Saturday, December 31, 2011

அரசியல்வாதியும் குடிமகனும்

ஒரு நல்ல முதலாளி தன் தொழிலாளியின் முழுத் திறமையை பயன்படுத்தி வேலை வாங்குவான்.

ஒரு நல்ல தொழிலாளி தன் முதலாளியிடமிருந்து தனக்கு சேரவேண்டிய வசதிகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவான்.

அதுபோல ஒரு நல்ல அரசியல்வாதி மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருந்து தன் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஒரு நல்ல குடிமகன் விழிப்புணர்வுடன் இருந்து தன் அரசியல்வாதி தனக்கு செய்ய வேண்டிய கடமைகளை உரிமையுடன் கேட்டுப் பெறுவான்.

Friday, December 30, 2011

நமக்கு பொதுவானவை

என் தமிழினமே

இதுவரை நாம் கண்ட மதங்கள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட சாதிகள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட ஆட்சிகள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட கட்சிகள்
நமக்கு பொதுவானவை

இதுவரை நாம் கண்ட தலைவர்கள்
நமக்கு பொதுவானவர்கள்

நல்லவற்றை எடுப்போம்
மற்றவற்றை மறப்போம்

தமிழர் என்று ஒன்றுபடுவோம்
நாளைய பொழுது நமதே

தினமணி - உதட்டளவு நேசம்!

"செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்".

என மகாகவி பாரதி இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். ஆனால், பாரத நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. சுதந்திரத்துக்கு முன்பாக பாரத நாடு ஆங்கிலேயர்களால் ஒன்பது
மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது.

பொதுவாக தென்னிந்தியா முழுவதும் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் இப்போதைய முழுத் தமிழகமும், ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களின் பெரும்பகுதிகளும் இருந்தன. தமிழகத்தில் தனி திராவிட நாடு கோரும் இயக்கங்கள் வலுப்பெற்று வந்த காலகட்டம் அது. அதாவது, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் கோரிய தனி திராவிட நாடு வரைபடத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கியிருந்தன.

இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என போராட்டம் நடத்திய ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்தினர். வடஇந்தியாவில் தனித்திராவிட கோரிக்கைக்கு ஆதரவாக ஜின்னா பிரசாரம் செய்வது என்றும் தென்னிந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் திராவிட இயக்கங்கள் பிரசாரம் செய்வது என்றெல்லாம்கூட திராவிட இயக்கத் தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
ஆனால், இவர்களுக்கு தமிழகம் தவிர, வேறு எந்தப் பகுதியிலும் ஆதரவு கிடைக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

ஆந்திரத்தில் தனித்தெலங்கானா இயக்கத் தலைவர்கள் ஆயுதம் தாங்கி தங்களது புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தனர்.

தமிழகம் உள்பட்ட தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரங்களைப் பெற்றிருந்தது. கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெறத் தொடங்கி இருந்தது.

பொட்டி ஸ்ரீராமுலு என்கிற தலைவர் தனித்தெலுங்கு மாநிலம் அதாவது, ஆந்திர மாநிலம் மற்றும் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்த்துறந்தார். நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது. வேறுவழியில்லாமல் அன்றைய பிரதமர் நேரு மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குச்
சம்மதித்தார்.

மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவதற்காக 1953ல் பசல் அலி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு என்.கே. குன்சுரு, கே.என். பணிக்கர் ஆகியோர் அதன் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர். இவர்கள் 1955 மார்ச் 23ம் தேதி தங்களது அறிக்கையைத் தாக்கல் செய்தனர். இதன்பிறகு மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.

சங்ககாலம் தொட்டே தமிழ்கூறும் நல்லுலகத்தின் தெற்கு எல்லையாகக் குமரியும், வடக்கு எல்லையாக வேங்கடமலையும் திகழ்ந்து வந்தது. ஆனால், நம் தலைநகர் சென்னைகூட ஆந்திர மாநிலத்தில் இணைக்கப்பட வேண்டும் என தெலுங்கு மக்களின் தலைவர்கள் சென்னையிலேயே "மதராஸ் மனதே!" என்கிற கோஷத்துடன் போராட்டங்களைத் தொடங்கினர்.

குமரி மாவட்டம், இடுக்கி, மூணாறு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என கேரள மாநிலத்தில் உள்ள அன்றைய சோசலிஸ்ட், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

கர்நாடகத்திலும், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்கிற போராட்டங்கள் வலுப்பெற்றன.

பொதுவாக ஒரு பகுதியில் எந்த மொழி பேசுகின்ற மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அந்தப் பகுதி அந்த மொழி பேசுகிற மாநிலத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்பது கருத்தாக இருந்தது. தமிழகத்தில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழரசு கழகத்தின் தலைவருமான ம.பொ.சிவஞானம் தலைமையில் தமிழக எல்லை மீட்பு போராட்டம் தொடங்கியது.

கிராமணியார், சிலம்புச் செல்வர் என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்ட ம.பொ.சி.யை தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், கம்யூனிச சித்தாந்தியுமான ஜீவானந்தம், காங்கிரஸ் கட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தாணுலிங்க நாடார், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் ஆதரித்தனர்.

ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழ்கிற தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிற திருத்தணி தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தலைநகர் சென்னையும் காப்பாற்றப்பட்டது. ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த சித்தூர் பகுதி ஆந்திரத்தோடு இணைக்கப்பட்டது.

அன்றைய மதுரை மாவட்டம் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இடுக்கி பகுதியில் வசிக்கும் தமிழர்கள் இடுக்கியைத் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று ஆறு பேர் வரை உயிரிழந்தனர். இருந்தபோதும் இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த தேவிகுளம், பீர்மேடு, கண்ணகி கோவில் பகுதி ஆகியவையும் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கைக்காகப் போராட ஐவர் குழு அமைக்கப்பட்டது.

குழுவில்,

1. தாணுலிங்க நாடார்
2. சிதம்பரநாதன்
3. குஞ்சு நாடார்
4. டேனியல்
5. நேசமணி நாடார்

ஆகியோர் இடம்பெற்றனர்.

இவர்கள் செங்கோட்டையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என செங்கோட்டையில் போராட்டம் நடத்தினர். இதில் நேசமணி நாடார் கைதாகவில்லை. ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டு ஒன்பது மாத கால சிறைவாசம் அனுபவித்தனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

1946 முதல் 1952 வரை இடைக்கால அரசாங்கத்தில் தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமிராஜா ஆகிய இருவருக்கோ, 1952 முதல் 1954 வரை முதல்வராக இருந்த இராஜாஜிக்கோ, 1954க்குப் பிறகு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த காமராஜருக்கோ மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதில் உடன்பாடு இல்லை. இவர்கள் அப்பழுக்கற்ற தேசியவாதிகளாகத் திகழ்ந்தார்கள். ஆனாலும், மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

இந்தியத் தேசிய உணர்வு கொண்ட காங்கிரஸ் கட்சியும் அப்போது வலுப்பெறத் தொடங்கியிருந்த திராவிட இயக்கங்களும், தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களும், ம.பொ.சி.யை ஆதரித்திருந்தால் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த மாவட்டங்கள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவர்கள் இதுவிஷயத்தில் தமிழக நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற வருத்தம் இன்றும் நமக்குள்ளது.

தெலங்கானா புரட்சியை வழிநடத்திய ஆந்திர மாநிலத்தவர்கள் பொதுவுடைமை சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். சர்வதேசிய வாதத்தில் நம்பிக்கை உள்ள இவர்கள் மொழிவழி உரிமை என்று வருகிறபொழுது சென்னையைக்கூட ஆந்திரத்துடன் இணைக்கக் கோரினார்கள். அதேபோல கேரளத்தில் செல்வாக்குப் பெற்ற பொதுவுடைமைத் தலைவர் ஏ.கே.கோபாலன் தமிழர்களை "வந்தேறிகள்", அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஆனால்,
தமிழகத்தைச் சார்ந்த பொதுவுடைமைவாதிகளில் ஒருவரான ஜீவானந்தத்தைத் தவிர, தமிழகப் பொதுவுடமைவாதிகள் யாரும் தமிழ்மாநில எல்லை காக்கும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

"அடைந்தால் திராவிட நாடு,
அடையாவிட்டால் சுடுகாடு"!

"தம்பி வா ஒன்றாகக் கூடி
இன்ப திராவிடம் தேடி"!

"திண்ணையிலே படுத்தாவது
திராவிட நாடு வாங்குவோம்"!

என்றெல்லாம் வீரவசனம் பேசி இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானை உருவாக்கியதுபோல நாங்கள் "திராவிடஸ்தானை" உருவாக்குவோம் என திராவிட நாடு கோரிக்கையை திராவிட இயக்கத்தவர்கள் வெகு தீவிரமாகப் பரப்பி வந்தனர். அப்பொழுது திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ தமிழக எல்லை காக்கும் போராட்டத்துக்குப் போதிய ஆதரவு தரவில்லை.

தமிழகத்தில் பிரிவினை கோரும் திராவிட இயக்கங்கள் வலுப்பெற்று வருகிற காரணத்தால் இவர்கள் எப்படியாவது ஆயுதம் தாங்கிப் போராடவும் துணிவார்கள். அதற்கு தமிழகத்தைச் சுற்றியிருக்கக்கூடிய மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என அன்றைய உளவுத்துறை
தமிழகத்தில் திராவிட தனிநாடு கோருவோர் குறித்து தகவல்களை மத்திய அரசிடம் பதிவு செய்திருந்தது.

