Wednesday, January 29, 2014

மாற்றுமொழி வழித்தோன்றல்கள்


ஈழ இன அழிப்புக்குப் பிறகு இதற்கு காரணம் யார் என்று தேட ஆரம்பித்த தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் மாற்று மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருப்பதை உணர்ந்துகொண்டர்.

இது அவர்கள் மீது வெறுப்பேற்றியது. எனவே தமிழர்களின இனப் பற்று இனச் சுத்திகரிப்பு என்ற விரும்பா நிலையை எட்டியுள்ளது. அவர்கள் மாற்று மொழிபேசுவோரை வந்தேறிகள் என்று சுட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தவறான போக்காகும்.
ஆட்சி அதிகாரம் என்று வரும்போதுதான் நாம் மற்றுமொழி பேசுவோரை “வந்தேறி“ என்று பார்க்க வேண்டியுள்ளது. வந்தேறி என்ற வார்த்தைக்கு பதிலாக மாற்று மொழித் தோன்றல்கள் என்று சொல்லலாம். மாற்று மொழிபேசுவோர் தலைமை அரசியல் அதிகாரத்தை தமிழரிடம் விட்டுவிட வேண்டும். 
ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் சிறு எண்ணிக்கையாளர்கள் காரணமாக ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டோரை ஒரே மாதிரியாகப் பார்ப்பது தவறு. தமிழ் நாடு தனி நாடு அந்தஸ்தைப் பெற்றாலும் அது காலம்காலமாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் மாற்று மொழிபேசுவோருக்கும் தாயமாகவே திகழும், திகழ வேண்டும்.

எனவே மாற்று மொழி பேசுவோரை வந்தேறிகள் என்று சுட்டுவது அவர்களின் மனதைப் புண்படுத்தும். தமிழர்கள் அவர்களை மாற்றுமொழி வழித்தோன்றல்கள் அல்லது மாற்று இன வழித்தோன்றல்கள் என்று குறிப்பிடுவது நாகரீகமாகவும் மனிதாபிமானம் கொண்டதாகவும் இருக்கும்.


உங்கள் கருத்து என்ன?

Wednesday, January 22, 2014

உறுதிமொழி


தேசத்திற்காகவும் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் பாடுபட்ட
உங்கள் கொள்கையையும் சிந்தனையையும்
ஏற்றுக் கொண்டு உறுதியோடு இருக்கிறேன்.

அரசியல் சதியால் பரப்பப்பட்ட உங்கள் மீதான
சாதிச் சாயத்தை அழிக்க மக்களுக்கு உண்மையான
உங்கள் வரலாற்றை ஊர்தோறும் சென்று எடுத்துரைப்பேன்.

ஏழை எளியவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளையும் செய்து
அநீதிகளை உங்கள் வழியில் எதிர்த்துப் போராடுவேன்.

உங்கள் பெயரைச் சொல்லி எந்தத் தீங்கும் செய்ய மாட்டேன் என்றும்

உங்கள் பெயரைப் பயன்படுத்தி தவறாக பொருள் ஈட்டமாட்டேன் என்றும்

உங்களை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை தோழர்களை நான் இதயப்பூர்வமாக நேசிப்பேன் என்றும்

உங்கள் பெயரை தேவையில்லாத செல்வாக்கிற்காகவும் விளம்பரத்திற்காகவும் பயன்படுத்த மாட்டேன் என்றும்


என்னுடம்பில் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை உங்களுக்காக உண்மையாக உழைப்பேன் என்று சத்தியம் செய்கிறேன். 

(கடந்த 19ம் தேதி பசும்பொன்னில் தேவர் சமாதியில் வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட படம்)

சாதிப் பெயரும் திராவிட அரசியலும்


ஒரு மனிதனின் உடலில் இரு கை, இரு கால், இரு கண் என இருக்கிறது. 
எதிர்பாரத விதமாக விபத்தை சந்திக்க நேரிடுகிறது விபத்தில் வலது கையை ஒருவன் இழக்கிறான். இன்னொருவன் வலது காலை இழக்கிறான் இருவரும் மருத்துவமனையில் பேசிக் கொள்கிறார்கள். 

ஒருவர் சொல்கிறார், உடைஞ்சதுதான் உடஞ்சது இடது கை உடைஞ்சதா பரவாயில்லை.  மற்றொருவர் என்ன பேசியிருப்பார், அவரும் இடது கால் உடைஞ்சாலும் பரவாயில்லை என்றுதான் பேசியிருப்பார் .

ஒரு பெண் பிரசவ வலியால் துடித்து, அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறாள்.  பரிசோதித்த மருத்துவர் சொல்கிறார். தாய் - சேய் இருவரில் ஒருவர்தான் பிழைப்பார். உங்களுக்கு தாய் வேண்டுமா, சேய் வேண்டுமா என கேட்பார். ஆசையாய் எதிர்பார்த்து காத்திருந்த பிள்ளையை பறிகொடுப்பது சிரமம்தான். ஆனாலும் மனைவியை இழக்க முடியுமா ? இந்நிலையில் சரியான முடிவாக, சரி மனைவியை காப்பாற்றுங்கள் என்றே பலர் கூறுவர். 

ஜாதி - மதம் நமக்கு இருந்தாலும், குடும்பம் என்ற கட்டமைப்பிற்காக மனைவி முக்கியம் என முடிவெடுப்பது போல, நாம் நம் இன நலனை முதல் நலனாக எடுத்துக் கொள்வது மிக முக்கியம். சாதிதான் முதன்மை என நினைக்கும் தமிழனும் மதம்தான் முதன்மை என எண்ணும் தமிழனும் இதை நன்கு உணர வேண்டும். உணர்வதோடு நில்லாது அதன்படி செயல்படுவது மிக மிக முக்கியம் ஏதாவது ஒன்றை முதன்மைப் படுத்தாது நாம் ஒன்று கூட முடியாது. 

இந்தியா முழுக்க ஜாதிப் பெயர்களுடன் பல தலைவர்கள் உலா வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அவர்களது பெயருக்கு பின்னால் ஜாதிப்பெயரைத் போடுவதில்லை. இப்படி அவர்கள் போடததால் இனம் நன்மை அடைந்ததா, தீமை அடைந்ததா என்ற ஆய்வு தேவைப்படுகிறது. பிற மாநிலங்களில் ஜாதிப்பெயருடன் உள்ள தலைவர்கள் சாதிப் பற்றுடன் என்னென்ன செய்தார்கள் ? ஜாதிபெயரிடாத தமிழக அரசியல்வாதிகள் என்னென்ன செய்தார்கள் என்ற ஆய்வும் தேவைப்படுகிறது 

தமிழனை அழிக்க திராவிடம் பயன்படுத்திய கருவிகளில் ஜாதிப் பெயர் வேண்டாம் என்பதும் ஒன்று. ஈழப்படுகொலை நடந்து. அது ஏன் நடந்தது என்ற ஆராய்ச்சிக்கு பிறகு வைகோ யார்? விஜயகாந்த் யார்? கருணாநிதி யார்? என்று தெரிய வருகிறது. ஜாதிப் பெயருடன் இவர்களது பெயர் இருந்திருக்குமானால் இந்த சிக்கல் இருந்திருக்காதல்லவா?

தனக்கு இதுதான் நன்மை என கருதி சாதியை மறைத்து தமிழனாக வலம் வந்த விஜகாந்துக்கு, தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வார்த்தைக்கு வார்த்தை வாய் கிழியும்படி சொன்ன விஜயகாந்துக்கு இது மட்டும் ஏன் தெரியவில்லை?

தேமுதிக, தேசிய முற்போக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைப்பது ஏன்? ஆக ஜாதியை மறைப்பதும் தமிழனை ஏமாற்ற... தமிழர் என்ற பெயரை மறைப்பதும் தமிழனை ஏமாற்ற ... 

