Saturday, July 20, 2013

எங்கள் ஊர் கள்ளர் பள்ளி

இது எங்கள் ஊரில் (தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம்) உள்ள அரசு கள்ளர் பள்ளி. இந்தப் பள்ளி 1923ம் ஆண்டு துவக்கப்பட்டது. 

நான் படித்ததும் என் தந்தை (வயது 84) படித்ததும் இந்தப் பள்ளிதான். 90 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தப் பள்ளி தற்போது மூடும் நிலையை அடைந்துள்ளது. 

மக்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தால் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த இந்தப் பள்ளியில் தற்போது வெறும் 30க்கும் குறைவான மாணவர்கள்தான் படிக்கிறார்கள். 

மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. எனவே இந்த பள்ளியை மூடவிடாமல் செய்ய, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரமலைக் கள்ளர் கல்வி அறக்கட்டளையை நிறுவ முடிவு செய்துள்ளோம். 


கடந்த 14/07/2013 அன்று நடந்த சமுதாயக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் பிரி கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...