Sunday, November 17, 2019

கள்ளர் குல ஹொய்சாள வீரவல்லாளத்தேவன்



வரலாறு படிப்பவர்களுக்கு நன்கு தெரியும், சில வரலாறுகளை படிக்கும் போது தன்னை அறியாமல் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது,பூரித்து நிற்பது என இருக்கும்.
அதேபோல் சில வரலாறுகளை படிக்கும் போது தன்னை அறியாமல் கண்களில் இருந்து சார,சாரயாக அருவி போல் கண்ணீர் கொட்டும்.

அப்படி வரலாறு தன்னை அறியாமல் பல மணி நேரமாக அழுதது. என் வாழ்க்கையில் மூன்று முறை

1. சூரைக்குடி கள்ளர் பற்றை, முவாசம் கான்
முழுமையாக அழித்தொழித்து, பொன்னமராவதி
நாட்டார்களை மிரட்டி பணிய வைப்பது.
2. கேப்டன் ரூம்லேவிற்கும், வெள்ளளூர் நாட்டு
கள்ளர்களுக்கும் நடந்த யுத்தத்தில் 5000 ஆண்,
பெண், குழந்தைகள் என அனைவரும் வீர மரணம்
அடைந்தது.
3. மதுரை சுல்தான் ஆட்சியில் பல இன்னல்களை
மக்கள் சந்தித்து வந்து போது, அதனை மீட்க வந்த
மண்ணின் மைந்தன் வீரவல்லாளத்தேவனை சூழ்ச்சி
செய்து உயிருடன் தோலை உரிந்த கோர சம்பவம்.

இதில் 3வதாக படித்த வரலாற்றில், அதெப்படி கர்நாடகாவில் இருந்து ஒரு மன்னன் மதுரை மீட்க இப்படி கொடுரமான முறையில் வீரமரணம் அடைந்தார் என்பது பல வருடங்களாகவே உருண்டு கொண்டிருந்தது.

அவரைப் பற்றிய தேடலில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் பல பாகங்களாக எழுத உள்ளேன்.
அதில் முதலாவதாக
யார் அந்த ஹொய்சாளர்.....?
அவர்கள் குலம்....?
அவர்களின் பூர்வீகம்....?
என முதல் தொகுதியில் பார்ப்போம்....!

ஹொய்சாள மன்னர்கள் தங்களுடைய முன்னோர்கள் யதுகுலத்தில் உதித்தவர்கள் என்றும், தங்கள் முன்னோன் ஒருவர் காட்டில் வேட்டையாடச் சென்ற போது, தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரை புலி ஒன்று தாக்க நேரிட்டது. அச்சமயத்தில் ஹொய்சாள முன்னோன் அந்த புலியை கொன்று முனிவரை காப்பாற்றினார் என்றும் கல்வெட்டுகளில் முறையே தெரிவித்துள்ளனர். அதனால் இவர்களுடைய சின்னம் கூட புலியை கொள்ளும் ஒரு வீரனின் சிலையே இருக்கும்.

இங்கு யதுகுலம் என்பது சங்ககால தமிழ் வேளிர் குலம் ஆகும்.
தபலகர் என்னும் முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். புலி ஒன்று அவரைத் தாக்க வந்தது. சளன் என்னும் யாதவ அரசன் அவ்வழியாக வேட்டையாட வந்தான். முனிவர் அவனிடம் “ஹொய் சள” (சளனே ஓட்டு) என்றார். அவன் ஓட்டினான். அதனால் அவ்வரசன் ஹொய்சளன் எனப்பட்டான்.

என்று தங்கள் முன்னோர் என கூறுகிறார்கள்.
இதேபோல் சங்க இலக்கியத்தில் இருக்குவேளிர் மரபைச் சேர்ந்த புலிகடிமாஅல் பற்றி கபிலர் பாடுகிறார்:-

வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!

