Monday, January 19, 2015

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சேவை


தேனி மாவட்ட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக பெரியகுளம் அருகே வேல் நகரில் ஐயப்ப சேவா கேந்திரம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2014 நவம்பர் 26-ம் தேதி துவங்கிய இந்த மையத்தில் 2015 ஜனவரி 18-ம் தேதி வரை ஐயப்ப பக்தர்களுக்கு பல சேவைகள் செய்யப்பட்டு வந்தது.

இந்த மையத்தில் சுக்கு காபி வழங்குவது, தங்கிச் செல்வது, மருத்துவ உதவி, அன்னதானம் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் 6000-க்கும் அதிகமான பக்தர்கள் சுக்கு காபி அருந்தியும், 2000-க்கும் அதிகமான பக்தர்கள் தங்கிச் சென்றும், 700-க்கும் அதிகமான பக்தர்கள் மருத்துவ உதவி பெற்றும், 5000-க்கும் அதிகமான பக்தர்கள் அன்னதானம் அருந்தியும் பயன் பெற்றனர்.

இந்த நிலையில் ஜனவரி 18-ம் தேதி அன்னதான நிறைவு விழா நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த விழாவில் குமாரி க.காருண்யா தேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாவட்ட இணைச் செயலாளர் எம்.  பெரியசாமி வரவேற்புரை வழங்க மாநில இணைச் செயலாளர் ப. கணேசன் தலைமையுரை ஆற்றினார்.



தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.கே. முத்துராமலிங்கம் முன்னிலை வகிக்க, தேனி அரண்மனைபுதூர் வேதபுரி ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி அத்யாத்மானந்தா ஆசியுரை வழங்கினார்.


முகாம் பொறுப்பாளர் அ. பெருமாள் தேவன் மகிழ்வுரை ஆற்றினார். சமாஜத்தின் கோட்டச் செயலாளரான பி.ஆர். உதயகுமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒன்றிய அமைப்புச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் பி. முப்பிடாரி ஆகியோர் விழாவை சிறப்பாக நடத்த உதவினர். 


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...