Monday, September 28, 2015

தமிழ் மொழி பாதுகாப்புச் சட்டம்


தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வு பொங்கப் பொங்க, தமிழ் அறிந்த, தமிழர்களாக நடித்து வரும் அந்நியர்கள் பதறத் தொடங்கியுள்ளனர். இன்று இல்லாவிட்டால் இன்னொரு நாள் இந்தக் கருத்து வெற்றி பெற்றே தீரும் என்பது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அஞ்சும் அந்நியர்கள் பல்வேறு வடிவங்களில் தமிழ்த் தேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் எதிர்ப்பு நமது பாதையை வலுப்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் வாழும் அனைவரையும் தமிழராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இதுவும் அவர்களின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. இவர்களின் அச்சம் தேவையற்றது. தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றி விட்டால், எங்கே தங்களை துரத்தி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். அது தேவையில்லாத ஒன்று. தமிழர்கள் ஆட்சிக்கு வந்தாலும் அந்நியர்கள் இங்கே வாழலாம். ஆனாலும் அவர்களின் அச்சம், அந்நியர் வசம் உள்ள அதிகாரத்தை கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதைக் காட்டுகிறது.

எனவே தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க, தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் தேவைப்படுகின்றன. அந்த நோக்கத்திற்காக தமிழ் மொழிப் பாதுகாப்புச் சட்டம் அவசியமாகிறது.

மொழிப் பாதுகாப்பு துறை

இன்று தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில்தமிழ் வாழ்கஎன்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆட்சியில் உள்ள அந்நியர்கள் திட்டமிட்டு தமிழ் மொழியை அழித்து வருகிறார்கள். ஏனெனில் ஒரு மொழியை அழித்து விட்டால் பின்னர் அந்த இனத்தை அழிப்பது எளிதாகிவிடும். எனவே மொழி பாதுகாப்பு என்பது அவசியமாகிறது. அதற்காக ஒரு துறையை உருவாக்க வேண்டும். இந்தத் துறை அனைத்துத் துறைகளிலும் கலந்து பணிபுரிவதாக இருக்க வேண்டும்.

இந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி தமிழகத்தின் அனைத்து துறை அலுவலகங்களிலும் பணிபுரிய வேண்டும். அவர்கள் அந்தந்தத் துறையின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அந்த துறைகளில் தமிழ் மொழி, தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும்போது, அது குறித்து அந்தத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதுபோன்ற வேலைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

கல்வி

அந்நியர்களின் ஆட்சி காரணமாக தமிழகத்தில் ஒருவர் தமிழ் மொழியைப் படிக்காமலேயே பட்டப் படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். இந்த நிலை காரணமாக தமிழர்களே தமிழை புறக்கணிக்கும் சூழல் உள்ளது. ஆனால் அந்நியர்கள் கட்டாயம் தமிழ் மொழியை படிக்க வேண்டும் என்று  அவசியமில்லை.

அந்நியர் தவிர அனைவரும் தமிழ் வழிக் கல்வி பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒருவர் வேறு மொழி வழிக் கல்வி பயில்கிறார் என்றால் ஒன்று அவர் தமிழ் மொழி மீது அக்கறை இல்லாதவராக இருக்க வேண்டும் அல்லது அவர் அந்நியராக இருக்க வேண்டும்.

இந்த நிலையை உடனடியாக மாற்ற தமிழ் மொழி வழிக் கல்வி பயில்வோருக்கு மட்டுமே அரசு பணிகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசியல் செய்வோர் கட்டாயம் தமிழ் வழியில் படித்தவராக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்நியருக்கான பிரதிநிதித்துவத்தில் அரசியல் செய்வோருக்கு இது கட்டாயமில்லை. ஆனால் அவர்கள் தமிழ் மொழியை அறிந்திருப்பது அவசியம். அவர் தமிழ் மொழியை பேச, எழுத, படிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். தமிழ் வழியில் கல்வி பயின்ற தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அந்நியர்களுக்கு அவர்களின் சதவீதத்திற்கேற்ப வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் தரலாம். அவர்களில் தமிழை அறிந்தோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

ஊடகம்

மொழியை பாதுகாப்பதில் ஊடகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. தற்போது ஆங்கிலம் கலந்து பேசுவதையே, அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதையே ஊடகங்கள் ஊக்குவிக்கின்றன. இந்தப் போக்கு மறைமுகமாக தமிழை அழிப்பதற்கு இணையானதாகும்.

ஊடகத்துறை ஒன்று உருவாக்கப்பட்டு அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் ஆகியவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவற்றில் எழுதப்படும் விஷயங்கள், பேச்சு போன்றவை தமிழ் மொழியை சீரழிப்பவையாக, தமிழினத்திற்கு எதிரானவையாக இருக்கின்றனவா என்று பார்த்து அது சரி செய்யப்பட வேண்டும்.

