Wednesday, October 30, 2019

பசும்பொன் சித்தருக்கு வணக்கம்

நேற்று உசிலம்பட்டி தேவர் சிலையை வணங்கி விட்டு அதன் பின் பசும்பொன் சித்தரை வணங்கியபோது எடுத்த படங்கள். மாலை எடுத்து சமர்ப்பிக்க உதவியவர் மதுரை வழக்கறிஞர் திரு மனோகரன் (Manoharan Nadar) ஆவார். காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஐயா மனோகரன் போன்றோர் தேவரை உளமாற மதிப்பவர்களாக இருக்கிறார்கள். அன்னாருக்கு மனமார்ந்த நன்றிகள்.






Saturday, October 26, 2019

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் கள்ளர் ஊர்



(ஆனந்தவிகடன் கட்டுரை)
தஞ்சையிலிருந்து நடுக்காவிரி வழியாகப் பயணம் செய்து, `திருக்காட்டுப்பள்ளி’ எனும் பேரூரைக் கடந்தால், சாலைக்கு அந்தப் பக்கம் காவிரி பாய்கிறது. இடப்பக்கம் பிரியும் சாலையின் உட்புறமாகச் சிறிது தூரத்தைக் கடந்தால், ஊரெங்கும் தமிழ்க்கடல் பாய்கிறது.

( இங்கே கள்ளர்களின் சேதுராயர், பார்பொரட்டியார், நாட்டர் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்கின்றனர்)
900 குடும்பங்கள் வாழும் இளங்காடு எனும் சிற்றூரில் நாம் காணும் ஒவ்வொருவரும் தமிழ் பயின்ற, பயிலும், பயிற்றுவிக்கும் பெருமக்களாக இருக்கிறார்கள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் போற்றும் ஊர் தஞ்சை என்றால், நேற்று, இன்று, நாளை என எக்காலமும் மொத்தத் தமிழையும் காக்கும் ஊராக விளங்குகிறது இளங்காடு.

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் இது. நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்படுவதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே, ‘நற்றமிழ்ச் சங்கம்’ எனும் பெயரில் தமிழ் வளர்க்கச் சங்கம் தொடங்கப் பட்டிருக்கிறது இந்த ஊரில். ஊர்ப் பெரியவர் பம்பையா சேதுராயரின் முன்னெடுப்பில், 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நற்றமிழ்ச் சங்கம்தான் இந்த ஊரில் இத்தனை பெரும் தமிழ் ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது.



‘நற்றமிழ்ச் சங்கம்’
‘`பாண்டித்துரைத் தேவர் வந்துதான் நற்றமிழ்ச் சங்கத்தைத் தொடங்கிவெச்சாரு. `நான்காம் தமிழ்ச் சங்கம்’ எனும் பெருமரம் எங்க நற்றமிழ்ச் சங்க விதையில முளைச்சதுதான்’’ எனத் தனது ஊரின் பெருமையையும், சங்கத்தின் பெருமையையும் விவரிக்கத் தொடங்குகிறார், 82 வயதான புலவர் ரத்தின மணவாளன்.

``எங்க பெரியப்பா புலவர் இளங்கோவன்இளங்கோவன் பார்பொரட்டியார் இந்தத் தொகுதியில இரண்டு முறை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்காரு.''

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, நான்காண்டு புலவர் படிப்பு. பிறகு முதுகலைத் தமிழும், ஆசிரியப் பணிக்காக முதுகலை ஆசிரியப் பயிற்சியையும் முடித்திருக்கும் புலவர் ரத்தின மணவாளன் தமிழாசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஊரில் தற்போது வசிக்கும் பெரும்புலவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் புலவர் ரத்தின மணவாளன். தனக்குத் தமிழ் ஈர்ப்பு ஏற்படக் காரணகர்த்தா யார் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

``எங்க அப்பா விவசாயி. ஆனா, எங்க ஊருல பல பேரு தமிழ் படிச்ச புலவர்கள். படிச்சவங்க, படிக்காதவங்கங்கிற பாகுபாடெல்லாம் இல்லை. ஊர்ல எப்போதும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம்னு பெரும் உரையாடல்கள் நடக்கும்.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் ஊர்
அதையெல்லாம் சிறு வயசுலேருந்து பார்த்து வளர்ந்த எனக்கும், தமிழ்மேல பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. ஆனா, தமிழ் படிச்சுப் புலவராகணும்கிற எண்ணம் பெரும் புலவர் ராமசாமி ஐயாவைப் பார்த்த பிறகுதான் ஏற்பட்டுச்சு. படிப்பு மட்டும் இல்லை. தமிழுக்காகக் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்துலேயும் கலைஞர் கருணாநிதிகூட கலந்துக்கிட்டவன் நான். துப்பாக்கிச்சூட்டுல நூலிழையில உயிர் தப்பி, வீடு வந்து சேர்ந்தேன். கோவையில நடந்த செம்மொழி மாநாட்டுலேயும் கலந்துகிட்டு உரை நிகழ்த்தியிருக்கேன்’’ எனத் தன் கடந்தகால நினைவுகளை அசைபோட்டவர், தன் வீட்டின் வாசல்வரை வந்து தன் சக தமிழ் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கான வழிகளையும் நமக்குச் சொன்னார்.

1980-களிலேயே இந்த ஊரைச் சேர்ந்த 60 பேர் பல்வேறு ஊர்களிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களாக, தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர் பெரும் புலவர் ராமசாமி. ஆனால், அவருக்கும் முன்னர், கோவிந்தசாமி சேதுராயர், சிங்காரவேல் சேதுராயர், நற்றமிழ்ச் சங்கத்தின் தோற்றுநர் பம்பையா சேதுராயர் எனப் பல முன்னோடிகள் உண்டு. தி.மு.க-வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், சிங்காரவேல் சேதுராயரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நற்றமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் பொன்னம்பலம். துணைத் தலைவரும், சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ராமசாமியின் மகனும் ஓய்வுபெற்ற தமிழாசிரியருமான இரா.முருகையன், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``ஒவ்வொரு வருஷமும் சித்ரா பௌர்ணமியையொட்டி, மூணு நாள் நற்றமிழ்ச் சங்க விழா நடக்கும். பாரதிதாசன், மறைமலையடிகள், உ.வே.சாமிநாத ஐயர், சோமசுந்தர பாரதி, ஆறுமுக நாவலர், கி.ஆ.பெ. விசுவநாதம்னு எங்க ஊருக்கு வராத தமிழ்ச் சான்றோர்களே இல்லை. இசை மேதைகளுக்குத் திருவையாறு மாதிரி, தமிழ் மேதைகளுக்கு எங்க ஊரு. படிக்காதவங்ககூட பகல்ல விவசாயமும் இரவுல இலக்கியத்தையும் அறுவடை செய்வாங்க. அந்த அளவுக்குத் தமிழ்ப்பித்துப் பிடிச்ச பலர் வாழ்ந்த மண் இது’’ என்றவர் தலைவர்கள் கையொப்பமிட்ட பல ஆவணங்களை நம்மிடம் காண்பித்தார்.

