Monday, May 20, 2019

டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மஹாராஜா. சிங்கம்பட்டி ஜமீன்..


மக்களாட்சியிலும், இன்றைக்கும் "மஹாராஜா "
ஒருவர் இருக்கிராறென்றால் ஆச்சரியமாக 
இருக்கிறது.."குடியாட்சியில் ஒரு முடியாட்சி" உண்மையும்கூட.
இந்தியாவின் கடைசி முடிசூட்டப்பட்ட மஹாராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
மணிமுத்தாறு அருகிலுள்ள சிங்கம்பட்டி..
திரு.சிவசுப்பிரமணி சங்கர முருகதாஸ்
தீர்த்தபதி மஹாராஜா..90 வயது. ஜமீன்.
தனது தந்தை இறந்து ,மூன்றாவது வயதிலேயே,32 வது அரசராக மணிமகுடம் சூட்டிய மஹாராஜா. பிரம்மாண்டமான அரண்மனை..ராஜா காலத்தைப்போலவே இன்றும் வேல்கம்புடன் காவலிருக்கும் வாயிற்காவலர்கள்,தர்பார் மண்டபத்தில்
மன்னர்வரும்போது புகழ்பாடும் அரசவைக்கவிஞர்,யானைத்தந்தத்தை
கைப்பிடியாக கொண்ட தங்கவாள் சொருகி
மிடுக்கோடு நடைபோடும் மஹாராஜா..
வருடந்தோறும் ஆடி அமாவாசைதோறும் பொதுமக்களுக்கு தரிசனம் தருகிறார்..
ஏழைமக்களுக்கு அதுதான் திருவிழா.
"முதுகுத்தோலை உறிச்சிடுவேன்"எனும் வழக்கு
மொழிக்கு காரணமான தண்டனை பிறப்பிடம்
சிங்கம்பட்டி ஜமீன்..
தவறுசெய்தவர்களை, நேரடியாக பிரம்பால் அடிக்காமல்,ஆட்டின் தோலை உறித்து,அதன்மீது
உப்பு தடவி,குற்றவாளி முதுகில் ஒட்டவைத்து அந்த ஆட்டுத்தோல்மீது பிரம்பால் அடித்து,பிறகு
ஆட்டின்தோலை எடுக்கும்போது குற்றவாளி உடலிலிருந்து மேல்தோல் எடுப்பதுதான் தண்டனை, இதுவே நாம் வழக்குமொழியில்
பேசும் "தோலை உறிச்சிடுவேன்"தண்டனை.
18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மார்த்தான்டவர்மனின் இறப்பிற்கு
பிறகு அவரது வாரிசை(குழந்தை) முடிசூடவிடாமல் சூழ்ச்சிசெய்து,எட்டுபிள்ளை வீட்டுக்காரர்கள் என்னும் திருவிதாங்கூர் மன்னரின் எதிரிகளால் அவரது வாரிசு விரட்டப்பட்டதாகவும், அந்த வாரிசு சொரிமுத்து அய்யனார் கோவிலில் தஞ்சமடைந்து
இருப்பதையறிந்த 26 வது மஹாராஜா, அந்த குழந்தையை வளர்த்து,களரிப்பயிற்சி கொடுத்து
தனது மூத்த இளவரசருடன் திரும்பவும் திருவிதாங்கூரை மீட்டு மஹாராஜாவிடம் ஒப்படைத்தாகவும், போரின் முடிவில் இளவரசன் இறந்துவிட்டாரென தெரிந்தும், கலங்காமலே
தான் வளர்த்த திருவிதாங்கூர் வாரிசை மீண்டும் திருவிதாங்கூர் மன்னராக முடிசூட்டினார் ..
அதற்கு பிரதிபலனாக சிங்கம்பட்டி ஜமீன்க்கே
மேற்கு தொடர்ச்சிமலையின் என்பதாயிரம் ஏக்கர் நிலத்தை ஜமீன்வசமே ஒப்படைத்தார்
திருவிதாங்கூர் மஹாராஜா... அதிலே ஆறாயிரம் ஏக்கர் எல்லைப்பிரச்னையால்
தடுமாறிப்போய்விட்டது, சிங்கம்பட்டி ஜமீன்
ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அரண்மனையோடு திகழ்ந்தது..
அரசகுடும்பத்தில் அன்று தொடங்கிய " கிங் ஜார்ஜ் பள்ளி "மன்னரின்
அரண்மனைக்குள்ளேயே, இன்றும் அரசின் நிதி
உதவியோடு செயல்படுகிறது.
அரசகுடும்பத்தில் திருமணம் என்றால்,மணமகன் இல்லாமல் மன்னரின் வாளை மட்டுமே எடுத்துச்சென்று மணமகளை
அரண்மனைக்கு இளவரசியாக்குவதே நடைமுறை.
பலதலைமுறை கண்ட மஹாராஜா இன்றைக்கும் பலருக்கு பொருளாதார உதவி
வழங்கும் மன்னராகவே வாழ்கிறார். பலரது இல்லங்களில் கடவுளைப்போலவே இவரது
புகைப்படங்கள் வைத்து வணங்கும் மக்கள்
மனதை வென்ற மன்னன்.
பிறப்பும் இறப்பும் அறிந்த சித்தராக,
பலமொழியில் பேசும் வல்லவராக,.
அழுத்தமான,ஆழமான சிந்தனையோடு சாதாரண எளிமை மனிதராக, ஏழைகளுக்கு பொருளுதவி வழங்கும் வள்ளலாக,
பசும்பொன் தேவர்திருமகனாரின் நண்பனாக
சிங்கம்பட்டி ஜமீன் மன்னராக,,
எல்லாவற்றுக்கும் மேலாக
"இயற்கை விவசாயி"யாக வாழும்..
முக்குலத்து மன்னன், தென்னாட்டுபுலிக்குட்டி..
ஆன்மீக வழியில் பயணிக்கும் அய்யா..
"டிஎன்எஸ். முருகதாஸ்தீர்த்தபதி மஹாராஜா"
சிங்கம்பட்டி ஜமீன்.. வணங்குகிறோம் அய்யா.

