திருச்சி மாவட்டம் திருநெடுங்களத்தில் உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டுகள் ஒன்றில் எயில் நாட்டு சோழர் அதிகாரி ஒருவர் வருகிறார்.
காலம் : கிபி926
வம்சம் : சோழர்
அரசர் : முதலாம் பராந்தகச் சோழன்
பட்டம் : மதுரை கொண்ட கோப்பரகேசரி
வம்சம் : சோழர்
அரசர் : முதலாம் பராந்தகச் சோழன்
பட்டம் : மதுரை கொண்ட கோப்பரகேசரி
கல்வெட்டு செய்தி:-
திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடுகளை ஏற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி நியமத்து #கள்வன்_உலங்கண் ஆவார். இந்த கள்வன் உலங்கண் என்பவர் பராந்தக சோழரின் அதிகாரமிக்க தளபதியாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் எயில் நாட்டில் உள்ளவருக்கு உறையூர் கூற்றத்தில் உள்ள கோவிலில் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இருப்பதிலே நாம் அவரின் அதிகாரத்தை அறியப் பெறலாம்.
இதில் வரும் எயில் நாடு என்பது பழைய சோழர் நாட்டமைப்பான இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டமாகும். ஏற்கனவே இதே மாவட்டத்தில் தான் ஶ்ரீகள்ளச் சோழன் என்கிற 10 நூற்றாண்டு கல்வெட்டும் கிடைத்துள்ளது.
இந்த கல்வெட்டோடு சேர்ந்து பராந்தக சோழரின் கல்வெட்டுகளில் கள்ளர் பெருங்குடியின் கல்வெட்டுகள் மொத்தம் 5ஆகும்👍 சோழர் காலத்து கல்வெட்டுகளில் மொத்தம் 14ஆகும்👍
நன்றி
தமிழக தொல்லியல் துறை
தமிழக தொல்லியல் துறை
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு
No comments:
Post a Comment