இந்த ஊரைச் சேர்ந்த பலர், கவிஞர்களாக, மேடைப் பேச்சாளர்களாக, கட்டுரையாளர்களாக உலகெங்கும் தமிழ் பரப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சபைகளை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சட்டசபையையும் இந்த ஊரைச் சேர்ந்த புலவர்கள் இருவர் அலங்கரித்திருக்கிறார்கள்.

அறிஞர் அண்ணாவின் தலைமையில் 1967-ம் ஆண்டு அமைந்த சட்டப்பேரவையில், திருவையாற்றுத் தொகுதியிலிருந்து புலவர் முருகையன் சேதுராயர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், மேடைப்பேச்சில் வல்லவர். கம்ப ராமாயணம் குறித்து இவர் நிகழ்த்தும் உரைக்குத் தமிழ்நாடெங்கும் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் நற்றமிழ்ச் சங்கச் செயலாளராகவும் பண்புரிந்திருக்கிறார்.
அவரின் பேரனும் திருச்சி ஆண்டவர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் நற்றமிழ்ச் சங்கத்தின் தற்போதைய இணைச் செயலாளருமான சின்னதுரை சேதுராயர் நம்மிடம் பேசினார்.

‘`எங்க தாத்தா கையப் பிடிச்சு வளர்ந்ததால, சின்ன வயசுல இருந்தே தமிழ் படிக்கணும்னு ஆசை. கம்ப ராமாயணத்துல ஆராய்ச்சிப் படிப்பை முடிச்சிருக்கேன். கல்லூரியில வேலை பார்த்தாலும், கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளுக்கும் போயிட்டு இருக்கேன்’’ என்றவர், நற்றமிழ்ச் சங்கம் இயங்கிவரும் சன்மார்க்க சபைக் கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார்.

‘`இங்கேதான் நற்றமிழ்ச் சங்கக் கூட்டம் நடக்கும். பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன்னு இங்கே வந்து போன தலைவர்கள் எத்தனையோ பேர். கலைஞரோட தமிழ் ஆசிரியர் முத்துகிருஷ்ண நாட்டார் எங்க ஊர்க்காரர்தான். கலைஞர் ஒருமுறை இங்கே ஒரு கட்டடத் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். அப்போ ‘என் கையால இந்தத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தைத் திறப்பதைவிட என் ஆசிரியர் கையால திறப்பதுதான் சரியா இருக்கும்’னு சொல்லி அவரையே திறக்கவெச்சார். அந்த அளவுக்கு, தலைவர்களுக்குப் பிடிச்ச ஊரா எங்க ஊர் இருந்திருக்கு. எங்க ஊர்ல மட்டும் பத்துக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் வாழ்ந்திருக்காங்க’’ என்றவர், ஊரில் எதிர்ப்படும் அனைவரிடமும் மிக அன்பாகவும் கனிவாகவும் நலம் விசாரித்தபடியே ஒரு பாழடைந்த வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கு நமக்கு மற்றுமோர் ஆச்சர்யம் காத்திருந்தது.

இளங்காடு, தமிழ் வளர்த்த ஊர் மட்டுமல்ல; பசுமையைக் காக்கத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய `இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் பார்பொரட்டியாரின் சொந்த ஊரும்கூட.

தற்போது அந்த வீட்டில், நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் பார்பொரட்டியார் வாழ்கிறார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

‘`எங்க அப்பா பொறியாளர் பாலகிருஷ்ணன் பார்பொரட்டியார் , சித்தப்பா நம்மாழ்வார் பார்பொரட்டியார் ரெண்டு பேரும் இயற்கை ஆர்வலர்கள். எங்க அப்பாவும் ஊர்ல இயற்கை விவசாயம்தான் பார்த்தாரு. எங்க பெரியப்பா புலவர் இளங்கோவன் இந்தத் தொகுதியில இரண்டு முறை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்காரு. அவர் கணித ஆசிரியரா இருந்தாலும், தமிழ் மேல தீவிரப் பற்றுள்ளவர். சிலப்பதிகாரம், பாரதிதாசன் கவிதைகளில் எல்லாம் கைதேர்ந்தவர். நற்றமிழ்ச் சங்கப் பொறுப்பிலேயும் இருந்திருக்காரு. நான் எங்க அப்பா, சித்தப்பா வழியில விவசாயம் பார்த்துட்டிருக்கேன். நற்றமிழ்ச் சங்கச் செயல்பாடுகளிலும் கலந்துக்குவேன்’’ என்றார்.

அவரின் இல்லத்திலிருந்து வெளியேற, `பளிச்’ உடையில் நம்மிடையே அறிமுகமானார்கள் கவிஞர் நல்ல சின்னையாவும், பேராசிரியர் ஆறுமுகமும்.

அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் நல்ல சின்னையா, இதுவரைக்கும் நான்கு நூல்களையும் எழுதியிருக்கிறார். பள்ளியில் தமிழாசிரியர் விடுமுறை என்றால், மாணவர்கள் கொண்டாட்டமாக இருப்பார்களோ இல்லையோ, நல்ல சின்னையா கொண்டாட்டமாகிவிடுவார். தமிழ் வகுப்பெடுப்பதென்பது அமிழ்தைப் பருகுவது போன்றது. சின்னையா ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றாலாகிச் செல்கிறார் என்றால் அவர் உடற்கல்வியில் மட்டுமல்ல, தமிழிலும் பட்டையைக் கிளப்புவார் என்கிற செய்தி அவருக்கு முன்பே அந்தப் பள்ளிக்குச் சென்றுவிடும். தான் மட்டுமல்லாமல், தன் மகன் வைரமுத்துவையும் கவிப்புலமையூட்டி வளர்த்துவருகிறார்.

பேராசிரியர் ஆறுமுகம், திருவெறும்பூர் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். நற்றமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். `கல்வெட்டியல் பாடக் குறிப்புகள்’, `இலக்கியக் கல்வியியல்’, `தொல்காப்பியமும் உளவியலும்’, `வேரும் விழுதும்’ என நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
ஊரில் பெரும்பாலானவர்கள் ஒருவருக் கொருவர் உறவினர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்களின் உரையாடல்கள் தமிழ் குறித்தே இருக்கின்றன.

25-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, பலமுறை `சிறந்த கட்டுரையாளர்’ விருதையும் பெற்றிருக்கிறார்.

`நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்’, என ஆண்களுக்குச் சமமாக பேராசிரியைகளும், பள்ளித் தலைமை ஆசிரியைகளும், தமிழ் படித்து அரசு வேலைகளுக்குத் தேர்வெழுதும் பெண்களும் நிரவியிருக்கிறார்கள் இந்த ஊரில்.