ஒடுக்கப்பட்ட தமிழ் சாதியை ஆதித் தமிழர் என்றழைக்காது அவர்களை தமிழரே இல்லை என்பது போல ஆதி திராவிடர் ஆக்கியது சரியா? உண்மையாக இனத்தை ஒருவன் நேசித்தால் ஆதிதமிழர் என்றோ பழந்தமிழர் என்றுதானே வைத்திருக்க வேண்டும்? அவர்களை மட்டும் இதர தமிழர்களிலிருந்து திட்டமிட்டு பிரிக்கும் சூழ்ச்சி ஆகாதா? 

இனத்தை ஒன்று சேர்க்க புரட்சி செய்யத்தவறிய திராவிடம் இனத்தை பிப்பதில் பெரும் புரட்சி செய்துள்ளது. 

ஜாதியை வைத்துதான் இவன் தமிழன் இவன் தெலுங்கன் இவன் மலையாளி என அடையாளம் காட்ட முடியுமே தவிர, வேறு எப்படி முடியும்? இவன் தமிழன் என நிரூபிக்க முடியாது. ஜாதிய கட்டமைப்பிற்குள் இருந்தாலும் மதக் கட்டமைப்பிற்குள் இருந்தாலும் இனம் என்று வரும்போது எனக்கு முதன்மை என் இனம் என எவரெவர் தீர்க்கமாக முடிவெடுக்கின்றனறோ அவர் தன் பெயருக்கு பின்னால் சாதி அடையாளத்தை காட்டிக் கொண்டாலும், இனத்திற்கு சிக்கல் வரும்போது இன நலனையே முதன்மை நலனாக எண்ணிச் செயல்படுவர்.

- அதியமான், தலைவர், தமிழர் முன்னேற்றக் கழகம்

https://www.facebook.com/athiyamanthamuka/posts/646837568705627


Tuesday, January 21, 2014

தமிழருக்கான மதச் சட்டம்

            1. தமிழருக்கான மதச் சட்டம்

            மதம் என்பது ஒரு முக்கியமான சமுதாய அமைப்பாக உள்ளது. உலகில் மனிதன் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே மதங்கள் உருவாக்கப்பட்டன. அவை மனித குலம் மேம்பட பல்வேறு கருத்துக்களைச் சொல்லியுள்ளன.

            ஆனால் காலம் செல்லச் செல்ல அதில் பல திரிபுகள், பிரிவுகள் ஏற்பட்டன. எனவே மதங்களின் பெயரால் விரும்பத்தகாத செயல்களும், பல அழிவுகளும் நடந்தேறின. எனவே மதத்தில் எந்த அளவு சிறப்புக்கள் உள்ளனவோ அந்த அளவுக்கு கேடுகளும் உள்ளன.

            எனவே மதத்தை முறைப்படுத்துவது அவசியமாகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மதச் சட்டங்களைக் கொண்டுள்ளன. ஒருசில நாடுகள் தங்களுக்கென ஏதாவது ஒரு மதத்தை தழுவியுள்ளன. அவ்வாறு இருக்கும்போது அந்த மதத்தின் கொள்கைகள் அந்த நாட்டு மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

            அங்கு வாழும் மாற்று மதத்தவர் அல்லது சிறுபான்மை மதத்தவர் அந்த கொள்கையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மதம், மதமாற்றம், மதப் பிரச்சாரம் போன்றவற்றைப் பற்றி தெளிவான கருத்துக்களும் சட்டங்களும் இருப்பது அவசியமாகிறது. தமிழர்கள் இந்த விஷயத்தில் தங்களுக்கென ஒரு கொள்கை, சட்டத்தை இயற்றிக் கொள்வது நல்லது.

            அந்த வகையில் இந்த மதமாற்றச் சட்ட வரைவை எழுதுகிறேன்.

            எந்த ஒரு நாடுமே மதச் சட்டங்களை பின்பற்றக் கூடாது. ஆனால் மத நம்பிக்கைகளைப் பொறுத்து சில விலக்குகளை அளிக்க வேண்டும். அந்த விலக்குகளும் ஒட்டுமொத்த சமுதாய நலனை கருத்தில் கொண்டவையாக இருக்க வேண்டுமே தவிர அந்த மதத்தினர் அதை தவறாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கக் கூடாது.

            மதங்களின் அடிப்படை நோக்கம் நாட்டு நலன், பல சமுதாயங்களின் கூட்டு நலன், ஒரு சமுதாயத்தின் நலன், குடும்ப நலன், தனிநபர் நலன்களை சார்ந்து அவற்றை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு நிலையில் இந்த நலன்கள் பாதிக்கப்பட்டால் அந்த இடத்தில் மதத்தின் தேவை தோல்வியுற்றது என்று கருத்தில் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            1.1 மதச் சுதந்திரம்

            பண்டைத் தமிழரின் வாழக்கை முறை மதச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழர்கள் பொதுவாக மதப்பிரிவுகளை, மதக் கருத்துக்களை, மாற்று மதக் கருத்துக்களை ஏற்பவர்களாக, மதச் சஹிப்புத்தன்மை கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர், இருந்து வருகின்றனர். எனவே அவர்கள் தொடர்ந்து மதச் சுதந்திரத்தை பின்பற்றுவதே நல்லது.

            ஆனால், இந்த மதச் சுதந்திரத்தை எந்த தனிப்பட்ட மதமும் சுரண்ட, தவறாக பயன்படுத்த  முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவதாக குற்றச் சாட்டு எழுந்தால், குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவ்வாறு ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழரின் நலன் கருதி, இந்த மதச் சுதந்திரத்தை தக்க வைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

          1.2 மத ஒழுங்குமுறை வாரியம் (அமைச்சகம்)

            தமிழர் தமக்கென மத ஒழுங்குமுறை வாரியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த வாரியம்தான் அனைத்து மதங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும். இந்த வாரியத்தில் எல்லா மதப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவும் அதன் கீழாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு பிரதிநிதிகள் குழுவும் இருக்க வேண்டும். இந்த பிரதிநிதிகள் குழுவில் அந்தந்த மதப் பிரிவுகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

            அந்தப் பிரதிநிதிகளை அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்த மதத்தின் பிரதிநிதிகுழு வாரியத்திற்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். அதாவது கிறிஸ்தவ மதத்தில் 3 பிரிவுகள் உள்ளன என்றால் இந்த 3 பிரிவுகளும் தங்களுக்குள் ஒரு பிரதிநிதிகள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

            இந்த பிரதிநிதிகள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மத ஒழுங்கு வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். மேற்படி 3 கிறிஸ்தவ பிரிவுகளும் தங்களுக்கான பிரதிநிதிகளை அப்பிரிவைச் சேர்ந்த மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த 3 பிரிவுகளுமே தங்களுக்குள் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தி அவர்களில் ஒருவரை வாரியத்துக்கான பிரதிநிதியை நேரடியாக தேர்ந்தெடுக்கலாம். இதுவே விரும்பத் தக்கதும் ஆகும். மற்ற மதங்களும் இதே போன்ற தேர்தல் முறையை பின்பற்ற வேண்டும்.

            1.3 மதப்பிரச்சார உரிமை

            ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவருக்கும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ய உரிமையுள்ளது. மதப் பிரச்சாரமானது தங்கள் மதத்தில் உள்ள நல்ல தன்மைகளை மற்றவர்களுக்குச் சொல்லி அதன் மூலம் அவரை ஆன்மீக ரீதியில் பயனடையச் செய்வது என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதேநேரத்தில் ஒருவரது பிரச்சாரம் மாற்று மத நம்பிக்கைகள், கொள்கைகளை தாக்குவதாக அமையக் கூடாது. வேறு மதங்களில் உள்ள கருத்துக்களை ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால் அதைக் குறை கூறுவதாக, இழித்துப் பேசுவதாக இருக்கக் கூடாது.

