Tuesday, October 15, 2019

சூரிய குல சோழர்கள்

சோழர்கள் சூரிய குலத்தை சேர்ந்தவர்கள் என்பதனை அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் அறிவர்.
ஆனால் உலகமுழுவதும் சூரிய வழிபாடு,சூரியன் சார்ந்த அர்த்தங்களுக்கு #சோழர் என்ற சொல்லாடலே பல மொழிகளில் மருவி இன்றும் உலா வருவதை யாரும் ஆராயவில்லை என்பதே நிதர்சனம்.
சோழர்களே முதன் முதலில் சூரிய வழிபாட்டை கொண்டு வந்தவர்கள் என்பதே எனது ஆழமான கருத்தியல்.
ஏனென்றால் சோறுடைத்த சோழ நாடு என அழைக்கப்பட்டு அறுவடை தினத்தன்று சூரியனுக்கு படையலிட்டு வணங்கியுள்ளனர் சோழ தேசத்து மக்கள்.
இன்றும் தெற்காசியா முழுவதும் பொங்கல் விழா வேறு,வேற பெயர்களில் கொண்டாட காரணம் அந்த நாடுகளில் சோழர்களின் ஆளுமை இருந்த காரணம் தான்.
அதுபோல ஆதிகாத்தில் சோழர்கள் உலகம் முழுவதும் தொடர்பில் இருந்ததால் அவர்களுடைய சூரிய குலப் பெயர் பல மொழிகளில் சோழர் என்ற வார்த்தையை தழுவியே வருகிறது.
இன்றும் சூரிய சக்திக்கு உலகமுழுவதும் சோழார் எனர்ஜி என்றே குறிப்பிடுகிறார்கள்.
அவற்றை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்:-
மொழி சொல் தமிழில்
லத்தீன். ˈsōlər. சோழிஸ்
ஆங்கிலம். Solar சோழார்
குரோஷியன். solare சோழரி
போஸ்னியன். solarno. சோழரினோ
டேனிஷ் sol சோழ்
டச்சு. zonne- சோன்னி
பிரஞ்ச். Solarie. சோழரி
இந்தோனேஷியன் tenaga surya. டிநாக சூர்யா
ஜெர்மன். Solar. சோழார்
இத்தாலியன். Solare. சோழரி
மெசடோனியன். соларна. சோழார்னா
போர்ச்சுகீஸ். Solar. சோழார்
செர்பியன். соларни சோழார்னி
சிங்களம். සූර්ය. சூர்யா
ஸ்பெனிஷ். Solar சோழார்
சமஸ்கிருதம். सूर्य சூர்யா
நார்வேயியன். solenergi. சோழனேர்ஜி
ரோமானியன். Solar. சோழார்
ரஷ்யன். солнечный. சோழஜ்னி
வெல்ஷ். Solar. சோழார்
உருது. شمسی. சோங்சி
அரபிக். شمسي. சோம்சி
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் அதாவது பெங்காலி,மராட்டி,குஜராத்தி,கன்னடம்,சமஸ்கிருதத்தில்
சவுரவ்,சூர்யா என வழங்கப்படுகிறது.
இது சோழா,சூழா,சூழியா,சூரியா,சூர்யா,சூரவ்,சரவ்,சவுரவ் என மருவிருக்க வேண்டும்.
இதில் இந்தோனேஷியாவில் நாக சூர்யா என்று வருவது தான் நாகர்,சோழர் ஒருவராக பாவிக்க வருகிறது.
ஏற்கனவே வரலாற்று ஆய்வாளர்கள் சோழர்களை நாகர் வழித்தோன்றல் என கூறியுள்ளதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அதற்காக சோழர்கள் உலகம் முழுவதும் ஆண்டார்கள் என்று கூறவில்லை.
உலகம் முழுவதும் ஆளுமை செலுத்தியுள்ளார்கள் என்பதே எனது கருத்து.
சோழர் பயணம் தொடரும்......!
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...