Thursday, January 25, 2018

நேதாஜியின் பிறந்த தினம்

நேற்று முன்தினம் (23-01-2018) நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, காமாட்சியம்மன் கோவில் பகுதியில் கொடியேற்றி வைத்து பேசியபோது எடுத்த படம். படத்தில் இடமிருந்து தேவதானப்பட்டி நகர செயலாளர் சுபாஷ், நான், மாவட்ட செயலாளர் ஆர்.கே. தங்கராஜா, தேவதானப்பட்டி நகர பொதுச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.


Tuesday, January 23, 2018

நேதாஜியும் - மரண ரயிலும்



சயாம் மரண ரயில் பாதையைக் கட்டமைப்பதில் ஜப்பானியர்கள் ஒரு லட்சம் மலேசிய தமிழர்களை கொன்று குவித்தனர். அதை சுபாஷ் சந்திரபோஸ் கண்டுகொள்ளவில்லை என்று தலித் அறிவாளிகள் சொல்கிறார்கள். 
- தேவரை குறை சொல்பவர்கள், அடுத்த கட்டமாக நேதாஜியை குறை சொல்லத் துவங்கியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது தலித் மனநிலை.
இந்த மனநிலையில் இருப்பவர்களுக்கு மனநல மருத்துவர்கள்தான் உதவி செய்ய முடியும். போகிறபோக்கில் பீம்ராவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்து விடும். அதை இவர்கள் செய்வார்களா? செய்ய மாட்டார்களே.
ஜப்பான் இந்தத் திட்டத்தை 1942 ஜூனில் துவக்கி 1943 டிசம்பரில் முடித்து விடுகிறது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் 1943 பிப்ரவரி மாதம் ஜெர்மானிய நீர்மூழ்கியில் ஏறி மே மாதம் சுமத்ராவில் இறங்குகிறார். அதன் பின்னர் அவர் சிங்கப்பூரில் தனது இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறார். ஏராளமான தமிழர்கள் பொன்னையும், பொருளையும் கொடுத்து உயிரையும் கொடுக்க முன் வருகிறார்கள்.
அடுத்த ஏழு மாதங்களில் திட்டம் முடிக்கப்பட்டு விடுகிறது. இந்தத் திட்டம் ரகசியத் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில், 1946-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த போர்க்கைதியான ஜான் கோஸ்ட் என்பவர் எழுதிய "ரெயில் ரோட் ஆஃப் டெத்" என்ற புத்தகத்தின் மூலமாகத்தான் இந்த ரயில் பாதை விஷயமே வெளி உலகிற்குத் தெரிய வருகிறது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையும் பேசி விடக் கூடாது. சுபாஷ் சந்திர போஸ் ஒரு ஒப்பற்ற மாவீரன். அவன் வெள்ளையரின் உதவியால் ஒரே நாளில் தலைவன் ஆனவன் கிடையாது.
விரிவான தகவல்கள் மேலும் வழங்கப்படும்.

Saturday, January 20, 2018

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் ஆர்ப்பட்டம்




இன்று (20-01-2018) அதிகாலை தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள சின்னப் பொட்டிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக நடத்ததப்பபடும் மணல் குவாரிகளுக்கு எதிராக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக ஆர்ப்பட்டம் செய்யப்பட்டது.

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் விஷயத்தில் பெயர்பெற்ற அதே பொட்டிபுரத்தில் அரசு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் இந்த சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேனிமாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் போடி இரா. காசிராஜன் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் இது பற்றி தேனி மாவட்ட புவியியல் மற்றும் கனிமவள அதிகாரி சாம்பசிவத்திடம் இதுபற்றி புகார் செய்யப்பட்டது.

ஆனால் எந்தவித நடவடிக்கைகயும் எடுக்கப்படாத நிலையில் இன்று காலை 6 மணியளவில் போடி இரா. காசிராஜன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர்கள் குவாரியை முற்றுகையிட்டனர். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்ட சாம்பசிவம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

விசாரணைக்குப் பின்னர் சட்டவிரோத குவாரிகளை மூட தான் நடவடிக்கை எடுப்பதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குறுதி அளித்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு செய்யப்பட்டது. 

