Friday, June 19, 2015

கால்டுவெல்லும் தமிழ் திராவிடர்களும் - பாகம் 6


தமிழ் ராணுவம் பற்றி - டி சிவராம்

திரவிட இயக்கத்தின் தந்தை பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் (1819-1891) ஆவார். ஆங்கிலேயர் தமிழ்ப் பகுதிகளில் தமிழ் ராணுவத்தை அடக்கி வரும்போது இவர் மறவர்களின் பாளையங்களின் மையப் பகுதியான திருநெல்வேலியின் பேராயர் ஆக இருந்தவர். இவருடைய போற்றுதலுக்குரிய படைப்பு திராவிட மொழிகளின் இலக்கண ஒப்பீடு ஆகும். இது 1856-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. இதுவே இருபதாம் நூற்றாண்டில் தமிழர்களின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அரசியல், கல்வி மற்றும் கலாச்சார இயக்கத்திற்கு கருத்து ரீதியான அடிக்கல்லாக அமைந்தது.

இந்த ஒப்பீடு இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து தென்னிந்திய மொழிகளும் (மற்றும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த பிராஹூய் போன்ற சில மொழிகளும்) திராவிட மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்று கூறியது. இது அப்போது இந்தியாவில் நிலவி வந்த கருத்தான இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்ற கருத்துக்கு சவால் விடுப்பதாக அமைந்தது.

அது ஒப்பற்றதாக இருந்த தென்னிந்திய திராவிட மக்களின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை பின்பற்றுவதாக இருந்தது. திராவிட இயக்கத்தின் துவக்கத்தில் இந்தக் கருத்துக்களின் பங்கு வேறொரு இடத்தில் (ஐர்ஷிக், 1969, ஹார்ட்கிரேவ், 1965, சிவதம்பி 1978) விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தும் சென்னை மாகாணத்தில் காலனி ஆதிக்கத்தின் கீழாக முன்னணி இடத்தைப் பெற்ற புதிதாக எழுந்த பிராமணர் அல்லாத பிரமுகர்களின் இடையே காணப்படும் கலாச்சார மற்றும் அரசியல் வேறுபாடுகள் பற்றியதாகும்.

எனினும் இந்த ஆய்வின் நோக்கம் தொடக்க கட்டத்தில் திராவிட கருத்தின் அடிப்படை கருத்துக்கள் பற்றியதாகும். இவை முக்கியமாக தமிழ்ச் சமுதாயத்தை ராணுவத் தன்மையைப் போக்கும் ஆங்கிலேயரின் முயற்சியின் அரசியல் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டவையாகும்.

பாதிரியார் கால்டுவெல்லின் எழுத்துக்கள் ஒரு நீண்டகாலத் திட்டத்தை முன்கூட்டியே திட்டமிடக் கூடியவையாக அமைந்தன. அந்தக் காலத்தில் ஆங்கிலேய அரசாங்கத்தை கட்டியமைக்கும்போது இது சிறந்த இலக்கிய படைப்பாக கருதப்பட்டது அசாதாரணமானது ஒன்றல்ல. அந்தத் திட்டத்தின் யூகங்களே திராவிட கருத்துக்கு அடித்தளமாயின.

அவையாவன,
() தென்னிந்தியாவின் தொடக்க காலத்திலிருந்து ஒரு பெரும்பகுதி போர் புரிவதிலேயே ஈடுபட்டு வரும் தமிழ்ச் சமுதாயத்தின் மத்தியில் ஒழுங்கை ஏற்படுத்தும் பொறுப்பு ஆங்கிலேயருக்கு உள்ளது.

(பி) திராவிட நாகரீகத்தின் உடனடி எதிர்ப்பு கருத்துக்கள் சட்டப்பூர்வ தமிழர்கள் என்று பாதிரியார் கருதிய மற்றும்மறவர்களுக்கு எதிரான நிலையில் இருந்த சாதிகளைமுழுமையாகச் சென்றடையும் என்று ஆங்கில நிர்வாகம் எதிர்பார்த்தது.

