Tuesday, January 22, 2013

ஜெயலலிதாவின் மற்றொரு நாடகம்



கர்நாடகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து காவிரி நீரை தராத காரணத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா நஷ்டஈடு கேட்டு மீண்டும் ஒரு வழக்குத் தொடர உத்தரவிட்டுள்ளார்.

இது எப்படி என்றால் பெற்ற தாயை கற்பழித்தவனிடம் நஷ்டஈடு கோருவதற்கு சமமாகும்.

உண்மையில் ஜெயலலிதா தமிழர் உரிமை மீது அக்கறை கொண்டவராக இருந்தால், அவர் இதையே சாக்காக வைத்து உச்ச நீதி மன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.

உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு மதிக்கப்படாத நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்ற அரசியல் சட்டம் மீதான கேள்விகளை எழுப்பி உச்ச நீதி மன்றத்தின் அரசிலயமைப்பு பிரிவில் வழக்குத் தொடர வேண்டும்.

இதையெல்லாம் விட்டு விட்டு நஷ்டஈடு கோரினால் அது யாரை ஏமாற்ற என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...