Saturday, March 30, 2019

கள்ளர் மறவர் அகமுடையார் வரலாறு

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கள்ளர், மறவர், அகமுடையார் வரலாறு - ஆய்வாளர் மருதுமோகனின் அருமையான உரை.

https://www.youtube.com/watch?v=eKv6p79WaLg

Friday, March 29, 2019

அண்ணாதுரையின் லட்சணம்




அண்ணாத் துரையின், திராவிடத்தின் லட்சணம் இதுதான். இப்போதெல்லாம் பல தமிழ்த் தேசிய தோழர்களே அண்ணாத்துரைக்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன கார்டு உள்ளிட்ட உரிமங்களை அச்சடித்து கொடுத்து அண்ணாத்துரையை தமிழன் என்கிறார்கள். ஆனால் இந்த அண்ணாத்துரை யார் என்பதை பாரதிதாசன் விளக்கி இருக்கிறார். முதலில், அண்ணாதுரை ஈவெராவின் மாணவன், கருணாவின் ஆசான் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

இந்த அண்ணாத்துரை பற்றி திராவிட கவிஞன், பாவலன், பாவேந்தன், புரட்சி கவிஞன் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்பட்ட பாரதிதாசன் தன்னுடைய 'குயில்' எனும் பத்திரிக்கையில் எழுதி இருக்கும் குறிப்பு இங்கே... ''அண்ணாத்துரை, தன் சகோதரி மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும், இன்ப விளையாட்டு முடியும் வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும், அண்ணாத்துரையின் காஞ்சி வாழ்வு தொண்டுகளில் ஒன்று'.'

''துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் வளர்ப்பு சிற்றண்ணை ராஜாமணி என்று அண்ணாத்துரை அப்போது புலம்புவார்! அன்னையோ சென்னையில் ஐயரோடு; காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும். பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் செல்வந்தர் பொன்னப்பா தரும் சிறுதானம்''.

இந்த நிலையில் அண்ணாத்துரை பெரியாரின் செல்வ நிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார். இன்னும் இதைச் சொல்வ தென்றால் விரியும். திரு. குத்தூசி குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்! -குயில் இதழ் (30-9-1958)

விழாக்களில் எனக்கு வழங்கப்படும் பொற்கிழி களையும், பொன்னாடைகளையும் தனது என்பார். தன் ஏற்பாடு என்பார். என்னிடம் மன்றாடி என்னோடு ராஜபாளையம் வந்தார். என்னோடு பங்கு பெரும் நிகழ்வுகளை மறக்காது நிழற்படம் எடுத்து விளம்பரம் செய்து கொள்வார் அண்ணாத்துரை.

ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பொருள் காப்பாளராக தானாக ஆகி கொண்டார். ஆனால் அண்ணாத்துரை தன்னுடைய பொன்னாடை என்று சொன்னதை ஒரு விருந்தினர் தனது தறியில் எனக்காக பிரத்யேகமாக நெய்தது என்றார். ஒரு சிங்கப்பூர்க்காரர் பலமுறை பல பத்தாயிரங்கள் எனக்கு அனுப்பியதை அண்ணாத்துரை பெற்றுக் கொண்டார் என்றார்.

குயில் இதழ் துவங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கி கொண்டு சென்னை சென்றார் அண்ணாத்துரை. இந்த வேலையை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி போனவர் போனவர்தான். ஐகோர்ட்டில் குயில் இதழ் முதலீட்டாளர்களால் வழக்கானது. பணத்தை திருடுவது மட்டுமன்றி என்னுடைய குயில் இதழை முடக்க வேண்டும் என்பதும் அண்ணாதுரையின் நோக்கமாக இருந்திருப்பது வழக்கின் போது விளங்கியது. -குயில் இதழ் (14-10-58)

தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி, பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள். குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால், வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!

ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ? அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள் -குயில் இதழ் (28-10-58). மேலே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் யாவும், இன்னும் மேலும், திராவிடர்களால் திராவிட கவிஞன் என்று கொண்டாடப்படும் பாரதிதாசனால் தனது 'குயில்' இதழில் வெளியிடப்பட்டவை. ஈவேராவின் மாணவனும், கருணாவின் ஆசானும் வேறு என்ன சும்மாவா இருந்திருப்பார்?

#krishna

Thursday, March 28, 2019

பாண்டியர் காலத்து கள்ளர் காவல்காரர்கள்



கிபி13ஆம் நூற்றாண்டு மதுரையை ஆட்சி செய்த ஜடாவர்ம பராக்கிர பாண்டியர் காலத்தில் திருப்புவனத்தில் ஊர்க்காவல் பணியில் குளமங்கலத்து நாட்டார் கள்ளர் பெருமக்கள் இருந்ததை மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம் அரங்கநாத பெருமாள் கல்வெட்டு மூலமாக தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

திருப்புவனம் அரையரிடமிருந்து திருப்புவனத்தில் ஊர்க்காவலில் இருந்த #குளமங்கலநாட்டார் கள்ளர்கள், ஊர்க்காவல் வரியாக தங்களுடைய கள்ளர் பெருமக்களின் தலைக்கல்யாணத்தில் பெண் பிள்ளைகளுக்கு சேலை மற்றும் திருமண செலவிற்காக நிலங்களை வரியாகவும்.

முதல் ஆண் பிள்ளைகளுக்கு திருமணச் செலவிற்காக நிலங்களை காவல் வரியாக பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பே பாண்டியர் காலத்தில் கள்ளர் பெருமக்கள் நிலக்கிழார்களாகவும்,தனிக் காணியுடைவர்களாகவும் இருந்ததை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

ஆக பாண்டியர் காலத்தில் நாட்டாராகவும்,நாடாள்வாராகவும்,அரையராகவும்,காவக்காரர்களாகவும்,தளபதிகளாகவும் கள்ளர் பெருங்குடி இருந்துள்ளதை தொல்லியல் துறையினர் பல கல்வெட்டுகள் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

ஆனால் தங்களுடைய சொந்த குலத்தின் வரலாறு படிக்காததன் விளைவு, இன்று பல நயவஞ்சர்களால் கள்ளர் என்றால் திருடர் என கொக்கரிப்பதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வரலாறை படி
மக்களை படி
ரெளத்திரம் பழக வேண்டாம், அது உனக்கு இயற்கையாகவே உள்ளது.
அதனை தூசு தட்டி எழுப்பு

நன்றி
சு பன்னீர்செல்வம்
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Tuesday, March 26, 2019

யார் இந்த பல்லவராயர்கள்?


