Saturday, April 27, 2019

போலிச் செப்பேடு

வெள்ளியங்குன்றம் பாளையம் விஸ்வநாத நாயக்க மன்னர் தமிழ்நாட்டை பல பாளையங்களாக பிரித்த போதே உருவான பழமையான பாளையம்.

இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இடைக்காலத்தில் சில விஷமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம் நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.

ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல, வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளனர்.

வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.

ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670-ம்) ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.

இதனால் கோளில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிடுகின்றனர்.

திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி ஆபதணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.

இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு செப்பேடு அளித்தாராம்.

இதுவே செய்தி

சரி இந்த செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம் என்ன......?

போலி :1

சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம் 78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக குறித்துள்ளார்கள்.

சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர்
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.
ஆக முதல் திரிபே முட்டாள் தனமாக திரித்துள்ளனர்.

போலி :2

ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளனர்.
திருமலை நாயக்கர் கிபி1659-ம் ஆண்டிலேயே இறந்துவிட்டார், அப்போது ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர்.
இது இரண்டாவது திரிபு.

போலி: 3

கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது, ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆணையிடுகிறார் என்று அடுத்த வரியில் வருகிறது...!
திருடியது வேடர்களா....?
கள்ளர்களா .....?
இதில் கள்ளர் என சேர்த்ததே கோவில் உரிமையை அவர்களிடம் பறிக்க என்பது நன்கு புலப்படுகிறது.

இது மூன்றாவது திரிபு.

போலி : 4

இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது.
திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா வேண்டும்....?
அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில் சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும், சிவகங்கை, புதுக்கோட்டை மன்னர்களும் வருகிறார்கள். ஆனால் இதில் மட்டும் இராமப்பையன் வருகிறார்..........?

ஶ்ரீகள்ளழகர் கோவிலில் மேல் நாட்டு அம்பலங்கள் தங்களுடைய வாள் வலிமையாளும், உயிர் தியாகத்தாலும் பெற்றது.

வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு மரியாதை வேண்டுமென்றால் கோவிலுக்கு ஒதுக்கு புறமாக துண்டை தலையில் கட்டி அப்படியே சாமிய கும்பிட்டு செல்லலாம்.

கள்ளர்களை வெட்டினாராம் உடனே திருமலை நாயக்கர் மரியாதை வழங்கினாராம்....

மண்டையில உள்ள கொண்டைய மறைங்கடே.

இதுபோல செயல்கள் நடக்காமல் இருக்க சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Friday, April 26, 2019

கள்ளர் -மறவர் -அகம்படியர் - முக்குலத்தோர்

அன்புத் தம்பிக்கு. ...
வெள்ளையர்களாகிய எட்கர்தர்ஸ்டன்{ south indian castes and tripes} - நெல்சன் {madura country manual } ஹூலி {ancient Ceylon } ஜேம்ஸ் ராபர்ட் { jafna kingdom} கால்டுவெல் {tinnavely manual} என பலரும் முக்குலத்தோர் ஒருவரே என்றும் கள்ளர் -மறவர் -அகம்படியர் ஆகியோர் ஒரே மூலத்தை உடையவர்கள் என்றும் சொல்கிறார்கள். இவற்றைத் தவிர வெள்ளையர்களுக்கு விரோதிகளாக இருந்த ப்ரெஞ்சு மற்றும் டச்சு போர்ச்சுகீசியர்களும் தங்களது ஆவணங்களில் மறவர் மற்றும் அகம்படியர் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் அகம்படியர் மறவரில் ஓர் உட்பிரிவினர் என்றும் சொல்லியுள்ளனர். ஒருவர் இருவர் கூறினால் உங்கள் வாதப்படி, சரி அறியாமல் எழுதி ஆவணப்படுத்திவிட்டார்களோ என்று ஐயப்பாடு தோன்றலாம். ஆனால் உள்நாடு மற்றும் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த அனைவரும் இதை உறுதிப்படுத்தும் போது நாம் அதிலுள்ள உண்மையை ஏற்கத்தானே வேண்டும்! .
மேலும் தற்போது சில வருடங்களாகத்தான் அகம்படியர் முக்குலத்தோர் அல்ல - அது ஒரு செயற்கை சமூகம் என்ற ரீதியான கருத்துக்கள் எவ்வித ஆதாரங்களுமின்றி பிரிவினைவாதிகளாலும் முக்குலத்தோர் ஒற்றுமையை விரும்பாத மாற்று சமூகத்தவர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக அவர்கள் ஒரே மரபிலிருந்து தோற்றம் பெற்றவர்கள் என பல்வேறு தரவுகள் கொண்டு அவ்வப்பொழுது நிரூபித்தவண்ணம் இருக்கின்றோம்.
மேலும் மறக்குடி- மறக்குலம் பற்றி பல்வேறு சமூக ஆய்வாளர்கள் மிகத் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளனர். அதில் வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவரும் தமிழ்நாடு தொல்லியல் துறை உதவி இயக்குநர் ஆக இருந்து பணிநிறைவு பெற்ற திரு.பூங்குன்றன் ஐயா அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார். அவர் தனது மறவர் மரபு எனும் கட்டுரையில் மறவர்கள் சங்ககாலத்திலிருந்தே இருக்கும் குடியினர் என்றும் அவர்களிடமிருந்துதான் வேளீர் சீறூர் மன்னர்கள் முதற்கொண்டு பல்வேறு அரசுகள் தோற்றம் பெற்றது என்றும் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த டாக்டர். கமால் அவர்களும் அகம்படியர் மறவர் கள்ளர் ஒரே சமூகத்தவர் என்று தரவுகள் மூலம் தெளிவாக்குகிறார். மறக்குடி - மறக்குலம் என்பது மறவர்களை மட்டுமின்றி மறவர்களின் வழித்தோன்றலாகிய முக்குலத்தோர் மற்றும் அதன் உபஜாதிக் கிளைகளையும் உள்ளடக்கியதாகும். நீங்கள் நல்ல நண்பர் மற்றும் சீராய்வு செய்யும் திறன் உள்ளவர் ஆகையால் தப்பித்தவறி பிரிவினை வாதிகளின் கரங்களில் சிக்கிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முக்குலத்தோரிடமிருந்து விலக்கி அகம்படியரைத் தனியே வைக்கும் முயற்சிகள் யாவும் இறுதியில் படு மோசமான தோல்விகளையே தழுவும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் இன்று ஆராய்ச்சி மாணவர்கள் அதிகம் பெருகிவருகின்றனர். அவர்கள் அவ்வப்போது உண்மை எதுவென்பதை உறுதிசெய்து கொண்டே இருப்பார்கள். நான் மட்டும் அல்ல எனக்கு பின்வரும் சந்ததியினர் முக்குலத்தோர் ஒரே இனத்தவர் என்பதை நிச்சயம் உறுதிசெய்துகொண்டேயிருப்பார்கள். நன்றி! ,மீண்டும் இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருங்கள் நான் இனிமேல் அவற்றுக்கான பதில்களை கடித வடிவில் முகநூலில் எழுதி பதிலளிக்கிறேன். வீட்டில் அனைவரது நலனையும் இந்த அன்பு அண்ணன் கேட்டதாகக் கூறவும்!
நன்றி!
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

Thursday, April 25, 2019

நாம் தமிழர் கட்சி “நாடார் கட்சியா?”