இந்த ஊரில் பிறந்த பெண்கள் மட்டுமல்ல; இந்த ஊருக்குத் திருமணமாகி வந்து, பிறகு தமிழ் படித்து ஆசிரியர்களான பெண்களும் பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும், இளங்காட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான அமுதவல்லி நம்மிடம் பேசினார்.

``என் கணவர் முருகேசப்பிரபு, நற்றமிழ்ச் சங்கத்தின் பொருளாளரா இருக்கார். திருமணத்துக்கு முன்பே தமிழ்ப்பற்று இருந்தாலும், ஆசிரியர் பயிற்சி மட்டும்தான் முடிச்சிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு, என் கணவரோட உந்துதலாலதான் தமிழ் படிச்சேன். இந்த ஊருல அஞ்சு பேருல ஒருவர் தமிழ் படிச்சவங்களா இருப்பாங்க. ஆனா, அஞ்சு பேருமே தமிழைப் பற்றி அறிஞ்சவங்களா இருப்பாங்க. படிக்காதவங்ககூட கம்ப ராமாயண, சிலப்பதிகாரப் பாடல்களை, ஆழ்வார் பாசுரங்களையெல்லாம் சிறப்பாப் பாடுவாங்க. இந்த ஊரோட மகத்துவம் அப்படி...’’

இப்படி ஊரில் நாம் சந்தித்த பெரும்பாலானோர் ஏதோவொரு வகையில் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்கள். பல அரிய வகைத் தமிழ் நூல்களையும் கடிதங்களையும் பத்திரமாகப் பாதுகாத்துவருகிறார்கள். டிஜிட்டல் யுகத்துக்கேற்ப நற்றமிழ்ச் சங்கத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான வேலைகளை எல்லோருமே செய்துவருகிறார்கள்.

தமிழ் படித்ததாலோ என்னவோ, ஊரில் அனைவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்கிறார்கள். யார், எங்கு, எந்தப் பதவியிலிருந்தாலும், ஊரில் அனைவரும் தமிழ்ப் பிள்ளைகளாக தமிழ்த்தாய்க்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். ஊரில் பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்களின் உரையாடல்கள் தமிழ் குறித்தே இருக்கின்றன. அந்தளவுக்குத் தமிழ்க்காதலில் திளைத்து, தமிழை என்றும் இளமையோடு பார்த்துக் கொள்கிறது ‘இளங்காடு’ கிராமம்.

மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் பூர்வீக ஊரும் இளங்காடுதான். ஊர் குறித்த, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.

``எங்களுக்குப் பூர்வீகம் இளங்காடுதான். எங்க தாத்தா காலத்துக்குப் பிறகு, நாங்க திருச்சிக்குக் குடிபெயர்ந்துட்டோம். ஆனா, எங்க குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தோடு போவோம். எங்க ஊரோட சிறப்பு என்னன்னா, ஊர்ல இருக்கும் ஆண்கள், பெண்கள் எல்லாருமே சிறப்பாப் பாடுவாங்க. முன்னாள் எம்.எல்.ஏவா இருந்த முருகையன் எல்லா மேடைகளிலேயும் பாட்டு பாடிட்டேதான் பேசுவார். நானும்கூட நல்லாப் பாடுவேன். எங்க ஊரு மக்களுக்கு இயற்கையாகவே கிடைத்த ஞானம் அது.

அதேபோல எங்க ஊர்ல பிறந்த எல்லாருக்கும் தமிழார்வம் அதிகம். நற்றமிழ்ச் சங்கம்தான் அதற்குக் காரணம். பல்வேறு தலைவர்கள் அங்கே வந்திருக்காங்க. அவங்க கையெழுத்தையெல்லாம் நான் பார்த்திருக்கேன். அங்கே கலந்துகிட்டுக் கையெழுத்துப் போடும்போதுதான் வருஷத்தை எழுதும்போது, கடைசி இரண்டு எண்ணை மட்டும் எழுதாம மொத்தமா எழுதணும்னு கத்துக்கிட்டேன். உதாரணமா, 1919-ம் வருஷம் கையெழுத்திட்ட பிரதிகள் அங்கே இருக்கு. நூற்றாண்டுக்குப் பிறகு நான் அதைப் பார்க்கிறேன். வெறும் 19ன்னு எழுதியிருந்தா, அந்த உணர்வு எனக்குக் கடத்தப்பட்டிருக்காது. நான் எழுதும்போது ‘இன்னொரு நூறாண்டுக்குப் பிறகு என் கையெழுத்தை ஒரு தமிழன் பார்ப்பான்’னுதான் கையெழுத்திட்டேன். என்னுடைய தமிழார்வத்துக்கும் இசையார்வத்துக்கும் எங்க பூர்வீகம்தான் காரணமாக இருக்கு’’ எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் திருச்சி சிவா.


Thursday, October 24, 2019

தென்னிந்தியாவின் பெருமை


வீரத்தின் கலியுக பிறப்புகளின் மறு உருவமான மருதுபாண்டியர்களின் குரு பூஜை வரும் நேரத்தில் அவர்களுடன் நாட்டுக்காக தங்களுடைய இரத்தம் சிந்தி உயிர் நீத்த கள்ளர் பெருங்குடிகளுக்கு இந்த கட்டுரையை காணிக்கையாக்குகிறேன்.
சிவகங்கை அரசுத் தலைவர் சின்ன மருதுவால் முன்னெடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சி பிரிட்டீஸ் இந்தியாவால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல இயலாது.
ஏனென்றால் மைசூர் புலி திப்பு சுல்தான், கள்ளர் நாட்டு தலைவர்கள், திண்டுக்கல் கோபால நாயக்கர், கொங்கு மண்டல வெள்ளாள கவுண்டர் தலைவர்கள், பாளையக்காரர்கள், ஊர் தலைவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை இனைத்து மண்ணுரிமைக்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரே அணியாக திரட்டிய இராஜ தந்திரம் அரசுத் தலைவர் சின்ன மருதுவையே சேரும்.
இந்த தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக குறித்துள்ளனர்.
சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி, செயல்பட்ட இடம்தான் ஆனையூர்(கருமாத்தூர்) கள்ளர் நாடு.
இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும், வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.
இந்த வேங்கை சின்ன மருதுவின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர் நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் வேங்கை மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர் நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின் இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பினாங்கு தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.
1. ஆண்டியப்ப தேவர்
2. சடைமாயன்
3. கொன்றி மாயத்தேவர்

மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை பிரிட்டிசார் கைப்பற்றியதாலும், கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டுக்கு பொன்னித்தேவர் (கள்ளப்பட்டி(செல்லம்பட்டிக்கு அருகில்) உதவியால் தப்பிச்செல்கிறார். இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ் படையால் கொல்லப்படுகிறார்.
பிறகு கோபால நாயக்கர் ஆரியபட்டி, கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.
இந்த தென்னிந்திய புரட்யில் மேலூர், வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் திருப்பரங்குன்ற மலையில் இருந்து ஆங்கிலப்படைகள் மதுரையிலிருந்து சிவங்கை செல்லவிடாமல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த புரட்சி இறுதியில் ஆங்கிலேயர்கள் வேங்கை மருது பாண்டியர்களை வீழ்த்த மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு உள்ளனர்.