500 வருடங்களுக்கு மேலாக காஞ்சியில் நிலைபெற்ற பல்லவ பேரரசானது பிற்காலத்தில் சோழர்களால் வீழ்த்தப்பட்டு, ஒட்டுமொத்த நிலப்பரப்பும் சோழர் வசம் வந்தது.

ஆனால் பல்லவ மரபினர்கள் சோழர்களின் ஆட்சியே ஏற்று கொண்டு அவர்களின் நிர்வாகிகளாக செயல்படுகிறார்கள். அரசர் நிலையில் இருந்த பல்லவர்கள் அரையர் (அதிகாரி) நிலைக்கு மாறுகிறார்கள்.

இவ்வாறு சோழர்களின் அரசவையில் ஆதிக்கம் பெற்ற தலைவர்களாக பல்லவ அரையர்கள் செயல்படுகிறார்கள்.
சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த பல்லவராயர்கள் பாண்டியர்களின் கூட்டணியில் இணைகிறார்கள்.

இப்படி சோழர் பாண்டியர்களுக்கு படைத்தலைவர்களாக செயல்பட்ட பல்லவ மரபினர்கள் இன்றும் *கள்ளர்* சமூகத்தவர்களாக புதுக்கோட்டையில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களில் புகழ்பெற்ற அரசர்களாக பெருமான்நம்பி பல்லவராயர், வெங்கடாசல பல்லவராயர், சிவந்தெழுந்த பல்லவராயர் போன்றோர் சரித்திர ஏட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

பல்லவராயரின் கடைசி மன்னராக *மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான்* புதுக்கோட்டையின் மன்னராக 1886 முதல் 1928 வரை ஆட்சியில் இருந்துள்ளார்.

இந்த பல்லவராயர்களை பற்றிய வரலாறு தமிழர் சரித்திரத்தில் இருந்து மறைத்துக்கொண்டு வருகின்றனர். இவர்கள் சோழர் , பாண்டியர்களுக்கு நேரடியாக *படைத் தளபதிகளாக* இருந்தவர்கள். இந்த மறைக்கப்பட்ட இரத்த சரித்திரத்தை மீட்டெடுப்போம்.

பல்லவராயர் வம்சாவளிகள் பற்றிய வரலாற்று தகவல்களை *Tamil Creators* யூடூப் தளம் மூலமாக ஆவணமாக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/QE5K7pzda8A

கள்ளர்களின் போர் வரலாறு

கள்ளர்கள் போர் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என ஒருவர் கேட்பது எந்த
அளவிலான மூடத்தனம், என்பதை நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம்
இல்லை! கீழே...தேதி வாரியாக கள்ளர்கள் போரிட்டதற்கு ஆதாரம் தந்துள்ளேன்.
மறுக்க முடிந்தால் மறுத்து பாருங்கள்!

1.அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் மதுரையை கொள்ளையடித்து
திரும்பும்போது கள்ளர்கள் நாகமலை கணவாயில் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

2. 1330-ம் ஆண்டு சுல்தானியர்கள் மதுரையை தாக்கியபோது மதுரையையும், மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலையும் அழிவிலிருந்து காத்தவர்கள் கள்ளர்கள்.

3. 1378-ம் ஆண்டு குமாரகம்பண்ணா, தன்னரசு கள்ளர் படையுடன் இணைந்து
சுல்தானியர்களை விரட்டி அடித்துள்ளார்.

4. 17-ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்க நாயக்கர் மதுரையை ஆண்டபொழுது பிரமலைக்
கள்ளர்கள் மதுரையை கைப்பற்றிக் கொண்டனர் என்ற விவரத்தை போர்த்துக்கீசிய
மொழியில் யேசு சபை துறவி பல்தார்-டி-கோஸ்டா எழுதியுள்ளார்.

5. 17-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர்களை அடக்க முயன்று
தோற்று இறுதியில் சமரசம் செய்து கொண்டதே வரலாறு.

6. 1739-ம் ஆண்டு பிரஞ்சு கவர்னர் டியூப்ளே தன்னரசு கள்ளர்களுக்கு கடிதம்
எழுதி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் கூட்டணி சேரக் கேட்டுக் கொண்டார்
என்று ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

7. 23.03.1754-ல் அப்போதைய தாலுகா தலைநகரான உசிலம்பட்டி அருகில் உள்ள
ஆனையூரில் தன்னரசு கள்ளர்கள்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக
வெள்ளையர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை துவக்கினர்.

8. 1755-ம் ஆண்டு வெள்ளையனுக்கு எதிராக பூலித்தேவன் நடத்திய போருக்கு
தன்னரசு கள்ளர்கள் படை ஆதரவு கரம் நீட்டினர்.

9. 20.05.1756-ல் கான் சாகிப் கள்ளர்களை கருவறுக்க திட்டமிட்டு தோற்றுப்போனார்.

9. 12.11.1760-ல் பீட்டர்மாட்ரின் பாதிரியார் விகேயின் பாதிரியாருக்கு
எழுதிய கடிதத்தில் கள்ளர்கள் மதுரையை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்து
இருந்தனர் என்று எழுதியுள்ளார்.

10.1784-ல் கள்ளர்கள் மராட்டிய தளபதி முராரிராவை கொலை செய்து விட்டு
மதுரை மாநகரை பரிபாலனம் செய்தனர்.

நன்றி - Muniraj Vanathirayar 

Saturday, March 23, 2019

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டியர் ஆவணங்களில் கள்ளர்கள்

தஞ்சையை 17 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் மராத்திய மன்னர்கள். இவர்களது ஆட்சிகாலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கணக்கு வழக்குகள் உட்பட பல சுவையான தகவல்களை  "மோடி" ஆவணங்கள் எனும் பெயரில் பாதுகாத்து வந்துள்ளனர்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பழமையான மோடி ஆவணங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மோடி ஆவணங்களில் கள்ளர் இனத்தவர்கள் பற்றிய குறிப்புகள் கள்ளர்களின் அன்றைய சமூக நிலை மற்றும், வாழ்க்கை முறை, தஞ்சை கள்ளர் பாளையங்கள் பற்றிய பல தகவல்களை தருகிறது. அவற்றை காண்போம்.