நாம் தமிழர் கட்சி நாடார் கட்சி என்று குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது. அது தவறானது. இந்த வாதத்திற்குள் போகும் முன்பாக வரலாற்றில் சிறிது பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
1860-ம் ஆண்டு வாக்கில் நாடார் சமுதாயத்தவர் இனி வியாபாரத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து அதற்கான ஏற்பபாடுகளைச் செய்யத் தொடங்கின்றனர். பொதுவாக செல்வத்தை நோக்கி நகரும் ஒரு சமுதாயத்தவர், கூட்டத்தவர் ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக அல்லது இணக்கமாக செல்லலாம் அல்லது செல்ல விரும்பலாம். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும். எனவே எப்போதுமே தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் அது போன்ற ஒரு போக்கையே கடைப்பிடிப்பர். அதில் தவறில்லை.

1900 வாக்கில் நாடார்கள் கட்டமைக்கப்பபட்ட வியாபார சமுதாயம் ஆகிவிட்டார்கள். 1921-ல் அவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியைத் துவங்குகிறார்கள் என்றால் அவர்களின் தொழில் வளர்ச்சியை பாராட்டவே வேண்டும். அந்தச் சூழலில் நாடார் சமுதாயத்தவர் பெரும்பாலானோர் ஆளும்கட்சியான நீதிக் கட்சியில் இருந்தனர். எனவேதான் நாடார் சமுதாயத்தவரை காங்கிரஸ் கட்சியின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காமராஜரை காங்கிரஸ் கட்சிக்குள் வளர்த்துவிட வேண்டும் என்று எண்ணி அவருக்கு உதவிகள் செய்தார்.

பின்னாளில் காமராஜர் முதலமைச்சர் ஆகிவிட்டார். அப்போது நாடார் சமுதாயத்தவர் காமராஜருக்கு ஆதரவு தெரிவித்தனர். காமராஜர் தன்னுடைய சாதியினருக்கு உதவினார் என்று ஒரு குற்றச் சாட்டு வைக்கப்படுவது உண்டு. ஆனால் காமராஜர் முதலமைச்சா் ஆகாதிருந்தாலும் கூட நாடார் சமுதாயத்தவர் முன்னேறி இருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்களின் தொழில் முனைவு அப்படி இருந்தது.
காமராஜருக்கு முன்பாக நாடார் மஹாஜன சங்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி செளந்திரபாண்டியன் நாடார் ஆவார். இவர் நீதிக்கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதேபோல தினத்தந்தி பத்திரிகையை நிறுவிய சி.பா. ஆதித்தனார் 1942 ஆண்டு வாக்கில் நாம் தமிழர் கட்சியை நிறுவி செயல்பட்டு வந்துள்ளார்.

இன்று தமிழினத்தில் நாடார் சமுதாயத்தவர் பொருளாதார பலம் கொண்ட சமுதாயத்தவராக உள்ளனர். எனவே அரசியல் கட்சி நடத்துவோர் நன்கொடைக்காக அவர்களை அணுகியே ஆகவேண்டும். அவ்வாறு நன்கொடை கொடுக்கும் நாடார் சமுதாயத்தவர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களிடம் இணக்கமாகச் செல்ல, அல்லது அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த விரும்பலாம். அதில் தவறில்லை.
இதற்கெல்லாம் மேலாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரே அரசியல்வாதியாக, ஆட்சியாளராக வந்தால் அதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். ஒரு அரசியல்வாதி, ஆட்சியாளன் தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று எல்லாச் சமுதாயத்தவரும் விருப்பப்படுவது இயல்பானதே. அதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு உருவாகும் ஒரு அரசியல்வாதி, ஆட்சியாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வைத்தே மக்கள் அவரை ஆதரிப்பார்கள் அல்லது புறம்தள்ளுவார்கள். இந்த அடிப்படையில்தான் நடிகர் சரத்குமாருக்கு நாடார் சமுதாயத்தவர் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் சரத் குமார் அரசியலில் எடுபடவில்லை.

ஈழப்போரின்போது எழுந்த தமிழர் உணர்வைப் பயன்படுத்தி திரை இயக்குனர் சீமான் அரசியல்வாதியாக உருவெடுத்தார். அவர் நாம் தமிழர் கட்சியை துவங்கினார். சரத்குமாருடன் ஒப்பிடும்போது சீமானுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. எனவே இயல்பாகவே நாடார் சமுதாயத்தவர் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் என்னைப் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் சீமான் மீது குற்றச்சாட்டுக்களை வைக்கிறோம். அதற்கு காரணம் அவர் நாடார் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல. தமிழத் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அவரது செயல்பாடுகளை வைத்தே நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம்.

தற்போது தமிழ்த் தேசியக் கருத்தியல் தமிழர் மத்தியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் எழுச்சி பெற்றுள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தி தமிழர் ஆட்சி அதிகாரத்தை பெறுவதை சீமான் மடைமாற்றம் செய்து வருகிறார் என்று நாங்கள் சொல்கிறோம். காட்டாற்று வெள்ளமாக பொங்கிப் பெருக வேண்டிய தமிழ்த் தேசிய அரசியலை குட்டையில் தேக்கி சாக்கடையாக மாற்றி நாற்றமடிக்கச் செய்து விடுவாரோ என்றுதான் நாங்கள் அவரை விமர்சனம் செய்கிறோம். தன்னுடைய கட்சிக்குள் ஜனநாயகத் தன்மையைப் பின்பற்ற முடியாத அவர் ஆண்-பெண் வேட்பாளர்களை சம எண்ணிக்கையில் நிறுத்தி தனது அமைப்பை ஜனநாயக அமைப்பாக காட்ட முயல்வதைக் குறை சொல்கிறோம்.

