Friday, January 27, 2017

தனி தமிழ்க் குடியரசுகள்


சில திராவிட அறிவாளிகள், இந்திய பாசக்காரத் தம்பிகள் தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுத்தால் அது தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக கோர வழிவகுக்கும் என்று கிண்டலடிக்கிறார்கள்.

அவர்களின் அறிவுக்கு எட்டிய செயலைச் செய்கிறார்கள், பரவாயில்லை. அது அவர்களின் ஆழ்ந்த அரசியல் அறிவைக் காட்டுகிறது.

தமிழர்கள் இயல்பிலேயே அறநெறி, போர்நெறி, சமூகநெறி, ஒழுக்கநெறி மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் சோழர்களின் காலத்திலேயே அவர்கள் உள்ளாட்சித் தலைவர்களை தேர்வு செய்ய குடவோலை என்ற குடியாட்சி முறையை பின்பற்றி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அறிவிற் சிறந்த தமிழர்கள் தனித் தமிழ்நாடு என்று கிடைத்து விட்டால் அதை எப்படி சீரும் சிறப்புமாக அமைப்பார்கள்? அது ஓரு கூட்டாட்சிக் குடியரசாகவே அமையும். இருக்கின்ற 32 மாவட்டங்களும் தனித் தனி அரசுகளாகவே அமையும். இதனால் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டியிருக்காது. அத்தனை சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்படும்.

கூட்டாட்சிக் குடியரசுகளுக்கான பின்னடைவுகளும் இருக்கவே செய்யும். ஆனால் அவற்றை தங்கள் கூரிய அறிவால் சரி செய்வார். தங்க்ள சீரிய அரசியலால் உலகையே வழிநடத்துவர்.
இன்னொரு விஷயம், அப்போ து பாண்டிச்சேரியும், ஈழமும் தனிக் குடியரசுகளாக இருக்கும்.


Thursday, January 26, 2017

போர்க்குடிகளின் சிறப்பு


சில குடிகள் உயிரை பாதுகாப்பதையும் உடலை பாதுகாப்பதையுமே அடிப்படை தந்திரமாக, நோ க்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் போர்க்குடிகளின் அடிப்படை கொள்கையே இனத்திற்காக, நாட்டிற்காக உயிரையும் உடலையும் துறக்கத் தயாராக இருப்பதாகும். அந்த நிலையின் அடிப்படையில் பிறப்பதே வீரமாகும்.

இந்த நெறிகளின் அடிப்படையில் வந்தவர்களே சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும். இல்லாவிட்டால், உடலை, உயிரை, உடைமையை பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக் கொடுப்பார்கள். அதையே நாம் கடந்த காலங்களில் கண்டோம்.

அதற்காக போர்க்குடிகள் அத்தனைபேரும் உத்தம புத்திரர்கள் என்று நான் சொல்லவில்லை. அங்கயும் எல்லாவித மனிதர்களும் இருக்கவே செய்வார்கள். அவர்களில் சிறப்பானவர்களை கண்டறிந்து ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லது.

சிறந்த ஆட்சியாளர்களாக இல்லாதபட்சத்தில் அவர்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அவர்களால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.

Tuesday, January 24, 2017

அரசியலில் ஏன் நல்லவர்கள் இல்லை அல்லது குறைவாக இருக்கிறார்கள்

அரசியல் என்பதே வெட்டிவேலை என்று கருதப்படுகிறது. அதோடு அது ஒரு எதிர்கால உறுதியற்ற கடினமான, செலவு மிகுந்த வேலையாகவும் உள்ளது. கூடுதல் நிர்வாகத் திறன் தேவைப்படக் கூடியது.

எனவே நல்லவர்கள் அல்லது தங்களை நல்லவர்கள் என்று நினைப்பவர்கள், சொல்லிக்கொள்பவர்கள் துணிந்து இந்த வேலையில் இறங்குவதில்லை. அதோடு அவர்கள் வருகின்ற இழப்புகளையும் தோல்விகளையும் சந்தித்து நிலைத்து நிற்க விரும்புவதில்லை.

அதற்கெல்லாம் மேலாக போட்டியாளர்கள் ஏற்படுத்தும் இடையூறுகள், தொந்தரவுகளை சமாளித்து நிற்பதில்லை.

உண்மையில், அரசியல் எளிதானது. ஏனெனில் தீய அரசியல்வாதிகள் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. எனவேதான் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போகிறது.

எனவே நல்லவர்கள் நேரம் ஒதுக்கி, நிதி திரட்டி, நிலைத்து நின்று திட்டமிட்டு அரசியல் செய்தால் மேற்படி தீய அரசியல்வாதிகளை எளிதாக வென்று விடலாம். அதோடு மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம். அவ்வாறெல்லாம் செய்ய முடியாது என்றால் தயவுசெய்து நல்லவன் என்று சொல்லிக் கொண்டு அரசியல் பேசாதீர்கள்.

வேறு என்ன செய்யலாம்? உங்களுக்கு நல்லவர்களாக தோன்றும் அரசியல்வாதியுடன் இணைந்து நேரம் ஒதுக்கி, பொருளும் ஒதுக்கி செயல்படுங்கள். அதுவே நல்ல அரசியலுக்கு வழிவகுக்கும். இவற்றுக்கெல்லாம் மேலாக பொறுமை மிகவும் அவசியம்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...