Sunday, April 27, 2014

நம் தேர்தல் முறையை எப்படி மாற்றவேண்டும்?


இப்போதிருக்கும் தேர்தல் முறையில் "நீ எம்பியை தேர்ந்தெடு. அவர்கள் அப்புறம் கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்" என இருக்கிறது. இதில் சிக்கல் என்னவெனில் எம்பி வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. அதிகார மையங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. எம்பிக்கள் அப்புறம் அந்த அதிகார மையங்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் என்ன சுயமாக கூடி அப்துல்கலாம்தான் நல்ல பிரதிநிதி, அவரை தேர்ந்தெடுக்கலாம் என்றா முடிவெடுக்க போகிறார்கள்?

தேர்ந்தெடுத்த எம்பிக்கும் கொலு பொம்மைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாராளுமன்றத்தில் கட்சி அதிகார மையம் என்ன உத்தரவிடுகிறதோ அதற்கு ஏற்பதான் அவர்களும் வாக்களிக்க முடியும்.

இல்லையெனில் கட்சிதாவல் சட்டபடி பதவி போய்விடும்.
ஆக நம் பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை, தொகுதி நலனுக்கு ஏற்ப எம்பிக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை. மேலும் நாம் யார் பிரதமராக ஓட்டுபோடுவோம் என நமக்கே தெரிவது கிடையாது.

உதாரணமா காங்கிரஸ் வரகூடாது என அதிமுகவுக்கு ஓட்டு போட்டவர்கள் பலர். ஆனால் நாளை அதிமுக காங்கிரஸை ஆதரிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆக இந்த தேர்தல் முறையில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பும் இல்லை, மண்ணனக் கட்டியும் இல்லை. மக்களுக்கு எந்த அளவு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை பொறுத்து எம்பிக்கள் தேர்ந்தெடுக்கபடுவது இல்லை.

அதிகாரமையங்களுக்கு எந்த அளவு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை பொறுத்தே தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். விளைவு ஊழல், அதிகார குவிப்பு, சர்வாதிகாரம்.

இதனால் ஜனாதிபதி ஆட்சிமுறை இந்தியாவுக்கு வருவது மிக அவசியம் ஆகிறது.

இம்முறையில் உங்கள் வாக்கு யாருக்கு போகிறது என்பதில் உங்களுக்கு ஒரு தெளிவு இருக்கும். தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு கட்சியை திட்டிவிட்டு தேர்தல் முடிந்ததும் அவர்களோடு கூட்டணி வைத்துகொள்ளும் முறையும் அவசியமற்றது ஆகிறது.

ஜனாதிபதி ஆட்சி வந்தால் சர்வாதிகாரம் வராமல் தடுக்க அதிகாரபகிர்வு முறையை பின்பற்றலாம். நிதி ஒதுக்கும் அதிகாரம் அனைத்தும் பாராளுமன்றத்திடமே இருக்கும். பாராளுமன்றம் கூடி பட்ஜெட்டை நிறைவேற்றும். அதை வீட்டோ (மறுக்கும் அதிகாரம்) செய்வது ஜனாதிபதியின் உரிமை.

ஆனால் பாராளுமன்றம் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் ஜனாதிபதி காசை செலவு செய்ய முடியாது. பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. சபாநாயகரை தேர்ந்தெடுப்பது எம்பிக்கள் உரிமை. அதில் குழப்பம், கூட்டணி இருந்தால் அது நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காது.

காரணம் எல்லா வாக்கும் மனச்சாட்சிபடி போடபடுவது என்பதால் யார் தாக்கல் செய்யும் பட்ஜெட்டும் அதில் உள்ள மேட்டரை பொறுத்துதான் வெற்றி பெறும் அல்லது தோற்கடிக்கப்படும்.

எம்பி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை கட்சிகளிடம் இருந்து பறித்து கட்சி உறுப்பினர்களிடம் வழங்கவேண்டும்.
உதாரணமாக:

அனைவரும் வாக்காளருக்கு பதிவு செய்கையில் தாம் எக்கட்சி என்பதையும் பதிவு செய்யவேண்டும். கட்சிசார்பு இல்லை என்பவர்கள் அதை பதிவு செய்து கொள்லலாம்.

தேர்தலுக்கு முன்பாக தேர்தல் கமிஷனால் “பிரைமரி (முன்) தேர்தல்”  நடத்தபட வேண்டும். அதில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் போட்டியிட விரும்புகிறவர்கள் இப்போது போலவே விண்னப்ப மனு கொடுத்து போட்டியிடவேண்டும்.

ஒரு தொகுதியில் அக்கட்சி உறுப்பினராக பதிவு செய்த அனைவரும் வாக்களித்து கட்சி வேட்பாளரை தேர்வு செய்வார்கள். கட்சிசாரா மக்கள் இதில் வாக்களிக்க முடியாது.

அதன்பின் தேர்ந்தெடுக்கபட்ட வேட்பாளர்கள் பொதுதேர்தலில் மோதுவார்கள். அதில் ஒருவர் எம்பி ஆவார். மனச்சாட்சிபடி ஓட்டுபோடுவார். அடுத்த தேர்தலில் தாம் ஓட்டளித்த மசோதாக்களுக்கு பொறுப்பேற்று மக்களிடம் விளக்கம் அளித்து தேர்தலில் ஜெயிப்பது அவர் கடமை.

இம்முறையால் வேட்பாளர்கள் கட்சி அதிகார மையங்களுக்கு விசுவாசமாக இருப்பது ஒழிந்து மக்களுக்கு விசுவாசமாக இருப்பது சாத்தியம் ஆகும்.

அடிக்கடி அரசுகள் கவிழ்ந்து தேர்தல்கள் வராது.
பொம்மை பிரதமர்கள், பொம்மை முதல்வர்கள் வருவது தவிர்க்கப்படும். மன்மோகனை மக்கள் தேர்ந்தெடுத்து இருந்தால் அவர் ஏன் சோனியாவுக்கும், ராசாவுக்கும் பயப்பட போகிறார்?