தமிழினத்திற்கு எதிரான திராவிடம் என்ற கருத்தியலை வீழ்த்த தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அவர் திராவிடத்தின் நீட்சியாக இருந்து, திராவிக் கட்சிகளைப் போலவே செயல்படுகிறாரோ என்று அச்சப்படுகிறோம். திராவிட மேடைகளில் பேசி வளர்ந்த அவர் இன்னமும் மனதின் அடியாழத்தில் தமிழின அழிப்புக் கொள்கையான சாதி ஒழிப்பைச் சுமந்து நிற்கிறார். எனவேதான் அவர் அவ்வப்போது தமிழினத்தின் இனக்குழுக்களான சாதிகளை இழித்தும் பழித்தும் பேசி வருகிறார். இவர் இவ்வாறான கருத்தியலைக் கொண்டிருக்கும் வரை இவரால் தமிழினத்தின் ஆதரவையும் பெற முடியாது, வளரவும் முடியாது. மேலும் இவர் தனது ஜனநாயக எதிர்ப்புத் தன்மையால் மற்ற தமிழ்த் தேசிய அமைப்புகளை புறம்தள்ளியும் அலட்சியப்படுத்தியும் வருகிறார். இவரது இந்தப் போக்கு இவர் ஒரு போலி அரசியல்வாதி, திராவிட அரசியலின் நீட்சித் தலைவர் என்ற கருத்தை எங்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

மற்றபடி திராவிடத்தின் சாதி ஒழிப்புக் கருத்தியல், தமிழ் இனக்குழுக்களுக்கு இடையே காரணமே இல்லாமல் மற்ற இனக்குழுக்களை எதிர்க்கும், பகையாகப் பார்க்கும் போக்கை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே எந்தவொரு நாட்டிலும் செல்வம் சேகரிக்கும் குழுக்கள் மற்றவர்களைச் சுரண்டுவதாக பொதுமக்களிடம் ஒரு கருத்தியல் நிலவும். உண்மையில் ஒரு குழு அவ்வாறு செயல்பாட்டால் அவர்களை சட்ட விதிமுறைகளின் மூலமாக மட்டுமே சரியான பாதைக்கு அழைத்து வரவேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது யாருக்கும் நன்மை பயக்காது.  இந்த விஷயத்தில் தமிழ் இனக்குழுக்கள் தெளிவு பெற வேண்டும். அவ்வாறான ஒரு தெளிவு ஏற்படுகையில் ஒவ்வொரு இனக்குழுவின் தனித்தன்மையையும் ஒட்டுமொத்த இன எழுச்சிக்காக, வளர்ச்சிக்காக, விடுதலைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். நாடார் சமுதாயத்தில் மட்டுமல்ல எந்தவொரு தமிழ்க் குடியிலிருந்தும் ஒரு சிறந்த மக்கள் ஆதரவு பெற்ற தலைவன் உருவாகினால் அவனை நாம் மனமார வாழ்த்தி வரவேற்போம். எல்லா இனக்குழுக்களும் சேர்ந்துதான் ஒரு இனம் உருவாகிறது. எந்தவொரு இனக்குழுவையும் ஒதுக்குவது, புறக்கணிப்பது என்பது இனத்திற்கு நன்மை பயக்காது.

(கட்டுரையில் வரும் தலைவர்கள் பற்றிய விக்கிப் பீடியா பக்கங்களின் இணைப்புகைள கீழே கொடுத்துள்ளேன்.)






வெள்ளையனிடம்_வரி_கேட்ட பிறமலைக்கள்ளர்





மதுரையில் இருந்த ஆங்கில அதிகாரி ராபர்சன் துரை என்பவரிடம் பிறமலைக்கள்ளர்கள் காவல் வரி கேட்டதையும் அதற்கு பின் நடந்தேறிய சுவையான சம்பவங்களை " India on march " எனும் புத்தகத்தில் சுவையான தகவல்களுடன் வெள்ளையர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.. அவற்றை காண்போம்.
" இந்த தேவன் ( பிறமலை கள்ளர்) மிகவும் உறுதியான உடல் அமைப்பை கொண்டவன். இவர்கள் மதுரையில் நாகமலை பகுதியில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தங்களது நீண்ட கூத்தலுடன் கூர்மையான கத்தியை இணைத்து வைத்திருப்பார்கள்.
பிறமலைக் கள்ளர்கள் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒரு மரத்தின் அடியில் இருக்கும் கருப்புசாமியை வழிபட செல்வது இயல்பானதாகும்.
ஒரு பிறமலைக்கள்ளர் ராபர்ட்சன் துரை எனும் ஆங்கில அதிகாரியிடம் காவல் வரியாக 5 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி , வரி செலுத்த மறுத்துவிட்டார். காவல் வரி கேட்டு வீட்டுக்கு வந்த மற்ற கள்ளர்களையும் போலீசில் புகார் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தார். காவல் வரி செலுத்த மறுத்த வெள்ளையருக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார் அந்த தேவர்.
20 மைலுக்கு அப்பாலுள்ள தங்களது கிராமத்தில் இருந்து 8 கள்ளர்கள் ராபர்ட்சன் பங்களாவை இரவு 2 மணிக்கு அடைந்தனர்.
உடம்பில் எண்ணை தடவிக்கொண்டு, பங்காவிற்குள் நுழைந்தனர்.
தங்களது சுவாசத்தின் மூலமே ராபர்சன் இருக்கும் அறையை அடைந்தனர். வெள்ளையரின் கைக்கடிகாரம், துப்பாக்கி, டயரி முதலியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர். தூங்கிய எழுந்த வெள்ளையன் தான் பழிவாங்கப்பட்டதை உணர்ந்து கொதித்து போய் காவல் நிலையத்தை நோக்கி ஒடிப்போனார்.
கள்ளர்களின் வாழ்வாதாரமான காவல் தொழிலை ஒழித்து, பிற்காலத்தில் கள்ளர்களை குற்றப்பரம்பரை என முத்திரை குத்தியது வரலாற்றில் மறைக்கமுடியாத வெள்ளையர்களின் அவலம்.
(India on march 1922)
பதிவு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

Tuesday, April 23, 2019

வன்னிய சூரைக்குடி தொண்டைமான் கள்ளப்பற்று - கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு


கிபி1311ல் டெல்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் முதன்மை தளபதி மாலிக் கபூர் ஒட்டு மொத்த இந்தியாவையும் கில்ஜியின் காலடி கொண்டு வந்தான். அதில் பாண்டிய நாடும் அடக்கம், கிபி. 1310-ல் பாரதம் போற்றிய பாண்டிய மன்னர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் தங்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தால் மாலிக் கபூரால் மதுரையை இழந்து டெல்லி சுல்தான் ஆட்சிக்கு அச்சாரம் போட்டுவிட்டு தென்காசிக்கும், திருவாடனைக்கும் தப்பி சென்று சிறு பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.

