Monday, April 27, 2020

போலிச் செப்பேடு

வெள்ளியங்குன்றம் பாளையம் விஸ்வநாத நாயக்க மன்னர் தமிழ்நாட்டை பல பாளையங்களாக பிரித்த போதே உருவான பழமையான பாளையம்.
இப்பாளையத்தை கன்னடம் பேசுகின்ற அனுப்ப கவுண்டர் வம்சத்தினர் ஆண்டுள்ளனர்.
ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதை மேல் நாட்டு கள்ளர்களுக்கு காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இடைக்காலத்தில் சில விசமிகளால் மறுக்கப்பட்ட போது அதனை சட்ட போராட்டம் நடத்தி மேல் நாட்டு கள்ளர் நாட்டு அம்பலங்கள் மீட்டார்கள்.
ஶ்ரீகள்ளழகர் கோவில் மரியாதையை கள்ளர் நாட்டு அம்பலங்கள் பெறுவதை போல, வெள்ளியங்குன்றம் கன்னட கவுண்டர் தாங்களும் பெறுவதற்காக ஒரு போலியான செப்பேட்டை கிபி1981ல் உருவாக்கியுள்ளன.
வெள்ளியங்குன்றம் செப்பேடு என வரும் இந்த செப்பேட்டில் உள்ள செய்தி என்னவென்றால்.
ஶ்ரீகள்ளழகர் கோவிலில் சகம் 1491 (கிபி1670ஆம்) ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் வேடர்கள் உள்ளே புகுந்து தங்கம்,வெள்ளி பாத்திரங்கள் மற்றும் ஶ்ரீகள்ளழகர் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஓடிவிடுகிறார்கள்.
இதனால் கோவில் தலத்தார்கள் மதுரைக்கு சென்று மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிடுகின்றனர்.
திருமலை நாயக்கர் உடனடியாக வெள்ளியங்குன்றம் பாளையக்காரரை வரவழைத்து திருடு போன அனைத்து பொருட்களையும் மீட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.
இதனை ஏற்ற வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் கள்ளர்களை தலையை வெட்டி ஆபரணங்களை மீட்டு திருமலை நாயக்கருக்கு முன்பு வைக்கிறார்.
இதனால் மன நெகிழ்ச்சி அடைந்த திருமலை நாயக்கர் ஶ்ரீகள்ளழகர் கோவிலின் கருவூல பாதுகாவலராகவும், கோவில் மரியாதையையும் பெற்றுக் கொள்ளுமாறு செப்பேடு அளித்தாராம்.
இதுவே செய்தி.........🤦🏻‍♂️
சரி இந்த செப்பேடு போலி என்பதற்கான ஆதாரம் என்ன......???????
போலி :1
சக ஆண்டு 1491 என்று உள்ளது அதற்கான ஆங்கில வருடத்தை கணக்கிட நாம் 78வருடங்களை கூட்ட வேண்டும். அப்படி கூட்டினால் வரும் ஆண்டு கிபி1569ஆண்டு வருகிறது. ஆனால் கிபி1670 என்று முட்டாள் தனமாக குறித்துள்ளார்கள்.
சரி அப்படியே கிபி1569 என்றால் அப்போது திருமலை நாயக்கர் மதுரையில் ஆட்சி செய்யவில்லை, அப்போது ஆட்சியில் இருந்தவர்
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்.
ஆக முதல் திரிபே முட்டாள் தனமாக திரித்துள்ளனர்.
போலி :2
ஆங்கில வருடம் கிபி1670 திருமலை நாயக்கர் காலத்தில் சம்பவம் நடந்தது என்று கூறியுள்ளனர்.
திருமலை நாயக்கர் கிபி1659லே இறந்துவிட்டார், அப்போது ஆட்சியில் இருந்தவர் சொக்கநாத நாயக்கர்.
இது இரண்டாவது திரிபு.
போலி: 3
கோலிலில் திருடியது வேடர்கள் என செப்பேட்டில் முதல் வரியில் வருகிறது, ஆனால் திருமலை நாயக்கர் தன்னை கள்ளர்களை வெட்டி வருமாறு ஆனையிடுகிறார் என்று அடுத்த வரியில் வருகிறது...!
திருடியது வேடர்களா....?
கள்ளர்களா .....?
இதில் கள்ளர் என சேர்ந்தததே கோவில் உரிமை அவர்களிடம் பறிக்க என்பது நன்கு புலப்படுகிறது.
இது மூன்றாவது திரிபு.
போலி : 4
இதற்கு சாட்சியாக திருமலை நாயக்கரின் தளபதி இராமப்பையன் என்று வருகிறது.
திருமலை நாயக்கர் காலமே தொங்கும் போது அவருடைய தளபதியின் காலத்தை சொல்லவா வேண்டும்....?
அதுமட்டுமில்லாமல் திருமலை நாயக்கரின் உரிமையியல் செப்பேடுகளில் சாட்சியாக கள்ளர் நாட்டு தலைவர்களும்,சிவகங்கை,புதுக்கோட்டை மன்னர்களும் வருகிறார்கள் ஆனால் இதில் மட்டும் இராமப்பையன் வருகிறார்..........?
ஶ்ரீகள்ளழகர் கோவிலில் மேல் நாட்டு அம்பலங்கள் தங்களுடைய வாள் வலிமையாளும்,உயிர் தியாகத்தாளும் பெற்றது.
வெள்ளியங்குன்றம் ஜமீனுக்கு மரியாதை வேண்டுமென்றால் கோவிலுக்கு ஒதுக்கு புறமாக துண்டை தலையில் கட்டி அப்படியே சாமிய கும்பிட்டு செல்லலாம்.
கள்ளர்களை வெட்டினாராம் உடனே திருமலை நாயக்கர் மரியாதை வழங்கினாராம்....🤦🏻‍♂️
மண்டையில உள்ள கொண்டைய மறைங்கடே🤦🏻‍♂️
இதுபோல செயல்கள் நடக்காமல் இருக்க சட்ட போராட்டம் நடத்துவதே சரியான முடிவு👍
நன்றி
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு




