Thursday, April 23, 2015

நியூட்ரினோ ஆய்வகத்தை நிரந்தரமாக தடைசெய்யக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்



தமிழர் உரிமை மீட்புக்குழு சார்பில் நியூட்ரினோ பேரழிவு ஆய்வகத்தை நிரந்தரமாக தடைசெய்ய வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாநிலை அறப்போராட்டம் நேற்று (19.04.2015) தேனியில் நடைபெற்றது. 

நான் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது எடுத்தபடம். 

கறுப்புச் சட்டை கிழிக்கும் போராட்டம்



தமிழர் தாலி அறுத்த திராவிடத்தை கண்டித்து கறுப்புச் சட்டை கிழிக்கும் போராட்டம். வீரமணி உருவப்படம் எரிப்பு !!

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த தமிழ்ப் பெண்களின் தாலி அகற்றும் விழாவை கண்டித்து 14-04-2015 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் அமைப்புகள் போராட்டம் செய்தன. இப்போராட்டத்தை தமிழர் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைப்பு செய்தது. திராவிடக் கழகத்திடம் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் தமிழ்ப் பெண்களின் தாலிகளை அகற்றியே தீருவோம் என்று வீரமணி தலைமையில் பல தமிழ்ப் பெண்களின் தாலி அகற்றப்பட்டது. 

தொடர்ச்சியாக திராவிடர்கள் தமிழினத்திற்கு எதிராகவும் தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 500 ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய பண்பாட்டு இன அழிப்பு தமிழகத்தில் திட்டமிட்டு திராவிடர்கள் நடத்தி வருகிறார்கள். அதன் உச்ச கட்டமாக தமிழர்களுக்கு எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ்ப் பெண்கள் தாலி அணியக் கூடாது என்ற பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர் திராவிடர்கள்.

போராட்டத்தில் பேசிய சீதையின் மைந்தன், தமிழக அரசியலில், தமிழ்ப் திரைப்படங்களில், வணிகத்தில் திராவிடர்களின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இந்த ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் இருந்து அகற்றிட வேண்டும் என்று கூறினார். தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் செல்வா பாண்டியர் பேசும் போது, திராவிடர்கள் தமிழ் இனத்தை சாதியாக பிரித்து ஒன்று சேர விடாமல் செய்து விட்டு தெலுங்கு இனத்தை தமிழகத்தில் வளர்த்து வந்துள்ளனர் என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்கினார். அதன் பின்பு பேசிய உணர்வாளர்கள் பலரும் தமிழகத்தில் திராவிடர்களை வீழ்த்தாமல் தமிழ்த் தேசிய அரசியலை உருவாக்க முடியாது எந்த செய்தியை அழுத்தமாக வைத்தனர்.
தமிழ் மண்ணில் இருந்து திராவிடக் கருத்தியலை வீழ்த்துவோம் என்ற செய்தியே எல்லோராலும் முன்வைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பெண்களை இழிவு செய்த திராவிடர்களை கண்டிக்கும் வகையில் பெண்களே வீரமணியின் படத்தை செருப்பால் அடித்தனர். மேலும் திராவிடர்கள் தமிழர் மீது திணித்த மூட நம்பிக்கையான கறுப்புச் சட்டையை தமிழர்கள் கிழித்து எரிந்து தீம்மூட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இனியும் திராவிடர்கள் தொடர்ந்து தமிழர்களையும் , தமிழர் பண்பாட்டிலும் தலையிட்டால் திராவிடர்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுப்பார்கள் எந்த செய்தியும் இப்போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. திராவிடர்களின் பண்பாட்டை தமிழர்கள் மீது திணிப்பதை இனி தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பு தலைவர்கள்.
வழக்கறிஞர் அய்யா பா. குப்பன்( 35 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் உழைத்து பின் வெளியேறி, 2009 திலிருந்து திராவிட இயக்கத்தின் தமிழ் இன விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டி வருபவர் ) , சேகர், மாவட்ட பொறுப்பாளர் தமிழர் முன்னேற்றக் கழகம், செல்வா பாண்டியர், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். புதுமலர் பிரபாகரன் மறத்தமிழர் சேனை , அய்யா அருகோ ஆசிரியர் எழுகதிர், கணேசன் நிறுவனர் தலைவர் தமிழர் பேரரசுகட்சி, (முன்னாள் திராவிடர் கழகம் ) சி. பா. அருட்கண்ணனார் தமிழர் சமூகம் , இராஜ்குமார் பழனிச்சாமி தமிழர் பண்பாட்டு நடுவம், புதுவை அழகர் தமிழர் களம் , ராஜா ஸ்டாலின் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாவலர் இராமச்சந்திரன் தன்னுரிமை இயக்கம், வெற்றி அரசன் இந்திய சுதந்திர கட்சி, வழக்கறிஞர் ச.செந்தில்குமார். செயலாளர் மக்கள் மாநாட்டுக் கட்சி, பெருமாள் தேவன், வழக்கறிர் பா. வேணுகோபால் தலைவர் தமிழ் தேசிய வழக்கறிஞர் மையம்.


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...