திரு வாணாத தேவர் கல்வெட்டு.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள "சோலைச்சேரி" ஊரில் உள்ள இக்கல்வெட்டு சேத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரசாகிய ராஜஸ்ரீ திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா பற்றிய தகவலைத் தருகிறது.
கல்வெட்டு வாசகம்.
- - - - - - - - - - - - - - - - -
1. ஶ பாண்டி விநாயகர் துணை
2. சேத்தூர் மகாராஜா ௵ வடம
3. லை திரு வாணாத சேவகப் பாண்
4. டிய மகாராஜா அவர்களின்
5. அனுக்கிரகத்தினால் சோலை சே
6. ரி வடுகாயர் பெத்த நல்லு
7. நாயக்கர் மகன் பெத்த நல்லு
8. நாயக்கர் உபயம்
9. கொல்லம்௯௩ஶபங்குனி.
{இறுதிப் பகுதி உடைந்துள்ளது}
கல்வெட்டு செய்தி.
- - - - - - - - - - - - - - - - -
சோலைச்சேரி ஊரைச் சேர்ந்த வடுகாயர் சமூகமாக அறியப்பட்ட, தெலுங்கு இடையர் ஜாதியைச் சேர்ந்த பெத்தநல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் சேத்தூர் அரசராகிய ஸ்ரீ ராஜஸ்ரீ
"திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா" அவர்கள் அருளால் எழுப்பிய கோயிற் பணியைச் சுட்டுகிறது. கல்வெட்டு அருகிலேயே பெத்த நல்லு நாயக்கர் மற்றும் அவரது மகனான மற்றொரு பெத்த நல்லு நாயக்கர் இருவரும் நின்று வணங்கிய நிலையில் சிலைவடிவமாகக் காணப்படுகின்றனர்.
கல்வெட்டு காட்டும் வரலாறு.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சேத்தூர் மன்னர்கள் தென்தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சிறப்பான வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள். மறவரில் "வணங்காமுடி பண்டார மறவர்கள்" என வழங்கப்படும் 'பொக்கிஷதார மறவர்' பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை வாணர்குலமாகிய வாணாதிராயர் வம்சத்தவர் என உறுதி செய்யும் வகையிலான பல்வேறு சான்றுகள் தற்காலத்தில் கிடைத்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்றாகவேஇந்த 18ம் நூற்றாண்டு கல்வெட்டையும் கருதவேண்டியுள்ளது. இதில் வாண குலத்திற்கே உரிய "திரு வாணாத " எனும் அடைமொழியால் அவர்கள் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட்டு வரும். திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்கனவே வாணாதிராயர்களுக்கு, "மறத்திரு வாணாதிராயர்கள்" -என குறிப்புகள் உள்ளதாகக் காட்டுகின்றார். இதற்கு வலுவைக் கூட்டும் விதமாக இந்த கல்வெட்டு, மறவர் ஜாதியைச் சேர்ந்த சேத்தூர் அரசர்களை "திரு வாணாத சேவகப்பாண்டிய மகாராஜா " என வழங்கி அமைந்துள்ளது . மேலும் இப்பெயர் இந்த அரசவழியினருக்கு காலந்தோறும் அடைமொழி முன்னொட்டுப் பெயராக தொடர்ந்து வழக்கில் இருந்து வரும் பெயராகவே உள்ளமையை வரலாறு உணர்த்துகிறது.
நெல்லையில் "தச்சனூர் அருளாளன் சேவகத்தேவன்" என வாணாதிராயர் ஒருவரை தனது பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் எனும்நூலில்முனைவர்.திரு.வேதாச்சலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். "சேவகத்தேவன்" எனும் பட்டமும் சேத்தூர் அரசர்கட்கு வழங்கிவருவதும் நாம் கண்கூடாகக் காணும் உண்மை ஆகும்.
மேலுள்ள கல்வெட்டில் சேத்தூர் அரசர்களுக்காக வடுகாய நாயக்கர் சமூகத்தின் பெத்த நல்லு நாயக்கர் மகனாகிய பெத்த நல்லு நாயக்கர் {தகப்பனார் -மகன் இருவருக்கும் ஒரே பெயர் }தமது விசுவாசத்தால் செய்த அறச்செயல் அறியவருகிறது. இது மதுரை நாயக்கர் மேலாண்மையை ஏற்காது வாணாதிராயர் கீழ் தம்மை பணித்துக்கொண்ட தும்பிச்சி நாயக்கரை நமக்கு ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. வாணர்களுடைய வரலாறு முழுமையடைய வேண்டுமெனில் ,வத்திராயிருப்பு -சேத்தூர் - கொல்லங்கொண்டான்- தலைவன்கோட்டை -சங்கரன்கோயில் பகுதி மறவர்கள் பற்றி ஆய்வுகள் முழுமையடைய வேண்டியது இங்கு அவசியமாகிறது.
நன்றி!
கல்வெட்டு படம் உபயம்: திரு. Ra Ja @ தென்கரை மஹராஜ பாண்டியன் அவர்கள் {கடம்பூர் -சொக்கம்பட்டி வாரிசுதாரர் }
அன்பன்.கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