(சி) திராவிட மொழிக்குடும்பம் மற்றும் கலாச்சாரத்தின் ஒப்பற்ற தன்மையின் விளக்கமே, இந்தியத் துணைக் கண்டத்தில் தங்களது ராணுவ விரிவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்கீழ்ச் சாதியினரைஒன்றிணைக்க உதவும். தமிழ் கிறிஸ்தவ ராணுவத்தினர் பாரம்பரிய தமிழ் ராணுவ சாதிகளுக்கு மாற்றாக அமைந்தனர்.

கால்டுவெல்திருநெல்வேலி வரலாறுஎன்ற தனது இறுதி குறிப்புகளில்,

ஒரு கலப்பு அரசாங்கம்... இவ்வாறு முடிவுக்கு வந்தது. ஆங்கிலேய அரசாங்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்த காரணத்தால் தானாகவே தனது ஒற்றுமையால் அதை முற்றிலுமாக  வெற்றிகண்டது. இந்த மாற்றத்தின் முடிவுகள் மிகவும் முக்கியமானவை மற்றும் மதிப்பு வாய்ந்தவை. பேராசிரியர் வில்சன்... ஆங்கிலேய அரசாங்கம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளாவிட்டால் நடைபெற்றிருக்கக் கூடிய சம்பவங்களை விவரிக்கிறார்.” 

காவேரிக்கு தெற்கேயுள்ள மாவட்டங்களில் சமூக வாழ்க்கையின் வழக்கங்களை முறியடிக்கும் அறிவுப்பூர்வமான மற்றும் சக்திவாய்ந்த கொள்கையை அமல்படுத்தாதிருந்தால், கிறிஸ்தவத்திற்கு நீண்ட காலத்திற்கு முந்தையவர்கள் என்று விவரிக்கக் கூடிய நிலைக்கு அவர்கள் திருப்பப்பட்டிருப்பார்கள். மீண்டும் அவர்கள் ராவணனின் பூதங்களுக்கு ஏற்றவர்களாக ஆகியிருப்பார்கள்என்று முடிக்கிறார்

இந்த மாவட்டம் குறித்த விவரங்களை வாசிக்கும்போது ஒருவரின் மனக்கண்ணில் தோன்றும் காட்சி. மனித குலம் தோன்றிய நாள் முதல் (தமிழ் நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட)1801-ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டின் மற்ற பகுதிகளில் போர் நடப்பது போல திருநெல்வேலியிலும் போர் நடப்பது  சாதாரணமான நிகழ்வாகவே இருந்திருக்கும்.

கால்டுவெல் மேலும் குறிப்பிடுகிறார்,
அப்போது எற்பட்ட பயன்மிக்க மாற்றங்களில் மிகவும் குறிப்பிடத் தக்கது, பாளையக்காரர்களிடம் ஏற்பட்டதே”. பல பகுதிகளில் ராணுவ சாதிகள் மற்றும் மறவர்கள்  விவசாயம் செய்யத் தொடங்கியதாக அவர் திருப்தியுடன் கூறுகிறார். “மாற்றம் ஏழை மறவர்களிடையே முற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் நாட்டின் பயங்கரமான மக்களாக இருந்த இவர்கள் தற்போது சட்டம் மற்றும் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். தமிழ்ச் சமுதாயம் இவ்வாறுதனக்குத்தானே ஒன்றிணைந்தது’. மேலும் ஆங்கிலேயே அரசின் கீழாக தனது தலைவிதியை புரிந்து கொள்ள துவங்கியது. “இந்த நாட்டில் ஒவ்வொரு ஆட்சியாளருக்குப் பிறகும் ஒவ்வொரு இனம் எழுச்சியுற்றது. முயற்சி செய்து (தங்களிடம்) பற்றாக்குறை இருப்பதை கண்டறிந்து கடந்து சென்றது.” ஆனால் தமிழர்கள்இந்தக் கால கட்டத்தில் எங்கள் அரசாங்கத்தை தாங்கள் எப்போதும் பார்த்திராத அரசாங்கமாக, தயாராக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டனர்என்று உறுதி செய்கிறார்.

