Monday, March 27, 2017

இதுதான் சீமானின் தமிழ்த் தேசியம்

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக சீமானிடம் பேசிய ஒரு நாம் தமிழர் தொண்டர் இதே தகவலை கூறினார். அதாவது அந்தத் தொண்டர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை ஒரு தலித் என்று நினைத்துக் கொண்ட சீமான் முக்குலத்தோரின் ஆட்டம் அதிகமாகி விட்டது. அவர்களை ஒழித்துக் கட்ட அனைத்து தொகுதிகளிலும் பட்டியல் சாதி மக்களை வேட்பாளராக நிறுத்தப் போகிறேன் என்று சொன்னார்.

அன்றே அந்தத் தொண்டர் அக்கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். நாம் தமிழரில் தலைமையிடம் நெருங்கினால் அவரின் சாதி என்னவென்று கண்டறியப்படும். அதற்குத் தகுந்தார் போன்று அவர் நடத்தப்படுவார். மேற்படி தொண்டர் வெளிநாட்டில் வேலை செய்தவர் சீமானின் தம்பிமார்கள் விசாரித்தபோது தான் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார். இதுவே சீமானுக்கு தெரிவிக்கப்பட சீமான் அவரை ஒரு குறவர் என்று நம்பியே மேற்படி தகவலை பேசியுள்ளார்.

இவரைத்தான் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி ஞாயிறு என்று ஒருசிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கிஷோர் சாமியின் கீழ்க்கண்ட பதிவு சீமானின் வேட்பாளர் பற்றிய உண்மையை நிரூபிப்பதாக உள்ளது.


#Kishore K Swamy
24 March at 07:09 ·
நாம் தமிழர் கட்சியுடன் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு ... இருந்தும் ஒரு விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுவேன் ... கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலில் ....
பறையர் இனத்தைச் சேர்ந்த 13 வேட்பாளர்கள்
பள்ளர் இனத்தைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள்

பொதுத் தொகுதிகளில் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்
நாடார் சமுதாயம் அதிகம் கொண்ட தொகுதிகளில் பறையர் இனத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களும் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த 3 வேட்பாளர்களும் மறவர் 2 வேட்பாளர்களும் நிறுத்தப் பட்டுள்ளனர் .
30 முதலியார் பிள்ளைமார் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டு அந்தச் சமூகத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது

36 வன்னியர் வேட்பாளர்கள் வன்னியர் சமூகம் அதிகமில்லாத தொகுதிகளில் நிறுத்தப் பட்டுள்ளனர் ....

இது போன்ற துணிச்சல் தமிழக அரசியல் வரலாற்றில் அ இ அ தி மு க வுக்கு மட்டுமே இருந்து வந்துள்ளது ...... இது போன்ற கட்சியை எதிர்த்து அரசியல் செய்யணும்னு தான் எங்களுக்கும் ஆசை ... ஆனா என்ன செய்யுறது..... எங்களுக்கு வாய்ச்சதெல்லாம் சுடலை மாதிரி சப்பாணி தானே

https://www.facebook.com/kishore.kswamy?fref=ts

Monday, March 20, 2017

வட ஈழ மறவர்

"வட ஈழ மறவர் மான்மியத்திலிருந்து". .....
ஆசிரியர்:
தம்பி உன்னைச் சமாதானப்படுத்துவதற்காக நீ மறுவகுலம் என்பதை உருவகப்படுத்தியோ அல்லது வைப்புக்கட்டியோ நான் கூறவில்லை. உண்மையைச் சொல்லியுள்ளேன். உங்கள் உயர் குலத்துக்கு இடையிலேற்பட்ட மத மாற்றமே ஒரு சாபக்கேடாக அமைந்ததே யொழிய வேறில்லை. அங்ஙனம் நீயும்உன்குலத்தார்களும் தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது ஒடுக்கப்பட்டவராகவோ அல்லது தீண்டாதவராகவோ இருந்திருந்தால், யாழ்ப்பாணத்திலே குடியேறிய வேளாண்குல முதலிமார்களுள் அதிகம் உயர்ந்தசாதி முதலியாயுள்ள இருமரபுந்துய்ய தனிநாயக முதலி உங்கள் குலத்தார்களை நடுக்குறிச்சியில் குடியிருக்க விட்டிருப்பாரா? ஒருபோதும் விட்டிருக்கமாட்டார்.

