Saturday, December 29, 2012

சாதி ஏன் தேவை?



1.     சாதிக்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே குறிப்பிட்ட சாதியினரே ஆட்சிக்கு வருகின்றனர்.

2.     சாதி இல்லை என்ற போர்வையை பயன்படுத்திய திராவிடர்கள் தமிழ் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தனர்

3.     அன்னிய ஆசாமிகள் அதிகாரத்தைப் பெற்றதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தங்கள் நலனை இழந்து நிற்கிறார்கள்.

4.     சாதி தீயது என்று பல நூற்றாண்டுப் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதை விட்டு வெளியேறுவதாகத் தெரியவில்லை. அது ஏன் என்று ஏதாவது ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளதா?

5.     சாதி அவ்வளவு தீயதா என்பதே சந்தேகம்தான். அம்பேத்கரை உருவாக்கிய மகாராஷ்டிராவால் அடுத்த தலைமுறைக்குள் ஏன் இந்த சாதி ஒழிப்பை எடுத்துச் செல்ல முடியவில்லை. மகாராஷ்டிராவில் சாதி ஒழிப்பு என்ற பேச்சே இல்லை. இத்தனைக்கும் இங்கு 40 % தலித்கள் இருக்கிறார்கள்

6.     எனவே இந்த பிரச்சாரமே பொய்யானது. தவிர்க்க வேண்டியது

7.     சாதிகளால் உள்ள தீண்டாமை போன்ற பிரச்சனைகளை அந்த சாதிகளில் உள்ளவர்களின் உதவியோடுதான் ஒழிக்க முடியும். அதற்கு கண்டிப்பாக சாதி தேவை. சாதியை ஒழிக்க முடியாத நிலையில் அவர்களை ஒதுக்கிவிட்டு அவற்றை போக்க முடியாது

8.     சாதிகளில் இருக்க விரும்புபவர்கள் அதிலேயே இருக்கட்டும் என்று சொல்லும் கருத்துச் சுதந்திரம் சாதி ஒழிப்பாளர்களிடம் இல்லை

9.     இவர்கள் தங்களது கருத்தையே திணிக்க விரும்புபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சாதியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கவே தயாராக இல்லை. அப்படியுள்ள அவர்களின் சர்வாதிகாரப் போக்கு எப்படி ஜனநாயக முறையாகும்

10.    இதெற்கெல்லாம் மேலாக இவர்களிடம் சாதி/ மத ஒழிப்புக்கான உருப்படியான திட்டம் இல்லை

11.    சாதி ஒழிப்பாளர்களின் அடையாள ஒழிப்பு, மக்களின் சுய தன்மையை ஒழித்து அவர்களை போராட விரும்பாத மக்களாக மாற்றிவிட்டது

12.  கிறிஸ்தவர், முகமதியர், தலித் போன்றவர் அடையாளத்துடன் செயல்படும்போது ஆதிக்க சாதியினர் தங்கள் அடையாளத்தை பயன்படுத்துவது அவர்களின் சாதி வெறியை காட்டுகிறது என்பது போன்ற தவறான கருத்துக்கள்.

13.  தன் கருத்துக்களை மக்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதை அறிந்துதான் பெரியார் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. மேலும் ஜனநாயக அரசியலமைப்பையே குறை சொல்ல ஆரம்பித்தார். இதையே இன்றைய பெரியார்வாதிகளும் செய்து வருகிறார்கள். இது தற்போதைய சமுதாயத்தில் சாதி வெறியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தீண்டாமையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது

14.   வெறும் பிரச்சாரத்தின் மூலமாகவே சாதி வேறுபாட்டை களைய முயல்வது ஏற்கனவே உள்ள அரசியல் சிக்கல்களோடு சமுதாயச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்

15.  எந்தவொரு முற்போக்குவாதியுமே தங்கள் கருத்து இதுதான், உங்கள் கருத்து என்ன என்று சாதி/ மதங்களில் இருப்பவர்களிடம் பேச தயாராக இல்லை