இதன் காரணமாக மத்திய அரசும் மலை மற்றும் வனப்பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது குறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும்படி மொழிவழி மாகாண பிரிவினை குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

பொதுவாக ஆரம்பகாலத்திலிருந்தே அதாவது 1948 ஜுன் 17 அரசியலமைப்பை உருவாக்கும் குழுத்தலைவராக இருந்த டாக்டர்.இராஜேந்திர பிரசாத், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் அமைத்த கமிட்டியில் இடம்பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், ஐக்கிய கேரளம் உருவாக்கும் நோக்கத்துடன் எஸ்.கே.தாஸ் கமிஷன் சென்னை வந்து நேசமணியைச் சந்தித்தபோதும் கேரள மாநிலத்தைச் சார்ந்த அதிகாரிகள் கேரளத்துக்குச் சாதகமான முடிவுகளையே
எடுத்தார்கள்.

1953 பசல் அலி தலைமையிலான மொழிவழி மாகாண பிரிவினைக் கமிட்டியில் எம்.கே.கும்சுரு, கே.என்.பணிக்கர் ஆகியோர் இடம்பெற்றனர். இதில் கேரள மாநிலத்தைச் சார்ந்த கே.என். பணிக்கர் தமிழகத்துக்கு விரோதமான முடிவுகளையே எடுத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பல தாலுகாக்களை பிற மாநிலங்களோடு இணைத்து மொழிவழி மாநிலங்களை உருவாக்கினர்.

இப்போதும் மத்திய அரசின் அதிகார மையங்களில் பதவி வகிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்து உயர்அதிகாரிகள் 35க்கும் மேற்பட்டோர் மிகுந்த சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து தமிழகம், தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளில் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் விரோதமாகவே செயல்பட்டு வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது.

ஈழத்தமிழர், கச்சத்தீவு, தமிழக மீனவர், முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்னைகளில் உண்மைகளை மறைத்து தமிழகத்துக்குப் பாதகமான முடிவுகளையே எடுத்து வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் இங்கு உண்டு.

அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் செயல்பட்ட திராவிட இயக்கங்களும், காங்கிரஸ் பேரியக்கமும் கம்யூனிச இயக்கங்களும் விழிப்புணர்வுடன் இல்லாத காரணத்தால் தமிழகத்தின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்டது என்பது உண்மை. இதன் காரணமாகவே காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, பரம்பிக்குளம் ஆழியாறு, சிறுவாணி ஆகிய நதிகளில் நமது பாரம்பரிய உரிமையை இழந்துள்ளோம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் வலுத்திருக்கும் இப்போதைய சூழ்நிலையிலாவது மேற்கண்ட இயக்கங்கள் தமிழக நலன் கருதி ஒன்றுபட்டு செயல்பட வேண்டுகிறோம். வளமான தமிழகம் வலிமையான பாரதம் உருவாகிட உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறோம்.

பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் இவர்கள் காட்டும் அக்கறையைத் தமிழக நலனில் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மற்றவர்களை தில்லிக்குக் காவடி தூக்குகிறார்கள் என்று நையாண்டி செய்தவர்கள். இப்போது தில்லிக்குக் கைகட்டி சேவகம் செய்வது அவர்கள் விருப்பம்.

அதற்காகத்தமிழ், தமிழன் என்று பேசித் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் தமிழகத்தின் நலனைத் தங்கள் சுயநலத்துக்காக பலி கொடுக்கிறார்களே, என்னே இவர்களது தமிழ்ப் பற்று!

அர்ஜுன் சம்பத்

நன்றி:- தினமணி

http://dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Editorial%20Articles&artid=529930&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D!

Thursday, December 29, 2011

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்

தற்போது தமிழக மக்களிடையே கட்சி பாகுபாடற்ற ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுக்கடுக்கான நிகழ்வுகள் தமிழ் இளைஞர்களையும் அவர்களது சிந்தனையையும் தூண்டியுள்ளன. ஈழப்போரில் ஆரம்பித்து மீனவர் படுகொலை, மூவருக்கு தூக்குத் தண்டனை, கூடங்குள அணுத் திணிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை என ஒவ்வொன்றாக அவர்களின் உணர்வுகளை தூண்டியுள்ளன.

இதில் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் என்ன செய்வதென்று தங்களது தலைமையை நோக்க, எந்தவித அறிகுறிகளையும் காணமல் அவர்கள் உள்ளுக்குள் புழுங்கி தவித்து வருகின்றனர். அரசியல் கட்சி சாராதவர்கள் தங்களது அதிகாரம் இப்படி பறிக்கப்பட்டு விட்டதே என்று உள்ளுக்குள் வெம்பி புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலும் படித்த மேல்த்தட்டு வர்க்கத்திடம் தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அப்படி உணர்வு இருந்தாலும் அவர்கள் யாரையும் நம்பி அதை வெளிக்காட்டத் தயாராக இல்லை. கீழ்த்தட்டு மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதில் இயலாமையின் உச்ச நிலையை அடைந்த முத்துக்குமாரன், செங்கொடி போன்றோர் தங்கள் இன்னுயிரை துறந்தனர். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் தங்களது உயிரை விட சிலர் முயன்றனர்.

ஆனால் தமிழகத்தின் தற்போதைய காலகட்டம் மிகவும் முக்கியமான கால கட்டம் ஆகும். தமிழகம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த நிலையில் உள்ளது. ஆனால் இந்தியாவுக்காக ஒரு காந்தி இருந்தார். தமிழகத்திற்கு ஒரு தலைவர் இல்லை. எனவேதான் பொங்கி வரும் உணர்வை தமிழர்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா, தமிழர் தொடர்பான பிரச்சனைகளில் தமிழருக்கு எதிரான நிலையையே எடுத்து வந்திருக்கிறது. எனவே இனியும் இந்தியாவை நம்பி பலன் இல்லை.

செய்ய வேண்டியது என்ன?
எனவே இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை, தமிழர் பாதுகாப்பு, உரிமைகளை கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அவர்கள் உணர்வு கொண்ட சக தோழர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களோடு இணைந்து அறிவுப் பூர்வமாக செயல்பட வேண்டும். தனித் தனி அமைப்புகளில் இருந்து கூட ஒன்றாக செயல்படலாம். ஆனால் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படும்போது உங்களுக்குள் சிறந்த தலைவர்களை நீங்கள் அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அதிகாரத்தை பெற முடிகிறதோ இல்லையோ கிடைக்கிற நேரங்களில் நேரடியாக மக்களிடம் செல்லுங்கள். வீடு வீடாக, தெரு தெருவாக சென்று அவர்களது பிரச்சனைகளை கண்டறியுங்கள். அந்த பிரச்சனைகளை போக்க என்னனென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யுங்கள். அதில் தோல்வி ஏற்படலாம். அதனால் துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து மக்களோடு இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம். அப்போது நீங்கள் மக்களின் பிரதிநிதிகளாகலாம்.

சட்டசபையில் திராவிட கட்சிகளைவிட அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அதன் பின் அரசியலில் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும். தமிழ் மக்கள் சிறந்த அரசியலை நடத்தக் கூடியவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும். அதற்காக என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ அத்தனை சாதனைகளையும் செய்ய வேண்டும். முதலில் கற்றறிந்தோரை ஒன்று சேருங்கள். அவர்களின் வட்டங்களை பெரிதாக்குங்கள்.

இந்த வட்டம் பெரிதாகும்போது உங்களது வேலைகள் எளிதாகிவிடும். சாதிப் பிரச்சனை தமிழனுக்கு முதல் எதிரி என்பதை கண்டுகொள்ளுங்கள். எனவே மாற்றுச் சாதிகளைச் சேர்ந்த ஒத்த கருத்துடைய தோழர்களை ஒன்று சேருங்கள். அனைவருக்கும் சாதிச் சமநிலையை உணர்த்துங்கள். அதன் பின் சாதி மறைந்து விடும். படித்த பெரியவர்களை ஒன்று சேருங்கள். அவர்களின் அறிவுரையின்படி ஆங்காங்கே நிலவும் சிறு சிறு பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளிப் போடுங்கள். தமிழ்ச் சாதிகள் இடையே அனைவரும் சமம் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதன் அடுத்த நிலைதான் சாதியற்ற சமுதாயம். சாதிச் சமநிலை ஏற்பட்டால் சாதியற்ற சமுதாயம் தன்னால் உருவாகும். சாதிகள் ஒன்றிணைந்தால் தமிழனை ஏமாற்றுபவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

சமூக ஒருங்கிணைப்பை உருவாக்குங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்காமல், மக்கள் தாங்களாக தேவைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். எனவே என் உணர்வுள்ள தமிழ் மக்களே உணர்ச்சி வசப்பட வேண்டாம். உணர்ச்சி அரசியலை கைவிடுங்கள். நிதானத்துடன் தொலைநோக்குப் பார்வையுடன் அரசியல் செய்ய ஆரம்பியுங்கள். உங்களது எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.

Tuesday, December 27, 2011

தமிழினம் ஒரு இனமா?

எனது அன்புக்குரிய இந்தியதேசாபிமானி திரு ராஜா சங்கர் அவர்களே,

//தமிழர்கள் ஓர் இனம், ஓர் தேசியம் என்று சொல்பவர்கள் தான் அது எவ்வாறு இனமாக ஆகிறது எவ்வாறு தேசியமாக ஆகிறது என சொல்லவேண்டும்.
---------

முன்பு கேட்ட கேள்வியை திரும்பவும் காப்பி பேஸ்டுகிறேன்.

1. தமிழர் என்பது எப்படி ஓர் இனமாக ஆகிறது?