தஞ்சை கள்ளர் பாளையங்கள்:-

கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி "தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் ( கிபி 1780-1790) காலக்கட்டம் ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில் இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம்.
(தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)

இதே கருத்தை வேங்கடசாமி நாட்டாரும் தனது " கள்ளர் சரித்திரம்" நூலில் கூறியுள்ளார். மேலும் தஞ்சையின் 13 பாளையங்களில் 11 பாளையங்கள் கள்ளர் வசம் இருந்ததாக நாட்டார் குறிப்பிட்டுள்ளார். ( கள்ளர் சரித்திரம்: வேங்கட. நாட்டார் பக் :65)

தஞ்சையில் இருந்த 13 பாளையங்களில் 10 பாளையங்கள் இன்றும் கள்ளர் ஜமீன்களாகவே உள்ளனர். இன்று கள்ளர் வசமுள்ள ஜமீன்கள் : கண்டர்கோட்டை, பாலையவனம், பாப்பா நாடு, கல்லாக்கோட்டை, சிலத்தூர், பாதரங்கோட்டை, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், புனல்வாசல் ஏனைய 3 பாளையங்களில் முக்குலத்தோரின் மற்ற பிரிவினர் வசமே உள்ளது.





கள்ளர்குல அறந்தாங்கி தொண்டைமான் பாளையம் :-

கிபி 1827ல் எழுதப்பட்ட மோடி ஆவண குறிப்பில் " தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சில ஊர்களுக்கு மெய்க்காவல் ஆயிருந்த தொண்டைமான் பாளையப்பட்டு காரருக்கு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்ட பாளையம் அறந்தாங்கி தொண்டைமானின் பாலையவனம் ஆகும்.
( தஞ்சை மராத்தியர் மோடி ஆவணம் Vol 1 page 23)

கிபி 1739 மற்றும் 1740 ஆம் ஆண்டுகளில் அறந்தாங்கி தொண்டைமான்களால் வெளியிடப்பட்ட பெருவயல் செப்பேடு 1 மற்றும் 2 ல், வணங்காமுடி தொண்டைமான் மற்றும் முத்து தொண்டைமான் ,ஆகியோர் தஞ்சை நகராதிபதி மகாராஜா சாயிபு என தஞ்சை மன்னர் பிராதப சிம்ம ராஜாவை குறித்துள்ளனர். எனவே (கிபி 1739-1740) காலக்கட்டத்திலேயே அறந்தாங்கி தொண்டைமான்கள் தஞ்சை மராத்தியர் மேலாண்மையை ஏற்று விட்டனர் என விளங்குகிறது.

கிபி 1816 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குப்பட்டிணம் செப்பேட்டில், ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானும், பெரியதம்பி காலிங்கராச பண்டாரத்தாரும் அளித்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னருக்கான எந்த அடைமொழிகளும் இந்த செப்பேட்டில் காணப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் அறந்தாங்கி தொண்டைமான்கள் சாதாரண பாளையக்காரராக, மெய்க்காவல் பொறுப்புகளை சில ஊர்களுக்கு ஏற்கும் அளவுக்கு வலுவிழந்து இருந்தனர். ( தொண்டைமான் செப்பேடுகள், புலவர் இராசு) .

இந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமான், பாலையவன ஜமீன் குடும்பத்தார் என்றும் முற்காலத்தில் தொண்டைமான் பட்டத்தை பயன்படுத்திய இந்த ஜமீன்தார்கள் தற்போது வணங்காமுடி பண்டாரத்தார் எனும் பட்டத்தை மட்டும் பயன்படுத்துவதாக (List of inscriptions and sketches of dynasties of southern india, robert sewell :1884) நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணங்காமுடி எனும் பட்டத்தை அறந்தாங்கி தொண்டைமான்கள் பெற்ற விதம் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் தசரா விழா காலத்தில் தஞ்சை மன்னரை அனைத்து குறுநில தலைவர்களும் நேரில் கண்டு வணங்கி வரும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால் அறந்தாங்கி தொண்டைமான் தஞ்சை மன்னரை சந்திக்க தான் செல்லாமல் தன்னுடைய பிரதிநிதியை அனுப்பி வைத்ததால், மன்னருக்கு தலைவணங்காதவர் எனும் குறிக்கும் விதமாக வணங்காமுடி என பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வணங்காமுடி எனும் பட்டம் அறந்தாங்கி தொண்டைமான்களால் கிபி 1600 களில் இருந்தே பயன்படுத்தப்படுவதை அவர்களின் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இன்றும் பாலையவன ஜமீன்களால் வணங்காமுடி பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

1930-ம் ஆண்டு கல்வெட்டு எண் 233-ல் கிபி 1482 ல் ஏகப்பெருமாள் தொண்டைமான் காலத்தில், பொதுமக்கள் தங்களுக்கு அநீதி ஏற்பட்டால் கள்ளப்பற்றில் முறையிட்டு நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நீதி பரிபாலனம் செய்யும் இடமாக இருந்துள்ளது.

கல்வெட்டு எண் 341 of 1925 , பட்டுக்கோட்டை சீர்மையில் கள்ளப்பற்று என அறந்தாங்கியை கிபி 1684 ல் குறித்துள்ளது. அறந்தாங்கி கள்ளர்களின் ஆளுமையில் இருந்துள்ளதை இந்த கல்வெட்டு விளக்குகிறது.
.
ஆவுடையார்கோயிலில் உள்ள ஆவுடைநாதர் கோயிலில் 9 ஆம் மண்டகப்படிதாரர்கள் பாலையவனம் ஜமீன்தார்கள் என்பது கூடுதல் தகவல்

பாளையப்பட்டுகள் அனைத்தும் கள்ளர்கள் வசம் இருந்தது என "மோடி" ஆவணங்கள் குறிப்பிட்டதை கண்டோம்.

நம்ராம்பட்டி கள்ளர்கள் :-(கிபி 1799)

கிபி 1799 ல் கள்ளர் பாளையப்பட்டை சேர்ந்த நம்ராபட்டி எனும் ஊரில் யேகரமூர்த்தி என்பவரின் குதிரை வயலில் மேய்ந்ததால் கள்ளர்கள் குதிரையின் காதையும், வாளையும் அறுத்துவிட்டார்களாம். அதற்கு கள்ளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யேகமூர்த்தி என்பவர் மராத்திய மன்னரின் பிரிதிநிதியாக இருக்கலாம்.

