது.
இந்த கல்வெட்டோடு சேர்ந்து பராந்தக சோழரின் கல்வெட்டுகளில் கள்ளர் பெருங்குடியின் கல்வெட்டுகள் மொத்தம் 5ஆகும்👍 சோழர் காலத்து கல்வெட்டுகளில் மொத்தம் 14ஆகும்👍
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு



மதுரையின் ராபின் ஹூட்

ஏசியன் எஜிகேசனல் சர்வீஸ் என்பதன் மூலமாக வெளியிடப்பட்ட மதுரை வரலாறில் கள்ளர்களை பற்றிய செய்தி “கள்ளர்கள் தங்களுடைய இனத்தின் பெயரை சொல்லுவதற்கு ஒரு போதும் தயங்கியதில்லை, தங்களுடைய நாட்டை பாதுகாக்க அவர்கள் எடுத்து வைக்கும் வாதம், இங்கிலாந்தில் வாழ்ந்த ஏழை பங்காளன் ராபின் ஹுட் போல உள்ளது” என குறிப்பிடுகின்றனர்.
மதுரையின் பூர்வகுடி மக்களான கள்ளர் பெருங்குடிகள் எந்தவித அந்நிய பேரரசுகளிடம் அடிபணிந்து போனதில்லை என்பதை பல ஆதாரங்கள் உணர்த்துகிறது.
ஆனால் இன்றோ 90%இளைஞர்கள் போதை வஸ்த்துகளுக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள் என்பதே கசப்பான விடையம்....’
மீண்டெழுவோமா...........?
நன்றி
Madura A Tourist guide illustrated
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Friday, February 14, 2020

பாண்டியரின் மிழலைக் கூற்றத்து கள்ளர் தளபதிகள்


மாறவர்மன் சுந்தரபாண்டித் தேவர் கிபி1230ஆம் ஆண்டு திருக்கோளக்குடி கல்வெட்டில் குறிக்கப்பட்ட கள்ளர் தளபதிகள்:-
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - பல்லவரையர்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - கச்சிராயன்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - சேதிராயன்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - மாதவராயன்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - அதிகைமார்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - விழுப்பரையர்
மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றம் - திருநீலதரையன்
மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - செம்பியத்தரையன்
மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - முனையத்தரையர்
மிழலைக் கூற்றத்து கீழ்க்கூற்றம் - கலிங்கத்தரையன்
இதில் விழுப்பரையரை இதே சுந்தரபாண்டியத் தேவர் காலத்திற்கு 8ஆண்டுகளுக்கு முன்பு கள்ளன் விழுப்பரையர் என்றே கல்வெட்டு உள்ளது.
மேற்கண்ட தளபதிகளின் வழித்தோன்றலாக இன்றும் சேதிராயர்,மாதவராயர்,அதிகைமார்,நீலங்கொண்டார்,செம்பியத்தரையர்,முனையத்தரையர்,கலிங்கராயர்,கச்சிராயர் என்று இன்றும் கள்ளர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இன்று பல்வேறு தொழில் செய்து வந்தாலும் அவர்தம் குருதியின் அரச,போர்குடி தாக்கம் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
மீண்டெழுவோமா.....?
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு







Monday, February 10, 2020

தமிழரின் மத உரிமை



தமிழர்கள் பண்டைக் காலத்தில் எந்தவித கட்டமைக்கப்பட்ட மதங்களிலும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களை, இயற்கையை வழிபட்டு வந்தனர். குலதெய்வங்களை வழிபட்டு வந்தனர். பின்னர் அவர்கள் படிப்படியாக கட்டமைக்கப்பட்ட மதங்களுக்குள் சென்றார்கள். அப்படி சென்ற மதங்கள்தான் ஆசீவகம், புத்தம், சைவம், வைணவம். உண்மை இப்படி இருக்க, நாம் தற்போது அவர்கள் எந்த பிரிவில் இருக்கிறார்கள் என்பதை வைத்து அவர்களை குறை சொல்ல முடியுமா? குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆட்சியாளர்களாக ஆனபோது கணிசமான அளவு தமிழர்கள் அந்த மதங்களையும் தழுவினார்கள். இதற்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழரிடையே நிலவிய தீண்டாமை அல்லது வேறு ஏதாவது கட்டாய மத மாற்றம், தேவை கருதிய மதமாற்றம் போன்ற வேறு ஏதாவது காரணங்களுக்காக அவர்கள் மதம் மாறி இருக்கலாம். அதற்காக அவர்களை என்று குறை சொல்ல முடியாது. அதற்காக அவர்களை “பழைய மதத்திற்கு திரும்பு” என்று சொல்ல முடியாது. தமிழர் ஒருவர் எவ்வாறு இந்து மதத்தில் இருக்கிறாரோ, அதுபோலவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களிலும் இருக்கிறார்கள். தற்போதைய பிரச்சனை என்னவென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்து தமிழர்களை தங்கள் மதத்திற்கு மாற்ற விரும்புவதுதான். அதேபோல அவர்களை வெறுப்பது, அவர்களை தாக்குவது, கொலை செய்வது போன்றவையும் நடக்கின்றன. இதற்கு காங்கிரஸ், திராவிடக் கட்சிகள் கடைப்பிடித்த போலித்தனமான மதச்சார்பின்மையும், வாக்கு வங்கி அரசியலும் காரணமாகவே அமைகின்றன. மத அடிப்படையில் இவ்வாறு ஏற்பட்டுள்ள வெறுப்பை மாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்த அரசை செலுத்தும் கட்சிகளின் தவறான நடவடிக்கைகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ தமிழர்களிடையே தவறான போக்கையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஈழப்போருக்குப் பின்னர் தமிழர் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வு எழுச்சி பெற்று வருகிறது. இந்த உணர்வு இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ தமிழர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறது. இதுபோன்ற விழிப்புணர்வு தமிழின மதக் குழுக்களிடையே ஒரு இணக்கமான போக்கை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அவர்கள் ஒருவர் மற்றொருவரின் மத உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களை சகோதரர்களாக நடத்த வேண்டும். தமிழினம் போலியான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்காது. அதேபோல மதப் பாகுபாடும் காட்டாது. ஆனால், தமிழின ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த மதத்தவர் செயல்பட்டாலும் அவர்கள் சமமாக நடத்தப்பட்டு சட்டத்தின் முன்னே நிறுத்தப்படுவார்கள். அதேபோல கடுமையான மதமாற்ற, மதப் பரப்புரைச் சட்டங்கள் அமலாக்கப்படும். மத ரீதியான பிரச்சனைகள் தொடர்வதாக இருந்தால் அனைத்து மதங்களும் அரசுடமை ஆக்கப்படும். தமிழ்த் தேசிய அரசியலுக்கு தமிழினப் பாதுகாப்பே முக்கியமானது. அதற்கேற்றவாறு தமிழரின் மத உரிமைகள் அமையும்.

Saturday, February 1, 2020

யார் அந்த ஆதித்தமிழன்


முடிவுரை

யார் அந்த ஆதித்தமிழன் என்கிற தலைப்பில் இதற்கு முன்பு, இரண்டு பாகங்களாக எழுதியுள்ளேன். அதனுடைய இணைப்பு கீழே உள்ளது.

https://www.facebook.com/100026716305728/posts/474917933408746/

https://www.facebook.com/100026716305728/posts/478637583036781/

சென்ற பதிவில் ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சம்வெளி நாகரிகத்தை தோற்றுவித்தவர்களாக களவர்,மழவர் என இரண்டு பழங்குடிகள் என ஆதாரத்துடன் உரைத்துள்ளதை பதிவிட்டுருந்தேன்.

அதேபோல் களவரும்,மழவரும் தங்களுடைய வீரத்தால் இருவரும் மறத்தின் அடிப்படையில் மறவர் என அழைக்கப்பட்டனர்.

ஆகோள் பூசலில் ஈடுபட்ட பெரும்பாலான நடுகற்கள் களவர்,மழவர் என்றே வழங்கப் பெருகிறது.

களவர்,மழவர் மறவர் என அழைக்கப்பட்டதன் இன்னொரு காரணமாக, முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் இரா பூங்குன்றன் அவர்கள் அகநானூறு இலக்கிய பாடல் மூலமாக விளக்குகிறார்:-

ஆகோள் பூசலில் மழவர்கள் வெட்சி மழவராகவும்,கரந்தை மழவராகவும் நின்று போரிடுகிறார்கள். அப்பாடலில் மழவர்கள் நிரை கவர்ந்த போது மறவர்கள் அதனை மீட்டனர் என்று கூறுகிறது. மழவர் என்பதின் ழகரம் கெட்டு றகரமாக திரரிந்து மறவர் என வழங்கப் பெறுகிறது. ஆக மழவர் என்பதின் போலியாக மறவர் என்னும் சொல்லாடல் வருகிறது.

