Thursday, June 27, 2019

போராளி குயிலியின் கதை

வரலாற்று ஆய்வு நூல்கள் பட்டியல்

1) 1813 ஆண்டில் j.korley என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய மருது mahradu (an indian story of the beginning of the nineteenth century ) என்னும் நூல்1813 ஆண்டில் வெளியிடப்பட்டது . இந்த ஆங்கில நூலை பேராசிரியர் நா.தர்மராஜன் என்பவரால் தமிழ் மொழி பெயர்க்கப்பட்டு "ஜெகமதி கலைகூடம்" பதிப்பகத்தின் மூலம் வெளியீடான "முதல் விடுதலைப் போர் 1800- 1801 " என்ற
தலைப்பில் மூன்றாவது நூலாக 2013ஆம் ஆண்டு வெளிவந்தது

2) 1830 
ஆம் ஆண்டில் மருது சகோதரர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியாக பணிபுரிந்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் colonel jamesh Welsh இவர் எழுதிய ஆங்கில நூல் military reminiscence ராணுவம் குறிப்புகள் இதை லண்டன் பதிப்பகம் ஒன்று 1830 ஆம் ஆண்டு வெளியிட்டது
இந்த நூலின் சில பகுதிகளை மட்டும் பேராசிரியர் தர்மராஜன் என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு முதல் விடுதலைப் போர் 1800 - 1801 என்னும் தலைப்பில் இரண்டாவது பாகமாக 2013 ல் வெளியிடப்பட்டது

3) 1835 
ஆம் ஆண்டில் Fr.baauche என்ன கிறிஸ்துவ பாதிரியார் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட marudhupandian ,the fateful 18th century (மருதுபாண்டியன் : விதிவசப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டு) எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலினை தமிழாக்கம் செய்து ஆசிரியர்கள் மு.பாலகிருஷ்ணன்எஸ் ஆர் விவேகானந்தம் அவர்களால் தமிழ் மொழியில் "மறவர் சீமைபாரதியாரின் பார்வையில் " என்னும் தலைப்பில் 2014ஆம் ஆண்டு அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

4) 1840 
ஆம் ஆண்டில் மாறைநாடு முருகேசன் அவர்களால் எழுதப்பட்ட "சிவகங்கை சரித்திர அம்மானை " நூல் Oriental manuscripts library, Madars வெளியிடப்பட்டது

5) 1881 
ஆம் ஆண்டில் டாக்டர் கால்டுவெல் என்பரால் the history of
Thirunalveli 
எனும் நூல் அப்போதைய சென்னை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. இதில் 30 பக்கம் மட்டும் சிவகங்கை வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த நூலை 1970இல் தமிழில் "திருநெல்வேலி சரித்திரம்" என்ற தலைப்பில் பேராசிரியர் ந.சஞ்சீவி அவரின் மனைவி பேராசிரியர் கிருட்டிணா சஞ்சீவி மொழிபெயர்த்துள்ளனர் .

6) 1882 
ஆம் ஆண்டில் சிவகங்கை சரித்திர அம்மானையுடன் இணைந்து பாஞ்சை முத்துசாமி என்பவரால் எழுதப்பட்டுள்ள "சிவகங்கை சரித்திரக் கும்மி" நூல் வெளியிடப்பட்டது.

7) 1939 
ஆம் ஆண்டில் கவிராஜ ஜெகவீரபாண்டியனார் என்பவரால் எழுதப்பட்டுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் பாகம் வெளியிடப்பட்டது

8)1954 
ஆம் ஆண்டில் டாக்டர் ந.சஞ்சீவி என்பவரால் எழுதப்பட்டுள்ள "மானங்காத்த மருது பாண்டியர்கள்" எனும் நூல் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டது .