Saturday, April 25, 2020

கீழா நிலைக்கோட்டை



காரைக்குடி அரிமளம் செல்லும் வழியில் உள்ள புகழ்மிக்க கோட்டை தான் இந்த கீழா நிலைக்கோட்டை. கீழாநிலை என்பது கிழக்கு நிலை என நிர்ணயிக்கப்படுகிறது. ஏனென்றால் மேல நிலை, புது நிலை என இதேபோல் உள்ள ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கில் உள்ளது.

மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க கோட்டையான கீழாநிலைக் கோட்டையை கட்டியது சோழரா இல்லை பாண்டியரா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. ஏனென்றால் கல்வெட்டுகள் ஏதும் கிடைக்காத நிலையில், சிங்கள புனித நூல்களாக மகாவம்சம் மற்றும் குலவம்ச நூல்களில் இக்கோட்டையானது சோழர், பாண்டியர்களின் எல்லை இராணுவமாக செயல்பட்டதை பற்றி விவரிக்கிறது.

10 மற்றும் 12 நூற்றாண்டு ஆரம்பத்தில் சோழர்களின் வலிமையான கிழக்கு கோட்டையாக இருந்த் கிழாநிலைக் கோட்டையானது. 12ஆம் நூற்றாண்டு இடைப்பகுதியில் பாண்டியர்களின் எழுச்சியில் பாண்டியர் வசம் சென்றது.

இந்த நேரத்தில் தான் வரலாற்று சிறப்பு மிக்க சிங்கள தளபதி மதுரையை நோக்கி பாண்டிய நாட்டையும், வீரபாண்டிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சோழ நாட்டையும் கைப்பற்ற மீமிசல் துறைமுகத்தில் இறங்கி படையெடுத்து வருகிறார்.

அப்போது சிங்கள தளபதியை எதிர்கொள்ள பல பாண்டிய, சோழ தளபதிகள் மீமிசல், தொண்டி, ஏம்பல், பொன்பற்றி(பொன்பேத்தி), கப்பலூர், கண்டதேவி, அணில் ஏறாக் கோட்டை, மங்கலம், தொண்டைமான் காடு, செம்பொன்மாரி, லங்கமாரி, ஆறாவயல், இறகுசரி, ஏழுகோட்டை, உஞ்சனை, அஞ்சுகோட்டை, அதளையூர், வல்ல நாடு, கீழாநிலை, மனமேல்குடி என தங்களது தாய் நாட்டை காக்க போராடினர்.

அத்தாக்குதலில் கீழாநிலை கோட்டையானது, சிங்களத் தளபதி லங்கப்புரா, செம்பொன்மாரி நாட்டு அரசர் மாளவச் சக்கரவர்த்தியை வீழ்த்திய பின்பு தனது படையை கீழாநிலை கோட்டைக்கு திருப்புகிறார்.

அப்போது கீழாநிலை கோட்டையை வீழ விடாமல் சோழர் குல காவலன் பெருமாள் பல்லவராயர் லங்கப்புராவை எதிர்த்து தாக்குதல் நடத்துகிறார்.

