Saturday, November 30, 2019

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை வரலாறு



பசும்பொன் தேவர் அவர்களுக்கு மதுரை கோரிப்பாளையத்தில் வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 அன்று தலைவர் தேவர் அவர்கள் மறைந்த போது தேவருடைய தொண்டர்கள் மனதில் கருக்கொண்ட எண்ணம் இது! 1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்,"தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் தலைவர் தேவருக்கு சிலை வைக்க வேண்டும்" என்று நாடெங்கும் அலைந்து திரிந்து வசூல் செய்தார். சிற்பி ஜெகநாதனிடம் சிறுக சிறுக போய் சேர்ந்தது. சிலை மாடல் உருவானது.

மதுரையில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை, முதலமைச்சர் அண்ணா திறந்து வைக்கிறார் என்று முன்பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது.1969-ம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் மொத்த வட்டங்கள் 45-ல் திமுக கூட்டணியில் 9 இடங்களில் ரயில் இஞ்சின் சின்னத்தில் ஃபார்வர்டுபிளாக் போட்டியிட்டது. எஸ்.முத்துமாயத் தேவர், எல்.சோணையா சேர்வை ஆகியோர் தேர்தலில் வென்றனர். மா.பரமத்தேவர் 2 ஓட்டுகளில் தோற்றார். 5 ஓட்டு, 7 ஓட்டு என்ற வித்தியாசத்திலேயே ஃபார்வர்டுபிளாக் தோற்றது. நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. எஸ்.முத்து சேர்மன் ஆனார். அதை ஃபார்வர்டுபிளாக் ஆதரித்தது. துணைச் சேர்மன் தேர்தலில் ஃபார்வர்டுபிளாக் திமுகவை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஆனந்தம் வெற்றி பெற்றார்.

திமுக நகரசபை கவிழ்ந்து விடாமல் இருக்க ஃபார்வர்டுபிளாக் தயவு தேவை என்ற நிலை இருந்தது. எனவே எஸ்.முத்துமாயத்தேவர் நகரமைப்புக் குழு தலைவராக்கப்பட்டார். அப்போது தேவரின் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்ட இடம்தான் கோரிப்பாளையம் ஆறு சாலை சந்திப்பு. அந்த இடம் தான் 28.09.1957-ல் காமராஜ் நாடார் ஆட்சியில் பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்ட இடம். அண்ணாதுரையின் மறைவால் சிலை திறப்பு விழா தள்ளிப்போயிற்று.

மூன்று மாவட்டங்களில் பசும்பொன் தேவர் பெயர் கொண்ட கல்லூரிகள் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டன. 1971 பொதுத்தேர்தலில் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் இராமநாதபுரம் பாராளுமன்றத்திற்கும், உசிலம்பட்டி சட்டப்பேரவைக்கும் போட்டியிட்டார். 1971 பொதுத்தேர்தலில்தான் ஃபார்வர்டுபிளாக் வேட்பாளர்கள் எல்லோரும் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டனர்.1967-ல் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் சுதந்திரா கட்சியின் நட்சத்திர சின்னத்திலேயே போட்டியிட்டனர்.

1971-ல் அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் ஹேமந்தகுமார் பாசு கொல்லப்பட்டதால் பி.கே.மூக்கையாத்தேவர் அகில இந்திய தலைவரானார்.1972-ல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கூடலூர் இராஜாங்கம் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் வந்தது. அந்த சமயத்திலே கருணாநிதிக்கும், தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கும் நல்லூறவு இல்லை. கருணாநிதி மீது தலைவர் அதிருப்தியில் இருந்தார். தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு பொன்விழா க.இராஜாராம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. மேடையில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், அமைச்சர் செ.மாதவன் மூலமாக சமாதானம் பேசப்பட்டது. ஏனெனில் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் ஆதரவு தேவை.

திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுகவை ஃபார்வர்டுபிளாக் ஆதரிப்பது என்றும் தேர்தலில் திமுக தோற்றாலும் ஜெயித்தாலும் தேவர் சிலை திறப்பு விழா செலவுக்கு ரூபாய் 40,000 தரவேண்டும் என்றும் பேசப்பட்டது. திமுக தரப்பில் ஒப்புதல் தரப்பட்டது. எதிர்பார்த்தது போலவே திமுக தோற்றது. ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் ஏ.ஆர்.பெருமாள், சின்னப்பக் கவுண்டர், சக்திமோகன், சௌடி சுந்தரபாரதி, தவமணி, கே.கந்தசாமி, ரத்தினசாமி தேவர், முத்தையா ஆகியோர் ஒப்பந்தபடி பணம் கேட்ட போது, "தேவருக்கு செய்ததும் போதும், தேவமாருக்கு செய்ததும்" போதும்" என்று கருணாநிதி பதில் சொல்லியுள்ளார்.

கோபமடைந்த ஃபார்வர்டுபிளாக் தலைவர்களை சமாதானம் செய்த அன்பில் மற்றும் செ.மாதவன் சிலை திறப்பு விழா மலர் போடுங்கள், அதற்கு அரசு தரப்பு விளம்பரம் தருகிறோம் அதை வைத்து விழா செலவை சரிக்கட்டுங்கள் என்றனர். அதன்படி சிலை தயாரிப்பு விழா மலர் தயாரிக்கப்பட்டது. அதன்மூலம் அரசு விளம்பரம் கிடைக்கப் பெற்று ரூ 36,000 மட்டும் கிட்டியது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் எம்பியாக இருந்ததால் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அவர்களிடம் பசும்பொன் தேவர் சிலை திறக்க வரும்படி கேட்டார். அவரும் சம்மதித்தார். 5-1-1974 மாலை 3 மணிக்கு சிலை திறப்பு விழா முடிவு செய்யப்பட்டது. நகராட்சியாக இருந்த மதுரை மாநகராட்சி ஆனது. எஸ்.முத்து முதல் மேயர் ஆனார்.