ஆகையால் ஆகோள் பூசலில் அதாவது வெட்சி,கரந்தையை மறவர்,மழவர் என்பதன் போலி உறுதிபடும் போது மழவரே ஈடுபட்டுள்ளார்கள் என்பது இங்கு உறுதியாகிறது.

பாடல் வரிகள்:-

நுழைநுதி நெடுவேல், குறும்படை #மழவர்
முனைஆத் தந்து முரம்பின விழித்த
வில் ஏர் வாழ்க்கை விழுந்தொடை #மறவர்

இதேபோல் அகநானூறு பாடலில்:-

ஆகோள் மூதூர் கள்வன் என பாண்டிய மன்னனை கள்ளர் குடியாக குறித்து பின்பு அதே பாண்டிய மன்னனை மறத்தினால் தென்னவன் மறவன் என்று அழைக்கப் பெறுகிறார்.

ஆக களவர்,மழவர் இருவரும் மறத்தினால், மறவராக அழைக்கப் பெற்று பின்பு மறவர் என்ற ஜாதி நிலைக்கப் பெற்றது என்ற ஐராவதம் மகாதேவன் ஐயாவின் கூற்று உறுதியுடன் ஊன்றி நிலைத்துவிட்டது.

அதேபோல ஆகோள் பூசலில் ஈடுபட்டு நடுகல்லில் நிற்கும் களவர்களை தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகளையும் இனைத்துள்ளேன்.

மேலும் மூவேந்தவரின் முதற் போர் முறையான வெட்சி,கரந்தை போர்கள் இங்கு களவராகவும்,மழவராகவும் அறியப்பெற்று, அவர்கள் மூதின் மறவராக உள்ளார்கள் என்ற இரா பூங்குன்றனாரின் கருத்து இங்கு மேலும் வலுப்பெறுகிறது.

அதுமட்டுமில்லாமல் ஆகோள் பூசலில் ஈடுபட்ட சோழ அரச மரபினருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
#ஶ்ரீகள்ளச்சோழன் என்றே 10ஆம்நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டில் கிடைக்கப் பெறுகிறது.

மழவர் என்போர் இலக்கியம் முதல் கல்வெட்டு வரை இன்றும் கள்ளராக அறியப்படுகின்றனர்.

புல்லி அரசரை இளையர் பெருமகன் என்று மழவர் தலைவராக அறியப்படும், கள்ளர் பெருமகனாக வருகிறார்.

மேலும் கள்ளர் குல கொடும்பாளூர் வேளிர் தங்களின் மறத்தினால் ஒரு கல்வெட்டில் மறவன் என்று அழைக்கப்பட்டனர்.

ஆக களவர்,மழவர் இருவரும் கள்ளர் குடியாக நிலைக்கப் பெருகின்றனர்.

இன்றும்
மழவர்
மழவராயர்
அதியமார்
மலையமான்
இளம்பூண்டார்
என கள்ளர் பெருங்குடிகள் தங்கள் பட்டமாக வரலாறை தாங்கி நிற்கிறார்கள்.

முதல் ஆகோள் பூசல் கல்வெட்டான புலிமான் கோம்பை கல்வெட்டு ஆசியாவில் குடியேறிய முதன் மாந்தராக M130y அறியப்பெறும் பிறமலைக் கள்ளர்களின் பூமியிலே கிடைக்கப் பெறுகிறது.

மேலும் மதுரையில் கிடைத்த 2000வருடம் பழமையான ஜல்லிகட்டு ஓவியம் கூட பிறமலைக் கள்ளர் நாட்டில் வரும் மேட்டுப்பட்டியிலே கிடைக்கப் பெருகிறது.

பழமையான ஜல்லிக்கட்டு கூட உறங்கான்பட்டி,கரடிக்கல் ஜல்லிகட்டு என ஆவணங்களுடன் உயிர்ப்புடன் உள்ளது.

உறங்கான்பட்டி : மத்தம் மேல் நாட்டு கள்ளர்களும்
கரடிக்கல் : பிறமலைக் கள்ளர்களாலும் நடத்தப்படுகிறது.

அதேபோல் களவரும்,மழவரும் தங்களை தொழில் அடிப்படையில் அகம்படியர் என்றும் அழைத்துள்ளனர்.