கிபி1320-ல் டெல்லி சுல்தானாக துக்ளக் வம்சத்தினர் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்களுடைய பிரதி நிதிகள் மதுரையில் துக்ளக் ஆட்சி நடத்தினர்.

ஆனால் இதனை ஏற்காத கள்ளர்களின் ஒரு பிரிவினர், அவர்கள் வாழ்ந்த அப்போதைய மதுரை எல்லையில் அதாவது இன்றைய புதுக்கோட்டை எல்லையான காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் பாண்டியர்களுக்கு எல்லை அரையர்களாக இருந்த சூரைக்குடி தொண்டைமான்களும், அவர்தம் கள்ளர் குலத்தவர்களும் மதுரை சுல்தானுக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர்.






சூரைக்குடி கள்ளர் படைகள் மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட, பொன் அமராவதி நாடான விராச்சிலை, கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதிகான் தலைமையில் மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான்,ஆசாம் கான், முவாசம் கான் மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

கிபி1359-ல் தொடர்ந்து சுல்தானுக்கு கட்டுப்படாமல் இருந்த சூரைக்குடி தொண்டைமானையும் அவர்தம் கள்ளர் பற்றையும் அழித்து வாள் முனையில் இன்றைய காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச் சொல்லுகிறார்.

அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக்கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை சுழற்றிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும் அழித்துவிட்டோம்.

இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழற்றினால் சூரைக்குடி கள்ளர் பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான், இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர். அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளரான உயர் திரு.சாமிநாத அய்யர் படி எடுத்து வைத்துள்ளார்.

இந்த பகுதிகளின் பாடிக்காவல் உரிமையும், நீதி பரிபாலனம் உரிமை அனைத்தும் மதுரை சுல்தான் கட்டுப்பாட்டிற்கு சென்றது, அந்த சமயத்தில் கிபி1369ல் காத்தூர் கோட்டை காரணவரும், அந்த ஊர் கிராமத்தாரும் நெடுஞ்சாலைகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் சுல்தானின் புதுக்கோட்டை பிரதிநிதிக்கு சென்றது, வழிப்பறியில் ஈடுபடாமல் இருக்க நாட்டு கூட்டம் கூட்டி சத்தியம் செய்ய வழியுறுத்தப்படுகிறது.

இதனால் கிபி1369 கார்த்திகை மாதத்தில் காரணவர்கள் கண்டதேவி நாட்டு கூட்டத்தில் வன்னியர் (கள்ளர் தலைவர் - வன்னியர் கள்ளர் பட்டம்), கள்ளர்களும் ( கள்ளர் மக்களும்), புறத்தூர் பட்டர், வித்துவான்கள், பாடகர் மற்றும் காரணவர்களின் எதிரியான அறந்தாங்கியார் ( அறந்தாங்கி தொண்டைமான்) மற்றும் அங்கு உள்ள மனிதர்கள் முன்னிலையில் வழிப்பறியில் ஈடுபட மாட்டோம் என சத்தியம் ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள்.

அப்படி அவர்கள் செய்த சத்தியத்தை மீறினால் கீழ்க்கண்ட தண்டனைகள ஏற்கிறோம் என உறுதியளிக்கின்றனர்

1.எங்கள் மீசை தாடிகளை மழிக்கிறோம்
2.எங்கள் பெண்களை எதிரிகளுக்கு அளிக்கிறோம்
3.எங்கள் எதிரிகளுக்கு அடிமையாகக்க கடவுகிறோம்
4.பிராமனர்களை கங்கையில் கொண்ற பாவத்தை ஏற்கிறோம்
5.எங்களை பெண் உருவமாக வடித்து கீழ்சாதிகள் ஆன பாணர், புலவர், பள்ளர், பறையர்களின் சிறுவர்களின் காலில் கட்டி எங்கள் தேசத்திலும், பிற தேசத்திலும் சுற்றட்டும்.

என தண்டனைகளை அவர்களே நிர்மாணிக்கிறார்கள்.

இந்த கல்வெட்டை முதன் முதலாக முன்னாள் உலக வராலாற்று ஆய்வகத்தின் உறுப்பினரும், இந்திய வரலாற்று ஆய்வாளரும் ஆன உயர்திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிவு செய்கிறார்

அவருடைய பதிவில் சிறு, சிறு தவறுகள் இருந்ததை 08:04:86 ல் உஞ்சனை வட்டார கல்வெட்டு பகுதியில் திருத்தி படியெடுத்து புத்தகமாகவும் வந்தது. அந்த புது படியெடுத்த கல்வெட்டை அன்று தினதந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.

மேலும் இதனை வரலாற்று ஆர்வலர் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் நேரடியாக கண்டதேவிக்கு சென்று படி எடுத்து, புகைப்படத்தையும் அளித்துள்ளார்.

உன்மை இப்படி இருக்க சில கோமாளிகள் ஏதோ கள்ளர்கள் பொண்டாட்டியை ஒப்படைப்பதாக சத்தியம் செய்தார்கள் என்று வலைதளங்களில் கிறுக்கியுள்ளார்கள். மேலும் பள்ளி சாதியினர், வன்னியர் என்று இங்கு குறிக்கப்பட்ட சூரைக்குடி தொண்டைமானை பள்ளி சாதி என்று கூறிவருகின்றனர்.

தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்களும் என்று குறித்துள்ளது. இங்ஙனம் வன்னியர் என்பது ஒருமை அதை கூட புரிந்து கொள்ளாமல் அது ஜாதி பெயர் என ஒப்பாரி வைக்கின்றனர். இவர்கள் வன்னியர் என்பது சாதியாக மாறியது இந்த நூற்றாண்டில் என்பது நாம் அறிந்ததே. வன்னியர் என்ற பட்டம் இங்கு கள்ளர், மறவர், வலையர், பள்ளி என்ற பலதர சாதிகளுக்கு உள்ளது.

புதுக்கோட்டை தொண்டைமான், அந்த பகுதி விசங்கு நட்டு கள்ளர்களை நாய் சங்கிலியால் கொண்டுவந்தார் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் தொண்டைமான் என்பது வேறு சாதி, கள்ளர்கள் வேறு சாதி என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ அதுபோல் உள்ளது பள்ளி சாதியினரின் கதை.

கல்வெட்டில் கள்ளர்கள் என்று குறிக்கப்பட்ட போது வன்னியர்கள் என்று ஏன் பன்மையில் குறிக்கவில்லை?