இந்த காலகட்டத்தில் கருணாநிதிக்கும், முத்துவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி குறிப்பிட்ட இடத்தில் பீடம் கட்ட கட்டிட பணி துவங்கியது. பாதி அஸ்திவாரம் தோண்டியதும் அந்த இடத்தில் பாலம் வந்து விட்டது. எனவே தோண்டிய இடத்தை மூடிவிட்டு அந்த இடத்திலிருந்து சுமார் 40 அடி தள்ளி தெற்கில் வானம் தோண்டி கட்டிட பணி தொடங்கப்பட்டது. பீடத்தின் உயரம் தளத்திலிருந்து 18 அடி என கணக்கிடப்பட்டது.சரியான அடை மழை.கட்டிட பணி தடைப்பட்டது. இரவோடு இரவாக மழையோடு மழையாக தென்னங்கீற்றால் முகட்டுக் கொட்டகை போடப்பட்டது. பணி தொடர்ந்தது. எஸ்.முத்துமாயத் தேவர் எம்.சி, நகரத் தலைவர் மா.பரமத்தேவர், நகரச் செயலாளர் எஸ்.அய்யாவு பண்டாரம், எஸ்.காஜாமைதீன் இவர்களோடு நானும் மற்றும் கட்டிட பணியாளர்கள் பீடம் கட்டவும் அரசு மருத்துவமனை(பனகல் ரோடு) சாலையில் ரோட்டை மறித்து 20×30 விழா மேடையை கருங்கல் சிமெண்ட் உபயோகித்து கட்டுவதற்கும் ஜம்புரோபுரத்தை சேர்ந்த திரு.ராமு சேர்வையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.அய்யணன் அம்பலம், மாவட்ட ஆட்சியர் சீதாராமதாஸ் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்கள். பக்கத்தில் இருக்கும் முருகவிலாஸ் ரைஸ் மில் தற்காலிக அலுவலகமாக மாறிவிட்டது. சென்னையிலிருந்து சிலை வந்துவிட்டது. வைக்கோல் கட்டுகளை மெத்தை போல போட்டு சிலை இறக்கி வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலையை லாரியில் சுமந்து வந்தவரின் பெயர் கந்தசாமி. பீடம் எழுந்து நின்றது. பீடத்தின் நான்கு மூலையிலும் திண்டுபோல நீட்டி கட்டப்பட்டது. அதில் நான்கு சிங்கங்கள் வைக்க வேண்டும், முன்னும் பின்னும் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறப்பு விழா கல்வெட்டுகளும்,கிழக்கிலும் மேற்கிலும் தேவரின் பொன்மொழிகளும் வைக்க வேண்டும் என்ற திட்டம் முழுமை பெறவில்லை. கற்கள் வாங்க பணம் இல்லை. வந்த ஒரு கல்லில்,கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டது.

தெய்வீகத் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நாள் 5.1.1974 தலைமை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வர் திறப்பாளர் வி.வி.கிரி அவர்கள் இந்திய ஜனாதிபதி சிலை அமைப்புக் குழுத்தலைவர் பி.கே.மூக்கையாத் தேவர் அவர்கள் எம்.பி. அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் என்று இருந்தது. இதைப்பார்த்த சில ஃபார்வர்டுபிளாக் தலைவர்களுக்கு பயங்கர கோபம்.

தங்களுடைய பெயர் அதில் இல்லையே என்று. சிலையை பீடத்தில் ஏற்ற கிரேன் தேவைப்பட்டது. டிவிஎஸ் P.W.D கிரேன்கள் வந்தன். கிரேனின் உச்சியில் இருந்த ராடு ஒன்று வளைந்து விட்டது. மீண்டும் கிரேன் தேடும் படலம் ஆரம்பமானது. பின்பு கிரேன் வந்து சேர சிலை பீடத்தின் மீது அமர்த்தப்பட்டது. கூடாக இருந்த சிலையின் தலையில் ஒரு அடி அகல வட்டமாக துளை இருந்தது. சுமார் 4 இஞ்ச் விட்டமுள்ள இரு கம்பிகள் இரண்டு தோள்களிலிருந்து பாதம் இருக்கும் அடிக்கல்லோடு பொருத்தப்பட்டது. உள்கூடு காங்கிரீட் கலவையால் இடுப்பு வரை நிரப்பப்பட்டது.

அதன்பின் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் மற்றும் சின்னப்பக் கவுண்டர் அவர்கள் வர, அதன் சில கற்கள், ருத்ராட்ச மாலை, வேறு சில பொருட்கள் இடப்பட்டன. மட்டி கலவை பூசப்பட்டது. தின்னர் பூசப்பட்டது. மறுநாள் தங்க கலர் பெயிண்ட் ஸ்பிரே செய்யப்பட்டது. இன்று வரை இந்த வேலையை தைக்கால் தெருவில் உள்ள கார் பெயிண்ட் ஸ்பிரே செய்யும் செல்லம் சேர்வையும் அவரது புதல்வரும் செய்து வருகின்றனர். சிலை திறப்பு விழா மலர் வந்தது. ஜனாதிபதி, முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்துரையுடன் "நெஞ்சமே அஞ்சாதே அந்த நாள் வரும்" என்ற பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் கட்டுரையை தொடர்ந்து ஏ.ஆர். பெருமாள் அவர்களின் கட்டுரை. கட்டுரையில் கருணாநிதியை உயர்த்தி கூறப்பட்டிருந்தது.

இதே கருத்தை ஏ.ஆர். பெருமாள் அவர்கள் மேடையில் பேசினார் என்றால் அது சரியாக இருக்காதே என்ற எண்ணம் ஏற்பட்டது. மார்கழியில் மற்றொரு சித்திரை திருவிழா என்று சொல்லும்படியாக பிரம்மாண்டமான கூட்டம். சிலையின் பீடத்தை சுற்றிலும் பச்சைப் பட்டு விரித்தாற் போன்று முளைப்பாரிகள் வைக்கப்பட்டிருந்தன. விழா துவங்கியது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். 1957-ல் இந்த இடத்தில் கைது செய்யப்பட்ட தலைவர் தேவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. மாசுமறுவற்ற தலைவர், சாதியவாதியாக சித்தரிக்கப்பட்டார்.

ஏனெனில் அன்று மாநில அரசும், மத்திய அரசும் தேவரின் விரோதிகள் கையில் இருந்தது. ஆனால் இன்று மாநில முதலமைச்சர் தலைமையில் இந்தியாவின் ஜனாதிபதி தேவர் சிலையை திறக்க இருக்கிறார். இன்றைக்கு மாநில அரசும்,மத்திய அரசும் தேவருக்கு வேண்டியவர்கள் கையில் உள்ளது. அன்று நடந்ததும் அரசியல், இன்று நடப்பதும் அரசியல் என்று குறிப்பிட்டு விட்டு பின்பு தேவர், வி.வி.கிரி இருவரின் தொடர்புகளை விவரித்து விட்டு அமர்ந்தார். முதல்வர் கருணாநிதி வழக்கம் போல பேசிவிட்டு அமர்ந்தார்.

