Tuesday, December 26, 2017

மக்களின் தீர்ப்பு

தினகரன்தான் அதிமுகவின் தலைவராகும் உரிமை, தகுதி பெற்றவர் என்பதை நான் ஏற்கனவே பலமுறை எழுதியுள்ளேன். ஆர்.கே. நகர் தேர்தல் அதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பொதுவாக முறையாக மக்களை அணுகத் தெரியாதவர்கள் மக்களை முட்டாள்கள் என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு, மக்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து தங்கள் தீர்ப்பை வாக்குகள் மூலமாக வழங்கி வருகிறார்கள்.
தினகரனின் வெற்றிக்கு பலரும் பல காரணத்தைச் சொல்லி வருகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ திராவிட ஆட்சியாளர்கள் மக்களுக்கு பணம், கொடுத்து, சாராயம், உணவு கொடுத்து செய்யும் வழக்கத்தை துவக்கி அதை அவர்களுக்கு பழக்கமாகவும் ஆக்கி விட்டார்கள். எனவே இவையெல்லாம் கொடுப்பது இன்று அத்தியாவசியமான ஒன்று.
இவற்றையெல்லாம் கொடுத்தாலும் கூட மக்கள் தங்கள் விருப்பப்படியே பிரதிநிதிகளை தேர்வு செய்வார்கள் என்பதை ஆர்.கே. நகர் தேர்தல் நிரூபித்துள்ளது. தினகரன் பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என்று குற்றம் சாட்ட எந்த அரசியல்வாதிக்கும் தகுதி இல்லை. கொடுக்க இயலாதவர்கள் தங்களுக்கு அந்த தகுதி இல்லாத காரணத்தால் வேண்டுமானால் அந்தக் குற்றச் சாட்டை வைக்கலாம்.
மற்றபடி பணம் கொடுத்து வெற்றி பெற முடியும் என்பது உண்மையானால் சில கட்சிகள் தோல்வியை தழுவவே மாட்டார்கள். அவர்களிடம் அவ்வளவு பணம் உள்ளது.
மற்றபடி அவர் மாயமான், மாயாஜாலத்தில் வெற்றிபெற்றார் என்று சொல்வது இந்திய மக்களாட்சியையும், தேர்தல் முறையையும் அவமதிக்கும் செயலாகும். அப்படி சொல்பவர்கள்
தங்களுடைய கையாலாகாத தன்மையையும், போலித்தனத்தையும் மக்கள் உணர்ந்து விட்டார்களே என்று அறிந்து வெட்கப்பட வேண்டும்.

Saturday, December 2, 2017

எது துரோகம்?




அதிமுகவில் ஏற்படும் நிகழ்வுகளை பற்றி பேசும் தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி, பன்னீர் செல்வத்தை துரோகிகள் என்று பேசுகின்றனர். பதிலுக்கு மேற்படி இருவரின் ஆதரவாளர்கள் தினகரன், சசி குடும்பத்தினரை மோசடி கும்பல் என்று பேசுகிறார்கள். அவர்களை மஃபியா கும்பல் என்கிறார்கள். ஆனால் இவர்களை போன்றோரை, இது போல நீண்ட காலம் அதிகாரத்துடன் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பது புரிந்து விடும்.

உண்மையில் மோதி போல இந்திய பிரதமராக உள்ள ஒருவர் எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றோரின் நிலையில் இருப்பவர்களை அழைத்து உங்கள் அரசியல் வாழ்வை இல்லாமல் பண்ணுவேன், வருமான வரிச் சோதனை நடத்தி வழக்குகளைப் போட்டு அலைக்கழிப்பேன். நான்  சொல்வதைக் கேட்டுக் கொண்டு பதவியில் இருப்பீர்களா? இல்லை, வழக்குகளைச் சந்தித்து அரசியல் முகவரி இல்லாமல் அலைகிறீர்களா என்ற அன்பு அறிவுறுத்தலை முன் வைத்திருந்தால் அவர்கள் எந்த வாய்ப்பை தேர்வு செய்திருப்பார்கள்? எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றோரின் நிலையில் இருப்பவர்கள் அதையே தேர்வு செய்திருப்பார்கள்.

உண்மையில் ஜெயலிதாவின் தலைமையில் செயல்பட்ட காலம் வரை எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றோரின் நிலையில் இருப்பவர்கள் சுயமாக பேட்டியளிக்கக் கூட துணிவு இல்லாதவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். முதல்வர் பதவி வகித்து வந்த பன்னீர் செல்வம் போன்றோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்தது என்பது எல்லாரும் அறிந்ததே.

அப்படியே இருந்து பழக்கப்பட்டவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? அதிமுகவிற்காக தியாகம் செய்வதையா அல்லது தங்கள் பதவியை காப்பாற்றுவதையா?

உண்மையில் சசி குடும்பத்தினர் போன்றோர் ஜெவின் மறைவுக்குப் பின்னர் இதுபோன்ற ஒரு எதிர்ப்பலையை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இல்லாவிட்டால் அவர்கள் பன்னீர் செல்வம் போன்றோரை வெளியேற்ற அவசரம் காட்டியிருக்க மாட்டார்கள். தற்போது இந்த அக்னி பிரவேசத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.


······························

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...