Saturday, May 18, 2019

மேலூர் தன்னரசுகள்ளர் நாட்டின் நில அளவு




தற்போதைய காலக்கட்டத்தில் மதுரையில் சொந்தமாக ஒரு 20செண்ட் நிலம் இருந்தாலே, அந்த குடும்பம் ஓரளவு வசதி உள்ள குடும்பமாக பார்க்கப்படுகிறது.
காலங்கள் தற்போது இப்படி இருக்க, பிரிட்டிஸ் அரசு மதுரையில் கிபி1763ஆம் ஆண்டு மேலூர் தன்னரசு கள்ளர்களை அடக்குவதற்கு கேப்டன் ரூம்லே என்கிற அதிகாரியுடன் கிட்டத்தக்க 10000 சிப்பாய்கள்,குதிரைப் படை வீரர்கள்,கனரக பீரங்கிகளுடன் உள்ளே நுழைந்து போரிட்டது, போரில் கள்ளர் நாட்டு தலைவர்கள் உட்பட ஆண்,பெண்,குழந்தைகள் என்று பாராமல் 5000பேர்கள் தோட்டங்களுக்கு இரையாக்கினான் கேப்டன் ரூம்லே.
இந்த இனப் படுகொலைகளுக்கு பின்பு கேப்டன் ரூம்லேவின் மேற்பார்வையில் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்களை மதுரை பிரிட்டிஸ் கவர்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
அவ்வாறு அளந்து எடுத்த கள்ளர் நாட்டின் நிலம் எவ்வளவு என்றால்.
நஞ்சை : 400 cheys
புஞ்சை : 20,000 kurkkam
ஒரு Chey என்பது அரை காணிக்கும் அதிகமானது, ஒரு காணி என்பது 1.25 ஏக்கர் ஆகும்.
ஆக ஒரு Chey என்பது 3/4 ஏக்கர் குறிக்கும்.
அப்போதை மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நஞ்சை (வயல்) மட்டும் கிட்டத்தட்ட 300ஏக்கர் இருந்துள்ளது.
அதாவது 1.21 சதுர கிலோமீட்டர் இருந்துள்ளது.
அதேபோல் 20,000 kurkam நஞ்சை(காடு) இருந்துள்ளது.
ஒரு kurukkam என்பது ஒரு ஏக்கருக்கும் அதிகமானது.
20,000ஏக்கர் நஞ்சை நிலம் என்பது 80.93 கிட்டத்தட்ட 81சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
இரண்டும் சேர்ந்து 82சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
தற்போதைய மதுரை மாநகராட்சியின் பரப்பளவே 147.97 சதுர கிலோமீட்டர் என்பது கூடுதல் தகவல்.
ஆக மதுரை வட்டாரத்தின் பாதி பகுதிகள் கிபி1763க்கு முன்னாள் அனைத்தும் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்கள் என்பது ஆனித்தரமான உன்மையாக உள்ளது.
82சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பளவு என்பது மேலூர் கள்ளர் நாட்டின் நிலம் மட்டுமே.
இதுபோக
பிரமலை கள்ளர்களின் 8 நாட்டு நிலங்களையும் சேர்த்தால் மதுரை மீனாட்சியின் பூமி யாரிடம் இருந்தது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
சிவகங்கையில் 14 கள்ளர் நாடு உள்ளன என்பது கூடுதல் தகவல்
புதுக்கோட்டை எனும் ஒரு கள்ளர் மாநிலம் கிபி1947வரை இருந்துள்ளது.
தஞ்சையில் 13 கள்ளர் ஜமீனுடன் கம்பீரமாக இருந்துள்ளனர்.
மதுரையின் அந்த 82சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பளவின் இன்று இந்த சோழபாண்டியனுக்கு ஒரு 10செண்ட் நிலம் இருந்திருந்தால்....??????
நான் ஏன் கார்ப்ரேட் அடிமையாக வாழ வேண்டும்
நன்றி
Madurai Gazetteer revenue report
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Friday, May 10, 2019

கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் கல்வெட்டு





வடகரையாதிக்கமாகிய சொக்கம்பட்டி அரசின் கடைசி அரசருள் ஒருவரான ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் அவர்கள் பற்றிய செய்திகளும் வரலாற்றுச் சான்றுகளும் மிகவும் குறைவாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மன்னரைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பாக நாங்கள் தென்காசிப் பாண்டியர் பற்றிய தேடுதல்களில் ஈடுபட்டிருந்த பொழுது, சொக்கம்பட்டி கருப்பாநதிக்கரை அருகிலுள்ள பெரியநாதன் கோயில் என மக்களால் வணங்கப்பெறும் பெரியசாமி ஐயன் கோயிலின் முன்நுழைவு மண்டபத்தின் இடது ஓரத்தில், கீழே சாய்க்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. 27 வரிகள் கொண்ட இக்கல்வெட்டின் இறுதிப்பகுதி உடைந்து காணப்படுகின்றது. இதனை படியெடுக்காமல் நான் படித்து அன்று பதிவு செய்தபின் முறையாகத் தொல்லியல் துறையிடம் தெரிவித்துப் பின்னர் அது, மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர்களால் முறையாகப் படியெடுக்கப்பட்டது. இனி அச் சாசனத்தொடரை நாம் பார்ப்போம்.
கல்வெட்டு
""""""""""""""""
1. ௵௶யஎ௵
2. பரிதாபி௵
3. உத்தராயண
4. மான நிர்ஷ
5. மாக ஆனி௴
6. யச ம்தேதி சுக்கிரவா
7. ரமுஞ் சுக்கில ப
8. ட்ச நவமியு
9. மசுத நட்செ
10.த்திர முஞ் சித்த
11.யோகமு பய
12.கரணமும் விரி
13.ச்சிகலக் க
14.னெமு மார்ச்சுதவே
15.ளையுங் கூடின சு
16.ப தினத்தில் பூர
17.ணவல்லி சமே
18.தப் பிரசுதிசுர
19.ரும் பூரணா பு
20.ட்கலா சமேத
21.மகாசாத்தா
22.வுக்குஞ் சொ
23.க்கம்பட்டி ஆதிக்
24.கத்துக்கு அரசராகி
25.ய கருணாலய வ
26.லங்கைப்புலிப்
27.பாண்டி{யன்}
19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில் அது இருக்குமிடமாகிய அக்கோயிலின் கடவுளர் ,
"பூரணவல்லி மற்றும் பிரசுதிசுரர்"- எனவும்,
"பூரணபுட்கலா -மகாசாத்தா" -எனவும்,
வழங்கப்பெறுகின்றனர். சொக்கம்பட்டி ஜமீன் ஸ்ரீராஜமான்யஸ்ரீ கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் இக்கல்வெட்டில். ..
"சொக்கம்பட்டி ஆதிக்கத்துக்கு 'அரசராகிய' கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன்"- என்றே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
●கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் பற்றிய செய்திகள்.
இவருக்கு "அனந்த சுந்தர கருணாலய வலங்கைப்புலி பாண்டியன்" என்றும், "சோமசுந்தரபாண்டியன்"-என்றும் வெவ்வேறு பெயர்களும் உண்டு.
