Sunday, November 28, 2021

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு






நேற்று (28-11-2021) உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழச்சி நடைபெற்றது. 1990-93 காலத்தில் படித்த நண்பர்கள் சந்தித்து உரையாடினோம்.

Tuesday, November 23, 2021

தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக நியமனம்

 தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச்சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு ஆலோசகராக என்னை நியமித்திருக்கும் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இயன்றவரை சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 


Monday, November 15, 2021

இடுக்கி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்

 



முல்லைப் பெரியாறு அணைந்து விடும் என்று சொல்லி கேரளா அணையில் தண்ணீரை தேக்க விடாமல் தடுத்து வருகிறதுகேரள அரசியல்வாதிகள் தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து விடும் என்று புரளியைக் கிளப்பி வருகின்றனர். தண்ணீரை தேக்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மட்டுமே தண்ணீர் எடுக்க வேண்டும் என்பதில்லை, இடுக்கி அணையிலிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்று ஓய்வு பெற்ற பொறியாளரான ரா. வேலுச்சாமி கூறியுள்ளார். அவர் இந்தத் தகவலை என்னிடம் கூறியதும் நான் இது பற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளரான எஸ். ஆர். சக்கரவர்தியிடம் தெரிவித்தேன். உடனே அவரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்றார். தேனி வந்த வேலுச்சாமியும் தமிழ்த் தேசிய ஆர்வலர் கோவை கண்ணனும் எஸ்.ஆர். சக்கரவர்த்தியை சந்தித்து திட்டம் பற்றி விவரித்தனர். உடனே அவர் இது பற்றி தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். அவர் திட்டம் எவ்வளவு சாத்தியமானது என்பது பற்றி முல்லை பெரியாறு பொதுப்பணித் துறை தலைமை அதிகாரியிடம் பேசச் சொன்னார். திட்டம் பற்றி விசாரித்த அதிகாரிகள் திட்டம் சாத்தியமான ஒன்றுதான் என்று கூறினார்கள். இதைத் தொடர்ந்து இதனை ஒரு மனுவாக தன்னிடம் கொடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நேற்று (15-11-2021) மாவட்ட ஆட்சியரிடம் திட்டம் பற்றிய மனுக் கொடுக்கப்பட்டது. அவர் இதனை தமிழக அரசுக்குத் தெரிவிப்பதாக கூறினார். பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த வேலுசாமி திட்டம் பற்றி விவரித்தார். திட்டத்தின்படி இடுக்கி அணையின் அடிமட்ட அளவிலிருந்து சுமார் 15 கிமீ சுரங்கப் பாதை அமைத்து கூடலூர் மொட்டையாண்டி கோவில் அருகே தண்ணீரைக் கொண்டு வந்து பதினெட்டாம் கால்வாய் வழியாக வைகை அணைக்கு தண்ணீரை கொண்டு வந்து விடலாம். இதில் கேரள அரசு தனக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கவும் செய்யலாம். ஏற்கனவே கேரள அரசு 1500 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது பற்றிப் பேசி வருகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை 500 கோடி செலவில் செய்து விடலாம் என்று வேலுச்சாமி கூறினார்.

Sunday, September 5, 2021

கல்வித் தந்தை மூக்கையாத் தேவர்



தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர்.


மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் மூக்கையா தேவர். முக்குலத்தோர் எனப்படும் இப்பிரிவினரில் கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளிர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். தேவர் இனத்தில் இந்த பிறமலைக் கள்ளர் இனம் பெரும்பான்மையானது. வீர பரம்பரையினரான இப்பிரிவினரை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து இவர்களுக்கு உரிய இடத்தைப் பெற தேசபக்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வகையில் மூக்கையா தேவரின் முயற்சியும் இந்த இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.
இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.
1952இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957இல் இவர் உசிலம்பட்டி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களிலும் நின்று வெற்றி பெற்றார்.
இவருடைய கட்சியின் பெருந்தலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையை மூக்கையா தேவரும் சாதித்தார். ராமனாதபுரம் நாடாளுமன்றத் தொகுதில் இவர் 1971இல் வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்து சட்டசபை கூடி சபா நாயகரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக இடைக்கால சபா நாயகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் சபையின் மூத்த உறுப்பினராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பெருமை மூக்கையா தேவருக்கும் கிடைத்தது.
1963இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் இவர் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைமையை இவர் பெற்றது இவருக்கு மட்டுமல்ல, தென் தமிழ் நாட்டின் மக்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்த நிகழ்ச்சியாகும். 1971இல் இவர் நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு பற்றிய விவரங்களை எடுத்துக் கூறி பேசிய பேச்சு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து இவர் கொடுத்த குரல் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அவரது வலுவான வாதங்களையும் மீறி அந்தக் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டதன் விளைவாக இன்று வரை தமிழக மீனவர்கள் படும் இன்னல்களை நாடு அறியும்.
கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம் செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.
மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் "உறங்காப் புலி", அதாவது தூங்காத புலி எனப் பெருமப் படுத்தி அழைக்கப்பட்டார்.
வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்க மூக்கையா தேவர் புகழ்!...