9) 1956 
ஆம் ஆண்டில் டாக்டர் சஞ்சீவி என்பரால் "மருதிருவர்" என்னும் நூல் எழுதி வெளியிடப்பட்டது .
10) 1971 
ஆம் ஆண்டில் டாக்டர் கே.ராஜய்யன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "south indian rebellion the first war of independence 1800 - 1801 " ( தென்னிந்திய புரட்சி சுதந்திரத்திற்கான முதல் போர் 1800 - 1801) நூல் வெளியிடப்பட்டது . இந்த நூலை பொன். சின்னத்தம்பி முருகேசன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு ஜெகமதி கலைகூடம் வெளியீடாக முதல் விடுதலைப் போர் 1800 1801 என்ற தலைப்பில் 2013 ஆண்டு வெளியிடப்பட்டது


11) 1974 ஆம் ஆண்டில் டாக்டர் கே ராஜய்யன் என்பவரால் ஆங்கிலத்தில்  எழுதப்பட்டுள்ள rise and fall of the poligars of tamilnadu நூல் வெளியிடப்பட்டது . இந்த நூலை நெய்வேலி பாலு என்பவர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் தோற்றமும் வீழ்ச்சியும் " என்ற தலைப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .


12) 1988 ஆம் ஆண்டில் முனைவர் மங்கையர்கரசி என்பவரால் எழுதப்பட்டு உள்ள மருதுபாண்டியர் வரலாறும் வழிமுறைகளும் முனைவர் பட்ட ஆய்வேடு இது 1988 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆய்வேட்டை 2008 ஆம்
ஆண்டு புத்தா வெளியீட்டகத்தின் மூலம் நூலாக்கம் செய்யப்பட்டு
வெளிவந்துள்ளது.


13) 1989 ஆம் ஆண்டில் எஸ் எம் கமால் என்பவரால் எழுதப்பட்டுள்ள "மாவீரர் மருதுபாண்டியர்" நூல் ஷர்மிளா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது .
14) 1994 
ஆம் ஆண்டு மீ.மனோகரன் என்பவரால் எழுதப்பட்டுள்ள "மருதுபாண்டியர் மன்னர் " எனும் நூல் அன்னம் பதிப்பதால் வெளியிடப்பட்டது.


15) 1997 ஆம் ஆண்டில் எஸ் எம் கமால் என்பவரால் எழுதப்பட்டுள்ள "சீர்மிகு சிவகங்கை" எனும் நூல் பசும்பொன் மாவட்ட கலை இலக்கிய பேரவையினால் வெளியிடப்பட்டது.


16) 1962 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் எழுதி தயாரிக்கப்பட்ட "சிவகங்கை சீமை" திரைப்படம் வெளிவந்தது.


17) 2009 ஆம் ஆண்டு ப.சந்திரகாந்தம் என்பவரால் "ஆளப்பிறந்த மருது மைந்தன்" என்று நாவல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.


18) 2006 ஆம் ஆண்டில் "மருதிருவர் "எனும் ஆவணப்படத்தை ஜெகமதி கலைகூடம் தயாரித்த தினகரன் ஜெய் என்பவரால் இயக்கப்பட்டது.