வி.வி.கிரி 1937-ம் ஆண்டு தேர்தல் சூழல்களை எடுத்து விளக்கி விட்டு, பசும்பொன் தேவர் எனக்கு ஒரு வகையில் குரு. ஏனென்றால் எனக்கு அவர் தான் திருக்குறள் கற்றுக் கொடுத்தார். இந்த பெருமைகளை தெரியாத,வரலாறு தெரியாத ஒரு சில சிறுவர்கள் தேவர் சிலையை திறக்க நான் வரக்கூடாது என்று எனக்கு கடிதம் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டார். சிற்பி ஜெகநாதன், கே.இராமு சேர்வை கௌரவிக்கப்பட்டனர். நன்றியுரை ஏ.ஆர்.பெருமாள் என்று கருணாநிதி சொன்னார். ஏ.ஆர். பெருமாள் எழுந்து மைக் முன்பு வருவதற்குள் தேசிய கீதம் இசைத்தட்டு போடப்பட்டு விட்டது. மேடையில் அனைவரும் அவசரமாய் எழுந்து நிற்க, விழா நன்றியுரை இல்லாமலேயே முடிந்தது.

தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் கோப பார்வை செலுத்தினார். மேடைக்கு கீழே மைக் செட் ஆபரேட்டர் பெருமாள், மருதுபாண்டியன், ஒலிபெருக்கி உரிமையாளர் அழகிரிசாமி, தலைவர் மா.பரமத்தேவர், நான் ஆகியோர் மட்டுமே இருந்தோம். பி.கே. மூக்கையாத்தேவரின் அக்கினிப் பார்வை எங்களையே மையம் கொண்டது. அவர் வழக்கமாக தங்கும் டி.பி. பக்கம் போகவே இல்லை. நேதாஜி ஜெயந்தி விழாவிற்கு பின்பு சகஜமானோம்.

ஒரு சிலை செய்யப்பட்டால் அரசு அனுமதி அளித்த இடத்தில் சிலை அமைத்த பின்பு உள்ளாட்சி அமைப்பிடம் முறைப்படி ஒப்படைக்க வேண்டும். கால் பங்கு தொகை பராமரிப்பு செலவாக செலுத்த வேண்டும். இப்போது சிலை மதிப்பை அப்படியே பராமரிப்பு செலவாக கட்ட வேண்டும். கால் பங்கு தொகை மதுரை மாநகராட்சிக்கு முழுமையாக செலுத்தப்படவில்லை. சிலையை சுற்றி சாலைத்திட்டு அமைக்கப்படவில்லை. விளக்குகள் போடப்படவில்லை. ஜெயந்தி விழா சமயத்தில் வண்ண விளக்குகள் கோபுரம் அமைக்க தற்காலிக மின் இணைப்பு பெறப்படும். 1980-ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது.

பீ.பீ.குளம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்த பணியான் எஸ்.மாயாண்டி தலைமையில் மாநகராட்சி முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். அப்போது போராட்ட குழுவை சந்தித்த அதிகாரிகள் பராமரிப்பு தொகை பாக்கி பற்றி விவரித்தனர். அதன்பின்பு சிலையை சுற்றி சாலைத்திட்டும், 2 போகஸ் லைட்டும் போடப்பட்டது. அதுவும் பெயர் பலகைக்கு மட்டுமே வெளிச்சம் காட்டியது. எம்ஜிஆர் ஆட்சியில் 1980-வது ஆண்டில் தான் ஏணி மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. 
– ஃபார்வர்டு பிளாக் தலைவர் அய்யா வீ.எஸ். நவமணி அவர்கள் (மேடைமணி ஜனவரி மாத இதழ்).




26-11-2019 அன்று
தேனிநகர், என்ஆர்டி என்.ஆர்.டி. அரங்கில் மாவீரன் எஸ்.ஆர். தமிழன் அறக்கட்டளை சார்பாக ரத்த தான முகாமில் புலவர் இளங்குமரன் ரத்த தானம் செய்தபோது எடுத்த படம். (படம் இடமிருந்து வலமாக, தேவதானப்பட்டி அ.இ.பா.பி. நகரச் செயலாளர் சுபாஷ், நான், தேனி மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர். சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தங்கராஜா, சின்னமனூர் செயலாளர்)

Friday, November 22, 2019

மக்களாட்சியின் பெயரில் விற்பனை

மகாராஷ்ராவில் அதிரடி அரசியல் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்று காலை வரை சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த அரசியல் அதிரடி மாற்றம் நடைபெற்றுள்ளது.

மக்களாட்சி என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை எவ்வளவு முட்டாளாக்கலாம் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் இது. இந்துக்களின் பெயரில் அரசியல் செய்து வரும் பாஜக-சிவசேனா கட்சிகளின் கூட்டணி தொடர முடியாமையும் பதவி வெறியே தவிர வேறொன்றும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தத் துணைக் கண்டத்தில் பதவியில் இருப்பவர்கள் எதைச் செய்தாலும் அது தவறு இல்லை என்ற போக்கு விடுதலை முதல் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் புதியப் புரட்சியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது வரை தொடர்ந்து மக்களாட்சியின் பெயரில் மக்கள் விற்பனை செய்யப்படுவார்கள் என்பது உறுதி. 

Thursday, November 21, 2019

அஞ்சூர் கள்ளர் நாட்டின் பெருமை


அஞ்சூர் கள்ளர் நாட்டின் பெருமை
அனைத்து சமூக பிரதிநிதித்துவம்

பாண்டிய நாட்டின் கிழக்கு அரணாக உள்ள கள்ளர் நாடுகளில் ஒன்றாக வருவது தான் அஞ்சூர் நாடு.

அம்பலம் பட்டம் தாங்கிய நாட்டார் கள்ளர்களின் ஆளுமையில் ஏனாதி கிராம தலைமை அம்பலகாரர்களால் பூவந்தி, கீரனூர், மடப்புரம், செம்பூர் போன்ற ஐந்து கிராமங்களை இணைத்து அஞ்சூர் நாடாக ஆளப்படுகிறது.