Saturday, January 13, 2018

அரசியலும் ஆன்மீகமும்




அரசியல் முழுக்க முழுக்க இந்த உலகத்தைச் சார்ந்தது. அரசியல்வாதிகள், மக்களுடைய மதிப்புக்குரிய வேலையாட்கள் எனலாம்.
ஆனால், மதம் என்பது புனிதமுடையது. அது, மனிதர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்காக ஏற்பட்டது.
"தகுதியின் அடிப்படையில், அரசியல் நிச்சியமாக, ஆன்மீகத்தின் எல்லையைத் தொடவே முடியாது."
அது மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அரசியல் மிகத்தாழ்ந்த இடத்தில் உள்ளது. "இரண்டும் வெவ்வேறானது."
பல நூற்றாண்டுகளாக, மனிதனுடைய விழிப்பு நிலையை அல்லது பிரக்ஞை நிலையை, உயர்த்துவதற்காக, மதம் பாடுபட்டிருக்கிறது. மனிதன் இப்பொழுது சிறிதளவாவது பிரக்ஞை நிலையில், உணர்வு நிலையில் இருக்கிறான் என்றால், அதற்கு இந்த மதங்களே காரணமாகிறது.
அரசியல் என்பது ஒரு சாபக்கேடு. ஒரு துக்ககரமான தொடர் நிகழ்ச்சி. மனிதனிடம் எவைகளெல்லாம் விரும்பத்தகாததாக இருக்கின்றவோ, அதற்கு முழு பொறுப்பும் அரசியலையே சாரும்.
நான் மதத்தில், அரசியல் குறுக்கிடாமல் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.
உயர்ந்தது, தாழ்ந்ததோடு குறுக்கிடலாம். ஆனால், தாழ்ந்தது, உயர்ந்ததோடு குறுக்கிடக்கூடாது. மதம் உயர்ந்த நிலையில் இருக்கிறது. அரசியல் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது.
ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால், அரசியல், அதிகாரத்தால் நிரம்பியுள்ளது. மதத்திடம் வெறும் அன்பு, அமைதி, தெய்வீக அனுபவம் போன்றவைகள்தான் இருக்கின்றன.
அதிகாரம் இருப்பதால், அரசியல் மிகச் சுலபமாக மதத்தில் குறுக்கிட முடியும். அதுதான் இவ்வளவு காலமும் நடந்து வந்திருக்கிறது. அதனால் மனிதனுடைய வாழ்வுக்கு எவையெல்லாம் இன்றியமையாததோ, அவைகளெல்லாம் அழிக்கப்பட்டு விட்டன.
அரசியலுக்கு இதயம் என்று எதுவும் கிடையாது. ஆனால், மதம் சுத்தமான இதயத்தை மையமாகக் கொண்டது. அது ஒரு அழகிய ரோஜா மலர், அதனுடைய அழகு, கவித்தன்மையும் உணர்வு மிகுந்த ஆடல் பாடல்களைக் கொண்டு, வாழ்க்கையை மிகவும் அர்த்தம் உடையததாக ஆக்குகிறது.
ஆனால், அரசியல் என்பது பாறையைப் போன்றது. அதில் எந்தவிதமான உணர்ச்சியோ, உயிரோட்டமோ இருக்காது.
ஆனால், இந்த பாறை, அந்த அழகிய மலரை மிகச் சுலபமாக அழித்து விடும். அதனிடம் என்ன பாதுகாப்பு இருக்கிறது?
அரசியல் இதுவரை சாதித்தது என்ன? பல நூற்றாண்டுகளாக, அவை மக்களை கொடுமைப் படுத்தியும், கொன்று குவித்தும்தானே வந்திருக்கிறது? உங்கள் சரித்திரத்தில், அழித்தல், கொலை செய்தல் தவிர வேறு என்ன இருக்கிறது?
எப்பொழுதுமே, மதம், அரசியலுக்கு ஒரு சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு மதம் எப்பொழுதும் ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது. ஏனெனில், அது மனிதனுக்கு மிகவும் உயர்வான விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருக்கிறது. ஆகவேதான், அதனால் ஒரு புத்தரையும், ஒரு ஜீசசையும், ஒரு சாங் ரூவையும், மற்றும் ஒரு குருநானக், ஒரு கபீர் போன்றவர்களை உண்டாக்க முடிந்தது. அவர்களெல்லாம் இந்த மண்ணின் மைந்தர்கள்.
ஆனால், அரசியல் என்ன செய்திருக்கிறது?
செங்கிஸ்கான், தாமூர்லேன், நாதீர்ஷா, அலெக்ஸாண்டர், நெப்போலியன், கொடுமைக்கார இவான், ஜோசப் ஸ்டாலின், அட்லாப் ஹிட்லர், பெனிட்டோ, முஸோலினி, மாசேதுங், கடைசியில் ரோனால்டு ரீகன்...இப்படிப்பட்டவர்களைத்தானே வழங்கியிருக்கிறது?