இத்தாக்குதலால் லங்கப்புரா சோழ நாட்டிற்கு செல்லாமல் தனது படையை ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி திருப்புகிறார்.

கீழாநிலை கோட்டையானது பல்லவராயரின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

ஶ்ரீவில்லிபுத்தூரில் சிங்கள படை, பாண்டியர் படையை தோற்கடிக்கிறது. இதனால் குலசேகர பாண்டிய மன்னர் தொண்டைமான் காட்டில் (அறந்தாங்கி தொண்டைமான்) மன்னையர், கள்ளர் வேளைக்காரர், முனையத்திரையர் பாதுகாப்பில் தஞ்சம் அடைகிறார். அதனால் மீண்டும் கீழாநிலை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர் சிங்களப்படைகள்.

அப்போது சிங்கள படைகளை உள்ளே வரவிடாமல்,எதிர் தாக்குதல் நடத்தி அறந்தாங்கி தொண்டைமானின் படைகள் விரட்டியடித்தனர்.

அப்போது முதல் 17ஆம் நூற்றாண்டு வரை அறந்தாங்கி தொண்டைமான் கட்டுப்பாட்டில் வருகிறது.

கிபி1674ல்தஞ்சை நாயக்கரின் படையெடுப்பில் அறந்தாங்கி தொண்டைமானிடம் இருந்து நாயக்கர் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது.

வரலாற்று சிறப்புமிக்க கீழாநிலை கோட்டை முதன் முதலாக அந்நிய மன்னர் கட்டுப்பாட்டிற்கு சென்று விடுகிறது.

அதே கிபி1674ல் தஞ்சை நாயக்கரின் வீழ்ச்சிக்கு பின்பு மராட்டியர் தஞ்சையை ஆட்சி அமைக்கும் நேரத்தில், நாயக்கருக்கு வரிகட்ட மறுத்து, கிழவன் சேதுபதி மதுரை நாயக்கருடன் போரில் ஈடுபடுகிறார், இப்போரில் சேதுபதிக்கு தஞ்சை மராட்டியர்கள் உதவியதால் இக்கோட்டை மற்றும் பாம்பாற்றுக்கு தெற்கிற்கு அப்பால் உள்ள பகுதியை சேதுபதி மராட்டியர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.

ஆக கீழாநிலை கோட்டை இரண்டாவது முறையாக அந்நியர் கைகளில் சென்று விடுகிறது.

மராட்டியர் கைகளில் இருந்தாலும், கிபி1700 ஆரம்ப காலகட்டத்திலிருந்து புதுக்கோட்டை தொண்டைமான்கள், மராட்டியருடன் தொடர் மோதல் போக்க கையாண்டு, கீழாநிலைகோட்டையை சர்ச்சைக்குரிய பகுதியாகவே வைத்திருந்தனர்.

கிபி1723ல் இராமநாதபுர வாரிசு போரில் தண்ட தேவன் சேதுபதி, புதுக்கோட்டை மன்னரிடம் ஆதரவு கேட்க, அதற்கு தொண்டைமான் உதவி செய்கிறார். செய்த உதவிக்காக கிழவன் சேதுபதி போட்ட ஒப்பந்தத்தை தண்ட தேவன் சேதுபதி ரத்து செய்து, கீழாநிலை கோட்டையை இரகுநாத தொண்டைமானுக்கு கொடுக்கப்படுகிறது.

கிபி1726ல் ரகுநாத தொண்டைமான் கீழாநிலை கோட்டையை பல நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்த அடிப்படையில் மராட்டியர்களுக்கு விற்று, பட்டுக்கோட்டை தெற்கு பகுதிகளை பெறுகிறார். ஆனால் தஞ்சை மராட்டியர் ஒப்பந்த விதிகளை மீறியதால் கிபி1736ல் மராட்டிய படைகளை கீழாநிலை
கோட்டையில் இருந்து விரட்டி, மீண்டும் கீழானிலைக்கோட்டை தொண்டைமான் வசம் செல்கிறது.

பிறகு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வசமே தொண்டமான் கீழாநிலை கோட்டையை கொடுக்கிறார்.

கிபி1749ல் பிரஞ்சு படைகள் திருச்சி,தஞ்சாவூரை தாக்கிய நேரத்தில், மராட்டிய தளபதி மனோஜி, தொண்டைமான் உதவியை நாட, தொண்டைமானும் தன்னுடைய படைகளை தஞ்சை,திருச்சிக்கு அனுப்பி, பிரஞ்சு படைகளை விரட்டுகிறார்.