அகம்படியர்:-

இச்சமூகத்தை பலரும் பல கருத்துகளை எழுதி வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய உன்மையான வரலாறாக சேரரிடம் இருந்து ஶ்ரீஅருண் மொழித் தேவர் காலத்தில் எளிதாக அறியப் பெறலாம்.

ஏனென்றால் முதன் முதலில் அகம்படி என்ற வார்த்தையை பயன்படுத்தி, அதனை ஒரு தனித்துறையாக கட்டமைத்தவர் இராஜ இராஜ சோழரே...!

ஆம் அகம்படி அணுக்க வில்லி என இராஜ இராஜ சோழரின் மெய்காவல் அதிகாரிகளாக கல்வெட்டில் வருகிறார்கள்.

மேலும் #அகம்படி_நியாயங்கள் என்று ஒரு தனித்துறையை உருவாக்கினார் இராஜ இராஜ சோழர், அத்துறையில்:-
நிர்வாகம்
கோவில் கருவூல நிர்வாகம்
கடற்படை வில்லிகளாகவும் வருகிறார்கள்.

ஏன் இவர்களுக்கு அருண் மொழித் தேவர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்றால், சேர நாட்டை முழுமையாக கைப்பற்றியவுடன் பல சேர அரையர்கள் சோழ நாட்டில் படைத்தலைவர்களாகவும்,நிர்வாக அதிகாரிகளாகவும் தஞ்சை சோழ நாட்டில் ஐக்கியமாகினர்.

அவ்வாறு ஐக்கியமான அரையர்களும்,படைத் தலைவர்களும் தொழில் அடிப்படையில் தங்களை அகம்படி என்று அழைக்கப் பெற்றனர்.

மழவர் வழி வந்த மலையமான் வம்சத்தினர் சோழர்களிடம் அகம்படி தொழிலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அகம்படி மலையமான் என்று கல்வெட்டு கிடைக்கப் பெறுகிறது.

அதேபோல் பல்லவராயரில் ஒருவர் சோழரின் அகம்படியராக குறித்துள்ளார்.

ஏன் இராஜ இராஜர் அகம்படியர்களுக்கு இவ்வளவு சலுகைகளை கொடுத்தார் என்றால், அவருடைய தாய் அதே மழவர் குல தோன்றல் என்பதாலே மற்றும் தன்னுடைய கிளை மரபினர் என்பதாலே ஆகும்.

சரி இதற்கு களவர் குலத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால்...!

எந்த சேரர் குழுவினர் தங்களை சோழ நாட்டில் அகம்படி தொழிலில் நின்றார்களோ, அதே சேர குல மன்னன் தன்னை #கள்வன்_இனமான_கோக்கண்ட_ரவி என கள்ளர் இனமாகவே, கல்வெட்டு மெய்கீர்த்தியில் குறிக்கிறார்.

அதேபோல் பல்லவராயர் மரபு இன்றும் கள்ளராக பெருங்களூரில் வாழ்கிறார்கள்.....!

ஆகையால் தால் கள்ளர்,மறவர் கனத்ததோர் அகம்படியர் என பழமொழி உருவானது...!

இன்றும் சேர தலைநகரான கரூர் மற்றும் சேர மண்டலமான கோவை,திருப்பூரில் போர் மற்றும் அரசகுல தோன்றலான அகம்படியர்கள் தான் வாழ்கிறார்கள்.
மறவரும்,அகம்படியர்களும் கள்ளரில் இருந்து கிளைத்தவர்கள் என்பது என்னுடைய கூற்று மட்டும் அல்ல.
பல ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலின் கூற்றும் (M130y) அப்படித்தான்....!
இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் M130y விருமாண்டித் தேவரின் உறவினருக்கு பெரு நாட்டில் உள்ள மாயன் இனத்தை சேர்ந்தவரின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போவது கள்ளர்களின் உலகளாவிய நாகரிகத்தின் தொட்டிலாக வருவது, தமிழ் சமூகத்தின் பெருமை உலகளவில் கொடி கட்டிப் பறப்பது மகிழ்ச்சியே....!
நன்றிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
தர்மபுரி மாவட்ட கல்வெட்டுகள்
விழுப்புர மாவட்ட கல்வெட்டுகள்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
அகநானூறு
Walking with the Unicorn
Social Organization and Material Culture in Ancient South Asia
Jonathan Mark Kenoyer Felicitation Volume
திருச்சி பார்த்தி
விக்னேஸ்வர் பா மாளுசுத்தியார்
Sambandamoorthi Mazhavarayar
Anan Karthick
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

























நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...