அவ்வப்போது ஊடகங்கள் செய்யும் தவறுகளை அடிப்படையாகக் கொண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். அந்த வழிகாட்டுதல்களை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும். அவ்வாறான வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறும் ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர் ஊடகத்தின் கருத்துக்களை கண்டுகொள்ளாமல் தமிழ் மொழி, பண்பாட்டு சிதைவின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அது எந்த வகையிலும் ஊடக சுதந்திரத்தைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது.

திரைத்துறை

ஊடகத்தில் முக்கியமானதாக உள்ள துறை திரைப்படத் துறையாகும். தொலைக் காட்சிக்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது. மக்கள் தினமும் கண்டு ரசிக்கும் துறையாக உள்ளதால் திரைத்துறை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு துறையாகும்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். தமிழர் அல்லாத தயாரிப்பாளர்களும் திரைப்படங்களை தயாரிக்கலாம். ஆனால் அவர்கள் பெயரளவிலான மொழிப் பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும். இது தமிழ் மொழிப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்பட வேண்டும்.

திரைத் துறை சார்ந்த எழுத்தாளர்களில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அந்நிய எழுத்தாளர்கள் தமிழை எழுதினால் அவர்கள் தமிழ் மொழியை சிதைக்கிறார்களா என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவ்வாறு அரசு அங்கீரித்த எழுத்தாளர்களை கொண்டு மட்டுமே திரைப்படங்களுக்கான கதை, வசனம், பாடல்கள் எழுதப்பட வேண்டும். அந்த தயாரிப்புகளுக்கு அரசு அனுமதி பெற்ற பின்னரே அவற்றை படமாக்க வேண்டும்.

அதேபோல நடிப்பதில் தமிழர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கதை, காட்சிகள், தேவைகளுக்கு ஏற்ப அந்நிய நடிகர்களும், கலைஞர்களும் தமிழ் துறையில் பணியாற்றலாம். அதுபோன்ற நடிகர், கலைஞர்களிடமிருந்து பெயரளவிலான மொழிப் பாதுகாப்பு வரி வசூலிக்க வேண்டும். இது தமிழ் மொழிப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்பட வேண்டும்.

விளம்பரம்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களும் மொழிச் சிதைவுக்கு பெரிதும் வழிவகுக்கின்றன. எனவே அந்த விளம்பரங்கள் அரசு அங்கீகரித்த தயாரிப்பு நிறுவனங்கள்,  தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களைக் கொண்டு அரசு வழிகாட்டுதல்களை மீறாமல், தமிழ் மொழி, பண்பாட்டை சிதைக்காமல் உருவாக்கப்பட வேண்டும். இதனை மீறிச் செயல்பட்டால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்.

தொழில்

தமிழகத்திற்குள் தொழில் செய்வோரின் நடவடிக்கை தமிழ் மொழியைச் சிதைப்பதாக அமையக் கூடாது. அவர்கள் தங்கள் தொழிலை விளம்பரப்படுத்த வைக்கும் பதாகைகள், பெயர்ப் பலகைகள், தமிழிலேயே அமைக்கப்பட வேண்டும். வேறு மொழிகளில் இவற்றை வைக்க விரும்பினால் அவை அவசியம், தேவை கருதி மட்டுமே தமிழ் பலகைகள், எழுத்துக்களை விட அளவில் சிறியதாக இருக்க வேண்டும்.

தமிழகத்திற்குள் அந்நியர்கள் தொழில் செய்யலாம். அவர்கள் தொழிலில் பகுதியை பொதுமக்கள் மூலம் நிதி திரட்டியே செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய விரும்பாதவர்கள் தமிழர்களை தங்களது தொழிலில் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் தொழில் வளத்தால் தமிழர்களும் முன்னேற வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்ய வேண்டும்.

அரசு தொழில் விஷயத்தில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

முதலீடு

அந்நிய முதலீடுகளை படிப்படியாகக் குறைத்து அவற்றை ஒரு வரம்பில் வைத்துக் கொண்டு உள்ளுர் நிதியை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். வர்த்தகம், உழைப்பு மூலமாகவே முதலீட்டை திரட்ட வேண்டும். நேரடியாக அந்நிய முதலீட்டை பெறக் கூடாது.

கால அவகாசம்

இதுபோன்ற தமிழ்ப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி அதனை நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்கு இணையாக பிரச்சாரமும் செய்ய வேண்டும். அதுபோன்ற கால அவகாசம் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். இந்த கால அவகாசமானது பிரச்சார காலமாக பயன்படுத்தப்படலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் யாருக்கும் இழப்பை ஏற்படுத்துவதற்கானவை அல்ல. தமிழ் மொழி மீதான அக்கறை, பாதுகாப்பை அதிகரிக்கவே ஆகும்.