மேலே குறிப்பிட்டுள்ள 18 ஆவணங்களிலும் எந்த இடத்திலும் குயிலி சம்பந்தமான கதாபாத்திரங்களோ அல்லது வடிவங்களோ ஒரு வரி கூட வரவில்லை .
இப்படி இருக்கையில் 2000 ஆண்டில் எழுதிய ஜீவபாரதி நாவலில் வரும் கற்பனை கதையை வைத்துக்கொண்டு குயிலி கற்பனை போராளியை தூக்கிப் பிடிப்பது நியாயமா?
வெள்ளையனை எதிர்த்து சிவகங்கையில் ஆரம்பித்த முதல் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று பல ஆயிரம் வீரர்கள் (மருதுபாண்டியர் உட்பட) உயிர் நீத்த அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் கலங்கப்படுத்த விதமாக இந்த வரலாறு உள்ளது
நடக்காத ஒரு போரில் தன் உடலில் நெய்யை ஊற்றிக்கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் கற்பனை காவியத்தின் கதாநாயகிகளை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது . குயில் கதாபாத்திரத்திற்கு இரண்டு சமூகமும் உரிமை கொண்டாடுகிறது.
குயிலி பற்றி ஆய்வு செய்யாமல் உண்மை தன்மையை அறியாமல் தமிழ்நாடு அரசு 30 லட்ச ரூபாய் செலவில் குயிலி நினைவுத்தூண் எழுப்பப்பட்டது . மேலும்போலியான வரலாற்றை வைத்துக்கொண்டு குயிலுக்கு தபால் தலை வெளியிட வேண்டும். குயிலி பெயரில் விமான நிலையத்திற்கு பெயர் வைக்க வேண்டும். குயிலி பேரில் சாலைக்கு பெயர் வைக்க வேண்டும் . குயிலி பெயரில் என்னென்ன
கோரிக்கை வைக்க போறாங்கன்னு தெரியல அடுத்த
இதே நிலை நீடித்தால் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு போலியான வரலாற்றுக்கு
துணை போகும் இந்த அரசும் இந்த கற்பனை வரலாற்றை எழுதிய போலி வரலாற்ற
ஆசிரியருக்கும்குயிலியை தாங்கிப் பிடிக்கும் அமைப்புகளுக்கும் கூடிய
விரைவில் முகத்திரை கிழிக்கப்படும்.
-அகமுடையார் அரண்

Tuesday, June 25, 2019

உண்மையான தமிழர் தலைவர் இல்லை

No real Tamil-speaking leaders in TN!

Since 1969, when Karunanidhi was elected by the then undivided DMK to head the Government following the unexpected demise of CN Annadurai, the party’s life and soul, nobody other than non-Tamils had become the Chief Minister of the State. O Panneerselvam, of course, is a Tamil. But he himself tells everybody that his tenure is only a stopgap arrangement.
Unknown to most people inside and outside Tamil Nadu is the truth that M  Karunanidhi, the self-styled leader of Tamils all over the world, is a Telugu by birth. He is a Telugu born in Tirukkuvalai in Thiruvarur district in the composite Madras Presidency. Whether he likes it or not, Dr Kalaignar (as he wants people to address him. Kalaignar is the Tamil for the greatest scholar in arts and literature!) is the descendent of Telugu-speaking parents and his mother tongue is Telugu. Old timers in Tamil Nadu reminiscence Dr Kalaignar’s friendship with another great son of Andhra Pradesh, who literally over-turned Andhra politics with his slogan, ‘The Telugu pride’, the legendary N T Rama Rao, who took the Congress bastion by storm.
The Tamil pride for which Karunanidhi fights is his way of thanking Tamils for hosting and accepting him. Tamil Nadu’s tryst with non-Tamil leaders does not end with Dr Kalaignar. MG Ramachandran, who was ousted by Karunanidhi from the DMK and who succeeded him as the Chief Minister was a Sri lanka- born-Keralite whose mother tongue was chaste Malayalam.  So long as MGR was alive, Karunanidhi was in political wilderness.
Following the death of MGR, the AIADMK was taken over by Jayalalithaa Jayaraman, a Mandya (Mysore)-born Iyengar whose mother tongue is Kannada. But Jayalalithaa speaks Tamil, Telugu, Malayalam, English and Hindi with ease and poise.
Others who are in line to occupy the Chief Minister’s chair in Tamil Nadu too are non-Tamils. Vijayakanth, the DMDK leader, is a Telugu. The hardcore Tamil nationalist and rationalist Vaiko (whose original name is Vayapuri Gopalasamy, which he changed it to Vaiko as per astrological advise !) too is a Telugu born to Andhra parents. Vaiko, who was once portrayed as the future Chief Minister of Tamil Nadu, though it is doubtful whether he would be able to win an election without the support of the DMK or the AIADMK or the  BJP.
The new recruit to the Congress in Tamil Nadu, yesteryear film actress Khushboo, is a Punjabi Muslim. Rajnikanth, the Tamil matinee idol, about whom the BJP had great hopes and was also projected as a Chief Minister material, is a Mysore born Marathi. This could be the reason why the BJP was interested in projecting the Style Mannan (king of styles) as their leader. Sunday saw D Napoleon, the DMK strongman from Tiruchirapalli, joining the BJP. Interestingly, Napoleon too is a Telugu  Reddiar whose physique speaks volumes about his lineage and pedigree.
And finally about EV Ramasamy Naicker, the founder of the Dravida movement in Tamil Nadu. His biographers state that he was born in a Kannada Balija Naidu family settled in Erode.  But a senior scribe in Chennai who has a passion for drawing out ancestral lineages of politicians, says that EVR is from Andhra Pradesh whose mother tongue was Telugu.The search for a true Tamil nationalist may take some more time.to materialise.
A veteran political analyst has found out the reason for the failure of the Vanniyar dominated PMK to make it to the big league. The party is full of Tamil speaking leaders!