அதாவது முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக் கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.
பின்பு மேலூர், வெள்ளலூர், திருப்பத்தூர்(அம்பலம்) நாட்டு கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு தொழிற்சாலைகளை தரைமட்டமாக்கி ஆங்கிலேய படை சிவங்கையை நோக்கி சிறுவயலுக்கு முன்னேறுகிறது.
சிவங்கை நாட்டு எல்லையில் நுழைந்த ஆங்கிலேய படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக கண்டதேவி, தேர்போகி (ஏழுகிளை கள்ளர் நாடு (அம்பலம்,சேர்வை)) நாட்டு கள்ளர்கள் மிகவும் வீரம் செறிந்து போரிட்டனர்.
தேர்போகி நாட்டு கிளைவழி கள்ளர்கள் மிகவும் வீரத்துடனும் சண்டையிட்டுள்ளனர் மேலும் புரட்சியாளர்களின் தளபதிகளுக்கு மிகவும் தோளுக்கு தோளாக நின்றுள்ளனர்.
இவர்களின் தாக்குதலை தவிர்க்க பிரிட்டீஸார் மருது பாண்டியர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் எனவும், தேர்போகி நாட்டு கள்ளர்களுக்கு போர் மன்னிப்பு கொடுக்கிறோம் என்று பிரிட்டிஸ் தளபதி பிளாக் பர்ன் பரிந்துரைக்கிறார்.
ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்து தாங்கள் இறுதி மூச்சுவரை மருது பாண்டியர்களுக்காக தான் நிற்போம் என்று நெற்றி பொட்டில் அடித்தால் போல் கூறிவிட்டனர்.
புரட்சியில் தோல்வியால் இந்த தேர்போகி நாட்டு கள்ளர்களும் கருவறுக்கப்பட்டனர்.
கண்டதேவி கள்ளர் நாட்டில் 3000 வீரர்களை திரட்டி ஆங்கில தளபதி பிளாக் பர்னுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர்.
இதனால் தளபதி அறந்தாங்கிற்கு சென்று மறு தாக்குதல் நடத்த செல்கிறார்.
அதே போல் பாலை நாட்டு கள்ளர்களும், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரிட்டீஸாருக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்த கிளை வழி கள்ளர் நாட்டை முழுவதுமாக வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சிவகங்கை உள்ளே நுழைகின்றனர்.
அங்குதான் நம்முடைய தென் பாண்டி சிங்கம் பாகனேரி நாட்டு பட்ட அம்பலக்காரர் வாளுக்கு வேலி அம்பலம் எல்லை சாமியாக நின்று துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் என்பது தனித்த காவிய வரலாறு.
அதுபோக கொண்டைய கோட்டை மறவர் தலைவரான, தற்கொலைப் படை பீரங்கி மாவீரர் மயிலப்பன் சேர்வையை தெற்கில் வீழ்த்தி ஒரு பிரிட்டிஸ் ரிஜ்மெண்ட் முன்னேறியுள்ளது.

இந்த ஒட்டு மொத்த கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்திய பின்புதான் மருதிருவர்களை ஆங்கிலேயர்கள் தூக்கில் இட்டுள்ளனர்.
வேங்கை மருது சகோதரர்களை வீழ்த்த வேண்டுமாயின் கள்ளர் நாட்டு தலைவர்களை வீழ்த்த வேண்டும் என்று பிரிட்டீஸார் நன்கு புரிந்து அதை செயல்படுத்தியும் உள்ளார்கள்.
இதுபோக வேங்கை மருது பாண்டியர்களுக்காக நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், செட்டியார், அய்யர்கள், வெள்ளாளர், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இரத்தம் சிந்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உன்மையே.....!
இதுபோக தூத்துக்குடி எங்கள் உடன்பிற சகோதரர்களான பரதவ மக்கள் அவர்களுடைய பரத குலத்தலைவன் பின்னால் அணிவகுத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்துள்ளனர்.
இந்த வரலாறை எல்லாம் படிக்காமல், சிவங்கை மருது பாண்டியருக்கே அரண்மனையில் உள்ளவர்கள் “வெளியே செல்” என நான் மேற்கோள் காட்டிய எந்த சமூகத்திலும் இடம் பெறாத ஒரு கூட்டம் பிரிவினை பேசி வருகிறது.
அவர்களுக்கு நான் கூறும் ஒரே விடையம் தான் வேங்கை மருது பாண்டியர்கள் தமிழ் மக்களின் சொத்து அதை பங்கு கேட்டு வரும் எவரையும் வரலாறே விரட்டும்.

குறிப்பு: வேங்கை மருது பாண்டியர்கள் வரலாற்றை மறைக்கிறார்கள் என்று மார்தட்டும் கூட்டத்தாரே, நீங்கள் எப்போது அவர்களோடு வரலாற்றில் பயணித்த கள்ளர், மறவர், பரதவர், கவுண்டர், வெள்ளாளர், அய்யர், செட்டியார், இஸ்லாமியர், நாயக்கர்களை போற்றப்போகிறீர்கள்.....?
நன்றி
South Indian rebellion by Dr.Rajayyan
Historical dictionary of the Tamils
by Mrs.Vijaya Ramaswamy
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழு கோட்டை நாடு











Monday, October 21, 2019

அனந்தபத்மநாப நாடார்- கதையா? வரலாறா?