            ஒருவரது மதப் பிரச்சாரம் மாற்று மத நம்பிக்கையுள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக அமைந்தால், அதனால் அசாதாரண சூழல் ஏற்பட்டால் அந்த பிரச்சாரகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சாரகர்கள் மதங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களை பதிவு செய்து கொண்ட பின்னரே பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒருவர் அவ்வாறு செய்யாமல் பிரச்சாரம் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            அவ்வாறு பிரச்சாரம் செய்பவர் தொடர்ந்து இருமுறைக்கும் மேலாக மதத் துவேஷத்தை தூண்டுவதாக புகார் செய்யப்பட்டால் அவரது பிரச்சார உரிமை பறிக்கப்பட வேண்டும்.

            1.4 மதமாற்ற உரிமை

            ஒரு தனிநபர் தனது விருப்பத்திற்கேற்ப தனது மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமையுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக அவர் தனது மதத்தைப் பற்றி முழுவதும் அறிந்திருக்க வேண்டும். அதற்காக அவர் மத வாரியம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒரு தனிநபர் ஒரு மதத்தில் (1) அடிப்படை அறிவு, (2) பொது அறிவு, (3) மதப்புலமை என மூன்று நிலைகளில் மத அறிவைப் பெறலாம்.

            ஒரு மதத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தை அந்த மதத்தைச் சேர்ந்ததாக கருதப்படும். அந்தக் குழந்தை 18 வயதை அடையும்போது மத அடிப்படை அறிவுத் தேர்வை எழுத வேண்டும். அவ்வாறு எழுதாதபட்சத்தில் அவர் மத அறிவற்றவராக கருதப்படுவார். மத அறிவற்றவரால் மதச் சட்டங்களின் கீழான நன்மைகளை கோர முடியாது. அடிப்படை தேர்வில் வெற்றி பெற்றிருந்தால்தான் ஒருவரால் மதம் சார்ந்த நெறிகளை பின்பற்ற, நன்மைகளை பெற இயலும், விலக்குகளை பெற இயலாது. அவ்வாறு உள்ள ஒரு நபர் தொடர்பான வழக்குகள் பொதுச் சட்டத்தின் கீழாகவே விசாரிக்கப்பட வேண்டும்.   

            ஒரு மதத்தில் இருப்பவர் ஒவ்வொருவரும் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம். பொது அறிவுத் தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரால் மட்டுமே மாற்று மதத்தை தழுவ முடியும். அதுவே மத மாற்றத்திற்கான தகுதியாகும். அதேபோல அவர் எந்த மதத்திற்கு மாறுகிறாரோ அந்த மதம் பற்றிய அடிப்படை அறிவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பின்னர் பொது அறிவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன்பின்னர் இரண்டு மதங்களில் உள்ள கருத்துக்களைக் கூறி தன்னை கவர்ந்த கருத்துக்களை கூறி தனது மதத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இடையிலான கால அளவு 1 வருடமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவரது மத மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படாது.

            மதப்புலமை தேர்வில் வெற்றி பெற்றவரே ஒரு மதத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யும் தகுதி பெற்றவராவார். அவர் ஒரு மதத்தில் தேர்வு பெற்றால் அந்த மதம் பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும். மாற்று மதங்களை ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் மாற்று மதங்களின் 3 நிலைத் தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும்.

                        1.5 தனிநபர் மதப் பிரச்சாரம், புதிய மதக் கருத்துக்கள், புதிய மதங்கள்

            மேற்படி பிரச்சாரம் அல்லாமல் ஒரு தனிநபர் ஒரு மதம் சார்ந்த, ஆனால் தனக்கென ஒரு தனிக் கொள்கைகளை, அல்லது புதிய கொள்கைகளை உருவாக்கி அவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள அவருக்கு உரிமையுள்ளது.

            உதாரணமாக, இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இந்து மதம் சார்ந்த, அதேவேளையில் தனக்கென ஒரு தனிப்பட்ட கொள்கையை உருவாக்கி அதனை பிரச்சாரம் செய்யலாம். இவர் முதலில் இந்து மதத்தில் உள்ள 3 கட்ட தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன் பின் தனது கருத்துக்களை தொகுத்து அதனை இந்து மதப் பிரதிநிதிகளின் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும்.  அந்தக் குழு அதை அங்கீகரித்த பின்னரே அதனை வெளியிட வேண்டும்.  

            அதன் பின் அவர் தனது தனிப்பட்ட, ஆனால் இந்து மதம் சார்ந்த பிரச்சராத்தை முன்னெடுக்கலாம். அவரது பிரச்சாரம், செயல்பாடு அதே மதத்திற்கு எதிராக அல்லது மாற்று மதங்களுக்கு எதிராக அமைவதாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

            அவ்வாறு பிரச்சாரம் செய்யும் அந்த நபருக்கு குறிப்பிட்ட காலக் கெடு கொடுக்க வேண்டும். அதன் பின் அவருக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கைப் பொறுத்தே அவரது பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அவரது கருத்து புதிய கருத்தாக மட்டுமே அங்கீரிக்கப்பட வேண்டும்.

            ஒரு தனிநபருக்கு ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிக்கும் உரிமையுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உள்ள மதங்களின் கருத்துக்களை தெளிவுறக் கற்றிருக்க வேண்டும். அதாவது அவர் ஏற்கனவே உள்ள மதங்களின் 3 கட்ட தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன் பின் உலகில் உள்ள பொதுவான மதங்களுக்கான ஒரு பொதுத் தேர்வை எழுத வேண்டும்.

            அந்தத் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் அவர் தனது புதிய மதம் பற்றிய கருத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு அதனை மதப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கருத்துக்களை மத அறிஞர்கள் சர்ச்சை செய்து தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அந்தக் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அந்த மதத்தை நிறுவ, அதன் கருத்துக்களைப் பரப்ப அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவரது கருத்துகளுக்கு மக்களிடையே உள்ள ஆதரவை பொறுத்தே அவரது மதத்திற்கான பிரச்சாரத்திற்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். அவரது பிரச்சாரம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            1.6 பொதுச் சட்டம், மதச் சட்டங்கள்

            ஒரு நாட்டில் மதச் சட்டங்கள் இருக்கக் கூடாது. ஆனால் ஒரு மதத்தவர் தங்களுக்குள் மதச் சட்டங்களைப் பின்பற்றலாம். அந்தச் சட்டம் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்தச் சட்டம் மாற்று மதத்தவரை கட்டுப்படுத்தாது. ஆனால் அந்தச் சட்டம் மொத்தத்தில் நாட்டு நலன், சமுதாய நலன், குடும்ப நலன், தனிநபர் நலனை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். எங்காவது ஓரிடத்தில், ஒரு பிரச்சனையில் இது இந்த நலன்களை பாதிப்பதாக இருந்தால் பொதுச் சட்டமே செல்லுபடியாகும்.

            ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் மதச் சட்டங்களை தங்கள் நாட்டிற்கு ஏற்ற வகையில் தொகுக்க வேண்டும். அவ்வாறு தொகுக்கும்போது அவற்றில் உள்ள முரண்களை விலக்கிவிடலாம். இதனை நாட்டின் நலன் கருதி செய்ய வேண்டும். ஒரு நாட்டுக்கு எதிரான மதச் சட்டங்கள் இருக்கக் கூடாது. அது போன்ற சட்டங்களுக்கு ஏன் விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை அந்த மதத்தின் பிரதிநிதிகள் அந்த மதம் சார்ந்த மக்களுக்கு விளக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு மதமும் மாற்று மதங்கள்/ அம்மதங்களைப் பின்பற்றுபவர்களைப் பற்றிய கருத்தை வெளியிட வேண்டும். இது ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைப் பற்றி தவறாக பிரச்சாரம் செய்வதை தடுக்க உதவும். மேலும் அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கும்.