இனம் என்பதன் வரையறை கீழே,

http://en.wikipedia.org/wiki/Race_%28classification_of_humans%29//

//Race is a classification system used to categorize humans into large and distinct populations //


தமிழர்கள் பெரும் எண்ணிக்கையிலான, தனிப்பட்ட மக்கள்

//or groups by heritable phenotypic characteristics, //

ஒரேமாதிரியான அம்சங்களை பாரம்பரியமாக பெற்றவர்கள்

//geographic ancestry, physical appearance, and ethnicity. //

ஒரே நிலப்பரப்பை சேர்ந்த, உருவத்தோற்றத்தை பெற்றவர்கள், பண்பாட்டுக்குழு இவை அனைத்தும் தமிழருக்கு பொருந்துகின்றன. (பச்சக் பச்சக்ணு பொருந்துது)


//In the early twentieth century the term was often used, in its taxonomic sense, to denote genetically diverse human populations whose members possessed similar phenotypes.[1] This sense of "race" is still used within forensic anthropology (when analyzing skeletal remains), biomedical research, and race-based medicine//

ஒரேமாதிரியான உடலமைப்பை கொண்டவர்கள்,

//[2] In addition, law enforcement utilizes race in profiling suspects and to reconstruct the faces of unidentified remains. Because in many societies, racial groupings correspond closely with patterns of social stratification, for social scientists studying social inequality, race can be a significant variable. //

இனம் என்பது குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டதாகவும் இருக்கலாம்.

//As sociological factors, racial categories may in part reflect subjective attributions, self-identities, and social institutions.[3][4] Accordingly, the racial paradigms employed in different disciplines vary in their emphasis on biological reduction as contrasted with societal construction.//

//ஆனால் எத்னிக் அதாவது பண்பாட்டு குழு என பொருள் படும் சொல் ஒரே பரம்பரையில் வந்தவர்கள், ஒரு கலாச்சாரத்தை பேசுபவர்கள், ஒரு மதத்தை கடைபிடிப்பவர்கள், ஒரு மொழியை பேசுபவர்கள் என வரையறை செய்கிறது.
அதன் சுட்டி கீழே//


உண்மைதானே தமிழர்கள் ஒரே பரம்பரையில் வந்தவர்கள்தான், ஒரே கலாச்சாரத்தை, கொண்டவர்கள். ஒரு மொழியை பேசுபவர்கள். பல மதங்களை கடைப்பிடித்தால் அது இனம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

//http://en.wikipedia.org/wiki/Ethnicity

An ethnic group (or ethnicity) is a group of people whose members identify with each other, through a common heritage, often consisting of a common language, a common culture (often including a shared religion) and/or an ideology that stresses common ancestry or endogamy.[1][2][3] Another definition is "...a highly biologically self-perpetuating group sharing an interest in a homeland connected with a specific geographical area, a common language and traditions, including food preferences, and a common religious faith".[4] The concept of ethnicity differs from the closely related term race in that "race" refers to grouping based mostly upon biological criteria, while "ethnicity" also encompasses additional cultural factors.

இந்த இரண்டின் படியும் தமிழினம் ஒரு இனம் என்ற வரையறைக்குள் வராது. ஒரு மொழிக்குழு என்றெல்லாம் இழுத்து நீட்டி சொல்லாமே ஒழிய இனம் எனும் தகுதி தரமுடியாது. //


இரண்டின்படியும் தமிழினம் ஒரு இனமே, பண்பாட்டுக் குழுவே என்பது அப்பட்டமாக நிரூபிக்கப்படுகிறது. அதற்கான சான்றிதழை நீங்கள் தரத்தேவையில்லை.

//நீங்கள் தமிழினம் என்று சொல்லும் போது யாரெல்லாம் இந்த தமிழர்கள், தமிழ் இனத்தினர் என்றெல்லாம் வரையறை செய்யமுடியுமா? ஏனென்றால் வேற்று மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தலமை அமைச்சர் ஆக முடியாது என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள். //

தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களும், தமிழ் மொழியை பேசுபவர்களும் தமிழர்களே. ஆனால் தலைமை பொறுப்பிற்கு வருபவர் தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் எங்கள் மொழியையே அடிப்படையாகக் கொண்டு எழுகிறோம். எங்களை மொழியை அடையாளமாகக் கொண்டே எதிரிகள் எங்களுக்கு துரோகம் செய்கின்றனர். எனவே எங்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இதனைச் செய்கிறோம். மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவருக்கு அரசின் இரண்டாம் நிலை பதவியான துணை தலைமை அமைச்சர் பதவி வரை கொடுக்கிறோம். இதனை அவர்களை பெருமைப் படுத்தும் விதமாகவே கருதுகிறோம். எங்கள் மொழியை தாய் மொழியாகக் கொண்டவருக்கு அதி முக்கியத்துவம் தரவேண்டும் என்பதற்காகவே அவருக்கு தலைமை அமைச்சர் பதவி தருகிறோம்.

//அடுத்து நீங்கள் முன்வைக்கும் தேசிய இனம் என்பதற்கு என்ன அடையாளம்? நீங்கள் சொல்லும் 56 தேசம் மேற்கே ஈரானில் இருந்து கிழக்கே பர்மா வரையும் தெற்கே இலங்கையில் இருந்து வடக்கே இன்றைய திபெத் வரையிலும் உள்ளடக்கிய தேசங்கள். அடுத்து அந்த இனங்கள் தன்னுரிமையோடு எப்பவும் இருந்தன என்பது வரலாற்று பிழை. அப்படி இருக்கவில்லை. ஒரிய இனம், மராத்தி இனம், மத்திய பிரதேஷ் இனம், மைதிலி இனம், ஆந்திர/தெலுங்கு இனம், கன்னட/கர்நாடக இனம் என்றெல்லாம் யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அப்படி யாரும் சொல்லவும் இல்லை. //

எங்கள் தமிழ் தேசிய இனத்திற்கு முக்கிய அடையாளமே எங்கள் மொழிதான். மற்றபடி எங்களுக்கு அந்த 56 தேசங்களைப் பற்றி கவலையில்லை. இந்த தேசங்கள் எப்போதும் இறையாண்மை பெற்றிருக்க வில்லை என்பது உண்மையே. அதேவேளையில் எப்போதும் அடிமைப்பட்டும் இருந்தன என்பதும் உண்மையில்லை.

ஒரிய, மராத்தி, மைதிலி, தெலுங்கு, கன்னட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அவர்களின் மொழியின் முக்கியத்துவம் தெரியாவிட்டால் நாங்கள் அவர்களுக்கு பாடம் நடத்த முடியாது. அவர்கள் தங்களை இனம் என்று அடையாளம் கண்டுகொண்டாலும் கண்டுகொள்ளாவிட்டாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை. அதற்காக நீ ஏன் கண்டுகொள்கிறாய் என்று யாரும் கேட்க முடியாது.

ஒருவேளை அவர்கள் இந்தியத்தில் மண்ணாகிப்போனால் பின்வரும் அவர்களது சமூகம் கல்வெட்டுக்களை ஆராய்ந்து தங்களது தேசிய மொழி எவ்வாறு அழிக்கப்பட்டது என்று ஆய்வு செய்து தெரிந்துகொள்வார்கள்.


//ஆக முதலில் தமிழர்களின் இனம் என்பது என்ன? அந்த இனத்தின் உடற்கூறுகள், பண்பாட்டு கூறுகள், மொழிக்கூறுகள் என்பவை என்ன? யாரெல்லாம் தமிழர்கள்/தமிழினத்தினர் என்ற வரையறைக்குள் வருவார்கள் என்று சொல்வீர்களாயின் கட்டுரையின் மற்ற பகுதிகளை பற்றி பேசலாம். அடிப்படையிலேயே ஓட்டை இருக்கும் போது மற்றவற்றை விவாதித்து வீண். //


நான் ஏற்கனவே சொன்னது போல தமிழ் இனம் என்பது ஒரே மொழி, ஒரே உருவ அமைப்பு, ஒரே உடை, ஒரே நிலம், ஒரே பாரம்பரியம், ஒரே உணவுப்பழக்கம் கொண்டதாக உள்ளது. வெறுமனே சாதி, மத வேறுபாடுகளைக் கொண்டு தமிழ் இனத்தை இனமல்ல என்பது யானையை பார்வையற்றோர் தடவிப்பார்த்த கதைதான்.

இந்த வாதத்தின் மூலம் நீங்கள் இருக்கிற தமிழினத்தை இல்லை என்று கூறி இல்லாத இந்தியத்தை நீங்கள் கட்டிக்காக்கவும் முற்படுவது தெரிகிறது.

என் கட்டுரையின் மற்ற பகுதியை படிப்பீர்களோ மாட்டீர்களோ நான் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். இல்லைவிட்டால் விலகிக் கொள்ளுங்கள். அல்லது ஏற்கனவே குழுமத்தினர் கேட்டுக் கொண்டது போல உங்களது இந்திய தேசியத்தின் அருமை - பெருமைகள், அது எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதனை எப்படி சாதுர்யமாக போக்கி இந்தியத்தை கட்டிக் காப்பீர்கள் என்பதைப் பற்றி கட்டுரையாக எழுதுங்கள் (அது ஓட்டையாக இருந்தாலும்) நாங்கள் முழுவதும் படிக்கத் தயாராக இருக்கிறோம்.

Monday, December 26, 2011

இந்தியா வலுப்பெறுமா??

//சுவாதியின் பல தெளிவான கருத்துக்களுக்குப் பாராட்டுக்கள்.

