Tuesday, September 9, 2014

இம்மானுவேல் சேகரன் - நாங்கள் எப்படி புரிந்துகொள்கிறோம்..



இம்மானுவேல் சேகரன் ஒரு இளைஞர். போராட்ட குணமுள்ளவர்.  அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைகளுக்கு நெருக்கமாக ஆகிறார். அல்லது ஆக்கப்படுகிறார். இந்த நிலையில்...

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு அங்கு பல்வேறு இடங்களில் கலவரங்கள், மோதல்கள் நடக்கின்றன என்பது போன்ற வதந்திகள் கிளப்பப்படுகின்றன. தொகுதிக்குள் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.

அப்பொழுது அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பதவியிலும் இல்லாத இம்மானுவேல் பள்ளர்களின் பிரதிநிதியாக ஆக்கப்படுகிறார். (கலெக்டர், எஸ்பி முதலானோர் கலந்துகொண்ட இந்த பேச்சு வார்த்தையை நாட்டாமை கூட்டம் என்ற ரேஞ்சில் திராவிடர்கள் / தலித்கள் அறிவுஜீவிகள் வர்ணிப்பர்).

அப்போது தேர்தெடுக்கப்பட்ட பள்ளர் எம்எல்ஏக்கள் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் ஆகிய இரண்டு கட்சிகளிலுமே இருந்தனர். அவர்கள் பள்ளர்களின் பிரதிநிதியாக்கப்படவில்லை. அதேவேளையில் 80% பள்ளர்களின் ஆதரவு பார்வேர்டு பிளாக் கட்சிக்கு உள்ளது.

இதைத்தான் தேவர் கேட்டார், “பள்ளர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும்போது இவரை எப்படி பள்ளர்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று. அதேபோல இம்மானுவேல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இல்லாத காரணத்தால் அவரோடு கையொப்பம் இட முடியாது என்றுதான் தேவர் சொன்னார். (இதை திராவிட, சாதி ஊடகங்கள் அவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தேவர் சொன்னதாக செய்தி வெளியிட்டன).

அதன் பின்னர் அமைதிக்காக தனித்தனி வேண்டுகோள் தயாரிக்கப்பட்டு அதில் கையொப்பம் இடப்படுகிறது. அத்துடன் கூட்டம் நல்ல முறையில் நடந்து முடிகிறது.

கூட்டம் முடிந்த பின்னர் தேவர், ஒரு பள்ளப் பயலை இப்படி பேச விட்டுவிட்டீர்களேஎன்று தன்னுடன் இருந்தவர்களை கடிந்து கொண்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பெருமாள் பீட்டர் கூறுகிறார். (இதனை ஏற்க இயலாது. ஏனெனில் தேவருடன் எப்போதும் இருக்கும் வேலுக்குடும்பன் ஒரு பள்ளர். (கட்டுரை எழுதும்போது உயிருடன் இருந்த அவர் பின்னர் இறந்து விட்டார்.) அப்படி இருக்கும்போது தேவர் இப்படி பேசியதாக கூறியது ஏற்புடையதல்ல).

அடுத்ததாக தேவர் அப்படி கடிந்துகொண்டிருந்தாலும் அது கொலைக்குத் தூண்டியதாக கருதப்படுமா என்று தனிநீதி மன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. பின்னர் அதனை அப்படிக் கருத முடியாது என்று கூறி நீதிபதிகள் ஏற்க மறுத்து விடுகிறார்கள்.

அதன் பின் தேவருக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி அவரை விடுதலை செய்கிறார்கள்.

தேவரை முதலில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த காங்கிரஸ் அரசாங்கம் ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்குப் பிறகுதான் அவரின் பெயரை இம்மானுவேல் கொலையில் சேர்க்கிறது. (தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய முடியாது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்தது).

சரி இம்மானுவேலை கொலை செய்யவே இல்லையா? ஆமாம், அவர் கொலை செய்யப்பட்டார். அவர்கள் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர தேவருக்கும், ஃபார்வேர்டு பிளாக் கட்சிக்கும் தொடர்பில்லாதவர்கள். அவர்கள் வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்திருக்கலாம். (அதற்கான தண்டனையையும் அவர்கள் அனுபவித்துவிட்டார்கள்.)

