Sunday, September 1, 2013

தலித்கள் தேவர்களுக்கு எதிரிகளா?

 //சாதிய கட்டமைப்பில் கீழிருந்து மேல் வரை 'எல்லா உயர் சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களை தான் எதிரியாக பார்ப்பார்கள். திட்டுவார்கள்... அடிப்பார்கள்... அதற்கு தோழர் பெருமாள் தேவனும் விதிவிலக்கல்ல. மற்றவர்களை தொட்டாதான் வெட்டுவானே... தேவர்களுக்கும் தலித்துக்களுக்கும் நடுவே இருக்குற பகையை வளர்த்து ஆதாயம் தேடுக்கிறார்கள் இது பழசு... புதுசா எதாவது யோசிக்க பாருங்கப்பா???//

தோழர், தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.

தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், பின்தங்கியவர் என்பவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பரிதாபத்திற்குரியவர். அவர்கள் முன்னுரிமை, முன்னேற்றம் பெற வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இன்று தலித்கள் என்ன நிலையை அடைந்துள்ளனர்? ஒரு காலத்தில் தலித்களை மற்றவர்கள் ஒதுக்கியது உண்மைதான். ஆனால் இன்று தலித்கள் தங்களை தலித்கள் என்பதை நிலைநிறுத்திக் கொண்டே, மற்ற அனைவரையும் புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். அல்லது ஒடுக்க முயற்சிக்கிறார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இது ஒரு தவறான சமுதாயப் போக்கு. மற்றவர்கள் இவர்களை ஒதுக்கியதும், இவர்கள் மற்றவர்களை ஒதுக்குவதும் ஒன்றுதான்.

மற்றவர்கள் தலித்களை அடித்தார்கள் என்பது உண்மைதான். இன்று இவர்கள் மற்றவர்களை அடிக்கிறார்கள். அது சரியா என்று கேட்கக் கூட யாருக்கும் துணிவில்லை.
பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பார்ப்பனனை அடி என்று இனவெறியர் பெரியார் சொன்னார். அத்துமீறு, அடங்க மறு, திருப்பி அடி என்று சாதிப் புரட்சியாளர் திருமாவளவன் சொன்னார்.

இவர்களின் பிரச்சாரத்தை நம்பிய தலித்கள் இன்று பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். அதைத் தட்டிக்க கேட்க யாருக்கும் துப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதை நியாயப்படுத்த ஒரு கூட்டம் அலைகிறது என்பதே உண்மை.

இதையே திருப்பிச் செய்யச் சொல்ல எத்தனை காலம் ஆகிவிடும்? அப்படிச் சொன்னால் என்ன ஆகும்? இதையெல்லாம் யார் யோசிக்கிறார்கள்? அல்லது யார் யோசிக்க வேண்டும்?

இதுவரை தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு பேசி வந்தவர்கள் அதில் வெற்றி பெற முடியாத நிலையில் தற்போது சாதி, மத ஒழிப்பு பற்றி பேசி வருகிறார்கள். இது எங்கு போய் முடியும் என்பதை தற்கால நிகழ்வுகள் குறிப்பால் உணர்த்தி வருகின்றன.

இன்று தலித்கள் மற்ற அனைத்து சமுதாயத்தினருக்கும் அல்லது தங்களுக்கு  ஆதரவு தெரிவிப்போர் போக மீதியுள்ளவர்களுக்கு எதிரி என்ற நிலையை அடைந்துள்ளனர். எனவேதான் பிராமணர் அல்லாதோர் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட தமிழகத்தில் தலித் அல்லாதோர் அமைப்பு தோன்றும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைக்கு யார் காரணம்?

தேவர்களுக்கும் தலித்களுக்கும் எதிராக பகையை தூண்டும் வண்ணம் யார், எப்போது எழுத ஆரம்பித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது தற்போது யாரெல்லாம் எழுதி வருகிறார்கள் என்று தெரியுமா?

ஆனால் இவற்றையெல்லாம் சிந்திக்கக் கூட தயாராக இல்லாமல் சாதிவெறி என்ற ஒற்றைச் சொல்லில் ஒதுக்கி விடுவதுதான் இன்றைய முக்கிய நீரோட்ட நபர்களின், அமைப்புகளின் நிலையாக உள்ளது. நாங்கள் இப்போதுதான் எங்களுக்கு எதிராக கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பங்களை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளோம். அதிலேயே அந்த பிம்பங்கள் உடைய ஆரம்பித்துள்ளன.

மற்றபடி தலித்கள் எங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் அவர்கள் எங்களை எதிரிகளாக பாவித்தால் அதை தவிர்க்கவும் முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நன்றி.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...