நண்பர் தேவனைப் போல தமிழ்நாட்டின் நேர்மையான சிந்தனையாளர்கள்
மனம் புழுங்கிப் போய்க் கிடக்கிறார்கள். ஈழத்தில் ஒரு பிரபாகரன் தோன்றி
பல பிரபாகரர்களை வளர்த்தும் விட்டார். வெற்றி தோல்வி என்பதைத் தள்ளி வைத்து விட்டுப் பார்க்கையில், என்றைக்கும் விடிவெள்ளியாய் பிரபாகரனின் தாக்கம் இருக்கும். அதே சமகாலத்தில் தமிழகத்தில் சில கருணாக்கள் தோன்றி பல்லாயிரம் கருணாக்களைத் தமிழ்நாட்டுள் தோற்றுவித்திருக்கிறது. இந்தப் பிற்போக்கின் தாக்கத்தினைக் கடந்துதான் நல்லவை தோன்றமுடியும். //


திரு நாக. இளங்கோவன் அவர்களே,

தேசியத் தலைவர் பிரபாகரன் தோற்றுவித்த இன உணர்வை இன்று நாம் தமிழகமெங்கும் காண்கிறோம். கருணாக்கள் இல்லை என்றில்லை. ஆனால் ஊரெல்லாம் பிரபாகரன் ஆகும்போது எத்தனை கருணாக்கள் வந்தாலும் நிற்க முடியாது.

தமிழ் மக்களிடையே, குறிப்பாக கற்றறிந்தோர், உணர்வால் கொந்தளித்து உள்ளவர்களிடையே ஒரு அரசியல் தெளிவு வேண்டும். இப்போது தனித்தனியே அரசியல் பேசினாலும் வெளியில் அரசியல் பேச பாதிக்கும் மேற்பட்டோர் தயங்குகின்றனர். காரணம் உயிரச்சம், வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடுமோ என்ற அச்சம், காட்டிக் கொடுக்கும் கயவர்களின் அச்சம்.

முதலில் இந்த அச்சத்தை போக்க வேண்டும். அதன் பின் தமிழர்களால் ஒரு சிறந்த நாட்டை, அரசியலை உருவாக்க முடியும், அதற்காக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை தெளிவாக புரியவைக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் முதலில் தங்களை நம்பகமான தலைவர்களாக, மற்றவர்கள் செய்ய இயலாத வேலையை செய்யக் கூடியவர்களாக மக்களின் முன்னே நிரூபித்துக் காட்ட வேண்டும். இதைச் செய்துவிட்டால் மக்களின் போக்கு மாறிவிடும். நாம் எதிர்ப்பார்ப்பதை விட அதிக ஆதரவு கிடைக்கும்.

//நன்கு கூர்ந்து கவனியுங்கள்; மொழி உணர்வு, இனவுணர்வு என்பது எப்படிக் கீழறுக்கப் படுகிறது என்று நன்கு கவனியுங்கள். இந்தக் கீழறுப்புகள் தமிழர்களாலேயே அதிகம் செய்யப்படுகிறது என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்தச் சுட்டியினையும் இதன் தொடர்களையும் கவனித்துக் காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=yTj9tJ5iyyY&list=PL0591AEBC85FEB435&index=1&feature=plpp_video
இது நடந்து 40+ ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் எந்த ஊரிலும் சாதியோ, முதலாளியத் திமிரோ குறிப்பிடத்தக்க அளவு குறையவில்லை. பரமக்குடி துப்பாக்கிச் சூடு ஒரு பச்சை சாதிய முத்திரை,

இந்த நிலை மாற்றமடையக் காலம் ஆகும். அந்த மாற்றம் வராதவரை தமிழகம் தமிழகமில்லை. ஆனால், அந்தக் காலம் வரும் என்ற நம்பிக்கை நண்பர் தேவனைப் போல பலருக்கும் ஏற்பட்டிருப்பது உண்மை.//

நீங்கள் அனுப்பிய காணொளியை பார்த்தேன். தமிழ்தேசியவாதிகளின் முன்னே நிற்கும் முதல் பிரச்சனை சாதிப்பிரச்சனை இந்த பிரச்சனையை இவர்கள் தீர்த்து வைத்தாலே பாதிக் கிணறு தாண்டிய மாதிரித்தான். சாதிப் பிரச்சனைக்கு தீர்வுண்டா என்று இதுபற்றி எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். இந்த பிரச்சனை எளிதாக முடிக்க கூடிய ஒன்று. ஆனால் அதனை முடிக்க எந்த தலைவரும் முன்னெடுக்க வில்லை என்பதுதான் உண்மை. ஏதாவது ஒரு மோதல் ஏற்பட்டால் குய்யோ முறையோ என்று கூச்சலிடுவார்கள். அதன் பின் அந்த பிரச்சனையை மறந்து விடுவார்கள்.

எந்தவொரு பிரச்சனையுமே திடீரென ஏற்படுவதில்லை. அதற்கு முன்பின் நிகழ்வுகள் இருக்கின்றன. அந்த நிகழ்வுகளை நிறுத்தி விட்டாலே அந்த பிரச்சனை ஏற்படாது. அதனை செய்வது எளிது. அண்மையில் தீர்க்கப்பட்ட உத்தப்புரம் பிரச்சனை அதற்கு எடுத்துக்காட்டு. இதற்கு மேல்த் தட்டு மக்களிலிருந்து அடித்தட்டு மக்கள் வரை இணைந்து செயல்பட வேண்டும். இந்த நிலை மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

பிரச்சனைகளை முன் வையுங்கள் அவற்றை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கலாம். அது அவற்றை போக்க உரமாக அமையும்.

தமிழீழத்தை நினைவுறுத்தும் ஃபிரான்ஸ்

(யோகன்னா யாழினிக்கு வந்த மின்னஞ்சல்)

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை! “ பிரபாகரன் செய்த தவறுகள்” பற்றி அவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்! அந்த உரையாடலில் இடையிலே, நான் பின்வருமாறு அவருக்கு சொன்னேன்! “ நாங்கள் பிரபாகரனை மறந்துவிட்டு, அமைதியாக வாழ தயாராக இருக்கிறோம்! ஆனால் உங்கள் நாடு, எங்களுக்குப் பிரபாகரனை மறுபடியும் மறுபடியும் நினைவூட்டுகிறது” என்று! இதனைக்கேட்ட நண்பருக்கு அதிர்ச்சி! “ என்னது ஃபிரான்ஸ் நாடு, பிரபாகரனை ஞாபகப்படுத்துகிறதா? அது எப்படி? “ என்றுஅவசரமாகக் கேட்டார்! அவரிடம் நான் சொன்னேன்! ” பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கம் நடத்தினார் தெரியுமா? அது ஃபிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுக்கு நிகராக இருந்தது!” இப்போது நண்பருக்கு மேலும் மேலும் ஆச்சரியம்! “ எப்படி? எப்படி?” என்று ஆர்வமாகக் கேட்டார்! அவருக்கு நான் சொன்னவற்றை கீழே தொகுப்பாகத் தருகிறேன்!

வன்னியிலே பிரபாகரன் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தினார்! முதலிலேயே சொல்லிவிடுகிறேன், அந்த அரசாங்கத்தில் ஒரு சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன! ஆனால், நிர்வாகமோ ஐரோப்பிய நாடுகளைப் போலத்தான் இருந்தது! லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊழல் என்றாலே என்னவென்று தெரியாது! ஏழை பணக்காரன் பேதம் இல்லை! வேலை கொடுக்கும் நிறுவனங்கள் கண் துடைப்புக்கு இண்டெர்வியூ நடத்திவிட்டு, காசு வாங்கிக்கொண்டு அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை கொடுக்கும் இழி நிலை இல்லை! அரசியல் கட்சிகளின் காமெடி கிடையாது! கொழும்பில் இருப்பது போல, ஒரு கட்சி, அதற்கு தொண்டர்கள், சில குண்டர்கள், வன்முறைகள், பஸ் கொழுத்துறது, காரை எரிக்கிறது, ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்கிட்டு சாவுறது எதுவுமே கிடையாது!

ஐரோப்பா போலவே ரொம்ப அமைதியா இருக்கும்! மேலும் விடுதலைப்புலிகளின் காவல் துறை பற்றி சொல்லியே ஆகவேண்டும்! கருநீல ஜீன்ஸும் + மெல்லிய நீலத்தில் ஷர்ட்டும் அணியும் காவல் துறை உறுப்பினர்கள் நிச்சயமாக ஃபிரெஞ்சுப் போலீசையோ, லண்டன் போலீஸையோ நினைவு படுத்துவார்கள்! இவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட், கம்பீரம் அவர்களிடமும் இருக்கும்! அப்புறம் தமிழீழ போலீசுக்கு லஞ்சம் கொடுப்பீங்க? அந்தப் பேச்சே இருக்காது! ஒரு வேளை நீங்கள் ஒரு தப்புப் பண்ணிவிட்டு, அதனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரிக்கு ஒரு ஐம்பது ரூபாவை நீங்கள் எடுத்து நீட்டினீர்கள் என்றால், அவ்வளவுதான், அடுத்தநாள் எங்கோ ஒரு இருட்டறைக்குள் இருந்து முழிச்சு முழிச்சுப் பார்ப்பீர்கள்! இன்று மேற்கு நாடுகள் செல்வந்த நாடுகளாக இருப்பதற்கு முக்கிய காரணமே சுய உற்பத்தியும், டெக்ஸ் ( Tax ) அறவிடப்படுகின்றமையுமே ஆகும்!