தந்தையைப் போல அரவணைக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தின்கீழாக தமிழர்கள் அமைதியானவர்களாக ஆனார்கள், நாடு தொழில் வளம் மிக்க நாடானது. தமிழ் நாட்டில் எழுச்சி பெற்று கடந்து போன கடைசிஇன ஆட்சியாளர்கள்தொல்லை தரும் மறவர்கள் ஆவர். ஆங்கில ஆட்சி மட்டுமே தேவையான ஒன்றாக இருந்தது. ஏனெனில் அதன் கொள்கைகள் மற்றும் புராடஸ்டன்ட் நெறிமுறைகள் கால்டுவெல் யூகித்த ஒரே தன்மை கொண்டதாக இருந்தது. அது உண்மையான மத அடிப்படையிலானது. மேலும் திராவிட இனத்தின் நீதிகருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது என்று கால்டுவெல் கருதினார்.

வரலாற்று அறிஞர் என்ற முறையில் அவர் தமிழ்ச் சமுதாயத்தின் ராணுவ கலாச்சாரத்தில் மறவர்களின் ஆதிக்கத்தை நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும் அவர் தனது ஏகாதிபத்திய மற்றும் மத நலனிற்கான தொலைநோக்கு திட்டத்திற்காக தான் காட்டிய திராவிட நாகரீகத்தில் அதனை சேர்க்காமல் தவிர்த்து விட்டார். ஆங்கிலேயர்கள் மறவர்களை அடக்கி தமிழ்ச் சமுதாயத்தின், அதாவது விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரின்சட்டப்பூர்வ ஆட்சியாளர்களின்இறையாண்மையை நிலைநிறுத்தினர்.

கால்டுவெல்லின் கருத்தின்படி தமிழ் ராணுவ சாதிகள்பாதுகாப்பான மற்றும் மிகவும் மதிப்பு மிக்க விவசாயத் தொழிலில் ஈடுபட வேண்டியதாயிற்று (கால்டுவெல்: 1888, 229). எனினும், அவர் அவர்களின் அமைதி குறித்து ஆழமாக சந்தேகப்படுகிறார். பாளையக்காரர்களின் போர்கள் குறித்து பேசும் அவர்,

மிகவும் திருப்தியற்ற நிலையில் இருந்த, கைப்பற்றப்பட்ட பாளையங்களின் மக்கள், சந்தேகமில்லாமல் தற்போது அவர்களுக்குத் தேவைப்படும் அமைதியான வாழ்க்கை மூலம் ஆங்கிலேயர்களுடன் தங்கள் பலத்தை அதிகரிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி அடைந்ததாக தெரிகிறது”(. 197).