Wednesday, August 11, 2021

சீர் மரபினர் மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

 

நேற்று (10-08-2021) அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சீர் மரபினர் மக்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் மற்றும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

Saturday, July 24, 2021

தமிழின அரசியலுக்கான எச்சரிக்கை மணி



இந்தியத் துணைக் கண்டமானது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சகிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த வெள்ளையன் தனது பிரித்தாளும் அரசியலுக்கு வசதியாக இந்தியர் மீது மதச்சார்பின்மை என்ற கொள்கையை அரசியல் கொள்கையாகத் திணித்தான். வெள்ளையர்களை நல்லவர்கள் என்று நம்பிய குஜராத்தியான காந்தியும், வெள்ளையன் கல்வியை கல்வி என்று நம்பிய பண்டிதர்களும் அதுபோன்ற அரசியல்தான் இந்தியாவுக்கு உகந்தது என்று நம்பினார்கள். அதையே சட்டமாக்கினார்கள். ஆனால் வெள்ளையன் தொடர்ந்து திருச்சபை மூலமாகவே தனது மன்னர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வந்தான். உலகெங்கும் மக்களாட்சி நடைபெற்று வரும் இந்தக் காலத்திலும் மன்னர் குடும்பத்தை அன்னாந்து பார்த்து வியந்து வருகிறான். அப்படிப்பட்ட அறிவுக் குருடர்கள் ஓதிய மதச்சார்பின்மையை இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய சிறுபான்மை ஆட்சியாளர்களும் தங்கள் வசதிக்காக அதையே தொடர்ந்தார்கள். அதன் விளைவுதான் இந்தத் துணைக் கண்டத்தில் போலி மதச் சார்பின்மை துளிர்விட்டு இன்று விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதற்கான ஒரு எடுத்துக் காட்டுதான் ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ சங்கியின் இந்த உளறல். எந்தவொரு மதமாக இருந்தாலும் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக போலி மதச்சார்பின்மை பின்பற்றப்பட்டால் அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போவார்கள். இந்த கிறிஸ்தவ சங்கியின் திமிர் பேச்சு தமிழின அரசியலுக்கு விடும் சவாலாகும். வெளியில் தெரிந்தது பனிக்கட்டியின் நுனி போன்றதாகும். அரசியல் தெளிவு பெற்று வரும் தமிழினம் இதுபோன்ற சங்கிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து தீர்க்கமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். 

Sunday, February 28, 2021

தேனியில் 10 ரூபாய் உணவகம்



தேனி மாவட்டம்கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகம் மற்றும் பள்ளி நடத்தி வந்த பால்பாண்டி ஏற்கனவே பல சாதனைகளைச் செய்துள்ளார். குறிப்பாக தேனி மாவட்டத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காண்பித்தார். தற்போது இவரது காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் கதிர் உணவகத்தை தொடங்கியுள்ளார். அதிலும் இவ்வளவு பணம் ஆகிறது என்று யாரும் கேட்டு வாங்குவதில்லைசாப்பிடுபவர்கள் கடையில் உள்ள உண்டியிலில் பணம் போட்டால் போதுமானது. பணம் இல்லாதவர்கள் பணம் கொடுக்காமலும் சென்று விடலாம்



இந்த உணவகம் தேனி அரசு மருத்துவமனை அருகேயுள்ள கானா விலக்கு காவல் நிலையத்தின் எதிராக மெயின் ரோட்டிலிருந்து சிறிது உள்ளே திறக்கப்பட்டுள்ளது. இது தேனி மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இட்லி, வடை தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்ற உணவுகளும், சில நேரங்களில் சாப்பாடும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த (2020) டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று கேட்டபோது, சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் பணம் போட்டு விடுகிறார்கள். மற்றபடி நன்கொடையாளர்களிடமிருந்து காய்கறி அரிசி போன்றவற்றைப் பெற்று கடையை நடத்துகிறோம் என்று பால்பாண்டி தெரிவித்தார்.




