Monday, March 30, 2020

நாவலர் நடுக்காவேரி நமு வேங்கடசாமி நாட்டார்




தமிழர் முன்னோடிகளின் பாரம்பரியம் ஏந்திய கள்ளர் பெருங்குடியில் பிறந்த தாய்த்தமிழ் மகன் தாத்தா வேங்கடசாமி நாட்டார் அவர்கள், அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.

தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார்.

1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார்.

வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது. இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர்.

தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலயம் என்னும் காண்டீப விருது பெற்ற குன்னங்கோட்டை நாட்டார் மடத்தை நிறுவிய வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் உதவியுடன் முயன்றார்.மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் தனது சொத்துக்களிலிருந்து 200 ஏக்கர் நிலம் கல்லூரி நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினார்.பிற்காலததில் அது பலரால் தையகப்படுத்தப்பட்டு விட்டது.அதற்கான ஆதாரம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் வாரிசுகளிடம் உள்ளது.

1980களில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் நாவலர் கனவு கண்ட திருவருள் கல்லூரியையும் அதே பெயரில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ்க் கல்லூரியாக நிறுவி நடத்தி வருகிறார்கள்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.

ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான். சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும். புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும்.கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும்.ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.
இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார். நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். நாட்டாரய்யா அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தி (1984இல்) அவர்க்குச் சிலை எடுக்க எடுத்த முயற்சிகள் தடங்கலும் தாமதமும் ஆகி, அவரின் பெயர்த்தி திருமதி அங்கயற்கண்ணி செயதுங்கன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அறக்கட்டளையினரால் (13.02.2005) அன்று நாட்டாரின் பெயரால் இயங்கும் கல்லூரி வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது.



அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின. 1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.

நாட்டார் இயற்றிய நூல்கள்:-

வேளிர்_வரலாறு
நக்கீரர்
கபிலர்
சோழர் சரித்திரம்
கள்ளர் சரித்திரம்
காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது

நாட்டார் அறநூல்களுக்கு எழுதிய பதவுரையும்,பொழிப்புரையும்:-

அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை
ஒளவை இயற்றிய கொன்றை வேந்தன்
உலகநாதனார் இயற்றிய உலகநீதி
ஒளவை இயற்றிய மூதுரை
ஒளவை இயற்றிய ஆத்திசூடி
ஒளவை இயற்றிய நல்வழி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி

நாட்டார் எழுதிய உரை நூல்கள்:-

சிலப்பதிகாரம்
மணிமேகலை
அகநானூறு நித்திலங்கோவை
யாப்பருங்கலங்காரிகை
இன்னா நாற்பது
களவழி நாற்பது
கார் நாற்பது

நாட்டார் எழுதிய புராண உரை நூல்:-

திருவிளையாடற் புராணம்

நாட்டார் திருத்திய உரை நூல்கள்:-

அகத்தியர் தேவாரத் திரட்டு
தண்டியலங்காரப் பழைய உரை
யாப்பருங்கலக் காரிகை உரை

இறுதி மூச்சு வரை தமிழுக்காக தொண்டாற்றிய ஒப்பற்ற தாய்த்தமிழ் மகனுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்

நன்றி
பாலாஜி ஜெகதீஸ்
தஞ்சை


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஆன்மிக மற்றும் சமய கொள்கை


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஆன்மிக மற்றும் சமய கொள்கை பற்றி இந்த முதல் சந்திப்பில் பார்ப்போம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு ஆன்மீக குடும்பத்திலே பிறந்தவர்.
அவரது தாய் பூஜை புனஸ்காரங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்.
புராண இதிகாசங்களில் மிகுந்த புலமை உடையவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் .
நேதாஜி தன்னுடைய ஆன்மிக குருவாக ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் உள்ளதாக கூறுகின்றார் . 

போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்ட பகவத் கீதை அவருக்கு பிடித்த ஒன்று .அதில் அர்ஜுனனுக்கு கூறப்படும் " உறவுகள் மற்றும் நண்பர்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு ஒரு வீரன் எவ்வாறு யுத்தத்தை நேர்மையுடன் சந்திக்க வேண்டுமென்ற அத்தியாயத்தை அவர் பலமுறை தன்னுடைய சக இந்திய தேசிய ராணுவத்தினருடன் பகிர்ந்துள்ளார்.