திருநெல்வேலி கையேட்டை எழுதிய திரு. ஸ்டூவர்ட், தமிழ் ராணுவ சாதிகளின் பாளையம் அமைப்பு, மத்தியகால ஐரோப்பாவின் பிரபுக்களின் அதிகாரத்தைப்போல வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாததாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்தக் கருத்தை கால்டுவெல் கண்டித்துள்ளார். “பாளையக்காரர்கள் பற்றி நல்ல வார்த்தைகளை கேட்பதே அரிதானது. நான் மகிழ்ச்சியுடனேயே திரு. ஸ்டூவர்டின் கருத்துக்களைப் பற்றி சொல்கிறேன். இருந்தாலும், பாளையக்காரர்களின் தீயசெயல்கள் மத்திய கால ஐரோப்பிய பிரபுக்களின் செயல்களை விட கட்டமைக்கப் பட்டவையாக, பயங்கரமானவையாக  இருந்தன.” (.59)
ஆங்கிலேய அரசாங்கத்துடன் கவலையை பகிர்ந்துகொண்டது தவிர, மறவருக்கு எதிரான பாதிரியாரின் நடவடிக்கை அவர்கள் புராட்டஸ்டன்ட் மதத்தை தழுவிய பெரும்பான்மை சாணார்கள் மீது நடத்திய பயங்கர தாக்குதல்கள் காரணமாகவும் எழுந்தது. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களின் கருத்து மற்றும் சமஸ்கிருத கலாச்சாரம் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு இடையூறாக இருக்கிறது என்றால், கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களின் மீது மறவர்கள் நடத்திய தாக்குதல் நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது என்று கருதினார். அவரது திட்டப்படி, தமிழர்களின் வரலாற்றில் தமிழ் சமுதாயத்தின் ராணுவத் தன்மையை அகற்றியதன் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கில திருச்சபை தேடிய சாதிகளின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளின் மூலமாகவே கிடைக்கும் பயன்களை ஒன்றுசேர்ப்பதே தமிழர்களின் உண்மையான குணம் என்று கால்டுவெல் கருதினார். மறவர்களின் போர் வழக்கங்கள் மற்றும் பிராமணர்களின் சமஸ்கிருத கலாச்சாரம்உண்மையானதிராவிடர்களின் சமூக ஒழுங்கு மற்றும் நீதிக் கருத்துக்களுக்கு அந்நியமானது என்று கருதினார்.

19-ம் நூற்றாண்டில் தமிழர்கள் மத்தியில் செயல்பட்ட பல ஆங்கில மிஷனரிகள் இந்தக் கருத்துக்களை பகிர்ந்துகொண்டன. மிஷனரிகள் மற்றும் நிர்வாகிகளும் இதற்கான ஆதாரங்கள் பல தமிழ் மத மற்றும் போதனை இலக்கியங்களில் காணப்படுவதை கண்டனர். 1865-ம் ஆண்டு ஹென்றி மார்டின் ஸ்கட்டர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில், “பண்டைய தமிழ் இலக்கியங்களில் கிறிஸ்தவ கருத்துக்கள் உள்ளன என்ற மிஷனரிகளின் கருத்தை விளக்க பல தமிழ் இலக்கிய மற்றும் பாடல்களை மேற்கோள் காட்டினார்” (ஐர்ஷிக்; 1976, 15). இந்த நம்பிக்கை மிஷனரிகள் நடத்திய உயர் கல்வி நிலையங்களில் தமிழ் படைப்புகளை அறிமுகப்படுத்துவது குறைவாக அல்லது தேவையில்லாத ஒரு நிலையை ஏற்படுத்தின.

கல்லூரி பாடத் திட்டம் அதுபோன்ற படைப்புகளை வெளியிடுவதற்கான சந்தையையே உருவாக்கியது. இந்த திருப்பம் பண்டையத் தமிழ் இலக்கியங்களை (.வே. சாமிநாத ஐயர், என் சரித்திரம் .714) கண்டறியும் உந்துதலை உருவாக்கியது.  அதுவே புறநானூறு மற்றும் புறப்பொருள் வெண்பா மாலை போன்ற இலக்கியங்களை வெளியிட வழிவகுத்தது. இந்த இலக்கியங்கள்தான் பண்டைத் தமிழர்களை பயங்கரமான ராணுவ இனமாக காட்டின. இவ்வாறு கால்டுவெல்லின் தொலைநோக்கு கருத்து திராவிடர்களின் பண்டை கலாச்சாரம் மற்றும் மொழி என்று அவர் யூகித்த நீதி மற்றும் மதக் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம்  தமிழர்களிடையே மறுமலர்ச்சி ஏற்படுத்துவது புராடஸ்டன்ட் நெறிகளை உறுதிப்படுத்த உதவும் என்றும் ராணுவசாதி அல்லாத தமிழ்ச் சமுதாயத்திடையே ஆங்கிலேய அரசாங்கத்திற்கான ஆதரவை ஏற்படுத்தும் என்று யூகித்தது.

