Thursday, March 15, 2018

திராவிடத்தை தூக்கி எறிந்த தினகரன்


தினகரனின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். மேடையில் அவருக்கு தமிழ்க் கடவுளான முருகனின்ன சின்னமான வேல் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர் திராவிடத்தை விட்டு விலகி விட்டதைக் காட்டுகிறது.

கொடியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளார். கொடியில் இனப்பகை ஈவெராவின் படமோ, திராவிட நாடு பற்றி பேசிப் பின்னர் அதைக் கைவிட்ட அண்ணாவின் படமோ இருப்பதை விட ஜெயலலிதாவின் படம் இருப்பது ஒன்றும் பெரிய குறை அல்ல.

நான் ஏற்கனவே சொன்னது போல தினகரன்தான் அடுத்த அதிமுகவின் தலைவர் என்பதை பாஜக தனது சொந்த செலவில் விளம்பரம் செய்தது. அதுவே அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பும் தலைவராக தினகரனை மாற்றியுள்ளது.

இந்த நிலையில் அவர் அடுத்த முதல்வராகவும் தமிழர்களின் சிறந்த ஆளுமையாகவும் ஆக அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. எனவேதான், தமிழ்த் தேசியம் பேசக் கூடிய என்னைப் போன்றோர் தினகரன் உண்மையிலேயே தமிழர்களுக்கான ஒரு தலைவராக வரவேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளையில் அதிமுகவின் அடுத்த தலைவராக மாறும் அவர் திராவிடத்தை உதறித் தள்ள அவருக்குள்ள சிக்கல்களையும், அதை அவர் எப்படி
சமாளிப்பார் அல்லது ஊடக, பொதுப் புத்திகளைக் கடந்து அவர் அதைச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு இருந்தது.

ஆனால் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் குக்கர் சின்னத்தில் பெற்ற மாபெரும் வெற்றி அவரை திராவிடத்தை தூக்கி எறியும் துணிச்சல் மிக்க மனிதராக மாற்றியுள்ளது என்று கருதுகிறேன். அதேபோல மத்திய ஆளும் பாஜகவிற்கு எழுதித் தராத அடிமைகளாக உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்களை மக்கள் தூக்கி எறிந்தார்கள். இந்த நிலையில் தினகரன் மத்திய அரசுக்கு, தேசிய கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதுவே தமிழ்த் தேசிய அரசியலாகும்.

எனவேதான் என்னைப் போன்ற உண்மையான தமிழத் தேசியவாதிகள் தினகரனை கூர்மையாக கவனித்து அவரது அரசியல் நகர்வுகளை கணித்து வருகிறோம். எங்களது நோக்கம் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே.

அதிமுக கட்சியிலிருந்து தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளவர்கள் தினகரன் திராவிடத்தை தூக்கி எறிந்து விட்டார் என்ற கருத்தை கிண்டல் செய்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தினகரன் திராவிடப் பாதையில் பயணித்தால் தமிழர்கள் அவரையும் தூக்கி எறிவார்கள் என்பதை காலம் சொல்லும். இல்லாவிட்டால் அவர் தமிழர் தலைவர் என்று கொண்டாடப்படுவார்.

Wednesday, March 14, 2018

(தமிழ் ராணுவம்) தென்னிந்தியா மற்றும் இலங்கையில் தோற்றமும் பரவலும் - பகுதி 1


பகுதி 1 - (தமிழ் ராணுவம்) தென்னிந்தியா மற்றும் இலங்கையில்  தோற்றமும் பரவலும்

தமிழ் ராணுவம் பற்றி  - டி. சிவராம்

அறிமுகம்

தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் தமிழ்தேசியத்தைப் பொறுத்தவரை அது இரண்டு வகை கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளால் ஆனவை என்று சொல்லலாம். ஒன்று தமிழின் தனித்தன்மை, ஒப்பற்ற தன்மை மற்றும் கலாச்சாரம். மற்றொன்று ராணுவ ஒழுக்கம் மற்றும் கருத்துக்களை புகழும் தமிழ் பாரம்பரியங்கள். இந்த கருத்துக்களும் நம்பிக்கைகளும் 1950 மற்றும் 1960-களில் தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மற்றும் பிரிவினை போரட்டங்களில் ஆதிக்கம் செலுத்தின. 1956-க்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மொழி உரிமைகள் மற்றும் மாநில சுயாட்சி பற்றி அதிகம் பேசப்பட்டது.