இதனால் மராட்டிய தளபதி மனோஜி கீழா நிலை கோட்டையை மீண்டும் தொண்டைமானுக்கே அளிக்கிறார்.

கிபி1756ல் தளபதி மனோஜி தொண்டைமானுக்கு கொடுத்த கீழாநிலைக்கோட்டையை மீண்டும் தஞ்சாவூருடன் இனைக்க ஆனையிடுகிறார். கீழாநிலை மீண்டும் தஞ்சாவூருடன் இணைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் பிரஞ்சு படைகளும், கர்நாடக படைகளும் புதுக்கோட்டையை நான்கு முனை தாக்குதலில் ஈடுபட்டதால் தொண்டைமான் இதனை பெரிதுபடுத்தவில்லை.

கிபி1781ல் ஒட்டுமொத்த தஞ்சையை, மைசூர் படையான ஹைதர் அலியின் படை முற்றுகை இட்டது.
அப்போதைய மராட்டிய மன்னர் சரபோஜி தஞ்சையை விட்டு தலைமறைவானார். அப்போது கீழாநிலைக் கோட்டை மைசூர் படைகள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது.

அப்போதைய புதுக்கோட்டை மன்னரான ராய ரகுநாத தொண்டைமானார், தஞ்சையில் உள்ள மைசூர் படைகளை விரட்டியதோடு, கீழாநிலை கோட்டையையும், அதே ஆண்டான கிபி1781 ஆகஸ்ட்டில் மீண்டும் கைப்பற்றினார்.

ஆனால் கிபி1813வரை தஞ்சை மராட்டியர் பிரிட்டிஸ் அரசாங்கம் மூலமாக தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருந்தது. இறுதியாக ஆண்டுக்கு ஒரு யானை தர வேண்டும் என்கிற ஒப்பந்தம் போட்டது. ஆனால் கிபி 1948வரை புதுக்கோட்டை தொண்டைமான்கள் அதை ஏற்கவில்லை. அன்னியர்களிடம் இருந்து முழுமையாக ஒரு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கீழாநிலைக்கோட்டை 167வருடங்கள் தொடர்ச்சியாக தொண்டைமான்களில் ஆட்சியில் இருந்தது.

பின்பு இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று பாரம்பரியமிக்க இக்கோட்டையை பற்றி எழுதியதில் மிகவும் பெருமையடைகிறேன்.

குறிப்பு:-

இக்கோட்டையை கட்டியது தஞ்சை நாயக்கர், மராட்டியர், சேதுபதி என பல மேனுவலில் தவறாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோட்டையை மூவரும் முறையே புதுப்பித்தையே தவறாக கட்டியதாக எழுதியுள்ளனர். ஆனால் கோட்டையோ சோழர், பாண்டியர், பல்லவராயர், அறந்தாங்கி தொண்டைமான்கள், புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கு உரித்தான ஒன்றாக வருகிறது.

Source:-
Mahavamsam,culavamsam
Trichy manual
Tanjore Marathas
Pudukkottai manual
The important monuments in and around pudukkottai

