Sunday, August 4, 2019

நாம் தமிழரில் என்ன நடக்கிறது?

பதிவாளர்: Ganthi Ganesh
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நாதக வில் வந்தோம் (கட்சி ஆரம்பித்த நாட்கள் முதல்).. அதற்கு முன் எங்களுக்கு அண்ணன் சீமான் அரசியல் வகுப்பு எடுத்தது கிடையாது. இந்த காலத்திற்கு தமிழ்தேசிய தத்துவத்தின் தேவை கருதி கோபத்தால் ஒன்றிணைந்தோம்.. நாதக என்ற ஒன்று ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் அண்ணனும் (திருட்டுப்பய ஆட்டை துரை அந்த குடும்பத்தில் இருந்த ஒருவரையும் ஆட்டையை போட்டது பலர் அறியாதது) அவர் நட்பு வட்டமும் எனக்கு பழக்கம்.. நாதக வில் இணைவதற்கு அவர் முக்கியமானவர்.
நாங்கள் பொதுவுடைமை அரசியல் பேசுபவர்கள், சுப.முத்துகுமார் அண்ணன் அந்த காலத்தில் இருந்தே தீவிர தமிழ்தேசியம் பேசுபவர். நாங்கள் எவ்வாறு அரசியலை பார்ப்போம், நாதக வில் நடந்து கொண்டிருக்கும் அரசியலை எவ்வாறு பார்ப்போம் என்பதை நன்கு அரசியல் அறிந்தவர்களும், அண்ணன் சுப.முத்துகுமார் நட்பு வட்டமும் அறியும்.
கட்சியில் இருந்த போதும் பல விடயங்களில் அண்ணன் சீமானுடன் உடன்பாடு இல்லை.. சகிப்புதன்மையிலேயே பல வருடங்கள் கடந்தவர்கள் நானும் என் நண்பர்களும்..
-> "பேச்சு என்பது ராணுவத்தின் ஒரு படைபிரிவு" என மேதகு.வே.பிரபாகரன் சொன்னதாக எதையாவது சொல்வதை சுற்றி இருப்போர் கைதட்டினாலும், அது என்னவோ கூட்டத்தின் நடுவே எங்களை மட்டும் முகம் சுழிக்க வைத்தது..
-> அண்ணன் சீமான் ஒரு தீர்க்கதரிசி, அனைத்தும் அறிந்தவர், தமிழினத்தின் கடைசி நம்பிக்கை போன்ற சொல்லாடல்கள் அதிகமாகியது.. நாம் எதிர்பார்த்து வந்த அரசியல் இதுவல்ல ..
-> அண்ணன் சீமான் "தலைமை ஒருங்கிணைப்பாளர்".. அதன் அதிகார எல்லைகள் எவ்வாறானவை? என அவரிடம் கேட்டால் அவருக்கே தெரியாது என்பதுதான் உண்மை.. அதுமட்டுமல்ல, தலைவர், செயலளார், பொருளாளர் என எந்த பொறுப்பிற்கும் வேலைகள் என்ன என கேட்டால் அவருக்கு தெரியாது.. இதைத்தான் அங்கு நிர்வாகம் என்பது இல்லை என்கிறோம்..
-> "என் பேச்சுக்களை பவன் கல்யான் கேட்டுவிட்டுத்தான் தூங்குவர், ஜெர்மனி அமைச்சரவையில் பேசுவார்கள்" என தனக்கான அரசியலில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் தற்புகழ்ச்சி கொள்வது.. அது பார்ப்பதற்கு அப்பட்டமான சினிமா வசனம் போன்றே இருக்கும்.. சுற்றி இருப்பவர்கள் எதையாவது சொல்லி புகழ் போதைக்காக ஊசி போட்டுவிட்டால் மேடையில் அதையும் சரியான தரவுகள் இல்லாமல் பேசுவது..
-> உலகத்திலேயே நீங்கள் மட்டும்தான் அசிங்கம் அசிங்கமாக பேசுவீங்க அண்ணே, அதனால் உங்களுக்கு மட்டுமே தலைவனாகும் தகுதி உள்ளது என சுற்றி இருக்கும் அல்லக்கை எவனோ ஊசி போட்டுவிட்டான் போல.. அதை தலைமை பண்பாக இன்னும் நினைத்து கொண்டிருக்கிறார்... 5 ஆம் வகுப்பு கூட வராத சிறுவன் அண்ணன் சீமானை விட அசிங்கம் அசிங்கமாக பேசுவான், கோபபடுவான்.. அவனை தலைவனாக ஏற்று கொள்ளலாமா? இது தகுதியும் கிடையாது, பெருமை கொள்ளவும் எதுவும் கிடையாது.. ஆனால் அதைதான் அண்ணன் மூலதனமாக கொண்டிருக்கிறார்.