இந்தப் புள்ளிக்கு காங்கிரஸ் அரசு செல்லவேயில்லை. அதாவது இம்மானுவேல் சேகரன் எதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படவேயில்லை. அவர்களின் நோக்கம் இந்த கொலை வழக்கில் தேவரைச் சிக்க வைப்பதாகவே இருந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது.

இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டது வருந்தத் தக்கது, கண்டிக்கத் தக்கது. ஆனால் அதற்காக திராவிடமும், தலித்தியமும் அந்த கொலைக் குற்றத்தை ஒட்டு மொத்த தேவர் சமுதாயத்தின் மீதும் சுமத்த முயற்சிப்பது எந்த வழியில் நியாயம்? அன்று காங்கிரஸ் செய்த சதியை இன்று திராவிடமும், தலித்தியமும் செய்து வருகின்றன. இவர்களின் தேவை கலவரம் தொடர வேண்டும். ஆனால் நமது தேவை அதுவல்ல.

மற்றபடி முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பு மறவரும் - பள்ளரும் இப்பகுதியில் சகோதரர்களாத்தான் வாழ்ந்து வந்தார்கள். இந்த இரண்டு சமுதாயத்தினரும் கலந்து வசித்து வந்தார்கள். திராவிட, தலித் அறிவுஜீவிகள் அரசியல் செய்ய தேவைப்படும் “சேரி” இங்கு இல்லை. பள்ளர்கள் சேரிகளில் வசிக்கவில்லை. அவர்கள் மறவர்களோடு கலந்து வசித்து வந்தார்கள்.

உண்மைகள் இப்படி இருக்க, தேவர்களை ஆதிக்க சாதியாகக் காட்டி அரசியல் செய்ய திராவிடருக்கும் தலித்களுக்கும் கலவரங்கள் தேவையாக உள்ளன. எனவே அவர்கள் இதையே விரும்புகிறார்கள்.

முதுகுளத்தூர் கலவரத்தில் நாடார்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. ஏன்? தேவர் நாடார்களில் கள்ள மார்க்கெட்டில் ஈடுபட்டு வருவோரை கடுமையாகக் கண்டித்து வந்தார். பார்வேர்டு பிளாக்கில் நாடார்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நாடார்களுக்கு எதிரானவராக இருந்தால்  அவர்கள் எப்படி அந்தக் கட்சியில் இருந்திருப்பார்கள்? காமராஜர் அரசியலின் கடைக்கோடியில் இருந்தபோது உதவிக்கு வராத இந்த கள்ள மார்க்கெட் கும்பல் அவர் முதல்வர் பதவிக்கு வந்ததும் அவரோடு வந்து ஒட்டிக் கொண்டது. சில சமயங்களில்  அவர்களின் விருப்படியும் அரசியல் நடைபெற்றது. அதுவே முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் சேகரனின் கொலைக்கு காரணமாக அமைந்த்து.

அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர்களும் பங்கேற்க வந்ததன் மர்மம் இதுதான். ஆனால் அவர்களை அதிகாரிகள் வெளியேற்றிவிட்டனர். நேரடியான தொழிலோ, அரசியலோ செய்ய முடியாத இந்தக் கும்பல் மறவர்களுக்கு எதிராக பள்ளர்களை களத்தில் இறக்கியது என்பதுதான் உண்மை. அதற்கு பலிகடா ஆக்கப்பட்ட போராளிதான் இம்மானுவேல் சேகரன்.

இன்றையத் தேவை சமூக நல்லிணக்கம். பல்வேறு தமிழ்ச் சமூகங்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சாதி ஒழிப்பு தமிழருக்கான விடுதலை அல்ல. சாதிகளுக்கு இடையேயான புரிதலே தமிழருக்கான விடுதலை.

பள்ளர்கள் இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை கொண்டாட்டும். தேவர்கள் தேவரின் குருபூஜையைக் கொண்டாட்டும். பள்ளர்களும் - தேவர்களும் எதிரிகள் அல்ல, சகோதரர்கள். எனவே இரு தரப்பினரும் தங்களுக்குள் பகைமை பாராட்டாமல் ஒற்றுமையை பேணுவது காலத்தின் கட்டாயம்.

                                                            ••••••

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...