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு




Thursday, April 23, 2020

இந்தியாவில் கொரோனா பயணம்


சீனாவில் துவங்கிய கொரோனாவின் இந்திய பயணம்.
8.12.19- சீனாவில் கொரோனா ஆரம்பம் ஆனதாக பத்திரிக்கை செய்தி.
21.12.19- சீனா அதிகாரபூர்வ அறிவிப்பு.
15.1.20- உலக அளவில் கொரோனா பரவ ஆரம்பித்த தகவல்.
18.1.20- உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை அறிவிப்பு.
30.1.20- கேரளாவில் முதல் பாதிப்பு.
7.2.20- ரஷ்யா, வட கொரியா தனது
எல்லைகளை மூடின.
12.2.20- இந்தியாவில் கொரோனா பரவி விட்டதாக, ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை.
13.2.20- ராகுல் காந்தி அறிக்கை கோமாளித்தனம் என மத்திய அரசு மறுப்பு.
16.2.20- இந்து மகா சபையின் 5000 பேர்
கலந்து கொண்ட கோமுத்ரா மாநாடு
21.2.20- ஜக்கி வாசு தேவ், கோவையில்,
ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட சிவராத்திரி இரவு. வெளி நாட்டவர்களும் பங்கேற்பு.
23.2.20- ஒரு வாரமாக டில்லியில் வன்முறை ஊர்வலங்கள்.
24-25.2.20- ஒரு லட்சம் பேர் பங்கேற்ற நமஸ்தேடிரம்ப் விழா.
8.3.20- ஜனாதிபதி மாளிகையில் 500 மகளிர் கலந்து
கொண்ட மகளிர் தின விழா கொண்டாட்டம்.
10.3.20- குஜராத், அகமதாபாத், கல்பூரில்
40000 பேர் கலந்து கொண்ட ஹோலி பண்டிகை திருவிழா.
11.3.20- WHO declared corona a “Pandemic”
12.3.20- 50,000 பேர் கலந்து கொண்ட
சீக்கியர் மத திருவிழா.
13.3.20- மத்திய அரசு Corona is not a health emergency என அறிவிப்பு.
13,14,15.3.20- டில்லியில் தப்லிக் மாநாடு.
15.3.20- விளம்பரம் இல்லாமல் மத்திய பிரதேச அரசு கவிழ்ப்பு.
15.3.20- கர்நாடக பிஜேபி எம்எல்ஏ மகள் திருமண நிகழ்ச்சியில் எடியூரப்பா 5000
பேருடன் பங்கேற்பு.
16.3.20- London return கனிகா கபூர் நிகழ்ச்சியில் பிஜேபி VIP க்கள் கலந்து
கொண்டனர். 1000 பேர் பங்கேற்றதில் துஷ்யந்த்சிங் எம் பி கலந்து கொண்டு, பாராளுமன்றம் சென்ற நிகழ்வு.
17.3.20- திருப்பதியில் 40,000 பேர்அடைத்து வைக்கப்பட்டு, தரிசனம் முடிந்ததும்
வெளியேற்றப்பட்டனர்.
19.3.20- Social distance தேவை குறித்து, பிரதமர் முதன் முதலாக அறிவிப்பு.
22.3.20- 14 மணிநேர ஒரு நாள் ஊரடங்கு மற்றும் கை தட்டுதல் அறிவிப்பு.
23.03.2020 ம.பி பாஜக ஆட்சியமைப்பு வெற்றிக் கொண்டாட்டம் கூட்டம்
24.3.20- உ.பி. முதல்வர், 10,000 பேர் கலந்து கொண்ட ராம ஜன்ம நவமி திருவிழா
25.3.20- வெளிநாடுகளுக்கு மருந்து பொருள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.
25.3.20- ஊரடங்கு 21 நாட்கள் தொடர மத்திய அரசு அறிவிப்பு.
4.4.20- டிரம்ப் மிரட்டலுக்குப்பின், மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டது.
5.4.20- விளக்கு ஏற்ற மத்திய அரசு அறிவிப்பு.
13.4.20- மீண்டும் 19 நாட்கள், மே 3ம்தேதி வரை தடை உத்தரவு, நீட்டிப்பு உத்தரவு.
இந்திய மக்களே....
சிந்திப்பீர். உங்கள் கேள்விகளை நீங்களே
கேட்டுப் பாருங்கள்.
அன்றாட, கூலி வேலை மக்கள் 45 கோடி பேர்
தெருவில் தினமும் நடந்து சாகின்றனர்.
இந்திய மக்கள் ஆறு ஆண்டுகளாக கஷ்டப்
பட வேண்டும் என்பது தான் அவர்கள் தலை
விதியா ?
டிரம்புடன் ஊர் சுற்றி விட்டு தாமதமாக 22.3.20 ல் நடவடிக்கை எடுத்தது தான், இன்றைய மக்கள் நிலைக்கு காரணம். பிப்வரி முதல் வாரம் நன்கு கலந்து ஆலோசித்து,
நன்கு திட்டமிட்டு, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் lock down அறிவித்திருந்தால்
இந்த கஷ்டங்கள் இருந்திருக்காது.
எல்லாவித திருவிழா மற்றும் கூட்டங்களை நடத்தி விட்டு, தற்போது முழு பழியையும் முஸ்லிம்கள் மீது மட்டும் போடுவது என்ன கையாலாகாத்தனம்?
அனைத்து தேதிகளையும் , நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்திய மக்களாகிய உங்களுக்கு உண்மை தெரியும். ~ பச்சை விளக்கு
நன்றி: வாட்சப் பகிரி
(இதில் அமெரிக்க மகன் மூலம் தொற்று வாங்கிய ம.பி சுகாதாரத்துறைச் செயலாளர் மூலம் மாநிலத்தின் ஐஏஎஸ், ஐபிஎஸ், சுகாதாரத்துறை ஊழியர்கள் என வஞ்சனையின்றி கொரோனோ தானம். துபையிலிந்து வந்த இளைஞர் அளித்த விருந்து என பெரும் சம்பவங்களும் உண்டு)

Saturday, April 18, 2020

ராஜராஜனின் பணிவான பணியாள்



20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)
போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...
இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???
அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..
ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...
யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...
வேறு யாருமில்லை..
கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்...
வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.
சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...
அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...
""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""
இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...
சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..
நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....
அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...
உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..
அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...
இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...
இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...
இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..
இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...
என்னாவது...???
ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்..
நம் சந்ததிக்கு.... ....
*படித்ததில் பிடித்தது*

Thursday, April 16, 2020

கேரளத்தின் மார்க்சிய மார்வாடிகளுக்கு வணக்கம்..