            1.7 மதம் சாராத உரிமை

            ஒரு தனிநபர் எந்த மதத்தையும் பின்பற்றாமல் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம். ஆனால் அந்த தனிநபரின் உரிமைகள், கடமைகள் மொத்தத்தில் நாட்டு நலன், சமுதாய நலன், குடும்ப நலன், தனிநபர் நலனை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். மதம் சார்ந்தவர்களுக்கு வாரியம் இருப்பது போல, மதம் சாராதவர்களுக்குத் தனியான வாரியம் அமைக்க வேண்டும். இதனை மொத்தத்தில் நாட்டு நலன், சமுதாய நலன், குடும்ப நலன், தனிநபர் நலனை நோக்கமாக கொண்டு செய்ய வேண்டும். மேலும் இதனை மதம் சாராதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்க  வேண்டும். 

            அவ்வாறு சுதந்திரமாக உள்ள தனிநபருக்கு எந்த மதத்தையும் பேச, விமர்சிக்க உரிமை கிடையாது. அவர் மதங்களைப் பற்றி பேச விமர்சிக்க விரும்பினால் அவர் சம்பந்தப்பட்ட மதங்களின் முதல், இரண்டாம் கட்டத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

            அதன் பின்னரே அவர் அவ்வாறு பேச இயலும். அவ்வாறு செய்யாமல் அவர் ஒரு மதத்தை விமர்சித்தால், அது அந்த மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தினால் அது மதத் துவேஷமாக கருதப்படும். அவ்வாறு நடைபெறும்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

            தனது உறவுகளை அவ்வாறு சுதந்திரமாக உள்ளவர்களிடேயே வைத்துக்கொள்ளலாம். அல்லது  அவர் ஒரு மதம் சார்ந்தவரை திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு மதத்தில் இருப்பவரை திருமணம் செய்தார் என்றால் அவர் அந்த மதத்தை தழுவ வேண்டும். அல்லது அவர் அந்த மதத்தில் உள்ளவரை அந்த மதத்தை விட்டு வெளியேற்றி திருமணம் செய்யலாம். மதத்தை விட்டு வெளியேறுபவர்கள் அதனை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்திருந்தால்தான் அவர் மதத்திலிருந்து வெளியேறியவராக கருதப்படுவார்.

            அவர் அந்த மதத்தை தழுவி திருமணம் செய்யும்போது அவர் அந்த மதச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மதத்திலிருந்து வெளியேறும்போது அவரை மதச் சட்டங்கள் கட்டுப்படுத்தாது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் மதத்திலிருந்து வெளியேறிவிட்டார், ஆனால் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அந்த மதத்தில் இருக்கிறார்கள் என்றால் அந்தக் குடும்பத்திற்கான பிரச்சனைகள் மதச் சட்டத்தின்படி தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

            அந்தப் பிரச்சனையில் அந்த தனிநபருக்கு தீங்கிழைக்கப்பட்டதாக கருதப்பட்டால் அவர் பொதுச் சட்டத்தின்படி தனது உரிமைகளைக் கோரலாம். இதில் ஒரு தனிநபருக்கும் அதிக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையில் பெரும்பான்மை நபர்களின் நலனே கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

            1.8. தனிநபர் மதப் பிரச்சனைகள்

            இரண்டு தனிநபர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனையை இரண்டு மதங்களுக்கு இடையேயான பிரச்சனையாக மாற்றக் கூடாது. உதாரணமாக ஒரு இந்துவிற்கும் ஒரு இஸ்லாமியருக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்து அவர்களிடையே கொடுக்கல் வாங்கலில்  பிரச்சனை ஏற்பட்டால் அதை மதப் பிரச்சனையாக மாற்றக் கூடாது. அவர்கள் இருவரும் பொதுவான நபர்களின் உதவியுடன், பொதுச் சட்டப்படி தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

            அவ்வாறு ஏற்படும் பிரச்சனையை மதப் பிரச்சனையாக ஆக்கினால், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அடிப்படை மத அறிவு இல்லாதவர்களின் இடையே ஏற்படும் பிரச்சனைகள் இரண்டு தனிநபருக்கு இடையே ஏற்பட்ட மதப் பிரச்சனையாக கருதப்படும். ஒருவர் அடிப்படை மத அறிவு கொண்டவராக இருந்து அடிப்படை மத அறிவு இல்லாதவர் அவரிடம் மதம் சார்ந்த பிரச்சனை செய்து அது நிரூபிக்கப்பட்டால் அது மதத் துவேஷத்தை ஏற்படுத்தியதாக கருதப்படும். அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

            1.9. மதக் கல்வி

            ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்கான கல்விக் கூடங்களை அமைத்துக் கொள்ளலாம். இந்த கல்விக் கூடங்களில் மத அடிப்படை, பொது, புலமைக்கான கல்வி வழங்கப்பட வேண்டும். இந்தக் கல்விக் கூடங்களில் மதக் கல்வி மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

            மதங்கள் பொதுக் கல்விக் கூடங்களையும் நடத்தலாம். ஆனால் இது இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடாது. அந்த பொதுக் கல்விக் கூடங்களில் எந்தவித மதப் பிரச்சாரமும் செய்யக் கூடாது. மதப் பிரச்சாரம், வழிபாடு என்பது மதக் கல்விக் கூடங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதை மீறினால் அந்த கல்விக் கூடத்திற்கான அனுமதி ரத்து உடனே செய்யப்பட வேண்டும். அதை நடத்திய நிர்வாகிகள் வேறு எந்த கல்விக் கூடங்களையும் நடத்த அனுமதிக்கக் கூடாது.

            ஒரு மதத்தவர் மாற்று மதத்தவருக்கான மத கல்விக் கூடங்களுக்குச் சென்று தங்கள் மதத்தைப் பற்றி பேசலாம், கலந்துரையாடலாம். இது மதங்களுக்கிடையேயான புரிதலை ஏற்படுத்தும் முகமாகவே செய்யப்பட வேண்டும். அல்லது பல மதங்கள் இணைந்து மத கருத்துக்களை சர்ச்சை செய்யலாம். இதனை பல்வேறு மதங்களில் இருப்போரிடையே ஆரோக்கியமாக மதக் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக செய்ய வேண்டும்.

            1.10. வழிபாட்டு முறைகள், ஒத்துழைப்பு

            ஒவ்வொரு மதத்தினரும் முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட, வழக்கத்தில் உள்ள, சடங்குகள் வழிபாட்டு முறைகளை பின்பற்றலாம். ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மாற்றுத் மதத்தவரின் விழாக்கள் திருவிழாக்களில் தலையிட முடியாது, இடையூறு செய்யக் கூடாது.

            அவ்வாறு திருவிழாக் கொண்டாடும் ஒரு மதத்தவரை வேற்று மதத்தவர் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைய தடை விதிக்க முடியாது. அதேபோல விழாக் கொண்டாடும் ஒரு மதத்தவர் வழக்கத்திற்கு மாறாக மாற்று மதத்தவர் வசிக்கும் பகுதிக்குள் செல்ல முயற்சிக்கக் கூடாது.