https://www.dailypioneer.com/2014/india/no-real-tamil-speaking-leaders-in-tn.html?fbclid=IwAR18GZislO6vhWBpG2V6XfY3eEHRmy204p0zXfpcfsSpT259JttxCZMgA8k

Thursday, June 20, 2019

கள்ளரிடம் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து ஓடிய மராட்டிய படையினர் - கிபி 1745


பிரெஞ்சுக்காரர்களின் ஆதரவாளனாகிய சந்தாசாகிபு கி.பி.1739 இல் தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சாகுஜியைக் கைது செய்து, துக்கோஜியின் ஐந்தாவது மகனாகிய பிரதாப் சிங் என்பவரைத் தஞ்சை அரியணையில் ஏற்றினான். பிரதாப் சிங் காலத்தில் தான் தஞ்சை உள் நாட்டு விவகாரத்தில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுகாரர்கள் தலையிட ஆரம்பித்தார்கள்.

கிபி 1745-ல், மராத்தியரின் சதாரா இராச்சியத்தின் மன்னரின் படை தளபதி முராரி ராவ் தலைமையில் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளை தாக்கியது. மராத்தியர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தங்களது சூரையாடலை தொடங்கினர்.

கிபி 1745-ல் மார்ச் மாதம், ஆவூரில் இருந்த பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ மத பரப்புரை செய்பவர்கள் மராத்தியரிடம் இருந்து தப்பித்து , தஞ்சையிலுள்ள குண்ணம்பட்டி கிராம கள்ளர்களிடம் சரணடைந்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தான எல்லையில் உள்ள மலையடிப்பட்டி கிராம மக்கள் தங்களது ஆடு மாடுகளுடன் நார்த்தாமலை பக்கம் சென்று விட்டனர்.

ஒரு மாதம் கழித்து திருச்சியில் இருந்த முகாலயர்கள், மராத்தியரை தாக்க தொடங்கினர். இதே சமயத்தில் கள்ளர்களும் மராத்திய படையை தாக்கினர். மராத்திய படையின் படைபற்றுகளை சூரையாடினர்.

கிட்டதட்ட 3000 மராத்திய குதிரை படை வீரர்கள் கள்ளர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தனர். மராத்தியபடையின் போர்கருவிகள் கள்ளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

கள்ளர்களின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு, கள்ளர்களிடம் மீண்டும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மாறுவேடமிட்டு நடைபயணமாக தங்களது சதாரா நாட்டிற்கு தப்பி ஒடினர் மராட்டியர்கள்.

மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1758-ல் கள்ளர்கள் துணைக் கொண்டு பிரஞ்ச் கூட்டுப்படைகளை வெற்றிக்கொண்டதை நாம் அறிந்ததே

நூல் : General history of Pudukkottai State R iyar pg 86

நன்றி : உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

Monday, June 17, 2019

பெரிய சூரியூர் கள்ளர்நாடு









திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று கள்ளர் நாடுகளில் ஒன்று பெரிய சூரியூர் கள்ளர்நாடு

பெரிய சூரியூர் கள்ளர்நாடு என்பது

பெரியசூரியூர்,
சின்னசூரியூர்,
வீரம்பட்டி,
பட்டவேலி,
கும்பக்குடி,
கண்டலூர்,
இலத்தப்பட்டி,
பூலாங்குடி,
பாலாண்டாம்பட்டி,
தெண்திரையன்பட்டி மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது.