அவர் பதவியை பறிக்கும் அதிகாரம் இருவரிடமும் இருந்ததால்தானே பயப்படுகிறார்? ராசாவை அவர் நினைத்தால் டிஸ்மிஸ் செய்திருக்க முடியும் எனில் அவர் அதை செய்துவிட்டிருக்க போகிறார்.
இது அமெரிக்க ஆட்சிமுறையை ஒத்தமுறை.

இந்தியா மாதிரி மிகபெரும் தேசத்துக்கு இங்கிலாந்து எனும் குட்டி நாட்டின் அரசியலமைப்பு பொருந்தி வராது என்பதை வரலாறு நிருபித்துவிட்டது. ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கி நாடு நகரவேன்டும்.

நன்றி - Neander Selvan


Saturday, April 26, 2014

தமிழ்த் தேசியம் இந்தியாவுக்கு எதிரானதா?


தமிழ்த் தேசியம் என்பது இந்தியாவுக்கு எதிரானது என்று பலரும் கருதுகிறார்கள், பேசுகிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்தியாவிடமிருந்து நமக்கான உரிமைகளை வென்றெடுப்பதுதான் தமிழ்தேசியம். இது இந்தியாவுக்கு எதிரானது அல்ல.

தமிழ்த் தேசியம் போன்ற பல்வேறு இனங்களின் தேசியங்கள் இணைந்ததுதான் இந்திய தேசியம். இந்திய தேசியம் என்ற தனியான ஒன்று இல்லை.

ஆனால் இந்திய தேசியம் தனக்குள்ளே இருக்கும் இனங்களின் அடையாளங்களை அழித்து இந்தியத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது. அது தவறானது. அந்தச் செயல் ஒட்டுமொத்த இந்தியத்தையும் பலவீனப்படுத்தும்.

இந்திய தேசிய இனங்கள் வலுப்பெறும்போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வலுப்பெறும். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன. அதை முன்னெடுக்காதபட்சத்தில் இந்தியா மாபெரும் அரசியல் மாற்றங்களை சந்திக்க நேரிடும். அது பல்வேறு அபாயங்களையும், சிக்கல்களையும் கொண்டது.

எனவே தமிழ்த் தேசியம் போன்ற அனைத்து இந்திய தேசிய இனங்களை வலுப்படுத்துவது இந்தியாவுக்கு நலனையே பயக்கும். அதுவே சரியானதாகவும் இருக்கும்.

Thursday, April 24, 2014

நிலப்பரப்புக்கான ராஜதந்திரம்



இந்திய அரசுக்கு எதிராக தமிழர்கள் யோசிக்க காரணமாக அமைந்தது ஈழப்போர் மட்டுமே.

அதுவரை தமிழர்கள் இந்தியவை தங்கள் தாய்நாடாகத்தான் நம்பி வந்தார்கள். இன்னமும் கூட இந்தியா தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் உரிய மரியாதை அளித்து அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆரம்பித்தால் தனித் தமிழ்நாடு போன்ற சிந்தனை தேவையில்லை.

அதேவேளையில் தற்போதுள்ள இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும்போது யாருமே ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படப்போவதில்லை என்றுதான் தெரிகிறது.

இதுபோன்ற சூழலில் கூட்டாட்சியே சிறந்தது. எனவே ஓரளவு அரசியல் அறிவு பெற்ற அரசியல்வாதிகள் கூட்டாட்சியை நோக்கி நகர வேண்டும். அல்லது எல்லா தேசிய இனங்களும் தனித்தனியே பிரிந்து போனாலும் கூட அவர்கள் தங்கள் பாதுகாப்புக் கருதி தங்களுக்குள் யூரோ போன்ற ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதுதான் சரி.

ஆனால் எல்லாரும் பிரிந்து சேருவது என்பதில் சிக்கல்கள் உள்ளது. எனவே அந்த நிலை வரை போகாமல் சிறந்த கூட்டாட்சியை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

இதையெல்லாம் இன்று வரை உள்ள அரசியல்வாதிகளால் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் பல்வேறு சூழ்நிலைக் காரணிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே புதிய தலைமுறை அல்லது இளைஞர்கள்தான் அதுபோன்ற ஒரு அரசியலை நோக்கி நகர வேண்டும். இதை அரசியல் என்பதை விட நிலப்பரப்புக்கான ராஜதந்திரம் என்றே சொல்ல வேண்டும்.

நான் சொல்றது புரியுதா?

இன்று வாக்களித்த கையோடு...

இன்று வாக்களித்த கையோடு...

Wednesday, April 23, 2014

இது நீண்டநாட்களாக எழுத நினைத்த பதிவு...


எனது பதிவுகளை உன்னிப்பாக கவனித்து வரும் நண்பர்கள், என்னோடு வாக்குவாதம் செய்யும் நண்பர்கள், என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் எனக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

அதாவது,
நீங்கள் சாதி, மதம் குறித்து கடுமையான வாக்குவாதங்களை முன் வைக்கிறீர்கள். அதோடு நீங்கள் உங்கள் பயண விபரங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறீர்கள். எல்லாப் பிரிவுகளிலும் மூர்க்க குணம்படைத்த, வன்முறையில் ஈடுபடக் கூடிய நபர்கள் இருக்கிறார்கள். உங்களை விரும்பாதோர் அவர்களைப் பயன்படுத்தி உங்களை தாக்க முயற்சிக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்களின் எச்சரிக்கையில் உண்மை இருக்கிறது. அவர்களது அன்பை, அக்கறையைப் பாராட்டுகிறேன்.

அவர்களைப் போன்றோருக்குத்தான் இந்தப் பதிவு.

உங்கள் அன்பு, அக்கறைக்கு நன்றி நண்பர்களே,

உண்மையில் சாதி, மதம் குறித்து பல பொய்மைகள் கட்டமைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அவை பல சமூக பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. மக்கள் சேவை, தாய்நாட்டுச் சேவை என்று வரும்போது அவற்றை தவிர்த்துவிட்டு, அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்று பெரிதாக எதையும் செய்து விட முடியாது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட பொய்மைகள் ஒவ்வொரு சாதிக்கும், மதத்திற்கும் எதிராக உள்ளன. இவை ஒருபோதும் இந்த சாதிகளை, மதங்களை ஒன்றிணைய விடமாட்டா. எனவே அந்த பொய்களை, அவை எதுவாக இருந்தாலும் அவற்றைக் களைந்தெறிவது நமது கடமையாகிறது.