எல்டிடிஈயின் தேசியமும் இந்த இரண்டு கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே பேசப்பட்டது. ஆனால் ராணுவத்தில், ராணுவ ஒழுக்கம் மற்றும் கருத்துக்களை புகழும்தன்மை முதன்மையானதாக இருந்தது. அதுவே துவக்கத்தில் எல்டிடிஈயின் தமிழ்த் தேசிய கட்டமைப்பை வடிவமைப்பதாக இருந்தது. புலிகளின் நோக்கம் தற்கால ராணுவத்தை கட்டமைப்பது என்று  சொல்லப்பட்டது. (1) திறமையான மற்றும் நவீன ராணுவ அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ராணுவ கருத்து முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எல்டிடிஈ தனது ராணுவ அதிகாரிகளிடையே வழக்கமான தற்கால ஒழுக்க முறைகள், அமைப்பு மற்றும் பயிற்சிக்கு கூடுதலாக இந்தக் கருத்தை விதைத்தது. இந்தக் கருத்தை தமிழ் மக்களிடையேயும் பரப்புரை செய்தது. இதுவே கடுமையான, தொடர்ச்சியான  சண்டையிடும் ராணுவத்தை உருவாக்குவதற்கான சக்தி வாய்ந்த பண்டைக்கால ராணுவ பாராம்பரியத்தின் பகுதியாகும்.

புலிச் சின்னம் இந்தப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான வெளிப்பாடாக என்று கருதப்பட்டது.

பிரபாகரன் தமிழீழத்தின் தேசியச் சின்னமாக புலியை தேர்ந்தெடுக்க காரணம் உள்ளது. புலிச் சின்னம் திராவிட நாகரீகத்தில் ஊறியது. அது தமிழர்களின் ராணுவ வரலாறு (வீரவரலாறு) மற்றும் தேசிய எழுச்சியை காட்டும் சின்னமாக உள்ளதுநமது தேசியக் கொடி, உருவாக்கப்பட உள்ள சுதந்திரமான தமிழீழத்தின் சின்னமாகும். அது தமிழர்களின் ராணுவ பரம்பரையில் (வீர மரபுகள்) வேர்விட்டது.” (2)

 “திராவிட நாகரீகம்மற்றும் தமிழர் பாரம்பரியத்தில்தான் ராணுவம் வேர்விட்டது என்று எவ்வாறு எல்டிடிஈ-யால் வரையறுக்க முடிந்தது? இலங்கைத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தில் ஈடுபாடு காட்டி, அதன் மூலமே அவர்களால் கல்வி, அரசாங்க வேலைகள், வர்த்தகம் மற்றும் விவசாயத்தில் எவ்வாறு ஈடுபாடு காட்ட முடிந்தது? உண்மையில் தமிழ் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் இதுபோன்ற சமூக முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகத்தான் தமிழ்த் தீவிரவாதம் உருவானது என்று கூறினார்கள். தமிழ் ராணுவம் ஆராயப்படாத ஒன்றாக இருந்து, அதுவே தமிழ்க் கலாச்சாரம் மற்றும் தேசியத்தின் முக்கியமான அம்சமாக இருந்த காரணத்தால்தான் எல்டிடிஈ-யின் தமிழர் அடையாளத்திற்கான ராணுவ வரையறை சாத்தியமானது.

எனவேஇந்த ஆய்வு கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் தமிழர்களின் அரசியலை ஆராய்வதை நோக்கமாக கொண்டதாக உள்ளது

) தமிழ் ராணுவம் என்றால் என்ன?

பி) தென்னிந்திய மற்றும் இலங்கை மக்களின் சமூக மற்றும் அரசியல் நிலை மற்றும் அதன் பரவல் என்ன?

தென்னிந்தியாவில் பிராமணர்கள் அல்லாத தலைவர்களின் ஆங்கிலேய ஆதரவு பிராந்திய அரசியலைப் பொறுத்தவரை, பிராமணர் - பிராமணர் அல்லாதவர்களைப் பொறுத்தவரை திராவிடர் இயக்கம் முதலில் (3) தனித் தமிழ் மற்றும் சுயமரியாதை இயக்கங்கள், மொழிவாரி தேசியம் மற்றும் பிரிவினைவாத்தை (4) ஆய்வு செய்தது