கடந்த சில தினங்களுக்கு முன்பு,கொரோனா தொற்று விடயத்தில் கேரளாவை தூக்கிப்பிடிக்கும் சிலருக்காக நான் பதிவிட்ட வீடியோ ஒன்றுக்கு,,, தரம் தாழ்ந்த பதில் ஒன்று வந்திருக்கிறது.
அதில் என்னுடைய நம்பகத்தன்மையை பலவாறு கேள்விக்குள்ளாக்கி இருப்பதாக, தனக்குத்தானே சொரிந்து சுகம் கண்டிருக்கிறார் ஒரு கேரளத்து தமிழ் மார்க்சிஸ்ட்.கேரளாவில் தமிழ் மார்க்சிஸ்ட்டா என்று கேட்டுவிடாதீர்கள்.ஈழத்தில் தமிழ் சிங்களவனே இருந்தபோது இங்கு தமிழ் மார்க்சிஸ்டுகள் இருப்பதில் வியப்பேதும் இல்லை.
அதை கம்பத்தில் வாழும் ஒரு பெரிய புரட்சியாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு புளங்காகிதம் அடைந்திருக்கிறார்.
நாகரீகமாக பதிவிடவும் தெரியும், நரகல் நடையில் கிழித்துக் கேப்பைய நட்டவும் தெரியும் எனக்கு.
ஆனாலும் ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் கவுரவமான ஒரு இடத்தில் இருப்பதால் பொறுமையோடு சில கேள்விகளை முன் வைக்கிறேன்...
1-கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு (உண்மையான) குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு,,,
இருப்பிடச் சான்று கொடுப்பதற்கு கேட்கப்படும் ஆவணம் எது...?
2-கடந்த பத்தாண்டுகளில்
கேரளாவில் அடைக்கப்பட்ட தமிழ் பள்ளிகளின் பட்டியலை நீங்கள் தருகிறீர்களா அல்லது நாங்கள் தரட்டுமா...?
3-கேரளாவில் தமிழ்ப்பள்ளிகள் அதிகமாக இருக்கிறது என்றால்... எதற்காக உண்மையான தமிழ் மாணவர்கள், தேனி மாவட்டத்திற்கும், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்விக்காக வரவேண்டும்...?
4-எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும், கேரள அரசு பதிவிதழில், இடுக்கி மாவட்டத்து தமிழர்கள், இன்னமும் floating labour என்று அழைக்கப்படுவது உண்மையா பொய்யா...?
5-கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தின் அரசுப்பணிகளில் சேர்ந்த, தமிழர்கள் எத்தனை பேர், பட்டியலில் இருக்கிறதா, நாங்கள் தரட்டுமா...?
6-இருப்பிடச் சான்று கேரளாவிலும், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தமிழகத்திலும் என்றால்,அரசு வேலைவாய்ப்புக்கு என்ன உத்தரவாதம்...?
7-இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் உண்மையான தமிழ் தொழிலாளர்கள், வாரிசு வேலை இல்லை என்றாகிவிட்ட பிறகு, தங்கள் பணிக்காலம் முடிந்ததும், கம்பெனியின் வீட்டில் தொடர்ந்து தங்கி கொள்ளலாமா...?
அப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எத்தனை தமிழ் தொழிலாளர்களை தங்களுடைய பணிக் காலத்திற்குப் பிறகு கம்பெனியின் வீடுகளில் குடி அமர்த்தியிருக்கிறது... பட்டியல் இருக்கிறதா...?
8-DEE---DEW---SIPW போன்ற தொழிற் சங்கங்களின் தலைவர்கள்... அதாவது AITUC---INTUC---CITU போன்ற தொழிற் சங்கங்களின் தலைவர்கள், தேயிலைத் தோட்ட முதலாளிகளை எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் என்றால்...
இவர்கள் எதற்காக தேயிலைத் தோட்ட முதலாளி கொடுத்த வீட்டில் தங்கி இருக்கிறார்கள்..?
9-தமிழகத்தில் குறிப்பாக ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கும், இடுக்கி மாவட்டத்து தமிழ் அரசியல்வாதிகளுடைய பட்டியலை நீங்கள் தருகிறீர்களா, நாங்கள் தரட்டுமா...?
10-தோழர் அச்சுதானந்தன் காலத்தில், குட்டியார் வேலியில் கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், கம்பெனியின் வீடுகளில் பதுங்கி கிடக்கிறது. பட்டாக்களுக்குரிய இடம் எங்கே இருக்கிறது என்று அளந்து கொடுப்பதை எது தடுக்கிறது...?