மழைவேண்டி கள்ளர்களின் பூஜை ( கிபி 1776)

கிபி 1776 ல் கள்ளப்பற்றில், மழை வேண்டி , வருண ஜெபம் , ருத்திராபிஷேகம், ஆகியவை 45 நாட்களுக்கு செய்யப்பட்டுள்ளது. இவற்றை செய்ததற்கான செலவு கணக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் கள்ளர்களிடம் இறை நம்பிக்கை மிகுந்து வேத மந்திரங்களில் நம்பிக்கையுடையவர்களாக இருந்துள்ளனர் என அறியமுடிகிறது.

வெங்கடாசல சிங்கப்புலியார்(1787)

கிபி 1787 ல் வெங்கடாசல சிங்கப்புலியார் தனக்கு பாளையப்பட்டு ஏற்படுத்தப்பட்டதை பற்றி குறிக்கப்பட்டுள்ளது. சிங்கப்புலி எனும் பட்டம் கல்லாக்கோட்டை மற்றும் பாதரங்கோட்டை ஜமீன்களால் உபயோகிக்கப்படுகிறது.

கல்லாக்கோட்டை பாளையம்

கள்ளப்பற்றான, கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜய ரகுநாத முத்து விஜய சிங்கப்புலியார் காலத்தில் சிவன் ராத்திரியை முன்னிட்டு களச்சிக்காய் எனும் பருப்பு வகை நான்கு படி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சமஸ்தானத்திற்கு அளித்து இருக்கலாம். தஞ்சை சமஸ்தானத்திற்கும், கல்லாக்கோட்டை ஜமீனுக்கும் சமூகமான உறவு நிலவியுள்ளது.

தொண்டைமானுக்கு நாய்களை பரிசளித்தல் ( 1791)

கிபி 1791 ல் தொண்டைமானுடைய மனிதர் வந்திருந்ததாகவும் அவருக்கும் நாய்களை அளித்ததாகவும் தஞ்சை மன்னர் மோடி குறிப்பு கூறுகிறது. இது புதுக்கோட்டை - தஞ்சை மன்னர்களுக்கு இடையே சுமூக உறவு நிலவிய காலமாக இருக்கலாம்.

தஞ்சை மன்னரை சந்தித்த கல்லாக்கோட்டை பாளைய தலைவர்(1846)

கல்லாக்கோட்டை பாளையத்தின் தலைவர் விஜயரங்கநாத சிங்கபுலியார் அவர்களுடைய பிள்ளையுடன் தஞ்சை மன்னர் இரண்டாம் சிவாஜியை சந்தித்த போது ரூ 11 பணம் அன்பளிப்பாக அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தஞ்சை மன்னருக்கும், கல்லாக்கோட்டை பாளையத்திற்கும் இடையேயான நல்லுறவு தொடர்ந்து வந்துள்ளது.

குத்தகைக்கு விடப்பட்ட பாளையப்பட்டு நிலங்கள் ( 1850)

கிபி 1850 ல் குத்தகை விடப்பட்ட நிலங்கள் சமந்தமுள்ள பாளையப்பட்டுகள் குறிக்கப்பட்டுள்ளது. அவையாவன:- அத்தவெட்டி, சேந்தங்குடி, கோனூர் , சிலட்டூர், கல்லாக்கோட்டை, புனல்வாசல், பாப்பாநாடு, நெடுவாசல், மதுகூர், கண்டர்க்கோட்டை ஆகியன. இந்த பாளையம் சமந்தமுள்ள கணக்காய்வு குறிப்புகள் தரப்பட்டுள்ளது.

கல்லாக்கோட்டை/ கண்டர்க்கோட்டை( 1832)

கிபி 1832ல் கல்லாக்கோட்டை பாளையத்திற்கும், கண்டர்கோட்டை பாளையத்திற்கும் ஒரு விசயம் தொடர்பாக விவாதம்( வழக்கு) இந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதம் தொடர்பாக தஞ்சை மன்னரை நாடியிருக்கலாம்.

கள்ளர் சீமை சிலட்டூர்/ நெடுவாசல் ( 1788)

தஞ்சை மன்னர் அமரசிங்கு காலத்தல் கள்ளப்பற்று சீமையில் இருந்த ராமாசாமி பன்றிக்கொண்டாரின் பாளையப்பட்டு நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையம் ஆகியவற்றின் தாயாதி( ஆதி) கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட குறிப்பும் உள்ளது. நெடுவாசல் மற்றும் சிலட்டூர் பாளையங்கள் இங்கு கள்ளர் சீமையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ( கிபி 1861)

நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் நிலம் தொடர்பாக அளித்த சாசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மிராசுதாரர்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளனர். இன்றும் நாஞ்சிக்கோட்டையில் மண்ணையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழ்கின்றனர். இந்து எதிர்ப்புப் போராளி, முள்ளிவாயக்கால் முற்றம் அமைக்கப் பாடுபட்ட நடராஜன் மண்ணையார் நாஞ்சிக்கோட்டை அருகில் உள்ள விளார் கிராமத்தை சேர்ந்தவராவார்.

கிளாக்குடையார்கள் (1831)

நாராயணன் கிளாக்குடையார் மற்றும் அவரது மகன் கிருஷ்ண கிளாக்குடையார் ஆகியோர் பிறரிடம் இருந்து மனைகளை வாங்கியது பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. கிளாக்குடையார்களொ பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் தஞ்சையில் வாழ்கின்றனர். புகழ்ப்பெற்ற நடிகை மனோரமா கிளாக்குடையார் பட்டம் கொண்டவராவார்.

கள்ளப்பற்று கண்டர்கோட்டை பாளையம் ( கிபி 1798)

கிபி 1798 ல் கண்டர்கோட்டை பாளையக்காரர் அச்சுதப் பண்டாரத்தார் காலத்தில் தஞ்சை மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இரண்டு மூன்று உள்ளது. அனைத்தும் ஒரே தகவலை கொண்டுள்ளது. முற்காலத்தில் கோனூர் நாடு கண்டர்கோட்டை பாளையப்பட்டில் சேர்ந்திருந்ததாகவும், பிற்காலத்தில் அது தஞ்சையுடன் இணைந்ததாகவும், கோனூர் நாடு, சந்தை மற்றும் ஆயம் உள்பட அனைத்தையும் முன்பிருந்தவாறே கண்டர்கோட்டை பாளையத்துடன் இணைத்திடவும் அதற்கு உரிய உடன்படிக்கைக்கு தயார் எனவும் கண்டர்க்கோட்டை பாளைய தலைவர் அச்சுதப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்றை சேர்ந்த கண்டர்கோட்டை பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோனூர் பாளையப்பட்டும் கண்டர்கோட்டை எனும் பெரிய பாளையத்தோடு முன்பிருந்ததை இந்த ஆவணம் விளக்குகிறது.