அஞ்சூர் நாட்டில் முக்குலத்தோர், செட்டியார், வேளார், வெள்ளாளர், முதலியார், கோனார், வன்னார், நாடார், பள்ளர், பறையர் முதலிய வகுப்பினர்கள் வாழும் பகுதியாகும்.

இதில் கள்ளர்,அகமுடையார்,கோனார்,செட்டியார் ஆகியோர் நிலவுடைமையாளர்களாக உள்ளனர்.

ஏனாதி கிராமத்தின் தலைமை அம்பலகாரரே அஞ்சூர் நாட்டின் நீதிவழங்குதல் நிர்வாகம் தலைமை அம்பலகாரராக வலம் வருகிறார்.

ஏனாதி என்ற பெயரின் பொருள்:- வில்லான்மையில் சிறந்து விளங்கிய படைத்தலைவர்களுக்கு சோழர்கள் வழங்கிய பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமங்களில் உள்ள பெரும்பாலான நாட்டார் கோவில்களில் அனைத்து சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக: பத்ரகாளியம்மன் கோவிலுக்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பூசாரியாக உள்ளனர். தன்னாயிரம் கோவிலில் கோனார் சமூகத்திற்கு மரியாதை வழங்கப்படுகிறது.

முக்கிய அம்சம்: பள்ளர் சமூகத்திற்காக தாங்கள் வணங்கி வந்த கருப்ப சாமி கோவிலை, கள்ளர் பெருங்குடிகள் விட்டுக் கொடுத்துவிட்டனர்.

எந்தவித சாதிய பூசல் இல்லாமலும், மனச்சகிதம் இல்லாமலும் அஞ்சூர் நாடு இன்றும் கம்பீரமாக தனது புகழுடன் நிற்கிறது.

நன்றி
வரலாற்றுத் துறை
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்

அன்புடன் 
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு 








Sunday, November 17, 2019

கள்ளர் குல ஹொய்சாள வீரவல்லாளத்தேவன்



வரலாறு படிப்பவர்களுக்கு நன்கு தெரியும், சில வரலாறுகளை படிக்கும் போது தன்னை அறியாமல் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது,பூரித்து நிற்பது என இருக்கும்.
அதேபோல் சில வரலாறுகளை படிக்கும் போது தன்னை அறியாமல் கண்களில் இருந்து சார,சாரயாக அருவி போல் கண்ணீர் கொட்டும்.

அப்படி வரலாறு தன்னை அறியாமல் பல மணி நேரமாக அழுதது. என் வாழ்க்கையில் மூன்று முறை

1. சூரைக்குடி கள்ளர் பற்றை, முவாசம் கான்
முழுமையாக அழித்தொழித்து, பொன்னமராவதி
நாட்டார்களை மிரட்டி பணிய வைப்பது.
2. கேப்டன் ரூம்லேவிற்கும், வெள்ளளூர் நாட்டு
கள்ளர்களுக்கும் நடந்த யுத்தத்தில் 5000 ஆண்,
பெண், குழந்தைகள் என அனைவரும் வீர மரணம்
அடைந்தது.
3. மதுரை சுல்தான் ஆட்சியில் பல இன்னல்களை
மக்கள் சந்தித்து வந்து போது, அதனை மீட்க வந்த
மண்ணின் மைந்தன் வீரவல்லாளத்தேவனை சூழ்ச்சி
செய்து உயிருடன் தோலை உரிந்த கோர சம்பவம்.

இதில் 3வதாக படித்த வரலாற்றில், அதெப்படி கர்நாடகாவில் இருந்து ஒரு மன்னன் மதுரை மீட்க இப்படி கொடுரமான முறையில் வீரமரணம் அடைந்தார் என்பது பல வருடங்களாகவே உருண்டு கொண்டிருந்தது.

அவரைப் பற்றிய தேடலில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பல பாகங்களாக எழுத உள்ளேன்.
அதில் முதலாவதாக
யார் அந்த ஹொய்சாளர்.....?
அவர்கள் குலம்....?
அவர்களின் பூர்வீகம்....?
என முதல் தொகுதியில் பார்ப்போம்....!

ஹொய்சாள மன்னர்கள் தங்களுடைய முன்னோர்கள் யதுகுலத்தில் உதித்தவர்கள் என்றும், தங்கள் முன்னோன் ஒருவர் காட்டில் வேட்டையாடச் சென்ற போது, தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரை புலி ஒன்று தாக்க நேரிட்டது. அச்சமயத்தில் ஹொய்சாள முன்னோன் அந்த புலியை கொன்று முனிவரை காப்பாற்றினார் என்றும் கல்வெட்டுகளில் முறையே தெரிவித்துள்ளனர். அதனால் இவர்களுடைய சின்னம் கூட புலியை கொள்ளும் ஒரு வீரனின் சிலையே இருக்கும்.

இங்கு யதுகுலம் என்பது சங்ககால தமிழ் வேளிர் குலம் ஆகும்.
தபலகர் என்னும் முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். புலி ஒன்று அவரைத் தாக்க வந்தது. சளன் என்னும் யாதவ அரசன் அவ்வழியாக வேட்டையாட வந்தான். முனிவர் அவனிடம் “ஹொய் சள” (சளனே ஓட்டு) என்றார். அவன் ஓட்டினான். அதனால் அவ்வரசன் ஹொய்சளன் எனப்பட்டான்.

என்று தங்கள் முன்னோர் என கூறுகிறார்கள்.
இதேபோல் சங்க இலக்கியத்தில் இருக்குவேளிர் மரபைச் சேர்ந்த புலிகடிமாஅல் பற்றி கபிலர் பாடுகிறார்:-

வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!