அதனால்தான் அய்யா கிருஷ்ணசாமி அய்யங்கார் சூரைக்குடி தொண்டைமானை கள்ளர் குடும்பம் என்றும் சூரைக்குடி கள்ளர்களின் தலைமையிடம் என்றும் பதிவு செய்தார்.

மேலும் பலர் இதை கிபி 16 ஆம் நூற்றாண்டு என்று பிதற்றுகிறார்கள். அவர்கள் ஹிஜிரா வருடத்தை பற்றிய புரிதல் இல்லாமல் பொய்யுரைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு நன்கு தெரியும் ஹிஜிரா வருடம் என்றால் என்னவென்று.

இப்போது ஹிஜிரா வருடம் 1440-ல் உள்ளது. இந்த வருடக் கணக்கை சூரிச் பல்கலைகழக கணக்கீடில் வைத்து தான் கிபி 1369 என்று கணக்கீடு செய்துள்ளேன்.

இன்றும் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் கள்ளர்கள் அம்பலமாகவும், நாட்டு சேர்வையாகவும் அனைத்து குடிமக்களுக்கும் நீதிபரிபாலனம் செய்தும் 150 க்கும் மேற்பட்ட கோவில்களில் சாமி கழுத்தில் உள்ள துண்டையே முதல் மரியாதையையாகவும், காளாஞ்சியமும் பெறுகிறார்கள்.

ஆய்வு : சோழ பாண்டியன் - ஏழுகோட்டை நாடு

நன்றி

South Indian And Her Mohammadan Invaders by Honourable Mr.Krishnaswami Aiyangar
உஞ்சனை வட்டார கல்வெட்டுகள்
South Indian and her muhammadan invaders
Institute of oriental studies:Zurich university
திரு.சியாம் சுந்தர் சம்பட்டியார்



Monday, April 22, 2019

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் வரலாறு

மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது பாப்பாபட்டி என்ற கிராமம். கருமாத்தூர் என்ற ஊரில் இருந்தும் அங்கு செல்ல முடியும். அங்கிருந்தும் 15 கிமீ தொலைவு தூரம்தான். பாப்பாயி என்ற கிராமத்துப் பெண்ணை பாப்பான்பட்டி என்ற ஊரில் இருந்தவனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் ஆலயம் உள்ளது. ஒருமுறை ஆண்டாயி (பாப்பாயி ) என்பவளும் அவளுடைய கணவரின் தங்கையும் அங்கு வந்து பொங்கலிட்டனர். அந்த ஆலய வழக்கப்படி அந்த ஆலய பூசாரிகள் பொங்கல் படைக்க வருபவார்களிடம் இருந்து பொங்கலை வைக்கும் முன் சிறிது அரிசியையும், பொங்கல் வைத்தப் பின் சிறிது பொங்கலையும் பெற்றுக் கொள்வார்கள் . ஆனால் ஆண்டாயி தனது மதினியிடம் இருந்து அவர்கள் அந்த பொருட்களை எடுத்துக் கொள்வதை விரும்பவில்லை . தன்னுடைய புகுந்த வீட்டினரின் பொருளை அவர்களைக் கேட்காமல் எடுத்துக் கொண்டால் தன்னை தப்பாக நினைப்பார்கள் என்று கோபமுற்றாள் . ஆனாலும் அந்த பூசாரிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவள் மதினியிடம் இருந்தும் அரிசி மற்றும் பொங்கலை எடுத்துக் கொண்டார்கள். ஆகவே கோபமுற்ற ஆண்டாயி பொங்கும் பொங்கலை தன் தலையில் வைத்துக் கொண்டு பாப்பாபட்டியை நோக்கி நடக்கத் துவங்கினாள். அவள் பின்னால் அவளுடைய சகோதரன் போய் கொண்டு இருந்தான். வழி தவறிப் போய் அந்த கிராமத்தின் எல்லையை அவன் தாண்டிப் போய் விட அவள் அவனை மீண்டும் திரும்பிப் போக வேண்டாம் எனவும் அப்படிச் சென்றால் கருமாத்தூர் மக்கள் அவனை மரியாதை குறைவாக நடத்துவார்கள் எனவும் கூறி அவனை தடுத்து நிறுத்தி விட்டாள். அவர்கள் உசிலம்பட்டிக்குச் சென்றதும் தனது சகோதரனை சின்ன கருப்பு ஆலயத்தில் இருக்குமாறு கூறி விட்டு தான் அரண்மனை ஆற்றில் குளிக்கச் சென்றாள். அந்த அரண்மனை காவலாளி தனது குழந்தையை தாலாட்ட அவள் கரையில் வைத்து விட்டுப் போய் இருந்த புடவையை எடுத்து தூளியாக கட்டினான். ஆனால் அவளுக்கு தெய்வீக சக்தி இருந்ததினால் அந்த புடவை எரிந்து விட்டது. ஆகவே பயந்து போனவர்கள் அவளை அந்த அரண்மனையில் இருந்த ஒரு இடத்துக்கு சென்று தங்குமாறு கூறினார்கள். அங்கு பொங்கல் பானையுடன் சென்றவள் அதன் பின் திரும்பி வரவே இல்லை. அவளுடைய பத்து குழந்தைகளும் அவள் சென்று மறைந்த புதரில் அவளை தேடிய போது அங்கு பொங்கல் பானை மட்டுமே இருந்ததைக் கண்டனர். அவள் பெண் கடவுளாக மாறி மறைந்து விட்டாள் என அனைவரும் நினைத்தனர். அந்த இடத்தில் ஏற்கனவே அங்காள ஐயர் என்ற ஆலயம் இருந்தது. அதற்குள் அவளுக்கு ஒரு சிறிய ஆலயம் அமைத்தனர். அவளைத் தொடர்ந்து ஒச்சான்டம்மனும் அங்கு வந்ததாகக் கருதி அவளுக்கும் அங்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அதுமுதல் ஆண்டாயியை ஆச்சிக் கிழவி என அழைத்தனர்.



அந்த ஊரில் இருந்த அவளுடைய குழந்தைகள் பெரியவர்களாகி சொத்துக்களை பாகம் பிரித்துக் கொண்டபோது அவர்களில் ஒருவனுக்கு பாலை நிலமே கிடைத்தது. அவன் சென்று ஆச்சிக் கிழவியிடம் அது பற்றிக் கூறி அழுதபோது உள்ளிருந்து வந்த குரல் 'நீ கவலைப் படாதே, உன்னை ஒரு கண்ணாகவும், மற்ற அனைவரையும் இன்னொரு கண்ணாகவும் நான் பாவிப்பேன்' என்றது. அது முதல் பாலை நிலமாக இருந்த நிலம் செழிப்பாக மாற அவன் நாளடைவில் மற்றவர்களை விடப் பெரிய பணக்காரனாக மாறினான்.

