Monday, May 20, 2019

டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி மஹாராஜா. சிங்கம்பட்டி ஜமீன்..


மக்களாட்சியிலும், இன்றைக்கும் "மஹாராஜா "
ஒருவர் இருக்கிராறென்றால் ஆச்சரியமாக 
இருக்கிறது.."குடியாட்சியில் ஒரு முடியாட்சி" உண்மையும்கூட.
இந்தியாவின் கடைசி முடிசூட்டப்பட்ட மஹாராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
மணிமுத்தாறு அருகிலுள்ள சிங்கம்பட்டி..
திரு.சிவசுப்பிரமணி சங்கர முருகதாஸ்
தீர்த்தபதி மஹாராஜா..90 வயது. ஜமீன்.
தனது தந்தை இறந்து ,மூன்றாவது வயதிலேயே,32 வது அரசராக மணிமகுடம் சூட்டிய மஹாராஜா. பிரம்மாண்டமான அரண்மனை..ராஜா காலத்தைப்போலவே இன்றும் வேல்கம்புடன் காவலிருக்கும் வாயிற்காவலர்கள்,தர்பார் மண்டபத்தில்
மன்னர்வரும்போது புகழ்பாடும் அரசவைக்கவிஞர்,யானைத்தந்தத்தை
கைப்பிடியாக கொண்ட தங்கவாள் சொருகி
மிடுக்கோடு நடைபோடும் மஹாராஜா..
வருடந்தோறும் ஆடி அமாவாசைதோறும் பொதுமக்களுக்கு தரிசனம் தருகிறார்..
ஏழைமக்களுக்கு அதுதான் திருவிழா.
"முதுகுத்தோலை உறிச்சிடுவேன்"எனும் வழக்கு
மொழிக்கு காரணமான தண்டனை பிறப்பிடம்
சிங்கம்பட்டி ஜமீன்..
தவறுசெய்தவர்களை, நேரடியாக பிரம்பால் அடிக்காமல்,ஆட்டின் தோலை உறித்து,அதன்மீது
உப்பு தடவி,குற்றவாளி முதுகில் ஒட்டவைத்து அந்த ஆட்டுத்தோல்மீது பிரம்பால் அடித்து,பிறகு
ஆட்டின்தோலை எடுக்கும்போது குற்றவாளி உடலிலிருந்து மேல்தோல் எடுப்பதுதான் தண்டனை, இதுவே நாம் வழக்குமொழியில்
பேசும் "தோலை உறிச்சிடுவேன்"தண்டனை.
18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மார்த்தான்டவர்மனின் இறப்பிற்கு
பிறகு அவரது வாரிசை(குழந்தை) முடிசூடவிடாமல் சூழ்ச்சிசெய்து,எட்டுபிள்ளை வீட்டுக்காரர்கள் என்னும் திருவிதாங்கூர் மன்னரின் எதிரிகளால் அவரது வாரிசு விரட்டப்பட்டதாகவும், அந்த வாரிசு சொரிமுத்து அய்யனார் கோவிலில் தஞ்சமடைந்து
இருப்பதையறிந்த 26 வது மஹாராஜா, அந்த குழந்தையை வளர்த்து,களரிப்பயிற்சி கொடுத்து
தனது மூத்த இளவரசருடன் திரும்பவும் திருவிதாங்கூரை மீட்டு மஹாராஜாவிடம் ஒப்படைத்தாகவும், போரின் முடிவில் இளவரசன் இறந்துவிட்டாரென தெரிந்தும், கலங்காமலே
தான் வளர்த்த திருவிதாங்கூர் வாரிசை மீண்டும் திருவிதாங்கூர் மன்னராக முடிசூட்டினார் ..
அதற்கு பிரதிபலனாக சிங்கம்பட்டி ஜமீன்க்கே
மேற்கு தொடர்ச்சிமலையின் என்பதாயிரம் ஏக்கர் நிலத்தை ஜமீன்வசமே ஒப்படைத்தார்
திருவிதாங்கூர் மஹாராஜா... அதிலே ஆறாயிரம் ஏக்கர் எல்லைப்பிரச்னையால்
தடுமாறிப்போய்விட்டது, சிங்கம்பட்டி ஜமீன்
ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அரண்மனையோடு திகழ்ந்தது..
அரசகுடும்பத்தில் அன்று தொடங்கிய " கிங் ஜார்ஜ் பள்ளி "மன்னரின்
அரண்மனைக்குள்ளேயே, இன்றும் அரசின் நிதி
உதவியோடு செயல்படுகிறது.
அரசகுடும்பத்தில் திருமணம் என்றால்,மணமகன் இல்லாமல் மன்னரின் வாளை மட்டுமே எடுத்துச்சென்று மணமகளை
அரண்மனைக்கு இளவரசியாக்குவதே நடைமுறை.
பலதலைமுறை கண்ட மஹாராஜா இன்றைக்கும் பலருக்கு பொருளாதார உதவி
வழங்கும் மன்னராகவே வாழ்கிறார். பலரது இல்லங்களில் கடவுளைப்போலவே இவரது
புகைப்படங்கள் வைத்து வணங்கும் மக்கள்
மனதை வென்ற மன்னன்.
பிறப்பும் இறப்பும் அறிந்த சித்தராக,
பலமொழியில் பேசும் வல்லவராக,.
அழுத்தமான,ஆழமான சிந்தனையோடு சாதாரண எளிமை மனிதராக, ஏழைகளுக்கு பொருளுதவி வழங்கும் வள்ளலாக,
பசும்பொன் தேவர்திருமகனாரின் நண்பனாக
சிங்கம்பட்டி ஜமீன் மன்னராக,,
எல்லாவற்றுக்கும் மேலாக
"இயற்கை விவசாயி"யாக வாழும்..
முக்குலத்து மன்னன், தென்னாட்டுபுலிக்குட்டி..
ஆன்மீக வழியில் பயணிக்கும் அய்யா..
"டிஎன்எஸ். முருகதாஸ்தீர்த்தபதி மஹாராஜா"
சிங்கம்பட்டி ஜமீன்.. வணங்குகிறோம் அய்யா.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...