நாடு: பெரிய சூரியூர் கள்ளர்நாடு

தலைமை கிராமம்: பெரிய சூரியூர்

பொதுகோவில்: ஆதி மூர்த்தீஸ்வரர் கோவில், சக்தி மாரியம்மன் கோவில்.

கள்ளர் கோவில்: நற்கடல்குடி கருப்பர் கோவில்

மொத்தம் ஆறு கரைகள் உள்ளன.

முதல்கறை: இராங்கி பிரியர்

இரண்டாவது கறை: மொட்டலார்

மூன்றாவது கரை: வல்லத்திரியர்,
சோழங்க தேவர், சோழதிரியர்

நான்காம் கரை: பாண்டுரார், குர்கண்டார், இராங்கிபிரியர்

ஐந்தாம் கரை: முதல்கரையில் வந்த இராங்கி பிரியர், பாண்டுரார், அழகு பிரியர், இதிலும் வருகின்றனர்!

ஆறாம் கரை : மழவராயர், காடுரார் , பாலாண்டார்

இது தவிற சேப்பிளையார், கண்டியர், தென்கொண்டோர், கருப்பட்டியார் ஆகியோரும் உள்ளனர்.

இங்கு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்துவருகின்றன. தை மாதம் 2ம் நாளில் மாட்டுப்பொங்கல் அன்று இவ்வூர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டில் இதுவும் ஓன்று.

இப்பகுதில் உள்ள எலந்தப்பட்டி சிவன் கோவில் செல்லும் வழியிலே மகாவீரர் சிற்பமும் அதனருகே சிவலிங்க ஆவுடையும் காணப்படுகின்றன. அச்சிவலிங்க ஆவுடையின் மேல் பொருந்தாத பாணமொன்றை பொருத்தி உள்ளூர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதன் அருகே ஒரு பழைய கல்லானது கங்கம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. அந்த கல்லில் சில குறியீடுகள் உள்ளன. இவையனைத்தும் ஒரே பீடத்தில் அமைந்துள்ளன.

இப்பகுதியில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. நிறைய கல்வட்டங்கள் அழிந்து விட்டன. அவற்றின் அடையாளமாக முதுமக்கள் தாழியின் பானை ஓட்டு எச்சங்கள் காணக் கிடைக்கின்றன.

இங்கு கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் கிடைக்கின்றன. அவ்வோட்டின் உட்புறமானது பச்சை வண்ணத்தில் முலாம் பூசியும், வெளிப்புறமானது கரும்பச்சை மற்றும் ஊதா நிறத்தில் அலங்கரித்தும் காணப்படுகின்றன.

எலந்தப்பட்டிக்கு மேற்கேயுள்ள பட்டவெளி (பட்டவன் வெளி?) என்ற குக்கிராமத்தில் பிரம்மாண்டமான கல்வட்டங்கள் நிறைய உள்ளன. சில கல்வட்டங்கள் சிதைக்கப்பட்டுவிட்டனன. முன்னர் கேட்பாரற்றுக் கிடந்த பழமையான தாமரைபீடம் கொண்ட சிவலிங்கமும் நந்தியும், இன்று உள்ளூர் மக்கள் சிலரது முயற்சியினால் பொன்னீஸ்வரர் என்னும் பெயரிலே வழிபாட்டில் உள்ளன. லிங்கத்தின் அமைப்பை வைத்து பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

பட்டவெளியின் வடக்குபுறத்திலே சுமார் நான்கடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட அழகிய அய்யனார் சிலை ஒன்று உள்ளது. அரியதாக இவரின் பீடத்திலே யானையும், குதிரையும் ஒன்றாக காணப்படுகிறன.