மதுரை மாவட்ட கையேடு இந்த சாதிகளைஅவர்கள்... மறவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் ஒழுங்கானவர்களாக, பொருளாதாரத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று பாராட்டுகிறது. சாணார்களைப் பற்றி சொல்லும் இது, “அவர்கள் கல்வி மீது அவர்கள் கொண்ட ஆர்வம் அவர்களை உயர்த்தியது, பெருமளவு கிறிஸ்தவ மதத்தை தழுவியது மற்றும் தங்களது கவனமான பழக்க வழக்கங்கள் மூலமாக சமூக நிலையில் உயரத் துவங்கியுள்ளனர். அவர்களில் பலர் தங்கள் குணத்தின் மூலமாக மட்டுமே மறவர்களை முந்திச் சென்றுவிட்டனர் ” (தர்ஸ்டன் 1906, . 373).

கால்டுவெல் தனது இலக்கணத்திற்கு முகவுரை எழுதும்போது, இந்தவிசுவாசமானதமிழச் சாதிகள் குறித்து எழுதுகிறார். “இலங்கை காபி தோட்டங்களில் பணிபுரிவது எல்லாம் இந்த தமிழர்கள்தான். கொழும்புவில் அதிகம் சம்பாதிக்கும் சாதிகளும் தமிழர்கள்தான். ஒவ்வொரு லாபகரமான வேலையையும் செய்து சிங்களவர்களை அவர்களின் தீவிலேயே முந்திச் செல்வது சாத்தியமாகாமல் போகாது என்று தோன்றுகிறது. பெகு, பெனாங், சிங்கப்பூர் மற்றும் கிழக்கு நாடுகளில் பகுதிகளில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானோர் தமிழர்களே. பெருமளவு தமிழர்கள் மொரீசியஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலான கூலிகளும் தமிழர்களே. சுருக்கமாகச் சொன்னால் எங்கெல்லாம் பணம் உருவாக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் செல்வந்தர்கள் ஓரங்கட்டப்பட வேண்டுமோ, அங்கே தமிழர்களை கொண்டு சேர்த்தால் போதும். இவர்கள் கிழக்கின் கிரேக்கர்கள் அல்லது ஸ்காட்லாந்தவர்கள். இந்துக்களில் இவர்கள் மிகவும் தொழில் செய்யக் கூடிய மற்றும் பாதுகாக்கக் கூடிய இனம். (கால்டுவெல்: 1856, 7)

இவ்வாறு கால்டுவெல்லின் திராவிடக் கருத்து இந்த வார்த்தையை பிராமணர் அல்லாதோர், ராணுவமில்லாத தமிழ்க் கலாச்சாரத்தை குறிப்பிடுவதாக அமைந்ததுஇவ்வாறு பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் திராவிட இயக்கங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்கள்போர் புரியும் பழக்கத்தை கைகொண்டனர்”  என்ற கருத்தை விதைக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றார். கற்றறிந்த மிஷனரிகளின் முயற்சிகள், நம்பகமற்ற தமிழர்கள் மத்தியில்திராவிடதமிழர்கள் விசுமாக இருப்பார்கள், அவர்கள் நீண்ட கால அளவில் அரசுக்கான அடித்தளமாக இருப்பார்கள் என்ற ஒரு இறுதி நம்பிக்கையை ஆங்கிலேய அரசுக்கு ஏற்படுத்தின. சிப்பாய் கலகம் மற்றும் திராவிட இயக்கத்தின் எழுச்சி அவர்கள் சொன்னது சரியே என்று நிரூபித்தன.