            புதிதாக வழிபாட்டுத் தளங்கள் அமைப்பதற்கு முன்பாக அது மாற்று மதத்தவருக்கோ, மற்ற பொதுமக்களுக்கோ இடையூறாக இருக்க வாய்ப்புள்ளதா என்று ஆராயப்பட வேண்டும். அவ்வாறு இல்லாபட்சத்தில் மட்டுமே அதற்கு அனுமதி தரப்பட வேண்டும். மதங்களின் ஒட்டுமொத்த நோக்கமும் தங்கள் மதம் சார்ந்த மக்கள், பொதுமக்களின் நலனாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          1.11. சட்ட மன்றத்தில் மதங்களின் பங்கு

            மதங்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் சட்டமன்றத்தில் மதங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். மத விகிதாச்சாரப்படி இந்த மதப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த பிரதிநிதிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் மதப்புலமை தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

            இவர்கள் அறிஞர்கள் அவையான சட்டமன்றத்தின் மேலவை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கீழவைக்கு விகிதாச்சார அடிப்படையிலான மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

            உதாரணமாக, கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையில் 10% இருக்கிறார்கள் என்றால் அதற்கான மக்கள் பிரதிநிதிகள் தனியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இவர்களுக்கு மதப் புலமை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

            அதேவேளையில் இந்த 10% மக்கள் தொகைக்கான கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் தனியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் மேலவையில் இடம்பெறுவார்கள். இவர்கள் இருவரையும் ஒரே பிரதிநிதியாக கருதக் கூடாது. இது மற்ற மதங்களுக்கும் பொருந்தும். மக்களுக்கான பிரதிநிதிகளும் மதங்களுக்கான பிரதிநிதிகளும் தனித்தனியே இருக்க வேண்டும் என்பதால் இப்படிச் செய்வது நலம்.

                                                          *******  
           
           

           



கள்ளர் பள்ளியில் மாணவர்களுக்கு போட்டிகள்




பொங்கலை முன்னிட்டு எங்கள் ஊர் கள்ளர் பள்ளியில் மாணவர்களுக்கு சாக்குப்பை பந்தயமும், மாணவிகளுக்கு ஸ்பூனில் எலுமிச்சை பழம் எடுத்துச் செல்லும் போட்டியும் நடத்தியபோது எடுத்த படம்.


இது அல்லாமல் மாணவ - மாணவியருக்கு ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் வாசிப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன.

Monday, January 20, 2014

மீனவர்கள் தாக்கப்படுவது ஏன்?


1. நமது மீனவர்கள் எல்லை தான்டி மீன் பிடிக்கிறார்கள் என்ற உண்மையை ஏன் நமது அரசும், அரசியல்வாதிகளும் மறுக்கிறார்கள், மறைக்கிறார்கள்?

மீனவர்கள் எல்லை தாண்டி போய் மீன் பிடிக்கிறார்கள் என்பதே தவறான நிலைப்பாடு .... தமிழக இலங்கை மீனவர்கள் இரு கடல் பகுதிகளிலும் மீன் பிடித்துக்கொள்ள அனுமதி இருக்கிறது, ஒப்பந்தமும் இருக்கிறது ... 

தமிழக மீனவர்கள் அனுமதி இல்லாத இயந்திர வலையை பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை, இது தவறான செயல் ... இதனால் மீன் வளம் பாதிக்கப்படும் ....

2. நமது கடல் எல்லையில் ஏன் மீன் வளம் குறைந்தது அல்லது ஏன் இல்லை?

மீன்பிடி தொழில் ஒரு லாபகரமான தொழிலாக இருந்த காரணத்தால், அதிகபடியான முதலீடு இதில் செய்யப்பட்டது ... இதை அரசாங்கம் முறைபடுத்த தவறு செய்து விட்டது ... இதனால் மீனவர்கள் அல்லாதவர்கள் கூட தங்கள் பணத்தை முதலீடு செய்து இருகிறார்கள் ...
கடலில் இருந்த மொத்த மீன்வளத்தையும் சுரண்டி விட்டோம் ... மீன் இனபெறுக்கத்திற்கு ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் கொடுக்கிறோம், இது போதுமானது இல்லை ... மீனவர்களுக்கு என்று ஒரு சரியான வாரியம் இல்லை, 

மொத்தத்தில் மீன்பிடி தொழிலை அரசாங்கங்கள் முறைபடுத்த தவறி விட்டன...

3. மீனவர்களை பழைய முறையில் இருந்து புதிய முறை மீன்பிடிப்புக்கு மாற்றுவதிலோ, பயிற்சி அளிப்பதிலோ அரசுக்கு என்ன சிக்கல்? (அதாவது மீன்வளம் குறையாமல் நவீன முறையிலோ அல்லது மிக பழைய முறையிலோ?)

அரசாங்கம் இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை ... மீனவர்கள் ஒட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்த படுகிறார்கள் ... மீனவர்கள் பொதுவாக புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்யவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள் .. இதை இந்த அரசியல்வாதிகள் நன்றாக பயன்படுத்தி கொள்கிறார்கள் .....

4. மீனவர்கள் கடல் எல்லை தாண்டும் வரை (அல்லது) தாண்டி இலங்கையிடம் பிடிபடும் வரை அல்லது (அல்லது) தாண்டி மீன் பிடித்து திரும்பும் வரை நமது கடலோர காவல் படையும், கடற் படையும் எங்கே போய் பூ பறித்து கொண்டிருக்கிறது?

மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டு திரும்பும் வரை நமது கடற் படையும், கடலோர காவல் படையும் ஒரு பகல் முழுவதும் காணவில்லை என்றால் தென் பகுதி கடல் எல்லையின் பாதுகாப்பு என்ன? அதாவது தமிழகம் தாக்கப் பட்டால் பரவாயில்லையா?

ராமேசுவரம் - யாழ்ப்பாணம் கடல் பகுதியை தமிழக மீனவர்கள் அனைவரும் பயன்படுத்துவதை, இலங்கை தமது பாதுகாப்பு காரணங்களுக்காக விரும்பவில்லை .. இதை இந்தியாவும் ஆதரிக்கிறது ...

ராமேசுவரம் - யாழ்ப்பாணம் கடல் பகுதியை அனைத்து ராமேசுவர மீனவர்களும் பயன்படுத்த தொடங்கினால் இவர்கள் அனைவரையும் கண்காணிப்பது இயலாத விஷயம் ... 

அனைத்து மீனவர்களும் இந்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டால், தமிழீழ பகுதிக்கு ஆயுதங்களும் மற்ற தளவாடங்களும் எளிதாக கடத்தப்படலாம் என்ற காரணத்தால் தமிழக மீனவர்கள் இந்த கடல் பகுதியை பயன்படுத்துவதை குறைப்பதற்காகவே மீனவர்கள் தாக்க படுகிறார்கள். இதை இந்தியாவும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது, அல்லது தமிழக மீனவர்களை தாக்க இலங்கைக்கு இந்தியா அனுமதி கொடுக்கிறது ....

(இதனால் கடலோர காவல்படை, கப்பல்படை என்ன செய்கிறது என்ற கேள்வி அவசியமற்றதாக போகிறது)


- மாணிக்க வாசகம்

செயல் வீரர் ராஜா உடையார்


இன்று (20-01-2014) காலை 6.30 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. தோழர் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் பேசினார். 

அவரது நண்பர் செந்தில்குமார் மும்பையில் அந்தேரி, மரோல் நாக்கா பகுதியில் கோயமுத்தூரைச் சேர்ந்தவரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டிலிருந்த முதியவர் (70 வயது) இறந்து விட்டார். அவர்கள் வீட்டில் 2 பெண்கள் மட்டுமே சிறு குழந்தைகளுடன் இருந்தனர். 

அவரது உறவினர்கள் அனைவரும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசித்து வந்தனர். அண்மையில் அங்கு சென்றுள்ள செந்தில்குமாருக்கு இந்தி தெரியாது. அவர் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தவித்தார். 

உடலை அடக்கம் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய வேண்டியுள்ளது என்று தெரிந்தவர்கள் மூலம் உதவ ஏற்பாடு செய்யுங்கள் என்று தோழர் களஞ்சியம் கேட்டுக் கொண்டார். 