11-வட்டவடை, கோவிலூர், மறையூர், காந்தலூர் போன்ற தமிழர்கள் நிறைந்த பகுதிகளில்,,,,
பெரிய அளவிற்கு நில ஆக்கிரமிப்பை செய்த, இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளுடைய முகத்திரையை கிழித்தெறிந்த, தேவிகுளம் சார் ஆட்சியர் திருமதி ரேணு ராஜ் அவர்களை,, ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்தது இதே தோழர் பினராயி விஜயனுடைய அரசு...!
அப்படியானால் தோழர் பினராயி விஜயன், நிர்வாகத்தின் பக்கம் நிற்கிறாரா, நில மாஃபியாக்களின் பக்கம் நிற்கிறாரா...?
12-மொழிவழி சிறுபான்மையினர் 35 விழுக்காடு வாழும் பகுதிகளில்,அந்தச் சிறுபான்மையினரின் மொழியைப் பேசக் கூடியவர்களை மட்டுமே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அப்படியானால் எதற்காக தேவிகுளம் தாலுகா அலுவலகத்திலும், நீதிமன்ற வளாகத்திலும், கிளைச் சிறையின் வாசலிலும், அத்தனை மலையாள ட்ரான்ஸ்லேட்டர்கள் அமர்ந்து மனு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...?
13-இடுக்கியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தமிழகத்தில் கல்லூரிக் கல்வியை முடித்து வரும், உண்மையான தமிழ் பிள்ளைகளின், பதிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறதா, இல்லையா...?
14-மறையூர் பகுதியில் எவ்வித கேள்வியுமின்றி இருப்பிடச்சான்று வழங்கிய இதே மார்க்சிஸ்ட் அரசு, எதற்காக தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதை வழங்க முன்வரவில்லை...?
15-வட்டவடை, கோவிலூர், கொட்டகம்பூர் போன்ற தமிழ் பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில், பத்தாண்டுகளுக்கு மேலாக மலையாள மர வியாபாரிகளால் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும்,
இடங்கள் யாருக்கு சொந்தமானது...?
பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு அருகே, அத்தனை மரத்தையும் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்...?
16-கொட்டகம்பூரில் தமிழர்களுடைய நிலத்தை, ஆக்கிரமித்து அழிச்சாட்டியம் செய்ததற்காக, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட இதே இடதுசாரிகள் ஆதரவு பெற்ற முன்னாள் எம்.பி. யான ஜோயிஸ் ஜார்ஜை, சட்டத்தின் பிடியிலிருந்து விடுவித்தது யார்...?
17-வண்டிப்பெரியாறு பஞ்சாயத்து தலைவராக இருந்த பச்சைத் தமிழரான பாலுவை, பட்டப்பகலில் படுகொலை செய்த மார்க்சிய குண்டர்களை தண்டனை காலம் முடியும் முன்பே சுதந்திரமாக வெளியே உலவ விட்டது யார்...?
18-மார்க்சிய கம்யூனிஸ்ட்கட்சி பத்துக்கும் மேற்பட்ட கொலைகளை செய்திருக்கிறது என்று மேடையிலேயே முழங்கிய,குஞ்சித்தண்ணி எம்.எம்.மணியை, மந்திரி ஆக்கியது யார்...?
19-வண்டிப்பெரியாறு பகுதிகளிலிருந்து, பெரிய அளவிற்கு தமிழர்கள் புலம்பெயர்ந்து, தமிழகம் திரும்புவதற்கு காரணமானது யார்...?
20-தமிழகத்திலும் கேரளத்திலும் சமநேரத்தில் ரேஷன் அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வைத்திருப்பவர்கள் யார்...?
21-தொழிலாளர் நலச் சட்டங்கள், தேயிலை தோட்டங்களில், உண்மையிலேயே அமல்படுத்தப்படுகிறது என்றால்...
பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்ட தமிழர்கள் வாழும், மூணாறு சுற்றுவட்டாரத்தில், இன்னமும் ஏன் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை வரவில்லை...?