தஞ்சை மன்னர்கள் வரலாற்று குறிப்புகளான மோடி ஆவணங்களின் மூலம் நாம் அறியும் முக்கிய தகவல்கள், தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைக்கும்போது அவர்களுக்கு எதிராக இருந்தவர்கள் வாள் வீச்சு வீரர்களான கள்ளர்கள் மட்டுமே. கள்ளர்களை சமாதானப்படுத்தவே, பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சையின் பாளையங்கள் இருந்த பகுதிகள் அனைத்தும் கள்ளர் பற்று என்றே குறிக்கப்பட்டுள்ளது மூலம் கள்ளர்கள் அப்பகுதியில் மிகுந்து ஆதிக்கத்தோடு 13 பாளையங்களை உருவாக்கி வாழந்துள்ளனர் என்பது விளங்கும். சோழ பேரரசின் வாரிசுகள் அல்லாமல் வேறு யாரால் தஞ்சையில் ஆதிக்கம் செலுத்த இயலும்?!

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

நாட்டார் பட்டயம் - கள்ளர் மறவர்



சில வரலாற்று சிறப்புமிக்க பட்டயங்களை பார்க்கும் போது சில புதிர்களை உடைத்தெரிகிறது.

அப்படிப்பட்ட பட்டயம் தான் “நாட்டார் பட்டயம்”

கிபி1853ஆம் ஆண்டு சித்திரை 24ம் தேதி சர்க்கரைப் புலவர் இயற்றிய இராமயண பிரசங்கத்திற்காக தானமளித்த நாட்டார் பட்டயம் ஆகும்.

இதில் அஞ்சுகோட்டைப் பற்று நாட்டார்களாகவும், அம்ப்லங்களாகவும் கள்ளர், மறவர்கள் மற்றும் பிள்ளைமார்கள் வருகிறார்கள், இப்பட்டயத்தில் கள்ளர், மறவர் என பிரிக்காமல் அம்பலகாரர்கள் என ஒரு குடையின் கீழ் வருவது தனிச் சிறப்பாக உள்ளது.

மேலும் இதில் கிளைவழி கள்ளர் அம்பலகாரர்களுக்கு தேவர் பட்டம் வருவது பல புதிருக்கு விடை தருகிறது.

அனைத்தையும் விட என்னிடம் கப்பலூர் வள்ளல் ஐயா கருமாணிக்கத் தொண்டைமான் வம்சத்தை சேர்ந்த கரிய மாணிக்கம் இராமசாமி அம்பலம் அவர்கள் அவர்களுடைய குடும்ப பெயர் கரி(ரு)யமாணிக்கம் என்று கூறிய உன்மை நிரூபிக்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த பட்டயம் கிபி 1853 காலத்ததைச் சேர்ந்தது. இப்போது உள்ள அவரின் தலைமுறைக்கு சுமார் 5 தலைமுறைக்கு முந்தையது.

இப்போது அவரின் பெயர்
கரிய இராமசாமி அம்பலம்
தந்தை கரிய மாணிக்கம் அம்பலம்
தாத்தா கரிய இராமசாமி அம்பலம்
கொள்ளுத் தாத்தா கரியமாணிக்கம் அம்பலம் என்றார்.

இப்போது அவரின் கொள்ளுத் தாத்தாவின் முன்னோர் பெயரும் அதையே தாங்கி நிற்கிறது என்பது கப்பற் கோவையின் நாயகர் கப்பலூர் கருமாணிக்கத் தொண்டைமான் வம்சாவழியை இன்னும் உறுதிபடுத்துகிறது.

இதுபோக படை கண்டான் அம்பலம் எனப்படுகிற கண்ணங்குடி கள்ளர் அம்பலத்தின் குடும்ப பெயரும் அதையே தாங்கி நிற்கிறது, 800 வருடத்திற்கு முந்தைய சிங்களப் படையெடுப்புக்கு இதே பெயர் தமிழ் படைத்தளபதியாக வருவது இன்னும் வியப்பளிக்கிறது.





நாட்டார் பட்டயத்தில் வரும் அம்பலகாரர் பெயர்கள்:

கள்ளர் அம்பலங்கள்:

கரியமாணிக்கம் (கப்பலூர்)
படைகண்டான் (கண்ணங்குடி)
ஆண்டியப்பன் அம்பலம் (ஆற்றங்கரை மாகாணம்)
அனுமத்தேவன் (இறகுசரி)
திடக்கோட்டை தேவன் (வெங்கலூர்)
மல்லித்தேவன் (வெங்கலூர்)
திருக்காட்டி தேவன் (வெங்கலூர்)
உடைச்சி (இலுப்பைகுடி)
ஆண்டான் (ஆயங்குடி)
சின்ன கள்ளப்பத்தான் (ஆலம்பாடி)
பொன்னாண்டான் (கப்பலூர்)
முன்னையன் (களபத்தூர்)
உடைச்சியன் (சிறுகல்)
வணங்காமுடி (அனுமந்தகுடி)
சாத்தப்பன் (திருப்பாக்கோட்டை)
கருதேவன் (மணக்குடி)

மறவர் அம்பலங்கள்:

உடையார் (ஓரியூர்)
வெள்ளையத் தேவன் (பஞ்சாவயல்)
சுப்பாத்தேவன் (பஞ்சாவயல்)
வடுகத் தேவன் (நாலூர்)
கோரணி (பனங்குளம்)
வளை சித்திரன் (திருத்தல்)
சீனி (திருத்தல்)
கருமலைத்தேவன் (அஞ்சுகோட்டை)
சின்னாதித்தேவன் (அஞ்சுகோட்டை)
மல்லாரித் தேவன் (பிள்ளையாரேனேந்தல்)
ராக்கத்தேவன் (கிளியூர்)
மன்னங்காரன்
கருப்பன் (மருதங்குடி)
கட்டத்தேவன் (ஆக்களூர்)
ஆவணியாத்தேவன் (ஆக்களூர்)
பேயத்தேவன் (ஆக்களூர்)

மேலும் சில அம்பலங்களின் ஊர்கள் இன்று மருவியுள்ளதால் அடையாளம் காண முடியவில்லை.