அவ்வாறு நாம் செய்யும் செயல் பலருக்குப் பிடித்திருக்கலாம். பலருக்குப் பிடிக்காமல் போகலாம். பிடிக்காது போகும் நபர்கள் நமக்கு எதிராக திரும்புவது சாத்தியமே. நாம் யாரையும் புண்படுத்தாமல் கண்ணியமாக, அதேவேளையில் தர்க்க ரீதியான கேள்விகளை முன்வைக்கிறோம்.

நமக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தர்க்க ரீதியாக எதிர்க்க வந்தால் அவர்களை வரவேற்போம். இல்லை மூர்க்கத் தனமாகத்தான் செயல்படுவோம் என்றால் அதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். அவர்களையும் வரவேற்போம்.

பொய்மைகளால் அணைகட்டி காட்டாற்று வெள்ளத்தைத் தேக்க முடியாது. உண்மை என்ற இறை சக்தியை போலிக்குள் மறைத்து விட முடியாது. இறைவனின் சக்தியான உண்மையைப் பற்றி பேசும் பணி நம்மிடையே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீமைகள் தலைதூக்கும்போது அங்கு நன்மையின் வலுவான சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி இறைவனின் சக்தியாக உள்ளது.

பொய்மை, தீமையின் அட்டூழியம் அதிகரிக்கும்போது இறைவன் அருள்பாலிக்கிறான். அவன் அவதாரமாக பிறக்கிறான். இறைவன் தன் சக்தியை அவ்வாறு அனுப்புகிறான். அதுபோன்ற சக்தி நமக்கு கிடைத்துள்ளது. அதுவே நம்மை தீமைக்கு எதிராக அனுப்பியுள்ளது.

பொய்மையை உடைப்பதும் ஒருவகைப் போரே. அந்தப் போரில் ஒரு படை தோற்றால் இன்னொரு வலிமையான படை அனுப்பி வைக்கப்படும். அது நிச்சயம் தீய சக்திகளை அழித்தொழிக்கும்.

இந்த போராட்டத்தில் ஒரு பெருமாள் தேவன் போகலாம். அதேவேளையில்  அவனை விட ஆயிரம் மடங்கு வலிமையான ஆயிரம் பெருமாள் தேவன்கள் வருவார்கள். அவர்கள் தீமையைத் தேடித் தேடி ஒழித்துக் கட்டுவார்கள்.  

இதனை பதிலாக, தகவலாக, விளக்கமாக, எச்சரிக்கையாக எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்  கொள்ளலாம்.

                                    -----------------------------------------

Tuesday, April 22, 2014

வேஷம் போட்ட சிறுவர்கள்


(10-03-2014) எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் வேஷம் போட்ட சிறுவர்கள். இடது ஓரம் என் இரண்டாவது மகன் அரசத் தேவன். 

Monday, April 14, 2014

கௌரவக் கொலைகள் தடுப்பு, கலப்புத் திருமண பாதுகாப்புக்கு சில யோசனைகள்



1. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையில் காதல் பாதுகாப்பு, கலப்புத் திருமண பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

2. காதலிப்போர், கலப்புத் திருமணம் செய்வோர் இந்த பிரிவில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

3. அவர்களோ அல்லது அரசாங்கமோ உடனடியாக ஒரு கணிசமான தொகையை இவர்களுக்காக காப்பீடு எடுக்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்படும்போது அந்தக் காப்பீட்டுத் தொகையை அவர்களுக்குக் கொடுக்கலாம்.

4. காதல் நல்லது என்று பிரச்சாரம் செய்வோர், அதை வைத்து பணம் சம்பாதிப்போர், அதை வைத்து பிழைப்பு நடத்துவோர் ஒரு பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும். அந்த நிதியிலிருந்து இதுபோன்றோருக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

5. சாதி கெட்டது என்று பிரச்சாரம் செய்யும் அமைப்புகள், ஊடகங்கள் உடனடியாக சாதியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது சாதி-மதத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே அவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் போலியான பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

6. அரசாங்கம் சாதி, மதங்களுக்கு ஆதரவானதா எதிர்ப்பானதா என்பதை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்து ஆதரவானது என்றால் மேற்படி விஷயங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். எதிர்ப்பானது என்றால் சாதி, மத விவகாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

7. ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. ஒன்று சாதி, மதம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது இரண்டும் இருக்கக் கூடாது.

8. காதல் திருமண, கலப்புத் திருமணம் செய்து கொண்டோரின் பாதுகாப்பிற்கு ஒன்று அல்லது இரண்டு காவலர்களை நியமிக்கலாம்.

செய்வார்களா? இவர்கள் செய்வார்களா?


http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=93915

Saturday, April 12, 2014

வன்கொடுமை என்ற பெயரில் மேல்மங்கலம் கிராமத்தில் காவல்துறை அட்டூழியம்


தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் மேல்மங்கலம் கிராமத்தில் இருதினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் 2 குடிசைகளை தீயிட்டுக் கொளுத்தினர். இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போலீசார் இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். காவல்துறை ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றி வளைத்து அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. அந்த ஊரே வெறிச்சோடிக் கிடந்தது. காவலர்கள் மட்டுமே அங்கு நிறைந்துள்ளனர்.

நடவடிக்கை என்ற பெயரில் போலீசார் அத்துமீறி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக இங்குள்ள மக்கள், குறிப்பாக பெண்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏப்ரல் 10-ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்ட பார்வர்டு பிளாக் கட்சியின் செயலாளர் எஸ்.ஆர். தமிழன், தேவரின பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள், வழக்கறிஞர் கலைமணி அம்பலம், கம்பூர் சேகர், அருண்மொழித்தேவன், வழக்கறிஞர் திருமங்கலம் ஜெகதீசன், பாண்டி, மாணிக்கம், உசிலை சுரேஷ், கோச்சடை சேகர்  முதலானோர் அடங்கிய குழுவினர் அங்கு விரைந்தனர்.