அந்த இடத்தில் உள்ள அங்காள ஐயர் ஆலயத்தில் தங்கண்ணி மற்றும் போங்கண்ணி போன்ற தேவதைகளும் உள்ளனர். வாயிலில் மாயாண்டி உள்ளார். ஆலயத்தின் இடது புறம் ஏழு தேவதைகள் உள்ளனர். வலதுபுறத்தின் சுவற்றில் ஆச்சிக் கிழவியின் படம் போடப்பட்டு மாலை சார்த்தப்பட்டு உள்ளது. அதன் எதிரில் உள்ள பகுதியில் அக்னி தாங்கு, மதனைத் தாங்கு, பெரிய தவசி, செந்தவசி, ஒச்சாண்டம்மாள், உலகநாதன் மற்றுள் வீருமல ராகு போன்றோர் உள்ளனர். அருகில் உள்ள திண்ணையில் அவளை வணங்குகின்றனர். அங்கும் ஆச்சிக் கிழவியின் படம் உள்ளது. அவள் பக்கத்தில் பேச்சியம்மன், சந்தனக் கருப்பு, கலாஞ்சிக் கருப்பு, கோட்டைக் கருப்பு, சின்னக் கருப்பு, பெரியக் கருப்பு, அக்னிவீரன் மற்றும் கொல்லிமலை ராக்கம்மாள் போன்ற தேவதைகளும் சிலைகளும் உள்ளன. தம் மீது சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலைக் கிடைக்க ஆச்சி கிழவியை வந்து வணங்குகின்றனர்.
சிவராத்தரி விழா கோலாகாலமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆச்சிக் கிழவியின் அனைத்து பொருட்களும் ( நகை போன்றவை) உசிலம்பட்டியில் உள்ள சின்னக் கருப்பு ஆலயத்தில் வைத்து உள்ளனர். அங்கிருந்து வாத்திய முழக்கங்களோடு அதை எடுத்து வருவார்கள். அங்காள ஐயர் ஆலய சாமியாடிகள் ( சாமி வந்து ஆடிக்கொண்டு வருபவர்கள்) அதன் பின்னால் ஒரு கழியை எடுத்துக் கொண்டு வருவார்கள். இளந்தோப்பு என்ற இடத்தில் ஆச்சி கிழவியின் சந்ததியினர் அவளுடைய நகைகளை வாங்கிக் கொள்வார்கள். அவை சரியாக உள்ளனவா என கணக்குப் பார்ப்பார்கள். அதன் பின் அவற்றை ஆச்சிக் கிழவியின் ஆலயத்துக்கு கொண்டு வந்து பூஜை செய்வார்கள். அதன் பின் மீண்டும் அவை உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்படும். சின்ன மற்றும் பெரிய கருப்பர்களுக்கு ஆடுகள் பலியாகத் தரப்படும்.

இந்த ஆலயம் பற்றிய இன்னொரு கதையும் உள்ளது. கருப்பு ஆலயத்தின் முன்னால் இரண்டு யானையின் சிலைகள் உள்ளன. ஒன்று கருப்பாகவும் இன்னொன்று வெள்ளையாகவும் உள்ளது. ஒருமுறை ஒரு ஆங்கிலேயன் சாமியாடிக்கொண்டு வந்தவர்களிடம் அந்த யானைகள் கரும்பை தின்னுமா என கேலியாகக் கேட்க , சாமியாடிகள் தின்னும் என்றனர். ஆகவே கரும்புகளைக் கொண்டு வந்து அவற்றின் முன்னால் போட்டு விட்டு, பெரிய துணியால் யானையும் சேர்த்து கரும்பை மூடிவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின்னால் அதை திறந்து பார்த்தபோது கரும்புகளைக் காணவில்லை. சாமியாடியவர் அந்த வெள்ளிக்காரனிடம் அவனுடைய மகன் உடல் நலமின்றி உள்ளதாகவும் அவன் நீண்ட நாள் உயிருடன் இருக்க மாட்டான் எனவும் கூறினான். அடுத்து சில மணி நேரத்திலேயே அந்த ஆங்கிலேயனுக்கு அவன் மகன் உடல் நலமின்றி கிடந்தது மரணம் அடைந்து விட்டதாக தகவல் வந்தது.

ஆச்சியின் நகைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அனைத்துக் கடைகளுக்கும் விடுமுறை தரப்படுகின்றது.

தேவரின சிறப்பு செய்திகள்
கள்ளர் வாழ்வியல் வரலாறு - Kallar History
கள்ளர் வரலாறு மீட்பு குழு
கள்ளர் நாடு அறக்கட்டளை

Sunday, April 21, 2019

மீ பொழில்நாடு - வணங்காமுடி பாளையம் - கந்தர்வகோட்டை - கள்ளர் நாடு



பண்டாரத்தார் பட்டம் உடைய கள்ளர் அரையர்களால் ஆட்சி செய்யப்பட்ட நாடு கந்தர்வகோட்டை ஆகும்.

சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள், இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு வந்தது. அவ்வளநாடுகள் ஒன்பதும், முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாண்டி குலாசனி வளநாடும் ஒன்று, அதில் இருந்து பிரிந்தது ஐயசிங்ககுலகால வளநாடு தோன்றியது. இந்த நாட்டில் ஒருபகுதியான மீ செங்கிளி நாடு [குளத்தூர்], தென் மீ பொழில் நாடு என்பதில் கந்தர்வக்கோட்டை கோவில் நல்லூர் எனவும், கோவில் நல்லூர் மற்றும் சில கிராமங்களை உள்ளடக்கி அதை மீ பொழில்நாடு எனவும் அழைக்கப்பட்டது. (மீ பொழில் நாடு - மேன்மையான, அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் நிறைந்த நாடு).

1000-ம் ஆண்டுகள் பழமையான கந்தர்வகோட்டை பாளையம், சோழ மண்டலத்தில் உள்ள 18 பாளையங்களில் இதுவே மிக பெரிய பாளையமாக இருந்தது.