மருவிய ஊர் பெயர் யாருக்காவது தெரிந்தால் என்னிடம் தகவல் கொடுங்கள், மேலும் இதில் வரும் அம்பலங்களின் குடும்பங்கள் யாராவது இருந்தாலும் தகவல் கொடுங்கள்.

தகவலுக்காக காத்திருக்கிறேன்

குறிப்பு: இச்சிறப்பு மிக்க நாட்டார் பட்டயம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Friday, March 22, 2019

Tuesday, March 19, 2019

பாண்டியர் காலத்து கள்ளர் காணி நிலங்கள்




சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அளகாபுரி அளகமணீஸ்வரர் கோவில் கல்வெட்டில்.

பாண்டிய மன்னர் ஶ்ரீசுந்தரபாண்டித் தேவர் ஆட்சியாண்டான கிபி1228ஆம் ஆண்டு தேவதானமாக ஊர் நிலங்கள் கிளிப்பற்றுடையானுக்கு வழங்கப்படுகிறது.

கல்வெட்டில் உள்ள விளக்கமானது அதளையூர் நாடாள்வார் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் கேரளசிங்க வளநாட்டு (புதுக்கோட்டை, சிவகங்கை) சேர்ந்த கிளிப்பற்றுடையானுக்கு தேவதானமாக,அதளையூர் நாடாள்வாரின் கோவில் நிலங்கள் மற்றும் கள்ளர் நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும் கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது. தானமாக வழங்கப்பட்ட நிலங்களில் இருக்கும் வரிகள் அப்படியே இருக்க கடவாராகவும் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோர்:
அதளையூர் நாடாள்வார் (தொண்டைமான்)
முனையத்தரையர்
சுந்தரபாண்டிய விழுப்பரையர்
வாதராஜன்
திருமலையுடையான் சேதிராயர்
பல்லவரையர்

குறிப்பு: ஏதோ கள்ளர்கள் திருடர்கள் என்று பிதற்றும் மூடர்களே, பாண்டிய மன்னர் காலத்திலே கள்ளர்களுக்கென்று தனிக்காணி நிலம் இருந்துள்ளது, அதுபோக கள்ளர் காணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருந்தால் அது கோவில் நிலத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தோடு சேர்த்து ஒப்பீடு செய்யப்படுகிறது. இதில் வரும் கள்ளர் காணி முறையே ஏழுகிளை கள்ளர்கள், புதுக்கோட்டை கள்ளர்கள், மல்லாக்கோட்டை கள்ளர்கள் என கலந்து வரும் நில எல்லையாக வருவது தனிச்சிறப்பு.

மேலும் இதில் வரும் விழுப்பரையர், முனையத்தரையர், அதளையூர் நாடாள்வார், சேதிராயர், பல்லவரையர் முதலானோர் கள்ளர் சிற்றரசர்கள் என்பது தனிச்சிறப்பு.

கல்வெட்டு :2
மன்னர் : சுந்தரபாண்டித் தேவர்
ஆட்சியாண்டு : கிபி1231

அதே கேரளசிங்க வளநாட்டு கிளிப்பற்றுடையானுக்கு தானமாக அதலையூர் நாடாள்வாரின் ஆட்சி பகுதியில் உள்ள கோவில் நிலம் மற்றும் கள்ளர் காணியயும் நீக்கி வழங்கப்படுகிறது.

கையொப்பம்:
அதளையூர் நாடாள்வார்(தொண்டைமான்)

கள்ளர் படைப்பற்று, கள்ளர் காணி என்று இராணுவம், நிர்வாகமும் சோழ, பாண்டியர் காலத்திலே கள்ளர் பெருமக்கள் எவ்வளவு வலிமையாக அரையர்களாகவும், மன்னர்களாகவும், தளபதிகளாகவும், நாடாள்வார்களாகவும் வாழ்ந்துள்ளதை இன்றுள்ளவர்கள் மறைக்கலாம், மறுக்கலாம்.
ஆனால் வரலாற்று தாய் யாருக்காகவும் அதை வளைக்க மாட்டாள்.

நன்றி
தமிழக தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Saturday, March 16, 2019

நாயக்கர்பாளையம் : கள்ளர் பாளையக்காரர் சாவடி நாயக்கர்


தஞ்சை நாயக்கர் காலத்தில், அரசு அதிகாரியாக கள்ளர் குடியை சேர்ந்த அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் நியமிக்கபட்டவர்கள் (கள்ளர்-நாயக்கர் என்ற பட்டம்) . அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம். முதல் மரியாதைக்கு உரியவர்கள்.

சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன் மகன், மராட்டியத்தின் அடுத்த அரசன் ராஜாராம் என்கிற ராமராஜவுடன் தப்பித்து செஞ்சி வந்து, பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு வருகிறார்கள். தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி துக்காவுபாய் மகன். தன் சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி, அவர்களை தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) சாவடி நாயக்கர் பொறுப்பில் முழு பாதுகாப்புடன், அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார். அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு, சேவகர்களுக்கான குடியிருப்பு ஏற்படுத்தி, சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி, அருகில் உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி கொண்டிருந்தார்கள்.

ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள். சாவடி நாயக்கர் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த, ராஜாராம் மராட்டியத்தின் மன்னனாகிறார்.




#சௌராஷ்டிர சமூக மக்கள் மானம் காத்த சாவடி நாயக்கர் :

‌சௌராஷ்டிர சமூக மக்கள் திருச்சி ஜில்லா அரியலூர் தாலுகாவில் வாழ்ந்து வந்தனர் இன்றளவும் பட்டுநூல்காரர் தெரு என்று இரண்டு தெருக்கள் உள்ளது செட்டிகுளம் என்ற ஊரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற எண்ணத்திலும் உடையார்பாளையம் ஜமீன்தார் சௌராஷ்டிர மக்களிடம் அவர்கள் வீட்டில் புதிதாக பூப்பெய்திய பெண்ணை ஜமீன்க்கு தரவேண்டும் என்று காம இச்சையுடன் கட்டளை இட்டான்.