Thursday, February 18, 2021

கண்டன ஆர்ப்பாட்டம்

 கள்ளர்களை குற்றப்பரம்பரையினர் என்று சுட்டிக்காட்டிப் பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 17.02.21 அன்று (தேனி மாவட்டம்) தேவதானப்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



Sunday, February 14, 2021

தேவதானப்பட்டி பிரமலைக் கள்ளர் சமுதாயச் சங்கம்

 கடந்த ஆறு ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பின்னர் தேவதானப்பட்டி பிரமலைக் கள்ளர் சமுதாயச் சங்கத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளேன். பதிவுச் சான்றிதழை சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது எடுத்த படம். 








Saturday, February 13, 2021

விவசாயக் குழுவிற்காக டிராக்டர் வாங்க சென்றபோது


 கடந்த 11-02-2021 அன்று தேனியில் விவசாய கருவிகள் கண்காட்சியில் எங்கள் விவசாயக் குழுவிற்காக மாநில அரசு வழங்கும் டிராக்டரை வாங்க சென்றபோது எடுத்த படம்.

Tuesday, January 12, 2021

மண்ணின் மைந்தர்களும் நாயக்கஅரசும்

பாகம் : 1
பாண்டிய மன்னனின் மனதை ஆட்கொண்ட நகரம் என்பதனாலே, பாண்டிய மன்னன் தன்னுடைய தலைநகரமாக மதுரையை 2500 வருடங்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.
அப்படிப்பட்ட பாண்டிய தேசம் பாண்டியர்களின் சகோதர யுத்தத்தால் கிபி1335 முதல் 1378ஆம் வரை இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
கிபி1378ல் கம்பண உடையார் என்கிற விஜயநகர இளவரசன், மதுரை சுல்தான் சிக்கந்தர் ஷாவை தோற்கடித்து வெளியேறுகிறார்
பின்பு கிபி1378 முதல் கிபி1422வரை சுமார் 44 ஆண்டுகள் மதுரை, ஒரு குழப்பமான சூழ்நிலையில் விஜயநகர அடைப்பைக்காரர்களான கவரை,கம்பளத்தாருக்கும் என்கிற நாயக்கர்(தளவாய்), பாண்டிய மன்னர்களும் தொடர் மோதலில் நிலையற்ற ஆட்சியில் இருந்தது.
பின்பு கிபி1422ல் பராக்கிரம பாண்டியன் மீண்டும் மதுரையில் பாண்டியர்களின் ஆட்சியை நிறுவினார். தொடர்ந்து மதுரையை 107வருடங்களாக ஆட்சி செய்தனர்.
அதன்பின்பு கிபி1529ல் மதுரை மாநகர் நாயக்கர் ஆட்சியில் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய மன்னர்கள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள தென்காசிக்கு சென்று “தென்காசி பாண்டியர்” என்று கிபி 1618வரை ஆட்சி செய்தனர்.
நாயக்கர் என்பது ஒரு சாதி கிடையாது, அது ஒரு தளபதி என்பதன் பட்டமாகும். இதனை தூய தமிழில் நாயகர் என்பார்கள்.
புதுக்கோட்டை பாண்டியர் கல்வெட்டுகளில் நாயகர் என்கிற பாண்டிய அதிகாரிகளை காணலாம். மேலும் நாயகர் பட்டம் இன்றும் கள்ளர்களுக்கு வழங்கப் பெருவதை புதுக்கோட்டை,தஞ்சையில் காணலாம்.
ஆக தமிழ் நாட்டில் அது நாயகர் என்றும்,
அதே தமிழ் நாட்டில் தெலுங்கு அரசர்களின் தளபதிகளாக இருந்த கவரை,கம்பளத்தார்,தொட்டியர்,பலிஜா போன்றோர் தங்களை நாயக்கர் என்று அழைத்துக் கொண்டனர்.
கர்நாடகா,ஆந்திராவில் - நாயுடு என்றும்
ஒரிசாவில் - நாயக் என்றும்
வட இந்தியாவில் - நாய்க் என்றும் வழங்கப் பெறுகிறது.
இந்திய இராணுவத்தில் நாய்க் என்கிற பதவி இன்றும் உள்ளது.