குறிப்பு
மையிலிடியைச் சேர்ந்த பனிவர் பிரிவினரும் ராமநாதபுரத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்று என் கவனத்திற்கு கொண்டு வந்த திரு ஜொகநாதன் அவர்களுக்கு நன்றி. எனது தகவல் யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தைச் சேர்ந்த டா. .பாலசுந்தரம் எழுதிய (ஏ) பிளேஸ் நேம் ஸ்டடீஸ் - காங்கேசன்துறை சர்க்யூட் பக்கம் 5-6-லிருந்து எடுக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மையிலிடியின் எஸ். அப்பாதுரையின் மணிவிழாவின்போது பிரசுரிக்கப்பட்டது.
(பி) ஒரு தமிழ் தீவிரவாத குழுவின் பொலிட்பீரோ உறுப்பினரான திரு ரத்னலிங்கம் அவர்களின் பேட்டி. இவர் திரு ஜொகநாதனின் உறவினர் என்று நினைக்கிறேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அடிக்குறிப்புகள் இடம்பெறவில்லை.
--------------------------
சாச்சி ஸ்ரீ காந்தாவின் கடிதம் (ஒசாகா 5665, ஜப்பான்)
பிரபாகரனின் ஆதரவாளர்கள்
(லங்கா கார்டியன், ஆகஸ்டு 1, 1992 2)

டி.பி. சிவராமின் சிந்தனையைத் தூண்டும் தமிழ் ராணுவ வரலாற்றை (மே1, மே15, ஜூன் 1 மற்றும் ஜூலை 1) படிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும் எல்டிடிஈயின் தீவிரவாதத்திற்கு அடிப்படையாக இருந்த  காரணியை அவர் விட்டுவிட்டார். தமிழ் நாடு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களின் பல்வேறு சாதிகளின் வரலாற்றுப் பாரம்பரியம் மட்டுமே புலிகள் உருவாக காரணமாக அமைந்தது என்று நம்புவது முட்டாள்தனமானது.

அது உண்மையானால் க்ளின்ட் ஈஸ்ட்வுட் எந்த சாதியைச் சேர்ந்தவர்? பிரபாகரன் தனது ராணுவ புத்திக் கூர்மையை வளர்த்துக்கொள்ள க்ளின்ட் ஈஸ்ட்வுட்-ன்  திரைப்படங்களின் ஆதிக்கமே காரணம் என்று பதிவு செய்துள்ளார் என்ற காரணத்தால் இந்தக் கேள்வியை கேட்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி மறவர் சாதிப் பெயரை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை சிவராம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது பத்திரிகை திறமைகளை குறிப்பிட மறந்து விட்டார்.

கண்டியில் பிறந்த எம்.ஜி.ராமச்சந்திரனின் திரைப்படங்களே தமிழ்நாடு மற்றும் இலங்கையில் மக்கள் மத்தியில் ராணுவ பெருமையை ஏற்படுத்தின. 1940-களின் பிற்பகுதியிலும் 1950 முழுவதுமாகவும் எம்ஜிஆர் தமிழர்களின் ராணுவ பாரம்பரியத்தை விவரிக்கும் பல தமிழ் வரலாற்று திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாகமாஎன்ற எழுத்தில் தொடங்கும் படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. இந்தத் திரைப்படங்களின் பெயர்களே தமிழர்களின் கடந்தகால பெருமையை கூறுவதாக அமைந்தன.

இதில் மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, மர்மயோகி, மலைக் கள்ளன், மதுரை வீரன், மகாதேவி, மன்னாதி மன்னன் ஆகிய படங்கள் அடங்கும். இந்தப் படங்களில் எம்ஜிஆர் தனது ரசிகர்களை கவர தனது ராணுவ திறமைகளை கட்டினார். பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் இந்த திரைப்படங்களால் கவரப்பட்டனர் என்று சொன்னால் சந்தேகமில்லை.