என இருங்கோவேள், புலிகடிமால் என்ற பிறிதொரு பெயரானும் அழைக்கப்பெறுவன் என்பதைக்கொண்டு. “வேள்.குல அரசருள் சளன் என்ற பெயருடையான் ஒருவன் இருந்தான் அவன் ஒருநாள் காட்டில் வேட்டைய்ாடிக் கொண்டிருந்தான் அப்போது ஆங்கே தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரைப் புலி. யொன்று தாக்க நெருங்கியது ; அதுகண்டு அஞ்சிய முனிவர், அருகே, வேட் ைட பாடிக் கொண்டிருந்த சளனேக் கூவி அழைத்துப், "புலியைக் கொல் சள " என்ற பொருள் படுமாறு, 'பொய் சள பொய் சள " என்று கூறினர்; அவனும் அக்கணமே அம்பெய்து அப் புலியைக் கொன்ருன் , அவன் செயல்கண்டு மகிழ்ந்த முனிவர், அரசே மின் வெற்றி கண்டு மகிழ்ந்தேன். என புலிகடி மாஅல்! ஐ விவரிக்கிறது.
இதில் வரும் புலிகடி  மாஅல் என்பது திருமாலை குறிக்கும் சொல்லாக எடுத்துக் கொள்ளலாம்.
ஹொய்சாளர்களும் தீவிர வைணவ மார்க்கத்தை கொண்டவர்கள்.
ஆக கொடும்பாளூர் இருக்குவேளிர் மரபில் இருந்து உதித்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது எந்த ஐயமின்றி புலனாகிறது.

சரி, இந்த இருக்குவேளிர் தங்களை எந்த இனமாக குறித்துள்ளார்கள் என்று பார்த்தால் தங்களை கள்ளர் என்றே குறித்துள்ளார்கள்.
திருப்பழனம் கல்வெட்டில்: (140)

கள்ளன் அச்சப்பிடாரி என்றே நேரடியாக குறித்துள்ளனர்.
பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை மிகவும் துல்லியமாக எழுதிய தாத்தா நீலகண்ட சாஸ்த்திரி இருக்குவேளிரை கள்ளர் தலைவர்கள் என்றே குறித்துள்ளார்.
அதுபோக இன்றும் கொடும்புறார்,இருக்குவேள்,வல்லாளத்தேவன் என்ற பட்டங்களுடன் தஞ்சை கள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் மேலூர் கள்ளர்களில் அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள வல்லாளப்பட்டி தலைமை அம்பலகாரர் தங்களின் குடும்ப பெயராக வல்லாளத்தேவன் அம்பலம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

அதுபோக சுமார் 1000ஆண்டுகளாக வல்லாளப்பட்டி கிராமத்தில்:-
தெற்குவளவு கிராமத்தின் காவல் தெய்வங்களாக விளங்கும் பெரிய புலி அய்யனார் மற்றும் சின்ன புலி அய்யனாருக்கு கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் நடைபெறும் புரவி (குதிரை) எடுக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை வல்லாளத்தேவன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் பலசாலி. அப்போது பக்கத்து நாட்டைச் சேர்ந்த குறுநில மன்னன் அவனது ஊருக்குள் வந்து ஒரு பெண்ணைத் தூக்கிச் சென்றான்.

இதையறிந்த வல்லாளத்தேவன் அந்த நாட்டுக்கு விரைந்த சென்று அந்தப் பெண்ணை மீட்டான். ஆனாலும் வல்லாளத் தேவனைப் பின்தொடர்ந்து வந்தான் பக்கத்து நாட்டு மன்னன். பொட்டல் என்ற இடத்தில் இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. அந்த நேரத்தில் சின்னபுலிபெரியபுலி என்ற இருவர் வல்லாளத்தேவனுக்கு உதவியாக வந்து, எதிரி நாட்டு மன்னனைத் துரத்தி, இந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இருவரையும் இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். சின்ன புலி அய்யனாருக்கு ஊரின் தெற்குப் பகுதியிலும், பெரிய புலி அய்யனாருக்கு வடக்குப் பகுதியிலும் கோயில் அமைந்தனர். அவர்கள் தங்களது எல்லாப் பிரச்னைகளும் தீர இந்தக் கோயில்களுக்கு வந்து நேர்ந்து கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அய்யனாருக்கு மண் குதிரைகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.

இந்தக் கோயிலின் புரவி எடுக்கும் திருவிழா பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 23-ம் தேதி துவங்கியது. பத்த நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஜூன் 1, 2 தேதிகளில் புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவிலேயே அதிக மண் குதிரைகளை (புரவி எடுப்பு) காணிக்கை செலுத்தும் திருவிழா இதுதான் என்கிறார்கள்.
இத்திருவிழாவையொட்டி முன்னதாக கடந்த பிப்ரவரி மாதமே குதிரைகள் செய்யும் பணிக்கான ஏற்பாடுகள் துவங்கின. மேலூர் அருகே மந்தைத் திடலில் தெற்குவளவு கிராமத்துப் அம்பலகாரர்கள் ஒன்று கூடினர். அவர்கள் சிவலிங்க கண்மாயில் இருந்து எடுக்கப்பட்ட பிடி மண்ணை ஸ்தபதிகளிடம் ஒப்படைத்தனர்.

இம்மண்ணைக் கொண்டு கோயில் சார்பாக முதலில் இரண்டு சேமங் குதிரைகள் பன்னிரண்டு அடி உயரத்தில் ஸ்தபதிகளால் செய்யப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்டவை. அதுதவிர ஒன்பது அடி உயரத்தில் 9 கரை குதிகைள், 21 சுவாமி சிலைகள், 2 பூத சிலைகள் செய்யப்பட்டன. மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆயிரத்து ஐந்நூறு குதிரை சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக சின்னபுலி அய்யனார் கோயில் பொட்டல் மைதானத்தில் பெரிய பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. இந்த குதிரைகள் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஸ்தபதிகளின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. ஒரு நேர்த்திக் கடன் குதிரை செய்ய ஆயிரம் ரூபாய் ஆனதாம்.