-> அண்ணன் சீமானிடம் பாதிக்கபட்டவன் ஒரு குற்றசாட்டை சொன்னால், அதை விசாரிக்காமல் பாதிக்கபட்டவனையே நக்கல் செய்யும் பழக்கம் உள்ளது.. யார் அவரிடம் நிறைய நேரம் பேசுகிறார்களோ அவர்களே சரியானவர்கள் நல்லவர்கள் என எடுத்து கொள்வார் (இது மனித இயல்பு, தலைவனின் இயல்பு அல்ல).. திமுகவில் இதைவிட உள்கட்சி முரண்பாடுகள் உள்ளது, ஆனால் அண்ணாத்துரை இருபக்கமும் அனுசரித்து நடப்பார்.. அல்லகக்கை சொல்வதை எல்லாம் நம்பி பாதிக்கபட்டவனையே நக்கல் செய்ய மாட்டார்..
-> அண்ணன் சீமான் மீது ஜாதி அரசியல் குற்றசாட்டு வைப்பவன் நிச்சயம் ஒரு ஜாதி வெறியனாகத்தான் இருப்பான்.. அண்ணன் சீமானிடம் ஜாதிய பற்றோ வெறியோ இல்லை என 200% உறுதியாக சொல்ல முடியும்.. அவர் நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என எண்ணத்துடன் இருக்கிறார்.. அவரின் பேச்சால் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்.. எவரும் பசியுடன் இருக்க வேண்டுமே என நினைக்கக் மாட்டார்... இதை தாண்டிய எதுவும் அண்ணன் சீமானுக்கு ஒத்து வரவில்லை.. நிர்வாகத்தில் தோற்றுவிட்டார்..
-------------------------
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
"தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்" என அண்ணனிடம் நமது முப்பாட்டன் சொல்லி இருக்கிறார் என சொல்ல போனால், "அந்த முப்பாட்டன் என்ன எனக்கே அறிவுரை சொல்றானா? இங்க வந்து வேலை பார்க்க சொல்லு அவனை, ஆயிரெத்தெட்டு வேலை இருக்கு இங்க, அதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க நேரமில்லை" என சொல்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் சொல்ல முடியவில்லை..
----------------
ஒரு அரசியல் கட்சி என இருந்தால் பல குற்றசாட்டுகள் வரும்.. அதில் மாற்று கருத்தில்லை... அது பண மோசடி சம்பந்தப்ட்டதோ, பாலியல் சம்பந்தபட்டதாகவோ இருக்கலாம்.. தனிபட்டு என்னை போன்று சிந்திப்பவர்கள் ஊழல் குற்றசாட்டுகளை முதன்மையாக கொள்ளமாட்டார்கள்.. கருத்தியல் ரீதியாக வென்றுவிட்டோமா என்ற பார்வை மட்டுமே இருக்கும்.. ஆகையால் நாதக ஆட்சிக்கு வந்தால் இதுவரை உலகம் கண்டிராத ஊழல் இருக்கும்.. ஆனால் அப்படி இருந்தாலும் கருத்தியலை நிர்வகத்தின் மூலம் நிலை நிறுத்திவிடுவார்களா? என்றால் அதற்க்கு 0% கூட வாய்ப்பு இல்லை என தெரிந்தும் முட்டு கொடுக்க விரும்பினால் திமுகவையோ, அதிமுகவையோ, பாஜகவையோ விமர்சிக்கும் தகுதியை இழக்கிறோம்..
ஆரம்ப காலங்களில் அரசியல் அனுபவத்துடன் நாதக வில் இருந்த ஒவ்வொரு மாவட்ட ஆளுமைகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்றிருக்கிறார்கள்.. கார்ப்பரேட் நிறுவனங்களில் கூட அட்ரசன் என்ற பெயரில் விசாரணை நடத்தி அதுக்கு தீர்வை கொடுப்பார்கள்.. ஆனால் இங்கு அதற்க்கு வாய்ப்பு இல்லை.. சுத்தி இருக்குற ஏதாவது அல்லக்கை "அண்ணே அவன் துரோகிண்ணே, உங்களை திட்டுறான் அண்ணே" என வழக்கமான டெம்ப்ளேட்டை போடுவான்.. அப்படியா தம்பி "போறவன் போகட்டும், நாம மட்டுமே இருந்து நிர்வாகம் செய்து கொள்வோம் தம்பி" என நிர்வாகம் கொஞ்சம் கூட எட்டி பார்க்காத பேச்சைத்தான் பேசுவார்..