நான் உடனே, நண்பர் ராஜா உடையாரை அழைத்து விவரத்தைச் சொன்னேன். உடனே அங்கு கிளம்பிச் சென்ற ராஜா உடையார் தனது நண்பர்கள் செம்பூர் ஆறுமுகம், அந்தேரி ஆர். குமார் ஆகியோரை உடன் அழைத்துக் கொண்டு ஈமகிரியைச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். 

அனைத்து வேலைகளையும் நல்லபடியாக செய்து முடித்து விட்டதாக மதியம் 2.00 அளவில் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். 

அவருக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                       ******

                                          செயல் வீரர் ராஜா உடையார்

நண்பர் ராஜா உடையார் மும்பை தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். மும்பை மாநகர பாஜக செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். பல கருத்தரங்கு, பட்டிமன்றம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 

முன்பே அறிமும் இருந்தாலும் சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா அமைப்பின் மூலமாக 2007ம் ஆண்டிலிருந்து மும்பையில் இணைந்து பல சமூகப் பணிகளைச் செய்தோம். 

2012ம் ஆண்டு மும்பை காவல்துறையால் நிறுத்தி வைக்கப்பட்ட குமரிமாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை விடுவிக்க நாங்கள் இருவரும் இணைந்து உதவினோம். 

அதேபோல மும்பை சயான் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருக்க நாங்கள் ஆற்றிய 4 மாத பணியில் இவரது பணி முக்கியமானது. 

இத்தனைக்கும் ராஜா உடையார் ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதற்கிடையே சமூக, அரசியல் பணிகளை செய்து வருகிறார். எல்லாவற்றும் மேலாக இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி, சமூக சேவகர். 

இவரைப் போன்ற ஒப்பற்ற செயல்வீரர்கள் பல அரசியல் பதவிகளைப் பெற இறைவனை வேண்டுவோம். 

https://www.facebook.com/Rajaudayar?ref=ts&fref=ts

Saturday, January 11, 2014

சேரி அரசியலும் நவீன சேரிகளும்

            ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்று பேசுபவர்களின் மற்றொரு வாதம் ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியல்சாதியினர் சேரிகளில் வசிக்கிறார்கள் என்பதுதான். அதாவது அவர்கள் ஒதுக்கப்பட்டு சேரிக்குள் தள்ளப்பட்டார்கள் என்பது இவர்களின் வாதம். இதில் இவர்கள் ராஜராஜ சோழனையும் திட்டுவார்கள்.

            இதன் மூலம் இவர்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஆதிக்கசாதிகள் அத்தனையுமே இந்தக் கொடுமையை செய்தன. எனவே அவர்கள் இதற்கு பிரதியுபகாரமாக தங்கள் வீடுகளை விட்டுக் கொடுத்து விட்டு சேரிகளில் வந்து இருக்கவேண்டும் என்ற தோரணையில் பேசுவார்கள்.

            ஆனால் அவர்களை சேரியில் வைத்திருக்க காரணம் என்ன என்பதைப் பற்றி ஒருபோதும் பேச மாட்டார்கள். அவர்கள் ஒரு காலத்திலும் சேரியை விட்டு வெளியேறி ஊருக்குள் வர முயற்சிக்க வில்லையா? அப்படி வந்தவர்கள் எப்படித் தண்டிக்கப்பட்டார்கள்? அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஆயிரக்காணக்கான வருடங்களில் ஒரு புரட்சியாளர் கூட தோன்றவில்லையா? அல்லது அங்கிருந்து வந்தவர்கள் ஏன் அதைக் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

            தற்போதும் கிராமங்களில் மக்கள் சாதிவாரியான தெருக்களில்தான் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தச் சேரிகளில் இருப்பவர்களை ஊரின் மற்ற பகுதிகளில் குடியேற்ற முடியுமா? அதற்கான சாத்தியக் கூறு என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தயாராக இல்லை. வசதி வாய்ப்புடன் வாழும் ஒருவரை திடீரெனக் கொண்டு போய் சேரியில் வைக்க முடியுமா? அல்லது சேரியில் இருப்பவர்களை திடீரென கட்டிடங்களில் கொண்டு போய் வைக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

            இதற்கு உதாரணமாக குடிசை மாற்றுத் திட்டங்களின் கீழ் வீடுகளைப் பெற்றோரை எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற கட்டிடங்களுக்குச் சென்று பார்த்தவர்களுக்கு அந்தக் கட்டிடங்களின் அவலநிலை புரியும். குடிசைவாசிகளுக்கு அந்தக் கட்டிடத்தின் மதிப்புக் கூடத் தெரியாது. அவர்கள் தங்கள் குடியில் இருந்ததைப் போலவே நடந்துகொள்வார்கள். அவ்வாறு வீட்டைப் பெற்றவர்கள் கூட எவ்வளவு விரைவாக விற்க முடியுமோ அவ்வளவு விரைவாக விற்று விடுகிறார்கள். பின்னர் மீண்டும் குடிசைகளில் சென்று குடியேறுகின்றனர். பெரும்பாலானோர் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். மும்பையில் இதுபோன்ற நிகழ்வுகளை சாதாரணமாக காண முடிகிறது.

            அதேபோல இவர்கள் தமிழக அரசு கட்டித் தரும் குடியிருப்புகளையும் (காலனி வீடுகள்) முடிந்த வரை விரைவிலேயே கைமாற்றி விடுகிறார்கள். ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் அதன் உண்மை நிலை தெரியவரும். இந்த குடியிருப்புகளை நவீனச் சேரிகள் என்றே சொல்லலாம். இவர்களின் வாதப்படி அரசாங்கம் பட்டியல் சாதியினருக்காக மற்ற சாதிகள் குடியிருக்கும் பகுதிகளில் காலி இடங்கள் அல்லது வீடுகளை வாங்கி குடியேற்ற வேண்டும்.  அப்படி இல்லாமல் பட்டியல் சாதியினருக்காக தனியே அமைத்து தரும் வீடுகளும் நவீனச் சேரியே. ஆனால் பட்டியல் சாதிக்காக பேசுகிறேம் என்ற பெயிரில் பேசுவோர் இவற்றை சௌகரியமாக மறந்து விடுவார்கள்.

            இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. அரசாங்கம் இலவசமாக அளிக்கும் வீடுகளை விற்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறதா என்பதே அது. ஆமாம் உள்ளது என்றால் பின்னர் அவர்கள் இந்த வீடுகளை இலவசமாக பெறும் உரிமையையும் இழந்து விடுவார்கள். இது ஒரு தனிமனிதனின் முயற்சி, குணநலன் அடிப்படையிலானது. இது சிக்கலான உளவியல் அடிப்படையிலான பிரச்சனை.

            எந்தவொரு பொருளையும் அதன் அருமை தெரிந்தோர்தான் முறையாக, சரியாக பயன்படுத்துவார்கள். அப்படி ஒரு பொருளின் அருமை தெரிந்தவர் அந்தப்பொருளை எப்பாடு பட்டாவது அடைந்துவிடுவார். இது உலகப் பொருட்கள் மற்றும் மறுஉலகப் பொருளான பரம்பொருளுக்கும் பொருந்தும். பொருள்வாதத்தின் இந்த அடிப்படைத் தத்துவத்தை அறியாதோர் பொருளை, பணத்தை, நிலத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று வாதம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. இந்த மூன்றும் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது எத்தனை தீமைகளை ஏற்படுத்துகின்றனவோ அதேபோல பிரித்துக் கொடுப்பதும் தீமைகளையே ஏற்படுத்தும்.