இவர் 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மன்னராகப் பதவியேற்றார். இவர் பற்றிய சில செய்திகளை நாம் இப்போது காண்போம்.
சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஊர். அதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது .இதே போல ஒரு புலி அட்டகாசம் செய்து வந்ததைக் கண்டக் கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் புலியை அடித்துக் கொன்று விடுகிறார் .அதைப் புலவர் இவ்வாறாக பாடுகிறார்,...
"தம்புலியான மடப்புலியே ! தடிக்கம்பால் அடிபட்டாயே ! எங்கள் முப்புலி துரைப்புலி
வீரப்புலி கொண்ட புலி கருணாலய வலங்கைப்புலி கைக்கம்பால் அடிபட்டு இறந்தாயே "
என்று புகழ்ந்து பாடியுள்ளார் .
இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைக்குச் சான்றாக ஒரு சிலை ஒன்று புலியைக் குத்திக்கொல்வது போன்ற தோற்றத்தில் இதே கோயிலில் ஆற்றடி ஓரமாக அமைந்துள்ளது அச் சிலை கருணாலய வலங்கைப்புலி பாண்டியன் சிலையாகவே இருக்க வேண்டும். அந்த சிலைக்கு தனியாக கோயிலில் அறை எழுப்பப்பட்டு இன்று வணங்கப்பெறும் சிலையாக உருமாறியுள்ளது. அதன்படத்தையும் கீழே பதிவிட்டுள்ளேன்.
கடைசி அரசர் தம் வாழ்நாட்களை அரண்மணையின் ஓரிடத்தில் கழித்துக்கொண்டிருந்தார். அவர் வேதமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு ஒரு வேதாந்தியைப்போல,..
"வாழ்க்கை நிலையாமையுடைத்து"
எனக்கூறி ஒரு சந்நியாசியைப்போல வாழ்ந்தார் என கலெக்டர் எழுதியுள்ளார். {பேசும் ஆவணங்கள் }
பிற்காலத்தில்சொக்கம்பட்டியின் மிகப்பெரிய அரண்மணைக் கொத்தளங்களில் கற்றாழையும், இண்டும், இசங்கும், ஆமணக்கும் முளைத்துக்கிடந்தன, அங்கே பன்றிகளும், நாய்களும், கழுதைகளும், வாசம் செய்தன, அரண்மணையின் பெரிய வாயிற்படிகளின் அருகே உள்ள கேணியில் பலர் நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள், பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த அரண்மணையைச் சுற்றிலும் மண்சுவர்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன, சில சிலைகள் அங்கே நடுகற்களாகத் தரையில் புதைக்கப்பட்டிருந்தன, என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அரண்மனை பராமரிப்பின்றி சீர்கேடு அடைந்ததால்
கருணாலய வலங்கைப்புலிப் பாண்டியன் தமது குற்றாலம் பங்களாவாகிய "வலங்கைப்புலி விலாசம்" வசம், வாசம் செய்து, தனது இறுதிநாட்களை கழித்துவிட்டு 1892 ல் மரணமடைந்தார். என தனது பேசும் ஆவணங்கள் நூலில் எஸ்.எஸ்.பாண்டியன் அவர்கள் தெரிவிக்கிறார்.
அன்பன். கி.ச.முனிராஜ்வாணாதிராயன் !