கந்தர்வன் என்னும் மன்னன் சிறப்புற ஆட்சிபுரிந்தமையால் கந்தர்வன் கோட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மறுவி கந்தர்வக்கோட்டை என மாற்றமானது என்றும், கண்டராதித்த சோழ கோட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மறுவி கண்டர் கோட்டை பிறகு கந்தர்வக்கோட்டை என மாற்றமானது என்றும் கூறப்படுகிறது. கண்டர், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டராயர், கண்டவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

கந்தர்வகோட்டை பாளையத்தின் தலைநகர் கோமாபுரம். இந்த பாளையத்தார் கீழ் 106 கிராமங்கள் இருந்தன. கந்தர்வகோட்டை பாளையத்தின் மற்றொரு பெயராக வணங்காமுடி பாளையம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பாளையத்தாரின் 400 ஆண்டுகள் பழைய அரண்மனை முற்றிலும் இடிபாடுகளுடன் உள்ளது, ஆனால் மீதமுள்ள கட்டமைப்புகள் பார்த்து ஆரம்ப ஆண்டுகளில் இது எத்தனை பெரிய அரண்மனையாக இருந்தது என்று கற்பனை செய்யமுடியும்.

கந்தர்வகோட்டையில் ஐந்து பிரதான, 1000 ஆண்டு பழமையான கோயில்கள் இருந்தன. இதில் பாளையத்தாரின் குடும்பத்திற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டது.

காமாட்சி அம்மன் கோயில்,

அங்காளம்மன் கோயில்,

மாரியம்மன் கோயில்,

சிவன் கோயில்,

பெருமாள் (இராமர்) கோவில்,

வெள்ளை முனிஸ்வரன் கோவில்.
(பூரணா, பூஷ்கலா சமேத அய்யனாரின் காவல் தெய்வமாகிய வெள்ளை முனியன்) கோவில் ஆகிய காலத்தால் முற்பட்ட கோவில்கள்.

கந்தர்வகோட்டை பாளையத்தார் குடும்பத்தில் புதுக்கோட்டை மகாராஜா குடும்பத்துடன் திருமண உறவு உள்ளது. கந்தர்வகோட்டை பாளையத்தார் கடந்த ஏழு தலைமுறையினர் பெயர்கள்

1) சூர்யா நாராயண பண்டாரத்தார்
2) அர்ஜுனனாதன் பண்டாரத்தார்
3) ராஜா கோபால பண்டாரத்தார்
4) ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
5) ராமச்சந்திர துரை ராஜா பண்டாரத்தார்

ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார் MLA வாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவர்






சிவனாரின் மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு அழகிய கோயிலைக் கட்டினான். காலப்போக்கில் இந்தக் கோயில் இருந்த பகுதி முழுவதும் வனமாகிவிட, கந்தர்வகோட்டை ஜமீன்தார்களின் முயற்சியால் கோயில் கண்டெடுக்கப்பட்டு, சீர்செய்யப்பட்டு பழையபடி வழிபாடுகள் நடைபெறத் துவங்கிய தாகச் சொல்கிறார் கோயிலின் திருவேங்கட பட்டாச்சார்யர்.

சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த கந்தர்வக்கோட்டை பகுதி முற்காலத்திலும், சுதந்திரத்திற்கு பிறகும் சோழ நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த கந்தர்வக்கோட்டை 1974-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் உருவானபோது அதனுடன் இணைக்கப்பட்டது.

19ம் நூற்றாண்டு இறுதி வரை கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி பயன்படுதிதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

காடுகளை அழித்து விவசாயத்திற்காக ஏரி நீர் பயன்படுத்தப்பட்டது என்பதை, ‘மருதன் ஏரிஎன்ற, பெயர் உணர்த்துகிறது. பல்லவ, சோழர்களின் கூட்டுப் படைகள், பாண்டியர்களை வெற்றிகண்ட பின், பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான முத்தரையர்கள், சோழர்களின் நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டனர். அதற்கு சான்றாக, ஆதித்த சோழன் காலத்திய, ரணசிங்க முத்தரையன் கல்வெட்டு விளங்குகிறது. இதுவே, இப்பகுதியில் கிடைத்த, மிகப் பழமையான கல்வெட்டு. இவ்வாறு தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கூறினார்

கந்தர்வகோட்டை வரலாற்றை கூறும் கல்வெட்டு ஓவியர் கலியபெருமாள், ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அழிக்கப்பட்ட தகவலைக் கூறும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூரில் உள்ள குளம் தூர்வாரியபோது அங்குள்ள மடையில் சுமார் 3 அடி நீளம், முக்கால் அடி அகலமுள்ள கல்வெட்டு மீட்கப்பட்டது. கல்லில் எழுதப்பட்டிருந்தது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கந்தர்வக்கோட்டை கோவில் நல்லூர் எனவும், கோவில் நல்லூர் மற்றும் சில கிராமங்களை உள்ளடக்கி அதை மீபொழில்நாடு எனவும் மக்களால் அழைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதை வாராப்பூரில் உள்ள பழமையான அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சமஸ்தான கல்வெட்டும் உறுதி செய்கிறது.

இந்தக் கல்லின் ஒரு பகுதியில் தாமரை பூக்கள் செதுக்கப்பட்டுள்ளதால், இது பழமையான கோயில்களில் வாசற்படிக்காக பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. பின்னர், ஏதோ ஒரு காரணத்தினால் கோயிலில் இருந்த கல்லை விவசாயிகள் குளத்தின் மடைக்கு பயன்படுத்தியுள்ளனர். கி.பி. 13-ம் நூற்றாண்டில் செங்குலத்தரையன் என்பவர் மூலம் கோவில்நல்லூர் என்று அழைக்கப்பட்ட கந்தர்வக்கோட்டை அழிக்கப்பட்டிருக்கிறது என இக்கல்வெட்டு மூலம் தெரிகிறது.

இத்தகைய அழிவில் இருந்து மீட்க மீபொழில் நாட்டின் பாதுகாவலராக விளங்கிய கடுங்கோளனை கடுங்கோளனை அந்தப் பகுதியினர் நாடியதும் அந்தக் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. ஆனால், எதற்காக அழிக்கப்பட்டது என்ற விளக்கம் அதில் இல்லை. இத்தகவல்களை கல்வெட்டு ஆய்வாளர் கே.ராஜேந்திரனும் உறுதி செய்துள்ளார்.

தொண்டைமான்கள் புதுக்கோட்டையை ஆண்டிருந்தாலும் இந்த கந்தர்வகோட்டை நாடு தன்னரசாக யாருக்கும் கட்டுப்படாமல் இங்குள்ள கள்ளர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

இவர்கள் அப்போதிலிருந்தே தஞ்சை வளநாட்டு கள்ளர்களுடன் உறவு முறையில் இருந்து வருகின்றனர்.

இங்குள்ள கள்ளர்கள் அனைவரும் MBC பட்டியலில் வருகிறார்கள்.