வன்னியிலும் டெக்ஸ் முறைமை இருந்தது! கள்ளக்கணக்கு காட்டுறது, பணத்தை பதுக்கி வைத்து கறுப்பு பணமாக்குறது இதெல்லாம் கனவிலும் நடக்காது! சட்டம் ஒழுங்கு அப்படி இருந்தது! இங்கு ஃபிரெஞ்சுக்காரர்கள் தூய ஃபிரெஞ்சில் தான் பேசுவார்கள்! அதற்குள் ஆங்கிலத்தைச் செருகி, புதுவிதமான ஒரு பாஷை பேசுவதில்லை! இங்கு தூய ஃபிரெஞ்சு என்றால், அங்கு தூய தமிழ்! எல்லாவிதமான பொறியியல் சாதனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் அனைத்துக்கும் தமிழைக் கண்டுபிடித்து நல்ல தமிழில் தான் கதைப்பார்கள்! வன்னி மக்கள் பேசும் பேச்சை வைத்தே, அவர் வன்னிதான் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்! வன்னிமக்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அரச கட்டுப்பாடுப் பகுதிக்குள் வரும்போது, அவர்களது மொழியை, இங்கிருப்பவர்கள் பரிகசித்த சம்பவங்களும் நிறையவே உண்டு!

கலைகள் - வன்னியிலே கலைத்துறை உச்சம் பெற்றிருந்தது என்பதை ஆணித்தரமாகக் கூறுவேன்! எத்தனை நூல்கள்? எத்தனை பாடல்கள்? எத்தனை கவிஞர்கள்? பாடலாசிரியர்கள்? இசையமைப்பாளர்கள்! அனைவருமே மக்களால் மிகவும் ரசிக்கப்படுபவர்கள்! ஒரு கிளிநொச்சி பாடலாசிரியர் பாடல் எழுதுவார்! அதற்கு கிளிநொச்சி இசையமைப்பாளர் மெட்டுப் போடுவார்! பாடலை பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்! கார்த்திக் பாடியிருப்பார்! கேட்கவே பரவசமாக இருக்கும்! வன்னியிலே பிரபாகரன் வளர்த்தெடுத்த கலைகள் பற்றி, தனிப்பதிவுகள் ஆறேழு எழுதினால் தான் தகும்! வன்னியின் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டைகள் நடைபெற்ற 2007 ம் ஆண்டு காலப்பகுதி! கிளிநொச்சியிலே சில தமிழக சிற்பாச்சாரிகள் தங்கியிருந்து, ஒரு மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு நூதன சாலையை நிர்மாணிக்கிறார்கள்!

“ தமிழீழ தேசிய நூதன சாலை” அது! அதன் வேலைப்படுகளைப் பார்த்தால் மண்டை விறைக்கும்! இங்கு பாரிஸின் லூவ்ர் மியூசியத்தைப் பார்த்தது போலவே இருக்கும்! அவ்வளவு அழகிய வேலைப்பாடுகள்! அதற்கு அருகிலே “ சந்திரன் பூங்கா” என்று ஒரு உயிரியல் பூங்கா! தொங்கு பாலம்! எத்தனையோ விதமான பறவைகள், விலங்குகள்! எல்லாமே தமிழில் பொறிக்கப்பட்ட பெயர் பலகைகள்! விளக்க அட்டைகள்! பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கும்! இதைவிட விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பிய மருத்துவத்துறை பற்றியும் அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் சொல்ல பல பத்து பதிவுகள் போட வேண்டும்! வன்னியிலே “ கணிநுட்பம்” என்று ஒரு கம்பியூட்டர் சஞ்சிகை வந்தது! தலைவரின் மகன் சாள்ஸ் ஆண்டனிதான் அதன் நிர்வாகி! என்ன சொல்வது? சத்தியமா கொழும்பில் இருந்துகூட அப்படி ஒரு சஞ்சிகையை நான் பார்த்ததில்லை! அதன் அட்டையத் தொட்டுப் பார்த்தால் கை கூசும்! புகைப்படத்துறையும், அச்சகத்துறையும் அங்கிருந்ததைப் போல வேறெங்கும் நான் காணவில்லை!

வன்னியில் இயங்கிய வங்கிகள் பற்றி சொல்லவா வேண்டும்? உங்களுக்கு வங்கியிலே வேலை பார்க்க வேண்டுமா? அப்படியானால் அதற்க்கு லஞ்சப் பணமாக ஒரு தொகை கொடுக்கணுமே! அடப்போங்கப்பா, திறமை இருந்தால் வேலை! ஒரு சல்லிப் பைசா தேவையில்லை! இங்கு ஐரோப்பாவில் இருக்கும் வங்கிகள் போலவே! வன்னியின் ஒவ்வொரு கட்டுமானத்தையும், அணுவணுவாக ரசித்தேன்! அனைத்துமே ஐரோப்பாவுக்கு நிகரானவை! இன்னும் என்னென்ன கட்டமைப்புக்கள் எல்லாம் வன்னியில் இருந்தன என்பதை பின்னூட்டம் போடும் நண்பர்கள் வந்து சொல்வார்கள் என்று நம்புகிறேன்! ஒன்று தெரியுமா? இத்தினூண்டு குட்டி வன்னியில் 7 விமான ஓடுபாதைகள் இருந்ததாக, அரச படையினர் சொல்கிறார்கள்! ஒரு வேளை நாடு கிடைத்திருந்தால்...., சொல்லவே வேண்டாம் நிச்சயமாக ஒரு குட்டி ஐரோப்பாவே அங்கு உருவாகியிருக்கும்!

இங்கு ஃபிரான்ஸில், இவர்கள் எந்தளவுக்கு தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, எமக்கும் மிக இயல்பாகவே நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும், மண் பற்றும் வந்துவிடுகிறது! ஆனால் எமக்குத்தான் நாடே கிடையாதே! என்ன செய்ய? தமிழீழம் என்ற மண் மீது வைக்கவேண்டிய அத்தனை பற்றுக்களையும் நான் இந்த ஃபிரெஞ்சு தேசத்தின் மீது வைத்திருக்கிறேன்! உலகத்தில் மிகவும் அழகான சாலை இங்குதான் இருக்கிறது! அதில் நடக்கும் போது, கிளிநொச்சி 9 சாலையில் நடப்பதாகவே தோன்றும்! மோனாலிஸா ஓவியம் இருக்கும் லூவ்ர் மியூசியத்துக்குப் போகும் போதெல்லாம், எனக்கு அந்த கிளிநொச்சி மியூசியத்துக்குப் போவதாகவே நினைப்பு வரும்! பாரிஸ் நகரின் மத்தியில் இருக்கும் கொன்கோர்ட் பூங்காவில் நிற்கும் போது, சந்திரன் பூங்காவின் நினைப்பே வந்து போகும்! இங்கிருக்கும் கல்லறைகளும், அவை பராமரிக்கப்படுகின்ற விதமும், அங்கே எமது தெய்வங்கள் உறங்கும், “ துயிலும் இல்லங்களை” நினைவுபடுத்துகிறது! இங்குள்ள தொலைக்காட்சியில், சுத்தமான ஃபிரெஞ்சில் செய்தி வாசிக்கும் ஒரு ஃபிரெஞ்சுக்காரியைப் பார்க்கும் போது, அவளை சைட் அடிக்கத் தோணுவதில்லை! அங்கே சுத்தமான தமிழிலே செய்தி வாசித்த இசைப்பிரியாதான் நினைவுக்கு வருகிறார்! கூடவே விழியோரம் கொஞ்சம் கண்ணீர்! எப்படிப் பார்த்தாலும் இங்கிருக்கும் ஒவ்வொரு தூணும், துரும்பும் எங்களுக்கு, எமது மண்ணையே நினைவுபடுத்துகிறது!

ஆகவே புலம்பெயர் தமிழர்களின் மனசை விட்டு, புலிகளையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும் அழிக்க முடியாமல் இருப்பதற்கான உளவியல் பின்னணி இதுதான்! ஒவ்வொரு முறையும், ஃபிரெஞ்சு இராணுவ வீரன் களப்பலியான செய்தி வரும்போதெல்லாம் உள்ளம் துடிக்கும்! யாரென்றே தெரியாத அந்த வீரனுக்கு மனதுக்குள் வீரவணக்கம் செலுத்துவேன்! “ மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது உறுதி” பாடலை மனதுக்குள் உச்சரிப்பேன்! இவையெல்லாம் இயல்பாகவே நடந்துவிடுகிறது! 1940 களில் ஹிட்லரின் படைகள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த போது, ஃபிரெஞ்சுத் தளபதி சா து கோல், லண்டனுக்குப் போய், நாடுகடந்த ஃபிரெஞ்சு அரசை உருவாக்கினார்! அதைத்தான் இன்று தமிழனும் செய்கிறான்!

ஆகவே ஐரோப்பாவில் இருக்கும் எந்தவொரு தமிழனுக்கும் ஈழப்பற்று வருவது மிக மிக இயல்புதான்! நாமாக மறக்க நினைத்தாலும், இங்கு வந்த பின்னர் பிரபாகரனையும், தமிழீழத்தையும் இங்கு மறக்கவே முடிவதில்லை! “ புலம்பெயர் தமிழர்கள் யுத்த வெறியர்கள்!” என்று யார் திட்டினாலும் நமக்கு வலிப்பதில்லை! இருந்துவிட்டுப் போகிறோம்! இங்கு மறக்கக் கூடிய சூழல் இல்லை! அதனால் கத்துகிறோம்! அங்கு நினைக்கக் கூடிய சூழல் இல்லை! திட்டுகிறீர்கள்! என்ன செய்ய?
சுதந்திரம் கொடுத்து உரிமைகளை மறுத்தால்

அதுவும் அடிமைத்தனமே.

Saturday, December 24, 2011

தமிழை சிதைக்கலாமா?

(பண்புடன் குழும விவாதத்தின் ஒருபகுதி)
//நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 65ஆவது ஆண்டு நடக்கிறது. 650 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்குதமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!


இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள்.//

திரு செல்வன் அவர்களே,

தமிழ் பற்று, தமிழ் மொழி மீதான ஆர்வம் என்பதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

தமிழக மக்களும்தான். அதற்கு அர்த்தம் ஒருவர் தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளை கற்கக் கூடாது என்று பொருளல்ல. நீங்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்காக தாய் மொழியை மறக்கவோ அல்லது அதனை சிதைக்கவோ கூடாது என்பதைத்தான் தமிழ் மொழி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் மற்ற மொழிகளை பயின்றால்த்தான் தமிழ் மொழியின் இனிமை தெரியும்.

வட மொழியும், ஆங்கிலமும் இன்னும் பிற மொழிகளையும் தமிழர் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் மொழியை அழிக்கக் கூடாது.

நடப்பது என்ன? சாதாரண மக்கள் வரை வேண்டுமென்றே தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசி அதனை பெருமை என்று கருதுகின்றனர். இவர்கள் யாரும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேசினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை. தமிழ் தெரியாத ஒரு வேற்று மாநிலத்தவர், நாட்டவர் அப்படித்தான் பேசி வருகின்றனர். அவர்களை யாரும் குறை சொல்லவில்லை.

தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேண்டுமென்றே மொழிக்கலப்பை செய்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்கிறோம். ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலம் அவசியம். இந்தி மொழியை தமிழ் அரசியல்வாதிகள் வெறுக்கக் காரணம் அதன் திணிப்புதானே தவிர. அந்த மொழியை அல்ல.

இது வட இந்திய அரசியல்வாதிகளின் செயலுக்கான எதிர்வினையே தமிழக அரசியல்வாதிகளின் இந்தி எதிர்ப்பு. மற்றபடி தனித் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு மொழிகளை படிக்காதீர்கள் என்று சொல்வதாக நீங்கள் நம்பினால் அது தவறு.

ஆங்கிலம் கலந்து பேசினால்த்தான் கௌரவம் என்று நினைத்து சாதாரண மக்கள் ஒரு மயக்கத்தில் உள்ளனர். அவர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தை தெளிவுற கற்று அம்மொழியை பேசினால் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தையும் கற்காமல், தமிழையும் கற்காமல் இரண்டு மொழியும் அழித்து மூன்றவது ஒரு மொழியை உருவாக்கி வருகின்றனர். இதற்குத்தான் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் தமிழ் மொழியை சுத்தமாக மறந்து விடுவார்கள். அதன் பின் இந்த பிரச்சனையே இருக்காது. பின்னர் ஆராய்ச்சியாளர்கள், பண்டிதர்கள் தமிழை விழுந்து விழுந்து ஆராய்ச்சி செய்வார்கள். சாதாரண மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அந்த மொழியை மறந்து விடுவார்கள்.

அந்த நிலையை தடுக்கத்தான் மொழி ஆர்வலர்கள் முயற்சி செய்கிறார்கள். மற்றபடி மாற்று மொழிகளை கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••
//அடுத்தவனை அது பேச வேண்டாம், இதை செய்யவேண்டாம் என்று திட்டுவதை தவிர தமிழ் ஆர்வலர்கள் செய்த உருப்படியான காரியங்கள் ஏதேனும் உண்டா?

அடுத்தவனுக்கு தமிழ் படி தமிழில் பேசு என்று உபதேசம் செய்து விட்டு தானும் தன்னுடைய குடும்பமும் ஆங்கிலமும் இந்தியும் கற்று முன்னேறுவது தானே இந்த தமிழ் ஆர்வலர்களின் பல்லாண்டு செயல்.

தமிழை வளர்க்க செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற செயல்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.

ராஜசங்கர்//

திரு ராஜா சங்கர் அவர்களே,

தமிழ் ஆர்வலர்கள் யாரையும், எதையும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழில் எதையும் கலக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். மற்றபடி நீங்கள் உலகத்தின் எந்த பாஷையையும் பேசினாலும் நாங்கள் வருத்தப்படப்போவதில்லை.

நீங்கள் தமிழை பேசாவிட்டாலும் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் தமிழில் கலப்படம் செய்யாதீர்கள்.

எந்த மொழியை கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு தடையில்லை. தமிழை மட்டும் அழிக்காதீர்கள் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
•••••••••••••••••••••••••••••••••••••••

//வேற்று மொழி தெரியாதவன் தமிழில் மொபைல் போன் என்பதை எப்படி சொல்லுவான்?? கைப்பேசி/குறுபேசி/செல்பேசி என்று அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் படுத்தல் கள்.

இதில் கைப்பேசி என்று சொன்னால் குறு பேசி என்று சொல்பவர்களுக்கு கோபம். செல்பேசி என்று சொன்னால் இந்த இரண்டு பேருக்கும் கோபம். இதிலேயே யாரும் ஒன்றும் செய்யவில்லையே? //

திரு ராஜா சங்கர் அவர்களே,

நீங்கள் சொல்வது தமிழ் படுத்துதல்கள். அதுவல்ல தமிழ் ஆர்வலர்களின் வேலை. அது சில ஆர்வக் கோளாறுகளால் செய்யப்படுவது. இதனால் யாருக்கும் கோபம் வரவில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••
//அன்றாடம் சோத்துக்கு உழைப்பவன் செல்போன் என்று சொல்லிவிட்டு அடுத்தவேலையை பார்க்கபோவானா? அல்லது செந்தமிழில் பேசி வயிற்றை காயப்போடுவானா? //

வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறது என்றால் ஹீப்ரூ வேண்டுமானாலும் பேசுங்கள் என்றுதான் சொல்கிறோம். அதற்காக நான் ஹீப்ரூவை தமிழில் கலந்து பேசுவேன் என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.
•••••••••••••••••••••••••••••••••••••••
//தமிழில் பெயர்வைக்க, கருத்துக்களை சொல்ல தமிழை படித்திருக்கவேண்டும். கண்டுபிடிப்புகளை நிகழத்தியிருக்கவேண்டும். அதற்கெல்லாம் கையாலாகாதவர்கள் ஏன் தமிழில் பேசு என கூவ வேண்டும்? //

தமிழை படிக்கவிடாமல் செய்து வருவதும் தமிழ் மொழிக்கு எதிரான சதி என்கிறோம். கண்டுபிடிப்புகளுக்கும் மொழிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? கண்டுபிடிப்புகளை வேறு மொழிகளில் சொல்லத்தான் வேறு மொழி தேவை. தமிழர்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தமிழர்கள் கையாலாகாதவர்கள் இல்லை. அவர்கள் சாதனை செய்து வருகிறார்கள்.

அவர்களது சாதனை பெரும் சாதனையாக ஆகிவிடுமோ என்றுதான் சிலர் அஞ்சுகின்றனர். மற்றபடி நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் கவலை இல்லை. தமிழில் வேறு மொழிகளை கலந்து பேசாதீர் என்றுதான் சொல்கிறோமே தவிர, பேச வேண்டாம் என்று சொல்லவில்லை.
•••••••••••••••••••••••••••••

நீங்கள் தமிழை பேசாவிட்டாலும் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் தமிழில் கலப்படம் செய்யாதீர்கள்.

ராஜசங்கர்,

மிதிவண்டியும், தொலைக் காட்சியும்,மின்னஞ்சலும் தமிழர் கண்டறிந்ததா..? அன்றாட வாழ்விற்க்குள் வரவில்லையா என்ன.அவ்வளவு ஏன் கணிணி, கணிப்பொறி என்று சுஜாதா காலத்தில் எவ்வளவு சர்ச்சைகள் வந்தது. சில படுத்தல்கள் காரணமா கலப்பை ஏற்றுக்க வேண்டியது இல்லையே. நேரிடையா முழுமையா ஆங்கிலத்தில் பேசிக்கலாமே.. ?

நமக்கு பழைய வரலாற்றை அறிய சமஸ்கிரத கலப்பு தேவை படுகிறது. வருங்காலத்தில் வாழ ஆங்கில கலப்பு தேவை படுகிறது எனில், காலந்தோறும் பிற மொழிகள் கலப்பிற்க்கு விட்டு கொடுத்தால் தமிழ் எங்கு மிச்சம் நிற்க்கும்..?

அவ்வளவு ஏன் நீங்கள், நான், செல்வன், தேவன் என நாம் அனைவரும் சமகாலத்தில் பிறமொழி வாழ்வியல் (அலுவலக) சூழலில் வாழ்ந்து கொண்டு இங்கு தமிழில் பேசவில்லையா..?

தமிழ் பயணி
•••••••••••••••••••••••••••••
செல்வன்

ரேம்போ உணர்ச்சிவசப்பட்டு பைத்தியம் என்றெல்லாம் கூறி இருக்கிறீர்கள்..

அந்த பாடலில் ஆங்கிலம் கற்க கூடாது என்றோ பேசக்கூடாது அன்றோ இல்லை மொழி கலப்பில்லாமல் பேசுங்கள் என்று தான் இருக்கிறது. அதற்க்கு எதற்கு இவ்வளவு வியாக்கியாங்கள்..

இன்னைக்கு நத்தார் விடுமுறை நாள்.. பொழுது போகவில்லையா..

அப்புறம் என்ன அது //பகிஷ்கரித்து விட்டு//???