இவர்களெல்லாம் குற்றவாளிகள். மனித இதயமே இல்லாதவர்கள்.அவர்களுக்கு அதிகாரம் மாத்திரம் இல்லாமல் இருந்தால், அனைவரும் ஜெயிலில் இருக்கத் தகுதியுடையவர்கள்.
அவர்கள் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை, ஒரு மனநோயாளிகள்தான். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்தான். பிறரை அதிகாரம் செய்ய வேண்டும், அடக்கி தன் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒரு ஆரோக்கியமற்ற மனதில்தான் உதிக்கும்.
தாழ்வு மனப்பான்மையற்ற மனம், அதிகாரத்தை விரும்புவதே இல்லை.
மதத்தன்மையுடையவர்களின் எண்ணம் அனைத்தும் அமைதி, அமைதிதான். ஏனெனில், வாழ்வின் அர்த்தத்தை அமைதி நிலையில்தான் புரிந்து கொள்ள முடியும். அதிகார நிலையில் அல்ல.
"முட்டாள்கள் நிறைந்த அரசியல், மதத்தை அதிகாரம் செய்ய ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது."
இது எப்படியென்றால், ஒரு நோயாளி, டாக்டரை அதிகாரம் செய்வதற்குச் சமம்.!
ஆனால், மதத்தன்மை வாய்ந்தவர்களைவிட, அரசியல்வாதிகள் எண்ணிக்கையில் அதிகம்தான்.
அதைப்போல டாக்டர்களைவிட, நோயாளிகளும் அதிகம்தான்.! அதற்காக, நோயாளிகள் சொற்படி, டாக்டர்கள் கேட்க முடியுமா என்ன?
"இந்த உலகத்திலேயே தகுதியில்லாதவர்கள் வகிக்கும் பதவி, அரசியலைத் தவிர வேறு எதிலும் இருக்க முடியாது."
அரசியல்வாதிகளுக்கு, ஆன்மீகவாதிகளிடம் ஆழ்ந்த மதிப்பு ஏற்பட வேண்டும். ஒன்றை அவர்கள் நிச்சியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது,
"எந்த ஆன்மீகவாதியும், எந்தத் தேர்தலிலும் பங்கு பெற மாட்டான்."
நாட்டின் பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்து கொண்டே போகிறது. அதை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற புத்திசாலித்தனம், மற்றும் அறிவு பொதுவாக அரசியல்வாதிகளிடம் இல்லை. ஆனால், தீர்க்கதரிசனமும், புத்திசாலித்தனமும் மிக்க ஆன்மீகவாதிகளிடம் சென்று, அவர்களுடைய அறிவுரைப்படி நடக்கவும் தயாராகவும் இல்லை.
சாதாரணமாக, ஓர் அரசியல்வாதியின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், எப்படியாவது தன்னுடைய அகங்காரத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அடுத்து, தன் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்க வேண்டும்.
இவை இரண்டுமே ஆன்மீகவாதிகளிடம் கிடையாது. அவர்களுக்கு அது தேவையும் இல்லை.
"ஒரு ஆன்மீகவாதி, தன் அமைதித்தன்மையில், தன்னுடைய பேரானந்த நிலையில், தன் சலனமற்ற தன்மையில், அந்த முடிவான உயர்ந்த தெய்வீகத் தன்மையை அறிவதிலேயே இருப்பான்."
"இதற்கு மேலே வேறு எதுவும் கிடையாது என்பதும் அவனுக்குப் புரியும்."
ஆனால், ஒரு அரசியல்வாதி, போர்களிலும், கலவரத்தைத் தூண்டுவதிலும், எப்பொழுதும் அமைதியற்ற தன்மையிலும் தான் வாழுகிறான்.
இருவருக்கும் எவ்வளவு வேறுபாடு!
அரசியல் முழுக்க முழுக்க அறிவுப் பூர்வமானது. வியாபார நோக்கம் கொண்டது. பயன் கருதிச் செய்யப்படுவது. அது ஒருக்காலும், மனிதனை உயர்வான உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்லாது.
மக்களின் ஓட்டுகளை எதிர்பார்க்காத, தன் பார்வையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்கும், எப்பொழுதும் உண்மையைப் பேசும், மதத்தன்மை வாய்ந்தவர்களால்தான் அரசியலை, தீர்க்கதரிசனத்துடன் நடத்திச் செல்ல முடியும்.
மதம், தன் மேலான நிலையை, இந்தக் கீழ்த்தரமான அரசியல் கலந்து, தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அதன் புனிதத்தை இழந்துவிடக் கூடாது.
--ஓஷோ--