அதேபோல அதை தன் வாழ்நாளில் நடைமுறைப் படுத்தியுள்ளார் .நேதாஜி அவர்கள் அடிக்கடி ஆழ்நிலை தியானம் செய்யக்கூடிய இயல்புடையவர். இக்கட்டான பல சூழல்களில் தியானத்தின் மூலமாகவே தன்னுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை தேடியவர். பல நாட்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்ட பொழுது மிகநீண்ட தியானத்தில் ஆழ்ந்து விடும் பழக்கம் அவரிடத்தில் இருந்தது. மாவீரன் நெப்போலியனுக்கு யுத்தகளத்தில் கூட ஒரு மணி நேரம் குதிரையில் அமர்ந்தவாறே உறங்கும் பழக்கம் உண்டு என்பது போல நேதாஜி அவர்களுக்கும் இக்கட்டான சூழலிலும் சுற்றிலும் குண்டு மழை பொழிந்த போதும் சிறிது நேரம் தியானம் செய்யும் பழக்கம் உள்ளவராக இருந்தார். இந்த தியானம் தன்னை நெருக்கடியான சூழலில் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி உள்ளதாக அவர் கூறுகிறார். இறை நம்பிக்கை உடையவர்களாகவே அவருடைய தேசிய படையினரும் இருந்தனர் என்றாலும் அவ்வாறு இறைநம்பிக்கை அல்லாத புரட்சி கருத்துடைய இளைஞர்களையும் நாத்திக கருத்துக்களை கொண்டோரையும் கூட நேதாஜி சமமாகவே கருதினார் .மேலும் இந்து இஸ்லாமிய சீக்கிய இனங்களைச் சேர்ந்த அத்தனை படையினருக்கும் அவரவர் நம்பிக்கைப்படி தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ள தன்னுடைய ராணுவத்தில் முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். அதேசமயம் இத்தகைய மத பூசல்களும் தன்னுடைய ராணுவத்தினர் தொண்டர்கள் ஆட்பட்டு விடாதவாறு அவர்களைப் பயிற்றுவித்து இருந்தார்.

சிங்கப்பூர், ஜப்பான், கொரியா,, நேபாளம் & ஆஸ்திரியா போன்ற நாடுகளில் அவர் பயணம் மேற்கொண்ட போதெல்லாம் கிறிஸ்தவ மற்றும் புத்ததேவ் ஆலயங்களுக்கும் சென்று அங்குள்ள மத குருமார்களிடம் தத்துவங்களை விவாதிக்க கூடியவராக இருந்தார் .அதேபோல உலகமெங்கும் பரவி இருந்த ராமகிருஷ்ண மடம் மற்ற விவேகானந்தர் மடங்களுக்கு செல்லும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். ஆசாத் ஹிந்த் என்ற நாடுகடந்த அரசை அவர் உருவாக்கிய பொழுது "கடவுளின் பெயராலேயே என்னுடைய இந்திய தேசத்தையும் அதில் வாழும் 38 கோடி இந்தியர்களையும் விடுவிக்க இந்த இலட்சிய மிகுந்த போரை என்னுடைய உயிர் மூச்சு இறுதிவரை மேற்கொள்வேன்" என்று இறைவனின் பெயரால் உறுதிமொழி எடுத்தார்.

இந்திய தேசிய ராணுவத்தின் கட்டளை அதிகாரியாக அவர் மீண்டும் பதவியேற்ற பொழுது அனைவருக்குமான இறைவன் தன்னுடைய ராணுவத்திற்கு இந்த இக்கட்டான சூழலில் இந்தியா தவித்துக் கொண்டிருக்கிற வேளையில் பலத்தையும் வெற்றியையும் தர வேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன்னுடைய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை ஒரு இடதுசாரி கட்சியாகவே பதிவு செய்தார் .பொதுவாக இடதுசாரி கட்சிகள் என்பது நாத்திக கருத்து உடையவர்களாகவே அறியப்படுகின்றனர் .எனினும் நேதாஜி, தனது கட்சி என்பது அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் இடதுசாரி தத்துவ நிலைகளிலே செயல்படும் என்று அறிவித்திருந்தார் வர்ண தர்மத்தின்படி மக்களை படிநிலை சாதிய அமைப்பாக மாற்றி வைத்து உள்ள சமூக இழிநிலையை சுபாஷ் சந்திரபோஸ் கடுமையாக எதிர்த்தார் .தன்னுடைய ராணுவத்தில் இருப்போர் இத்தகைய பாகுபாடு மேற்கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அரசாங்கமானது இந்திய மக்களை மதத்தின் அடிப்படையில் ,சாதியின் அடிப்படையில் பல கூறுகளாக பிரித்து வைத்து தங்களது ஆட்சியை வெற்றிகரமாக நடத்துகிறது என்று காந்திஜி முன்னிலையிலேயே பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் வறுமையும் பொருளாதார சமமின்மையும் பெருக மதங்களும் சாதி பூசல்களும் காரணமென்று பகிரங்க குற்றச்சாட்டினர்.

