Sunday, February 28, 2021

தேனியில் 10 ரூபாய் உணவகம்



தேனி மாவட்டம்கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகம் மற்றும் பள்ளி நடத்தி வந்த பால்பாண்டி ஏற்கனவே பல சாதனைகளைச் செய்துள்ளார். குறிப்பாக தேனி மாவட்டத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிக் காண்பித்தார். தற்போது இவரது காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் கதிர் உணவகத்தை தொடங்கியுள்ளார். அதிலும் இவ்வளவு பணம் ஆகிறது என்று யாரும் கேட்டு வாங்குவதில்லைசாப்பிடுபவர்கள் கடையில் உள்ள உண்டியிலில் பணம் போட்டால் போதுமானது. பணம் இல்லாதவர்கள் பணம் கொடுக்காமலும் சென்று விடலாம்



இந்த உணவகம் தேனி அரசு மருத்துவமனை அருகேயுள்ள கானா விலக்கு காவல் நிலையத்தின் எதிராக மெயின் ரோட்டிலிருந்து சிறிது உள்ளே திறக்கப்பட்டுள்ளது. இது தேனி மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இட்லி, வடை தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்ற உணவுகளும், சில நேரங்களில் சாப்பாடும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த (2020) டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று கேட்டபோது, சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் பணம் போட்டு விடுகிறார்கள். மற்றபடி நன்கொடையாளர்களிடமிருந்து காய்கறி அரிசி போன்றவற்றைப் பெற்று கடையை நடத்துகிறோம் என்று பால்பாண்டி தெரிவித்தார்.




No comments:

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...