            ஒரு சிறந்த அரசாங்கம் என்பது அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். மற்ற பொருட்களை அனைவரும் அடைய வழி செய்து தரவேண்டும். அதற்காக அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது ஏற்க முடியாத கருத்தாகும்.

            அதேபோல நிலப்பகிர்வையும் எடுத்துக் கொள்ளலாம். பட்டியல்சாதிகளுக்காக போராடும் கட்சிகள், அமைப்புகள் பட்டியல் சாதியினருக்கு அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க போராடி வருகின்றனர். இது வரவேற்கத் தக்கதே. வெள்ளையர் காலத்தில் இந்த நிலங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

            ஆனால் இப்போது நாம் முன்வைக்கும் கேள்வி இந்த நிலங்கள் எவ்வாறு கைமாறின என்பதே. தொகுப்பு வீடுகள் கைமாறுவதைப் போல இந்த நிலங்கள் கைமாறி இருந்தால் இந்த நிலங்களை மீட்கிறோம் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அதேவேளையில் பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் கடமை ஒரு அரசாங்கத்திற்கும், சக மனிதனை உயர்த்தும் கடமை சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே அறிஞர்கள் இதுபற்றி சிந்தித்து எதிர்காலத்தில் எந்தவிதமான அரசு உதவிகள் பயனுள்ளதாக அமையும் என்று முடிவெடுக்க வேண்டும்.

            ஓரிடத்தில் அதிகாரம், பணம், பொருள், நிலம் குவிவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை முழுவதுமாக அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.



Thursday, January 9, 2014

மாட்டிறைச்சி அரசியல்



மாட்டிறைச்சியை உண்பவர்கள் பொதுவாக பட்டியல் சாதியினர் என்ற கருத்து உள்ளது. இஸ்லாமியரும் வெளிப்படையாக மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்.

அதேபோல மாட்டிறைச்சியை உண்ணாதே என்று சொல்பவர்கள் பார்ப்பனர்கள் அல்லது இந்துக்கள். பார்ப்பனர்கள் இறைச்சி சாப்பிடாதவர்கள்.

இதிலிருந்தே இதன் பின்னணி என்னவென்று புரிந்துகொள்ளலாம். அதாவது இதுவும் ஒரு வித பார்ப்பன, இந்து மத எதிர்ப்புதான்.

ஆனால் இவர்கள் பன்றி இறைச்சி உண்பது பற்றி பேசமாட்டார்கள். ஏனென்றால் பன்றி இறைச்சி உண்பதை பார்ப்பனர்களோ, இந்துக்களோ கண்டுகொள்ள மாட்டார்கள்.

இந்துக்கள் ஏன் மாட்டிறைச்சியை உண்பதில்லை என்றால் அவர்கள் மாடுகளை உழைக்கும் விலங்காகப் பார்க்கிறார்கள். பசு தரும் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அதனை அன்னையாக பார்க்கிறார்கள். காளையை சிவபெருமானின் வாகனமாக பார்க்கிறார்கள்.

வேறு எந்த விலங்கின் பாலையாவது குழந்தைகளுக்கு கொடுக்க முடிகிறதா? எனவேதான் இந்துக்கள் பசுவை புனித விலங்காக கருதுகிறார்கள். குழந்தைகளுக்கு இறைச்சியைக் கொடுக்க முடியுமா? முடியாது.

தமிழர்களும் பசுக்களை, மாடுகளை இதே பார்வையில்தான் பார்க்கிறார்கள். அது இறந்தால் அதன் இறைச்சியை உண்பதில்லை. அதை அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.

பன்றி இறைச்சியை உண்பது பற்றி இவர்கள் பேச மாட்டார்கள். ஏனெனில் இவர்களின் கூட்டாளிகளான இஸ்லாமியருக்கு பன்றியைப் பற்றி பேசக் கூட கூடாது.

எனவே இதுவும் இந்து மதம், பார்ப்பனர் எதிர்ப்பு அல்லது பட்டியல் சாதி ஆதரவு அரசியலே தவிர வேறொன்றுமில்லை.

Wednesday, January 8, 2014

பிரதிநிதித்துவமும் இட ஒதுக்கீடும்



இடஒதுக்கீடு எவளோ நாள் இருக்கனும் என்பதுதான் பெருமாள் தேவன் அண்ணன் கேள்வி

யாரோ எப்பயோ வாங்கிய தேவர் பட்டத்தை போடாமல் அல்லது பயன்படுத்தாமல் இருக்க கால வரம்பு எதும் இருக்கா அண்ணா

அப்படியே அந்த கோவில மணிஆட்டி வாழ்ரானுங்களே அவங்களயும் பார்த்து இப்படி எதாவது கேளுங்க எப்பதாண்ட கருவறையில் உள்ளே விடுவிங்கனு

- நண்பர்களுக்கு, நான் “தலித்“ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறேன். இங்கு திரு கௌதமனின் வார்த்தை பிரயோகத்திற்கு பதில் அளிக்கும் முகமாக மட்டுமே இந்த வார்த்தையை, அதன் பின்னணியில் உள்ள அரசியலை குறிப்பிடுவதற்காக பயன்படுத்துகிறேன் என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

தேவர் என்ற பட்டம் எங்களுக்கு கிடைத்த பட்டம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால் தலித் என்று உங்களுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அடையாளமும் உரிமையும் ஒன்றுதான் என்றால் நீங்கள் உங்கள் அடையாளத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு அதன் மூலம் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்றுதான் பொருள்.

அதாவது மற்றவர்கள் அவர்களது அடையாளத்தை மட்டும் வைத்துக்கொள்ள நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் அதை வைத்து லாபம் சம்பாதிக்க நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தை வைத்து எந்தவித முதலீடும் இல்லாமல் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை அது அவர்களின் வாழ்வுரிமை. உங்கள் தொழில் இழிவானது என்றும் அவர்களின் தொழில் புனிதமானது என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது. அந்த கற்பிதத்தை நீங்கள் நம்புகிறீர்கள். அதனால்தான் நீங்கள் உங்கள் தொழில்களை விட்டுவிட்டு மற்றவர்களின் தொழில்களை கைப்பற்ற முனைகிறீர்கள். அதோடு அவர்கள் தங்களின் தொழில்களை விட்டுவிடுவதுதான் நியாயம் என்றும் சொல்கிறீர்கள்.

நாங்கள் தேவர் பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வரை நீங்கள் உங்கள் தலித் பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். இதன் மூலம் மறைமுகமாக நாங்கள் ஆதிக்கம் செய்பவர்கள் தொடர்ந்து ஒப்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு விஷயத்தை நண்பர்கள் கவனிக்க வேண்டும், பார்ப்பனர்கள் வருமானம் உள்ள பொதுவான ஆலயங்களில் மட்டுமே பார்ப்பனர்கள் பூசாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். மற்ற சாதிகளுக்கான ஆலயங்களில் அவர்கள் விரும்பினால்தான் பார்ப்பனர்களை பூசாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். எங்கள் ஊர் கோவிலுக்கு எங்கள் சாதி பூசாரிதான் இருக்கிறார். அங்கு கருவறை பிரச்சனையே இல்லை.

இதில் இன்னொரு விஷயத்தை நீங்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறீர்கள் அதாவது எக்காலத்திலும் இடஒதுக்கீட்டால் கிடைக்கும் நன்மை பலனளிக்காது, அல்லது போதாது என்பதே அது. அதேபோல இடஒதுக்கீடு என்பது வாழ்க்கை அடிப்படையிலானது அல்ல அது ஆதிக்கத்தின் அடிப்படையிலானது என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படியானால் மக்களாட்சி முறையிலான ஆதிக்கத்தையும் இந்த வகையில் சேர்க்கலாமா?

ஒரு சமுதாய மக்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்களோ அத்தனை சதவீதம் அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் கொடுத்துவிட்டால் இட ஒதுக்கீடு என்ற ஒன்று தேவையே இல்லை.