தமிழ் மன்னர் காலத்தில் ஒவ்வொரு சாதியாருக்கும் சாதியா சாரங்கள் அமைத்தும் அவரவர்க்குரிய குலத்தொழில்களும் கொடுத்தும், தீண்டாதாரைச் சேரிப்புறங்களிலிருத்தியும் அதற்குரிய சட்டங்கள் ஆக்கியும் வைத்திருந்தார்களல்லவா? இன்றைக்கும் நெடுந்தீவில் மாத்திரமல்ல யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சகல சாதியாரும் அந்தந்த நியதியின்படியே தத்தம் குலத்தொழில்களைச் செய்தும் ஒழுகியும் வருகிறார்கள். அப்படியானால் உங்கள் குலத்தவர்கள் செய்த குலத்தொழிலென்ன?

தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாகக் கடமையாற்றியும், பின் போர்த்துக்கேயரின் ஆளுகையின் காலத்தில் அவர் களோடிணைந்து, கடற்படையில் சேர்ந்து கப்பல் தொழிலைப்பழகியும், படிப்படியாக அத்தொழிலில் முன்னேறி பிரசித்தம் வாய்ந்த தண்டல் மாராகவும் கைதேர்ந்த மாலுமிமாராகவும் விளங்கிப் பாரிய மரக்கலங்களை ஒட்டியும் (இக்குலத்தவர்களால் செலுத்தப்பட்ட மரக்கலங்களின் நாமங்களும் தண்டல் மார்களின் பெயர்ப்பட்டியல்களும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது) இன்றைக்கும் அதே தொழில்களைச் செய்தும் வருகிறார்களே யொழிய, ஏதாவது வேறுதொழில்களை அன்றுமின்றும் செய்ததுண்டா? அல்லது உயர்குடிமக்கள் இவர்களைக் கொண்டு எந்தத் தொழில்களையாவது செய்வித்தது முண்டா? நெடுந்தீவில் மாத்திரமல்ல, இவர்கள் குடியேறிய புங்குடுதீவு, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை முதலாமிடங்களில் தானும் ஏதாவது கீழ்த்தரமான தொழில்களைச் செய்ததுண்டோ, உங்கள் குலத்தவர்கள் யாவரும் பண்டுதொட்டுப் பரவணியாகச் செய்து வந்த தொழில்கள் படைத்தொழில், கடல்தொழில், கமத்தொழில், கைத்தொழில்களே யன்றி வேறு தொழில்களில்லையே?

சரி நெடுந்தீவில் குடியேறியவர்களுள் எந்தச் சாதியார் படைவீரராக இருத்தல் வேண்டும். வேளாண்குடிமக்கள் ஒருபோதும் படைவீரராகக் கடமையாற்றியிருக்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் ஆளடிமைகளை வைத்து நிலங்களைப் பண்படுத்திக் கமம் செய்திருப்பார்களே யொழிய போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். மற்றச் சாதியார்களும் அவ்வண்ணமே தத்தம் தொழில்களைச் செய்திருப்பார்களேயன்றி படையில் சேர்த்திருக்கவுமாட்டார்கள். அன்றியும்தமிழ் மன்னர்கள் மறவர்களைத் தவிரவேறு சாதியாரைப்படையில் சேர்த்திருக்கவும் மாட்டார்கள். மறக்குலத்தாரில் பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆண்மக்கள் யாவரும் போர்ப்பயிற்சி செய்து படைவீரராகக் கடமையாற்ற வேண்டுமென்று கட்டாயச்சட்டமும் அமைத்திருக்கிறார்களல்லவா? அப்படியானால் வேறு சாதியார்கள் படைவீரராகச் சேரமுடியுமா? வேளாண்குடிமக்கள் படைவீரராகச் சேர்ந்து தம்மை மறவர்களாக்க விரும்புவார்களாக?