சுதந்திரத்திற்கான போரிலே அனைவரும் கவனம் செலுத்திய பொழுது அம்பேத்கர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மட்டுமே சமய சமூக விடுதலையை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து செயல்பட்டனர் . சுபாஷ் சந்திர போஸ் தன் சுயசரிதையில் இவ்வாறு கூறுகின்றார் "நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன், நான் பிறந்த வீடு இருக்கும் பகுதியான ஒரியா பஜார் கட்டாக் பெரும்பான்மை முஸ்லிம்களால் சூழப்பட்ட பகுதி. என்னுடைய தந்தையோ ஒரு இந்து துறவி போன்றவர் .ஆனால் நாங்கள் இஸ்லாமியர்களின் முகரம் உட்பட அத்தனை விழாக்களிலும் பங்கு பெற்று உள்ளோம். இஸ்லாமியர்கள் அவர்களுடைய வழிபாட்டு முறைகளில் மட்டுமே மாறுபட்டு இருந்தார்களே தவிர அவர்கள் அனைவரும் நம்மவர்களே". 

தீண்டாமைக்கு எதிராக அனைவரும் வாய்ச்சொல் வீரர்களாக இருந்த சமயத்தில் அதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநாடுகளில் செயல்வடிவம் திட்டங்களை விவரித்தவர் . இத்தகைய செயல் காங்கிரஸில் இருந்த பல உயர்சாதியினருக்கு உதறலை கொடுத்தது.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பொழுது அதில் கட்டளை அதிகாரிகளாக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் பௌத்த இஸ்லாமிய சீக்கிய வீரர்களை சமமாக நியமித்தார் .

வீரத்திற்கு சாதி, சமய ,பாலின பாகுபாடு கிடையாது என்று ஓங்கி உரைத்தார்.
தான் அமைக்க உள்ள ஆசாத் இந்த் ஆனது எந்தவித சாதி சமய சலுகைகள் இன்றி எளிய ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான அரசாகவே இருக்கும் என்றும் , சமயம் மற்றும் வழிபாடு என்பது ஆட்சி இறையாண்மை ஆகியவற்றில் எந்தவித பங்கும் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

Suresh Pandian

Sunday, March 22, 2020

விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பார்வர்ட் பிளாக் தோழர்கள்...


முதன் முதலில் இந்திய மண்ணின்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த முதல் ௧ட்சி

அகில இந்தியபார்வர்ட்பிளாக்௧ட்சி

தமிழீழ விடுதலைக்காக தமிழீழ மண்ணில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்டமைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக களமாடி கொண்டிருந்த காலம் அந்தக் காலகட்டத்தில் சர்வதேச நாடுகளின் பல்வேறு விதமான ஆதரவுகள் கிடைத்தாலும் இந்தியாவில் குறிப்பாக தாய்த்தமிழ் உறவுகள் வாழ்கின்ற தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் ஆதரவினை புலிகள் விரும்பினர்

அது சமயம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் அவர்களை சந்திக்க விடுதலைப் புலிகள் எண்ணினர்...

அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் அவர்களுடன்  நெருங்கிய தொடர்பிலும் நண்பராகவும் இருந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆண்டித்தேவர் அவர்களுக்கு தமிழ் தேச இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் மற்றும் பல தலைவர்கள் மூலம் இந்த தகவல் போய் சேர்ந்தது...

அப்போது மதுரைக்கு வருகை தந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேலமாசி வீதியில் உள்ள நெடுமாறன் அவர்களின் தமிழ் தேச இயக்க அலுவலகத்தில்  ஆண்டித்தேவர் அவர்களை நேரில் சந்தித்தார்

விடுதலைப் புலிகள் குறித்தும் பிரபாகரன் குறித்தும்
 ஆண்டித்தேவர்  முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களிடம் தகவலை விளக்கி
1985 ம் ஆண்டு முதலமைச்சர் எம்ஜிஆர்  அவர்களையும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் சந்திக்க வைத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நிகழ்த்தி காட்டியவர் ஆண்டித்தேவர் ஆவார்....

இந்த சந்திப்பின் மூலம் விடுதலைப்புலிகளுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன....
அதன்மூலம் விடுதலைப் புலிகளுக்கு பல உதவிகள் கிடைத்தன...