16.  தலித்களை மற்ற சாதியினர் சமமாகவே நினைக்காத நிலையில் அவர்களிடம் பெண் கட்ட வேண்டும் என்பது போன்ற பிரச்சாரங்கள் விரும்பத்தகாத விளைவுகள் நடந்தேற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

17.  தலித்களின் தேவை என்ன சாதி ஒழிப்பா, சமூக அங்கீகாரமா என்பதை சாதி ஒழிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

18.  இப்படி இருக்கும்போது சாதி ஒழிப்பு என்பது ஆதிக்க சாதிகளை மட்டுமே ஒழிப்பது, மத ஒழிப்பு என்பது இந்து மதத்தை மட்டுமே ஒழிப்பது என்ற கருத்தை உருவாக்கியுள்ளதுகிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் தங்கள் அடையாளங்ளை பத்திரப்படுத்திக்கொள்ளும்போது இந்துக்கள் என்ன ஆவார்கள்? அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? இதை தெளிவுபடுத்த வேண்டும்.

19.    முற்போக்குவாதிகள் சாதி ஒழிப்பில் காட்டும் ஆர்வத்தை தீண்டாமையை ஒழிக்க காட்டுகிறார்களா என்பது சந்தேகமே.

20.  சாதி/ ஒழிப்பாளர்கள் சாதி/ மதங்களில் உள்ள நல்ல தன்மைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறார்களே, ஏன்?

21.    சாதி/ மதங்களில் உள்ளவர்கள் ஏன் அதிலிருந்து வெளியேற தயங்குகின்றனர் என்பதை கண்டுபிடிக்காத வரை அவர்களை அதிலிருந்து வெளியேற்ற முடியாது. நாங்கள் பிரச்சாரம் செய்தே அதைச் செய்வோம் என்றால், அந்த பிரச்சாரம் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்அந்த விளைவுகளை சந்திக்க சாதி தேவை.

22.  கிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் என்றால் நாகரீகமாக இருப்பார்கள், ஆதிக்க சாதியில் இருப்பவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற சிந்தனையை பிரச்சார சாதி ஒழிப்பு ஏற்படுத்தியுள்ளது

23.  சாதி/ மத ஒழிப்புக்காக சமமான கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படாத வரை அதை ஏற்க முடியாது

24.  மற்றபடி வெறுமனே சாதி ஒழிப்பு பிரச்சாரம் மட்டுமே செய்தால், அதற்கு எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு சாதி தேவை

25.  சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்பதை ஏற்க முடியாது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாதி ஒழிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். என்றைக்கு சமநிலை ஏற்படுகிறதோ அன்றிலிருந்து சாதி ஒழிப்பை மேற்கொள்ளலாம். அது வரை சாதி தேவை, இருக்கும்

26.    சாதி / மத ஒழிப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சாதி/ மதங்களுக்கு மட்டும் தீங்கு இழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

27.  சமூகவியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்களின் குழுக்களின் உதவியோடு சாதி/ மத ஒழிப்புக்கான பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும். நீண்டகால அடிப்படையில் திட்டங்களை தீட்ட வேண்டும்

28.  சொத்துரிமைக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை. வாரிசு இல்லாத சொத்துக்களை அரசுடைமையாக்கலாம். அந்த சொத்துக்களை ஆய்வின் அடிப்படையில் சொத்து இல்லாதோருக்கு வழங்கலாம்

29.  அறிவுப்பூர்வமான, ஏற்கத் தக்க சாதி / மத ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க முன் வராதவரை சாதி/ மதம் தேவை

30.  சாதி/ ஒழிப்பு பற்றி ஒவ்வொரு கட்சியும், அரசாங்கமும் தனது கொள்கையை வெளியிட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அவற்றை ஏற்றுக் கொண்ட பின்னரே அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...