அவர்களுடன் கிராம மக்கள் சென்று கலெக்டரிடம் போலீசார் செய்யும் அட்டூழியங்களைப் பற்றி புகார் செய்தனர்.



போலீசார் தீவைப்பில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்யாமல் கண்ணில் பட்டவரையெல்லாம் கைது செய்ய ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை வேனில் அழைத்து வந்து அவர்கள் கைநீட்டும் அனைவரையும் கைது செய்ய ஆரம்பித்தனர்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து அவர்களின் எதிர்காலம் பாழாக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அவர்களை கைது செய்ய ஆரம்பித்தனர்.

வீட்டில் ஆண்கள் இல்லாவிட்டால், அவர்களை அழைத்து வரவேண்டும் என்று பெண்களை மிரட்ட ஆரம்பித்தனர். இல்லாவிட்டால் ஆடைகளை களைந்து அவர்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வோம் என்று மிரட்டினர்.

ஆண்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், வயல்களுக்குச் சென்று மறைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அங்கு சென்றும் அவர்களை தேடித் தேடிக் கைது செய்தனர்.

ஒரு வீட்டில் இருப்பவர்கள் நோயுற்று இருக்கிறார்களா, உதவிக்கு யாரும் இல்லையா என்பது பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களை கைது செய்தனர். பெண்கள் இது பற்றி கலெக்டர் கே. பழனிச்சாமி, மற்றும் தேர்தல் அதிகாரி எம்.ஆர்.மீனாராமிடமும் புகார் செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துமீறி நடந்துகொள்ள ஒத்தாசை செய்யும் மாவட்ட காவல் அதிகாரி மஹேஷை  உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்தனர். அவ்வாறு செய்யவில்லை என்றால் தாங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்தனர்.


இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறை தனது அட்டூழியத்தை நிறுத்தியுள்ளது. 

Friday, April 11, 2014

வேட்பு மனுத்தாக்கல் - ஒரு களப்பணி

            இதனை மக்களவைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக வேட்பு மனுத் தாக்கல் செய்த வேட்பாளர் உடன் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகிறேன்.

            வேட்பு மனு கொடுக்க ஆரம்பித்து ஒரு வாரத்தில் மனுவைப் பெற ஆரம்பிக்கிறார்கள். இதில் வழக்கமாக அரசியல் செய்து வரும் அரசியல்கட்சிகளுக்கு இதில் உள்ள நுணுக்கங்கள் தெரியும். எனவே அவர்களுக்கு அதிகமாக சிக்கல்கள் இருப்பதில்லை.

            ஆனால் புதிதாக மனுத் தாக்கல் செய்பவர்கள் இது பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வது நல்லது.

            ஒரு வேட்பாளர் தான் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சான்றிதழை மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும். அவர் தீவிரமான குற்றச் சாட்டுக்கள், வழக்குகள் இருந்தால் அந்த சான்றிதழைத் தர மறுக்கலாம். இதனை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.

            மனுக் கொடுக்க ஆரம்பிக்கும் தினத்தில் வேட்பாளர் புதிய வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். முந்தைய நாள் செய்தால் கூட அந்தக் கணக்கு ஏற்கப்படாது. இது இந்த ஆண்டு விதிக்கப்பட்ட புதிய விதிமுறையாகும். இந்தக் கணக்கு தேர்தல் செலவுகளை கணக்கில் வைப்பதற்காகக் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்கின் எண்ணை கொடுக்காவிட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.

            வேட்பாளர் தனக்கு வாக்கு உள்ள தொகுதியிலிருந்து வேறு தொகுதியில் போட்டியிட்டால், அவர் அந்த மாவட்ட வருவாய் அதிகாரியிடம் (ஆர்டிஓ) அவருக்கு அந்தத் தொகுதியில் வாக்கு உள்ளது என்பதற்கான சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும். இந்தச் சான்றிதழை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

            மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான அடிப்படை வயதுத் தகுதி 25. இந்த வயதுக்கு அதிகமாக இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழின்படி ஒருநாள் குறைவாக இருந்தால் கூட அவரது மனு தள்ளுபடி செய்யப்படும்.

            வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதைப் போலவே இருக்க வேண்டும். வேட்பாளர் தனது பெயரை மாற்றியிருந்து அது வாக்காளர் பட்டியலில் மாற்றப்படாமலிருந்தால் அது வெளியிடப்பட்ட அரசிதழ் நகலை அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும்.  

            படிவம் 26 மற்றும் 2 படிவங்கள் கொடுப்பார்கள். இதில் படிவம் 26-ஐ அதில் உள்ள முறைப்படி முதல் பக்கத்தை பத்திரத்திலும் மற்ற பக்கங்களை கான்க்ரீட் பேப்பரிலும் டைப் செய்து நோட்டரி செய்து கொடுக்க வேண்டும். மற்ற பக்கங்களை கையால் எழுதிக் கொடுத்தால் போதுமானது.

            மனுவில் எந்த இடத்தையும் வெற்றிடமாக விட்டு வைத்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட தகவல் இருந்தால் கொடுக்க வேண்டும். அல்லது இல்லை என்று எழுதி இருக்க வேண்டும்.

            முக்கியமான விவரங்கள் வழக்கு, சொத்துக்கள் தொடர்பானவையாகும். இதில் சிவில் வழக்குகளாக இருந்தால் பிரச்சனையில்லை. குற்றவியல் வழக்குகளாக இருந்து தண்டனை பெற்றிருந்தால் அது பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். அது மனுவை தள்ளுபடி செய்யவும் காரணமாக அமையலாம்.