அதைத் தொடர்ந்து தொடர்ந்து இந்தியாவிற்கு வருகை தந்த
அமைதி பேச்சுவார்த்தை குழுவான ஆண்டான் பாலசிங்கம் கிட்டு பேபி சுப்ரமணியம் ரகீம் உள்ளடக்கிய குழு
முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்து

 தமிழீழத்தில் நடப்பது குறித்து அக்குழுவினர் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களிடம் விளக்கினார்கள்...

அச்சந்திப்பில் நிகழ்விற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவிற்கு அடைக்களமாகவும் ஆதரவாகவும் விளங்கியவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் ஆண்டித்தேவர் அவர்கள்

உசிலம்பட்டி காளப்பன்பட்டி மற்றும் வருசநாட்டு மலைப்பகுதி அதை சுற்றியுள்ள கிராமங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தின் 100மேற்பட்ட வீரர்களை வீட்டுக்கு ஒருவர்களாக தங்க வைத்து ஆதரவளித்து அவர்களுக்கு பலவித பயிற்சிகள் வழங்கப்பட்டது...

நேதாஜி அவர்களை தனது முன்மாதிரியாக எண்ணி செயல்பட்டவர் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்...

இந்தத் தகவலை 1985-ஆம் ஆண்டில் சம்பவத்தில் நேரடியாக இருந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவர் மூலமாக இத்தகவலை பெற்றேன்....

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட நிகழ்வுகளை எம் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்....

        ஜெய்ஹிந்த்

  இர.திவாகரன்
மத்தியகுழு உறுப்பினர்உறுப்பினர்(AISB)
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி


Wednesday, March 18, 2020

கைபேசிக்கான முக்கிய எண்கள்

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவ
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet!

Tuesday, March 10, 2020

அரசர்கள் அஞ்சப் பிறந்தான்



வரலாற்று ஏடுகளில் சில மன்னர்களின் பெயர்களே அவர்களின் தனித்துவ வரலாறு பேசும், அப்படிப்பட்ட மன்னர் பெயர் பட்டியலில் வருகின்ற பெயர் தான் அரசர்கள் அஞ்சப்பிறந்தான்.

புதுக்கோட்டையின் மேற்குப்பகுதியை கோனாடு என்றும், அது சோழர்களின் எல்லைப் படைபற்றாக விளங்கி வந்ததை நாம் புதுக்கோட்டை வட்டார கல்வெட்டுகள் மூலமாக அறியப் பெறலாம்.

அம்மேற்கு பகுதியை சிங்கமங்கலம் என்றும், அதனை ஆட்சி செய்தவர்கள் சிங்கமங்கல அரையர்கள் என்று அழைக்கப் பெற்றனர்.

இதே சிங்கமங்கலத்தரையர்கள் சோழர் வீழ்ச்சிக்கு பின்பு பாண்டியரின் படைப்பற்றான கானாட்டிற்கு அரையர்களாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதனை திரிபுவனச்சக்கரவர்த்தி ஶ்ரீவீரபாண்டியத் தேவர் ஆட்சியாண்டு கிபி1306ஆம் ஆண்டு கல்வெட்டில் “கடலடையாதிலங்கை கொண்ட சோழ வள நாட்டுக் கானாட்டுப் படைப்பற்று சிங்கமங்கலத்தரையர்களில்” என சிங்கமங்கலத்தரையர்கள் கானாட்டிற்கு பாண்டியரின் படைத் தலைவர்களாக வருகிறார்கள்.

இந்த சிங்கமங்கலத்தரைகள் கள்ளர் குலத்தை சார்ந்தவர்கள் என்றும் அவர்களுடைய கடலடையாதிலங்கை கொண்ட சோழ வள நாடு என்பது கள்ளர் நாடு என்பதை வீரசயண உடையார் ஆட்சியாண்டு கிபி1351ஆம் ஆண்டு கல்வெட்டில் கள்ளர் பால் கற்குறிச்சி கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டின் சிங்கமங்கலத்தரையர்களில் சிவலோகமுடையானான தெற்கிலரையன்
ஆயிரவனான அயிலாயனும் வடக்கிலரையன் சாந்தனும்,தேவனும் என கள்ளர் நாடாகவும்,கள்ளர் தலைவராகவும் அறியப் பெறுகிறார்கள்.

சரி இதன் மூலமாக யார் அந்த அரசர்கள் அஞ்சப் பிறந்தான் என்பதை பார்க்க, நமக்கு திரிபுவனச்சக்கரவர்த்தி ஶ்ரீவீரபாண்டித் தேவர் ஆட்சியாண்டு கல்வெட்டில் கோனாட்டு கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு அரசுகண்ட தேவன் அரசர்கள் அஞ்சப் பிறந்தானான_அயிலாராயனென் என்று வழங்கப் பெறுகிறது.