-----------------------------------

Sunday, September 27, 2015

காங்கிரஸ் அரசியல் சூழ்ச்சியில் சிக்கிய இம்மானுவேல்

காங்கிரஸ் அரசியல் சூழ்ச்சியில் சிக்கிய இம்மானுவேல்

திரு இம்மானுவேல் என்பவர் பரமக்குடி அருயுள்ள செல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பள்ளர் வகுப்பினர். ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றியவர். பேரையூர் வைத்தியர் பீட்டர் பெருமாள் என்பவர் தொடங்கியதேவந்திர குல வேளாளர் சங்கத்தில் இம்மானுவேல் முதுகுளத்தூர் வட்டத்தின் தலைவராகவும், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகவும் பணி செய்தனர்.

காங்கிரஸ் அமைச்சர் திரு கக்கன் அவர்களின் நண்பராக இருந்ததால், காவல்துறை வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றவர். அச்செல்வாக்கினால் தனக்கு வேண்டியவர்களுக்கு காவல் துறை மூலம் சில உதவிகளை செய்து கொடுத்து வந்தார்.

அப்போதிருந்த முதல்வர் திரு. காமராஜ் நாடாரிடம், இம்மானுவேலுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றும், தனித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தும்படியும் அமைச்சர் திரு. கக்கன் கோரினார். திரு. காமராஜர் அவர்கள் பதவி எதுவும் கொடுக்காமல் கால தாமதப்படுத்திக் கொண்டிருந்தது அன்றைய காங்கிரஸ்காரர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும், தனித் தொகுதியில் வேட்பாளராக ஒரு இந்து அரிசனரே நிற்க முடியும் என்ற காரணத்தால், கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறி தனது பெயரைஇம்மானுவேல் குலசேகரன்என்று இந்துப் பெயராக மாற்றிக் கொண்டார். அவரைஇம்மானுவேல் சேகரன்என்றும் அழைத்தார்கள்.

1957 இடைத் தேர்தலில் காங்கிரஸ் இம்மானுவேலுவை வாக்குகளைச் சேகரிக்கத்தான் பயன்படுத்தியது. இதற்காக முதுகுளத்தூர் இடைத் தேர்தலில் இம்மானுவேல் கடுமையாக உழைத்தார். காங்கிரஸ் கட்சியினர் இம்மானுவேல் மூலம் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல ஒன்றும் நடக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு இம்மானுவேல் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி இம்மானுவேல் கொலையுண்ட பின்பும் அவரை தனது கட்சிக்காக உழைத்த தியாகி என்று ஏற்கவில்லை. இம்மானுவேலை அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இன்றும் தியாகியாகப் போற்றி வருகின்றனர்.

இம்மானுவேல் கொலை பற்றி அவரது மைத்துனரும், அப்போதைய பரமக்குடி தேவேந்திரகுல வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் ஜி. பாலச்சந்திரன் தனது கருத்தில், “தேவர் சட்டமன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சம்மாகப் பாவித்து நடத்துவதை நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர் - பள்ளரிடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்குக் காரணமாக இருந்தார் என்பதை நம்புவதற்கில்லைஎன்று கூறியுள்ளார்.

இம்மானுவேல் கொலைக்குப் பின்பு 1962-ம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலிலும் பார்வேர்டு பிளாக் வேட்பாளராக திரு. சசிவர்ணத்தேவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக மறவர் இனத் தலைவர் ராமநாதபுரம் சேதுபதி காசிநாத துரை போட்டியிட்டார். இறுதியில் பார்வேர்டு பிளாக் வேட்பாளர் திரு. சசிவர்ணத் தேவர் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காசிநாத துரை, 1957 இடைத் தேர்தல் கலவரத்தின்போது நடந்த சமாதானக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
1962 பாராளுமன்றத் தேர்தலில் பசும்பொன் பெருமகனாரும் வெற்றி பெற்றார். அவரும் அவரது தொண்டர்களும் சாதிவெறியர்களாக இருந்திருந்தால் 1962 தேர்தலில், இம்மானுவேல் கொலைக்குப் பின்பும் அந்த பூமியில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பது சிந்தித்துப் பார்க்கத் தக்கது.

அப்போதைய காங்கிரஸ் கட்சி, திரு. இம்மானுவேல் அவர்களை பதவி ஆசை காட்டி பகடைக் காயாகப் பயன்படுத்தி பலிகடாவாய் ஆக்கியது. 1957 தேர்தலில் காங்கிரஸ்-க்காக தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்த அவரை இறப்புக்குப் பின்னர் காங்கிரஸ்காரர்கள்தான் தியாகி என்று கொண்டாடி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்தார்களா? இல்லை.
ஓநாய்கள் கூட்டம்போல் சதைகளைத் தின்றுவிட்டு எலும்புகளை துப்பிச் சென்று விட்டார்கள் அப்போதைய காங்கிரஸ்காரர்கள். அன்றுதொட்டு இன்றுவரை இதைத்தான் இந்த பாரத புண்ணிய தேசத்தில் காங்கிரஸ்காரர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024
--------------------------------------------------------------------------------------------------------------------------


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...