ஆனால் தமிழ்த் தேசியத்தின் முக்கியமான மற்றொரு உட்பொருள் - ராணுவம் ஆகும். ஆனால் திராவிட இயக்கங்களின் ஆய்வுகளில் இது இடம்பெறவில்லை. (5) இது திராவிட ஆய்வுகளில், தமிழ் கலாச்சாரம் மற்றும் சமுதாயக் கருத்துக்களை வடிவமைத்த வரலாற்று பாரம்பரியத்தின் ஆதிக்கத்திற்காக தன் பங்கிற்கு வேலை செய்தது. தமிழ் மக்கள் அமைதியானவர்கள் மற்றும் போரை விரும்பாதவர்கள் என்று தமிழர்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் காட்டியதிலிருந்து துவக்க கட்ட திராவிடக் கருத்து உருவானது.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலை அடிகள் ஆங்கிலத்தில், “கிமு 1500 ஆண்டு காலத்தில் படைக்கப்பட்ட பண்டைத் தமிழ் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து பண்டை தமிழர்களின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது, மிகவும் அமைதியான உயர் நாகரீகம் கொண்ட சமுதாயமாக பார்க்கிறோம். ஆனால், தமிழ் அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதையும் பார்க்கிறோம். தமிழ் மக்களின் அமைதியான வாழ்க்கை மற்றும் உயர் நாகரீகம் ஆகியவை காரணமாகவே தமிழ் இன்றும் கன்னித் தமிழ் என்ற பெருமையுடன் இருந்து வருகிறதுஎன்று எழுதுகிறார். (6)

மறைமலை அடிகளின் கருத்துக்கள் துவக்ககால திராவிட இயக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. துவக்க கால திராவிட தமிழ் ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் தமிழ்த் தேசியத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது மிகக் குறைவே, அது தற்போதைய தமிழர்களின்தொடர் அமைதி மற்றும் உயர் நாகரீகத்தை குறிப்பதாகவே உள்ளது”  என்பதை நாம் காணலாம்.

இதுதான் திராவிட இயக்கத்தை நிறுவியவர்களின் கருத்தாக இருந்தால், தமிழ் ராணுவத்தின்பிறப்பிடத்தைஎப்படிக் கண்டறிவது? பொதுவாக இந்தியாவின் தற்கால ராணுவத்தில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் - தென்னிந்தியாவுக்கான ஒரே படைப்பிரிவு மெட்ராஸ் ரெஜிமென்ட் மட்டுமே. தமிழ் ராணுவத்தின் துவக்கம் இந்திய ராணுவம் மற்றும் சமுதாயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டதாகும்.

இந்திய ராணுவத்தில் உள்ள வடஇந்தியர்களின் ஆதிக்கம், துணைக்கண்டத்தில் வடக்குப் பகுதிகளில் உள்ள சமுதாய மற்றும் அரசியல் பரிணாமத்தின் முக்கிய பகுதியாக மட்டுமே இந்திய ராணுவத்தை ஆய்வு செய்ய வழிவகுத்தது. எங்கும் வட இந்திய ராணுவச் சாதிகளின்  எழுச்சி மட்டுமே திறமையாக ஆராயப்பட்டது. (7) தற்கால ராணுவத்தில்  பாரம்பரியமாக ராணுவச் சேவை செய்த இன, மத மற்றும் சாதிக் குழுக்களே சிறந்த போர்வீரர்களாக இருப்பார்கள் என்ற கருத்தே இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்கு கித்தது.

ராணுவ இனங்கள் என்ற கருத்தே 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயே ஆட்சேர்க்கை கொள்கையில் பரவலாக காணப்பட்டது. இது ராணுவ வட இந்தியா - ராணுவமல்லாத தென்னிந்தியா என்று இந்திய மக்களைப் பற்றிய தற்கால கருத்து உருவாக்குவதற்கான வழிமுறையாக அமைந்தது. இவ்வாறு இந்திய ராணுவத்தில்(8) ராணுவ பாரம்பரியமுள்ளவர்களை சேர்ப்பது பற்றி இந்திய அரசாங்கத்தால் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய ராணுவத்தில் ராணுவ பாரம்பரியம் பற்றி ஆய்வு செய்யும்போது அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு சாதியோ அல்லது பிரிவோ கூட கிடையாது. (9) சுதந்திர இந்திய ராணுவத்தின்ராணுவ இனங்களாக’  சீக்கியர், ராஜ்புத்கள், ஜாட்கள், கூர்க்கர்கள், மராத்தியர்கள், பஞ்சாபிகள், டோக்ராக்கள், கர்வாலிகள், மஹர்கள் மற்றும் கோமானிசாரே ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் வட இந்திய சாதிகள் மற்றும் பிரிவினரே. இந்திய ராணுவத்தின் வரலாற்றில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தக் காரணமான முக்கிய போர்களில் தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் போன்ற தென்னிந்திய இனங்கள் தங்களின் வீரத்தைக் காட்டியதை நாம் காண முடிகிறது. (10)