இந்த அயிலாராயனென் சிங்கமங்கலத்தரையரின் தம்பியாக உள்ளதை ஶ்ரீவீரபாண்டியத் தேவர் கல்வெட்டில் உள்ளதை நாம் காணலாம்.

மேலும் இந்த அரசர்கள் அஞ்சப்பிறந்தான் என்பவர் புல்வயல் அரசராக வருவதை ஶ்ரீதிரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு எண்: 179 கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு தெற்றன் அரசர்கள் அஞ்சப்பிறந்தானான குலோத்துங்க சோழக் கடம்பரையனென் என அறியப்படுகிறார்.

சோழர்,பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளிலே அரசர்களை அஞ்ச வைப்பதற்காக பிறந்தவன் என அம்மன்னர்களால் அழைக்கப்பட்டிருப்பதால், அரசர்கள் அஞ்சப்பிறந்தானின் வீரத்தை நினைத்தாலே பிரமிக்க வைக்கிறது. அப்படிப்பட்ட கள்ளர் குல தலைவரை உங்களிடம் நினைவுபடுத்தியமைக்கு பெருமை கலந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றும் கள்ளர்களில்
அஞ்சாத் தேவன்
அச்சமறியார்
பட்டங்களில் சோழபாண்டிய வாழ்வியலாக வாழ்ந்து வருகிறார்கள்.

குறிப்பு: போதை வஸ்த்துகளில் இருந்து மீண்டு
வாருங்கள், காத்துக் கொண்டிருக்கிறோம்
நன்றி
புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள்

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு






Thursday, March 5, 2020

ஒரு தெய்வீகக் காதல் கதை


பையனுக்கு வயது 18, பெண்ணுக்கு வயது 17. பையன் பத்தாம் வகுப்போடு நின்று விட்டு தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறான். பெண் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் முன்பிருந்தே காதலித்து வந்துள்ளனர். பெண் போனில் பேசுவதைக் கண்ட பெற்றோர் திட்டியுள்ளனர். எங்காவது போய்த் தொலை என்று அவர்கள் பேசவே, திடீரென அந்தப் பெண் கிளம்பிச் சென்று 35 கிமீ தொலைவில் ஒரு ஊரில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் வந்து தன்னை அழைத்துச் செல் என்று பையனிடம் மொபையில் சொல்லி இருக்கிறார். பையன் இது பற்றி தன் தந்தையிடம் சொல்லி இருக்கிறான். தந்தை சரி பேசிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு பெண்ணை அழைத்துச் சென்று தனது சகோதரரின் வீட்டில் தங்க வைக்கச் சொல்லி இருக்கிறார். இதற்கிடையில் பெண் வீட்டார் மேற்படி பையன், அவனது தந்தை மீது காவல் துறையில் புகார் செய்கிறார். அந்தத் தந்தை தெரிந்தவர்களை வைத்து பேசி முடிக்கலாம் என்று முயற்சி செய்தார். பெண்ணின் தாய் அதை ஏற்காமல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே காவலர்கள் பையனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள். பெண்ணை காப்பகத்தில் சேர்த்தனர். சில தினங்களுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர் காப்பகம் சென்று அவரை அழைத்து வந்து விட்டனர். பையனின் பெற்றோர் பையனை ஜாமீனில் எடுத்துள்ளனர். நிபந்தனை ஜாமீனில் வந்து நீதிமன்றத்தில் கையொப்பம் இட்டு வருகிறார். இதற்கிடையில் மீண்டும் பெண் பையனின் வீட்டிற்குச் சென்று விடுகிறார். மீண்டும் காவல் துறை தலையிட்டு பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். பையனுக்கு 21 வயது வரும் வரை பெண்ணுக்கு 18 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லி பெரியவர்கள் ஆலோசனை சொல்லி சமாதானப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கடந்த 25 நாட்களாக இந்த காதல் கதை ஓடுகிறது. 

Sunday, March 1, 2020

கல்விக் கழகத் தேர்தல்

இன்று உசிலம்பட்டியில் நடந்த கள்ளர் கல்விக் கழகத் தேர்தலில் தேவர் தந்த தேவர் மூக்கையாத் தேவரின் உருவாக்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியின் வளர்ச்சிக்காக புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்து விட்டு வந்தோம்.



நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...