திருவிழா துவக்க நாளன்று கிராம மக்கள் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோயிலுக்கு நடந்து சென்று தீர்த்தமாடினர். பின்னர் மேளதாளம் முழங்க அங்கிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வந்து கோயிலிலும் வீடுகளிலும் தெளித்தனர். இரவு மந்தைத் திடலில் களரி ஆட்டம் நடைபெற்றது. அன்றிலிருந்து தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 1ம் தேதியன்று பெரிய புலி அய்யனார் கோயிலுக்கும், ஜூன் 2-ம் தேதியன்று சின்னபுலி அய்யனார் கோயிலுக்கும் குதிரைகளைச் சுமந்து வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, பத்து நாட்களாக விரதம் அனுசரித்து, அந்தப் புரவிகளை வழிபட்டு வந்தனர். புரவி எடுப்பு நிகழ்ச்சியன்று அய்யனார் வேடம் பூண்டவர்களின் சாமி ஆட்டத்துடன், பக்தை ஒருவர் கரகம் எடுத்து வர புரவி எடுப்பு தொடங்கியது. புரவிகளுக்கு பூஜை செய்யப்பட்ட பின், கோயிலுக்கான சேமங் குதிரை முதலில் எடுத்து வரப்பட்டது. கள்ளர்குல ஒரு பெண் உட்பட 18 கள்ளர் சாமியாடிகள் பொம்மை தூக்கியதும், நேர்த்திக்கடன் குதிரைகள் பின்தொடர்ந்தன. புறப்பாட்டிற்கு முன்பாக, ஒவ்வொருவரும் தங்கள் குதிரைகளை கண்ணாடி, பலூன், தென்னங்கீற்று, சரிகை, கலர் காகிதங்களால் போட்டி போட்டு அலங்கரித்திருந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மேளதாளத்துடன் அய்யனார் வீற்றிருக்கும் கிராமத்திற்கு அலங்கரித்த மண் குதிரைகளை பக்தர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் சுமந்து செல்வார்கள்.
இந்த வல்லாளப்பட்டி அம்பலகாரர்கள் தீவிர வைணவப் பற்றாலர்கள் என்பது முக்கிய காரணியாக உள்ளது.

மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் மூலமாக ஹொய்சாளர்கள் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக உறுதியாகிறது.
வல்லாளத்தேவரின் பயணம் தொடரும்.........!

நன்றி
பிற்காலச் சோழர் சரித்திரம் (நீலகண்ட சாஸ்த்திரியார்)
Hoysalar dynasty by Dr.B.SHEIK ALI
South Indian inscription
தினமலர் - ஆன்மீக பக்கம்













Saturday, November 16, 2019

ராசி, நட்சத்திர மண்டலங்கள்

ஜோதிடத்தில் சற்று ஆர்வம் ஏற்பட்டது. அதனடிப்படையில் பூமியைச் சுற்றியுள்ள வான மண்டலத்தை முன்னோர்கள் எவ்வாறு கிரக வீடுகள், ராசி, நட்சத்திர மண்டலங்களாக பிரித்திருக்கிறார்கள் என்ற புரிதலுக்காக இந்த வரைபடத்தை (படம் இல்லாதது) உருவாக்கினேன். இணையத்தில் கிடைத்த படம் கீழேயுள்ளது. மற்றபடி ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாது.


Sunday, November 10, 2019

வீரத்திருமகன் புத்தகம்

10-11-2019 அன்று (தராசு) திரு ஷ்யாம் அவர்களின் இல்லத்தில் வைத்து வீரத்திருமகன் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த படம். அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது தேவர் கோல்வால்கரை சந்தித்தது பற்றி புத்தகத்தில் எழுதியிருப்பதாக கூறினார். ஆனால், ஆதாரங்களின் அடிப்படையில் அது தவறு என்று ஐயா நவமணி அவர்கள், புதுமலர் பிரபாகரன் அவர்கள் மறுத்து வருகிறார்கள், நானும் அதை மறுத்துக் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்பதை தெளிவு படுத்தினேன். நீங்கள் ஆதாரங்களைக் கொடுத்தால் அடுத்த பதிப்புகளில் அதனை நீக்கி விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.


Thursday, November 7, 2019

பிச்சாவரம்_பள்ளி_சோழ_வாரிசா?


தில்லை மரங்கள் அடர்ந்த வனம் நகராக மாறியபின் ஊருக்கும் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. தில்லை-யில் அமைந்த கோயில் சிற்றம்பலம் என்று பெயர் பெற்றது. சிற்றம்பலம் என்ற பெயரே மருவி சிதம்பரம் என்றாகி ஊருக்கும் அதே பெயர் அமைந்துவிட்டது. மதுரை மாநகரில் உள்ள கோயில் பெயர் ஆலவாய் என்றே முன்னாளில் அழைக்கப்பட்டது.
சோழ மன்னர்கள் சிற்றம்பல நடராசரை தங்களின் குலதெய்வம் என்பர். அவர்கள் தன் குல நாயகன் தாண்-டவம் பயிலும் தில்லையம்பலம் பொன் வேய்ந்தனர். முதலாம் ஆதித்த சோழன் கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் என்று அதனால் புகழப்பட்-டான். சைவர்கள் இயல்பாக அடை-மொழி எதுவும் இல்-லாமல் கோயில் என்றே சிதம்-பரத்தை அழைத்தனர். இரணிய-வர்மன் என்ற மன்னன் முதல் முதல் கோயில் கட்டினான். பின் வந்த தமிழக அரசர்கள், வள்ளல்கள், பொது-மக்கள் எனப்பலரும் கோயிலை விரிவாகக் கட்டினர் என்று நூல்கள் கூறுகின்றன.