பட்டவெளிக்கு மேற்கே காலத்தால் முற்பட்ட பிரம்மசாஸ்தா கோலத்திலுள்ள முருகன் சிலையொன்றுள்ளது. இச்சிலை குறித்த தகவலை திரு. கரு.ராஜேந்திரன் அவர்கள் அறிவித்திருந்தார். இவ்விடம் அந்நாளில் ஒரு பெரிய கோவிலாக இருந்திருக்கலாம். சுற்றிலும் செம்பாறை கற்கலாளான சுற்றுச்சுவரின் எச்சமுள்ளது. தற்சமயம் சிறிய கட்டுமானத்தில் சுவர் எழுப்பி சிலர் வழிபட்டு வருகின்றனர்.

சூரியூர் லெட்சுமணன் பட்டி அருகேயும் பழங்கால அய்யனார் சிலை மற்றும் சிதைவுற்ற பழைய கற்றளிகள் உள்ளன.

சூரியூர் கள்ளர்கள் நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு கட்டுப்படாமல் இருந்துள்ளனர்.

நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் திருச்சியிலிருந்து கீரனூர் வழியாக இந்த பெரிய சூரியூர் கள்ளர்நாட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது பாதசாரிகள் அஞ்சுவர். அதுவும் வறட்சிகாலங்கள் என்றால் கள்ளர்கள் முழுவதுமாக வழிப்பறியில் ஈடுபடுவார்கள். வழிபறி என்றால் திருடி ஓடுவது அல்ல தாட்டியமாக அவர்களை மறித்து வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வார்கள். ஒரு முறை திருச்சி நாயக்க மன்னரின் அரச குரு கள்ளர்களால் வழிபறிக்கு ஆளாகியுள்ளார். சினம்கொண்ட நாயக்க மன்னர் செய்வதறியாது திகைத்தார். பெரிய சூரியூர் கள்ளர்களை நாயக்க மன்னர்களின் படைபிரிவில் உள்ளவர்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

அரச குரு நாயக்க மன்னரின் படைபரிவாளங்களோடுதான் வந்தார் ஆனால் அப்படைவீரர்களால் மூர்க்கதனம் கொண்ட பெரியூர் சூரியூர் கள்ளர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படைகள் கள்ளர்களால் சிதறடிக்கப்படுகிறது. அவர்களுடைய குதிரைகள் கவரப்படுகிறது.

வலிமைமிக்க பெரிய சூரியூர் கள்ளர்களை கட்டுப்படுத்த நாயக்கர் புதுக்கோட்டை தொண்டைமானிடம் உதவி கேட்கிறார். தொண்டைமானும் கள்ளர் நாடான அம்புநாட்டின் தலைவர் என்பதால் பின்பு தொண்டைமான் பெரிய சூரியூர் கள்ளர்களோடு இணக்கத்தை கடைபிடித்து அவர்களுக்கு உதவியாக நாயக்க மன்னர்களிடம் இருந்து படைபற்றில் பணியாற்ற பதவிகளை அவர்களுக்கு வாங்கி தருகிறார். இருந்தும் பெரிய சூரியூர் கள்ளர்களின் தாட்டியத்தை அவர்களால் இறுதி வரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இவர்கள் ஆங்கிலேயருக்கும் பெரும் சவாலாகவே இருந்தனர். பெரிய சூரியூர் கள்ளர்நாட்டை பார்வையிட வந்த ஆங்கிலேயர் படைத்தளபதி, அவருடைய குதிரை மற்றும், அவருடைய மனைவி இரண்டையும் கவர்ந்து சென்றார்கள்.

1923 ஆம் ஆண்டு பெரிய சூரியூர் கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது DNC கீழ் வருகின்றனர். DNT க்காக போராடுகிறார்கள்.

பெரிய சூரியூர் கள்ளர் நாட்டின் மந்தையில் இருகற்கள் நடப்பட்டுள்ளது. பெரிய சூரியூர் கள்ளர்களுக்குள்ளேயே கடுமையான சண்டைகள் மூண்டுள்ளன. மீன்பிடிப்பதில் முன்னுரிமை கோரி ஒரே கரைக்குள்ளேயும், வெவ்வேறு பட்டத்திற்குள்ளேயும் சண்டையிட்டுள்ளனர்.
நடப்பட்டிருக்கும் கற்களில் ஒரு வகையறாவும், மற்றொருபுறம் இன்னொரு வகையறாவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது, சாமி கும்பிடுவது என முன்பு பிரித்துள்ளனர்.