நீங்கள் மறவரென்பதற்குச் சந்தேக மில்லாமல் கூறுவதற்கு உங்களின் தேக அமைப்பு, புய பலம், வீரம், முகவசீகரம், மாற்றானுக்குத் தலைவணங்காத் தன்மை, உடை, நடை, நாகரீகம், நாததேயங்கள் கடற்படைப்பயிற்சி, போசனவகைகள் முதலியயாவும் மறவரென்றே உங்களை எடுத்துக் கூறுகிறது. அன்றியும் உங்கள் குலத்தவரான வீரசிங்கனை, சிங்கை ஆரிய மன்னன் சேனாதிபதியாக்கிய சம்பவமும் இன்னும் உங்களை மறவர்களென உண்மைப்படுத்துகிற தல்லவா? மேலும் போர்த்துக்கேயர் தானும் நீங்கள் சாதாரண சாதியாராகவிருந்தால் உங்கள் தலைவனான வீரசிங்க மத்தேசு முதலியை மதித்துக் கண்ணியப்படுத்தி முதலிப்பட்டம் வழங்கியிருப்பார்களா? வேளாளரையும் உங்களையும் தவிர நெடுந்தீவில் வேறு குலத்தவர்களில் முதலிமார்களுண்டா? இல்லவேயில்லை. ஆகவே ஆதிகாலத் தொழில்துவக்கம், இற்றவரைக்குமுள்ள தொழில், நடை, கல்வி, பண்பு, வீரம், முகவசீகரம், உத்தியோகம், அராங்கமதிப்பு இவைகள் யாவையும் அலசிப்பார்த்தால் நீங்கள் மறவர்கள் என்பதில் என்ன சந்தேகம், மறவர்களும் வேளாளரைப் போல ஓர் உயர்ந்த சாதியாரென்றே மக்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

மாணவன்: 
சற்றும் சந்தேகமில்லாமலும், எந்தச் சாதியாரும் ஒரேவாய்ப்பட மறவர்களென்றே ஒப்புக்;கொள்ளக் கூடியவிதத்திலும், ஏற்றுக்கொள்ளக் கூடியவகையிலும் ருசுப்படுத்தி விட்டீர்கள். நீங்கள் இவ்வளவு நேரமும் எனக்குச் சொன்ன சரித்திரக்குறிப்புக்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவனாயிருப்பேன். தங்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் சென்று வருகிறேன்.
வணக்கம்.
..............
இணையத்தில் பகிர்ந்தவர்


Wednesday, March 15, 2017

சிறிய சமூக சேவை - தேனி - ஆதரவற்றோர் இல்லாத மாவட்டம்


தேனியிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 5 கிமீ தூரத்தில் உள்ள
கோடாங்கிபட்டியில் அமைந்துள்ளது மனிதநேய காப்பகம். இந்த காப்பகத்தை
நிறுவி நடத்தி வருபவர் மா. பால்பாண்டி. பிகாம் பட்டதாரியான இவர் 2004-ம்
ஆண்டு சுனாமியால் ஆதரவற்றோரான 3 குழந்தைகளை எடுத்து பராமரிக்கும்
வேலையைத் தொடங்கினார். தற்போது இவரது காப்பகத்தில் 136 குழந்தைகள் உள்ளன.

இவரது காப்பகத்தில் வளர்ந்து கல்வி பயின்ற கார்த்திகா என்ற பெண் தற்போது
ரஷ்யாவில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் விகடனின்
நம்பிக்கையின் தோழிஎன்ற விருதைப் பெற்றவர் ஆவார். இந்தப் பெண்ணின்
கனவுதான் ஆதரவற்றோர் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பது. கடந்த ஒரு மாதமாக இந்த இயக்கத்தை நடத்திய மனிதநேய காப்பகம்  இதில் முழு வெற்றி பெற்றுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
பால்பாண்டியை சந்தித்து அவருடன் பேசியபோது அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

ஒரு நாடு முன்னேறிய நாடு என்றால் அங்கு வறுமைக் கோட்டிற்கு கீழே யாரும்
இருக்கக் கூடாது. அங்கு ஆதரவற்றோரும் (பிச்சைக்காரர்கள்) இல்லாதிருக்க
வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது வளர்ந்த நாடாக இருக்காது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்டமைப்பு மேல்மட்டத்தில் இருப்பவர்கள்
அவ்வாறு தொடரவும் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை அதே நிலையில்
வைத்திருக்கக் கூடியதாகவும் உள்ளது.