            சொத்துக்களைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசம் இல்லாவிட்டால் பிரச்சனையில்லை. வேட்பாளர் மற்றும் அவரைச் சார்ந்துள்ளவர்களின் (தாய், தந்தை, மனைவி, மகன்) சொத்து விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும். கல்வி பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டும். சொத்து உள்ள இடம்(கிராமம், நகர்ப் பகுதி), சொத்தின் சர்வே எண், சந்தை மதிப்பு போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை சொத்துக்களின் சான்றுகளை கையில் வைத்திருப்பது நல்லது.

            அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக இருந்தால் அவருக்காக யாரும் முன்மொழியத் தேவையில்லை. சுயேட்சை வேட்பாளராக இருந்தால் அவருக்காக அவர் போட்டியிடும்  தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்களின் முன்மொழிதல் அவசியம்.

            இதில் வெறுமனே வாக்காளர் அடையாள அட்டையின் நகலைப் பெற்று அவர்களின் முன்மொழிவைப் பெறக் கூடாது. அவரது அடையாள அட்டையில் உள்ள எண்ணை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் (http://www.elections.tn.gov.in/EPICSEARCH/) தேடினால் அந்த வாக்காளரின் பாகம் எண், வரிசை எண், பெயர் விவரங்கள் வரும். அந்தப் பக்கத்தை பிரிண்ட் எடுத்து மனுவுடன் இணைப்பது நலம். அதை குறிப்பிட்டு முன்மொழிவைப் பெற வேண்டும். அந்த வாக்காளரின் பெயருக்கு நேராக அவர் கையொப்பமிட்டு தேதியிட வேண்டும். இந்தப் பக்கத்தின் மூலம் ஒரு வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ளலாம்.

            ஏதாவது காரணத்திற்காக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வாக்காளரின் எண்ணைக் குறிப்பிட்டு அவரது முன்மொழிவைப் பெற்றிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும். புதிய வாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு வாக்காளரால் மட்டுமே முன்மொழிய முடியும். முன்மொழிபவர்கள் பெயர் மாறி கையொப்பம் இட்டிருந்தாலும், அல்லது ஒரு கையொப்பம் விடுபட்டிருந்தாலும் கூட அந்த மனுத் தள்ளுபடி செய்யப்படும்.

            முடிந்தவரை மனுப் பெறுவதற்கான கடைசி தேதிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே மனுத் தாக்கல் செய்வது நல்லது. நிரப்பிய மனுவை அதிகாரிகளிடம் காட்டி அதை சரிபார்த்துக் கொண்டு மறுநாள் தாக்கல் செய்வதும் சிறந்தது. முடிந்தவரை காலை நேரத்தில் மனுத்தாக்கல் செய்வது நலம். ஆனால் அவசரஅவசரமாக இறுதி நாளில் அல்லது அன்றைய நாளில் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யக் கூடாது. அது தவறுகள் நடக்க வாய்ப்பளிக்கும். காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மனுக்களைப் பெறுகிறார்கள்.

            மனுவை தாக்கல் செய்யும்போது முன்மொழிபவர்கள் 4 பேர் உடன் செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் மனு வாங்கப்படும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மனுவை வேட்பாளர் மட்டுமே கொடுக்க வேண்டும். அவர் முழுவதுமாக நிரப்பப்பட்ட மனுக்களை மட்டுமே கையில் வைத்திருப்பது நலம். தேவையில்லாத காகிதங்களை கையில் வைத்திருப்பது குழப்பங்களை ஏற்படுத்தும். நிரப்பப்பட்ட மனுவில் தேவையான இடங்கள் அனைத்திலும் வேட்பாளர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மனுத் தள்ளுபடி செய்யப்படும்.

            மனுவை பெறும்போது அதிகாரிகள் அதனைச் சோதனை செய்ய மாட்டார்கள். அப்படியே வாங்கிக் கொள்வார்கள். இது மனுவைத் தள்ளுபடி செய்வதற்கான ஒரு தந்திரமாகவே படுகிறது. பின்னர் டெபாசிட் தொகையை (ரூ.25,000) ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதையும் கொடுப்பார்கள்.

            இதனை தேர்தல் அதிகாரியாக இருந்து மாவட்ட ஆட்சியரே செய்வார். அவரின் முன்பாக முன்மொழிபவர்கள் 4 பேரும் நிறுத்தப்படுவார்கள். அப்போது வேட்பாளர் தான் இந்திய இறையாண்மை மற்றும் அரசியல் சட்ட திட்டங்களுக்கு இணங்க வேட்பாளராக போட்டியிடுவதாக உறுதிமொழியேற்று கையொப்பமிட வேண்டும்.

            அதன்பின் மாவட்ட ஆட்சியர் ஒரு பார்சலை கொடுப்பார். அதில் டெபாசிட் செலுத்தியதற்கான ரசீது மற்றும் தேர்தல் செலவுகளைக் குறித்துக் கொள்வதற்கான கணக்குப் புத்தகம். மாதிரி செலவுகளுக்கான தொகைகள் போன்றவற்றின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கொடிக்கான செலவு, போஸ்டர், மேடை போடுதல், வாகன வாடகை, சேர் வாடகை போன்ற விவரங்கள் இருக்கும். பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் இந்த செலவு பட்டியலை தினமும் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்து அதற்கு ஒப்புதல் அல்லது ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் வரை செலவழிக்க தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

            முக்கியமாக, வேட்பு மனுவில் கொடுக்க வேண்டிய ஏதாவது இருந்தால் அதைச் சமர்ப்பிக்கக் கூறும் சோதனைப் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை படித்து அதில் கேட்டிருக்கும் விஷயத்தை வேட்பு மனு பரிசீலனைக்கு முன்பாக கொடுப்பது நல்லது. இதில் மனுவில் செய்யப்பட்ட தவறுகள் பற்றி சொல்லப்படாது.

            எனவே நீங்கள் அவர்கள் கேட்ட விவரத்தை கொடுத்தாலும் உங்கள் மனுவில் பிழைகள் இருந்தால் அது தள்ளுபடி செய்யப்படும். ஆட்சியர் கொடுக்கும் பார்சலில் பாராளுமன்ற உறுப்பினர் தேர்வு சம்பந்தமான சட்ட விதிமுறைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். வேட்பளார் அதனை படித்து கொள்வது நல்லது.