கள்ளர்களில்
காடவராயர்
தொண்டைமார்
தென்கொண்டார்
வாட்டாச்சியார்
சவுளியார்
சாணையர்
பிழியராயர்
மட்டையர்
சோழகர்
நாட்ரையர்
திராணியார்
வாண்டையார்
தொண்டைமான்
நரங்கியர்
தெத்து வாண்டையார்
ஊர்த்தியார்
அங்குரார்(ஊர்: அங்குராப்பட்டி)
பாலியார்
நெருமுண்டார்
சேப்பிளார்
காளிங்கராயர்
கோரையர் (ஊர்: கோரம்பட்டி)
சோழங்க தேவர்
வல்லத்தரசு
கட்டவெட்டியார்
மங்களார்
மழவராயர்
பாலண்டார்
திராணியார் (ஊர்: திராணியப்பட்டி)

போன்ற பட்டப்பெயர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

பகட்டுவான் பட்டி, கந்தர்வக்கோட்டை நாட்டில் கள்ளர்கள் மட்டுமே இருக்கும் ஒரே ஊர்

கோமாபுரம் , மெய்க்குடிப்பட்டி, மங்கனூர், கல்லுப்பட்டி போன்று நிறைய ஊர்கள் உள்ளன.

இந்த கந்தர்வகோட்டை நாடு அனைத்து குடிகளையும் கொண்டுள்ளது.

அங்குள்ள தமிழ்ச் சாதிகளுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒற்றுமை, நான் இவர் வீடு எங்கிருக்கு என கேட்டபோது அது எங்க கள்ளவீடுதான் நான் காட்றேனு என்னை அழைத்து செல்கிறார் பறையர் இனத்தவர்.

வெள்ளாளர், கோனார், வண்ணார், பூசாரி, பறையர் என அனைத்து குடிகளும் உள்ளன.

விவசாயம் செழிப்பாக உள்ளது.

நெல், ஆலைக்கரும்பு, துவரை, எள், உளுந்து , சவுக்கு, RS பதி, முந்திரி என பலதரப்பட்ட பயிர்கள் இச்செம்மண் பூமியில் மோட்டார் ,கிணற்று பாசனம் உள்ளது.

குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை அருகில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் மூலம் நிலத்தின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது.

நாட்டு பசு, வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. 10 கள்ளர் வீடுகள் இருந்தாலும் அந்த ஊரில் கள்ளர்களுக்கான மரியாதை கொடுக்கப்படுகிறது. அதுபோல கள்ளர்கள் பெரும்பாலும் உள்ள ஊர்களிலும் அனைத்து குடிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது.

நாட்டு அம்பலங்கள்,ஊர் அம்பல முறை பெரும்பாலும் சிதைந்துவிட்டது. எல்லோருக்குமே மரியாதை தரப்படுகிறது.

பழமையான கலாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.

திருக்காட்டுப்பள்ளி, கந்தர்வகோட்டை கள்ளர்களுக்குள் தொன்றுதொட்டே பெண் கொடுத்து, எடுக்கும் பழக்கம் உள்ளது.

பிரிட்டீஸ் இந்தியாவில் இந்த கந்தவர்கோட்டை பாளையக்காரர் முதன் முதலாக தமிழ்நாட்டில் பாளையக்காரர்களின் முகவர்களாக குறவர் இனமக்களை நியமித்தார். குறவர் மக்களை வேற எந்த பாளையக்காரர்களும் முகவர்களாக நியமித்ததில்லை.

ஒரு பழம்பெரும் தமிழ் குடியான குறவர் பழங்குடியினரை நாட்டுக்குள் ஒரு மரியாதைக்குரிய பாளையக்காரர் முகவர் பதிவில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தான் கந்தவர்கோட்டை கள்ளர் குல அரையர்கள்.

மிகவும் வீரமிக்க இந்த நாட்டை சேர்ந்த கள்ளர்கள் குற்றப்பழங்குடி சட்டத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் எந்த தமிழ் பழங்குடியை(குறவர்கள்) சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தார்களோ அவர்களும் குற்றப்பழங்குடி சட்டத்தில் கடுமையான இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த குற்ற பழங்குடி சட்டத்தால் இன்று அந்த ஊரில் குறவர் மக்களின் குடியே இல்லாமல் உள்ளது மிகவும் வேதனையாகவும், நெருடலாகவும் உள்ளது.

கந்தர்வகோட்டை - தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு

வாடிவாசலை பாக்குமரம் கொண்டு அமைத்துள்ளனர், மாடு மூர்க்கமாக வெளியேவரும்போது முட்டினாலும் பெரிய அளவில் காயம் ஏற்படாது. மாடு குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருத்தல் வேண்டும். மாட்டின் வயது 6 பல்லாக இருக்க வேண்டும். கொம்பு, வாலை பிடித்தால் வீரர்களை வெளியேற்றுதல். மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை.
போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்கிறார்கள்.

கந்தர்வகோட்டை கள்ளர் ஜமீனை ஜாமீனில் மீட்ட தாத்தா வேங்கடசாமி நாட்டார் குடும்பம்:-

அக்காலத்தில் சோமசுந்தர நாட்டாருக்கு மிகவும் ஸ்நேகிதமாயிருந்த கந்தர்வகோட்டை ஜமீன்தார் அச்சுதநாராயண பண்டாரத்தார்.

ஜமீனுக்கு மூன்று நாட்கள் விருந்துவைத்தனர் நாட்டார் குடும்பம். நாட்டாருடைய குதிரை சிறியதாக இருந்ததால் தன்னுடைய குதிரையை நாட்டார் வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார் பண்டாரத்தார். ஜமீனுக்கு தன்னுடைய பல்லாக்கையும் நாட்டார் குடும்பம் அளித்துள்ளது.

அதிலிருந்து பிரியம் ஏற்பட்டு, நாட்டார் குடும்பம் 10,12வண்டிகளில் தேங்காய், கரும்பு, காய்கறிகளை சீராகவும், விமரிசையாகவும் பண்டாரத்தாருக்கு அனுப்பியுள்ளனர்.

கந்தர்வகோட்டை ஜமீன் ரிமாண்டில் கோவை ஜெயிலில் இருக்கும்பொழுது தன் சொந்தங்களை நம்பாமல் சோமசுந்தர நாட்டாருக்கு தன்னை மீட்கும்படி கடிதம் எழுதுகிறார். நாட்டார், கள்ளப்பெரம்பூர் தன் அத்தை மகனான செவந்திலிங்க நாட்டாரை தொடர்பு கொண்டு பண்டாரத்தை விடுதலை செய்து மீட்டு வந்துள்ளார்.

கள ஆய்வு : திரு. பரத் குமார் கூழாக்கியார்.

நன்றி: திரு . ரமேஷ் மனோகரன்

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...