பணக்காரர்களுக்கு வரியை குறைத்தால் அது அவர்களுக்கு லாபம் அளிப்பதாக
உள்ளது. ஏழைகளுக்கு வரி விதித்தால் அது அரசாங்கத்திற்கு லாபமாக உள்ளது.
எனவே அரசாங்கம் ஏழைகளுக்கு வரி விதிப்பதையே கொள்கையாகக்  கொண்டுள்ளது. இதனால் சம்பளம் பற்றாக்குறையான ஒன்றாக உள்ளது. இது  மக்களின் வாங்கும் சக்தியை குறைக்க வழிவகுக்கிறது.

இதனால் ஒருவர் தன் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை
ஏற்படுகிறது. இந் நிலையால் ஒரு குடும்பத் தலைவன் தன் மனைவியின்
கண்டிப்புக்கு ஆளாகிறான். இதனை தவிர்க்க அவன் போதைப் பழக்கங்களுக்கு
ஆளாகுதல், மனைவியின் கண்டிப்பால் விலைமாதர்களிடம் செல்ல முற்படுகிறான். இதனால் பாலியல் நோய்களுக்கு ஆளாகி குடும்பத்தை விட்டுப் பிரிந்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவன் சாமியார் வேடமிட்டு பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுகின்றான். பிச்சை
எடுக்கும் காசில் போதைப் பொருட்களை அனுபவிக்கிறான். இவ்வாறான நிலையில்
அவனது குடும்பமே சிதறிவிடுகிறது. அவனும் பிச்சை எடுக்கிறான். அவனது
குடும்பமும் பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இந்தச்
சூழலில் பிச்சை எடுக்க ஆளான ஒரு சிறுமிதான் இன்று எங்கள் காப்பகத்தின்
மூலமாக எம்பிபிஎஸ் படிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார். அவரது கனவுத்
திட்டம்தான் நம் நாட்டில் பிச்சை எடுப்பவர் யாரும் இருக்கக் கூடாது
என்பது.

இதற்காக நாங்கள் ஒரு திட்டத்தை உருவாக்கினோம். ரூபாய் 80 கோடி
முதலீட்டில் தமிழகத்தையும் 1100 கோடி முதலீட்டில் பிச்சைக்காரர்,
ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டத்தை வடித்தோம். இதன் மூலம்
இந்தியாவில் உள்ள 534 மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்திற்கு ரூ. 2 கோடி
என்று வங்கியில் முதலீடு செய்வது. அதிலிருந்து மாதாந்திர வட்டியாக
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 2 லட்சத்தைப் பெறுவது. அந்தத் தொகையை அந்த
மாவட்டத்தில் உள்ள 4 காப்பகங்களுக்கு பிரித்துக் கொடுத்து அந்த
மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோரை பராமரிக்கச் செய்வது. இவ்வாறான திட்டத்தின்
மூலமாக குறுகிய காலத்திற்குள்ளாக நாட்டில் ஆதரவற்றோருக்கு முற்றிலுமாக
மறுவாழ்வு அளித்து விடலாம். இந்தத் திட்டம் பிச்சைக்காரர்,
ஆதரவற்றோருக்கான நிரந்தர தீர்வாக அமையும்.

இதில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். சாலையோரம்
வசிக்கக் கூடியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். அதேபோல வீட்டுக்கு
ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழே யாரும் இருக்க
வேண்டிய நிலை ஏற்படாது.

இதுபோன்ற திட்டத்தை தயாரித்து நாங்கள் இது பற்றி ஜனாதிபதி, பிரதமர்
மற்றும் பிரமுகர்கள் பலருக்கும் கடிதம் எழுதினோம். நடிகர்கள் ரஜினி,
சூர்யா, விஷால், ராகவா லாரன்ஸ் போன்றோரை நேரில் சந்திக்க முயன்றோம்,
பின்னர் கடிதமாக எழுதி தெரிவித்தோம். ஆனால் அதனால் எந்த பலனும்
கிடைக்கவில்லை.