            வேட்பு மனு பெற்ற பின்னர் ஓரிரு நாளில் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைத்து வேட்பாளர்களின் முன்பாக வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களின் மனுக்களில் உள்ள குறைகளைச் சொல்லி அவற்றை தள்ளுபடி செய்வார் அல்லது ஏற்றுக் கொள்வார். மனுத் தள்ளுபடி செய்யப்பட்டால் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிட்ட பிறகு அவர்களது டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும்.

            அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒன்று அல்லது இரண்டு மாற்று வேட்பாளர்களுக்கும் மனுத்தாக்கல் செய்வார்கள். அதாவது ஏதாவது காரணத்திற்காக வேட்பாளரின் மனுத் தாக்கல் செய்யப்பட்டால் மற்றவரின் மனு ஏற்கப்பட்டு அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். கட்சியின் வேட்பாளர் மனுத் தள்ளுபடி செய்யப்படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

            வேட்பாளர் மனுப் பரிசீலனை தினத்தில் கட்சி வேட்பாளர்களுக்காக மனுவை நிரப்பியவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பர். மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அது அவர் தலையில் விழும். மனு ஏற்கப்பட்டால்தான் அவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவார். மனுத்தாக்கல் என்பது ஏறக்குறைய களப்பணி ஆற்றுவதைப் போலாகும். எனவே ஒவ்வொரு வேட்பாளரும் இதில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம்.

            முதல் வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டால் மாற்று வேட்பாளர்களின் மனுவை ஏற்க வேண்டிய அவசியமில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஓரிரு நாட்கள் காலக் கெடு கொடுக்கப்படும். அதற்குள் விருப்பமில்லாதவர்கள் தங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
                                                *****

Friday, April 4, 2014

ஆபரேசன் 100!


2007ஆம் ஆண்டு தேவருக்கு நூற்றாண்டுவிழா நடக்கிறது வருடமுழுவதும் நடந்த கோலாகலத்தை கண்டு முகம் சுழிகிறது ஒரு தரப்பு. அதன்பின், நீங்கள் அறிந்தப்படியே தேவர் சிலை அவமதிப்பு அந்த ஆண்டு தென் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது.


முகம் சுழித்தவர் அவசரமாக ஒற்றை சிந்தனையிலுள்ள ஒரு தரப்பு ஆட்களை திரட்டுகிறார் "ஆப்ரேசன் 100" என்ற திட்டம் வகுக்கப்படுகிறது.


அந்த ஆப்ரேசனின் முதல் வேலையாக சட்டக்கல்லூரி பிரச்சனைக்குள் நுழைகிறது. 3 நபர்கள் அதில் சிக்கிகொள்ள இரும்பு கம்பிகளால் துடிக்க துடிக்க அடித்து அதனது முதல் ஆப்ரேசனை வெற்றிக்கரமாக தொடங்கியது. அதற்கு அடிவாங்கியவர்கள் தரப்பு பெரிய எதிர்ப்பையோ எதிர்செயலையோ காட்டாமல் பதுங்கினார்கள், அதையும் கவனிக்க தவறவில்லை "ஆப்ரேசன் 100" குழு.


தனது பார்வையை தென்மாவட்டம் பக்கம் திருப்பியது அதன்பின் பசும்பொன்னுக்கு செல்வோர்கள் கல்லால் அடித்துக்கொலை, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை, அரிவாளால் வெட்டி கொலை என தொடர்கிறது. ஆனால் "ஆப்ரேசன் 100" குழு சிக்காமல் தனது சாதுரியதால் இருட்டுக்குள் அடுத்த குறிக்கான வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறது.


வெள்ளையர் காலத்தில் தேவர் சாதியில் பிறந்தாலே "குற்றப்பரைச் சட்டம்" பாயும், 
"ஆப்ரேசன் 100" குழுவுக்கு நீங்கள் தேவர் சாதியில் பிறந்திருந்தாலே போதும், கல்லோ, இரும்போ, அரிவாளோ உங்களை நோக்கி வரும்.


எந்த நேரத்திலும் நீங்கள் தாக்கப்படாலம் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் கரும் கற்கலால் அடித்துக் கொல்லப்படலாம். அதனால் உங்களை நீங்களே பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.


பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் சி.பி.ஐ விசாரனை கோரயுள்ளது, அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. ஆப்ரேசன் 100 குழுவின் உறுப்பினர்கள் விவரமும் அவர்கள் கையில்..


அதுவரை உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள், நீங்கள் மிதித்து நடந்த கற்கள் நாளை உங்களை கொல்ல பயன்படும் ஆயுதமாகலாம்.அதுவரை உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


(நன்றி - ஆர். தியாகு)

Thursday, April 3, 2014

காங்கிரஸை ஒழித்துக் கட்டுவது ஒவ்வொரு இந்துவின் கடமை

            ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி முதலில் ஒரு சமூக சீர்திருத்த அமைப்பாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பே அது பல துரோகங்களை செய்தாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை. அக்காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்குப் பின்னர் இந்த நாட்டின் சாபக்கேடாக அமைந்துவிட்டது. இது இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி வருகிறது. சுதந்திரத்திற்குப் பின் இந்தியா முழுவதும் இருந்த இந்தக் கட்சி தற்போது மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

            இதற்கு முக்கிய காரணம் இந்தக் கட்சி தேசிய இனங்களை தூசு போல மதித்ததாகும். மற்றொரு காரணம் பெரும்பான்மை மக்களான இந்துக்களைப் புறக்கணித்து வந்ததாகும். இஸ்லாமியரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி வரும் இக்கட்சி அவர்களை சந்தோஷப்படுத்த பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு வருகிறது.

            ‘சிறுபான்மையினரின் பாதுகாவலன்’ என்ற பெயரை தக்க வைத்துக் கொள்வதில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சி கடந்த 2011ம் ஆண்டு ஒரு கொடுமையான சட்ட வரைவை உருவாக்கியது. அது “வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) (பிசிடிவி) மசோதா” ஆகும்.