தமிழக மண்ணில் சிற்பிகளான தமிழர்களால் தமிழ் மக்களுக்கென்று உருவாக்கப்பட்டுத் தமிழில் வழிபாடு நடத்திய தில்லைச் சிற்றம்பலத்தில்-தான் பாரம்பரியத் தொடர்பு ஏதும் இல்லாத ஒரு கூட்டத்தால் இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோயில் சொத்துக்கள், நிலங்கள், விலை-யுயர்ந்த அணிகலன்கள், சில தனியார் வசம் போகக்கூடாது என்ற எண்ணத்-தால்தான் பெரிய கோயில்களின் நிருவாகத்தை அரசு மேற்கொண்-டுள்ளது. தமிழ்நாட்டில் திருவரங்-கம், பழனி, மதுரை, திருச்-செந்தூர்க் கோயில்கள், கேரள அய்-யப்பன் கோயில் குருவாயூர்க் கோயில், ஆந்திரத்தில் திருப்பதிக் கோயில் போன்றவை அரசு நிர்வாகத்தில்தான் உள்ளன. மிகத் தாமதமாகவே தீட்சிதர்கள் வசம் இருந்த சிதம்பரம் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டது. இதை எதிர்த்துத் தீட்சிதர்கள் வழக்கு மன்றம் சென்-றுள்ளனர். சிதம்பரம் கோயில் தங்கள் வசம் அளிக்கப்பட வேண்டும் என்று வாதாடுகின்றனர்.
பண்டைக்கால வரலாறு என்ன சொல்லுகிறது என்று கல்வெட்டு, செப்பேடுகளை ஆய்வு செய்து சான்றுகள் அடிப்படையில் இக்-கட்டுரை எழுதப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் என்றுமே சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் நிருவாகத்தில் இருந்ததில்லை என்றே தெரிவிக்கின்றன.
சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழ்நாட்டு மன்னர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், வள்ளல்-கள், பொதுமக்கள் கொடைகொடுத்த கல்வெட்டுகள் பல உள்ளன.
கி.பி. 1888 முதல் 1963 வரை 315 கல்வெட்-டுகள் சிதம்பரம் கோயிலில் படி எடுக்கப்பட்டுள்ளன. 20_க்கும் மேற்-பட்ட சிதம்பரம் கோயில் செப்-பேடுகள் உள்ளன. அவை காலந்-தோறும் நடைபெற்று வந்த நிர்வாக முறையை நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
இடைக்காலச் சோழர், பாண்டியர் பேரரசுக் காலத்திலும், விசயநகர அரசர்கள் காலங்களிலும், போசளர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலத்-திலும் அந்தந்த அரசு அலுவலர்களே கோயிலின் அனைத்து நிர்வாகத்-தையும் அரசுக்காக மேற்கொண்டுள்-ளனர். ஸ்ரீ மகேசுவரக் கண்காணி செய்வார், கோயில் நாயகம் செய்வார், திரு-மாளிகைக் கூறு செய்வார், ஸ்ரீ கார்யம் செய்வார், சமுதாயம் செய்வார், கோயில் கணக்கர் முதலிய பல அலுவல் பெயர்களைக் கல்வெட்-டில் காணு-கிறோம். இவர்கட்கே அரசர், அலுவ-லர்-கள், சபையார், நாட்-டார் -ஓலை (கடிதம்) அனுப்பியுள்-ளனர். இவர்கள் யாரும் சிவப்பிரா-மணரோ, தீட்சிதர்-களோ இல்லை என்பது குறிப்பிடத்-தக்கது.
கோயில் பூசை செய்வோர் கோயில் நிர்வாகிகளிடமிருந்து அன்பர்களின் அறக்கொடைகள் மூலம் வரும் பிராமண போசனம், தளிகை, சட்டிச்சோறு, பிரசாதம் பெற்று தங்கள் வாழ்க்கையை நடத்தியுள்-ளனர்.
கி.பி.14_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் மாலிக்காபூர் நடையெடுத்த-போது நிகழ்ந்த கலவரத்தில் கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசை இல்லை. நடராசர் கோயிலை விட்டு வெளியேறி ஒரு பெரிய புளியமரப் பொந்தில் இருந்தார். இரண்டாம் அரிகரனின் அமைச்சர் முத்தய்யத் தண்டநாயகன் மீண்டும் நடராசரைச் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்து பூசைக்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். இதனைச் சோழ மண்டல சதகம் என்ற நூல் மிகத் தெளிவாகக் கூறுகிறது (பாடல் எண் 99).
திருவாவடுதுறை ஆதின வரலா-றாகிய அரசவனத்து அறநிலையம் என்ற நூலிலும் இவ்விவரம் கூறப்-பட்டுள்ளது (பக்கம் 43). கோயில் கல்வெட்டும் இதனைத் தெரிவிக்கிறது.
கி.பி.17_ஆம் நூற்றாண்டுத் தொடக்-கத்தில் 1610_ஆம் ஆண்டு லிங்கமநாயக்-கர் என்ற வீரசைவர் அளித்த உதவியால் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசர் என்பவர் சிதம்பரம் கோயில் பரா-மரிப்பையும் நிர்வாகத்தை-யும் மேற்கொண்டார். கி.பி. 1648 வரை துறை-யூர்ப் பாளையக்காரர் ரெட்டி-யார்களின் நிர்வாகத்தில் கோயில் இருந்தது.