22-கட்டமைப்புகளில் கொடுக்கப்படும் அதிகாரம் என்பது உண்மையான அதிகாரம் அல்ல, தனி மனிதனுக்கு கொடுக்கப்படும் அதிகாரமே உண்மையான அதிகாரம் என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள் மார்க்சிஸ்டுகளே...?
23-கடந்த பத்தாண்டுகளில் தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாக்களில் குடியேறிய, மலையாள மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா...?
குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு வரை சாலையின் இரு மருங்கிலும் கட்டப்பட்ட மலையாள ஆக்கிரமிப்பு வீடுகளை போல, தமிழர்கள் கட்ட முடியுமா...?
24-1870 காலகட்டங்களில் முதல் தேயிலையை தமிழர்கள் பயிரிட்ட பார்வதி மலையை,பாராகிளைடர் பயிற்சி மையமாக கேரள அரசு மாற்றியபோது...
எங்கே போனார்கள் இந்த புரட்சியாளர்கள்...?
25-இடுக்கி மலையகத்தை உருவாக்கிய, உண்மையான தமிழர்களுக்கு, தேவிகுளத்திலும், பீர்மேட்டிலும் இருக்கும் சொத்து மதிப்பு என்னவென்று தெரியுமா...?
140 ஆண்டு கால உழைப்பில் அவர்கள் உழைத்து சேர்த்த சொத்து பட்டியலை பாருங்கள் தோழர்களே...?
இதுபோக இன்னமும் ஆயிரம் கேள்விகள் பாக்கி இருக்கிறது...
ஏதோ நாங்கள் தான் உழைக்கும் வர்க்கம், நீங்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதை எங்களாலும் செய்ய முடியும்...
மற்றபடி சோறு தின்பதற்கும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் தேனி மாவட்டம் வேண்டும்... ஆனால் விசுவாசமாக இருப்பதெல்லாம் இடுக்கி மாவட்டத்திற்குத்தான் என்றலையும், ஓய்வு நேர புரட்சியாளர்கள் தயவுசெய்து எந்த மண்ணை புகழ்கிறீர்களோ, அங்கு சென்று வாழ்வது தானே சாலச்சிறந்தது...
அதை விடுத்து நான் இங்கே தான் வாழ்வேன்... ஆனால் பக்கத்து வீட்டை கொண்டாடுவேன் என்றால்... இந்த மண்ணில் வாழ அருகதையற்ற மனிதன் நீ என்பதை மறந்து விடாதே...?
கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் ஆரிப் முகமது மட்டும் வெற்றிக்கனியை பறித்து இருக்காவிட்டால், நாடாளுமன்ற மக்களவையில் கேரளாவின் பிரதிநிதித்துவம் சந்தி சிரித்திருக்கும்... மறந்துவிட வேண்டாம்.
மேற்கு வங்கத்தில் காலங்காலமாக நிகழ்த்திய அதே கதையை இன்று கேரளாவிலும் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்...
முல்லைப் பெரியாறு பிரச்சினையை தொட்டு நாங்களும் ஆரம்பித்தால் கதை நாறிவிடும் என்பதால், இந்தக் கேள்விகளோடு முடிக்கிறோம்.
இனி ஒவ்வொரு நாளும் 25 கேள்விகள் கேட்போம்...
கேரளத்தில் வாழும் தமிழ் மார்க்சிஸ்டுகளே...
தமிழகத்தில் வாழும் கேரள மார்க்சிஸ்டுகளே...
பதில் தாருங்கள்.
மற்றபடி குரோனா தடுப்பு விடயத்தில்,,, கேரளாவை விட, எங்கள் தாய் தமிழகம், சீரோடும் சிறப்போடும் கடமையாற்றி, நோய் தொற்றுக்கு, முற்றுப்புள்ளி வைக்க கடமையாற்றி கொண்டிருக்கிறது.
எங்கள் துப்புரவு பணியாளர்கள்...
எங்கள் மருத்துவ பணியாளர்கள்...
எங்கள் காவல் துறை பணியாளர்கள்...
எங்கள் உழவர்கள்....
எங்கள் சுகாதாரத்துறை அமைச்சர்...
எங்கள் மாண்புமிகு முதல்வர்...
எங்கள் அமைச்சர் பெருமக்கள்...
எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்...
எங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்...
என அனைவரும் தன் முனைப்போடு களத்தில் நிற்கிறோம்.
எங்கள் அரசு எங்களை காக்கும்...
சகுனிகளே சற்று விலகி நில்லுங்கள்...
ச.அன்வர்.
ஒருங்கிணைப்பாளர்.
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
16-04-2020
காரைக்குடி.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...