1992-ம் ஆண்டு வந்த இந்த கடிதத்திற்கு 2005-ம் ஆண்டு சாச்சி ஸ்ரீ காந்தா எழுதிய கடிதம்

1992-ல் லங்கா கார்டியனின் ஆசிரியர் மெர்வின் டி சில்வா தனது ஆசிரியர் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தினார். அதனால் எனது கடிதம் அச்சேற வேண்டுமானால், விரும்பத்தகாத இது போன்ற கடிதத்திற்காக நான் எனது கருத்துக்களை அதிகபட்சம் 300 வார்த்தைகளாக குறைத்துக் கொண்டேன். இவ்வாறு நான் வார்த்தைச் சிக்கனத்தை பயன்படுத்தியபோதும் மெர்வின் டி சில்வாவின் கழுகு கண்களை சுண்டியிழுக்கும் வகையில்தூண்டிலையும்போட்டேன். அதற்காக நான் சிவராமின் புலமையை குறைத்து மதிப்பிடுவதாக பொருள் கொள்ளக் கூடாது.

மேலும், “என்ற எழுத்தில் எம்ஜிஆருக்கு இருந்த கவர்ச்சியை நான் விவரிக்கவில்லை. இதனை போர்க்குடிகளானமறவர்களைஒப்புக்கொண்டதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். பத்தாண்டுகள் முழுவதுமாக (1950-கள்), எம்ஜிஆர்என்ற எழுத்தில் துவங்கும் பல படங்களில் நடித்தார். இது அவரது முன்னோர்கள் கோவை மாவட்டத்தின் காங்கேயம் தொகுதியின்  மன்றாடியார் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. அவர்கள் கேரளாவில் உள்ள மருதூரில் குடியேறினார்கள் (புரட்சி நடிகர் எம்ஜிஆர், மணிமேகலை வெளியீடு, சென்னை, 1994, இரண்டாம் பதிப்பு 6- பார்க்கவும்). அதன் பின் 1960-களில் தற்கால சமூக கதைகள் கொண்ட படங்களில் பலவற்றுக்கு எம்ஜிஆர்தாஎன்ற எழுத்தைக் கொண்டு தொடங்கும் தலைப்புகளை தேர்வு செய்தார் அல்லது தாய் என்ற முற்சேர்க்கை வருமாறு பார்த்துக்கொண்டார்.

ஒரு திரைப்பட நடிகரின் இந்த வார்த்தை தேர்வு விளையாட்டுகளுக்கு யாராவது முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? விமர்சகர்கள் இல்லை என்று சொல்ல்லாம். ஆனால் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களைப் போலவே லாபம்’, ‘வெற்றிபற்றி மூடநம்பிக்கைகளைப் பெற்றிருந்தனர். மேலும் திரைப்படங்களின் மூலமாக ஒரு தோற்றத்தை கட்டமைப்பது என்பது தமிழ் நாட்டை மட்டுமே வரம்பாக கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. ஹாலிவுட் ரொனால்டு ரீகன், அர்னால்டு செவாஸ்நேகர் போன்றோரை உருவாக்கியது.

இவ்வாறு எம்ஜிஆர் மற்றும் அவரது போட்டியாளரும் நடிகரும் அரசியல்வாதியுமான  சிவாஜி கணேசனும் 1950-கள் முதல் 1970-கள் வரை திரைத்துறையில் ஆட்சி செய்தனர். தங்கள் விருப்பத்திற்கேற்ப தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் ஆட்டுவித்தனர். இவர்கள் விலக்குகளாக இல்லாதிருந்திருக்கலாம். சிவாஜி கணேசனும் 1950-1960-களின் பிற்பகுதியில் அல்லதுபாஎன்ற எழுத்துக்களில் துவங்கும் பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்தார்.

இறுதியாக, சிவ்ராம் தனது 5 வது கட்டுரையில் விவரிக்கப்பட்டபடி காவல்காரர் கருத்து எம்ஜிஆரின் படங்களில் குறிப்பாக மதுரை வீரன் (1956) படத்தில் கவனத்தை ஈர்த்தது. எம்ஜிஆரின் நிறுவனமான சத்யா மூவீஸ் தயாரித்து 1967-ல் வெளியான மற்றொரு படத்தின் தலைப்பு காவல்காரன் ஆகும்.

http://tamilnation.co/forum/sivaram/920801lg.htm


நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...