தமிழகத்தில் சமீப காலமாக சாதீயப் பெருமித வரலாறுகளைக் கட்டமைப்பதில் ஒவ்வொரு சாதியினருக்கும் இடையே பெரும் போட்டியே நிலவிக் கொண்டிருக்கிறது. வரலாற்றைத் திரிப்பதில் சாதியவாதிகள் காட்டும் முனைப்புகள் வரலாற்றுத் துறையை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து வரலாறு என்ற பெயரில் சாதியவாதிகளால் பரப்பப்படும் கதைகள் விவாதத்திற்கு உரியவையாக மாறியிருக்கின்றன.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1741 ஆம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் போரில் டச்சு படைகள் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை தங்களது சாதியினரின் சாதனையாகவும், தங்களது சாதியைச் சேர்ந்த அனந்த பத்பநாபன் என்பவர் தலைமையிலேயே டச்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் சில நாடார் சாதிய அமைப்புகள் தொடர்ந்து அறியாமை- மற்றும் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ‘டச்சுப் படையை வென்ற மாவீரன்’ என்ற அடைமொழியோடு கடந்த சில ஆண்டுகளாக ‘அனந்த பத்பநாப நாடார் குருபூஜை’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அனந்த பத்ம‌னாபனைக் குறித்த வரலாற்று ஆதாரங்களாக ஒரு செப்பேடு ஒன்றும், ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலும், மார்த்தாண்ட வர்மா எனும் நாவலும் முன்வைக்கப்படுகின்றன.
கதைப்பாடல் என்பது, எந்தளவிற்கான ஒரு சான்று என்பதை ஆய்வறிஞர்கள் அறிவார்கள். கதைப்பாடல் அதன் தன்மைகளுக்கேற்றவாறு ஆய்வாளர்களால் தரம் பிரித்தறியப்படுகின்றன. வரலாற்றுக் கதைப்பாடல் என்கிற அங்கீகாரம் பெற்றவை சில கதைப்பாடல்களே ஆகும். எடுத்துக் காட்டாக....
1. அழகம்பெருமாள் கதைப்பாடல்.
2. ஐவராசாக்கள் கதைப்பாடல்.
3. முத்துப்பட்டன் கதை.
4. வன்னிய மறவன் கதை.
- என்பன போன்ற சில கதைப்பாடல்களே ஆகும். இதில் ஓட்டன் கதைப்பாடல் வரலாற்றுக்கதைப்பாடல் பட்டியலில் இடம்பெறவில்லை!
போலிச் செப்பேடு
கொல்லம் ஆண்டு 923 (கி.பி.1748) வேணாடு மன்னர் ஆழினம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவால் அனந்தனுக்கு செப்புப் பட்டயம் ஓன்று வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த செப்பேடு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதில் வாழும் அனந்த பத்மநாபனின் வம்சாவழியினர் என்று கூறுவோரின் கைவசம் உள்ளது. மார்த்தாண்ட வர்மாவிற்கும் அவரது எதிரிகளுக்குமிடையே நடந்த வாரிசுரிமை கலகத்தைப் பற்றி பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஓட்டன் கதை’ எனும் கதைப்பாடலிலும் அனந்த பத்மநாபனைப் பற்றி சில தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. 1982 ஆம் ஆண்டு ப.சர்வேஸ்வரன் எனும் பேராசிரியரால் ‘ஓட்டன் கதை’ புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடல் வாயிலாக அனந்த பத்மனாபனைப் பற்றி அறிய வரும் தகவல்களையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றையும் சுருக்கமாகக் காண்போம்.
வேணாடு மன்னராக இருந்த ராம வர்மா 1729 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததை அடுத்து, வேணாட்டு அரச குடும்பத்தினர் பாரம்பரியமாக கடைப்பிடித்து வரும் ‘மருமக்கத்தாயம்’ வாரிசுரிமைப்படி மன்னரின் சகோதரி மகனான மார்த்தாண்ட வர்மா அதிகாரத்திற்கு வருகிறார். இதற்கு எதிராக ராமவர்மாவின் மகன்களான பத்ம‌நாபன் தம்பி மற்றும் ராமன் தம்பி ஆகிய இருவரும் கலகத்தில் இறங்கியதால் உள்நாட்டுப் போர் மூண்டது. தம்பிமார் என்றழைக்கப்பட்ட இருவரும் மருமக்கத் தாயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து மன்னரின் மூத்த வாரிசான பத்மநாபன் தம்பியை மன்னராக்க வேண்டும் என்று உரிமை கோரினர். வேணாட்டில் அரச குடும்பத்திற்கு அடுத்தபடியாக அதிகார நிலையில் இருந்த ‘எட்டு வீட்டுப் பிள்ளைமார்’ எனும் நிலப்பிரபு குடும்பங்கள் தம்பிமாரை ஆதரித்ததால் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததால் அவர் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது.
தம்பிமாருக்கு ஆதரவாக படையுடன் வந்த நெல்லையைச் சேர்ந்த நாயக்கர் பிரதானி அழகப்ப முதலி என்பவர் இரு தரப்பினருக்குமிடையே சமரசம் செய்து வைத்தார். ஆனால் உடன்பாட்டை ஏற்க மறுத்த மார்த்தாண்ட வர்மா தனது ஆதரவாளர்கள் மூலம் தம்பிமார் இருவரையும் கொலை செய்துவிட்டார். தம்பிமாருக்கு ஆதரவளித்தவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்ட மார்த்தாண்ட வர்மா, பிற குறுநில அரசுகளைத் தோற்கடித்து நாட்டை விரிவுபடுத்தியதால் திருவிதாங்கூர் சமஸ்தானம் உருவானது.
வாரிசுரிமை கலகத்தின்போது, அன்றைக்கு சில களரி ஆசான்கள் மார்த்தாண்ட வர்மாவுக்கு ஆதரவாக படை திரட்டிக் கொடுத்திருக்கின்றனர். அத்தகைய களரி ஆசான்களுள் முதன்மையானவராக அனந்த பத்மநாபனைக் குறிப்பிடலாம். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய தம்பிமார்களின் ஆதரவாளர்கள் நடத்திய சில முயற்சிகள் அனந்த பத்மநாபனால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. எதிரிகளிடமிருந்து தனது உயிரைக் காப்பாற்றிய ஆனந்தனுக்கு மார்த்தாண்ட வர்மா செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதை ஓட்டன் கதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: ...‘ தீரன் ஆனந்தனை வருத்தி இறையிலி நிலங்கள் பட்டயமும் கொடுத்து அனந்த பல்பனாபன் என்ற பெயரும் சூட்டி அரண்மனையில் அவர் சொந்த பாதுகாவலாக்கிறார்’..... தன்னுடைய மெய்க் காவலராக அனந்த பத்மநாபனை மன்னர் நியமித்ததாக இந்த கதைப்பாடல் தெரிவிக்கிறது.