Monday, May 6, 2019

`என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்!' - பசும்பொன்னில் மனம்திறந்த பிரபு



நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் படம், `ராவண கோட்டம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் கடந்த சில நாள்களாக நடந்துவருகிறது. இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்து வருகிறார். `ராவண கோட்டம்' படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் பிரபு, நேற்று காலை கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்குச் சென்றார். அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்று, தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் தேவர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று, அங்குள்ள தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, ' எனது தந்தை சிவாஜி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவருமாறு, நீண்ட காலமாக என்னிடம் சொல்லிவந்தார். எனது பணிகளுக்கிடையே, தேவரின் நினைவிடத்திற்குச் செல்ல முடியாத நிலை இருந்துவந்தது. அதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்தது. அந்த வாய்ப்பினால், தேவரின் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தியதுடன், அவர் வாழ்ந்த வீட்டையும் பார்த்து வியந்தேன். இதன்மூலம், எனது தந்தையின் நீண்ட நாள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளேன். இதன்மூலம் எனக்கு மன நிம்மதி ஏற்பட்டுள்ளது'' என்றார்.
https://www.vikatan.com/news/tamilnadu/156744-prabhu-is-who-paid-homage-at-pasumpon-thevar-memorial-near-kamuthi.html?artfrm=others_breaking_news

Sunday, May 5, 2019

பதுங்கு குழி

ஈழம் - ஓவிய சாட்சியம் - 2 - ஓவியர் புகழேந்தி
ஓவியர் : புகழேந்தி
ஓவியம் : 2

தலைப்பு: பதுங்கு குழி


மண் துளைத்து இறங்கும்
மரணத்தின் வெடிமுழக்கத்தை
தாங்குமோ?
தாலாட்டில் இனிததரிந்த
இளஞ்செவிப்பறைகள்!
- கவிஞர் இன்குலாப்

”போர் முகங்கள்” என்று பெயரிடப்பட்ட ஈழம் குறித்த ஒரு ஓவியக்கண்காட்சியை சமீபத்தில் சென்னையில் ஓவியர் புகழேந்தி நடத்தினார். அதில் இடம் பெற்ற ஓவியங்கள் காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது. இவ்வோவியங்கள் கூடிய விரைவில் புத்தகமாய் கொண்டு வர இருக்கிறார். நீங்கள் எழுத இருக்கும் பொருத்தமான பின்னூட்டங்களை அப்புத்தகத்தில் வெளியிட விரும்புகிறார். உங்கள் பின்னூட்டங்களை அளிக்க விரும்புவோர் kaattchi@gmail.com க்கு அனுப்பலாம்.