என இருங்கோவேள், புலிகடிமால் என்ற பிறிதொரு பெயரானும் அழைக்கப்பெறுவன் என்பதைக்கொண்டு. “வேள்.குல அரசருள் சளன் என்ற பெயருடையான் ஒருவன் இருந்தான் அவன் ஒருநாள் காட்டில் வேட்டைய்ாடிக் கொண்டிருந்தான் அப்போது ஆங்கே தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரைப் புலி. யொன்று தாக்க நெருங்கியது ; அதுகண்டு அஞ்சிய முனிவர், அருகே, வேட் ைட பாடிக் கொண்டிருந்த சளனேக் கூவி அழைத்துப், "புலியைக் கொல் சள " என்ற பொருள் படுமாறு, 'பொய் சள பொய் சள " என்று கூறினர்; அவனும் அக்கணமே அம்பெய்து அப் புலியைக் கொன்ருன் , அவன் செயல்கண்டு மகிழ்ந்த முனிவர், அரசே மின் வெற்றி கண்டு மகிழ்ந்தேன். என புலிகடி மாஅல்! ஐ விவரிக்கிறது.
இதில் வரும் புலிகடி  மாஅல் என்பது திருமாலை குறிக்கும் சொல்லாக எடுத்துக் கொள்ளலாம்.
ஹொய்சாளர்களும் தீவிர வைணவ மார்க்கத்தை கொண்டவர்கள்.
ஆக கொடும்பாளூர் இருக்குவேளிர் மரபில் இருந்து உதித்தவர்களே ஹொய்சாளர்கள் என்பது எந்த ஐயமின்றி புலனாகிறது.

சரி, இந்த இருக்குவேளிர் தங்களை எந்த இனமாக குறித்துள்ளார்கள் என்று பார்த்தால் தங்களை கள்ளர் என்றே குறித்துள்ளார்கள்.
திருப்பழனம் கல்வெட்டில்: (140)

கள்ளன் அச்சப்பிடாரி என்றே நேரடியாக குறித்துள்ளனர்.
பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை மிகவும் துல்லியமாக எழுதிய தாத்தா நீலகண்ட சாஸ்த்திரி இருக்குவேளிரை கள்ளர் தலைவர்கள் என்றே குறித்துள்ளார்.
அதுபோக இன்றும் கொடும்புறார்,இருக்குவேள்,வல்லாளத்தேவன் என்ற பட்டங்களுடன் தஞ்சை கள்ளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் மேலூர் கள்ளர்களில் அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள வல்லாளப்பட்டி தலைமை அம்பலகாரர் தங்களின் குடும்ப பெயராக வல்லாளத்தேவன் அம்பலம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

அதுபோக சுமார் 1000ஆண்டுகளாக வல்லாளப்பட்டி கிராமத்தில்:-
தெற்குவளவு கிராமத்தின் காவல் தெய்வங்களாக விளங்கும் பெரிய புலி அய்யனார் மற்றும் சின்ன புலி அய்யனாருக்கு கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் நடைபெறும் புரவி (குதிரை) எடுக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை வல்லாளத்தேவன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் பலசாலி. அப்போது பக்கத்து நாட்டைச் சேர்ந்த குறுநில மன்னன் அவனது ஊருக்குள் வந்து ஒரு பெண்ணைத் தூக்கிச் சென்றான்.

இதையறிந்த வல்லாளத்தேவன் அந்த நாட்டுக்கு விரைந்த சென்று அந்தப் பெண்ணை மீட்டான். ஆனாலும் வல்லாளத் தேவனைப் பின்தொடர்ந்து வந்தான் பக்கத்து நாட்டு மன்னன். பொட்டல் என்ற இடத்தில் இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. அந்த நேரத்தில் சின்னபுலிபெரியபுலி என்ற இருவர் வல்லாளத்தேவனுக்கு உதவியாக வந்து, எதிரி நாட்டு மன்னனைத் துரத்தி, இந்தப் பகுதி மக்களைக் காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இருவரையும் இப்பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். சின்ன புலி அய்யனாருக்கு ஊரின் தெற்குப் பகுதியிலும், பெரிய புலி அய்யனாருக்கு வடக்குப் பகுதியிலும் கோயில் அமைந்தனர். அவர்கள் தங்களது எல்லாப் பிரச்னைகளும் தீர இந்தக் கோயில்களுக்கு வந்து நேர்ந்து கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அய்யனாருக்கு மண் குதிரைகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.