சூரியூர் நாடு, தற்போது திருவெறும்பூர் தொகுதியின் கீழ் வருகிறது.

1963-ம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சியில், ஐயா T. துளசி ராங்கிப்பிரியர் அவர்கள் பெரிய சூரியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த போது கட்டப்பட்ட பழைய தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்ந ஊரின் மற்றொரு பெருமை ஜல்லிக்கட்டில் புகழ்பெற்ற "காசி" மாடு.

இன்று சூரியூரில், துடிப்புள்ள மவுன சாட்சியாய், ஊரின் பிரதான சுவரில் இருந்து நம்மை உற்றுப் பார்க்கிறான் காசி. காசியின் முழுப்பெயர் ஸ்ரீநற்கடல்குடி கருப்பண்ணசாமி காசி. காசி பற்றிய நினைவுகளில் உருகுகிறார், காசியை வளர்த்தெடுத்த காசி குமார்.

காசி வருவதற்கு முன், சூரியூருக்கு கோவில் மாடு ஏதுமில்லை. காசி வந்தான். 'ஜல்லிக்கட்டு' எனும் போர்வையுடன் அத்தனை ஊர்களுக்கும் படையெடுத்தான்.

தன் வெற்றியின் வாயிலாக, அந்தந்த ஊர் மக்களின் மனங்களை வென்றான். சூரியூரின் வீரத்தையும் களம் கண்ட மண் அத்தனையிலும் பதித்தான். 'பொதுவாக, இரண்டு வயசுல மாடுகளுக்கு பல் போடும். 5 - 6 வயசுல பருவம் வர்றப்போ, மொத்த, 16 பல்லும் சேர்ந்துடும். பல் சேர்ந்ததுல இருந்து, 10 வருஷத்துக்கு தான், மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தலாம். காசி எங்ககிட்டே வர்றபோதே, பல் சேர்ந்து ஆறு வருஷம் ஆயிருந்துச்சு! ஆனாலும், அதுக்கப்புறம் அவன் வாழ்ந்ததுல, 13 வருஷமும், அவன் யார்கிட்டேயும் தோத்ததில்லை. பெருமை பொங்கச் சொல்கின்றனர் சூரியூர் கிராமத்தினர்.

வாடிவாசலுக்கு அவன் போறதுக்கு முன்னாடி, பொங்கல் வைச்சு பூஜை பண்ணுவோம். வீட்டுக்கு வீடு, அவன் கால்களை மஞ்சத் தண்ணியில கழுவி, ஆசிர்வாதம் வாங்கி வழியனுப்புவோம். எங்க சாமிங்கய்யா அவன்!' ஓவியமாய் சிலிர்த்து நிற்கும் காசியை பார்த்தபடியே, முந்தானையால் கண்ணீர் துடைத்துக் கொள்கின்றனர் சூரியூர்ப் பெண்கள்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான். சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.

சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால்
பெப்சிக்கு எதிராக போராடிவருகிறார்கள்.




ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்
நன்றி : யாஊயாகே

Saturday, June 8, 2019

திருவப்பூர் மதுரைவீரன் சாமி கிடாவெட்டும் நிகழ்ச்சி






கவிநாட்டை சேர்ந்த திருவப்பூர், நத்தம் பண்ணை மதுரைவீரன் சாமி திருக்கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி துவங்கி நேற்று (7-06-2019) கிடாவெட்டும் அரிவாளை பூசாரியிடம் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமுறையாக தலைமுறையாக புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் அரிவாளை எடுத்துக்கொடுப்பது வழக்கம். தற்போதைய இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் அவர்கள் ஊர்மக்கள் சூழ பரிவட்டம் மரியாதை பெற்று அரிவாளை எடுத்துக்கொடுக்கும் காட்சி.





கள்ளர் நாடு சிறப்பு செய்திகள்

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...