தற்போது மகளிர் குழுக்களுக்கான கந்து வட்டித் தொழில் அமோகமாக ஓடுகிறது. இவர்கள் சட்ட ரீதியாக பெண்களை மிரட்டியும் உருட்டியும் தங்கள் தொழிலை நடத்துகிறார்கள்.
தங்கள் பேச்சை மீறும் குழுக்களுக்கு நிலுவை இருப்பதாக தரவுத் தொகுப்பில் காண்பித்து அவர்கள் மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முடியாமல் செய்கிறார்கள்.
இதுபோன்று ஏற்படும் பிரச்சனைகளுக்கு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்காக ஆர்பிஐ நியமித்த ஆம்புட்ஸ்மேனிடம் புகார் செய்து தங்கள் பிரச்சனைகளைப் போக்கிக் கொள்ளலாம்.
தமிழ்நாடு, அந்தமான் நிகோபார் தீவுகள், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, லட்சத்தீவு யூனியன் பிரதேசம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கீழ்க்கண்ட முகவரியில் புகார் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
Office of NBFC Ombudsman
C/o Reserve Bank of India, Fort Glacis,
Chennai 600 001
STD Code: 044
Telephone No : 25395964 Fax No : 25395488
Email : nbfcochennai@rbi.org.in
No comments:
Post a Comment