மன்னர் அனந்தனுக்கு வழங்கிய செப்பேட்டில், "நீ நம்முடைய உற்ற பெந்துவும் வலக் கையுமாகவே தினம் தினம் ராப்பகல் ஊணும் உறக்கமும் ஒழிஞ்ஞு நம்முடைய குணதோஷங்களில் பங்கு கொண்டும் ஒரு மெய்யாய் நின்று சத்துரு நிக்கிரகத்திலும் படையோட்டங்களுக்கும் மனசறிஞ்ஞு சகாயிச்சும் பலப்பொழுதும் நம்முடைய ஜீவனை ரெக்ஷிச்சு நடந்து வந்திருந்த மகிமையையும் தீரதையையும் அடிஸ்தானமாக்கி நமக்குண்டான அதிரற்ற சந்தோஷத்தினால் கரமொழிவாகவிட்டு கொடுக்கிறேன்" என்று கூறியிருப்பதிலிருந்து, மன்னரின் மெய்க் காவலராக அனந்தன் பணியாற்றியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. எதிரிகளிடமிருந்து மன்னரின் உயிரை அனந்தன் காப்பாற்றியிருப்பதும், மன்னரின் படைகளுக்கு உதவிகள் செய்திருப்பதும் தெரிய வருகிறது. அத்துடன் பேச்சிப்பாறை அருகே 32,000 தண்ணு சுற்றளவு கொண்ட நஞ்சை நிலங்களை கரமொழிவு(வரி விலக்கு) தானமாகவே அனுபவித்துக் கொள்ளுமாறும் இந்த செப்பேட்டில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த செப்புப்பட்டயத்தின் நம்பகத்தன்மை அதன் 19ம் நூற்றாண்டு எழுத்தமைவு மற்றும் காலவேறுபாடுகள் முதலானவற்றால் கேள்விக்குறியாகின்றது. மேலும் இதே காலகட்டத்தில் ஒரு நாடார் நம்பூதிரியிடமிருந்து 12 அடி தொலைவிலும், நாயரிடமிருந்து 10 அடி தொலைவிலும் நிற்கவேண்டும் என திருவாங்கூர் சாதிக்கட்டுப்பாடுகளில் விவரிக்கப்படும்போது இந்த செப்பேட்டின் சங்கதி மாறுபட்டதாக உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. 1746-ல் மார்த்தாண்ட வர்மா தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குவர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான் எனவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் மார்த்தாண்ட வர்மனே நாடார் இனத்தைச் சேர்ந்தவன் எனும் பரப்புரை இப்பொழுது திரிபாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
அனந்த பத்மநாபனைப் பற்றிய ஆதாரங்களாக முன்வைக்கப்படும் இந்த செப்பேடு மற்றும் கதைப்பாடலில் கூட, மார்த்தாண்ட வர்மாவின் தளபதியாக அனந்தன் பணிபுரிந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தைப் பற்றி குறிப்பிடும் வேறு எந்த ஆவணங்களிலும், அனந்த பத்மநாபன் என்பவர் மன்னரின் தளபதியாக பணிபுரிந்ததாக எந்தவித சான்றும் இல்லை. ஆனால் வேணாட்டின் முதன்மைத் தளபதியாக அனந்த பத்மநாபன் பணிபுரிந்ததாக சாதியவாதிகள் தொடர்ந்து கோமாளித்தனமான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். குளச்சல் போரோடு அனந்தனை தொடர்புபடுத்திக் கூறுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.
நாயர் சமூகத்தினர் மன்னர்களுக்கு முதன்மை படை சேவையை அளிப்பவர்களாகவும், உள்ளூர் நிர்வாக அதிகாரங்களைப் பெற்றவர்களாகவும் இருந்தனர். தங்களுக்கென தனிக் களரிகளைக் கொண்டிருந்த நாயர்கள் தங்களது களரி ஆசானை குறுப்பு என்றழைப்பர். யுத்த காலங்களில் நாயர் படையுடன் பிற சமூகங்களிலிருந்தும் வீரர்கள் திரட்டப்படுவது வழக்கம். வேணாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் போர்க் காலங்களில் நாயர் படையினருக்கு அடுத்தப்படியாக மறவர் சமூகத்தினரிடமிருந்து அதிகப்படியான வீரர்கள் திரட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. வேணாட்டு மன்னர்கள் நெல்லைச் சீமையிலிருந்து மறவர் படைகளையும், அவர்களது குதிரைப் படையையும் கூடுதல் படைத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய பாணியிலான இராணுவக் கட்டமைப்பிற்கு திருவிதாங்கூர் மாறிய பிறகு பாரம்பரியமான களரிகள் வழக்கொழிந்து போய்விட்டன.
‘மார்த்தாண்ட வர்மா’ நாவல்
இன்றைக்கு அனந்த பத்மநாபன் என்ற பெயருக்குப் பின்னால் நாடார் என்ற பெயர் அழுத்தமாக கூறப்படுவதற்கு வேறு சில பின்னணிகளும் உண்டு. மார்த்தாண்ட வர்மாவிற்கும் தம்பிமாருக்குமிடையேயான வாரிசுரிமைத் தகராறை மையப்படுத்தி சி.வி.ராமன் பிள்ளை என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ‘மார்த்தாண்ட வர்மா’ எனும் பிரபல மலையாள நாவலானது 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவலில் அனந்த பத்மநாபன் எனும் கதாபாத்திரத்தை ஓர் அமானுஷ்ய வீரரைப்போல் நாவலாசிரியர் சித்தரிக்கிறார். மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய எதிரிகள் முற்றுகையிடும் போதெல்லாம் அங்கே அனந்த பத்மநாபன் உடனடியாகத் தோன்றி எதிரிகளைப் பந்தாடிவிடுவதாக கதை போகிறது. அனந்தனை நாவலாசிரியர் திருமுகத்துப் பிள்ளை என்பவரின் மகன் என்றும், ‘பிராந்தன் சாணான்’ என்ற புனைப் பெயரில் அனந்தன் மாறுவேடமிட்டு நடமாடியதாகவும் நாவலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்த நாவல் மூலம் அனந்த பத்மநாபன் என்பவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் அனந்தனை நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என வாதிடுபவர்களும் உள்ளனர்.
அனந்தனின் வம்சாவழிகள் ஒரு போலி!
குமரி மாவட்டத்திலுள்ள தச்சன்விளை பகுதியில் வாழ்ந்து வரும் அனந்தனின் வம்சாவழியினர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் அனந்தனுக்கு ஏராளமான நிலங்கள் தானமாக வழங்கப்பட்டதாகவும், அந்த நிலங்களை பிறர் அபகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். நிலங்களை மீட்டுத் தரக் கோரி அவர்கள் 1950 ஆம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பியிருப்பதை அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து அறிய முடிகிறது. அனந்தனின் வம்சாவழியைச் சேர்ந்ததாகக் கூறும் கெ.பி. வரதராஜன் என்பவர் அனந்த பத்மனாபனைக் குறித்து கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். அவரது கட்டுரைகள் ஆய்வுப் பூர்வமாக இல்லாமல் வெறும் புனைவுகளாகவே காணப்படுகின்றன.
குளச்சல் போருடன் அனந்தன் என்கிற கற்பனைக் கதாபாத்திரத்தைத் தொடர்புபடுத்திவிட்டால் ஐரோப்பியர்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் அவரைக் கொண்டுவந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இதற்காகவே கெ.பி.வரதராஜன் 1999 ஆம் ஆண்டு ‘குளச்சல் போர்’ என்ற பெயரில் ஒரு சிறு பிரசுரத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் அனந்தன் போரில் எதிரிகளை வீழ்த்திய விதம் குறித்து நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்:
"போர் முகத்தில் அனந்தனும் எட்டு ஆசான்களும் காட்டிய தீரச் செயலைப் பார்த்தால் இந்த வையகமே அரண்டுவிடும், நடுங்கிவிடும். அவ்வளவு மாயா மந்திர தந்திர ஜாலம் காட்டி டச்சுப் படையினரைக் குருடாக்கி விட்டனர். டச்சுப் படையினரின் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் செயலிழக்கச் செய்தனர். துப்பாக்கிச் சத்தமோ பீரங்கி சத்தமோ குளச்சல் போரில் கேட்டதில்லை.ஆசான்களின் ஆத்ம சக்தியினால் டச்சுப் படையினர் ஸ்தம்பனமாகி கற்சிலைகள் போன்று காட்சியளித்தனர். இப்போரில் யாரும் ரத்தம் சிந்தவோ பலியாகவோ இல்லை என்பது உறுதியிலும் உறுதியே. இதுதான் உண்மையுமாகும். கைதியாகப் பிடிக்கப்பட்ட டிலனாயின் மனமோ மாறிவிட்டது. குளச்சல் போரில் ஆசான்கள் காட்டிய மாயமந்திர ஜாலங்களைப் பார்த்து பிரமித்துவிட்டார்."