ஆக கவரை,கம்பளத்தார்,தொட்டியர் போன்றோர் நாயக்கர் என்கிற அடையாளத்தில் நின்றனர்.
அதேபோல் அவர்களுக்கு சேவகம் செய்ய அனுப்ப கவுடா என்கிற கன்னட சேவகர்கள் “அனுப்ப” என்கிற அடைமொழியை தவிர்த்து கவுண்டர் என்று சாதிச் சான்றிதழ்கள் வாங்குகிறார்கள்.
இவர்களே இன்று அலங்கா நல்லூர் என்கிற புதிய ஜல்கிக்கட்டை உருவாக்கி, அதனை நன்கு தொழில்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் இதே நாயக்கர் ஆட்சியில் பல அன்னிய குடிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் நெசவாளர்களுக்கு பதிலாக பட்டுனூல்காரர்கள் என்கிற செளராஸ்ட்ரா வகுப்பினர் மற்றும் கன்னட தேவாங்கு ஜவுளி செட்டியார்களையும் குடியேற்றினர்.
தமிழ் ஆசாரிகளுக்கு பதிலாக விஸ்வகர்மா என்கிற தெலுங்கு கம்மாளர்களை குடியேற்றினர்.
தமிழ் பொற்கொல்லர் ஆசாரிகளுக்கு பதிலாக கோமுட்டி செட்டி,கன்னட மஞ்சப்பு செட்டிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் வணிகர்களுக்கு பதிலாக தெலுங்கு மனை செட்டியார்கள்,ஆயிரம் வைசியர்,பாத்திர செட்டி,வளையல் செட்டி குடியேற்றினர்.
தமிழ் பண்டாரங்கள்,வேளார்கள் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டு தெலுங்கு பிராமணர்கள்,விசுவ பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர்.
இதுபோக இதர சேவக தெலுங்கு குடிகளான முத்துராச்சா, முடிராஜூ ,முத்திரிய நாயுடு, முத்திரிய ராவ்,முத்திரிய நாயக்கர் என்பவர்களையும் குடியேற்றினர். ( தற்போது இவர்கள் தமிழ் சாதியான வலையருடன் சேர முயற்சி செய்கிறார்கள்)
மேலும்,
ஒட்டர்
சில்லவார்
தாசரி
போயர்
கம்சலா
சவளக்காரர்
ரெட்டியார்கள் (கொண்டா,காப்பு உட்பட)
காட்டு நாயக்கர் குடியேற்றப்பட்டனர்.
கள்ளர் நாடுகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்ய மணிக்காரர் என்கிற ஜாதியை உருவாக்குகிறார்கள்.
போர் செய்வதற்கு தமிழ் போர்குடிகளை தவிர்த்து, சத்திரிய ராஜூ, தொகட்ட வீர சத்திரியர்,உக்கிரகுல சத்திரிய நச்யக்கர் போன்றோர் குடியமர்த்தப்படுகின்றனர்.
தொழில் சேவக ஜாதிகளாக மாதாரி,சக்கிலியர்,ஆதி ஆந்திரர்,ஆதி கன்னடர்,டொம்மர்,குடியமர்த்தப் படுகின்றனர்.
இப்படியாக மதுரை மட்டும் அல்லாமல் திருச்சி,தஞ்சை என அனைத்து தலை நகரங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட குடிகளை குடியேற்றினர்.
தமிழகத்தை விஸ்வநாத நாயக்கரின் சேவகர் அரியநாத என்ற தொண்டைமண்டலமுதலியாரால் 72பாளையங்களாக பிரித்து தங்களது பிரதிநிதிகளை நியமித்தனர்.
இதனால் பல இடங்களில் மதுரை மண்ணின் மைந்தர்களான கள்ளர் நாட்டார்களின் கிளர்ச்சி ஏற்பட்டது.
நாயக்க மன்னர்கள் அவர்களை அடக்க பல இடங்களில் போர் செய்தனர். கள்ளர் நாடுகளில் இருந்து நாயக்க அரசின் மேலாண்மையை ஏற்க பல பிரதானிகளை அனுப்பினர்.
கள்ளர் நாட்டார்கள் அவர்களுடைய மேலாண்மையை ஏற்றார்களா...?
சமாதானமானார்களா...?
தோற்கடிக்கப்பட்டார்களா..?
என்பதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.........!
அன்புடன்
சோழபாண்டியன் சேர்வைக்காரர்
ஏழுகோட்டை நாடு

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...