இந்திய ராணுவத்தில் தென்னிந்தியர்களின் குறைவுக்கு காரணமாக இரண்டு கட்டங்கள் உள்ளன.  பொதுவாக வட இந்தியாவில் மற்றும் குறிப்பாக வடமேற்கு துணைக்கண்டத்தில்ராணுவ சாதிகளில்ஆட்சேர்ப்பு நடத்தியதில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக அமைந்ததுஇதனை இந்திய ராணுவத்தை பஞ்சாபியர் மயமாக்குதல் என்று ஸ்டீபன் கோஹென் சொல்கிறார். (11)

முதல் கட்டத்தில் 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தின் அடிப்படையில் 1859-ம் ஆண்டின் பீல் கமிஷன் மற்றும் 1879-ம் ஆண்டின் ஈடன் கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிரித்தாளும் கொள்கையின்படி  ஒவ்வொரு பகுதியையும் அடிப்படையாகக் கொண்டு சேவை மற்றும் ஆட்சேர்ப்பு வரையறுக்கப்பட்ட. பெங்கால் ராணுவத்தில் மிகவும் ஆட்குறைப்புச் செய்யப்பட்டது. பிராமணர்கள் மற்றும் உயர் சாதி இந்துக்கள் பெருமளவு நீக்கம் செய்யப்பட்டார்கள். சிப்பாய்களுக்கான ஆக்கப்பூர்வமான சேவை தங்களது சொந்த மாகாணத்திற்கானதாக மட்டுமே சுருக்கப்பட்டது. மேலும் பம்பாய் மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் பெரிதாக உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. அவை ராணுவத்திற்கான தங்குமிடங்களாகவே பயன்பட்டன. இந்தப் பகுதியிலான மக்களின் போராடும் தரம் சீர்கெட்டுவிட்டது என்று கூறி இவ்வாறு செய்யப்பட்டது. பம்பாய் மற்றும் மெட்ராஸ் ராணுவங்களில் ஆட்குறைப்பு பரிந்துரைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இரண்டாவது கட்டத்தில், 1885-ல் ஆங்கில அரசுக்கு வடமேற்குப் பகுதியில் ரஷ்ய அரசால் ஏற்பட்ட அச்சுறுத்தல், அதைத் தொடர்ந்து 1887-1889 பர்மிய   போர்மிகவும் நம்பகமான ராணுவ தன்மை கொண்ட இனங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்களின்  தேவையை உருவாக்கியது. (12) இதன் காரணமாக பகுதிவாரியான பிரித்தாளும் கொள்கை கைவிடப்பட்டு ஏராளமான போர்கள் நடைபெற்ற பகுதியான வடமேற்குப் பகுதியிலிருந்து பரவலாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டது. ராணுவ ஆட்தேவையை உறுதி செய்ய இந்த மக்களுக்கு விசேஷ சமூக மற்றும் பொருளாதார முன்னுரிமைகள் வழங்கப்பட்டன. “அவர்களின் விசுவாசத்தை பாதுகாக்க, அவர்களின் ராணுவ ஆர்வத்தை பாதுகாக்க மற்றும் அவர்களின் கௌரவத்தை அதிகரிக்க, காலனி அரசாங்கம் வடக்குப் பகுதியில் அனைத்து முயற்சிகளையும் செய்தது.” இவ்வாறு இந்திய ராணுவத்தில் ராஜ்புத்கள், சீக்கியர்கள், ஜாட்கள், பஞ்சாபி முஸ்லீம்கள் மற்றும் கூர்க்கர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. ராணுவ இனக் கொள்கை என்ற இந்த கருத்தின் செயல்முறை 19-ம் நூற்றாண்டின்அறிவியல்உபகரணங்களுடன் இந்தியாவின் மக்கள் மற்றும் பகுதிகள் பற்றி தற்கால கருத்தாக்கம் உருவாக பெருமளவு காரணமாக அமைந்துள்ளது. அது ஏன் இந்தியர்களின் சில பிரிவினர் (அளவுக்கதிகமாக சேர்க்கப்பட்டவர்கள்) ராணுவ சாதிகளாக இருந்தனர் மற்றவர்கள் (பெருமளவு நீக்கப்பட்டவர்கள்) அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்க விரும்புவதாக உள்ளது.