இப்படித்தான் வரலாறு எழுதுகிறோம் என்ற பெயரில் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குளச்சல் போரின்போது கடற்கரையில் மாட்டு வண்டியை சாய்வாக நிறுத்தி அதன்மீது பனந்தடியை வைத்து பீரங்கி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி டச்சுப் படையை திருவாங்கூர் படை ஏமாற்றியதாக, ஒரு தகவல் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த ஒரு தகவலை மட்டுமே கருவாகக் கொண்டு பனந்தடிகளை வைத்துதான் ஒட்டுமொத்த குளச்சல் போரே நடந்ததாக சாதிய அபிமானிகள் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு புதுப்புது கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அனந்த பத்மநாபன் தலைமையில்தான் பனந்தடிகளை வைத்து போர் நட ந்ததாகவும் சிலர் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர்.
குளச்சல் போர் நடைபெற்ற சமயத்தில் பதிவான டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் அறிக்கைகள், இரண்டு மாத காலம் போர் நடந்ததாகவும் இரு தரப்பினரும் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் கொண்டு கடுமையாக மோதிக்கொண்டதில் உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றன. ஆனால் இங்கே மாயாஜால மந்திர வித்தைகள் காட்டி போர் நடந்ததாகவும், பனந்தடிகளைப் பார்த்து பயந்து போய் டச்சுப் படைகள் சரணடைந்துவிட்டதாகவும் பாமரத்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் பள்ளி பாடத் திட்டத்தில் நாடார் சமுதாயத்தைப் பற்றி தவறான தகவல் இடம் பெற்றிருப்பதாக குற்றம் சாட்டிய சில சாதி அமைப்புகள், கடந்த 2012 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பல கண்டனக் கூட்டங்கள் நடத்தி சர்ச்சைக்குரிய பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தன. இத்தகைய கூட்டங்களில்தான் அனந்த பத்மநாபனைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டன. இந்த பின்னணியில்தான் அனந்த பத்மநாப‌னின் நினைவாக விழாக்களும் நடத்தப்பட்டன. விழாக்களை நடத்தியோர் குளச்சல் போரானது அனந்த பத்மநாபன் தலைமையில் நடந்த போராக தொடர் பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். தங்களது பிரச்சாரங்களுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரத்தையும் பெறவும் முயற்சித்தனர். குளச்சல் போரில் டச்சுப் படைகளை தோற்கடித்த அனந்த பத்மநாபனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித் தருமாறு தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் இந்தக் கோரிக்கை தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனந்த பத்மனாபனைப் பற்றி கூறப்பட்ட தகவல்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
குளச்சல் போரும் கட்டுக்கதைகளும் :
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் போரைப் பற்றி விதவிதமான கட்டுக்கதைகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஒரு புனிதராகக் கருதப்படும் தேவசகாயம் பிள்ளை என்பவர் குளச்சல் போரை நடத்தியதாகவும் கதைகள் கூறப்படுகின்றன. நாயர் சமூகத்தைச் சேர்ந்த இவர் நீலகண்ட பிள்ளை எனும் இயற்பெயரை உடையவர். இவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியதற்காக மன்னரின் கோபத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டவர். இவரைப் பற்றி வேத சாட்சியின் துயரப்பாடுகள் எனும் பழைய கதைப்பாடல் ஓன்று உண்டு. இந்த கதைப்பாடலில், நீலகண்ட பிள்ளை டச்சுத் தளபதி டிலனாயை குளச்சல் போரில் கைது செய்து பிடித்து வந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கதைப்பாடலை தழுவி எழுதப்பட்ட தேவசகாயம் பிள்ளை நாடகங்களிலும் இத்தகைய காட்சிகள் அரங்கேற்றப்பட்டதால், குளச்சல் போரானது தேவசகாயம் பிள்ளையால் நடத்தப்பட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக நம்பப்பட்டது.
மார்த்தாண்டவர்மா ஆட்சி காலத்தில் மறவர் படைத் தலைவராக இருந்த பொன்பாண்டித் தேவர் என்பவரே குளச்சல் போரில் வெற்றியைத் தேடி தந்தவர் என்பதே உண்மையாகும். இதற்கான சான்றுகள் சமகாலத்திலேயே டச்சு ஆவணங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவைகள் யாவற்றையும் இந்தப் பதிவிலேயே கீழே தந்திருக்கிறேன். மேலும் பொன்பாண்டியத்தேவரின் நினைவாக இருந்த இரண்டு கோயில்களில் ஒன்று அழிந்துபோக, மற்றொன்று இன்றும் அயினூட்டுத் தம்பிரான் என வணங்கப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு ‘மறக்கப்பட்ட மாவீரன் பொன்பாண்டித் தேவர் வீர வரலாறு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பொன்பாண்டித் தேவன் தலைமையிலான குதிரைப் படையினர் டச்சு தளபதி டிலனாயை கைது செய்து மார்த்தாண்டவர்மாவின் முன்பாக சரணடைய வைத்ததாகக் கூறுகிறது. திருவிதாங்கூர் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் குளச்சல் போரை சித்தரிக்கும் பழைய ஓவியம் ஒன்றிலிருந்து பொன்பாண்டித் தேவர் ஓவியம் பெறப்படுகிறது. இந்த புத்தகத்திற்குப் போட்டியாக அனந்த பத்மநாபன் ரசிகர்கள் ஒரு புத்தகத்தை எழுதி, அந்த ஓவியத்திலிருக்கும் உருவமானது அனந்த பத்மனாபனைக் குறிப்பதாகக் கூறி அதே உருவத்தை தங்களது புத்தகத்தின் அட்டையிலும் அச்சிட்டிருக்கிறார்கள்.
மண்டைக்காட்டைச் சேர்ந்த கெ.திரவியம் என்ற பேராசிரியர் எழுதிய ‘டச்சுப்படை வென்ற குமார உதய மார்த்தாண்டன் நாடார்’ எனும் நாவல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. தனது முன்னோரான உதய மார்த்தாண்டன் என்பவரே குளச்சல் போரை நடத்தி டினலாயை கைது செய்ததாக கெ.திரவியம் நம்புகிறார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த அவரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தனக்கு விருப்பமான விதத்தில் ஒரு வரலாற்றைக் கட்டமைத்து அதை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். நாவலாசிரியரிடம் வெளிப்படும் அதீதமான சாதிய சார்பும், மிதமிஞ்சிய கற்பனைகளும் நகைச்சுவை மிகுந்தவை. ஏதேனும் காமெடி நாவல் வாசிக்க விரும்புபவர்கள் கட்டுரைத் தன்மையுடன் இருக்கும் இந்த நாவலை ஒருமுறை சிரமப்பட்டு வாசித்துப் பார்க்கலாம்.