ஆனால் இன்று இட ஒதுக்கீட்டை விரும்பும் நபர்கள் 100 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தாலும் போதாது என்று சொல்லும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

சதவீத பிரதிநிதித்துவத்தில் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள், தங்கள் மக்கள் தொகையை பெருக்குவதன் மூலம் அதிக பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்பலாம்.

அப்படியானால் தற்போது உள்ள மக்களின் சதவீதத்தை அப்படியே வைத்திருக்க அனைத்து சமுதாயப் பிரிவுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இதில் மதப் பிரச்சனையும் ஏற்படலாம். ஏனெனில் இஸ்லாம் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதை வலியுறுத்துவதில்லை. அப்போது இவர்கள் இந்த கொள்கை தங்கள் மதத்திற்கு எதிரானது என்று சொல்வார்கள்.

கற்பழிப்பின் மூலம் ஒரு கரு உருவானாலும் அதை பெற்றெடுக்க வேண்டும் என்பதே கிறிஸ்தவ மதக் கருத்தாக உள்ளது. இவர்கள் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்துவதையும் ஏற்பதில்லை. தற்போது எய்ட்ஸ் நோயின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக மட்டுமே இவர்கள் கருத்தடைச் சாதனங்களை பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதேபோல இஸ்லாம் மதத்தில் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கும் தடை விதிப்பதில்லை. எனவே இவர்கள் தங்கள் சதவீதத்தை தக்க வைக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே.

அதேபோல, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டு மதத்தவருமே திராவிடச் சிந்தனையில் ஊறியவர்களாக, இந்து மதத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களாக இருக்கிறார்கள். திராவிடச் சிந்தனையாளர்கள் சமூக பிரச்சனைகளையும் மதத்தையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொண்டார்கள். திராவிட ஆட்சியாளர்கள் அதை வைத்தே மத அரசியல் செய்தார்கள். இந்த சிந்தனையே கிறிஸ்தவ-இஸ்லாமிய சிந்தனையாளர்களிடமும் காணப்படுகிறது.

எனவேதான் சில நூறு ஆண்டுகளாக இதே இந்து மதத்துடன், அதில் உள்ள சாதிகளுடன் இணக்கமாக வாழ்ந்து வரும இவர்கள் தற்போது அவர்களுக்கு எதிராகவே பேசி வருகிறார்கள்.

ஆனால்அரசியல் பிரதிநிதித்துவம் என்று வரும்போது இவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

இது பிரநிதித்துவ அரசியலின் அடிப்படையில் செயல்படும் தமிழ்தேசியக் கருத்துக்கு ஒரு சவாலாக அமையும்.

அதுபோன்ற நிலையில் மதங்கள் ஒரு தங்கள் நிலையை விட்டுவிட்டு ஒரு மையப் புள்ளிக்கு வந்து சேர வேண்டும். இல்லாது போனால் சமூக பிளவுகள் மேலும் விரிவுபடும்.


Tuesday, January 7, 2014

இந்தியமும் இந்து மதமும்


இன்று தற்செயலாக ஒரு முகநூல் குழுமத்திற்கு சென்றபோது “இந்து வெறியர்கள் கூடாரம்” என்ற ஒரு குழுமம் இருப்பதைக் கண்டேன். 

உண்மையில் இது நமது தலைவர்கள் பின்பற்றிய போலி மதச்சார்பின்மை காரணமாக ஏற்பட்டது. 

ஆனால் உலக மதங்களில் ஒரு சாத்வீகமான மதம் என்றால் அது இந்து மதம்தான். இந்து மதம் ஒரு கூட்டத்தை வளர்க்கும் மதம் கிடையாது. அது ஒரு சுதந்திரமான மதம். அது யாரையும் எதையும் வழிபடச் சொல்லாது. 

ஆனால் அனைத்தையும் வழிபடலாம் என்று சொல்கிறது. இதன் தத்துவங்கள் ஒவ்வொன்றும் ஆழமானவை ஆணித்தரமானவை. 

இந்த அடிப்படைத் தன்மைதான் இந்து மதத்தை இன்று வரை நீடிக்கச் செய்கிறது. மத அரசியலிலிருந்து இந்து மதம் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் அதே சமயம் மற்ற மதங்களில் காணப்படும் மதவாதத்தை கையில் எடுக்கத் தேவையில்லை.

இன்னும் சிலர் இந்தியாவையும் இந்துத்துவத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். இதுவும் இந்து மதத்திற்கான அரசியல் அதிகாரம் பெறும் முயற்சியே. 

ஆனால் உண்மையில் இந்தியத் துணைக் கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிந்து கிடந்தபோதும் இங்கு இந்து மதம் இருந்தது. இப்போது ஒரே நாட்டின் கீழாகவும் இருக்கிறது. 

ஒருவேளை நாளை பல்வேறு இனக்குழுக்கள் பிரிய நேர்ந்தாலும் இந்த மதம் உயிர் வாழும். எனவே இந்து வெறியர்களின் கூடாரம் தேவையில்லை. அதை சரியாக புரிந்துகொண்டு மாற்று மத அரசியலை முறியடித்தாலே போதுமானது இந்து மதம் என்றும் சாத்வீக மதமாக சனாதன மதமாக இருக்கும்.

Monday, January 6, 2014

பாஜக பற்றிய எனது நிலைப்பாடு


பாஜக, காங்கிரஸ்க்கான ஒரு தற்காலிக மாற்றாகத்தான் இருக்க முடியும். மற்றபடி இந்திய அதிகாரக் குவிப்பை சிறிதும் இழக்க விரும்பாத காங்கிரஸின் ஜெராக்ஸ் காப்பிதான் பாஜக.

பாஜகவிடம் விரும்பும் கருத்து அதன் வெளிப்படையான இந்து மக்களுக்கான ஆதரவே. ஆனால் அது தன்னுடைய இந்து ஆதரவை நிரூபித்ததா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம்.

இந்தியாவைப் பொறுத்த வரை எந்தவொருக் கட்சியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த, இந்தியாவில் கூட்டாட்சி முறையை அமல்படுத்தி அதிகாரத்தை பரவல் செய்ய, அரசியல் சட்ட ரீதியான மேம்பாட்டை விரும்பவில்லை. அல்லது இதுவரை அதற்கான பேச்சைக் கூட யாரும் பேசவில்லை. 

பாஜக பேசிய “அனைவருக்கும் பொது சிவில் சட்டம்“ என்பது கூட ஒரு சமூகச் சமநிலையே அல்லாமல் அரசியல் சீர்திருத்தம் கிடையாது. 

இந்தியா உண்மையிலேயே ஒரு வல்லரசாக ஆக வேண்டும் என்றால் சுபாஷ் சந்திர போஸ் சொன்னதுபோல இந்தியா ஆசிய - ஆப்பிரிக்க மக்களின் உலக பிரதிநிதியாக திகழ வேண்டும் என்றால் அது முதலில் தன்னைத் தானே சரி செய்து கொள்ள வேண்டும். 

அதற்கு சிறிதும் விட்டுக் கொடுக்காத கூட்டாட்சி முறையை அமல்படுத்த இந்தியக் கட்சிகள் முன் வரவேண்டும். ஆனால் அதற்கான தலைவர்கள் இருப்பதாக சிறு அறிகுறி கூட தென்படவில்லை. 

இது இந்தியாவின் ஒற்றையாட்சி, அதிகார குவிப்பு, பெருந்தொழில் லாப ஆதரவு, ஜனநாயக ஏகாதிபத்தியம் போன்றவற்றை வீழ்த்தி இந்தியாவையே வீழ்த்த வழிவகுக்கலாம். 

வாழ்க ஜனநாயகம்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...