Thursday, May 2, 2019

தமிழீழமும் தமிழகத்தை தமிழர் ஆள்வதும்

தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என ஒத்துக்கொள்பவர்களில் ஒரு கூட்டம் தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை அதை நிரூபிக்கும் விதமாக நேற்று ஒரு நிகழ்வு நடந்தது
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒரு அமைப்பு இருக்கிறது அந்த அமைப்பு நடத்திய கூட்டத்தில் நேற்று நான் கலந்து கொண்டேன். பேச வேண்டாம் என்று இருந்தேன் இருந்தாலும் மூன்று முறை என்னை அழைத்தனர் சரி பேசுவோம் என்று பேசினேன். நான் பேசும் முன்பாக அங்கு பேசியவர்களிலிருந்து சில செய்திகளை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டேன்
1. எனக்கும் முன்பாக பேசிய ஒருவர் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என விரும்புகிறவர்கள் எல்லாம் கை தூக்குங்க என்றார் பாதிப்பேர் கை தூக்கினார்கள்
2. ஒருவர் பேசும்போது இஸ்ரேலியர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள் பல இடங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். உலக அளவில் அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் வருபவர்களாக தமிழர்களாக இருக்கிறார்கள் தமிழர்களும் யூதர்களைப் போல பொருளாதாரத்தில் மிகவும் பலம் கொண்டவர்களாக மாற வேண்டும்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலர் இங்குள்ள தமிழர்கள் பொருளாதாரத்தில் உயர கை கொடுக்க தயாராக இருக்கிறார்கள் இங்கிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்தால் அதை அவர்கள் வாங்க தயாராக இருக்கிறார்கள் என்றார் இப்படி பேசியவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு நான் பேசத் தொடங்கினேன்
அந்த அறையில் கிட்டத்தட்ட 60 பேர் இருந்தனர் தமிழினியன் தமிழ்நேயன் வழக்கறிஞர் புகழேந்தி ,நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெயகுமார், பேராசிரியர் சாம்சன், மேகநாதன் முனுசாமி, டி எஸ் எஸ் மணி என பலர் இருந்தனர் நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பேராசிரியர் சரஸ்வதியும் அங்கே இருந்தார்
பேசத் துவங்கினேன்
எல்லோருக்கும் வணக்கம் இங்கே இருப்பவர்கள் அனைவரும் தமிழீழம் அடைய வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உடையவர்கள் என்பது எனக்கு தெரியும்
உங்களை பார்த்து நான் ஒன்று கேட்கிறேன் தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்பதில் இங்குள்ள எத்தனை பேருக்கு உடன்பாடு இருக்கிறது உடன்பாடு இருப்பவர்கள் கையை தூக்குங்கள் என்றேன்
(கிட்டத்தட்ட பத்து பேர் கை தூக்கவில்லை அவ்வாறு இருந்தவர்களில் நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற பேராசிரியர் சரஸ்வதி முக்கியமானவர்
அவர் ஒரு தெலுங்கர் அவர் கணவரும் ஒரு தெலுங்கர் என நான் முன்பே அறிந்திருக்கிறேன். அவர் கையைத் தூக்க மாட்டார் என எனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் எதற்கு நான் இப்படி செய்தேன் என்றால்,
எனக்கு புரிந்தது இந்த பொதுச்சபைக்கு புரிய வேண்டும் இன்னும் எத்தனை நாள் தான் நாம் மங்குணிகளாக இருப்பது என்பதை உணர்த்தவே அவ்வாறு செய்தேன்)
பார்த்தீர்களா தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும் என்பதும் நம் வீட்டில் நாம் தான் குடும்பத் தலைவராக இருக்க வேண்டும் என்பதும் ஒன்றுதான் ஆனால் அதற்கு கூட ஒத்துக் கொள்ளாதவர்கள் தான் தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என்றும் நம்முடன் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்ளுங்கள் இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நாம் எப்படி செயல்படுவது என்று கேட்டேன்
இங்கே ஒரு ஐயா பேசும்போது வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பினால் அங்குள்ள தமிழர்கள் உதவுவார்கள் அதனால் இவர்களுக்கு சற்று பொருளாதார உயர்வு பெற வழி கிடைக்கும் என்று பேசினார். நான் கேட்கிறேன் இங்கிருந்து நெல்லிக்காய் முட்டைகளை ஒருவர் ஏற்றுமதி செய்வார் ஊருகாய் பாட்டில்களை ஒருவரை ஏற்றுமதி செய்வார் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களும் நான் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அதை பெற்று வணிகம் செய்து இவருக்கும் உதவி செய்ததாகக் திருப்தி அடைவார் எல்லாம் சரிதான்
இங்கிருந்து இந்த பொருட்களை அனுப்புகிறவர் தெலுங்கராக இருப்பாரே தமிழர் வேடம் போட்டு அமெரிக்காவில் இருக்கும் தமிழரும் நம்பும்படி தமிழின் பெருமையை பேசுவாரே இப்போது என்ன செய்ய?
அமெரிக்க தமிழர் சங்கத்தை ஆட்டையைப் போட்டு உள்ளவர்கள் தெலுங்கர்கள் அது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினேன்
இன்னும் நிறைய உதாரணங்களைக் காட்டி தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தை பிரித்து மேய்ந்து பேசினேன் அதையெல்லாம் எழுதினால் கட்டுரை பெரிதாகிவிடும் நன்றி

Wednesday, May 1, 2019

கள்ளர் -மறவர் -அகம்படியர் - முக்குலத்தோர் 1

அன்புள்ள நண்பருக்கு!