குளச்சல் கடற்கரையில் வசிக்கும் மீனவ சமூகத்தினரும் தங்களது முன்னோர்கள் இந்த போரில் முக்கிய பங்கு வகித்ததாக கட்டுரைகளை எழுதி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மெல்வின் வினோத் என்பவர், மீனவர்களின் கடற்படை டச்சு கப்பல்களை எதிர்த்து கடலுக்குள் சென்று போர் புரிந்ததாகவும், மீனவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத டச்சுப் படையினர் மீனவர்களிடத்தில் சரணடைந்ததாகவும் புதுப் புது கதைகளை பரப்பி வருகிறார். குமரி மாவட்டத்தில் குளச்சல் போர் குறித்து பரப்பப்படும் கட்டுக்கதைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், நாகர்கோவிலைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார் எழுதிய ‘குளச்சல் போர் – கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ எனும் நூலை வாசித்துப் பார்க்கலாம்.
குளச்சல் போரும் ஆதாரங்களும் :
குளச்சல் போர் நடைபெற்ற காலகட்டத்தில் திருவிதாங்கூர் தரப்பினர் போரைக் குறித்து தெளிவான விபரங்களை பதிவு செய்திருக்கவில்லை. ஒரு சில ஓலைச்சுவடி குறிப்புகள் உள்ளதாக சங்குண்ணி மேனன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தினர் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை தங்களது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆவணங்களிலும் இந்த போரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. திருவிதாங்கூருக்கும் டச்சுவுக்கும் இடையேயான உறவினைக் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய எம்.ஒ.கோஷி மற்றும் எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோர் ஐரோப்பியர்களது ஆவணங்களிலிருந்து குளச்சல் போரைப் பற்றிய தகவல்களை ஓரளவுக்கு அறியத் தருகின்றனர். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்தும் நெதர்லாந்து நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நெதர்லாந்தைச் சேர்ந்த மார்க் டி லெனாய் எனும் வரலாற்றாளர் டச்சு ஆவணங்கள் அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக் காலத்தை ஆய்வு செய்து புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் குளச்சல் போரைப் பற்றிய விரிவான தகவல்களை அறியத் தருகிறார். குளச்சல் போர் குறித்து மார்க் டி லெனாய் எழுதிய அத்தியாயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.
டச்சு தரப்பினரின் பதிவுகள்படி குளச்சல் போர் குறித்து கூறப்படுவது யாதெனில், 1741 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 அன்று டச்சுப் படையினர் கொச்சி தலைமைத் தளபதி கொலேனஸ் தலைமையில் குளச்சலில் தரையிறங்கி அருகாமையிலுள்ள இடங்களை வசப்படுத்திக் கொண்டனர். குளச்சல் கடற்கரையில் டச்சுப் படையினர் சிறிய கோட்டை ஒன்றையும் கட்டியிருக்கின்றனர். கொலேனஸ் தலைமையிலான ஒரு படை அணியினர் கொச்சிக்கு திரும்பிச் சென்ற பிறகு, ரிஜிட்டல் என்பவர் குளச்சலில் தங்கியிருந்த படையினருக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1741 ஆம் ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலிருந்து திருவிதாங்கூர் படை தீவிரமான தாக்குதலைத் தொடுத்து குளச்சலை நோக்கி முன்னேறியிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் தங்களது வணிகப் போட்டியாளரான டச்சுப் படையை தோற்கடிக்க பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிமருந்து உள்ளிட்ட தளவாடங்களை திருவிதாங்கூருக்கு பெருமளவில் அளித்து வணிக ஆதாயங்களைப் பெற்றிருக்கின்றனர். ஐரோப்பிய கம்பெனிகளிலிருந்து விலகி வந்த 24 ஐரோப்பிய வீரர்களை மார்த்தாண்டவர்மா தமது படையில் இணைத்து ஐரோப்பிய பாணியில் தமது இராணுவத்தைக் கட்டமைத்திருக்கிறார். 1741, ஆகஸ்ட் 2 அன்று நாயர் படை மற்றும் மறவர் படையினருடனான யுத்தத்தில் டச்சுத் தளபதி ரிஜிட்டல் கொல்லப்பட்ட பிறகு டச்சுப் படை கட்டுக்கோப்பை இழந்திருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று டச்சு தரப்பினரின் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட டச்சுப் படையினர் மார்த்தாண்ட வர்மாவின் முன்பாக சரணடைந்திருக்கின்றனர்.
திருவிதாங்கூர் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய வீரர்களுக்கு டியுவன்சாட் என்பவர் தலைமை தாங்கி திருவாங்கூர் படையை வழிநடத்தியிருக்கிறார். டியுவன்சாட் திருவிதாங்கூர் படையினருக்கு பயிற்சி அளித்த தகவலை, மலபாரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தை குறித்து ஆய்வு செய்த எ.கல்லெட்டி மற்றும் பி.சி. அலெக்சாண்டர் ஆகியோரும் தங்களது புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.
குளச்சலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து வெளியேறி திருவிதாங்கூர் படையில் இணைந்து கொண்டவரே எசுதாக்கியஸ் டி லெனாய். டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தில் ஒரு கடைநிலை வீரராக வாழ்க்கையைத் துவக்கிய இவர், பொன் பாண்டியத்தேவரால் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். 1744 ஆம் ஆண்டு டியுவன்சாட் மரணமடைந்த பிறகு, திருவிதாங்கூரின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குளச்சல் போர் குறித்து கதை எழுதுபவர்கள் கூறுவது போன்று, அனந்த பத்மநாப நாடார் என ஒருவரும் இல்லை.ஆனால் இங்கே டிலனாயை கைது செய்தது தங்களது சாதியைச் சேர்ந்தவர்தான் என சாதிப்பதற்கு சாதியவாதிகள் மெனக்கெடுகிறார்கள். சாதிய வரலாறு எழுதுபவர்களுக்கு ஆதாரங்களைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லை. கற்பனை மட்டும் அவர்களுக்கு போதுமானது.
உதவிய நூல்கள் :
1. குளச்சல் போர் , பதிப்பாசிரியர் – எஸ்.ஆன்றனி கிளாரட் , 2017.
2. குளச்சல் போர் ( 1740 – 1741 ), மார்க் டி லெனாய், தமிழாக்கம் – திருத்தமிழ் தேவனார், 2019.
3. குளச்சல் போர் : கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும், திருத்தமிழ் தேவனார், 2018.
4. THE KULASEKHARA PERUMALS OF TRAVANCORE : History and state formation in Travancore from 1671 to 1758, MARK DE LANNOY, 1997.
5. A History of Travancore from the Earliest Times, P.SHUNGOONNY MENON, 1878.




















நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...