Saturday, January 6, 2018

தலித்களின் எழுச்சியும் போர்க்குடிகளின் ஆதிக்கமும்


தலித்கள் சட்டப் பாதுகாப்பு, அரசாங்க பாதுகாப்பு, அரசியல் கட்சிகளின் பாதுகாப்பு பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் தலித் எழுச்சி என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில் திருவிழாக்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்தி வைக்க, குறுக்கிட, இடையூறு செய்து வருகிறார்கள். காதல், கலப்புத் திருமணம், வன்கொடுமைச் சட்டங்கள் என்ற பெயரில் மற்ற சமுதாய மக்களை துன்புறுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் தலித் அல்லாத பொதுமக்களின் ஆதரவை பெற முடியாமல் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள்.
ஆனால் முக்குலத்தோர் மற்றும் போர்க்குடிகள் தொடர்ந்து அரசு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி எந்தவித சட்ட பாதுகாப்பும், அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் இருந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் தலித் அல்லாத மற்ற மக்களின் ஆதரவைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இதுவே இவர்களை இன்னமும் ஆதிக்க சாதிகளாக வைத்திருக்கிறது. அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக வைத்திருக்கிறது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

போர்க்குடிகளின் முரட்டுத்தனம்


நெல்லுக்கு கரும்பையோ, வாழையையோ வேலியாகப் போட முடியாது. வேலி நிச்சயமாக ஒரு முள் செடியாகத்தான் இருக்க வேண்டும். அப்படி வேலியாக இருந்து இந்த மண்ணையும் மக்களையும் பாதுகாத்து வந்தவர்கள்தான் முக்குலத்தோர் மற்றும் போர்க்குடிகள். நிச்சயமாக அவர்கள் மற்ற குடிகளை விட முரட்டுத்தனமாகத்தான் இருப்பார்கள். அந்த முரட்டுத்தனம் காலம் காலமாக இந்த மண்ணைப் பாதுகாத்து வந்தது.
ஆனால் தற்கால அரசியலில் அந்த முரட்டுத்தனத்தையே காரணமாகச் சொல்லி சில தலித் அறிவாளிகள் அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தி விடலாம் என்று மனப்பால் அருந்தி பிரச்சாரம் செய்கிறார்கள். இன்றைக்கும் போர்க்குடிகளே இந்த மண்ணைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களுக்குத் துரோகம் செய்து விட்டு யாராலும் வாழவும் முடியாது. அரசியல் செய்யவும் முடியாது.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...