முக்குலத்தோர் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணமாக எனக்கு எனது இரண்டாவது கடிதத்தை எழுத வாய்ப்பளித்தமைக்காக உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அன்பு நண்பரே! சங்க காலத்தில் ஜாதிகள் இல்லை. குடிகளே இருந்தன. குடிகளிலிருந்து குலங்களும் ஜாதிகளும் கிளைத்தன. அதனுடன் சேவைக்குடிகளும் தோன்றின. அயலார் வருகையில் பல்வேறு புதுப்புது ஜாதிகள் தோற்றம் பெற்றன. 2ம் நூற்றாண்டில் குடிகள் மெல்ல மெல்ல ஜாதி நிலையை எய்தத் தொடங்கி சோழர்களின் காலத்தில் வேகமெடுத்தன. சோழர்களின் கடல்தாண்டிய படையெடுப்புகளாலும் புதிய தேசங்களை கைப்பற்றிய விளைவாலும் தமிழக்குடிகளுடன் சங்கமித்த குழுவினரின் எண்ணிக்கை பெருகத்துவங்கின. நாயக்கர் காலத்தில் புதுப்புது ஜாதிகளும் குலங்களும் வேறொரு பரிணாமத்தை நோக்கி பயணித்தன. வைதீக கோட்பாடுகளை மிகத்தீவிரமாக பின்பற்றிய சமய வளர்ச்சி, ஜாதிகளின் தோற்றங்களை புராணங்களில் வைத்து புளுகத் தொடங்கின. ஒவ்வொரு ஜாதியும் தத்தம் தோற்றங்களை கடவுளரிடமிருந்தும் வானுலக அமரர்களிடமிருந்தும் தொடங்குவது நியதியாகியது. ஆனால் மறக்குடிக்கு இப்படியான இத்யாதிகளும் சங்கதிகளும் தேவைப்படவில்லை! - ஏனெனில் இவர்களுக்கு சிறப்பான வரலாறு எப்போதும் இருந்தது. துளுவ வெள்ளாளர் மறவரிடமிருந்து தோற்றம் பெற்றதாக எதுவும் வெள்ளையர் சான்றுகள் கூட இல்லை. வேளாண் மரபு -போர்க்குலத்தவர் மரபு என இரண்டு வகைகளில் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. தஞசையில் கள்ளர்களும் அகம்படியார்களும் புதுக்கோட்டை-நெல்லை மறவர்களும் குடியான ஜாதிகளில் வைத்து பின்னாளில் எண்ணப்பட்டுள்ளனர்.

கள்ளர் மறவர் அகம்படியர் மூவரின் பண்பாட்டு கலாச்சார விகுதிகள் யாவும் ஒன்றாகவே உள்ளன. வடக்கில் வேண்டுமானால் அவை மறுபடலாம். பண்பாட்டு கலாச்சார விகுதிகள் இடங்களுக்கேற்பவும் மாறுபடும் தன்மையனவாகும். எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்ட முக்குலத்தோர் பழக்க வழக்கங்கள் எதுவும் தென்பாண்டி சீர்மையின் முக்குலத்தோர்களிடம் இல்லை. இவற்றை வைத்து வெவ்வேறு மரபினர் என தீர்மானிப்பது தவறாகும். ஆநிரை கவர்ந்த மறவரும் அகம்படியரும் அச்செயலால் கள்ளர் எனும் பெயர் பூண்டது இயல்பாகவே நடந்த விஷயம். அவர்கள் அதில் நிலைத்து கள்ளர் எனும் இன்றைய ஜாதியாகியுள்ளனர்.

அன்பிற்குரிய நண்பரே! உண்மைகளை அறிய விரும்புகிறீர்கள் என உங்கள் கேள்விகளிலிருந்து நான் கருதுகிறேன். அதை நீங்கள் அறியவேண்டும் என்றால் ஆழமான வாசிப்புகளோடு நல்லோர் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உணர்வு வயப்பட்ட நிலையிலிருந்து நீங்கள் உங்களை அடிக்கடி நின்று நிதானித்து பயணிக்கப் பழக்க வேண்டும். நான் உங்களை தவறாக வழிநடத்தி விடமாட்டேன் என்று நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

எது உண்மையோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பண்பே உங்களை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கடத்திச் செல்லும். -நன்றி! உங்கள் வீட்டில் அனைவரது நலனையும் இந்த முகமறியாத அன்புச்சகோதரன் முகநூல் வழியாகக் கேட்டதாகச் சொல்லவும்.

என்றென்றும் அன்புடனும்....மாறாத அன்போடு உள்ளார்ந்த உண்மையுடனும் உங்கள் அன்புச் சகோதரருள் ஒருவன்!

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...