பீஜப்பூர் சுல்தான் படைத்-தலை-வர்கள் படையெடுப்பின் போது பாது-காப்புக் கருதி அன்பர்கள் சிதம்பரம் நடராசரை 24.12.1648 அன்று குடுமியாமலைக்கு எடுத்துச் சென்றனர். குடுமியாமலையில் 40 மாதம் நடராசர் இருந்தார். அங்கு பாதுகாப்புக் குறைவு ஏற்பட்டதால் நடராசரை மதுரைக்குக் கொண்டு சென்று 37 வருடம் 10 மாதம் 20 நாட்கள் வைத்திருந்தனர். 1647 ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்தும் சிதம்பரம் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக மக்கள் குடிப்பெயர்ச்சி ஏற்பட்டபோது நடராசர் இடம் மாறுதல் செய்யப்-பட்டார் என்ற கருத்தும் உண்டு.
அப்போது செஞ்சியிலும், தஞ்சை-யிலும் மராட்டியர் ஆட்சி நடை-பெற்றது. செஞ்சியில் ஆட்சி செய்தவர் வீர சிவாசியின் மூத்த மகன் சாம்பாசி. பறங்கிப் பேட்டை மராட்டிய அலுவலர் கோபால தாதாசி வேண்டிக் கொள்ளவே சாம்பாசி தஞ்சையில் ஆட்சி செய்த தன் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியோடு மதுரையி-லிருந்து நடராசரை சிதம்பரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். இப்பணியை மேற்கொண்டு நடராசரை 21.11.1684 இல் சிதம்பரம் கொண்டு வந்து மீண்டும் எழுந்தருளச் செய்து குடமுழுக்கு விழாவையும் நடத்தியவர் சிதம்பரம் திருச்சிற்றம்பலத் தவமுனிவர் என்பவர். (இச்செய்திகள் திருவாரூர்க் கோயிலி-லிருந்து மைய அரசின் தொல்லியல் துறை படியெடுத்த 4 செப்பேடுகளில் விரி-வாகக் கூறப்படுகிறது. கிஸீஸீணீறீ ஸிமீஜீஷீக்ஷீ ஷீயீ ணிஜீவீரீக்ஷீணீஜீலீஹ் 21--_23 ஷீயீ 1947)
கி.பி.1702_ஆம் ஆண்டு சிதம்பரம் கோயில் நிரு-வாகியாக இருந்து திருப்-பணி, வழிபாடு முதலிய-வைகளை மேற்பார்வை செய்தவர் பாதபூசை அம்-பலத்தாடும் பண்-டாரம் என்பவராவார்.
21.1.1711 அன்று சிதம்பரம் கோயில்-களின் நிருவாகியாக வேளூர் அம்பல-வாணத் தம்பிரான் என்பவர் இருந்த-போது சிதம்பரம் கோயிலைச் சேர்ந்த புதுமடத்தில் வழிபாட்-டுக்காக சீர்காழிச் சீமை ஏழு மாகாணத்தார் மற்றும் பெரிய வகுப்பு, சிறிய வகுப்புகளைச் சேர்ந்த குடி-யானபேர் அனைவரும் நெல் கொடையளித்தனர். இதற்காக எழுதப்-பட்ட செப்பேட்டில் நடராசர் சிவகாமியம்மை உருவத்துடன் வேளூர் அம்பலவாணத் தம்பிரான் பெயரையும் உருவத்தையும் பொறித்-துள்ளனர்.
31.12.1747 அன்று பரங்கிப்-பேட்-டையைச் சேர்ந்த ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர், நீலக்காரர், மளிகைக்-காரர் முதலிய அனைவரும் சிதம்பரம் கோயிலில் நிர்வாகியாக இருந்து, ஆயிரங்கால் மண்டபம், நாலு கோபுரம், பஞ்சாட்சர மதில் ஆகியவைகளைத் திருப்பணி செய்த சண்முகத்தம்பிரான் என்பவரிடம் கொடை கொடுத்தனர். அதே நாளில் பறங்கிப்பேட்டையில் வணிகம் செய்த ஆலந்து நாட்டைச் சேர்ந்த வணிகர்களும் (உலாந்தா கம்பெனி) சண்முகத் தம்பிரானிடம் மகமைக் கொடை கொடுத்துள்ளனர்.
முத்தையத் தம்பிரான் என்பவர் நெடுங்காலம் திருப்பணி செய்யப் பெறாமலிருந்த இராசசபையைத் திருப்பணி செய்தார். பெரும் பொருட்-செலவில் நிருவாகி முத்தை-யத் தம்பிரான் திருப்பணிக்குத் தில்லை மூவாயிரவர் தினம் அரக்கால் காசு, கொடுத்த விவரம் ஒரு செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் நிருவாகமும் திருப்பணியும் தீட்சிதர் வசம் இல்லை என்பது தெரிகிறது. மேற்கண்ட செய்திகள் கூறும் நான்கு செப்-பேடுகள் திருப்பனந்தாள் காசி-மடத்தில் உள்ளன. இதேபோல் சிதம்-பரம் கோயிலுக்குரிய பத்துச் செப்பேடுகள் திருவாரூர்க் கோயிலில் உள்ளன. இச்செப்பேடுகள் எதுவுமே தில்லை தீட்சிதர்களிடம் இல்லை என்பதால் அவர்கட்குத் திருப்பணி-யிலும் நிர்வாகத்திலும் அக்காலத்தில் பங்கு இல்லை என்பது தெளிவா-கிறது. அரியலூர் மழவராயரி-டமும் சில சிதம்பரம் செப்பேடுகள் உள்ளன.
சிதம்பரம் கோயில் வழிபாடு, விழாக்களில் பங்கு பெறவும், விழாக்-களுக்கு வரும் அடியார்கட்கு உதவிகள் செய்யவும் சிதம்பரத்தில் புதுமடம், நாற்பத் தெண்ணாயிரவர் மடம், அம்பலப் பெருந்தெரு திருநாவுக்கரசு தேவன் திருமடம், அறுபத்து மூவர் மடம், அம்பலத்தடிகள் மடம், கந்ததேசிகள் மடம், முதலிய பல மடங்கள் இருந்தன, எப்போழுதுமே இம்மடங்களில் உப்பு, ஊறுகாய், நீராகாரம் வழங்கப்பட்டது. குழந்தை-கட்குப் பாலும், தலைக்கு எண்ணெய்யும் வழங்கப்பட்டது. அன்னதானம் நடை-பெற்றது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவாரத் தொடர்.
19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டின் இடைப்-பகுதி வரை சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் சமீன்தார்கள் நிருவாகத்தில் சிதம்பரம் கோயில் இருந்துள்ளது. சாமிதுரை சூரப்ப சோழனார், தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், ஆண்டியப்ப சூரப்ப சோழனார் ஆகியோர் சிதம்பரம் கோயில் நிர்வாகி-களாக இருந்துள்ளனர். அவர்கள் வீட்டு ஆவணங்கள் இதைத் தெரிவிக்-கின்றன.
கோயில் அணிகலன்களும், சாவியும் பிச்சாவரம் சமீன்தார் வசமே இருந்தன. கோயிலில் அர்த்த சாம பூசை முடிந்த பின் தீட்சிதர்கள் கோயிலைப் பூட்டிச் சாவியைப் பல்லக்கில் வைத்துக் கொண்டுசென்று பிச்சாவரம் சமீன்-தாரிடம் ஒப்படைப்பர். அதுபோல் அதிகாலையில் சென்று சாவியை வாங்கி வருவர்.
ஆக 19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிச்சாவரம் குடும்பத்திற்கும் சிதம்பரம் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது.
வரலாறு இப்படி இருக்க இவர்கள் எப்படி சோழ வாரிசாக முடியும்....?
அப்படி அவர்கள் சோழர் என்றால்...!
அந்த புளியமர பொந்து,
லிங்கப்ப நாயக்கர்,
துறையூர் ரெட்டியார்,
தஞ்சை மராட்டிய மன்னர் சகசி
சிதம்பரம் பண்டாரம்
அம்பலவாணத் தம்பிரான்
பரங்கிப்பேட்டை ஊரவர்
புடவைக்காரர்
நீலக்காரர்
மளிகைக்காரர்
என அனைவரும் சோழ வாரிசுகளே🤦🏻‍♂️
சரி அப்படியே வீராதி வீர சத்திரிய சாதி பிரிட்டிஸ் படையெடுப்பு,சுல்தான் படையெடுப்பு,மராட்டிய படையெடுப்பு,பிரஞ்சு படையெடுப்பு,நாயக்கர் படையெடுப்பில் எந்த புளிய மரத்திற்கு கீழ் மிச்சர் சாப்பிட்டு கொண்டிரிந்தார்கள்.....?
இதெல்லாம் அந்த நடராஜருக்கே அடுக்காகாது....!
நன்றி
புலர் செ.இராசு எம்.ஏ., பிஎச்.டி.,
முன்னாள் தலைவர்
கல்வெட்டியல் - தொல்லியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...