இது நாள் வரை பல நாடுகள் கடந்து வந்த சௌராஷ்டிர மக்களுக்கு ஏற்படாத சோதனை உடையார்பாளையம் ஜமீன் மூலம் ஏற்பட்டது. சௌராஷ்டிர சபையார் கூடி என்ன செய்வது என்று விவாதித்தனர். நாளைய தினம் ஒரு புது பெண்ணை அனுப்பவேண்டுமே என்று கலங்கி நின்றனர். அப்போது நம்மில் மந்த்ர தந்த்ரம் தெரிந்த சௌராஷ்டிர பிராமிணர்கள் ஒரு உபயம் செய்தனர். மாவினால் ஒரு பெண் உருவத்தை பிண்டமாக செய்து அதை உடையார்பாளையம் ஜமீன் அனுப்பி வைத்த பல்லக்கில் ஏற்றி அனுப்பிவிட்டு , சௌராஷ்டிரர்கள் தத்தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஊரை காலி செய்து விட்டு தஞ்சையை நோக்கி கால்நடையாக கிளம்பிவிட்டனர்.

‌போகும் வழியில் திருமானுர் ஏலாகுறிச்சி அருகே ‘கொள்ளா நீரும் கொள்ளும் இடம்’ என்பார்கள் கொள்ளிடத்தை. கரை புரண்டு ஓடி காவியங்களில் இடம்பெற்ற அந்தக் கொள்ளிடத்தின் வடகரையில் நாயக்கர்பாளையம் என்ற பகுதியில் சாவடி நாயக்கர் பெயரை உடைய ஜமீன் நீதி வழுவாது ஜமீனை பரிபாலனம் செய்து வந்தார். அவரிடம் சௌராஷ்டிர சமூக மக்கள் சரணடைந்த போது , சௌராஷ்டிர சமூக குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் அனைவரும் சோர்வுற்ற நிலையில் இருத்ததை கண்ணுற்று அனைவர்க்கும் உணவு படைத்து அஞ்சாதீர் எனக்கு சொந்தமான சாவடி ஒன்று அய்யம்பேட்டை அருகில் உள்ளது அந்த இடத்தில் நீங்கள் குடியேறி நிம்மதியாக வாழலாம் என்று ‌ மனோஜியப்பா சாவடியில் சௌராஷ்டிர மக்களை குடியமர்த்தியோதோடு அல்லாது இவரும் சாவடியில் தாங்கினார்.

‌உடையார்பாளையம் ஜமீன் பல்லக்கில் சென்ற பெண் உருவத்தை ஜமீன் ஆசையோடு நெருங்கியபோது அந்த பெண்ணுருவம் கீழே விழுந்து விட்டது. முதலில் பயந்த ஜமீன் பிறகு சுதாரித்து சௌராஷ்டிரர்கள் நம்மை ஏமாற்றிவிட்டானர் என்று கொதித்து எழுந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்று சூளுரைத்து தன் வீரர்கள் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினான்.

சௌராஷ்டிரர்கள் தஞ்சை‌க்கு அருகே அய்யம்பேட்டை மனோஜியப்பா சாவடியில் பிரதாப சாவடி ஐயாவின் ஜமீனில் அடைக்கலம் பெறுள்ளனர் என்ற செய்தியை அறிந்து உடையார்பாளையத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு சாவடி ஐயா வீட்டிற்கு வந்தான். சாவடி ஐயாவும் உடையார்பாளையம் ஜமீனை வரவேற்று உணவு உண்ண அழைத்தார். ஊர் மக்களும் என்ன நடக்கபோகிறது என்று பதைத்து நின்றனர். சாவடி ஐயா தன் பணியாள் மூலம் பேயன் வாழை இலையை பறித்து வரசெய்து அதில் உணவு பரிமாறினார். பேயன் வாழை இலை மிகவும் பெரியதாக இருக்கும். உடையார்பாளைய ஜமீன் அமர்ந்து உணவு அருந்த கைக்கு எட்டாத தொலைவில் இருந்தது.

‌என்ன ஐயா எட்டவில்லை என்று உடையார்பாளையம் ஜமீன் கேட்டபோது ஆமாங்க ஐயா உங்களுக்கும் எங்களுக்கும் எட்டதுங்க என்று கூறிவிட்டார். கோபத்துடன் உடையார்பாளையம் ஜமீன் வெளியேறினான். அவனுடன் நமது சாவடி ஐயாவின் ஒற்றனையும் கலந்து அனுப்பிவிட்டார். உடையார்பாளையம் ஜமீன் போகும் வழியில் தன் வீரர்களிடம் இன்னும் இருவாரத்தில் சாவடி ஐயாவின் தலையை கொய்துவிட்டால் இந்த சௌராஷ்டிர மக்கள் அதன்பின் என்னிடம் என்ன பாடுபடபோகிறார்கள் என்று ஆணவ சிரிப்பு உதித்தான்.

‌விவரங்கள் யாவும் தன் ஒற்றன் மூலம் அறிந்த நமது சாவடி ஐயா தன்னுடைய ஆளை அனுப்பி உடையார்பாளையம் சென்று உடையார்பாளையம் ஜமீன் தலையை கொய்து எடுத்து வந்து சாவடியில் வைத்து சௌராஷ்டிர மக்களின் பயம் கலையப்பட்டது.

சௌராஷ்டிர சமூக மக்கள் தமக்குள் உள்ள சர்ச்சையை சாவடி ஐயாவிடம் முறையிட்டு தீர்த்து கொள்வர். கிருஷ்ணன் கோவில் கட்ட இடம் தந்து சௌராஷ்டிர சமூக மக்களை பல இன்னல்களில் காத்ததால் பிரதாப சாவடி ஐயாவிற்கு கோவில் முதல் மரியாதை பரிவட்டம் முதலான சம்பிரதயங்கள் இன்றும் தரப்படுகிறது. அவரது முழு பெயர் தெரிந்தாலும் ஐயா என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

செப்பேடு உதவி : ஆய்வாளர் ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார்

தகவல் உதவி : திரு. கோபி ஸ்ரீனிவாசன் (சௌராஷ்டிரர்)

Saturday, March 2, 2019

சூரைக்குடி தொண்டைமான் - ஒரு தீர்வு


சோழர் ஆட்சிக்கு பின்பு 12 ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டு வரை அறியப்படும் தமிழகத்தின் கடைசி தொண்டை மன்னர்கள் மொத்தம் 4பேர்.

