Saturday, July 24, 2021

தமிழின அரசியலுக்கான எச்சரிக்கை மணி



இந்தியத் துணைக் கண்டமானது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சகிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த வெள்ளையன் தனது பிரித்தாளும் அரசியலுக்கு வசதியாக இந்தியர் மீது மதச்சார்பின்மை என்ற கொள்கையை அரசியல் கொள்கையாகத் திணித்தான். வெள்ளையர்களை நல்லவர்கள் என்று நம்பிய குஜராத்தியான காந்தியும், வெள்ளையன் கல்வியை கல்வி என்று நம்பிய பண்டிதர்களும் அதுபோன்ற அரசியல்தான் இந்தியாவுக்கு உகந்தது என்று நம்பினார்கள். அதையே சட்டமாக்கினார்கள். ஆனால் வெள்ளையன் தொடர்ந்து திருச்சபை மூலமாகவே தனது மன்னர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வந்தான். உலகெங்கும் மக்களாட்சி நடைபெற்று வரும் இந்தக் காலத்திலும் மன்னர் குடும்பத்தை அன்னாந்து பார்த்து வியந்து வருகிறான். அப்படிப்பட்ட அறிவுக் குருடர்கள் ஓதிய மதச்சார்பின்மையை இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய சிறுபான்மை ஆட்சியாளர்களும் தங்கள் வசதிக்காக அதையே தொடர்ந்தார்கள். அதன் விளைவுதான் இந்தத் துணைக் கண்டத்தில் போலி மதச் சார்பின்மை துளிர்விட்டு இன்று விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அதற்கான ஒரு எடுத்துக் காட்டுதான் ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ சங்கியின் இந்த உளறல். எந்தவொரு மதமாக இருந்தாலும் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக போலி மதச்சார்பின்மை பின்பற்றப்பட்டால் அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போவார்கள். இந்த கிறிஸ்தவ சங்கியின் திமிர் பேச்சு தமிழின அரசியலுக்கு விடும் சவாலாகும். வெளியில் தெரிந்தது பனிக்கட்டியின் நுனி போன்றதாகும். அரசியல் தெளிவு பெற்று வரும் தமிழினம் இதுபோன்ற சங்கிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து தீர்க்கமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். 

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...