பாக்கியராசன் சே
•••••••••••••••••••••••••••••••••••••••
//நான் எந்த மொழியில் எப்படி பேசவேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. வேண்டுமானால் நீங்கள் தனித்தமிழில் பேசி வாழந்து காட்டுங்கள். அது எப்படியிருக்கிறது என்று பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

சினிமாவில் ஒய் திஸ் கொலைவெறி என்று பாடினால் நாக்கில் ஜொள் வழிய கேட்கவேண்டியது. என்கு டமில் த்ரியாத் என்று சொன்னால் அதையும் கேட்டு கொண்டாடவேண்டியது. அப்புறம் எவனோ தமிழில் பேசவில்லை என ஒப்பார் வைக்கவேண்டியது.

முதலில் நீங்கள் ஒழுங்காக தமிழ் பேசி வாருங்கள். அப்புறம் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லலாம்.//
//மிதிவண்டி, தொலைக்காட்சி, மின்னஞ்சல் என்றெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் எத்துணை பேர் சொல்லுகிறார்கள்? புழங்குகிறார்கள்? ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் இருக்குமா?

கணினி என்பது ஏன் புழக்கத்தில் இருக்கிறது என்றால் அந்த சொல் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சாப்ட்வேர் என்பதற்கு இது தான் சொல் என எல்லோரும் ஒரு ஒருமித்த கருத்துக்கு வந்துவிட்டார்களா?

//நமக்கு பழைய வரலாற்றை அறிய சமஸ்கிரத கலப்பு தேவை படுகிறது. வருங்காலத்தில் வாழ ஆங்கில கலப்பு தேவை படுகிறது எனில், காலந்தோறும் பிற மொழிகள் கலப்பிற்க்கு விட்டு கொடுத்தால் தமிழ் எங்கு மிச்சம் நிற்க்கும்..? //

ஏனென்றால் நாம் எதையும் செய்வது கிடையாது. அறிவியலுக்கு ஏற்றவாறு எதையும் மொழிபெயர்த்தோ தமிழ்படுத்தியோ வைக்கவில்லை. ஏதேனும் ஒரு புத்தக கண்காட்சிக்கு போய் பாருங்கள் அறிவியல் நூல்கள் எத்துணை இருக்கிறது என?

சமையல்கலை, சினிமா, சோதிடம், கற்பனைகதைகள், சிறுகதைகள், கவிதை என்றெல்லாம் தான் இருக்குமே தவிர வேறு ஏதுவும் இருக்காது. அப்படியிருக்க, தமிழ் எப்படி வாழும்?????

நமக்கு தேவை, சினிமா, கவிதை, கதை அடுத்தவனை திட்டுவது. அப்புறம் தேவலோகத்தில் இருந்து யாரேனும் வந்து தமிழை வாழவைப்பார்களா????

//
அவ்வளவு ஏன் நீங்கள், நான், செல்வன், தேவன் என நாம் அனைவரும் சமகாலத்தில் பிறமொழி வாழ்வியல் (அலுவலக) சூழலில் வாழ்ந்து கொண்டு இங்கு தமிழில் பேசவில்லையா..? //

முழுக்க முழுக்க செந்தமிழில் பேசவில்லை. இப்போது பேசவும் முடியாது.

ராஜசங்கர்//


ஐயா ராஜா சங்கர் அவர்களே,

உங்களை யாரும் எந்த மொழியிலும் பேச சொல்லவில்லை.

தமிழில் கலப்படம் செய்யாதீர்கள் என்பது எங்களது கோரிக்கையே. அதையும் ஆணையாக சொல்லவில்லை.

மக்களிடம் காணப்படும் இழிநிலையே திரைத் துறையிலும் உள்ளது. மக்களிடம் உள்ள நிலை மாறும்போது இந்த நிலை மாறலாம்.

மற்றபடி நாங்கள் முடிந்தவரை தமிழில் பேசி, எழுதி வருகிறோம்.
•••••••••••••••••••••••••••••••••••••••
//முழுக்க முழுக்க செந்தமிழில் பேசவில்லை. இப்போது பேசவும் முடியாது. //

அது உங்களது நம்பிக்கை. மற்றபடி ஏற்கனவே கலந்துவிட்ட சமஸ்கிருத, ஆங்கில சொற்களை நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இனியும் அதிகமான வேற்றுமொழிச் சொற்களை புகுத்தாதீர்கள்.

மொழியை சிதைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

ஏழு கோடிப்பேரில் தமிழறிந்த, கற்ற, புலமை பெற்ற அறிஞர்கள், ஆசிரியர்கள் ஒரு ஒரு லட்சம் பேராவது இருக்கமாட்டார்களா?

அந்த ஒரு லட்சம் பேரும் ஆளுக்கு ஏதேனும் ஒன்று செய்திருந்தாலே இன்னேரம் தமிழில் நல்ல நூல்கள் வந்திருக்கும், நல்ல படிப்பாளிகள் கிடைத்திருப்பார்கள். அந்த ஒரு லட்சம் பேர் ஒரு பத்துவருடத்திலேயே ஒரு கோடிப்பேராவது ஆயிருக்கமாட்டார்களா?

இந்த அளவுக்கு தமிழ் பற்றை வைத்துக்கொண்டு ஏன் கோரிக்கை கீரிக்கை எல்லாம் வைக்கவேண்டும்?

கையாலாகாதவர்கள் சொல்வதற்கு எந்த மதிப்பும் கிடையாது.

வளராத மொழி, மாற்றங்களை தாங்காத மொழி சிதைந்தே போகும். அது காலத்தின் கட்டாயம்.

வீடு கட்டினால் பராமரிக்கவேண்டும். பராமரிக்காதவீடு இடிந்தே போகும்.

ராஜசங்கர்


•••••••••••••••••••••••••••••••••••••••

ஐயா ராஜா சங்கர் அவர்களே,

அந்த தமிழர்களிடம்தானே நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். தெலுங்கர்களிடமோ, மலையாளிகளிடமோ நாங்கள் தமிழை பேசுங்கள், தமிழை வளருங்கள் என்று கோரிக்கை விடுக்க வில்லையே.

எங்களது ரத்த உறவுகளான அந்த ஏழு கோடிப்பேருக்கும், அவர்களிடையே உள்ள கற்றறிந்தோருக்கும்தான் நாங்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

தமிழை கற்றறிந்த மாற்று இனங்களுக்கோ, தமிழை வியாபார மொழியாக பேசும் மார்வாடி போன்ற இனத்தவருக்கோ நாங்கள் கோரிக்கை விடுக்க வில்லை.

அந்த ஏழுகோடிப்பேரில் உள்ளவர்களாகத்தான் தமிழ் ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இப்போதே ஏராளமான வாசிப்பும், படைப்புகளும் உருவாகி வருகின்றன. இன்னும் சிறிது காலத்திற்குள் நீங்கள் விரும்பும் வகையில் கோடிக்கணக்கான படைப்புகள் உருவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

//வளராத மொழி, மாற்றங்களை தாங்காத மொழி சிதைந்தே போகும். அது காலத்தின் கட்டாயம். வீடு கட்டினால் பராமரிக்கவேண்டும். பராமரிக்காதவீடு இடிந்தே போகும். //

உங்களது கருத்தை ஏற்கிறேன். ஆனால் அந்த வளர்ச்சி முறையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சிதைவு இருக்கக் கூடாது.

உடலில் ஒரு பாகம் மட்டும் வளர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் கூடாது என்கிறோம்.

வீட்டுப் பராமரிப்பு பணிகளில் ஒன்றுதான் மொழிக் கலப்புச் செய்யாதீர்கள் என்பது.
மக்கள் என்னிடம் சுதந்திரமாக வந்து
என்னிடமிருந்து சுதந்திரமாக செல்ல வேண்டும் - ஓஷோ

http://www.youtube.com/watch?v=otGQqO2TYMI

Wednesday, December 21, 2011

கைவிலங்கு அடிமைத்தனத்தின் அடையாளம் அல்ல.

அச்ச உணர்வே அடிமைத்தனத்தின் அடையாளம்.

எதிரியே உன் சதிகளுக்கு நன்றி

கச்சத்தீவை கொடுத்துவிட்டீர்கள்
உன் வீட்டை விட்டுவிட்டோமே?

காவிரித் தண்ணீரை கொடுங்கள்
கொடுப்பது போதாதா?

என் ஈழ உறவுகளை அழித்தாய்
இங்கே பாதுகாப்பாக இருக்கிறாயே?

மீனவனை கொல்கிறார்கள்
மீன் பிடிப்பதை விட்டுவிடுங்கள்

கூடங்குளம் வேண்டாம்
மின்சாரம் வேண்டாமா?

என் மொழியை அழிக்காதீர்
உனக்கு மொழியறிவு இருக்கா?

என் இனம் தமிழினம்
இனத்தின் இலக்கணம் தெரியுமா?

முல்லைப் பெரியாறை பாதுகாப்பீர்
அண்டிப் பிழைத்துக்கொள்

என் இனத்தை அழிக்கிறீர்கள்
உன்னால் பாதுகாத்துக்கொள்ள முடியுமா?

எதிரியே உன் சதிகளுக்கு நன்றி
என் இனம் விழித்துவிட்டது

Wednesday, December 14, 2011

மண் மட்டும் இருந்தால் போதும் கவிதைக்கு எதிர்ப்பும் விளக்கமும்

NO, A BIG NO! WE WANT LIVE WITH ALL PEOPLE AND WITH ALL TROUBLE AND WE BELIEVE THE CHANGE IS ALWAYS THERE FOR EVERY THING WE FACE!

நாம் எல்லாருடனும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிங்களவன் வாழத்தயாரா? தமிழன் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு உங்களால் தீர்வு சொல்ல முடியுமா?

THE WORLD BELONGS TO ENTIRE HUMANITY AND SO ALSO THE NATION INDIA AND THESE PETTY FIGHT ON SOIL FOR RIVER COURSE,ELECTRICITY FISHING RIGHTS CANNOT MAKE YOU OR US TO LOOSE OUR RESOLVE TO TO SORT OUT THESE ISSUES
MORE AMICABLY AND TO ACHIEVE THE PEACE AND BETTER LIVING FOR ALL!

