Sunday, July 26, 2015

தமிழ்த் தேசியமும் ஜனநாயக பிரதிநிதித்துவமும்


 தமிழ்த் தேசியத்தில் சாதிகளுக்கு எவ்வாறு பிரதிநிதித்துவம் தருவது?

இந்தக் கேள்வியைக் கேட்கும் முன்பாக சாதிக் கட்சிகள் ஏன் முளைத்தன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சாதிகளை ஒழிப்பதாக கூறிக் கொண்ட திராவிடக் கட்சிகள் பெரும்பான்மை சாதியினரை மகிழ்வித்தல், மொத்தமாக வாக்குகளை பெற சிறுபான்மையினரை சாந்தப்படுத்துதல் என்ற இரண்டு யுக்திகளை கையாண்டனர்.

இதில் இந்த இரண்டு வகையிலும் வராத பிரிவினர், சாதிகள் தாங்கள் அரசியல் அதிகாரத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தனர். அதேபோல மேற்படி யுக்தியின் மூலம் அரசியல் அதிகாரம் பெற்ற சிலரும் திராவிடக் கட்சிகளுக்குத்தான் பிரதிநிதிகளாக இருக்கின்றனர் என்பதும் ஒரு சூழலில் அனைத்து தரப்பினராலும் உணரப்பட்டது.

அப்போதுதான் சாதிக் கட்சிகள் முளைக்கத் துவங்கின. இன்று அதே திராவிடக் கட்சிகள் நாங்கள் இந்த சாதிக்கு இன்னின்ன நன்மைகள் செய்தோம் என்று சொல்லி அந்தச் சாதியைச் சேர்ந்த மக்களை கவர முயன்று வருகின்றன.

இதுபோன்ற ஒரு சூழலில் தமிழ்த் தேசியத்தில் என்னவிதமான அரசியல் எடுபடும் அல்லது பொருத்தமானதாக இருக்கும்?

ஒன்று தங்களை தமிழர்களுக்கான பொதுவான அரசியல் கட்சிகளாக காட்டிக்கொள்ள விரும்பும் அரசியல் கட்சிகள் அனைத்து சாதி, மதங்களுக்கும் சரியான பிரதிநிதித்துவத்தை தரவேண்டும். அது எப்படி என்றால் ஒரு தொகுதியில் எந்தெந்த மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்று அறிந்து அந்தத் தொகுதியை அந்த மக்களைச் சார்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும். திராவிடக் கட்சிகள் இதுபோன்ற ஒரு முறையைத்தான் பின்பற்றுகின்றன. ஆனால் ஒட்டுமொத்த அதிகாரம் அவர்களிடம் இருப்பதால் இந்த முறை ஏறக்குறைய தோல்வி பெற்ற ஒன்றாகவே உள்ளது.

எனவே இறுதியில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தலைமைப் பதவியை பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த ஒருவருக்கே கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். எடுத்துக்காட்டாக ஒரு கட்சி மக்கள் தொகை அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தி அதிக இடங்களை கைப்பற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அவ்வாறு கைப்பறும் தொகுதிகளில் அதிக தொகுதிகளை ஒரு குறிப்பிட்ட சாதியினரும், அடுத்தடுத்த இடங்களில் வேறு இரு சாதிகளும் வருகின்றன என்று வைத்துக் கொள்வோம். தற்போது அதிக இடங்களைப் பெற்ற சாதியனருக்கே அதிக அதிகாரங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அக்கட்சியின் தலைமைப் பதவியே அந்த சாதியினருக்கே கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்த இடம்தான் சீமான் போன்றோருக்கு சிக்கலை ஏற்படுத்தும் இடம். அதற்கு சாதிக் கட்சிகளே நேரடியாக அரசியலில் ஈடுபடலாம் என்று சொல்லலாம்.
இரண்டாவது முறை சாதிக்கட்சிகள் நேரடியாக அரசியல் செய்வதாகும். இந்த முறை எப்படி இருக்கும்? மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியும் இந்தந்த சாதியிருக்குத்தான் என்று ஒதுக்கிவிடலாம். தற்போதைய தனித் தொகுதிகள் இப்படித்தான் உள்ளன. அந்தந்த சாதியினரைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது ஒருவரே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம்.

இந்த முறையில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு சாதிக் கட்சியும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள மற்றொரு சாதிக் கட்சியும் கூட்டணி வைத்துப் போட்டியிடலாம். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளை தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம் அல்லது சுழற்சி முறையில் வகிக்கலாம்.

பொதுவாக சாதிக் கட்சியினர் கெட்டவர்கள், திறமையில்லாதவர்கள் என்ற பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு திரிப்பு பிரச்சாரமே. அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்போது நல்லவர்கள், திறமையானவர்களே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

பெரும்பான்மை சாதிகளைச் சேரதவர்களுக்கும் அதிகாரங்களை அடுத்தடுத்து உள்ள பதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள சாதியினருக்கு நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளை ஒதுக்கலாம். இதுபற்றி மேலும் விரிவாக விவாதிப்போம். 

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...