1.அறந்தாங்கி தொண்டைமான்
2.கருமாணிக்க தொண்டைமான்
3.சூரைக்குடி தொண்டைமான்
4.புதுக்கோட்டை தொண்டைமான்

இவர்கள் நால்வரும் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று முன்னாள் தொல்லியல் துறை இயக்குனர் புலவர் இராசுவின் புத்தகம் மூலமாகவும்,பல கல்வெடு மூலமாகவும்,இன்றைய கள்ளர்களின் மானுடவியல் மூலமாகவும் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்.

அறந்தாங்கி தொண்டைமான் அரசரின் வாரிசு இன்று பாலைவன ஜமீந்தார் இன்றும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.

கருமாணிக்க தொண்டைமான் அரசரின் வாரிசு இன்று கப்பலூர் நாட்டு அம்பலமாக இன்றும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.

புதுக்கோட்டை தொண்டைமான் அரசரின் வாரிசைப் பற்றி சொல்லவே வேண்டாம் அவர்களும் கள்ளராகவே வாழ்ந்து வருகிறார்.

சூரைக்குடி தொண்டைமான் அரசு கள்ளர் மக்களோடு மக்களாக கரைந்து விட்டதால் வாரிசுதாரரை அடையாளம் காண முடியாத சூழலில் இருந்தாலும் ஆதாரங்கள் அடிப்படையில் அவரும் கள்ளர் குடியே.

அதலையூர் நாடாள்வார், அரையர், பேரரையர் என்றும் அஞ்சுக்குடி அரையர்,வன்னியனார் என்றும் சுரைக்குடி தொண்டைமான் குறிக்கப்படுகிறார்.

சூரைக்குடி தொண்டைமானாரை பற்றிய என்னுடைய பழைய பதிவை புரட்டினாலே தெரியும்.

கிபி 1891 வரை கள்ளர்களில் ஒரு பிரிவினர் அதலையூர் கள்ளர்கள் என்றே வாழ்ந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 300க்கும் மேற்பட்ட வன்னியர் பட்டம் தாங்கிய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

கள்ளர் பற்றை தானமாக வழங்கியதற்கு அதழையூர் நாடாள்வார் கையொப்பம் இட்டுள்ளார்.




கிபி 1359ல் சூரைக்குடி கள்ளர் பற்றை துக்ளக் படைகள் அழித்த சான்றும் உள்ளது.

கண்டதேவி கல்வெட்டில் கள்ளர் தலைவராக வன்னியர் குறிக்கப்பட்டுள்ளார்.

அம்புகோவில் கல்வெட்டில் அஞ்சுக்குடி அரையர் கள்ளர் என்றும் குறித்துள்ளது.

கிபி1891ல் அஞ்சுவர் நாட்டு கள்ளர்கள் தனியாகவே குறிக்கப்பட்டுள்னர்.

இது போக தொண்டைமான் என்றாலே கள்ளர் சமூகத்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகவே உள்ளது.

ஆனால் ஒரு கல்வெட்டு கிட்டத்தட்ட 3ஆண்டுகளாக முக்குலத்தோர் பிளாக்குகளில் சூரைக்குடி தொண்டைமான் மறவர் என்று கூறி வருகிறார்.

மறவர்கள் கள்ளர்களின் பாகப்பிரிவு பங்காளிகள் என்பது மறுக்க முடியாத கருத்து தான்.

அவர்கள் கூறும் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆரியூர் என்கிற கிராமத்தில் ஈஸ்வரர் கோவிலுக்கு கொடையளித்த செய்தியில் இருந்து காண்பிக்கிறார்கள்.

அதாவது “மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் பேரரையன்” என்று உள்ளது அதனால் அவர் மறவர் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறி வருகிறார்கள்.

அவர்கள் காட்டும் ஆதாரத்தில் உண்மையாகவே அந்த கல்வெட்டில் “மாங்குடி மறவன் அவையன் சாத்தநா...., அதலையூர் பேரரையர்நும்” என்று உள்ளது

இந்த கல்வெட்டில் மாங்குடி மறவனும், அதலையூர் பேரரரையரும் தனித்தனியாக தானம் செய்துள்ளனர்.

மேலும் அந்த கல்வெட்டை வரலாற்று ஆர்வலர் சியாம் சுந்தர் சம்பட்டியார் ஆரியூரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு நேரடியாக சென்று அதனை படம் எடுத்து இருவரும் தனித்தனியாகவே வருகிறார்கள் என்று ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்.

உயிரோட்டம் உள்ள அந்த கல்வெட்டில் “மாங்குடி மறவன் அவையன் சாத்தநாநும், அதலையூர் பேரரையநும்” என்று தனித்தனியாகவே வருகிறார்கள்.

மேலும் கல்வெட்டில் வரும் இந்த மாங்குடி மறவன் என்பவர் ஆரியூரில் இருந்து வெரும் 2 கிலோமீட்டர் தொலைவில் தான் மாங்குடி ஊர் உள்ளது.

ஆக ஒரு கள்ளரும்,மறவரும் சேர்ந்து ஒரு சிறிய கோவிலுக்கு கொடையளித்துள்ளனர்.

இது ஒரு ஒற்றுமையின் அடையாளம் ஆனால் இதை வைத்துக்கொண்டு தொண்டைமான் என்றாலே மறவர் தான், கள்ளர் என்போர் களவாணிப் பயல் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

சரி இது கள்ளர்,மறவருக்கு நடக்கும் பங்காளிப் பூசல் அது எப்பவும் நடப்பது தான். ஆட்டுக்கறிக்கு அடித்துக் கொள்வார்கள், கோழிக் கறிக்கு கூடிக்கொள்வார்கள்.

இந்த கல்வெட்டை வைத்து வல்லம்பர்களில் சிலர் அதில் சாத்தான் என்று வந்துள்ளது, சாத்தான் வணிகத்தலைவர், வணிகத்தலைவர் என்றாலே நாங்கள் தான் ஆகையால் சூரைக்குடி தொண்டைமான் வல்லம்பர் என்று ஒரு புறம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எந்தவிதத்தில் நியாயம்..?

வேறு ஏதாவது ஆதாரம் இருந்தால் நீங்கள் தாராளமாக உரிமை கோரலாம்.

இனிமேல் இந்த ஆதாரத்தை தூக்கிக் கொண்டு வர வேண்டாம், உங்கள் மானசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.

குறிப்பு: நாகரீகமான விவாதத்திற்கு தயார்.

நன்றி
உயர்திரு சியாம் சுந்தர் சம்பட்டியார்

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...