கண்ணை விற்று சித்திரம் வாங்கலாம்
ஓவியம் வைக்க வீடு சிறக்கலாம்
கேளிர் கண்டு களிக்க
கலை வளர்க்கலாம்
விளைநிலம் விற்று
விவசாயம் வளர்க்கலாம்.
உழவனை தூக்கிலிட்டு
கூட்ட நெரிசலை குறைக்கலாம்
இமாலய தண்ணீர் எல்லாம்
கடலில் கலக்கலாம்
வறண்டு கிடக்கும் பூமியெல்லாம்
வானம் பார்த்து ஏங்கலாம்
அணுவில் மின்னலெடுத்து
ஆலைகள் வளர்க்கலாம்
உலகெல்லாம் ஒதுக்கும்
தந்திரம் வளர்க்கலாம்
மக்கள் ஐயம் தீர்க்கா
மாக்களாட்சி வளர்க்கலாம்
பொல்லா அதிகாரம் பெற்று
வல்லாட்சி அமைக்கலாம்
தமிழனை மட்டும் நாயென
கொன்று குவிக்கலாம்
இந்தியருக்கு என்றுமவன்
சூத்திரனாக இருக்கலாம்
ஈழப்போரின்போது என் இனத்தின்
கூக்குரலை அடக்கினாயே?
இந்த குரலுக்கு மட்டும்
ஏன் இத்தனை சால்ஜாப்பு?
தமிழன் ஈனப்பிறவியென
எண்ணி இருந்துவிடாதே.
வல்லரசெல்லாம் சுவடே இல்லாமல்போன
பெருமை கொண்டது இந்த உலகு
Wednesday, November 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
No comments:
Post a Comment