எந்த நாடாவது பாஸ்போர்ட், விசா இல்லாமல் உங்களை அனுமதிக்கிறதா? அப்புறம் எப்படி உலகம் எல்லாருக்கும் சொந்தம்? பிரச்சனைகளை யார் தீர்த்து வைப்பார்? உச்ச நீதிமன்ற உத்தரவை உங்கள் நாட்டால் நிறைவேற்ற முடியவில்லை. அப்பாவி மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதை உங்களால் தடுக்க முடியவில்லை. அந்த கப்பற்படைக்கு தமிழனின் வரிப்பணத்தில் சம்பளம் தருகிறீர்கள். பிரச்சனைகளை எப்படி அமைதியாக பேசி தீர்ப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?

NO ONE IS FOOL HERE TO ACCEPT THE DOGMAS TO FOLLOW AND TO PERISH FOR NOTHING.

எது மூடநம்பிக்கை இந்தியர் என்று ஏமாற்றுவதா? நீங்கள் எதற்காகவும் உயிரை பணயம் வைக்க வேண்டாம்.

JUST WE NEED TO THINK, SIT AND DISCUSS TO SOLVE ALL THE ISSUES.

எதைப் பற்றி யோசித்து எதை தீர்ப்பீர்கள் பதில் சொல்லுங்கள்.

IF WE ARE HERE TO FIGHT, THEN THERE WOULD BE NO PEACE AND ALL WOULD DIE FOR NOTHING.THE ATTACK ON MALAYALI OR TAMIL IS A SHAME.

நாங்கள் சொல்வது சண்டையிடுவதைப் பற்றி அல்ல. எதிர்ப்பை தெரிவிக்க. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கவே சொல்கிறோம். ஒன்றும் இல்லாததற்காக நீங்கள் சாக வேண்டாம். தாக்குதல் எங்கே ஆரம்பித்தது. மலையாளியை தமிழன் நடிகனாகவும் வியாபாரியாகவும் முதல்வராகவும் பார்த்தான். மலையாளி தமிழனை அப்படி பார்க்கிறானா?

THE PEOPLE WHO ARE ATTACKED ARE PETTY TRADERS AND THE PEOPLE WHO ATTACK ARE ALSO SIMPLE ORDINARY PEOPLE WITH NO WEALTH OR HAPPY LIVELIHOOD!

சண்டை போட்டாலும் போடாவிட்டாலும் பாதிக்கப்படுவதும் சாதாரண மக்களே. கோபுரத்தில் இருப்பவர்கள் அல்ல. முல்லைப் பெரியாறின் தண்ணீரை குறைத்ததால் எத்தனை லட்சம் ஏக்கர்கள் தரிசாகி உள்ளன என்று தெரியுமா உங்களுக்கு? அவர்களுடன் சென்று பேச்சு வார்த்தை நடத்துங்களேன்.

THE LEADERS WHO ARE CORRUPT AND INCOMPETENT ARE THE PEOPLE TO BE ACCOUNTABLE FOR ALL THESE MESS UP ON EACH AND EVERY ISSUE THAT IS BURNING ACROSS THE NATION!

இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவை தேசிய இனங்களே. அந்த வரிசையில் காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்கு மாநில மக்கள் இறுதியாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல இனங்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகளை யார் தீர்ப்பார் என்று உங்களால் சொல்ல முடியுமா?

IF WE NEED TO DO THINGS RIGHT WE NEED TO
SET OUR MIND RIGHT TO TAKE AND FACE THE ISSUE IN THE RIGHT WAY TO SOLVE AND NO LESS THAN THAT WOULD MAKE THE ISSUES GET SOLVED!

தமிழர் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை தமிழர்கள் எவ்வாறு எதிர்நோக்க வேண்டும். எவ்வாறு தீர்க்க வேண்டும் என்று கூறுங்களேன். புண்ணியமாகப் போகும்.

IN SRILANKA LTTE KILLED 30,000 SRILANKAN SOLDIERS IN 32 YEARS OF MINDLESS VIOLENCE! ARE THESE SOLDIERS ARE NOT PAID WORKERS OF THE STATE OF SRILANKA?

நீங்கள் சிங்களவரா தமிழரா? வன்முறையை தூண்டியது யார்? எல்டிடிஈயா இலங்கை ராணுவமா? கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் தமிழர் 30 ஆண்டுகாலம் அமைதியான முறையில் போராடினர். அப்போதும் அவர்களை சிங்கள இனம் கொன்று அழித்தது. அது தெரியுமா உங்களுக்கு?

INSTED OF KILLING, IF THEY WERE CAPTURED ALIVE AND
SAVED AND ALSO RETURNED TO THE GOVERNMENT AGAINST THE DEMANDS OF LTTE FOR LOCAL ISSUES, THE ARMY WOULD HAVE TAKEN SIDE WITH LTTE FOR MORE CONVESSIONS AND BETTER LIFE TO THE TAMIL. AM I NOT RIGHT?

எத்தனை ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் திருப்பி அனுப்பினர் என்று அவர்களை பற்றி கேட்டுப்பாருங்கள். மாறாக அவர்கள் கொன்றது எல்லாம் ராணுவத்தினரைத்தான். பொது மக்களை அல்ல. நீங்கள் பேசுவது ஆச்சரியமாக உள்ளது. ராணுவம் புலிகளின் பேச்சைக் கேட்டு அவர்களுக்காக சௌகரியம் செய்து தருவார்களா? தமிழர்களிடம் பேசிப்பாருங்கள். நீங்கள் சொல்வது சரியா என்று இந்த குழுமத்தில் உள்ள மற்றவர்களிடம் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு இலங்கையின் வரலாறு தெரியாது என்று நினைக்கிறேன். நீங்கள் ஆலிஸின் ஒண்டர் லேண்டிலிருந்து வந்து இந்த குழுமத்தில் சேர்ந்திருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

THINK AND GET THE POWER OF POSITIVE THINKING AND RESOLVING THE ISSUES IN MORE HUMANISTIC WAY AND WE ALL WOULD BE SUCCESSFUL! BYE

நான் சாதக சிந்தனையில்தான் இதனை எழுதியுள்ளேன். பிரச்சனைகளை தீர்க்க வந்துள்ள அன்னை தெரஸாவின் அன்புச் சகோதரரே உங்கள் கருத்துக்களை டெல்லியில் இருப்பவர்களிடமும் கொழும்புவில் இருப்பவர்களிடமும் சொல்லுங்கள். உங்களுக்கு நவ ரத்ன விருதுகள் கிடைக்கும். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். அது எதிரிகளுக்கான தோல்வி மணி.

Friday, December 9, 2011

மண் இருந்தால் மட்டும் போதும்

முல்லைப்பெரியாற்றின் தண்ணீர் வேண்டாம்
மலையாள உறவும் வேண்டாம்

காவிரித் தண்ணீரும் வேண்டாம்
கர்நாடக தொடர்பும் வேண்டாம்

கிருஷ்ணா நதிநீரும் வேண்டாம்
தெலுங்கர் ஆதரவும் வேண்டாம்

எங்கள் மண் பாலைவனமாகட்டும்
மழைநீரை வடித்தெடுப்போம்

நுண்ணீர் பாசனம் செய்வோம்
கண்ணீரில்லாமல் வாழ்வோம்

கல்பாக்கமும் கூடங்குளமும் வேண்டாம்
கொலைகாரரின் மின்சாரமும் வேண்டாம்

நாங்கள் இருட்டில் வாழ்ந்தாலும்
ஒருநாள் வெளிச்சம் பிறக்கும்

கச்சத்தீவை மீட்க வேண்டாம்
கரையை நாமே காத்துக் கொள்வோம்

மீனவர் உயிரை சிங்களவன் பறிக்கட்டும்
கடற்படை அதை ரசிக்கட்டும்

எங்களுக்கு எங்கள்
மண் இருந்தால் மட்டும் போதும்

நுட்பம் பல படைத்து
உலகே வியக்க வாழ்வோம்
அடிமையாக இருந்து சந்தோஷமாக இருப்பதை விட
சுதந்திரமாக இருந்து துன்பப்படலாம்

Wednesday, December 7, 2011

பொருள் - தமிழக எல்லைக்குள் ஐயப்ப பூஜை செய்ய கோரிக்கை விடுத்தல்

மாண்பு மிகு முதல்வருக்கு,

பொருள் - தமிழக எல்லைக்குள் ஐயப்ப பூஜை செய்ய கோரிக்கை விடுத்தல்

முல்லைப் பெரியாறு பிரச்சனை உச்ச நிலையில் இருக்கும் நிலையில் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழக பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி தமிழக எல்லைக்குள் ஓரிடத்தில் பூஜை செய்யுமாறு கோரிக்கை விடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நிரந்தரமாகவே தமிழக எல்லையில் ஐயப்பனுக்கு ஒரு கோவில் கட்டினால் அது இன்னமும் பாதுகாப்பாகவும். தமிழக அரசுக்கு வருவாய் ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று கருதுகிறேன்.

தாழ்மையுடன்
பெருமாள் அ. தேவன்

--

Regards,
Perumal A. Thevan,
103, Sai Dham Building,
Gopal Krishna Nagar,
Sagoan, Dombivli, Thane,
Maharashtra - 421201
Mob: 9833753808

ap_thevan2003@yahoo.co.in,
ap_thevan34@rediffmail.com,
apthevan@gmail.com

http://perumalthevan.blogspot.com/

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...