அடிக்குறிப்புகள்

(1) ‘விடுதலைப்புலிகள்’ (எல்டிடிஈயின் அதிகாரப்பூர்வமான இதழ்), ஏப்ரல்-மே 1991, தலையங்கம்
(2) விடுதலைப் புலிகள், புலிச் சின்னம் பற்றிய கட்டுரை, பக்கம் 3, பிப்ரவரி-மார்ச் 1991. புலிச் சின்னம் கொண்ட கொடி தமிழீழத்தின் தேசியக் கொடியாக 1990 நவம்பர் 27 மாவீரர் தினத்தில் அறிவிக்கப்பட்டது.
(3) பேக்கர், சி.ஜே. 1976: தென்னிந்தியாவின் அரசியல்(1920-1937). விகாஸ், டெல்லி, இர்ஷக், யூஜின் எஃப் 1969: தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் சமூக மோதல்கள், பெர்க்லி, கலிஃபோர்னியா.
(4) சிவதம்பி. கே : இலக்கிய முறையில் அரசியல், சமூக விஞ்ஞானி, எண் 68, மார்ச் 1978.
(5) இது மற்றொரு சூழலில் குறிப்பிடப்பட்டது, “...(திமுகவின்) அனைத்து செயல்களும் நடவடிக்கைகளும் போர்வீரர்கள் போருக்குப் புறப்படுவதைப் போல இருந்தது. இந்திக்கு எதிரான போராட்டங்கள் புறாநனூற்று போர்கள் போல இருந்தன...” சி.எஸ்.லக்ஷ்மி:தமிழ் நாட்டில் தாய்-தாய் சமுதாயம் மற்றும் தாய்-அரசியல்’, பொருளாதாரம் மற்றும் அரசியல் வாராந்திரி, அக்டோபர் 20-29, 1990.
(6) மறைமலை அடிகள்: பக்கம் 34-35, சிந்தனைக் கட்டுரைகள், முதல் பதிப்பின் ஆங்கில முன்னுரை, கழகம், 1961.
(7) ஸ்டீபன் பி. கோஹன்: தி இண்டியன் ஆர்மி- இட்ஸ் கான்ட்ரிபியூஷன் டூ த டெவலப்மென்ட் ஆஃப் ஏ நேஷன், ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், புதுடெல்லி, 1990. மறுபதிப்பு. முதல் பதிப்பு 1971-ல் வெளியிடப்பட்டது. “இந்த புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர் 18 ஆண்டுகளில் இதுபோலவோ அல்லது இதற்கு மாறாகவோ வேறு எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.” மறுபதிப்பின் அறிமுகம், 11.
(8) தரம்பால்: டிரேடிஷன்ஸ் ஆஃப் த இண்டியன் ஆர்மி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்திய அரசாங்கம், 1961. தேசிய புத்தக அறக்கட்டளை, டெல்லி.
(9) இந்திய ராணுவத்தில் உள்ள பனிரெண்டுவீரப் பாரம்பரியங்கள்முதல் பகுதியைச் சேர்ந்தவை. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரே ராணுவ பிரிவு  மதராஸி. இது மெட்ராஸ் படைப்பிரிவுக்கான ஒரு உருவமற்ற சொல்லாகும். இது பாரசூட் படைப்பிரிவைப் போல முழுவதும் கலப்பு படைப் பிரிவாகும். இதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தகுதி படைத்த வீரரும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மற்ற வீரப் பராம்பரியங்களில் வட இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட இனம், சாதி, மதம் அல்லது பிராந்தியக் குழுக்களை குறிக்கராஜ்புத் வீரர், சீக்கிய வீரர்என்று அழைக்கப்படுகிறார்கள்.
(10) மெட்ராஸ் இன்ஃபேன்டரி, 1748-1943. லெப்டினென்ட் கர்னல் எட்வர்ட் கிவ்ன் பைதியன்-ஆதம்ஸ், மெட்ராஸ் அரசாங்க அச்சகம், 1943. ஹிஸ்டரி ஆஃப் மெட்ராஸ் ஆர்மி, லெப்டினென்ட் கர்னல். டபிள்யூ.ஜே.வில்சன், மெட்ராஸ் அரசாங்க அச்சகம், 5 வால்யூம்கள், 1882-89.
(11)  ஸ்டீபன் பி. கோஹன்: ஓபி.சிட், அத்தியாயம் 2
(12) மெட்ராஸ் மாகாணத்திற்காக ஆட்சேர்ப்பு நடத்த அறிவுறுத்தும்போது பயன்படுத்தும் வாக்கியம்.
(13) டேவிட் வாஷ்ப்ரூக்: தெற்கு ஆசியா, தி வோர்ல்டு சிஸ்டம் அண்ட் கேபிடாலிஸம், ஜர்னல் ஆஃப் ஆசியன் ஸ்டடீஸ், 49, எண் 3 (ஆகஸ்டு 1990), பக்கம் 480.

http://tamilnation.co/forum/sivaram/920501lg.htm


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...