இந்தக் கோயிலின் புரவி எடுக்கும் திருவிழா பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 23-ம் தேதி துவங்கியது. பத்த நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஜூன் 1, 2 தேதிகளில் புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவிலேயே அதிக மண் குதிரைகளை (புரவி எடுப்பு) காணிக்கை செலுத்தும் திருவிழா இதுதான் என்கிறார்கள்.
இத்திருவிழாவையொட்டி முன்னதாக கடந்த பிப்ரவரி மாதமே குதிரைகள் செய்யும் பணிக்கான ஏற்பாடுகள் துவங்கின. மேலூர் அருகே மந்தைத் திடலில் தெற்குவளவு கிராமத்துப் அம்பலகாரர்கள் ஒன்று கூடினர். அவர்கள் சிவலிங்க கண்மாயில் இருந்து எடுக்கப்பட்ட பிடி மண்ணை ஸ்தபதிகளிடம் ஒப்படைத்தனர்.

இம்மண்ணைக் கொண்டு கோயில் சார்பாக முதலில் இரண்டு சேமங் குதிரைகள் பன்னிரண்டு அடி உயரத்தில் ஸ்தபதிகளால் செய்யப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்டவை. அதுதவிர ஒன்பது அடி உயரத்தில் 9 கரை குதிகைள், 21 சுவாமி சிலைகள், 2 பூத சிலைகள் செய்யப்பட்டன. மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆயிரத்து ஐந்நூறு குதிரை சிலைகள் தயாரிப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக சின்னபுலி அய்யனார் கோயில் பொட்டல் மைதானத்தில் பெரிய பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. இந்த குதிரைகள் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஸ்தபதிகளின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. ஒரு நேர்த்திக் கடன் குதிரை செய்ய ஆயிரம் ரூபாய் ஆனதாம்.

திருவிழா துவக்க நாளன்று கிராம மக்கள் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோயிலுக்கு நடந்து சென்று தீர்த்தமாடினர். பின்னர் மேளதாளம் முழங்க அங்கிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வந்து கோயிலிலும் வீடுகளிலும் தெளித்தனர். இரவு மந்தைத் திடலில் களரி ஆட்டம் நடைபெற்றது. அன்றிலிருந்து தினமும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 1ம் தேதியன்று பெரிய புலி அய்யனார் கோயிலுக்கும், ஜூன் 2-ம் தேதியன்று சின்னபுலி அய்யனார் கோயிலுக்கும் குதிரைகளைச் சுமந்து வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, பத்து நாட்களாக விரதம் அனுசரித்து, அந்தப் புரவிகளை வழிபட்டு வந்தனர். புரவி எடுப்பு நிகழ்ச்சியன்று அய்யனார் வேடம் பூண்டவர்களின் சாமி ஆட்டத்துடன், பக்தை ஒருவர் கரகம் எடுத்து வர புரவி எடுப்பு தொடங்கியது. புரவிகளுக்கு பூஜை செய்யப்பட்ட பின், கோயிலுக்கான சேமங் குதிரை முதலில் எடுத்து வரப்பட்டது. கள்ளர்குல ஒரு பெண் உட்பட 18 கள்ளர் சாமியாடிகள் பொம்மை தூக்கியதும், நேர்த்திக்கடன் குதிரைகள் பின்தொடர்ந்தன. புறப்பாட்டிற்கு முன்பாக, ஒவ்வொருவரும் தங்கள் குதிரைகளை கண்ணாடி, பலூன், தென்னங்கீற்று, சரிகை, கலர் காகிதங்களால் போட்டி போட்டு அலங்கரித்திருந்தனர்.
நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மேளதாளத்துடன் அய்யனார் வீற்றிருக்கும் கிராமத்திற்கு அலங்கரித்த மண் குதிரைகளை பக்தர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் சுமந்து செல்வார்கள்.
இந்த வல்லாளப்பட்டி அம்பலகாரர்கள் தீவிர வைணவப் பற்றாலர்கள் என்பது முக்கிய காரணியாக உள்ளது.

மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் மூலமாக ஹொய்சாளர்கள் கள்ளர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெளிவாக உறுதியாகிறது.
வல்லாளத்தேவரின் பயணம் தொடரும்.........!

நன்றி
பிற்காலச் சோழர் சரித்திரம் (நீலகண்ட சாஸ்த்திரியார்)
Hoysalar dynasty by Dr.B.SHEIK ALI
South Indian inscription
தினமலர் - ஆன்மீக பக்கம்













No comments:

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...