            இந்த மசோதா (சட்டம்) இந்தியா முழுவதும் உள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்களின் நலனை பாதுகாப்பதாக, அல்லது அவர்கள் பெரும்பான்மை இந்துக்களை அடக்கி ஒடுக்க வகை செய்யும் கொடுங்கோன்மைச் சட்டமாக உள்ளது. தன்னை நடுநிலையாளராக காட்டிக் கொள்ளும் இந்தக் கட்சி ஒப்புக்காக தனது மற்றொரு வாக்கு வங்கியான தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் பாதுகாப்பையும்  இந்தச் சட்டத்தில் சேர்ந்துள்ளது.

            ஆனால் அதே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் இந்துக்களாக இருந்து சிறுபான்மையினருடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்பதை இந்தச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை.

            இந்த மசோதாவை சட்டமாக்கிவிடலாம் என்று காங்கிரஸ் கடந்த ஓரிரு ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. ஆனால் இது கொடுமையான சட்டம், இந்துக்களை முற்றிலுமாக ஓரங்கட்டும் சட்டம் என்று சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கவும் இதை நிலுவையில் வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்றால் இக்கட்சி இந்த மசோதாவை சட்டமாக்குவது உறுதி. இந்தச் சட்டம் இந்துக்களை பரம்பரை குற்றவாளிகள் ஆக்கும் ஒரு நவீன குற்றப் பரம்பரைச் சட்டம் என்று சொன்னாலும் மிகையாகாது. எனவே இந்துக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவச் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு இந்த மசோதாவின் சில விதிகள்:-

• ‘இந்துக்கள் அனைவரும் குற்றவாளிகள் மற்றும் கலவரம் செய்வோர்’ என்ற கருத்தின் அடிப்படையில் சிறுபான்மையினர் இந்தச் சட்டத்தை இந்துக்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும் (இந்த மசோதா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரை “சிறுபான்மையினர் குழு” (பிரிவு 3ஈ) என்று வரையறுக்கிறது).

• இந்தச் சட்டத்தின் மூலம் வெறும் புகாரின் அடிப்படையிலேயே ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய முடியும். புகார் செய்யப்பட்ட இந்து உடனடியாக கைது செய்யப்படுவார். தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கத் தவறும்பட்சத்தில்  அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார் (வழக்கமான குற்றவியல் செயல்முறைகளின்படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று நிரூபிக்கப் படாதபட்சத்தில் நிரபராதியாகக் கருதப்படுவார்).

• இந்தச் சட்டத்தின்படி அனைத்துக் குற்றங்களும் அதாவது அறியப்படக் கூடிய மற்றும் அறியப்பட முடியாத அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவரமுடியாதவை (2011 மே வடிவத்தின்படி விதிமுறை 56) ஆகும்.

• இந்தச் சட்டம் உழைக்கும் மற்றும் தொழில் செய்யும் பெரும்பான்மை இந்துக்களை முஸ்லீம்கள் மிரட்டிப் பணம் பறிக்க வழி செய்யக் கூடியதாக உள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

• இந்தச் சட்டத்தின் கீழாக குற்றங்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு எந்தவித கால வரம்பும் இல்லை. இதற்கு ‘சிறுபான்மையினர்’ 1950-லிருந்து இந்துக்கள் மீதாக தொடரப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரலாம் என்று பொருளாகும்.

• 42வது பிரிவின்படி தேசிய ஆணையத்தின் முன்பாக ஒரு இந்து மீது சிறுபான்மையினர் கொடுக்கும் பொய் சாட்சிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது.

• தேர்ந்தெடுக்கப்படாத நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசி) அனைத்து மாநில முதல்வர்களையும் கட்டுப்படுத்தக் கூடியதாக  இருக்கும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கூட்டாட்சிக்கும் எதிரான ஒன்றாகும்.

• மதவாத காங்கிரஸ் கட்சியின் இந்தச் பிசிடிவி மசோதா/ வகுப்புவாரி வன்முறை மசோதா/ வகுப்புவாரி மற்றும் குறி வைக்கும் வன்முறைத் தடுப்புச் சட்டம் என்பது இந்துக்கள் மட்டுமே எப்போதும் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள், சிறுபான்மையினர் ஒருபோதும் கலவரத்தில் ஈடுபடுவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

• இந்துக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழாக வழக்குத் தொடர முடியாது. ஏனெனில் இந்தச் சட்டத்தில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (பிசிடிவி) கீழாக ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர் அல்லது ஏதாவது ஒரு சிறுபான்மை மதத்தவர் ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் கூட புகார் செய்தாலும் ஏழை - பணக்காரர், தாழ்ந்த சாதி - உயர்ந்த சாதி, இடது சாரி- வலது சாரி என்ற பாரபட்சம் இல்லாமல் அவர் கைது செய்யப்படுவார்.

• இந்த பிசிடிவி சட்டத்தின் கீழாக இந்தியாவுக்குள் ஊடுறுவிய ஒரு பங்காளதேசத்தவர், ஒரு ஜிகாத் தீவிரவாதி அல்லது ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லீம் புகார் செய்தால் அந்த இந்து குற்றவாளி என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்படுவார்.

• ஒரு இந்து தான் ஒரு நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அவர் தான் ஒரு நிரபராதி என்று நிரூபிக்கும் வரை காவல்துறையும் நீதிமன்றங்களும் அவரை குற்றவாளியாகவே கருதும்.

• ஒரு இந்து மீது குற்றம்சாட்டும் ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர் தான் வைக்கும் குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் எதையும் கொடுக்கத் தேவையில்லை.

• இந்து மீது யார் புகார் செய்தார்கள் என்பது தெரிவிக்கப்படாது

• இந்து தன் மீது புகார் செய்த முஸ்லீம் அல்லது கிறிஸ்தவரை குறுக்கு விசாரணை செய்ய முடியாது. ஆனால் வழக்கு விசாரணை பற்றி அவர்களுக்கு தொடர்ச்சியாக தகவல் தெரிவிக்கப்படும்.