அதன் பின்னர் நாங்கள் எங்களது சொந்த முயற்சியில் தேனி மாவட்டத்தை
ஆதரவற்றோர் இல்லாத மாவட்டமாக மாற்றி இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும்
எடுத்துக் காட்டாக காட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்பின் தேனி
மாவட்ட ஆட்சியருக்கு இது பற்றி கடிதம் எழுதினோம். 1 ஆண்டுக்குப்
பின்னர்தான் இதுபற்றி அவரைச் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்தது.

இது தோல்விகரமான திட்டம், இதனை யாரும் செயல்படுத்த முன் வரமாட்டார்கள்
என்றுதான் பலரும் கருத்துக் கூறினார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட
மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மாவட்ட சமூகநலத்துறை அலுவலக அதிகாரிகள்
இந்த திட்டத்தை நாங்கள் எங்கள் சொந்த முயற்சியிலேயே செய்ய வேண்டும் என்ற
நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார்கள்.

அதன் பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்துத்து அனுமதி பெற்றோம்.
அவர் மீட்கப்பெறும் ஆதரவற்றோரை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி
நீதித்துறையிடம் ஆலோசனை செய்து அனுமதி பெறுமாறு கூறினார். இந்தத் திட்டம்
பற்றிய விவரங்களை கேட்டவுடன் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீட்கப்படும்
நபர்களுக்கு உறவினர்கள் இருந்தால் அவர்களை எச்சரித்து உறவினர்களிடம்
ஒப்படைத்துவிடவும், ஆதரவற்றோரை காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும் ஆலோசனை
வழங்கினர்.

இந்த திட்டத்திற்கு தேனி ஊடக-பத்திரிகையாளர்கள் சங்கம், வையை தமிழ்ச்
சங்கம், சேவா செக்யூரிட்டி, இயற்கை அன்னை பாதுகாப்புக் குழு, விஜய்
ரசிகர் மன்றம், அஜீத் ரசிகர் மன்றம், பிரின்டர்ஸ் அசோசியேஷன், இண்டியன்
ரெட்கிராஸ் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த
அமைப்புகளைச் சேர்ந்த குழுவினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அனுமதி
பெற்றனர். அதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், நீதித்துறையும்
இந்த திட்டத்திற்கு அனுமதியளித்தன.

இந்தத் திட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட போடி, சின்னமனூர்,
ஆண்டிபட்டி, கம்பம் வடக்கு-தெற்கு, சுருளி, பெரியகுளம் வடக்கு-தெற்கு,
தேவதானப்பட்டி, தேனி, வீரபாண்டி மற்றும் வைகை அணை ஆகிய 12 காவல் நிலைய
எல்லைக்குள்ளாக பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டார்கள். இந்த முயற்சியில்
மொத்தம் 196 பேர் மீட்கப்பட்டார்கள். இதில் 94 பேர் அவர்களின்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 102 பேர் மனதுருக்கம் தர்ம அறக்கட்டளை
(கானாவிலக்கு), போதி (ஆண்டிபட்டி), யுவா விகாஸ் (உத்தமபாளையம்), மனிதநேய
காப்பகம் (கோடாங்கிபட்டி) ஆகிய மையங்களில் பிரித்து தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலமாக தேனி மாவட்டத்தை ஆதரவற்றோர் இல்லாத மாவட்டமாக
மாற்றியுள்ளோம். இவ்வாறு பால்பாண்டி தங்களது வெற்றியை சொல்லி
பெருமைப்படாமல் தன்னடக்கத்துடன் கூறினார். இந்தத் திட்டத்தில் பங்கேற்று
இதனை வெற்றிகரமாக முடிக்க உதவிய அனைவருக்கும் தேனி நீதிமன்ற சட்ட உதவி
அரங்கில் வைத்து தலைமை நீதிபதியின் கையால் சிறந்த சேவைக்கான பாராட்டுப்
பத்திரமும் விருதும் வழங்கப்பட்டது.

பால்பாண்டியின் பல்வேறு சேவைகளைப் பாராட்டி நேரு யுவகேந்திராசிறந்த
இளையோர்விருதையும், அரிமா சங்கம்வாழ்நாள் சாதனையாளர்விருதையும்,
சென்னை மகாகவி பாரதி நற்பணி மன்றம்மனிதநேய மாமணிஎன்ற விருதையும்
வழங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
••••





நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...