பாகிஸ்தானை பழி தீர்க்க வேண்டும் என்றால் கிர்க்கெட் போட்டியில் வென்றாக வேண்டும் என்பது போல.. கட்சிக்கு முரணாக யாராவது இருந்தால் "குரூப்பாக அட்டாக்" செய்து நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் (இவனுக வயசுக்கு வந்தவனுக என நினைத்து கொண்டு இருந்தேன்).. மற்றும் மற்றவர்களையும் நீக்க சொல்லி நிர்பந்திக்க வேண்டும்.. என்னையும் நிர்பந்தித்து இருக்கிறார்கள்.. ஆனால் அரசியல் கருத்து வேறுபாடால் நட்பை துண்டிக்க வேண்டிய அவசியம் என்ன என கேட்டிருக்கிறேன்.. எனக்கு திமுக, அதிமுக, திராவிட இயக்கங்கள், கம்யூனிச இயக்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், நாதக மீது பற்று கொண்டோர் வெறுப்பு கொண்டோர் என எவரும் என் தனிப்பட்ட வாழ்வில் நண்பர்கள்தான்.. இவர்கள் நட்பு பட்டியலில் இருந்து நீங்கவில்லை என்றால் "யாரும் இவன் கூட பேச கூடாது, பழக் கூடாது, அன்னம் தண்ணி பொழங்க கூடாது" என குரூப்பா வந்து அட்டாக் பண்ணுவானுக.. நம்மிடம் இருக்கும் குறைகளை சொல்லி ஒருவன் பதுதி போட்டால் அதுக்கு "லைக்" போட கூடாதாம் (எவ்வளவு பெரிய பிரச்சினை!!!!!)
தோழர் ஆர்த்திக் தமிழன், எத்தனை பேர் IT வேலையை விட்டுவிட்டு எந்த சம்பளமும் வாங்காமல் அல்லது பண மோசடி செய்யாமல் இதுவரை கட்சியில் முழுநேர அரசியல் வேலை பார்த்து கொண்டு இருப்பது? கொஞ்சம் பட்டியல் கொடுக்கக் முடியுமா?? தஞ்சாவூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது கல்வெட்டில் எழுதி வைக்க வசதியாக இருக்கும்.. அல்லது நாங்கள் சித்தாந்த ரீதியாக செய்து கொண்டிருக்கும் வேலைகளை உங்களிடம் காட்டி அப்ரூவல் வாங்கிவிட்டுத்தான் தொடர வேண்டுமா?? மாணவர் உதயகுமார், சாதிக்பாட்சா உள்ளிட்டோரும் தனிபட்ட குடும்ப பிரச்சினையில்தான் இறந்தார்கள்.. ஏன் வன்மம் கொண்டு கட்சியையே குற்றம் சொல்கிறீர்கள்??
தன் இருப்புக்கு ஆபத்தாக உணரும் திருட்டுப்பயல்கள் என்னைபற்றி கதைகளை அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்.. அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை என கருதுகிறேன்.. கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டால் என்னிடம் சொல்லவும், நானும் ஏதாவது தருகிறேன்.. எனக்கு துரோகி, அப்படி இப்படி என என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் கொடுங்கள்.. தயவு செய்து "இவன் நல்லவன்" என சான்றிதழ் கொடுத்துவிடாதீர்கள்.. அப்பறம் உன் "அட்டாக் டீம்" ல நானும் இருகிறேன் என நினைத்து மக்களுக்கு எதிரி என நினைத்துவிட போகிறார்கள்..
-----
குறிப்பு: இந்த திருட்டுப்பய "ஆட்டை" துரைமுருகன், எனக்கு 7 வருடங்களுக்கு முன் 4000 ரூபாய் தரனும்.. பல முறை கேட்டு சலித்துவிட்டது.. அவன் சட்ட ரீதியா என் மீது நடவடிக்கை எடுத்தால், அதை விட புண்ணியம் எனக்கு வேறெதுவும் இல்லை..
(சீக்கிரம் ஸ்கிரீன்சாட்டை எடுத்து அண்ணனுக்கு அனுப்பிவிட்டு கடமையை பாருங்கடா)
.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...