• வழக்கு நிலுவையில் இருக்கும்போது நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட இந்து குற்றவாளி என்பது நிரூபிக்கப்படும் முன்பாகவே அவரின் சொத்துக்களை முடக்கலாம். 

• இந்து குற்றவாளி என்று கண்டறியப்பட்டால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு கொடுப்பதற்காக இந்துவின் சொத்து ஏலம் விடப்படும்.

• நீதிமன்றம் தானாக தொடர்ந்த வழக்கு அல்லது புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் ஒரு தனிநீதிபதி ஒரு இந்துவை தான் வசிக்கும் இடத்தை விட்டுச் சென்றுவிடுமாறு உத்தரவிடலாம். ஆனால் ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவருக்கு அவ்வாறு உத்தரவிடமுடியாது.

• இந்த மசோதாவில் இந்துக்களுக்கு எதிரான பல பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்று பிசிடிவி வழக்குகளை நடத்தும் அரசாங்க வழக்கறிஞர்களில் மூன்றில் ஒரு பங்கு வழக்கறிஞர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். மேலும் முஸ்லீம் அல்லது கிறிஸ்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத நபர்கள் மட்டுமே வழக்கறிஞராக இருக்க முடியும்.

• தேசிய ஆலோசனைக் குழுவில் மத்திய மற்றும் மாநில அளவில் ஏழு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதில் குறைந்தது நான்கு பேர் சிறுபான்மையினராக இருக்க வேண்டும். அதாவது இந்த ஆணையத்தில் இந்துக்கள் வேண்டுமென்றே சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.

• இந்த மசோதாவின்படி இந்துக்கள் எவ்வளவுதான் மதச்சார்பற்றவராக இருந்தாலும் இந்த ஆணையத்தின் தலைவராக அல்லது துணைத் தலைவராக நியமிக்கப்பட முடியாது.

• பிரிவு 42-ன் கீழாக தேசிய ஆணையத்தின் முன்பாக ஒரு அளிக்கும் பொய்ச் சாட்சிக்காக அவர் மீது எந்த சிவில் அல்லது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. அதாவது ஒரு இந்து மீது ஒரு சாட்சி பொய்யான குற்றச் சாட்டைக் கூறினால் அதற்காக அவர் மீது வழக்குத் தொடர முடியாது.

• சிறுபான்மையினர் செய்யும் துவேஷ பிரச்சாத்திற்கு தண்டனை அளிக்க முடியாது. ஆனால் இந்துக்களுக்கு தண்டனை அளிக்கப்படும்.

• அதேவேளையில் ஒரு இந்துப் பெண் ஒரு  முஸ்லீம் ஆண் அல்லது ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆணால் கற்பழிக்கப்பட்டால் அந்தக் குற்றச் சாட்டு உண்மை என்பதை அந்தப் பெண் நிரூபிக்க வேண்டும். அந்தப் பெண் யார் (அடையாளம்) என்று கற்பழித்த நபருக்குச் சொல்லப்படும்.

•  இந்த மசோதாவில் சொல்லப்பட்ட பிரிவுகளைப் பயன்படுத்தி சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு இந்துவுக்கு  தான் தரவேண்டிய கடனை கொடுத்து விட்டதாக எழுதி வாங்கலாம், அவரது சொத்துக்களை விற்க, வாடகைக்கு விட கட்டாயப்படுத்தலாம். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர், கீழ் ஊழியர் தனது இந்து முதலாளியை/ அதிகாரியை பழிவாங்கலாம்.

• ஒரு இந்து வீடு/ கடை உரிமையாளர் அதில் குடியிருக்கும் முஸ்லீம் அல்லது கிறிஸ்தவரை வெளியேற்ற முடியாது. அவர் புகார் செய்தால் ஊரிமையாளர் நேரடியாக சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

• ஒரு இந்து, ஒரு முஸ்லீம் அல்லது கிறிஸ்தவரை வேலையாளாக அல்லது கீழதிகாரியாகக் கொண்டிருந்து அவர் சரியாக செயல்படவில்லை என்று கண்டித்தால், அந்த ஊழியரின் மனைவி அல்லது உறவினர்கள் அவருக்கு மன அல்லது உடல் ரீதியாக தீங்கு செய்ததாக புகார் செய்யலாம். அந்த இந்து முதலாளி அல்லது உயரதிகாரியை கைது செய்ய அதுவே போதுமானதாகும்.

• பிரிவு 3.11-ல் ‘பாதிக்கப்பட்டவர்’ என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உறவினர், அவர் வேற்று நாட்டுக் குடிமகனாக இருந்தாலும், அவர் யுஎஸ்ஏ, பாகிஸ்தான், சௌதி அரேபியா அல்லது வளைகுடா நாடுகளில் வாழ்பவர்களாக இருந்தாலும் கூட இந்தியா அல்லது வெளிநாட்டில் வாழும் இந்துவின் மீது புகார் செய்யலாம்.

• பாகிஸ்தானில் வாழும் ஒரு பாகிஸ்தானி இந்தியாவில் வாழும் தனது உறவினருக்காக ஒரு எந்தவொரு இந்து மீதும் புகார் செய்யலாம். அந்த இந்துவை இந்தியப் போலீசார் கைது செய்ய வேண்டும்.

• இந்து வாக்காளர்கள் இவற்றை அறிந்துகொள்ளாவிட்டால் இந்தியா அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்துக்களின் நிலை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நிலையை விட மிக மோசமாகிவிடும். 

• இந்தச் சட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்துக்கள் சிறுபான்மை மதத்தவருடன் பேசுவது, இணைந்து செயல்புரிவதையே குறைத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். எனவேதான் இந்த மசோதா மக்களை பிரித்து வைக்கக் கூடியது, இந்தியாவின் கலாச்சார வேற்றுமையை சீரழிப்பதாக உள்ளது என்றும் சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த மசோதாவின் ஆங்கில பிடிஎஃப் கோப்பை http://nac.nic.in/pdf/pctvb.pdf என்ற இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...